Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Parisukkup Po!
Parisukkup Po!
Parisukkup Po!
Ebook450 pages6 hours

Parisukkup Po!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Jayakanthan (24 April 1934 – 8 April 2015), popularly known as JK, was an Indian writer, journalist, orator, film-maker, critic and activist. Born in Cuddalore, he dropped out of school at an early age and went to Madras, where he joined the Communist Party of India. In a career spanning six decades, he authored around 40 novels, 200 short stories, APART from two autobiographies. Outside literature, he made two films. In addition, four of his other novels were adapted into films by others. Jayakanthan's literary honours include Jnanpith and Sahitya Akademi awards. He was also a recipient of Padma Bhushan (2009), India's third-highest civilian honour, the Soviet Land Nehru Award (1978), and the Russian government's Order of Friendship (2011) Jayakanthan wrote his first short story for a Tamil magazine titled Sowbakiyavathi, which got it published in 1953. Following early success, Jayakanthan started writing for mainstream magazines such as Ananda Vikatan, Kumudam and Dinamani Kadir, who published a number of short-stories particularly in the 1960s. In 1964, Jayakanthan entered films by co-producing and directing a venture titled Unnaipol Oruvan, based on his novel. The film focussed on the plight of slum-dwellers. Although a commercial failure, it won the President's Certificate of Merit for the Third Best Feature Film in 1965. The following year he made another film based on his namesake novel Yaarukkaga Azhudhaan which had Nagesh playing the lead role. His novel Sila Nerangalil Sila Manithargal (1970) won him the Sahitya Akademi Award (for Tamil) in 1972. Later this was adapted into a film of the same name by A.Bhimsingh, which won a National Film Award. Promoted by the film's success, Bhimsingh made one more film tilted Oru Nadigai Naadagam Paarkiral, based on his namesake novel. In 2008, Ravisubramaniyan made a documentary film on Jayakanthan, the second of its kind, and was produced by Ilaiyaraja. https://en.wikipedia.org/wiki/Jayakanthan
LanguageUnknown
Release dateMay 16, 2016
ISBN6580103900446
Parisukkup Po!

Related authors

Reviews for Parisukkup Po!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Parisukkup Po! - T.Jayakanthan

    http://www.pustaka.co.in

    பாரீசுக்குப் போ!

    Parisukku Po

    Author:

    த. ஜெயகாந்தன்

    T. Jayakanthan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jayakanthan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    முன்னுரை

    இந்த நாவலை ஒரு தொடர்கதையாக ஆனந்த விகடனில் எழுத நான் துணிந்தபோது இது என்னென்ன அவஸ்தைகளுக்கெல்லாம் ஆளாக நேரும் என்று முன் கூட்டியே அறிந்து வைத்திருந்ததனால் அல்லது எதிர்பார்த்திருந்ததனால் இதற்கொரு எச்சரிக்கை போலும் விளக்கம் போலும் முன்னுரை என்ற பெயரில் எனது நிலையைத் தெளிவுபடுத்தி இருந்தேன்.

    என்ன துரதிர்ஷ்டம்! அந்த முன்னுரையே, பெருத்த தாக்குதலுக்கு இலக்காயிற்று. நம்மவர்கள் நாம் எதை எத்தனை விதமாக விளக்கினாலும் அவர்கள் தாங்கள் எண்ணியிருக்கும் ஏதோ ஒன்றை அவர்களுக்குத் தெரிந்த ஒரே விதமாகப் புரிந்து கொள்வதில் மூர்க்கமாக ஈடுபட்டிருக்கிறார்கள். எனவே காலத்தை நம்பியே இங்கு காரியம் ஆற்ற வேண்டியிருக்கிறது.

    ஆனால் நம்மவர்கள் விவாதம் செய்வதில் மிக்க விருப்பம் உடையவர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்கள் அவசரக்காரர்களாகவும் இருக்கிறார்கள். ஒரு தர்க்கசாஸ்திரிக்கு இருக்க வேண்டிய விசாலமாக ஹிருதயமோ தீக்ஷண்யமான ஞானமோ இன்றி, வெறும் அவசரக்காரர்களாய் விவாதத்தில் ஈடுபடுவதன் விளைவு வெறும் சந்தைக்கடை இரைச்சல்தான் என்பது இவர்களுக்கு விளங்குவதே இல்லை.

    ஒரு தர்க்கவாதத்திற்கு வேண்டிய அடிப்படை வசதி பொறுமை. இவர்கள் அந்த வசதியை மறுத்து விடுகிறார்கள். எனவே தங்களுக்குத் தோன்றிவிட்டது என்பதனால் மறுபரிசீலனைக்கு இடமே இல்லாத நியாயமாக ஒன்றை வரித்துக்கொண்டு அதிலே தன்மயமான ஒரு ஆவேசத்தோடு, அறிவு பூர்வமாக ஆராயவேண்டிய விஷயத்தை வெறும் உணர்ச்சிபூர்வமாக ஏற்றுக்கொண்டு யுத்த சன்னத்தர்களாகி விடும் இவர்கள் வெகு விரைவில் பிறரை ஆத்திரமூட்டுகிறவர்களாகவும் அதே மாதிரி ஆத்திரமடைகிறவர்களாகவும் மாறிவிடுகிறார்கள்.

    வெறும் உணர்ச்சிவயப்பட்டவர்கள் உடல் வலு கொண்டு தாக்கிக்கொண்டு சண்டையிட்டு ஓய்வதிலாவது ஒரு நிம்மதி இருக்கும்; ஒரு அமைதி பிறக்கும். ஆனால் இந்தச் சண்டைக்குப் பிறகு பரஸ்பரம் வெறுப்பையும் அர்த்தமற்ற பகைமையையும் அவசியமற்று வளர்த்துக் கொண்டிருக்க நேரிடுகிறது.

    நமது மொழியின் தலைவிதியைப் பார்த்தீர்களா? அது என்ன, அவ்வளவு சக்தியற்றுக் கிடக்கிறதா? உண்மையைத் தாங்கிச் செல்லும் வாகனமாக அது செயல்படவே முடிவதில்லையா? இந்த மொழியில் உருவாகும் - இந்த மொழியை உருவாக்கும் ஒரு இலக்கியச் சந்நிதானத்தில் பொய்ம்மையின் இருளடித்துப்போய் அறிவற்ற பகைமையென்னும் சைத்தான் ஆட்சி செலுத்திக் கொண்டிருப்பதா?

    ஒரு தேசத்தின், ஒரு நாகரிகத்தின், ஒரு காலத்தின், ஒரு வளர்ச்சியின், ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம்.

    ஓர் எழுத்தாளன் ஆத்மசுத்தியோடு எழுதுகிறானே, அது கேவலம் பிழைப்போ அல்லது ஒரு தொழிலோ அல்ல. அது ஒரு தவம்! நீங்கள் கதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே அது காலத்தின், ஒரு வாழ்க்கையின் சாஸனம்.

    அதை உங்கள் திருப்திக்காகவோ எனது திருப்திக்காகவோ கூட நான் எழுதிக்கொள்ள முடியாது. உங்களை ஏமாற்றவோ என்னை நான் ஏமாற்றிக்கொள்ளவோ கூட அதை நான் எழுதக் கூடாது. இலக்கியத்தில் வெற்றி என்பது உங்களது புகழ்ச்சி அல்ல; எனது அகம்பாவமும் அல்ல. உங்களை வெல்வது ஒரு வெற்றியே அல்ல... சில சமயங்களில் அதுவே ஒரு வீழ்ச்சி. இலக்கியத்தில் வெற்றி என்பது காலத்தை வெல்வது. உங்களைக் கடந்து செல்வது என் வெற்றி. நீங்களே உங்களைக் கடந்து செல்வதற்கு உதவி செய்வது இலக்கியத்தின் வெற்றி. அதற்கு இன்னொரு பெயர் வளர்ச்சி.

    இந்த நாவலை எழுதியதன் மூலம் எனது வாசகர்களை நான் இழந்து விடுவதாகச் சிலர் என்னிடம் வந்து வருத்தப்பட்டுக் கொண்டார்கள்.

    ‘நீங்கள் சிறுகதை மட்டுமே எழுதுங்கள். எதற்கு இதெல்லாம்?’ என்று சிலர் யோசனை சொன்னார்கள்.

    ஏதோ உலகத்தில் உள்ள மகத்தானவர்களின் பெயர்களை எல்லாம் நான் அடுக்கிக் கொண்டு போவதாகச் சிலர் ஆயாசப்பட்டார்கள்.

    ஆழம் தெரியாமல் நான் காலை விட்டுவிட்டதாகச் சிலர் அனுதாபப்பட்டார்கள்.

    சிலர் எதற்கு என்று தெரியாமலேயே என்னை இழித்தும் பழித்தும் எழுதினார்கள்.

    எனது காலத்தில் கருத்துலக நாகரிகத்திற்குப் புறம்பான பகைமையை என் அளவு சம்பாதித்துக் கொண்டவர்கள் எவரும் இல்லை என்று உணர்கிறேன். இந்த அனுபவத்தை வைத்து இதைவிட ஒரு பெரிய நாவலே எழுதலாம்.

    நான் ஒருமுறை எழுதிவிட்ட ஒரு விஷயத்தைப் பன்னிப் பன்னி எழுதிக்கொண்டே இருப்பதால் அதை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் விளங்கிக் கொண்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அதே மாதிரி எனது கருத்துக்களை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களிடம் சென்று எதிர்வாதம் செய்வது வீண் என்று நான் கருதுகிறேன்.

    இந்த இரண்டு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்தான் எனது கருத்துக்களின் மீது மூர்க்கமாகத் தாக்குதல் தொடுத்தவர்கள். இது ஒரு வீண் வேலை என்று அவர்களுக்குத் தோன்றவில்லையே என்பதற்காக நான் அனுதாபப்படுகிறேன்.

    எனது வாசகர்கள் என்பவர்கள் இறுதிவரை பொறுமையாக இருந்தார்கள். என்னைப் போலவே அவர்களும் அந்தத் தாக்குதல்களுக்கு ஆளாகியதால் தங்களது அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளும் முறையில் இந்த நாவலைப் பாராட்டிக் கடிதங்கள் எழுதி இருந்தார்கள். இந்த நாவல் பற்றி எழுந்த விவாதங்களில் அவர்களுக்கு விளைந்த பிரச்னைகள் குறித்தும் சிக்கல்கள் குறித்தும் விளக்கம் தரும்படி என்னிடம் கேட்டிருந்தார்கள்.

    ஓர் எழுத்தாளன் என்ற முறையில் ஒன்றை எழுதிவிட்ட பிறகு அது அவரவர்களின் மனோ தர்மத்துக்கே விடப்பட்ட ஒன்று என்பதால் அதுபற்றி மேலும் மேலும் பரிசீலனை செய்து கொண்டிருப்பது அல்லது அபிப்பிராயம் உருவாக்க வேண்டுமென்ற ஆவேசம் கொள்வது ஆகியவை எனக்கு ஒவ்வாத காரியம் என்பதால் அத்தகைய கடிதங்களுக்கு நான் பதில் எழுதாமல் இருந்துவிட்டேன்.

    நமது சமூகத்தில் பலதரப்பட்ட அறிவு ஜீவிகளின் சம்வாதங்களும் விவாதங்களும் நிகழ வேண்டுமென்பதுதான் எனது லட்சியம்! ஞானவான்கள் பலர் கூடி மிகுந்த சிரமத்துக்கிடையே தீர்வுகாண வேண்டிய - அல்லது தீர்வு காணவே முடியாத - எத்தனையோ நுணுக்கமான மிகப் பெரிய விஷயங்களின் மீது மூடர்களே கூட மிகச் சுலபமாக அவசரத் தீர்ப்பளித்து விடுவதையே நான் நடைமுறை வாழ்க்கையில் பார்க்கிறேன். அந்த ஒரு காரியம் தவிர அறிவு பூர்வமான சகல வாதங்களையும் அவை என் கருத்துக்களிலிருந்து எவ்வளவு மாறுபட்டிருப்பினும் கூட நான் மரியாதையோடு வரவேற்கிறேன்.

    எனவே எனது மதிப்பிற்குரிய வாசகர்கள் தத்தம் வழியிலேயே அந்தப் பிரச்னைகளைச் சிந்திக்கட்டுமென்று விட்டு விட்டேன்.

    இந்த நாவலை எழுதி முடித்த பின் வாசகர் கடிதங்களை வெளியிட வேண்டும் என்று ஆனந்தவிகடன் காரியாலயத்தார் என்னிடம் கேட்டபோது நான் மறுத்து விட்டேன். எனக்கு வந்த பாராட்டுக் கடிதங்களை மட்டுமே பிரசுரித்து இந்தக் காலத்தில் வெளிவந்த இந்த நாவலை இந்தக் காலமே அங்கீகரித்து விட்டதாக ஒரு பொய்யை உருவாக்கி அந்தப் பொய்ம்மையில் ஒளிந்து கொள்ள நான் கூசினேன். அது நியாயமே என்று அவர்களும் ஒப்புக் கொண்டார்கள்.

    ஒரு விஷயத்தை மட்டும் நான் எண்ணி எண்ணி மனப்பூர்வமாக நன்றி பாராட்டுகிறேன். அது, பெரும்பான்மையான வாசகர்களின் பெரும்பான்மையான ரசனைக்கு ‘விருந்து’ அளிப்பதே தன் கடன் என்று பணியாற்றி வரும் ஆனந்தவிகடன் எனது இந்தக் காரியத்திற்கு உடன்பட்டு ஒத்துழைக்கும் ஒரு சோதனைக்கு உட்பட்ட ஒரு காரியம் இருக்கிறதே... ஓ! அதற்கு எத்தனை நன்றி பாராட்டினாலும் தகும்!

    *****

    இப்போது மீண்டும் ஒருமுறை வாய்விட்டுப் படித்துப் பார்க்கும்போது இந்தச் சிருஷ்டியினால் என் கர்வமே மிகுகிறது. இந்த உண்மையை மறைத்துக் கொள்ளும் அடக்கம் உயர்வானதே எனினும் இந்தச் சூழ்நிலையில் அது அவசியமில்லை என்று கருதுகிறேன். உங்களுக்கு ஒரு சூத்திரம் தெரியுமா?

    ‘மன்னுடை மன்றத்து ஓலை தூக்கினும்

    தன்னை மறுதலை பழித் காலையும்

    தன்னுடை பெற்றி அறியா ரிடையினும்

    தான் தற்புகழ்தல் தகும் புலவோர்க்கே’

    தகுதிக்குரியவர்கள் தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்ள வேண்டிய நிலையில் இருப்பது எவ்வளவு துயரகரமானது என்பது எனக்குப் புரிகிறது. எனது குறைகளே என் நெஞ்சில் எப்போதும் கனத்துக் கொண்டிருக்கின்றன.

    இந்த நாவலின் இறுதி அத்தியாயங்களில் இந்த நாவலின் ஆரம்ப அத்தியாயங்களின் போக்குக்குப் புறம்பான ஒரு துரிதகதி நேர்ந்து விட்டது. புத்தகமாக வெளியிடும்போது அதை மாற்றி அமைக்க நான் விரும்பினேன்.

    அந்த எனது ஊனத்திலேயே நான் ஒரு அழகு கண்டுவிட்டாலும் அதை மாற்றுவதன் மூலம் ‘ஏதோ நிர்பந்தங்களுக்கு உட்பட்டு நான் அவசரமாய் அந்தக் கதையை முடித்துவிட்டேன்’ என்ற எண்ணம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும் என்பதாலும் அது பிறந்த மேனியாகவே இருக்க அனுமதித்து விட்டேன்.

    இந்தக் கதையை நடந்திச் செல்லும் பாத்திரங்கள் அனைவரும் எந்த அளவுக்கு உணர்ச்சி மயமானவர்களோ அந்த அளவுக்கு அறிவு மயமானவர்கள். அவர்களுக்கிடையே ஏற்படும் மோதல்களில் யார் வெல்கிறார்கள்? யார் தோற்கிறார்கள்? என்பது எனக்குத் தெரியவில்லை. யார் வெல்ல வேண்டும், யார் தோற்க வேண்டும் என்று நான் ஆசைப்படவும் இல்லை. அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் எல்லாக் கருத்துக்களுக்கும் அவர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

    அறிவுமயமான ஓர் உலகத்தின் பலதரப்பட்ட பிரஜைகளையே நான் கதாப்பாத்திரங்களாக இதில் வகுத்தேன். தர்மமும் அதர்மமும்தான் மோதிக்கொள்ளும் என்பதில்லை. தர்மங்களுக்குள்ளாகவே மோதல்கள் நேரிடலாம். அந்த மோதல்கள் எவ்வளவு அழகாக இருக்கும்!... எவ்வளவு குரூரமாக இருக்கும்!...

    நாவல் என்பது தொடர்ச்சியான பல நிகழ்ச்சிகள் என்று நம்பிக்கொண்டும், ரசித்துக்கொண்டும் இருக்கும் நமது பத்திரிகை எழுத்தாளர் - வாசகர் - விமர்சகர் உலகில் அறிவுப்பூர்வமாக பிரச்னைகளுக்கும் உணர்ச்சிமயமான தர்மங்களுக்கும் முதன்மை தந்து, ‘நான் எழுதப் போவது ஒரு நாவல்’ என்று சொல்லிவிட்டதில் ரொம்பப் பேருக்கு என் மேல் கோபம். நான் எதையோ சொல்லிவிட்டு எல்லாரும் செய்வதையே செய்திருந்தால் உங்கள் கோபத்திற்கு ஆளாவது நியாயம். நான் என்ன சொன்னேனோ அதையே செய்திருக்கிறேன்.

    நான் ஒரு தீர்மானமான திட்டத்தோடு, விளைவுகளின் தன்மையைப் புரிந்துகொண்டே எனது காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறேன். எனது கதைகளைப் படித்ததனாலேயே தங்களுக்கு ஒரு தரத்தை ஏற்படுத்திக் கொண்டு விட்டவர்கள் எனக்கு எழுதும்போதும் என்னோடு பேசும் போதும் அதனை மறந்துவிட்டுப் பேசுவது குறித்து நான் மிகவும் ஆயாசப்படுகிறேன். எழுதுபவனோடு பகைமை பாராட்டிக் கொண்டிருப்பது ஒரு சமூக வீழ்ச்சிக்கு அறிகுறி.

    இதைப் படிக்கும்போது உங்களுக்கு ஒன்று தோன்றலாம்; ‘ஒரு தனி மனிதனான இவனைப் பகைத்துக் கொள்வது ஒரு சமூக வீழ்ச்சி என்று இவன் சொல்லுகிறானே; இவன் தன்னைப்பற்றி எவ்வளவு அதீதக் கணிப்புக் கொண்டிருக்கிறான், என்று எடுத்த எடுப்பில் ஒருமுறை நீங்கள் நினைப்பது தவறே ஆகாது. ஏனெனில் இதைச் சொல்லும் முன்பு எனக்கே அவ்வித ஓர் எண்ணம் தோன்றியதுண்டு.

    ஒரு தனி மனிதன் என்ற முறையில் உங்களுக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாதல்லவா? உங்களோடு நான் பேசும்போது இந்தச் சமூகத்தால் எனக்குத் தரப்பட்ட - நீங்களே விரும்பினாலும் திரும்பிப் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு பீடத்தில் அமர்ந்து பேசுகிறேன்.

    இலக்கியத்தில் ஈடுபாடில்லாதவர்கள் இலக்கிய ஆசிரியர்களின் பெருமையை உணராதிருப்பது பொருட்படுத்தத் தகுந்த விஷயமல்ல. ஆனால் இலக்கியத்தின் மீது மாளாத காதல் கொண்டு விட்டதாக மடலூர்ந்:து கொண்டிருப்பவர்கள் இந்த மொழிக்காக, இந்தக் கலாச்சாரத்துக்காக சர்வ பரித்தியாகம் செய்யத் தயாராயிருப்பவர்கள் போல் காட்டிக் கொள்பவர்கள் கூட இலக்கியத்தின் தலைவிதியை எழுதுபவனை ஏதோ கிள்ளுக்கீரை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    இதையெல்லாம் வெளியில் சொல்வது அவமானம் என்று நான் கருதவில்லை. அவமானமெனினும் அதை மறைத்துப் பயனில்லை. எனவேதான் என்னோடு, எனது கருத்துக்களோடு, எனது வாழ்வியல் நெறிகளோடு ஒத்துப்போகக் கூடிய, உடன்பாடு காணக்கூடிய முகம் தெரியாத வாசகர்கள், முகம் தெரிந்த நண்பர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் இந்த நாவலுக்காக என்னைப் பாராட்டியபோதிலும் - நமது சமூகத்தின் பொது நிலைமைப் பிரதிபலிக்கும் இதற்கு மாறான கருத்துக்களையும் முதன்மைப்படுத்திக் கவலையோடும் பொறுப்போடும் சிந்திப்பது எனது கடமை என்று நான் நினைக்கிறேன்.

    சர்ச்சைக்குரிய இந்த நாவலைத் தொடர்ந்து விகடனில் வெளியிட்ட சாதனை ஒன்றுக்கு அவர்களை நான் என்றுமே மறக்க முடியாது.

    இந்தப் பதிப்பகத்தாருக்கும் அந்த நன்றி உரியதுதானே?

    19.1.66

    சென்னை

    த.ஜெயகாந்தன்

    1

    நாடுகள் என்று பிரிந்து கிடக்கும் நந்தவனங்களில், எத்தனையோ வண்ணங்களில் மலர்ந்து செழிக்கும் மனிதகுல வாழ்க்கையென்னும் மலர்களில் ஊறித் ததும்பும் ஜீவ மதுவின் சுவை நாடி ரீங்கரிக்கும் ஒரு வண்டி போல்- இசை பாடிப் பறந்து வந்தது அந்த விமானம்!

    ‘இன்னும் சில நிமிஷங்களில் நாம் மீனம்பாக்கம் விமான நிலையத்தை அடைகிறோம்’ என்று ஆங்கிலத்தில் அறிவித்த பெண் குரலைத் தொடர்ந்து விமானம் பறந்து கொண்டிருந்த உயரத்திலிருந்து மெள்ள மெள்ள இறங்குவதால் விளைந்த குலுக்கலுடன் விமானத்தின் சப்தமும் சற்றுக் கூடியிருப்பது போல் தோன்றவே, சாரங்கள் வலது காதில் விரலை வைத்துக் குடைந்து கொண்டான்.

    காதில் ‘கும்’மென்று ஏதோ அடைத்துக் கொண்டது போன்ற உணர்வு.

    சாரங்களின் பார்வை அவனுக்கு இடதுபுறக் கண்ணாடி அடைப்பின் வழியே பூமியை நோக்கித் தாழ்ந்தது. காலைச் சூரியனின் கதிர்பட்டுப் பளபளத்து ஜரிகை இழைபோல் நெளிந்தோடும் ஓர் ஆற்றையும் வெகு தூரத்தில் வெள்ளை கொழித்து நெளிவது போல் தெரியும் கடலையும் அவன் உற்றுப் பார்த்தான். கண்ணாடியருகே ஒரு பஞ்சுப் பொதி போல் நகர்ந்து வந்த மேகம் புகைத் திரட்சியாய் விமானத்தின் இறக்கையால் வெட்டப்பட்டது. கண்ணாடியை மறைத்து நீர்த்துளி பூத்து அந்த மேகச்சிதைவு அவன் பார்வைக்குத் திரையிட்டது.

    சாரங்களின் பார்வை விமானத்துக்குள் மீண்டது.

    பக்கத்துச் சாரியில் அவனுக்கு நேரே இருந்த சீட்டில் அமர்ந்திருந்த ஓர் ஐரோப்பிய மாது, புகைத்த சிகரெட்டை ‘ஆஷ்ட்ரே’யில் நெறித்து அணைத்துவிட்டு, தனது மூக்குக் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக் கொண்டே இடுங்கிய கண்களால் வெளியே பார்த்தாள். அவள் பக்கத்தில் இருந்த அவளது நான்கைந்து வயது மகன், காதினுள் இரண்டு விரல்களையும் வைத்து அழுத்திக் கொண்டு, ம்... என்று விமானத்தின் சப்தத்துடன் இயைந்து சுருதி கூட்டுவது போல் மூக்கால் சப்தம் எழுப்பியவாறு சீட்டின்மேல் நின்றிருந்தான்.

    சாரங்கன் அந்தக் குழந்தையைப் பார்த்துச் சிரித்தான்; அவன் குரலையும் விமானத்திலிருந்து எழும் ஒலியையும் இணைத்துக் கேட்டான். அது எங்கே? இது எங்கே?

    அப்போது திடீரெனத் தானும் அந்த விமானத்தின் சப்தத்தோடு இழைந்து ஒலியெழுப்ப வேண்டும்போல் அவனுக்குத் தோன்றியது. இதை நினைத்துத் தானே சிரித்துக் கொண்டான்.

    சாரங்கன் தன் மனத்துள்ளேயே அதற்கு இணையான ஸ்தாயியைக் கற்பிதம் செய்து கொண்டான் அப்போது.

    ‘இந்த சப்தத்தை ‘ஷட்ஜ‘மாக வைத்துக்கொண்டு உயர்த்திக் கொண்டே போனால்’ என்ற கற்பனையும், ஒரு மூன்று ஸ்வரங்களுக்கு மேல் கற்பனையில் கூட எட்ட முடியாத திகைப்பும் கொண்டு அவன், தனது ஒழுங்கற்ற, இடையிடையே நரை பரவிய, கோட்டுக்காலரின் மேலும் நெற்றியின் மீதும் சரிந்து கிடக்கும் கிராப்பினூடே விரல் நுழைத்துத் தலையைச் சொறிந்து கொண்டான்.

    அவன் மீண்டும் தனக்கு இடதுபுறக் கண்ணாடி வழியே குனிந்து பூமியைப் பார்த்தபோது, விமானம் மிகவும் கீழிறங்கிப் பறந்ததால் சரசரவென்று கண்ணில் படும் மரங்களும் சாலைகளும் பின் சென்று மறைவதைக் கண்டான்.

    தூரத்தில் மண்ணின் மகிமை உணர்ந்து வானமே வளைந்து தழுவும் தொடுவான விளிம்பில் பூமிப் பரப்புக்குக் கரையிட்டது போல் தெரிந்த கடல் இப்போது கன்னங் கரேலெனத் தோன்றியது. அந்த நீர்ப் பரப்பில் வெண்ணிறப் பாய் விரித்து மிதந்த கட்டு மரங்களும், உலகைத் தழுவி உறுமிக் கொண்டிருக்கும் அந்தக் கடலின் மீது விளையாடும் மரக்கலங்களில் சின்னஞ்சிறு மனிதனின் உருவமும் சக்தி வாய்ந்த கரும் புள்ளிகள் போல் தோற்றமளித்தன.

    அது மறைந்ததும், சற்றுத் தொலைவில் நட்சத்திர மண்டலங்களையே பூமியில் இறக்குவதற்குச் சித்தமானவை போன்று வானை நோக்கி உயர்ந்த ‘கிரேன்’கள் நிறைந்த துறைமுகம் தெரிந்தது.

    கீழே படம் விரித்தாற்போல் பரந்து கிடக்கும் நகரத் தோற்றம்... அங்கும் இங்கும் திட்டுத்திட்டாய்த் தெரிந்த சில கட்டடக் கும்பல், வட்ட வட்டங்களாகத் தோன்றிய நீர் நிலைகள்; வரிசையாகத் தெரியும் பசுமை அடர்ந்த மரச் செறிவு; மங்களூர் ஓடுவேய்ந்த வெளிறிய சிவப்பு நிறக் கூரைப் பகுதிகள்; நீண்டு வளைந்து செல்லும் ரயில் வண்டி; வெகு அருகாமையில் தெரியும் டிரங்க் ரோடு... லெவல் கிராஸிங்கில் நிற்கும் லாரிகள்... உச்சியில் ஒற்றை மனிதன் அமர்ந்திருக்கும் வைக்கோல் வண்டி எல்லாம் விரைந்து மறைய...

    ஒரு பெருங்குலுக்கலுடன் விமானம் தரை தட்டியது.

    மண் தரையும் கோடுகளிட்ட - ஓரங்களில் விளக்குகள் பதித்த சிமெண்ட் தளவரிசையும் ஓடி மறைய விமானம் நிலையத்தில் வந்து நின்றது.

    விமானத் தளத்துக்கு வெளியே கிராதி மறைப்புக்கு அப்பால் வரிசையாக நின்றிருக்கும் கும்பல், விமானத்திலிருந்து இறங்குவோர்க்குக் கரம் உயர்த்தி வரவேற்பளித்தது.

    விமானத்துக்குள்ளிருந்து வரிசையாய் இறங்கி வரும் பிரயாணிகளில் கடைசி மனிதனாய், தோளில் மாட்டிய பையும், முழங்கையின் மீது மடித்துப்போட்ட ஓவர்கோட்டுமாய்த் தோன்றிய சாரங்கன், தூரத்தே தெரியும் அந்தக் கும்பலில் தன்னை வரவேற்கவும் யாரேனும் வந்திருக்கக் கூடும் என்ற நம்பிக்கையோடு கரத்தை உயர்த்தி ஆட்டியவாறே இறங்கி வந்தான்.

    பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த மண்ணில் கால் வைக்கும்போது, வெப்பமிகுந்த சொந்த நாட்டுக் காற்றைச் சுவாசிக்கும்போது, தாய்மொழிக் குரல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வந்து காதில் விழும்போது எவ்வளவுதான் நெருக்கம் கொண்டு விதேசி வாழ்க்கையில் ஊறித் திளைத்திருந்த போதிலும், பிறந்த மண்பாசம் என்ற இயல்பான உணர்ச்சி அவனையும் மெய்சிலிர்க்க வைத்தது.

    கற்பனை மயக்கத்தில், லட்சிய வேட்கையோடு கனவில் ஆழ்ந்திருக்கும் அவனது விழிகள், அந்தக் கும்பலில் தன்னை வரவேற்க வந்திருக்கும் தன் தந்தையை அல்லது தமையனை, அல்லது அடையாளம் தெரியாமல் தவிக்கப்போகும் தன் தமக்கையின் புதல்வனைத் துணை தேடித் தவித்தது. வரிசையாக நின்றிருந்த அந்தக் கும்பலில் ஒவ்வொரு முகத்தையும் கூர்ந்து பார்த்தவாறே அவன் கடைசியில் தனியாகவே வெளியே வந்தான்.

    வந்து நின்று, சற்று முன்னர் வரிசையாகப் பார்த்துக் கொண்டே வந்தபொழுது, அவன் பார்வையைச் சந்தித்து அவன் மனத்தில் ஒரு நட்பு உணர்ச்சியைப் பதித்த அந்த மையிட்ட விழிகளை மீண்டும் அவன் அந்தக் கும்பலின் நடுவே திரும்பிப் பார்த்தான்.

    செக்கச் சிவந்த நெருப்பு நிறமாய் ஜொலிக்கும் பட்டுப் புடவையின் தலைப்பை எடுத்துப் போர்த்திக் கொண்டு அவள் நின்றிருந்தாள். அவன் திரும்பிப் பார்க்கின்ற இப்போதும் கூட அவனையே அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்; அவன் அவள் அருகே சென்று பேச விரும்பும் உணர்வோடு ஓரடி எடுத்து வைத்து உடனே இது பாரீஸோ, லண்டனோ அல்ல என்ற உணர்வு பெற்று, முன்பின் பரிச்சயமில்லாத ஒரு ஹிந்துப் பெண்ணிடம் எவ்விதம் பேசி என்ன சொல்வது என்று விளைந்த அச்சத்தோடு அவன் இரண்டு முறை திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே லக்கேஜ் கௌண்டருக்குத் திரும்பி நடந்தான்.

    அவன் தன் பார்வையிலிருந்து மறைந்ததும் அவள் தன் அருகே நின்றிருந்த கணவனை நோக்கித் திரும்பினாள், அவர், அந்த ஸுட் அணிந்த நெடிய உருவம் - கையில் புகையும் சிகரெட்டோடு சற்றுத் தள்ளி வானத்தைப் பார்த்தவாறு நின்றிருந்தார். அவள் அவர் அருகே வந்ததும் அவர் அவளைத் திரும்பிப் பார்த்தார். திரும்பிப் பார்த்துத் தாங்கள் எதிர்பார்த்து வந்த மனிதர் வராத ஏமாற்றத்தோடு அவர் உதட்டைப் பிதுக்கினார். அவள் அமைதியாகத் தன்னுள் சிரித்துக் கொண்டாள். இருவரும் மௌனமாகத் திரும்பி நடந்தனர்.

    லக்கேஜ் கௌண்டரில் நான்கு பெரிய ஸுட்கேஸ்களை ‘ஏர்லைன்ஸ் பஸ்ஸிலேயே ஏற்றிக் கொள்ளலாமா? தனியே ஒரு டாக்சி வைத்துக் கொண்டு போகலாமா?’ என்று ஒரு முடிவுக்கு வரமுடியாத அளவுக்கு ஒரு டாக்சி டிரைவரும் ஒரு போர்ட்டரும் சாரங்கனைக் குழப்பிக் கொண்டிருந்தார்கள். அவன் அவர்களிடமிருந்து சற்றுத் தள்ளிப்போய் நின்று ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான். அப்போது அவன் பின்னாலிருந்து ஆங்கிலத்தில் ஒரு குரல் கேட்டது.

    எக்ஸ்கியூஸ் மீ - நீங்கள் தானே மிஸ்டர் சாரங்கன்?

    சாரங்கன் திரும்பிப் பார்த்தபோது அவர் - அந்த ஸுட்டணிந்த நெடிய உருவம் - அவன் எதிரே கைநீட்டி நின்றிருந்தார். அவரை யாரென்று தெரியாமல் தன்னை யாரென்று தெரிந்து கொண்ட அவருக்கு நன்றி செலுத்துவது போல் புன்னகை காட்டி அவரோடு கரம் குலுக்கினான், சாரங்கன்.

    என் பெயர் மகாலிங்கம் என்று அவனைத் தன் கைப்பிடியில் இழுத்துக் கொண்டு நடந்த அவர், போர்ட்டரிடம் ஒரு சாவியைத் தந்து, அந்த அம்பாசிடர் வண்டியில் சாமானை ஏத்து என்று கூறினார்.

    அவர்கள் இருவரும் ‘ரெஸ்டாரெண்டை’ நோக்கி அந்த ‘மொஸாய்க்’ தளவரிசை வராந்தாவில் ஷ_ஸ் அணிந்த பாதங்கள் ‘டக்டக்’கென்று ஒலிக்க நடந்து வருகையில், மகாலிங்கம், தான் அவனுடைய தகப்பனாரின் நண்பர் என்பதையும், தெளிவாகச் சொன்னால், அவன் தமையன் நரசிம்மனோடு கூடப் படித்தவரென்றும், சாரங்கன் பாரீஸிலிருந்து எழுதிய கடிதங்களை எல்லாம் தவறாது தான் பார்த்திருப்பதாகவும் ஏதோ ஓர் ஆர்வத்தில் ஆங்கிலத்தில் இடைவிடாது பேசிக்கொண்டே வந்தார். அவர் தெரிவித்த ஒவ்வொரு செய்திக்கும் ‘ஐ ஸீ’ ‘ஓ... ஐ... ஸீ...’ என்று அவன் புன்முறுவல் காட்டி, தலையசைத்துக் கூறியவாறே அவரோடு சேர்ந்து நடந்தான்.

    அப்போது அவன் பார்வையில், அந்த வராந்தாவின் கோடியில் சுவர் அருகே சாய்ந்து நிற்கும் - செக்கச் சிவந்த நெருப்பு நிறமாய் ஜ்வலிக்கும் பட்டுப் புடவையின் தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொண்டிருக்கும் அவள் பட்டாள். நெற்றியின் மேல், சுருண்டு விழுந்து கண்ணை மறைத்த நரை பரவிய கிராப்புச் சிகையை அண்ணாந்து பின்னுக்குத் தள்ளிவிட்டுக் கொண்டான் சாரங்கன்.

    அவர்கள் இருவரும் அவள் இருக்குமிடத்தை நெருங்கி வரவும், மகாலிங்கம் நின்றார். தன் அருகே நின்றிருந்த சாரங்கனிடம், என் மனைவி லலிதா என்று அறிமுகம் செய்து, நீங்கள்தான் சாரங்கன் என்று இவள் சொல்லித்தான் நான் கண்டுபிடித்தேன்... எனவே உங்களை நான் அவளுக்கு அறிமுகம் செய்து வைக்கத் தேவையில்லை என்று ஏதோ பெரிய ஹாஸ்யம் கூறியவர்போல் அவர் மட்டும் பெருங்குரலில் சிரித்தார்.

    லலிதா சாரங்கனை நமஸ்கரித்தாள். சாரங்கனும் கையிலிருந்த சிகரெட்டைக் கீழே எறிந்துவிட்டு பதிலுக்கு நமஸ்கரித்தான். பின்னர் மூவரும், ரெஸ்டாரெண்டுக்குள் சென்றனர்.

    கோடை காலமானதால் காலை நேரத்திலேயே வெப்பம் மிகுந்து இருந்தது. மகாலிங்கம், லலிதா, சாரங்கன் மூவரும் அந்த ‘ஏர்-கண்டிஷண்ட்’ ரெஸ்டாரெண்டுக்குள் காபி சாப்பிடும் பொருட்டும், வெப்பமில்லாத சூழ்நிலையில் சிறிதே அமர்ந்து அளவளாவும் பொருட்டும் வந்து அமர்ந்திருந்தனர்.

    சாரங்கன் தனது கோட்டுப் பையிலிருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்து மகாலிங்கத்திடம் நீட்டினான். அது அவர் வழக்கமாகப் பிடிக்கும் சிகரெட் அல்ல; எனினும் மரியாதைக்காக அந்த வெளிநாட்டுச் சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்த பின்னர், புகையை ரசித்து ஊதினார்.

    ட்ரேயில் டிகாக்ஷன், பால், சர்க்கரை ஆகியவற்றைத் தனித்தனியே வைத்து ஏந்தி வைத்த வெயிட்டரின் கரத்திலிருந்து அதை வாங்கிய லலிதா, மூன்று கப்களில் டிகாக்ஷனை ஊற்றினாள். பின்னர் ‘கப்’பிலிருந்த டிகாக்ஷனில் அவள் பாலூற்றக் கைநீட்டியபோது, நோ தாங்க்ஸ் என்று தடுத்தான் சாரங்கன். அவன் மேனாட்டு முறைப்படி காபி அருந்துபவன் என்று புரிந்து கொண்ட லலிதா இன்னும் கொஞ்சம் டிகாக்ஷனை அந்தக் கப்பில் ஊற்றினாள். தன் கணவரிடம் எதுவுமே கேட்காமல் - அவர் ருசி அவளுக்குத் தெரியுமாதலால் - பாலை ஊற்றி ஒரு துண்டு சர்க்கரைக் கட்டியை எடுத்து அதிலிட்டபின் சாரங்கனிடம் ஒன் ஆர்- டூ? என்று ஒரு புன்னகையோடு கேட்டவாறு ஒரு சர்க்கரைக் கட்டியை டிகாக்ஷனில் போட்டு மற்றொன்றை ஸ்பூனில் ஏந்தியவாறு அவன் முகத்தைப் பார்த்தாள் லலிதா.

    ஒன்-மோர்-ப்ளீஸ் -டிகாக்ஷனை ஸ்பூனால் கலக்கியவாறு தலைகுனிந்த சாரங்கன் அவளை விழி உயர்த்திப் பார்த்தான். நெற்றியில் கலைந்து விழுந்த சிகையினூடே அவனது விழிகள்- வலையில் சிக்கித் தவிக்கிறமாதிரி - அவளுக்குத் தெரிந்தன.

    அவர்கள் மூவரும் மௌனமாய்க் காபியை அருந்தும் போது சாரங்கனின் பார்வை ஒருமுறை மகாலிங்கத்தையும் அளந்தது. அப்போது அவன் விழிகளைச் சந்தித்த மகாலிங்கம் இணக்கமான ஒரு புன்னகை காட்டி,

    வீ ஆர் யுவர் அட்மைரர்ஸ் என்றார்.

    இட் இஸ் இம்ப்பாஸிபிள் என்று, அவர் கூறியதை ஒரே வார்த்தையில் மறுத்த சாரங்கன், தொடர்ந்து ஆங்கிலத்திலேயே சொன்னான்: இதுவரை நான் ஒரு முறை கூட இந்திய மண்ணில் வைலினின் வில்லைக்கூடத் தொட்டது இல்லை.

    நாங்கள் உங்கள் சங்கீதத்தின் அபிமானிகள் என்று சொல்லவில்லையே என்று பதிலுக்கு மகாலிங்கம் கேட்டதும்-

    என்னிடம் வேறு என்ன இருக்கிறது? என்று கூறி உதட்டைப் பிதுக்கியவாறு லலிதாவைப் பார்த்தான் சாரங்கன்.

    ஏன் இல்லை? உங்கள் தகப்பனாருக்கு நீங்கள் எழுதுகின்ற அந்த நீண்ட கடிதங்களில் நாங்கள் கண்ட பல புரட்சிகரமான கருத்துக்களைப் பற்றி நாங்கள் பல நாட்கள் விவாதித்திருக்கின்றோம். இல்லையா லலிதா? என்ற கணவரின் வார்த்தைகளைக் கேட்டு, ஆமோதிக்கிறவள் மாதிரி தலையசைத்தாள் லலிதா.

    அந்தக் கருத்துக்களைப் பற்றி நாங்கள் இருவரும் விவாதித்துக் கொண்டதைவிட உங்கள் தகப்பனாரோடு நாங்கள் விவாதித்ததே அதிகம் என்று லலிதா மிகவும் நிதானமாக இனிய குரலில் அவனிடம் சொன்னபோது, அவன் தன் இடது கரத்தால் சிகையைக் கோதியவாறே தன்னுள் ஏதோ சிந்தித்தவனாய் முகத்தில் ஒரு புன்னகையோடு-

    அந்த அளவுக்கு விவாதத்திற்குரிய கருத்துக்களா அவை? என்று முனகுவது போல கேட்டான்.

    நிச்சயமாக! உங்களைப் போல நமது சமுதாயத்திற்கு நிறையப் பேர் வேண்டும். அந்த ஆர்வத்திலேதான் முகம் தெரியாத உங்களை வரவேற்க நாங்கள் இருவரும் ஓடி வந்திருக்கிறோம்- உணர்ச்சி மயமாகிச் சற்று உரத்த குரலில் பேசினார் மகாலிங்கம்.

    தாங்க்யூ, தாங்க்யூ வெரிமச். நன்றிப் பெருக்குடன் சாரங்கனின் உதடுகள் முணுமுணுக்க, இதயத்தின் ஆழத்திலிருந்து ஓசை குறைந்த கனத்துடன் சொற்கள் வெளிவர, அவன் அந்த இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். பின்னர், சிகரெட்டைப் புகைத்துத் தலை குனிந்த சிந்தனையுடன் ‘ஆஷ்ட்’ரேயில் சாம்பலைத் தட்டியவாறு மகாலிங்கத்தின் பக்கம் திரும்பினான்.

    அப்பா எப்படி இருக்கிறார்...? நான் லண்டனிலிருந்து பாரீஸுக்குப் போனபிறகு இந்தப் பத்து வருஷ காலத்தில் அவர், நான் எழுதும் கடிதம் ஒன்றுக்குக் கூடப் பதில் போட்டதில்லை. மிஸ்டர் நரசிம்மனுக்கு எழுதினாலும் அப்படித்தான். என்னை அவர்கள் மறந்தே விட்டார்கள் என்று அவன் பெருமூச்செறிந்து புன்னகை காட்டியபோது அவனது கண்களில் விளைந்த கலக்கத்தை லலிதா மட்டும் கண்டாள்.

    ஓ! டேக் இட் ஈஸி என்ற சாரங்கனின் தோளில் தட்டினார் மகாலிங்கம். நீங்கள் கடைசியாக இங்கு வந்தது எந்த வருஷத்தில்?

    நாற்பத்து ஒன்பதில் என்று முனகியவாறு யோசனையில் ஆழ்ந்த சாரங்கனின் முகத்தில் துயரம் படர்ந்தது. சில வினாடிகள் கழித்து அவன் சொன்னான். "அப்பாவுக்கு என் மேல் கோபம்! என்னைப் பற்றி அவருக்குப் பெரிய ஏமாற்றம்... அவர் விருப்பப்படி நான் படிக்கலேன்னு என் மேல் அவருக்குக் கோபம்... இங்கேயே இருந்துவிடச் சொல்லி அப்போது வற்புறுத்தினார்... அப்போது லண்டனிலுள்ள ஓர் இந்திய வியாபாரியிடம் நான் வேலை செய்து கொண்டிருந்தேன்... அதுவுமல்லாமல் அப்போதுதான் நான்

    Enjoying the preview?
    Page 1 of 1