You are on page 1of 18

வட்டிலேயே

ீ செய்யலாம்...வெரைட்டியா சாப்பிடலாம்...

30 வகை ஹோட்டல் ரெசிபி

வட்டில்
ீ என்னதான் பார்த்துப் பார்த்து சமைச்சு, பாசம் பொங்கப் பரிமாறினாலும்,
குழந்தைங்களுக்கும் சரி... பெரியவங்களுக்கும் சரி... ஹோட்டல் சாப்பாடு மேலயும்
ஒரு கண் இருக்கத்தான் செய்யும்.

'ப்ரைடு ரைஸ், கோபி-65, பன ீர் பட்டர் மசாலா' என்று சாப்பிடும்போதெல்லாம்...


"ஹோட்டல்ல மட்டும் எப்புடீ இப்படியெல்லாம் சமைக்க முடியுது?" என்று பலரும்
பேசியிருப்போம்.

அந்த வேகத்துலயே... 'கோபி-65, பன ீர் பட்டர் மசாலா’னு வட்டுல


ீ ட்ரை பண்ணி
பார்த்துவிட்டு, "ஐயோ... வாயில வைக்க முடியலே" என்று சிலர் அலறியிருப்போம்.

''அப்படியெல்லாம் அலற வேண்டிய அவசியமே இல்ல. அது ஒண்ணும் கம்ப


சூத்திரமும் இல்ல. இந்தா... புடிச்சுக்கோங்க'' என்று 'சமையல் திலகம்’ ரேவதி
சண்முகம், கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் இரண்டு பேரும்... விதம்விதமான
ஹோட்டல் ரெசிபிகளை சிம்பிளாக... அதேசமயம் சூப்பராக பரிமாறியிருக்கிறார்கள்.

இங்கே இடம் பிடித்திருக்கும் 30 ரெசிபியுமே பிரபல ஹோட்டல்களில் நீங்கள் ரசித்து,


ருசித்தவைதான். என்ன... இனிமேல் வட்டிலயே
ீ செய்து சாப்பிடப்போகிறீர்கள்!

நீங்கள் மட்டுமல்ல... விருந்தாளிகளுக்கும் செய்து கொடுத்து... ''பேஷ், பேஷ் ஹோட்டல்ல சாப்பிட்ட


மாதிரியில்ல இருக்கு'' என்று சபாஷ் வாங்குங்கள்!

பேபிகார்ன் மஞ்சூரியன்

தேவையானவை: பேபிகார்ன் - ஒரு பாக்கெட், மைதா மாவு - அரை கப், கார்ன்ஃப்ளார் - அரை கப்,
சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், சில்லி சாஸ் -
ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய வெங்காயத் தாள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பேபிகார்னை தோலுரித்து, குறுக்காக 'ஸ்லைஸ்'ஸாக்கவும். எண்ணெய், வெங்காயத்தாள்


நீங்கலாக அனைத்துப் பொருட்களையும் அதனுடன் சேர்த்து, தண்ணர்ீ தெளித்துப் பிசறவும். கடாயில்
எண்ணெய் விட்டு, மசாலா சேர்த்த பேபிகார்னை போட்டுப் பொரித்தெடுக்கவும். வெங்காயத்தாள் தூவி
பரிமாறவும்.

பன ீர் பரோட்டா

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், மைதா - அரை கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு. பன ீர் ஸ்டஃப்பிங்குக்கு: பன ீர் துருவல் - ஒரு கப், துருவிய
வெங்காயம் - அரை கப், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா
ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - கால் கப், எண்ணெய் - 2
டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவு, மைதாவுடன் உப்பு, நெய், தேவையான தண்ணர்ீ சேர்த்து மிருதுவாகப்


பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, துருவிய வெங்காயத்தை
பிழிந்து சேர்த்து வதக்கவும். அதில் பன ீர் துருவல், மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள்,
மஞ்சள்தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம்
வதக்கி இறக்கவும். பிசைந்த மாவை சிறு சிறு
உருண்டைகளாக்கி, ஒவ்வொரு உருண்டையையும் கிண்ணம் போல் செய்யவும். அவற்றில் சிறிது
பன ீர் கலவையை வைத்து மூடி, பரோட்டாக்களாகத் தேய்க்கவும். தோசைக்கல்லில் போட்டு,
எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

கோபி 65

தேவையானவை: காலிஃப்ளவர் - 1, மைதா மாவு - அரை கப், கார்ன்ஃப்ளார் - அரை கப், இஞ்சி - பூண்டு
விழுது, பச்சை மிளகாய் விழுது - தலா 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், காய்ந்த
வெந்தயக்கீ ரை - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக நறுக்கவும். அதை, உப்பு சேர்த்த தண்ணரில்


ீ அரை
மணி நேரம் ஊற விட்டுக் கழுவவும். அதனை ஒரு தட்டில் பரப்பி, அதன் மீ து எண்ணெய் தவிர்த்து
மற்ற பொருட்களைப் போட்டு, சிறிதளவு தண்ணர்ீ தெளித்துப் பிசறவும். கடாயில் எண்ணெய் விட்டு,
காய்ந்ததும் பிசறி வைத்துள்ள காலிஃப்ளவரை சிறிது சிறிதாகப் போட்டுப் பொரித்தெடுத்தால்... சூடான
கோபி 65 ரெடி!

சாம்பார் வடை

தேவையானவை: உளுந்து, துவரம்பருப்பு - தலா ஒரு கப், வெங்காயம் (நறுக்கியது) - ஒரு கப், தக்காளி
- 4, புளி - ஒரு எலுச்சம்பழம் அளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால்
டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு -
தேவையான அளவு.

வறுத்து அரைக்க: காய்ந்த மிளகாய் - 6, தனியா - ஒன்றரை டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு


டேபிள்ஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் - அரை


டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.

செய்முறை: உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நன்கு கழுவி அரைக்கவும். அவ்வப்போது


தண்ண ீர் தெளித்து அரைத்து எடுத்து, உப்பு சேர்த்துக் கலக்கவும்.

துவரம்பருப்பை, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து மசிக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை


வெறும் கடாயில் சிவக்க வறுத்து அரைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் தாளித்து... வெங்காயம், காய்ந்த
மிளகாய் சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்கவும். அதில் நறுக்கிய தக்காளியோடு, உப்பு,
பெருங்காயத்தூள் ஆகியவற்றையும் சேர்த்து கரையும் வரை வதக்கி, கரைத்து வடிகட்டிய புளித்
தண்ண ீர் சேர்த்துக் கொதிக்க விடவும். பின்பு அதில் மசித்த பருப்பு, அரைத்து வைத்திருக்கும் தனியா
மசாலா, தேவையான தண்ண ீர் சேர்த்து கலக்கி கொதிக்க விடவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை
சேர்த்தால் மணக்கும் சாம்பார் ரெடி.

கடாயில் எண்ணெய் விட்டு உளுந்து மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்தெடுத்கவும்.


உடனே அதனை சாம்பாரில் போட்டெடுத்து, ட்ரேயில் அடுக்கவும். பரிமாறுவதற்கு முன், சூடான
சாம்பாரை மேலே ஊற்றி... நெய் விட்டுப் பரிமாறவும்.

சன்னா மசாலா

தேவையானவை: சன்னா - ஒரு கப், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், தக்காளிச் சாறு - ஒரு கப்,
புளி விழுது - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மசாலாவுக்கு: வெங்காயம் - 2, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 6 பல்,


தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: சன்னாவை 6-8 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் குழையாமல் வேக விடவும்.


மசாலாவுக்கு கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த
விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதில் தக்காளிச் சாறு, புளி விழுது,
வேக வைத்த சன்னாவிலுள்ள தண்ண ீர் சேர்த்து 2-3 நிமிடம் கொதிக்க வைத்து... அதில் சன்னாவை
சேர்க்கவும். ஒருமுறை கொதித்ததும், அதனுடன் உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து மீ ண்டும் 2 நிமிடம்
கொதிக்க வைக்கவும். இறக்குவதற்கு முன், கொத்தமல்லி தூவி இறக்கிப் பரிமாறவும்.

தால் மக்னி

தேவையானவை: உளுந்து, ராஜ்மா - தலா கால் கப், வெங்காயம் - 2, தக்காளி - 3, பட்டை - சிறிய


துண்டு, கிராம்பு - 2, ஏலக்காய் - 2, பிரிஞ்சி இலை - சிறியது, தனியாத்தூள், மிளகாய்த்தூள் - தலா
ஒன்றரை டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன், வெண்ணெய், ப்ரெஷ் க்ரீம் - தலா 2
டீஸ்பூன், காய்ந்த வெந்தய இலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உளுந்து, ராஜ்மாவை முதல்நாள் இரவே ஊற வைத்து சுத்தப்படுத்தவும். குக்கரில் ஊறிய


பயறுகளை குழையாமல் வேக விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு,
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்கவும். வெங்காயம், தக்காளியை விழுதாக அரைத்து
அதனுடன் சேர்க்கவும். கொஞ்சம் வதங்கியவுடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பின்பு
மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கவும். கிரேவியாக வந்ததும், வேக வைத்த உளுந்து,
ராஜ்மா உப்பு சேர்த்துக் கிளறவும். கொதித்து வரும்போது, காய்ந்த வெந்தய இலை, வெண்ணெய், க்ரீம்
சேர்த்துக் கிளறி இறக்கவும். இது சப்பாத்தி, நாண், தந்தூரி ரொட்டிக்கு ஏற்ற சைட் டிஷ். ராஜ்மா (அ)
உளுந்து மட்டுமே பயன்படுத்தியும் செய்யலாம்.

மசால் தோசை

தேவையானவை: புழுங்கலரிசி - ஒன்றரை கப், பச்சரிசி, உளுந்து - தலா அரை கப், கடலைப்பருப்பு,


துவரம்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ்பூன், எண்ணெய்,
வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மசாலாவுக்கு: உருளைக்கிழங்கு - அரை கிலோ, வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3, நறுக்கிய இஞ்சி


- ஒரு துண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை
- சிறிதளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன். எண்ணெய், உப்பு -
தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்து, வெந்தயத்தை ஒன்றாக 2


மணி நேரம் ஊற வைக்கவும். அதனை நன்கு கழுவி, நைஸாக அரைத்து, உப்பு சேர்த்துப் புளிக்க
வைக்கவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை


மிளகாயை மெல்லியதாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு தாளித்து... அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, மஞ்சள்தூள்,
பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும், உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து
கெட்டியாகக் கிளறவும்.

புளித்த மாவில் சர்க்கரை, கொஞ்சம் தண்ணர்ீ சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைக்கவும்.


தோசைக்கல்லில் மாவு விட்டு மெல்லிய தோசையாகத் தேய்த்து, நடுவில் சிறிது உருளைக்கிழங்கு
மசாலா வைக்கவும். கூடவே ஒரு டீஸ்பூன் வெண்ணெய் வைத்து... தோசையைச் சுற்றிலும்
எண்ணெய் விட்டு சற்று பொன்னிறமானதும் மடித்து எடுக்கவும்

வத்தக்குழம்பு

தேவையானவை: சின்ன வெங்காயம் (தோலுரித்தது) - 1 கப், பூண்டு (தோலுரித்தது) - கால் கப்,


தக்காளி - 6, மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், தனியாத்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - 1 டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, எண்ணெய் - அரை


கப், கறிவேப்பிலை - சிறிதளவு.

அரைக்க: தேங்காய் துருவல் - கால் கப், முந்திரி - 6.

செய்முறை: வெங்காயம், பூண்டு ஆகியவற்றை ஒன்றிரண்டாக நசுக்கவும். தக்காளியைக் கையால்


நன்கு மசித்துக் கொள்ளவும். புளியை 2 கப் தண்ணரில்
ீ ஊற வைத்து கரைத்து வடிகட்டவும். கடாயில்
எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து, நசுக்கி வைத்துள்ள வெங்காயம்,
பூண்டு சேர்க்கவும். பிறகு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதங்கியதும், தக்காளி, உப்பு,
மஞ்சள்தூளை சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்கவும். பிறகு, புளிக் கரைசல், மிளகாய்த்தூள்,
தனியாத்தூள் போட்டு கொதிக்க வைத்து அதில் அரைத்த தேங்காய் - முந்திரி விழுதைச் சேர்க்கவும்.
ஒருமுறை கொதிக்க வைத்து, இறக்கிப் பரிமாறவும்.

வெள்ளை குருமா

தேவையானவை: காய்கறி கலவை - 2 கப் (உதாரணத்துக்கு பீன்ஸ், கேரட், பச்சைப் பட்டாணி,


உருளைக்கிழங்கு) கறிவேப்பிலை - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு.

அரைக்க: தேங்காய் துருவல் - ஒன்றரை கப், சோம்பு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, இஞ்சி -
ஒரு துண்டு, பூண்டு - 4 பல், பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று, பொட்டுக்கடலை - ஒரு
டேபிள்ஸ்பூன், முந்திரி - 10, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை: காய்கறிகளை சிறு சதுர துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். கடாயில்
எண்ணெய் விட்டு, அரைக்க கொடுத்துள்ளவற்றைப் போட்டு வதக்கவும். வதங்கியதும், இறக்கி ஆற
வைத்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அரைத்த விழுதில் தண்ணர்ீ கலந்து கலக்கி, வெந்த
காய்கறியுடன் சேர்க்கவும். அதில் உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து, இறக்கவும். நெய்யில்
கறிவேப்பிலை தாளித்துக் கொட்டிப் பரிமாறவும்.

நாண்

தேவையானவை: மைதா மாவு - 2 கப், பால் - அரை கப், தயிர் - கால் கப். ஈஸ்ட் - ஒன்றரை
டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மைதாவுடன் நெய், உப்பு சேர்த்துக் கலக்கவும். பாலை வெது வெதுப்பாக சூடாக்கி, அதில்
ஈஸ்ட், சர்க்கரை சேர்த்துக் கலந்து... மூடி வைக்கவும். 3 நிமிடம் கழித்து அதனுடன் தயிர் சேர்க்கவும்.
10 நிமிடம் கழித்து, அது நுரைத்து வந்ததும், அதை மாவுடன் சேர்த்து மிருதுவாகப் பிசையவும்.
இதனை பாத்திரத்தில் போட்டு கதகதப்பாக உள்ள இடத்தில் மூடி வைக்க... மாவு 2 மடங்காகப்
பொங்கி வரும். அதில், சிறிதளவு மாவு எடுத்து 'நாண்' போல் தேய்க்கவும். வெறுமனே காய்ந்த
தோசைக்கல்லில் நாணை போட்டு இருபுறமும் ஒரு முறை திருப்பிப் போட்டு, ரொட்டி வலையில்
வைத்து நேரடியாக மிதமான தீயில் காட்டவும். அதைப்போல் இருபுறமும் செய்து எடுத்து, மேலே
எண்ணெய் தடவி பரிமாறவும்.

ஃப்ரூட் - நட் ரவா தோசை

தேவையானவை: ரவை - அரை கப், அரிசி மாவு - ஒன்றரை கப், மைதா மாவு - கால் கப்,
முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, திராட்சை (பொடியாக நறுக்கிக் கலந்தது) - அரை கப், மிளகு (பாதியாக
நசுக்கியது) - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி (நறுக்கியது) - ஒரு
டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ரவை, அரிசி மாவு, மைதா மாவு மூன்றையும் ஒன்றாகக் கலக்கவும். தேவையான


தண்ண ீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். முந்திரி உள்ளிட்ட மற்ற பொருட்கள்
அனைத்தையும் ஒன்றாக சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து சூடான
தோசைக்கல்லில் பரப்பி, அதன் மேல் தோசை மாவை விட்டு, மிதமான தீயில் வேக விடவும்.
தோசையைச் சுற்றிலும் எண்ணெய் விட்டு சிறிது நேரம் கழித்து, மடித்து எடுக்க... டெலிஷியஸ்
ஃப்ரூட் - நட் ரவா தோசை ரெடி! இதேபோல ஒவ்வொரு தோசையையும் சுட்டு எடுக்கவும்.

பன ீர் பட்டர் மசாலா

தேவையானவை: பன ீர் - 200 கிராம், குடமிளகாய் - 1, காய்ந்த வெந்தயக்கீ ரை - 2 டீஸ்பூன், கரம்


மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், தக்காளி - 4, முந்திரி விழுது - 2 டேபிள்ஸ்பூன், ப்ரெஷ் க்ரீம் - 2
டேபிள்ஸ்பூன், வெண்ணெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அரைக்க: வெங்காயம் - 3, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 6 பல், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,


சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பன ீர், குடமிளகாயை சதுரத் துண்டுகளாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை


மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். தக்காளியைத் தனியாக அரைக்கவும். கடாயில் வெண்ணெய்
விட்டு உருக்கி, அரைத்த வெங்காய விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
குடமிளகாயை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த தக்காளியைச் சேர்த்து கொஞ்சம் தண்ணர்ீ
சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு பன ீரைப் பொரித்து, தண்ணரில்
ீ போடவும். 5
நிமிடம் கழித்து அதை எடுத்து, அந்த மசாலாவில் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு, அதில் முந்திரி
விழுது, கரம் மசாலாத்தூள், காய்ந்த வெந்தயக்கீ ரை, உப்பு சேர்த்துக் கலந்து சிறிது நேரம் கொதிக்க
விட்டு இறக்கி, ப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.

புருக்கோலி சூப்

தேவையானவை: புருக்கோலி (அ) பச்சை ஃப்ளவர், உருளைக்கிழங்கு, வெங்காயம் - தலா 1, பால் -


ஒரு கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், சீவிய பாதாம் - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய், உப்பு -
தேவையான அளவு.

செய்முறை: புருக்கோலியை சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம்,


உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக்கி, குக்கரில் போட்டு 2 கப் தண்ணர்ீ விட்டு, 2 விசில்
வந்ததும் இறக்கவும். ஆறவைத்து அதில் புருக்கோலி சேர்த்து மீ ண்டும் 3 நிமிடம் குக்கரில் வைத்துக்
கொதிக்க விடவும். பின்பு, குக்கரை இறக்கி பாதியளவு புருக்கோலியை தனியே எடுத்து வைக்கவும்.
மீ தியுள்ள அனைத்தையும் ஆற வைத்து நன்கு அரைத்து, பால் சேர்த்துக் கொதிக்க விடவும். அதனை
இறக்கி உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். கடாயில், வெண்ணெய் விட்டு, உருக்கி பாதாம்
சேர்த்து சிவக்க வறுத்து... சூப்புடன் சேர்க்கவும். எடுத்து வைத்துள்ள புருக்கோலித் துண்டுகளை
சேர்த்துப் பரிமாறவும்.

காய்கறி பாயா

தேவையானவை: கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, காலிஃப்ளவர் (கலந்தது) - 2 கப்,


வெங்காயம் - 2, எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், முதலாவது தேங்காய்ப் பால் - ஒரு கப்,
இரண்டாவது தேங்காய்ப் பால் - 2 கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அரைக்க: பச்சை மிளகாய் - 5, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 6 பல், தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,


மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், முந்திரி - 10, பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 1, கொத்தமல்லி -
சிறிதளவு.

செய்முறை: காய்களைத் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்கக்


கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம்
போட்டு வதக்கவும். அதில் நறுக்கிய காய்கறி, அரைத்த மசாலா விழுது சேர்த்து பச்சை வாசனை
போகும் வரை கிளறி, இரண்டாம் தேங்காய்ப் பால் விட்டு 3 நிமிடம் கொதிக்க விடவும். அதனுடன்,
உப்பு, முதலாவது தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி, கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் இறக்கி,
நறுக்கிய கொத்தமல்லி தூவி, எலுமிச்சைச் சாறு விட்டுப் பரிமாறவும்.

சோலாபூரி

தேவையானவை: மைதா மாவு - 2 கப், பால் - அரை கப், தயிர் - கால் கப், சமையல் சோடா - ஒரு
சிட்டிகை, எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மைதா மாவுடன் பால், தயிர், சமையல் சோடா, நெய், உப்பு சேர்த்து, தண்ணர்ீ விட்டு
மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும். அரை மணி நேரம் ஊற வைத்து, சற்று கனமான பெரிய
பூரிகளாகத் தேய்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, தேய்த்த பூரிகளை அதில் போட்டுப்
பொன்னிறமாகப் பொரித்தெடுத்தால்... சோலா பூரி தயார்!இதற்கு சென்னா மசாலா சூப்பர் சைட் டிஷ்.

பாசந்தி

தேவையானவை: பால் - 2 லிட்டர், சர்க்கரை - ஒன்றரை கப், சீவிய பாதாம் - 2 டீஸ்பூன்,


ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்.

செய்முறை: அகலமான பாத்திரத்தில் பாலை நன்கு காய்ச்சவும். பால் பொங்கியதும், மிதமான தீயில்


பாலைக் கொதிக்க விடவும். பால் கொதிக்கும்போது படியும் பாலடையை கரண்டியால் சேகரித்து,
வேறொரு பாத்திரத்தில் போடவும். பால் கால் பங்காக வற்றியதும் அதில் சர்க்கரை சேர்த்து தீயை
அதிகரித்துக் கொதிக்க விடவும். கொஞ்ச நேரம் கொதித்ததும், எடுத்து வைத்த பாலாடைகளை அதில்
சேர்க்கவும். அதனை, 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி அதில் பாதாம், ஏலக்காய்த்தூள் சேர்த்து
கலந்து... ஆற வைத்து, ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.

வெஜிடபிள் நூடுல்ஸ்

தேவையானவை: நூடுல்ஸ் - 3 பாக்கெட், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், குடமிளகாய் (கலந்தது) - 2


கப், வெங்காயம் - 1, சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, வெங்காயத்தாள் -
சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அரைக்க: பச்சை மிளகாய் - 6, பூண்டு - 6 பல்.


செய்முறை: ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணர்ீ விட்டுக் கொதிக்க விடவும். அதில் நூடுல்ஸைப்
போட்டு... 2 நிமிடத்துக்குப் பிறகு வடிகட்டி, தண்ணரில்
ீ அலசவும். அடுப்பில் தோசைக்கல்லை காய
வைத்து, அலசிய நூடுல்ஸை பரப்பி, அதனைச் சுற்றிலும் கொஞ்சம் எண்ணெய் விட்டு 2 நிமிடம்
கழித்துப் புரட்டி எடுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, அதில் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு தாளித்து இறக்கவும்.
இன்னொரு கடாயில், எண்ணெய் விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக
வதக்கவும். அதனுடன், வெங்காயம், நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கி... சோயா சாஸ், உப்பு
போட்டுக் கிளறி நூடுல்ஸ் சேர்க்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயத்தாள், தாளித்த மிளகாயைக்
கொட்டி நன்கு கிளறிப் பரிமாறவும்.

கேஷ்யூ புலாவ்

தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், முந்திரி - கால் கப், வெங்காயம் - 2, சீரகம் - அரை டீஸ்பூன்,
பட்டை - 1 துண்டு, மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், சீரகத்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு
சிட்டிகை, கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாசுமதி அரிசியை சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு, அடுப்பில் ஏற்றி உதிர் உதிராக
வடித்து, ஆற விடவும். கடாயில் நெய், எண்ணெய் விட்டு, சீரகம், பட்டையை தாளிக்கவும். நறுக்கிய
வெங்காயத்தை அதனுடன் சேர்த்து மிதமான தீயில் மொறுமொறுவென வறுத்த பின்பு மிளகாய்த்தூள்,
சீரகத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வடித்த சாதத்தை
மசாலா கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். முந்திரிப்பருப்பை நெய்யில் சிவக்க
வறுத்து, சாதத்தில் கொட்டிக் கிளறவும்.

ஃப்ரைடு ரைஸ்

தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், குடமிளகாய் (கலந்தது) - 2


கப், நறுக்கிய வெங்காயம் - 1, நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு, சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், சர்க்கரை - 1 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, நன்கு கழுவி, அடுப்பில் ஏற்றி உதிர்
உதிராக வடித்து ஆற விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, அதிக தீயில் புகையக் காயவிட்டு,
பொடியாக நறுக்கிய காய்கறி கலவை, வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். அதனுடன்
சோயா சாஸ், மிளகுத்தூள், சர்க்கரை, உப்பு சேர்த்து மீ ண்டும் ஒரு நிமிடம் கிளறவும். அந்தக்
கலவையில் வடித்த சாதத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதன் மேல் வெங்காயத்தாள் தூவி
கிளறினால்... மணக்கும் ஃப்ரைடு ரைஸ் தயார்!

கொத்து பரோட்டா

தேவையானவை: பரோட்டா - 6, வெங்காயம் - 2, தக்காளி, பச்சை மிளகாய் - தலா 1, குருமா - அரை


கப் (பரோட்டாவுக்காக தயாரிக்கும் குருமாவைப் பயன்படுத்தலாம்), கொத்தமல்லி - சிறிதளவு,
மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: பரோட்டாவை சிறுசிறு துண்டுகளாக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்,


கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், பச்சை
மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து
மீ ண்டும் வதக்கவும். மணம் வந்ததும், துண்டுகளாக்கிய பரோட்டா, குருமா, நறுக்கிய கொத்தமல்லி
சேர்த்து நன்கு கலந்தால் டேஸ்ட்டி கொத்து பரோட்டா பரிமாறத் தயார்!

ஸ்பெஷல் வடை

தேவையானவை: உளுந்து - ஒரு கப், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா 2, இஞ்சி - ஒரு துண்டு,
சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய்,
உப்பு - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கழுவி, தண்ண ீரை வடிக்கவும். அதை
கரகரப்பாக அரைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கவும்.
இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும். அவற்றை அரைத்த மாவுடன் சேர்த்து...
பெருங்காயத்தூள், சீரகம், உப்பு போட்டுக் கலக்க வும். கடாயில் எண்ணெய் விட்டு, மெல்லிய
வடைகளாகத் தட்டிப் போட்டு மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும்.

ரவா இட்லி

தேவையானவை: ரவை, தயிர் (புளிப்பில்லாதது) - தலா 1 கப், ஃப்ரூட் சால்ட் (பெரிய டிபார்ட்மென்ட்


ஸ்டோர்களில் கிடைக்கும்) - 1 டீஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு - 1


டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 துண்டு, நறுக்கிய பச்சை மிளகாய் -
1, முந்திரி - 6.

செய்முறை: கடாயில் எண்ணெய், நெய் இரண்டையும் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை சேர்த்து


வதக்கி, அதனுடன் ரவையை சேர்க்கவும். மிதமான தீயில் வாசனை வரும்வரை வதக்கி... இறக்கி ஆற
விடவும். ஆறிய ரவையுடன் தயிர், ஃப்ரூட்சால்ட், உப்பு, சிறிது தண்ணர்ீ விட்டு, இட்லிமாவு பதத்தில்
கரைத்துக் கொள்ளவும். இட்லித் தட்டில் ஊற்றி. வெந்ததும் இறக்கிப் பரிமாறவும். இதற்கு
கொத்தமல்லி சட்னி சூப்பர் காம்பினேஷன்.
மல்லி சட்னி

தேவையானவை: கொத்தமல்லி - 1 கட்டு, தேங்காய் துருவல் - அரை கப், பச்சை மிளகாய் - 3, புளி -


நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பூண்டு (விருப்பப் பட்டால்) - 3 பல், எண்ணெய்,
உப்பு தேவையான அளவு.

செய்முறை: கொத்த மல்லியை ஆய்ந்து, தண்ணரில்


ீ அலசி நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு,
கீ றிய பச்சை மிளகாய், தேங்காய் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, புளி, பூண்டு, மஞ்சள்தூள், உப்பு
சேர்த்து நன்கு வதக்கவும். இறக்கி ஆற வைத்து, மிக்ஸியில் நைஸாக அரைக்க... வாசம் வசும்
ீ மல்லி
சட்னி ரெடி!

பாவ் பாஜி

தேவையானவை: பாவ் பன் - 2 , வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம் (பொடியாக நறுக்கியது) -


அரை கப், நறுக்கிய கொத்தமல்லி - கால் கப்.

மசாலாவுக்கு: வேக வைத்த உருளைக்கிழங்கு - 3, கேரட், முட்டை கோஸ், பீன்ஸ் (நறுக்கி வேக


வைக்கவேண்டும். காய்கறி வெந்தபிறகு, அந்தத் தண்ண ீரை தனியே எடுத்து வைக்கவேண்டும்) - ஒரு
கப், வெங்காயம் - 2, தக்காளி - 3, பச்சை மிளகாய் 2, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு- 6 பல்,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், பாவ் பாஜி மசாலா - 2 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, வெண்ணெய்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மசாலாவுக்கான வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய்,


இஞ்சி,பூண்டு மூன்றையும் விழுதாக அரைக்கவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு, உருக்கி அதில்
வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் அரைத்த விழுது, தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு
ஆகியவற்றைச் சேர்த்து மீ ண்டும் வதக்கவும். பின்பு, மசித்த உருளைக்கிழங்கு, காய்கறியைப் போட்டுக்
கிளறி, பாவ் பாஜி மசாலா சேர்த்து, வேக வைத்த காய்கறி தண்ணர்,
ீ கொத்தமல்லி சேர்த்து கிரேவி
பதம் வந்ததும் இறக்கவும். இரண்டாக நறுக்கிய பன் மீ து வெண்ணெய் தடவி, அடுப்பிலிருக்கும்
தோசைக்கல்லில் வைத்தெடுத்து, ஒரு பிளேட்டில் சூடாக வைக்கவும். அதனுடன் மசாலா வைத்து,
வெங்காயம், கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

காய்கறி சால்னா

தேவையானவை: கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, காலிஃப்ளவர் (கலந்தது) - கால் கிலோ,


வெங்காயம் - 2, எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்ப் பால் - 2 கப், புதினா - ஒரு கைப்பிடி
அளவு, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு -
தேவையான அளவு.

அரைக்க: இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 6 பல், லவங்கம் - 2, பட்டை - 1, ஏலக்காய் - 2, சோம்பு - அரை


டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், முந்திரி - 8, மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், தனியாத்தூள் - 1 டீஸ்பூன்.

செய்முறை: காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில்


நைஸாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி, பின்பு அரைத்த
விழுதைச் சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதில் காய்கறிகளைச் சேர்க்கவும்.
காய்கறிகள் வதங்கியதும், உப்பு, பாதியளவு தேங்காய்ப் பால், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை
சேர்த்து கொதிக்க வைக்கவும். இறக்குவதற்கு முன் மீ தியுள்ள தேங்காய்ப் பால் சேர்த்துக் கலந்து,
அதில் எலுமிச்சைச் சாறு விட்டுக் கலந்து பரிமாறவும்.

பாலக் பன ீர்

தேவையானவை: பன ீர் - 100 கிராம், பாலக் கீ ரை - ஒரு கட்டு, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - பூண்டு
விழுது - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 1,
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: சுத்தப்படுத்திய பாலக் கீ ரையை, வெந்நீரில் போட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும்.
வெங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கீ ரையை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில்
அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, பன ீரைப் போட்டு வதக்கி தனியே எடுத்து
வைக்கவும். அதே கடாயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து, அரைத்த
வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து
வதக்கவும். பிறகு, அரைத்த பாலக் கீ ரை, உப்பு சேர்த்து... ஒருமுறை கொதிக்க விடவும். அப்போது,
வதக்கிய பன ீரை சேர்த்துக் கலக்கவும். பரிமாறுவதற்கு முன், எலுமிச்சைச் சாறு விட்டுக் கலக்கி
பரிமாறவும்.

தயிர் வடை

தேவையானவை: உளுத்தம்பருப்பு - ஒரு கப், தயிர் (புளிப்பில்லாதது) - ஒன்றரை கப், பால் - முக்கால்


கப், கேரட் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், காராபூந்தி - ஒரு கைப்பிடி அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

அரைக்க: தேங்காய் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன்.

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கழுவி, நைஸாக அரைத்து, உப்பு


சேர்த்துக் கலக்கி தனியே வைக்கவும்.ஒரு கப் தயிருடன், கால் கப் பால், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்து... அதை அந்தத் தயிருடன் சேர்த்துக் கலக்கவும். கடுகை
தாளித்து, அதில் கொட்டிக் குளிர வைக்கவும்.மீ தமுள்ள அரை கப் தயிர் மற்றும் அரை கப் பால்
இரண்டுடன் அரை கப் தண்ண ீர், சிறிது உப்பு கலந்து தனியே வைக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு,
மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, வெந்ததும் எடுத்து அதை வெறும் பால், தயிர், தண்ணர்ீ
கலவையில் முதலில் போடவும். 2 நிமிடம் அதை ஊற விட்டு, எடுத்து ட்ரேயில் அடுக்கவும்.
இதேபோல் எல்லா வடையையும் செய்து அடுக்கி.. அதன் மேல் தயிர் மசாலா கலவையை ஊற்றவும்.
பரிமாறுவதற்கு முன் அதன் மீ து கேரட் துருவல், கொத்தமல்லி, காராபூந்தி தூவி பரிமாறவும்.

வெஜ் கபாப்

தேவையானவை: பிரவுன் நிற கொண்டைக்கடலை - கால் கப், சீரகம், மிளகு - தலா ஒரு டீஸ்பூன்,
பட்டை - சிறிய துண்டு, லவங்கம் - 2, பூண்டு - 2 பல், இஞ்சி - சிறிய துண்டு, வெங்காயம் - 1, பிரெட் -
2 ஸ்லைஸ், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவிடவும். ஊற வைத்த கடலையுடன் சீரகம்,


மிளகு, பட்டை, லவங்கம், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து குக்கரில் வேகவிட்டு, 4 விசில்
வந்ததும் இறக்கவும். அதனை ஆற வைத்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிரெட் ஸ்லைஸை
நீரில் நனைத்துப் பிழிந்து எடுத்து, அரைத்த கலவையுடன் எலுமிச்சைச் சாறு விட்டுக் கலந்து நன்கு
பிசைந்து கொள்ளவும். அதை 'கபாப்'பாக உருட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, அதில்
உருண்டைகளைப் போட்டுப் பொரித்து எடுக்கவும். இதை தோசைக்கல்லில் சுட்டும் எடுக்கலாம்.
பரிமாறும் தட்டில் கபாப்பை வைத்து புதினா, வெங்காயம் தூவி அலங்கரித்து, தக்காளி சாஸ§டன்
பரிமாறவும்.

கடாய் பன ீர்

தேவையானவை: மசாலாவுக்கு: காய்ந்த மிளகாய் - 5, சீரகம் - அரை டீஸ்பூன், தனியா - 2


டேபிள்ஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, கிராம்பு -
2, ஏலக்காய் - 2 (இவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்... கடாய்
மசாலா ரெடி) பன ீர் - 100 கிராம், வெங்காயம் - 2, தக்காளி - 2, இஞ்சி, பூண்டு (நசுக்கியது) - ஒரு
டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பன ீரை சதுரத் துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அதனை குளிர்ந்த
நீரில் போட்டு தனியே எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம்,
தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி. நசுக்கிய இஞ்சி, பூண்டு
சேர்த்துக் கலக்கவும். இஞ்சி, பூண்டு வாசனை போனதும் கடாய் மசாலா, உப்பு சேர்த்து நன்கு
கிளறவும். பிறகு, அதில் பொரித்து வைத்துள்ள பன ீரை சேர்த்துக் கிளறி, லேசாக தண்ணர்ீ
தெளிக்கவும். மசாலா எல்லாம் ஒன்றாகக் கலந்தும் இறக்கவும். இதேபோல் மஷ்ரூம் சேர்த்தும்
செய்யலாம்.

மலாய் கோஃப்தா கிரேவி

தேவையானவை: கோஃப்தாவுக்கு: பன ீர் - 100 கிராம், உருளைக்கிழங்கு (வேக வைத்தது) - 2,


மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, கேரட் துருவல் - கால் கப், மைதா மாவு - 2
டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

கிரேவிக்கு: பெரிய வெங்காயம் - ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய்
(பொடியாக நறுக்கியது) - 3, தனியாத்தூள், கசகசா - தலா ஒரு டீஸ்பூன், தயிர் - கால் கப், முந்திரி -
10, தேங்காய் துருவல் - கால் கப், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் -
தேவையான அளவு.

செய்முறை - கோஃப்தா: வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ளவும். அதனுடன்


துருவிய பன ீர், கேரட் துருவல், உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
மைதா மாவை அதனுடன் சேர்த்துப் பிசைந்து... சிறு உருண்டைகளாக்கவும். கடாயில் எண்ணெய்
விட்டு, உருண்டைகளைப் போட்டு பொரித்தெடுக்கவும்.

கிரேவி: வெங்காயத்தை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கசகசா, முந்திரி, தேங்காய் துருவலை


சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு,
ஏலக்காய் தாளித்து... அரைத்த வெங்காய விழுதைச் சேர்த்து வதக்கியதும். இஞ்சி - பூண்டு விழுதை
சேர்க்கவும். எல்லாம் கலந்ததும், அரைத்த தேங்காய் விழுது, தயிர் சேர்த்து நன்கு கிளறவும். பச்சை
மிளகாய், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, கொஞ்சம் தண்ணர்ீ விட்டுக் கொதிக்க விடவும். நன்கு
கொதித்ததும், இறக்கவும். பரிமாறும் பாத்திரத்தில் கிரேவியை விட்டு, அதில் கோஃப்தாக்களைப்
போட்டு, கொத்தமல்லி, க்ரீம் (தேவைப்பட்டால்) சேர்த்துப் பரிமாறவும். 

You might also like