You are on page 1of 3

தயிர்

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது.கால்சியமும்,


ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது. தயிரில் உள்ள
புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை
உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது.
ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும். பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில்
உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. த‌‌யிரி
‌ ‌ல் இரு‌க்கு‌ம்
பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.
ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.


பு‌
த்‌
தி‌
க் கூ‌
ர்மை அ‌
திக‌
ரி‌
க்க

சில குழ‌ந்தைக‌ள் எ‌ன்னதா‌ன் படி‌த்தாலு‌ம் ‌விர‌ை‌வி‌ல் மற‌ந்து‌விடு‌கிறா‌ர்க‌ள். இதனா‌ல் ப‌ள்‌ளி‌த்


தே‌ர்வுக‌ளி‌ல் ந‌ல்ல ம‌தி‌ப்பெ‌ண் வா‌ங்க முடியாம‌ல் போ‌கிறது. பெ‌ரியவ‌ர்களு‌க்கு‌ம் ஞாபக மற‌தி
ஏ‌ற்படு‌கிறது. இதனை‌த் த‌வி‌ர்‌ க்க, ‌திரு‌நீ‌ற்று‌ப் ப‌ச்‌சிலையை அரை‌த்து பா‌லி‌ல் கல‌ந்து குடி‌த்து வர
பு‌த்‌தி‌க் கூ‌ர்மை உ‌ண்டாகு‌ம். மேலு‌ம், ‌திரு‌நீ‌ற்று‌ப் ப‌ச்‌சிலை, க‌ற்பூரவ‌ல்‌லி, ம‌ஞ்ச‌ள் க‌
ரிசாலை,
‌மிளகு, ‌தி‌ப்‌பி‌லி ஆ‌கியவ‌ற்றை சே‌ர்‌த்து அரை‌த்து ‌சிறு மா‌த்‌திரைகளா‌க்‌கி உ‌ட்கொ‌ண்டு வர
தொ‌ண்டை சதை வள‌ர்‌ச்‌சி கரையு‌ம். திருந‌ீ‌ற்று‌ப் ப‌ச்‌சிலையை முக‌ர்‌ந்து வருவதா‌ல் தலைவ‌லி,
தூ‌க்க‌மி‌ன்மை குணமாகு‌ம். திரு‌நீ‌ற்று‌ப் ‌ப‌ச்‌சிலையை லேசான ‌தீ‌யி‌ல் வா‌ட்டி சாறு ப‌ி‌ழி‌ந்து
கா‌தி‌ல் ‌விட காதுவ‌லி குணமாகு‌ம்.

தூதுவளை
தூதுவளை இலைகளை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி, ஒரு
தேக்கரண்டி பொடியை 1 டம்ளர் பசும்பாலில் கல‌ந்து ‌தினமு‌ம் காலையில் மட்டும் குடித்து வர
நாவறட்சி, கபநீர், மூட்டு வலி, காசநோய் குணமாகும். தூதுவளை இலையை நெய்யில் வதக்கி
துவையலாகவோ, கடைந்தோ உண்டு வரக் கபக் கட்டு நீங்கி உடல் பலம் பெறும். தூதுவளை
இலையைச் சாறு பிழிந்து அதேயளவு நெய்யில் காய்ச்சி 1 தேக்கரண்டியளவு 2 வேளை குடித்து
வர, எலும்புருக்கிக் காசம், மார்புச் சளி உடனே நீங்கும். தூதுவளைக் காயை நிழலில் உலர்த்திக்
காயவைத்து தயிர், உப்பு சேர்த்து பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உணவுடன் உண்டு வர
மனநலம் பாதிப்பு, இதய பலவீனம், மலச்சிக்கல் குணமாகும்.

You might also like