Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ninaikkappadum
Ninaikkappadum
Ninaikkappadum
Ebook129 pages37 minutes

Ninaikkappadum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ம. இராசேந்திரன் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பு வகித்தவர். தமிழ்ப் பேராசிரியர். எழுத்தாளர். கணையாழி இதழின் வெளியீட்டாளர். கோயம்புத்தூரில் 2010 ஆம் ஆண்டில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க ஒருங்கிணைப்பாளர்.

இவர் மெக்கன்சியின் சுவடிகளில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார்.

ம. இராசேந்திரன் தமிழ்நாடு அரசில் பல பொறுப்புகளை வகித்துள்ளார் - குறள் பீடம் பொறுப்பாளர், மொழிபெயர்ப்புத் துறையின் துணை இயக்குநர், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் ஆய்வு நூலகப் பணி, தமிழ்ப் பல்கலைக் கழகச் சிறப்புத்தகைமை விரிவுரையாளர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வுப்பணி தனிஅலுவலர், மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் அகரமுதலித் திட்டப் பொறுப்பு இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் திராவிட மொழியியல் பள்ளி, திருவனந்தபுரம், இயக்குநர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஆவார்.

இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580111102098
Ninaikkappadum

Read more from M.Rajendran

Related authors

Related to Ninaikkappadum

Related ebooks

Reviews for Ninaikkappadum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ninaikkappadum - M.Rajendran

    http://www.pustaka.co.in

    நினைக்கப்படும்

    Ninaikkappadum

    Author:

    மரன்

    Maran

    For more books
    http://www.pustaka.co.in/home/author/maran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கண்ணகி கோயில்

    2. நீலகிரி

    3. கல்கி நினைக்கப்படுகிறார்

    4. திருவனந்தபுரம்

    5. வாழும் வள்ளுவம்

    6. சித்தன்னவாசலும் காரைக்குடியும்

    7. வெற்றி தோல்வி அல்ல…

    8. கன்னியாகுமரி

    9. வெண்பாவூர்

    10. ஆறாம் திணை

    11. மும்பை

    12. கொல்கத்தா

    13. ஆரூரானை மறக்கலுமாமே

    14. குறள் பீடம்

    15. தஞ்சாவூர்

    16. பிணம் தழுவல்

    17. வெண்ணாற்றங்கரை

    18. உத்தமதானபுரம்

    19. காசி

    20. தாஜ்மஹால்

    21. மதுரா

    22. கடற்கரை

    23. சிட்டி

    24. கல்லும் மண்ணும்

    25. புறக்கணிப்பின் சோகம்

    நினைக்கப்படும்

    மகுடச் சும்மாடுகள்

    ஆதிமனிதன் தொடங்கி வைத்தத்

    தலைமுறைகளின் நினைவு அலகுகளைக்

    குத்திக்கொண்டு

    இன்றைய வாழ்க்கைத் தீமிதிகள்

    இறக்கி வைக்க நினைப்பதற்குள்

    மனதிற்குள் கரைந்துவிடும்

    கலவைக்குள் காலமும்

    புதிராகும் உன்னதங்கள்

    முன்னோர் மொழியும் வழியும்

    தப்பென்ற நினைப்பும்

    நினைப்பெல்லாம் சரியாமோ?

    எழும் கேள்வியும்

    சரி, தப்பு என்றெல்லாம் உண்டோ?

    மனதில் படும் குழப்பத்தெளிவும்.

    அந்தந்த நேர நினைவுகள்

    அந்தந்த நேரத்தின்

    சரி தவறுகளோ

    நினைத்துப் பார்த்தால்...

    நினைவுகள்

    வாழ்க்கையை சுமக்கக் கிடைத்த

    சும்மாடுகள்.

    உணரலாம்

    சும்மாடுகளை மகுடங்களாக

    முள் கீரிடங்களாகவும்!

    முள்ளாக உணர்ந்தாலும்

    முடியாக உணர்ந்தாலும்

    சும்மாடுகள்

    தலைமுறைகளால்

    நினைக்கப்படும் தானே!

    அன்புடன்

    மரன்

    1

    கண்ணகி கோயில்

    கண்ணகி கோயில், கம்பம் தாண்டி கூடலூரில் இளையராஜாவின் தியான மண்டபம். நடிகர் நம்பியார் தலைமையில் சபரிமலை போகிறவர்கள் தங்கிச் செல்வார்களாம். இளையராஜாவின் அம்மா பிறந்த / இறந்த ஊர் என்றார்கள்.

    மலை ஏறி போனால் வழிவிடுமுருகனும், வழித்துணை மாதாவும் வளைவுகளில் ஒதுங்கி நிற்கிறார்கள். கடந்து போனால் குமுளி. தமிழ் நாடும் கேரளாவும் கைகுலுக்கும் இடம். சந்திக்கிற இடத்திலேயே பளிச்சென்று கேரளப்பகுதி. கண்ணகி கோயிலுக்குப் போக வேண்டுமானால் மலை ஏறும் ஜிப் வேண்டும். பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ நிற்பதைப்போல குமுளியில் ஏகப்பட்ட ஜிப் வரிசைகள்.

    கேரளப் பகுதியில் 16 கி.மீ. பயணிக்க வேண்டும். இடையில் இரண்டு செக் போஸ்டுகள், சாதாரணமாக யாரையும் அனுமதிப்பதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை ‘போனால் போகிறது’ என்று தமிழர்களை இந்திர விழாவன்று (சித்திரா பெளர்ணமி) கேரளா அனுமதிக்கிறது. அதற்கும் ஏகப்பட்ட நிபந்தனைகள்.

    தேனி மாவட்ட டி.ஆர்.ஒ. வண்டியே தடுக்கப்பட்டதாம். அதை யும் மீறி சுமார் 18,000 தமிழர்கள் அந்த ஒருநாளில் போயிருக்கிறார்கள்.

    ‘150 ரூபாய் கொடுத்தால் பஸ்ஸில் லாகூர் போக முடிகிறது. கண்ணகி கோயிலுக்குப் போக முடியவில்லையே’ என்று டி.வி. காரர்கள் எல்லாம் கேரள போலீசிடம் சண்டை போட்டிருக்கிறார்கள்.

    செங்குத்தான மலை வழியில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, இல்லை ஜிப் ஒட்டுகிறவர் கையில் ஒப்படைத்துவிட்டு பயணிக்க வேண்டியிருந்தது. பயத்தைப் போக்க பாடவும் துணிச்சல் இல்லை. ஏதேனும் யோசிக்கலாமென்று நினைத்த போது கண்ணகியும் சிலப்பதிகாரமும் வியப்பைத்தந்தன.

    இலக்கிய நயங்களில் முரண் அணி முக்கியமானது. குடகு மலையில் தோன்றிய காவிரி, பூம்புகாரில் கடலில் கலக்கிறது. பூம்புகாரில் பிறந்து வளர்ந்த கண்ணகி, கிழக்கு மேற்குத் தொடர்ச்சி மலைகள் கூடும் இடத்தில் மலையேறியிருக்கிறாள்.

    பதியெழுவறியாப் பழங்குடிகளைக் கொண்ட புகாரில் இருந்து வாழ்தல் வேண்டி கண்ணகியும் கோவலனும் யாருக்கும் சொல்லாமல் ஒடிப்போகிறார்கள்.

    எழுதியவர் இளங்கோ அடிகள் பெயரிலேயே முரண். இளங்கோ என்றால் இளவரசன், அடிகள் என்றால் துறவி. துறவியும் வேந்தனும் இணைந்து ஒரு பெயர்.

    அரச பதவியே வேண்டாம் என்று துறந்த இளங்கோ, அடிகளாகிய பின்னர் சாத்தனாரிடம் கையேந்துகிறார். கண்ணகி-கோவலன் கதையைச் சாத்தனார் கூற, கதை நன்றாக இருக்கிறது. நானே எழுதுகிறேன் - ‘நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்’ என்று சாத்தனாரிடம் அனுமதி கேட்கிறார். சாத்தனாரும் ‘முடியுடை வேந்தர் மூவர்க்கும் உரியது அடிகள் நீரே அருளுக’ என்று வரமளிக்கிறார். அடிகள் ‘நீரே’ என்ற ஏகாரத்தில் சாத்தனாரின் மறுக்க இயலாத உணர்வும் வெளிப்படுகிறது.

    தமிழிலக்கிய வரலாற்றில் அணிகலன் பேரால் இலக்கியங்கள் உள்ளன. ஆனால் சிலப்பதிகாரம் போல அணிகலனும் அதிகாரமும் சேர்ந்த பெயர் இல்லை. சிலம்பால் மன்னவனின் மணி முடியாம் அதிகாரம் வீழ்ந்த கதை.

    ‘கண்ணகியின் வண்ணடிச் சீறடி மண்மகள் அறிந்திலளாம்’ பூமிதேவி கண்ணகியின் கால்களைப் பார்த்ததில்லையாம். வீட்டைவிட்டு வெளியே வந்தறியாதவளாம். அந்தக் கண்ணகிதான் பூம்புகாரிலிருந்து கால்நடையாக, கோவலனுடன் மதுரை வந்து கோவலனைப் பிரிந்து மலை ஏறியிருக்கிறாள்.

    வண்ணாத்திப்பாறை வந்தது.

    வீடே இல்லாத இடத்தில் வண்ணாத்திப்பாறை. இது விண்ணேற்றிப் பாறையாம். கண்ணகியை விண்ணில் ஏற்றிய பாறையாம்.

    கண்ணகியோடு மதுரையிலிருந்து புறப்பட்ட மக்கள்தான் மலைப்பகுதிகளில் இப்போதும் பழங்குடிகளாக வாழ்கிறார்களாம்.

    கண்ணகி கோயிலின் நுழைவுவாயில் தமிழ்நாட்டு எல்லைக்குள் பின்வாயில் கேரளாவில். ஆனால் கோயிலுக்குப் போகும் ‘சாலை’ கேரளப் பகுதியிலேயே உள்ளது. ஒற்றையடிப் பாதை ஒன்று தமிழ்நாட்டுப் பகுதி வழியே கோயிலுக்குப் போகிறது. புகாரிலிருந்து கண்ணகி கோயில் வரை ‘கண்ணகியின் அடிச்சுவட்டில்’ பேராசிரியர் சி.கோவிந்தராசனார் பயணம் நடத்தியிருக்கிறார்.

    பஞ்சபாண்டவர்க்குப் பத்தினியான துரோபதைக்கு ஊருக்கு ஊர் கோயில் இருக்கிறது.

    கண்ணகிக்கு இருப்பது ஒரே ஒரு கோயில். அதுவும் கண்ணகி கோயில்தானா என்பதிலே சண்டை. அந்தக் கோயிலுக்குப் போவதற்கும் கேரள போலீஸ் தடை

    கோவலனுடன் கூடியிருக்க வேண்டி புகார் விட்டுப் புறப்பட்டவள் கூடலூர் அருகே குமுளி மலையில்

    Enjoying the preview?
    Page 1 of 1