You are on page 1of 3

வாஸ்து சாஸ்திரம் :-

ஒவ்வொரு மனிதனும் பிறந்தது முதல் இறப்பது வரை எத்தனையோ முயற்சிகளை


எடுத்துக்கொண்டே இருக்கிறான்.பல முயற்சிகள் தோல்வியில் முடிகிறது, சில மட்டுமே வெற்றியில்
முடிகிறது.

தோல்வி அடைந்த மனிதர்கள் கூட முயற்சி எடுப்பதில் குறைவதில்லை. முயற்சிகள்


தோற்கலாம், ஆனால் முயற்சி எடுப்பது தோற்கக்கூடாது.

தன் முயற்சிகள் தோல்வி அடையும் பொழுது "ஏன் எனக்கு இப்படி நடந்தது?" என்ற கேள்வி
எல்லோர் மனதிலும் கட்டாயமாக வரும். இதற்கான விடையின் ஒரு பகுதி வாஸ்து சாஸ்திரத்தில்
இருக்கிறது.

"வாஸ்தோஸ்பதி" என்ற சொல் ரிக் வேதத்தில் (இந்து மதத்தின் நான்கு வேதங்களில் ஒன்று)
உள்ளது. இதற்கான பொருள் "பாதுகாப்பு, மகிழ்ச்சி, வளமை ஆகியவை இந்தப் பிறவியிலும் மற்ற
எல்லாப் பிறவியிலும் கொடுக்கக்கூடியது". இந்த சமஸ்கிருத வார்த்தையில் இருந்து "வாஸ்து" என்ற
சொல் உருவாகி இருக்கக்கூடும்.

இந்திய புராண இதிகாசங்களிலும் இந்து மத வேதங்களிலும் வாஸ்துசாஸ்திரத்தின் பல


தத்துவங்கள் பல இடங்களில் விரிவாக கூறப்பட்டுள்ளது. "ஸ்தபத்யவேதா" என்பது அதர்வன
வேதத்தின் ஒரு பகுதியாகும்.

1) மகாபாரதத்தில் துரியோதணன் கட்டிட வல்லுநர்களை அழைத்து வாரனாவதம் என்ற ஊரில் வாஸ்து


சாஸ்திர அமைப்பின்படி எளிதில் எரியக்கூடிய ஒரு மாளிகையை கட்டித்தரும்படி கூறினான்.

2) பாண்டவருக்காக பிரிக்கப்பட்ட இந்திரபிரஸ்தம், வாஸ்து வல்லுநர் மயனைக் கொண்டு ஸ்ரீகிருஷ்ணர்


மிக நேர்த்தியாக அமைத்துக் கொடுத்தார்.

3) ஸ்ரீகிருஷ்ணனின் வடமதுராவில் உள்ள மக்களை காபாற்ற கடலுக்கு நடுவில் த்வாரகா என்ற


நகரத்தை மயனின் துணையுடன் வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டி, அங்கு மக்களுடன் அமைதியான
வாழ்க்கை வாழ்ந்தார்.

4) இராமாயணத்தில் பஞ்சவடி என்னும் இடத்தில் ஆசிரமம் அமைக்கும் பொழுது இந்த குடிலை


வாஸ்து சாஸ்திர முறைப்படி அமைப்பாய் என்று ஸ்ரீஇராமன் இலக்குமணனை நோக்கிக்
கூறினார்.மேலும் சூரியனை நோக்கி கிழக்கு முகமாக அமர்ந்து சிறுநீர் கழிக்கக்கூடாது என்று
அறிவுறுத்துகிறார்.

1) நமது பூமி மிக சக்தி வாய்ந்த காந்த சக்திகளைக் கொண்டது. பூமியின் பரப்பளவு முழுவதும்
இந்த காந்த சக்தியின் மிக வலுவான காந்த தன்மைக்கு உட்பட்டுள்ளது. ஒரு காந்த துண்டை
நாம் நான்கு துண்டுகளாக உடைக்கும் பொழுது ஒவ்வொரு துண்டும் வட தென் துருவங்களை
தனித்தனியே பெற்றுவிடும். அதே போன்று இந்த பூமியின் பரப்பை சிறிய சிறிய துண்டுகளாக
பிரித்து நாம் வீடு கட்டும் பொழுது ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு காந்த சக்தி ஏற்பட்டு வட
தென் துருவங்கள் அந்த இடத்திற்கு ஏற்பட்டு விடும்.

வாஸ்து சாஸ்திரம் காந்த சக்தியை முறையாக பயன்படுத்த சில விதிமுறைகளை கூறுகிறது.

2) நமது பூமி சுமார் 23 1/2 degree வடக்கிழக்கு பக்கம் சரிந்து சாய்வாக தன்னைத் தானே 24 மணி
நேரத்திற்கு ஒரு முறை சுற்றுகிறது. இந்த சுழற்சியின் பாதை வடகிழக்கு திசையில் முன்னோக்கி
செல்வதாக அமைகிறது. ஆகவே பூமியுடன் சேர்ந்து பூமியில் அமைந்துள்ள நம் இருப்பிடமும்
(கடை, வீடு, காலி மனை, ஆபிஸ், தொழிற்சாலை முதலியவை) வடகிழக்கு திசையை நோக்கி
முன்னேறிக்கொண்டே இருக்கிறது.

நாம் ஒரு மோட்டார் சைக்கிலில் பயணம் செய்யும் பொழுது முன்புறம், handle bar மீது வலுவான ஒரு
எடையை வைத்தோமானால் வேகம் குறைந்து ஓட்டுவதற்கு சிரமமாக இருக்கும், அதே எடையை
பின்புறம் carrier-ல் வைத்து கட்டினோமானால் வேகமும் கூடும், நம் பயணமும் சுமுகமாக இருக்கும்.
அதேபோல் நமது இருப்பிடத்தில் அதிக எடையை, வட கிழக்கு மூலையில் வைக்காமல் தென்மேற்கு
மூலையில் வைத்தோமானால், நமது வாழ்க்கை சுகமாகவும் முன்னேற்றம் உடையதாகவும் கண்டிப்பாக
இருக்கும்.

இதுவே வாஸ்து சாஸ்திரத்தின் முக்கியமான விதியாகும்.

வடக்கிலும், கிழக்கிலும், வடகிழக்கிலும் வீட்டின் மையத்திலும் மிக குறைவான எடையை


வைப்பதால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும் அமைதியையும் பெற முடியும்.

தெற்கிலும் மேற்கிலும், தென்மேற்கிலும் அதிகமாக எடையை வைப்பதால் நல்ல


பணவளர்ச்சியும் தொழில் வளர்ச்சியும் பெறலாம்.

வடமேற்கில் மிதமான எடையை வைப்பதன் மூலம் நல்ல சமுதாய அந்தஸ்தையும், புகழையும்


அடையலாம்.

தென்கிழக்கில் மிதமான எடையை வைப்பதன் மூலம் நல்ல உடல் ஆரோகியத்தையும் குடும்ப


ஒற்றுமையும் பெற முடியும்.

வாஸ்துசாஸ்திரத்தை பின்பற்றி வாழ்ந்தால் நாம்:

கோடீஸ்வரன் ஆகமுடியுமா?

இம்மானிலத்தின் முதல்வர் ஆக முடியுமா?

எனக்கு நோயே வராதா?

இது போன்ற கேள்விகளுக்கு விடை கட்டாயமாக "இல்லை" என்பதுதான்.

ஆனால் வாஸ்து சாஸ்திரத்தை பின் பற்றுவதன் மூலம் தற்பொழுது உள்ள பொருளாதார நிலையில்
இருந்து மேலும் முன்னேற்றத்தை மட்டுமே அடையவும், தற்பொழுது உள்ள சமுதாய அந்தஸ்திலிருந்து
கண்டிப்பாக அடுத்த நிலையை அடையவும் மேலும் தற்பொழுது உள்ள உடல் நலத்ததில் இருந்து
நல்ல உடல் நிலையை அடையவும் முடியும்.

வாஸ்து வழிமுறைகள் ஒரு குடையை போன்றது. இயற்கையின் விளைவான கடுமையான


வெய்யில் மற்றும் மழையை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் ஒரு நல்ல குடை இருந்தால்
வெய்யிலின் கொடுமையில் இருந்தும் மழையின் பாதிப்பில் இருந்தும் ஒரளவு நம்மை பாதுகாத்துக்
கொள்ள முடியும். வெய்யிலும் மழையும் நம் கண்களுக்கு புலப்படுகின்ற இயற்கை சக்திகள், இவற்றை
விட கடுமையான பல இயற்கை சக்திகளும் நம்மை அறியாமல் பாதிக்கின்றன.

வாஸ்து வதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் எல்லாவிதமான இயற்கை சக்தியிலிருந்தும்


நம்மை காத்துக் கொள்ளமுடியும். இந்த இயற்கை சக்திகள் நன்மையையும் செய்யும், கெடுதலையும்
செய்யும். வாஸ்து சாஸ்திரம் இயற்கை சக்திகளில் உள்ள நன்மைகளை மட்டும் நாம் அடையவும்
தீமைகள் நம்மை நெருங்காமல் இருக்கவும் வழி செய்கிறது.

வாஸ்து சாஸ்திரம் நல்ல உடையை போன்றது. ஒரு மனிதனுடைய உடல் அமைப்பு


இயற்கையாக உருவாகிறது. ஆனால் அவன் அணிந்துக் கொள்ளும் ஆடையின் தரத்தை பொறுத்து
அவனுக்கு மதிப்பும், மரியாதையும் கணிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு ஒரு மனிதன் கோட், சூட்
மற்றும் டை அணிந்திருந்தால் எல்லோரும் அவனை பணக்காரனாகவே மதிப்பார்கள். அதே மனிதன்
கிழிந்த, கசங்கிய, அழுக்கான உடையை அணிந்திருந்தால் அவனை பிச்சைகாரன் என்று
எண்ணுவார்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒரு இடம் அமைந்தால் அந்த இடத்தின்
சொந்தகாரருக்கும் அதில் வசிப்பவருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒரு கவசத்தை அந்த இடம்
உடையாக தருகிறது.
வாஸ்து ரெங்கன்

வாஸ்து, ஜோதிட நிபுணர்.

அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு,

இந்தியா. பின் கோடு: 600 053

மோபைல்: 9003030698

www.tamil.vasthurengan.com

email: rengan@vasthurengan.com

You might also like