Are you sure?
This action might not be possible to undo. Are you sure you want to continue?
Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.
Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
http://www.pustaka.co.in
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
***
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
தெரிந்த வார்த்தை: தெரியாத விஷயம்!
போலியோ சொட்டு மருந்து: குழந்தையின் குடலில் இருக்கும் போலியோ வைரஸ் கிருமி, குழந்தைக்குப் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதின் மூலம் வெளியேற்றப்பட்டுச் சூரிய வெப்பத்தினால் கொல்லப்படுகிறது. போலியோ மருந்து ஒரு குழந்தைக்குப் போடாமல் போனால் அக்குழந்தை பாதிக்கப்படுவதோடு அதன் குடலிலுள்ள கிருமிகள் நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குப் பரவ வாய்ப்பு உண்டு. ஆகவே, ஒவ்வொரு குழந்தைக்கும் கண்டிப்பாய் போலியோ சொட்டு மருந்து போட வேண்டும்.
குட் மார்னிங் ஸார்...!
- செர்ரிப் பழ நிற லிப்ஸ்டிக் உதடுகளில் வார்த்தைகளைக் குளிப்பாட்டிக் கொண்டே ஏ.ஸி.யின் குளிர்ச்சியில் உறைந்து போயிருந்த அறைக்குள் நுழைந்தாள் ஸ்டெனோ பவ்யா.
லாப்டாப் கம்ப்யூட்டரில் எதையோ பார்த்து... பேப்பரில் குறிப்பு எடுத்துக் கொண்டிருந்த தேவேந்திரன் ஸ்டெனோவை நிமிர்ந்துகூடப் பார்க்காமல், என்ன...?
என்றான்.
இந்த லெட்டர் வந்து ஒரு வாரமாகுது ஸார்... நாம இன்னமும் இதுக்குப் பதில் தராமே இருக்கோம். அவங்களும் ரெண்டு தடவை போன் பண்ணி, ‘ஸார் என்ன சொன்னார்?’ன்னு கேட்டுட்டாங்க. நீங்க ஏதாவது ஒரு பதில் சொல்லிட்டா... அதை அவங்களுக்குச் சொல்லிடலாமே ஸார்...
தேவேந்திரன் அப்போதும் தலை நிமிராமல் லாப்டாப்பைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.
"என்ன லெட்டர் அது...?
கேலக்ஸி டி.வி.யிலிருந்து வந்த லெட்டர் ஸார்.
கையில லெட்டர் வெச்சிருக்கியா?
வெச்சிருக்கேன் ஸார்.
படி.
பவ்யா தொண்டையைச் செருமிக் கொண்டு கையில் வைத்திருந்த அந்தக் கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தாள்.
"அன்புள்ள திரு. தேவேந்திரன் அவர்களுக்கு,
வணக்கம். எங்களுடைய ‘கேலக்ஸி’ டி.வி.யில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் இரவு பத்து மணிக்கு ‘சாதிக்கலாம் வாங்க’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு நிகழ்ச்சியை ஒளிபரப்பிக் கொண்டு வருவதை நீங்கள் பார்த்து இருக்கலாம். அந்த நிகழ்ச்சியில் முப்பது வயதுக்கு உட்பட்ட இளம் தொழிலதிபர்கள் கலந்து கொண்டு தொழில் துறையில் தாங்கள் சாதித்தவற்றையும்... இனிமேல் சாதிக்கப் போகிற விஷயங்களைப் பற்றியும் பரிமாறிக் கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியைப் பல்லாயிரக்கணக்கான டி.வி. நேயர்கள் பார்த்துப் பயனடைந்து வருகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
உங்கள் தந்தை லட்சுமிபதியால் மிகச் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி இன்று உங்கள் உழைப்பின் காரணமாக ஆல விருட்சமாய் வளர்ந்து கிளைகளையும் விழுதுகளையும் பரப்பிக் கொண்டு நிற்கிறது. நீங்கள் பெற்றுள்ள இந்த மாபெரும் வெற்றியை எங்கள் நேயர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதில் உங்கள் விருப்பத்தை அறிய ஆவலாக உள்ளோம்.
இப்படிக்கு
கேலக்ஸி டி.வி. நிர்வாகம்."
கடிதத்தைப் படித்துவிட்டுத் தேவேந்திரனைப் பார்த்தாள் பவ்யா.
அவன் இன்னமும் லாப்-டாப்பைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
என்ன பதில் எழுதட்டும் ஸார்?
தேவேந்திரன் நிமிர்ந்தான். அந்த லெட்டரை இப்படிக் கொண்டா...
பவ்யா கொடுத்தாள்.
அந்த லெட்டரை வாங்கிய தேவேந்திரன் அதைத் துண்டு துண்டாய்க் கிழித்து... பக்கத்தில் இருந்த ‘வேஸ்ட்பின்’னுக்குள் போட்டான்.
ஸா... ஸார்...
நீ போய் உன்னோட வேலையைப் பார்...
ஸ... ஸார்... வந்து...
என்ன?
அந்த டி.வி.காரங்க போன் பண்ணிக் கேட்டா... என்ன பதில் சொல்றது ஸார்?
இப்படிப்பட்ட வெட்டித்தனமான டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்ததாலதான் எங்க கம்பெனி இவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைஞ்சிருக்குன்னு சொல்லு...
...
என்ன... சொல்லுவியா?
எ... எ... எஸ்... ஸார்...
- பவ்யா வியர்த்து வழிந்து கொண்டே அறையிலிருந்து நகர முயன்ற விநாடி -
தேவேந்திரனின் குரல் மறுபடியும் உயர்ந்தது.
ஒரு நிமிஷம் பவ்யா...
பவ்யா நின்றாள்.
உனக்குக் கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கு, இல்லையா?
ஆமா... ஸார்...
உன்னோட கணவருக்குப் பேங்க்ல வேலை...! இல்லையா?
ஆமா... ஸார்...
நீ ஆபிஸுக்குக் கிளம்பி வரும்போது உன்னோட கணவர் உன்னைப் பார்த்தாரா?
பார்க்கலை ஸார்...! அவர் பேங்க்குக்குத் தினசரி எட்டு மணிக்கே புறப்பட்டுப் போயிடுவார். ஏன்... ஸார்... என்ன விஷயம்?
நீ ஆபீஸுக்குக் கிளம்பி வரும்போது உன்னோட கணவர் உன்னைப் பார்த்திருந்தா... உங்களுக்குள்ளே ஒரு பெரிய சண்டையே நடந்து இருக்கும்...
என்ன ஸார் சொல்றீங்க...?
ஒரு குடும்பப் பொண்ணு இப்படியா ட்ரஸ் பண்ணிட்டு வர்றது? உன்னோட பெட்ரூம்ல போட வேண்டிய ட்ரஸ் இது...?
ஸ... ஸார்... அது... வந்து...
"இது
This action might not be possible to undo. Are you sure you want to continue?