Marma Mudichukal by Arnika Nasser by Arnika Nasser - Read Online

Book Preview

Marma Mudichukal - Arnika Nasser

You've reached the end of this preview. Sign up to read more!
Page 1 of 1

http://www.pustaka.co.in

மர்ம முடிச்சுகள்

Marma Mudichukal

Author:

ஆர்னிகா நாசர்

Arnika Nasser

For more books

http://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

மர்ம முடிச்சுகள்

1

லண்டன் ஹீத்ரு விமான நிலையம், சிதோஷ்ண நிலை 30 C. விடிகாலைச் சுற்றுப்புறத்தைச் சாம்பல் நீல வெண் பனி போர்த்தியிருந்தது. நூற்றுக்கணக்கான வெள்ளைக் கொக்குகளாய் விமானங்கள் டெர்மினல்களில் சவாசனம் செய்து கொண்டிருந்தன. நடப்பு நொடியில் நான்கைந்து விமானங்கள் தரையிறங்குவதும் நான்கைந்து விமானங்கள் வானேறுவதுமாய் இருந்தன. இறங்கிய விமானங்கள் துப்பிய கலவை மனிதர்கள் நகரும் தரைகளில்.

ஒரு டெர்மினலில் பிரிட்டிஷ் ஏர்வேஸின் தனி விமானம் நின்றிருந்தது. அதன் வால் பகுதியில் கடல் நீல நிறப் பின்னணியில் சிவப்பு நிறப் பெருக்கல் கூட்டல்கள் கொண்ட எம்ப்ளம் காணப்பட்டது. விமானத்தின் கார்கோ பகுதி திறந்திருந்தது.

விமானத்தை நோக்கி ஒரு ராட்சச கன்டெய்னர் மெதுவாக வந்து கொண்டிருந்தது. கன்டெய்னருக்குள் ஏழரை டன் தங்கம். கன்டெய்னரின் முன்னும் பின்னும் காவலாய் ஸ்காட்லாண்ட் போலீசாரும் இந்திய அதிரடிப்படையும், விமானத்தைச் சுற்றி இயந்திரத் துப்பாக்கிகளுடன் விமான நிலையக் காவல் படையினர் நின்றிருந்தனர்.

விமானத்தை ஒட்டி கன்டெய்னர் நின்றது. முதுகு திறந்தது. உள்ளே 200 கோடி தங்கம். ஐ.எம்.எஃப்-பிடம் இந்திய அரசு அடகு வைத்த தங்கம் அது. ராவ் அரசு அதை வெற்றிகரமாக மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வருகிறது. தங்கம் விமானத்துக்குள் ஏற்றப்படுவதை இந்திய அதிரடிப்படைத் தலைவர் டெபோஷியஸ் காக்டே மேற்பார்வை இட்டுக்கொண்டிருந்தார்.

காக்டே ஒரு மராத்தியர். ஆறடி உயரம் நெருங்கிய ஐம்பது வயது மனிதர். இறுகிய உயர் தோரணை முகம்.

விமானத்துக்குள் ஒரு பைலட், ஒரு கோ-பைலட், ஒரு நேவிகேட்டர், ஒரு வி.ஹெச்.எஃப். ஆபரேட்டர், இரு விமானப் பணிப் பெண்கள், இரு ஆண் சமையல் உதவியாளர்கள் ஏறினர்.

காக்டே அவர்களது புகைப்பட அடையாள கார்டுகளை தன்னிடமிருந்த தாளுடன் ஒப்பிட்டு அவர்களை உள்ளே அனுமதித்தார். விமான நிலைய

உணவகம் தயாரித்து அனுப்பியிருக்கும் உணவு வகைகளின் ஆய்வறிக்கையை ஆராய்த்து அறிந்தார்.

விமான நிலையக் காவல் தலைவர் நிக்கோலஸ் விமானத்தின் உள்ளும் புறமும் ஆராய்ந்து தெளிந்தார்.

தங்கம் ஏற்றப்பட்டு கார்கோ பகுதி மூடப்பட்டது. காக்டேயிடம் நிக்கோலஸ் வந்தார்.

வெல் மிஸ்டர் காக்டே. பாதுகாப்பு நடவடிக்கைகள் உயர் திருப்தி ரகம், இனிமையான பறவைப் பயணத்துக்கு வாழ்த்துகள்! மீண்டும் சந்திப்போம்! என்றார் சாக்லேட் ஆங்கிலத்தில்.

காக்டே அளவாய் ஆங்கிலத்தில் புன்னகைத்து நன்றி! என்றார். விமானத்தின், வயிற்றில் காக்டே நின்று கையசைக்க படிக்கட்டு கழற்றப்பட்டது. கதவு மூடிக்கொண்டது.

விமானம் உயிர்த்தது. ரன் வேயில் ஓடியது. ஒரு தங்க நொடியில் விமானம் தீக்கோழியிலிருந்து கழுகாய்ப் பரிணாமம் கொண்டது. சக்கரங்கள் அடிவயிற்றில் புதைந்தன. விமானம் எட்டாயிரம் கிலோ மீட்டர் இலக்கை பாரீஸ் கெய்ரோ வழியாக அடைய மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பறக்க ஆரம்பித்தது.

விமானத்தின் உட்பகுதி மூன்றாய்ப் பிரிக்கப்பட்டிருந்தது. வால் பகுதியில் கார்கோ. நடுப்பகுதியில் பயணிகள் சீட் அகற்றப்பட்டு ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறை போல் வசதி செய்யப்பட்டிருந்தது. அதில் 25 அதிரடிப் படையினரும் தலைவர் காக்டேயும் இருந்தனர். காக்பிட்டில் விமானிகள்.

விமானத்தை எட்டு மணி நேரம் பறப்பதற்கு ப்ரோக்ராம் செய்துவிட்டு ஓய்வானார் தலைமை விமானி

உணவு அறை.

ட்ரேயில் உணவு வகைகளை அடுக்கினாள் விமானிப் பணிப்பெண். அவளது முகத்தில் சாத்தான்தனம் இருந்தது. தனது உள்ளாடையின் உள் அறைத் தையலைக் கீறினாள். சிறு பிளாஸ்டிக் பொட்டலம் கிடைத்தது. எடுத்தாள். அதில் நிறமற்ற வித்தியாச வாசனையற்ற உண்டவுடன் இருதய இரத்த ஓட்டத்தை உறைய வைக்கும் விஷம் 10 கிராம் இருந்தது. விஷத்தை மிகத் திறமையாக உணவு வகைகளில் கலந்தாள். அதிரடிப் படையினர் ஓய்வெடுக்கும் பகுதிக்குத் தள்ளிக் கொண்டு வந்தாள். பாத்ரூமிலிருந்தும் ஓய்வறையிலிருந்தும் ஆண் உதவியாளர்கள் திரும்பினர். அவர்களைப் பார்த்ததும் மயக்கும் புன்னகை வெடித்தாள்.

அதே நேரத்தில் காக்பிட்டில்-

கோ-பைலட் எழுந்தான். தன்னுடைய கிட்பேக்கிலிருந்து ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்தான். விமான நிலையத்தின் அதி நவீன மெட்டல் டிடக்டரை ஏமாற்றிய ஆறு பாகங்களை இணைத்து வெள்ளி நிற மினி சைலன்ஸர் படைத்தான். அனிச்சையாகத் திரும்பிய தலைமை பைலட் சைலன்ஸர் கண்டு அதிர்ந்தார். அதிர்ந்த நொடி குழந்தையை முத்தமிடும் உதட்டுச் சப்தத்தில் சைலன்ஸர் ப்யூங்! என்றது. 'டெவாஸ்டேட்டிங் தோட்டா' மூளைப் பகுதியில் பாய்ந்து இரண்டாம் முறை நூறாய் வெடித்துச் சிதறியது. வெந்நீர் ஆற்றுக்குள் பாய்ந்த உணர்வை மைக்ரோ நொடியில் பெற்று வாய் வழியே உயிர் விட்டார். வெளியேறிய உயிர் டியூராலுமினிய சுவரை ஊடுருவி பிரபஞ்சத்தில் பாய்ந்தது.

சிறு சப்தம் கேட்டு உள்ளே நுழைந்த நேவிகேட்டர் மூக்கில் தோட்டா முத்தம் பெற்றுச் சிதறினான்.

அடுத்து வி.ஹெச்.எஃப், ஆபரேட்டர். அவனை நெருங்கி அவனின் நடு நெஞ்சில் துப்பாக்கியைப் பொருத்திச் சுட, தோட்டா இதயத்தின் நடுவே பிக்பாங்கியது. இதயம் சாம்பல் பூசணியாய்ச் சிதறியது. இரத்தம் வாய்வழி, மூக்கு வழி குழகுழப்பாய் வழிய அவன் சரித்தான்.

வயர்லெஸ் மைக்கில் அக்னிஸ்வரி! என்றான்.

சொல்லு இளஞ்சேரன்… காது மைக் வழி ஒலி வாங்கி சட்டைப் பொத்தான் வழி ஒலிபரப்பினாள்.

இங்க ஆபரேஷன் சக்ஸஸ், அங்க?

இட்ஸ் கோயிங் ஆன். சில நிமிடங்கள் பொறு. பேசாதே.

யாரிடம் பேசுகிறாய்? சந்தேகமாய் வினவியபடி ஆண் சமையல் உதவியாளன் அக்னிஸ்வரியிடம் வந்தான்.

ஒன்றுமில்லையே! என்று முணுமுணுத்தவள் தன்னை நெருங்கிய அவனின் வாயில் 'ரப்' என்று பிளாஸ்திரியை ஒட்டி நடு நெஞ்சில் கத்தியைச் செருகி மேலும் கீழும் இரு இழு இழுத்தாள் சரிந்தவனை ஒதுக்கியபடி துப்பாக்கியால் அடுத்த உதவியாளனை சிறிதும் சப்தமிடாதே! அப்படியே நில்! என்று மிரட்டினாள்.

நின்றான். பாத்ரூமுக்குள் அழைத்துச் சென்று காதுக்குள் சுட்டாள்.

மரித்தவனை மேற்கத்திய டாய்லட்டில் அமர வைத்தாள்.

பாத்ரூம் கண்ணாடியில் தன்னைச் சரிபார்த்துக் கொண்டாள்.

ட்ரேயை தள்ளிக்கொண்டு காக்டேயிடம் வந்தாள் அக்னிஸ்வரி.

பசிக்கவில்லை! மற்றவர்களுக்குக் கொடு!

அதிரடிப் படையினர் ஆளுக்கொரு பிளேட்டை எடுத்துக் கொண்டனர். காக்டே எழுந்தார். காக்பிட்டுக்கு நடந்தார்.

செயற்கைக் காதுகளையும் செயற்கை மூக்கையும் விக்கையும் கழற்றி உரித்து வீசிவிட்டு ஆசுவாசமானான் இனஞ்சேரன்.

காலடி அரவம் கேட்டது. உஷாரானான்.

காப்டன் காப்டன்!

பதில் கிடைக்காததால் துப்பாக்கியுடன் காக்பிட்டுக்குள் நுழைந்தார் காக்டே. அவர் மீது பேய்த்தனமாகப் பாய்ந்தான் இளஞ்சேரன். இருவர் துப்பாக்கிகளும் ஒருவரையொருவர் பலி எடுக்கப் போராடின. முதல் முறை காக்டே ஜெயித்தார். க்ளோஸ் ரேஞ்சில் தோட்டா இளஞ்சேரன் கையில் பாய்ந்தது. இரத்தம் கொட்டியது. மண்டியிட்டுத் துடித்தவனை முழு உயரத்துக்கு எழுந்து காக்டே துப்பாக்கியால் மிரட்டினார்.

யாருடா நீ?

கால் பகுதியில் ஒளிந்திருந்த கத்தியை எடுத்து உயர்ந்து காக்டேயின் கழுத்துக்கு வீசினான் இளஞ்சேரன். கழுத்து பாதியாய் அறுபட்டு விழ்ந்தார் காக்டே. வீழும் போது சுட்டார். தோட்டாவின் திசைக்குச் சிக்காமல் தாவினான். தோட்டா