Find your next favorite book

Become a member today and read free for 30 days
En Thedal Nee...

En Thedal Nee...

Read preview

En Thedal Nee...

ratings:
5/5 (1 rating)
Length:
537 pages
5 hours
Released:
Aug 12, 2019
Format:
Book

Description

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்தை, எங்கள் ஊரில் இருந்த நூலகம், நாவல் பக்கம் திருப்பியது.
கல்லூரிப் படிப்பு, வேலை, திருமணம் என என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், புத்தகம் எனக்கு உற்ற தோழியாக இருந்தது மட்டும் உண்மை. ஒரு கட்டத்தில், எனக்குள் இருந்த எழுத்தார்வம் தலை தூக்க, என் வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்போடு என் எழுத்துப் பயணம் இனிதே துவங்கியது. இப்பொழுதுதான் துவங்கியதுபோல் இருந்த என் எழுத்துப் பயணத்தில்..., ஒவ்வொரு கதையையும் என் முதல் கதையாகவே கருதி எழுதுகிறேன். ஒவ்வொரு கதையின் கருவை தேர்ந்தெடுப்பதும், அதை சுற்றிய என் கற்பனையை விரிவு படுத்துவதிலும், ஒரு தனி கவனம் செலுத்தியே என் படைப்புக்களை படைக்கின்றேன்.
என் வாசிப்பு ரசனை எப்பொழுதும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். எனவே என் படைப்புக்களும் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவே இருக்கும்.
புத்தக வடிவில் உரு மாறிய என் கதைகள், அடுத்த கட்டமாக மின்நூல்களாக உங்கள் வீட்டுக்கு வருவதை எண்ணி மிகுந்த சந்தோஷமடைகிறேன். ‘புஸ்தக்’ நிறுவனத்தோடான என் பயணம் இனிமையாக இருக்கும் என எண்ணுகிறேன். என் படைப்புக்களை வாசிக்கும் நீங்களும், உங்கள் கருத்துக்கள், நிறைகள், குறைகள் என அனைத்தையும் என் infastories@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.
Released:
Aug 12, 2019
Format:
Book

About the author


Related to En Thedal Nee...

Read More From Infaa Alocious
Related Books

Book Preview

En Thedal Nee... - Infaa Alocious

http://www.pustaka.co.in

என் தேடல் நீ...

En Thedal Nee…

Author:

இன்பா அலோசியஸ்

Infaa Alocious

For more books

http://www.pustaka.co.in/home/author/infaa-alocious-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

தேடல் - 1

தேடல் - 2

தேடல் - 3

தேடல் - 4

தேடல் - 5

தேடல் - 6

தேடல் - 7

தேடல் - 8

தேடல் - 9

தேடல் - 10

தேடல் - 11

தேடல் - 12

தேடல் - 13

தேடல் - 14

தேடல் - 15

தேடல் - 16

தேடல் - 17

தேடல் - 18

தேடல் - 19

தேடல் - 20

தேடல் - 21

தேடல் - 22

தேடல் - 23

தேடல் - 24

தேடல் - 25

தேடல் - 26

தேடல் - 27

தேடல் - 28

தேடல் - 29

தேடல் - 30

தேடல் - 31

தேடல் - 32

தேடல் - 33

தேடல் - 34

தேடல் - 35

தேடல் - 1

அம்மா...., அம்மா எங்கே இருக்கீங்க...? ஒரு ஹேப்பி நியூஸ்...., தெரிஞ்சுக்க வேணும்னா உடனே எங்கே இருக்கீங்கன்னு சொல்லுங்க..., உற்சாகக் குரலில், துள்ளல் நடையில், சந்தோசம் கொப்பளிக்க தாயைத் தேடினாள் நிவேதா.

ஹாலில் தாயைக் காணாமல்..., வேகமாக தங்கள் படுக்கை அறைக்குச் சென்று பார்க்க, அந்த ஒற்றை படுக்கையறை வீட்டில் அவர் வேறு எங்கும் சென்றிருக்க வாய்ப்பில்லை என்பதால்..., அடுத்ததாக கிச்சனுக்குச் சென்றாள்.

கிச்சன்ல இருக்கீங்களா....?, உள்ளே பார்வையால் துழாவியவள், இங்கேயும் காணோமே..., தாயை அங்கே காணாமல்,

ம்ச்..., இப்போ எங்கே இருக்கீங்கன்னு சொல்லவில்லை என்றால், நான் உங்ககிட்டே இந்த விஷயத்தை சொல்லவே மாட்டேன்..., மிரட்டியவளின் குரலில் மருந்துக்கும் கோபம் இல்லை.

மகள் கிச்சனை விட்டு வெளியேறியதும் தான், ஸ்டோர் ரூமில் சத்தமில்லாமல் பதுங்கி இருந்த சங்கவி நிம்மதியாக மூச்சு விட்டார். வேகமாக தன் முகபாவத்தை மாற்றியவர், கையில் இருந்த மாத்திரையை வாய்க்குள் போட்டு தண்ணீரை அருந்தியவர்,

கையில் இருந்த மீதி மாத்திரை அட்டையை, அந்த டப்பாவுக்குள் போட்டு மூடி, தன் மகளது பார்வையில், சட்டென படாதவாறு, புளிப் பாத்திரத்துக்குப் பின்னர் மறைத்துவிட்டு, தன் படபடப்பை ஒரு வேக மூச்சை வெளியிட்டு கட்டுப் படுத்தியவர், மீண்டும் தண்ணீரை வேகமாக தன் வாயில் சரித்துக் கொண்டார்.

தண்ணீர் பாட்டிலை அங்கேயே வைத்துவிட்டு, வெளியே வந்து, குழாயில் தண்ணீர் பிடித்து, தன் வியர்த்திருந்த முகத்தை கழுவியவர், முந்தானையால் முகத்தை துடைத்தவாறு அவசரமாக வெளியேறினார்.

'ஹப்பா..., நல்ல வேளை அவ பார்க்கலை...', இதய வலியையும் மீறி, மனதுக்குள் ஒரு நிம்மதி பரவியது.

ஹாலுக்கு வந்தவர், குரல் எழுப்பி மகளை அழைக்க விரும்பினாலும், அவர் இதயம் சற்று ஒத்துழையாமை இயக்கம் நடத்த, அங்கே இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டார்.

இதயத்தை அவ்வளவு நேரம் அழுத்திய நெஞ்சுவலி அவர் போட்ட மாத்திரையின் உபயத்தால் சற்று மட்டுப்பட, நிதானமாக மூச்சை இழுத்து விட்டவர், தன்னை சாதாரண நிலைக்கு கொண்டுவர முயன்றார்.

நிவேதாவோ..., ஒருவேளை மாடியில் துணி காயப்போட போய் இருக்காங்களோ...?, தனக்குத் தானே வினவியவள், தடதடவென படிகளில் ஓடினாள்.

அம்மா..., குரல் கொடுத்தவள் மொட்டை மாடி முழுவதும் அலச, தாய் பார்வைக்கு கிடைக்காமல் சற்று சோர்ந்து போனாள்.

ஆனாலும்..., தான் சொல்ல வேண்டிய விஷயம் அவளது உற்சாகத்தை கொஞ்சமும் குறையாமல் பார்த்துக் கொள்ள, ஏறிய வேகத்தை விட, பலமடங்கு வேகத்தில் கீழே இறங்கினாள்.

அவளுக்குத் தெரியும், தாய் இங்கே தான் இருக்கிறார். வீட்டை திறந்து போட்டுவிட்டு எங்கும் செல்லும் வழக்கம் அவருக்குக் கிடையாது. அக்கம் பக்கத்தில் கூட, அளவாகவே பேசுவார்.

அவருக்கு இருப்பது ஒரே தோழி, மருத்துவர் பொற்கொடி. அவரைப் பார்க்கத்தான் வெளியே அவர் செல்வார். அதுவும் கடந்த மூன்று வருடமாகத்தான் அதிகரித்திருந்தது.

அம்மா..., நீங்க இங்கேயா இருக்கீங்க. நான் எவ்வளவு நேரமா கூப்பிடுறேன்... கண்டுக்காமல் உட்கார்ந்து இருக்கீங்க? சரி நான் கூப்பிடும் பொழுது எங்கே இருந்தீங்க? நான் வீடு முழுக்க தேடினேனே...?, சிணுங்கியவள், ஓடி வந்து தாயின் இடையை கட்டிக் கொண்டாள்.

ஏய் பார்த்து..., விழுந்துடப் போற..., எதுக்கு இவ்வளவு அவசரம்....?, அவளை ஆதூரமாக அணைத்துக் கொண்டார். அவள் கேள்விக்கு பதில் சொல்வதை தவிர்த்தார்.

அதெல்லாம் விழ மாட்டேன். அப்படியே விழுந்தாலும்..., இப்போ என்னை எதுவும் செய்யாது...,, தாயின் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டாள். அவளது சந்தோஷத்தில், தாய் தன் கேள்விக்கு பதில் உரைக்காதது அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.

மகளது மனம் புரிந்தவராக, அவள் தலையை கோதியவர் கண்களுக்கு, மகள், ஒரு வயது குழந்தையாகத் தெரிந்தாள். எப்பொழுதும் அப்படித்தான், பசித்தாலும் சரி, உடல்நிலை சரியில்லை என்றாலும் சரி, விளையாட்டு என்றாலும் சரி, தன் முந்தானைக்குள் முகம் புதைத்து, வயிற்றில் முட்டும் அந்த பச்சிளம் குழந்தை குணம் அவளுக்கு மாறவே இல்லை.

நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஏன்னு சொல்லுங்க பார்ப்போம்..., தாயின் முகத்தை ஆர்வமாகப் பார்த்தாள்.

மெல்லியதாகப் புன்னகைத்தவர், என்ன அமெரிக்காவில் படிக்க இடம் கிடைச்சுடுச்சா...?, அவர் கேட்க,

ஹையோ..., எப்படிம்மா கண்டு புடிச்சீங்க...? நான்தான் உங்ககிட்டே சொல்லணும்னு நினைச்சேன் தெரியுமா..., சிணுங்கினாள்.

நான் சொன்னதை வேணா வாபஸ் வாங்கிக்கறேன். நீயே சொல்லு..., தன் வேதனையை சின்ன சிரிப்பில் அவர் மறைக்க, போங்கம்மா..., எழுந்து தாயின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

ஒரு வருஷமா என் செல்ல பொண்ணு தேடிகிட்டு இருக்கும் ஒரே விஷயம், நாலு மாசமா பம்பரமா சுழன்று வேலை பார்க்கும் விஷயம்..., அது கிடைக்காமல், வேற எதுக்காகவும் என் பொண்ணு இவ்வளவு சந்தோஷப் பட மாட்டான்னு எனக்குத் தெரியும்..., அவளை அணைத்துக் கொண்டவரின் கண்கள் கலங்கியது.

இப்போ அப்பா இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் இல்லம்மா...? ஃபார்ம் வாங்குவது முதல், காலேஜ் பற்றி விசாரிப்பது துவங்கி, எம்ஃபசி வாசலில் காத்திருப்பது முதல், என்னை விமானம் ஏற்றுவது வரைக்கும் என்கூடவே இருந்து..., ஐ மிஸ் ஹிம்மா..., அவள் குரலில் கண்ணீர் தடங்கள்.

தன் நெஞ்சை ஆறு வருடங்களாக அறுக்கும் அந்த தனிமையையும், தவிப்பையும் மகளுக்காக மென்று விழுங்கிக் கொண்டு, இதயத் துடிப்பைக் கூட, பிடித்து வைத்திருக்கும் சங்கவிக்கு, நொடியில் துக்கம் நெஞ்சை அடைக்க, அதை நொடியில் மறைத்தவர்,

"நிவிம்மா..., அப்பா நம்மை விட்டு எங்கேயும் போகலை... போகவும் மாட்டார். இப்போ கூட, நம்ம கூடவே இருந்து, நீ சொன்னது அனைத்தையும் கேட்டுக் கொண்டே தான் இருப்பார். தைரியமா இருக்கணும் நிவி..., நீ இன்னும் சின்ன பொண்ணு கிடையாது.

எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான மிகப்பெரிய முடிவை எடுத்திருக்க, இனிமேல் அதை நோக்கித்தான் உன்னோட கவனம் இருக்கணும். எதற்காகவும் கலங்கக் கூடாது. அப்பா அரூபமா இருந்து உனக்கு வழி காட்டுவாங்க..., அவளுக்கு தைரியம் சொன்னாலும், கண்களில் வழிந்த கண்ணீர் அவரை காட்டிக் கொடுக்க தவித்துப் போனாள்.

சாரி..., ரியல்லி சாரிம்மா..., அப்பாவை ஞாபகப்படுத்திட்டேன் இல்ல, அவர் கண்ணீரை வேகமாகத் துடைத்தாள். தாயின் கண்ணீரில் பதறியவள், அவர் குரலில் இருந்த மாறுபாட்டை கவனிக்க மறந்தாள். அவர் கூற்றின் உட் பொருளையும் கூட......

அதை உணர்ந்திருந்தால்..., தாயை விட்டு அமெரிக்கா செல்லும் முடிவை அவள் எடுத்திருக்க மாட்டாளோ...?

அந்த நொடி சங்கவியின் இதயம் மூச்சுக் காற்றுக்குத் தவிப்பதுபோல் முட்ட, அதை மகளுக்கு காட்டாமல் முயன்று மறைத்தவர், அதெல்லாம் ஒண்ணும் இல்லடா..., போய் அப்பாகிட்டே சொல்லி ஆசீர்வாதம் வாங்கு. குளிச்சுட்டு வா..., அம்மா பொங்கல் செய்து தரேன்..., தன் திணறலை மறைத்து, நிதானமாக உரைத்து முடித்தார்.

பொற்கொடிக்கு சொன்னாயா...?,

அவங்களுக்கு சொல்லாமலா...? உங்ககிட்டேதான் முதல்ல சொல்லணும்னு நினைத்தேன். ஆனா அதுக்கு முன்னாடியே அவங்களே எனக்கு கால் பண்ணிட்டாங்க. சோ..., வேற வழியில்லாமல் உண்மையை சொல்ல வேண்டியதா போச்சு. ஆன்ட்டிக்கு நான் அமெரிக்கா போவது அவ்வளவா பிடிக்கலை போலம்மா..., அவள் உரைக்க சற்று திடுக்கிட்டவர்,

அப்படியெல்லாம் எதுவும் இல்லை நிவி. அவளுக்கு நான் இங்கே தனியா இருப்பேனே என்ற கவலை அவ்வளவுதான். நீ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதே..., போ.., அம்மா சொன்னதை செய்..., அவளை அனுப்பினார்.

ஓகேம்மா..., ஆனா நீங்க சமைக்க வேண்டாம். இன்னைக்கு புல்டே நாம வெளியே சுத்தப் போறோம். நான் அமெரிக்கா போகும் சந்தோஷத்தை கொண்டாடுறோம். அப்படியே தியேட்டர், மால்ஸ்..., கடைசியா பீச்..., சோ..., வெளியே சாப்ட்டுக்கலாம்...., உரைத்தவள் பூஜை அறைக்குள் நுழைந்தாள்.

மகளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த சங்கவிக்கு எழுந்து நடக்கவே அப்பொழுது தெம்பு இருக்கவில்லை. ஆனால்..., மகளின் எந்த ஆசைக்கும், விருப்பத்துக்கும், பேச்சுக்கும் மறுப்பு தெரிவித்து பழக்கமில்லாதவர், மீண்டும் ஸ்டோர் ரூம் நோக்கி நடந்தார்.

அதே நேரம் அவரது அலைபேசி ஒலிக்க, நடையை நிறுத்தியவர், தன் போன் இருந்த இடத்துக்குச் சென்றார். அவருக்கு அழைப்பது இரண்டே ஜீவன்கள் தான். ஒன்று வீட்டிலேயே இருக்க..., மீதமிருப்பது பொற்கொடி தான்.

அவரை ஏமாற்றாமல் பொற்கொடிதான் அழைக்க, சொல்லு கொடி.., அவர் பலவீனம் குரலில் ஒலித்தது.

சங்கவி..., என்ன நெஞ்சு வலிக்குதா..? எத்தனை டேப்லட் போட்ட..? ஒண்ணுக்கு மேலே போடலை தானே...?, படபடப்பாக ஒலித்தது பொற்கொடியின் குரல்.

கொடி..., ஒரு டேப்லட் தான் போட்டேன். ஆனா...,

என்ன ஆனா..., உண்மையை சொல்லு கவி. என்கிட்டே எதையும் மறைக்காதே. நெஞ்சு வலி குறையலையா..? இன்னொரு மாத்திரை போடாதே வேண்டாம். பிறகு அதுவே பழக்கமாயிடும். தயவு செய்து நான் சொல்வதை இப்போவாவது கேளு. ஆபரேஷன் பண்ணிக்கோ..., கொடியின் குரல் கெஞ்சிற்று. 

இல்ல கொடி..., ஆபரேஷனில் நான் பிழைப்பேன்னு எனக்கு நம்பிக்கை இல்லை. இன்னும் நான் இருக்க போறது ஒரு வருஷமோ, ஆறு மாசமோ..., நான் இப்படியே இருந்துட்டு போறேன்..., குரல் தடுமாறியது.

கவி..., நீ முதல்ல கிளம்பி ஹாஸ்பிடல் வா. உன்னை செக் பண்ணனும். நீ ஹாஸ்பிடல் வந்து ரெண்டு மாசம் ஆகுது. பொண்ணுக்கு காலேஜ் லீவ் விட்டாங்கன்னு வீட்டை விட்டு அசையாமல் உட்கார்ந்து இருக்க. என்னையும் வர விட மாட்டேங்குற..., இது நல்லதுக்கில்லை..., கடிந்து கொண்டார்.

கொடி..., நான் நெஞ்சுவலிக்குள்ள மாத்திரை போடலை, இப்போ பெயின் கில்லர் போட்டுக்கறேன்...,

என்ன சொன்ன..., பெயின் கில்லரா...? உனக்கென்ன பைத்தியமா..? உன் ஹெல்த் ஏற்கனவே மோசமா இருக்கு, இதில் பெயின் கில்லர் வேற..., ரொம்ப தப்பு கவி. உன் ப்ரண்டா சொல்லுறேன்..., வேண்டாம்..., கிட்டத்தட்ட அலறினார்.

இல்ல..., நான் பொண்ணோட வெளியே போறேன். முடிந்தால் ரெண்டு நாளில் வரேன். நிவி வரா நான் பிறகு பேசுறேன்..., உரைத்தவர், கொடி அழைத்துக் கொண்டிருக்கும் பொழுதே அலைபேசியை வைத்தவர், அடுத்த டோஸ் மாத்திரையைப் போட்டுக் கொண்டார்.

அதை போட்டுக் கொள்ளவில்லை என்றால், கண்டிப்பாக தன்னால் ஒரு அடி கூட முன்னேறி நடக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும்.

கொடியோ..., மருத்துவமனையில் கவனம் செலுத்த முடியாமல், திணறியவர், முயன்று தன்னை வேலையில் திருப்பினார். ஆனால் எதையாவது செய்தே ஆகவேண்டும் என அவர் உள்ளம் படபடத்தது.

***

ஆங்கில பாப் பாடல் காரை நிறைத்திருக்க, அதன் அலறல் காரை ஓட்டும் அவனை கொஞ்சம் கூட பாதிக்காமல், உச்ச வேகத்தில் அதை விரட்டிக் கொண்டிருந்தான் சஞ்சய் இஷான்.

ஒரு அமெரிக்கவாசிக்கு உரிய அத்தனை இலக்கணங்களையும் ஒருங்கே பெற்று, வெண்மை தோல், மேல்தட்டு நாகரீகம், நுனி நாக்கு ஆங்கிலம், டாலர்களில் புரளும் வாழ்க்கை.

மூன்று தலைமுறையாக அங்கேயே ஜாகை. அவன் பிறந்ததே அமெரிக்காவில், அப்படியானால் அவன் ஒரு அமெரிக்க குடிமகன். இந்திய பெற்றோருக்குப் பிறந்ததால்..., அவனைப் பார்க்கும் யாரும் அமெரிக்காக்காரன் என்று சொல்லவே மாட்டார்கள்.

அவனைப் பார்த்தாலே இந்தியனா என்று கேட்கும் படி இருக்கும் அவன் தோற்றம். கருமையான கூந்தல், அடர்ந்த புருவம், கூர்மையான விழிகள், அழுத்தமான உதடு, மேலுதட்டுக்கு மேலே இருக்கும் அளவான மீசை, ஆகமொத்தம் இந்திய வார்ப்பில் இருக்கும் ஒரு அமெரிக்க வாசி.

சாலையில் சிட்டெறும்புகளின் வரிசைபோல் கார்களின் அணிவரிசை நிறைத்திருக்க, சாலையின் தூய்மையும், சாலை விதிகளும், மக்களின் பரபரப்பும்..., அமெரிக்க மாநகருக்கு இலக்கணமாக மைந்திருந்தது.

பாடல் ஒலியையும் மீறி, அலைபேசி தன் இருப்பை அவனுக்கு உணர்த்த, காரின் ப்ளூடூத் வழியாக அதை இயக்கியவன், ஐ'ம் ஆன் தி வே டூட்..., ரிலாக்ஸ்.., வில் பீ இன் டைம், அந்த பக்கம் பேச வந்ததைக் கூட கவனிக்காமல், அலைபேசியை அணைத்திருந்தான்.

வாட் தி ஹெல் இஸ் திஸ்..., ஐ கான்ட் பேர்..., எரிச்சலில் குமுறினாள் அந்த நங்கை.

ஹேய்.., வாட்ஸ் அப்..., அவள் தோளை அழுத்தினான் மற்றவன்.

(அவர்களின் நுனிநாக்கு ஆங்கிலம் உங்களுக்காக தமிழில்).

"எல்லாம் இந்த சஞ்சய் தான். பத்து நிமிஷத்துக்கு முன்னாடியே அவன் இங்கே இருந்திருக்கணும். ஆனா..., இன்னும் வராமல் என் கழுத்தை அறுக்குறான். எங்கே கடைசி நிமிஷம் காலை வாரிவிடுவானோ என்று ஒரு பக்கம் படபடப்பா இருக்கு.

போன் செய்தால்..., நான் பேசுவதை காது கொடுத்து கூட கேக்க மாட்டேங்கிறான்...., உச்ச டென்ஷனில் பொரிந்தாள் எமி.

கூல்..., அதான் அவன் வரேன்னு சொல்லிட்டானே அப்போ கண்டிப்பா வந்துடுவான்..., அவள் தோளை இறுக பற்றிக் கொண்டான்.

போதும் லினோ..., நான் ஏற்கனவே கடுப்பில் இருக்கிறேன். நீ மேலே அதை கூட்டாதே..., இவர்களது புலம்பலை தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

அவன் முகத்தில் அப்பட்டமான வெறுப்பு மண்டிக் கிடந்தது. மனமோ..., 'இதெல்லாம் ஒரு பிழைப்பு...', எமியை சாடிக் கொண்டிருந்த அதே நேரம், 'ஏன்தான் இவனுக்கு இப்படி புத்தி போகுதோ...?', நண்பனையும் சாடியது.

இவர்கள் அனைவரின் குமுறல்களுக்கும் காரணமாக இருக்கும் சஞ்சயோ..., தன் ரோல்ஸ்ராய்ஸ் காரை லாவகமாக செலுத்தியவன், வேகத்தை குறைக்காமலே, பார்க்கிங் கியரைப் போட்டவன், அதே வேகத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான்.

நடையின் வேகத்தை கூட்டியவன்,  அவனுக்காக காத்திருக்கும் அவர்கள் முன்னால் சென்று நின்றான். ஹாய் கைஸ்..., நான் லேட் இல்லையே..., அவன் குறும்பாக கேட்க, தன்னுள் எழுந்த கொலைவெறியை புன்னகை கொண்டு மறைத்தாள் எமி.

நோ..., நோ... நாட் அட் ஆல்..., எமி குழைந்து அவன் கரத்தில் தன் கரத்தை கோர்த்துக் கொள்ள,

'எப்படி நடிக்கிறா பாரேன்...', கார்த்திக் கடுப்பானான்.

ஹேய் கார்த்திக்..., என்ன அங்கே நிற்கிற, உள்ளே வா. லாயர் எங்கே...?, அவன் பார்வை சுழல, அவன் முன்னால் பிரசன்னமானான் பென்னி ஜார்ஜ்.

பென்னி எல்லாம் ரெடியா..., போகலாமா...?, எமியின் இடையை வளைத்தவாறு அவன் கேட்க,

எவ்ரிதிங் ரெடி சான்..., வி ஆர் வெயிட்ங் பார் யூ ஒன்லி..., கையில் இருந்த கோப்புகளோடு முன்னால் ஓடினான்.

பென்னி..., செட்டில்மென்ட்..., அவனைத் தேக்க,

பணம் வாங்கியாச்சு. எழுதியும் வாங்கியாச்சு. லீகலா எந்த பிரச்சனையும் வர வாய்ப்பில்லை. உங்களுக்குள் ஒற்றுமை இருக்கும் வரைக்கும், இருவருக்கும் பாதிப்பில்லை..., பென்னி உரைக்க,

வாவ்..., தட்ஸ் கிரேட். எமி..., உனக்கு ஓகே தானே..., அவள் புறம் திரும்ப,

டபுள் ஓகே டார்லிங்..., வழிந்தாள்.

யூ ஆர் ஹாட்..., அவன் கைகள் இடையை அழுத்த, அது உணர்த்தும் செய்தியை உணர்ந்தவள், யூ நாட்டி..., அவன் கன்னத்தை நிமிண்டினாள்.

அவர்கள் பின்னால் இருந்து இதைப் பார்த்த கார்த்திக்கின் பொறுமை எல்லை மீற..., சஞ்சய் ஒரு நிமிஷம்..., கார்த்திக்கின் குரல், சஞ்சயின் நடையை தேக்கியது.

சொல்லுடா..., சஞ்சய் திரும்ப, எமியோ அவனை உறுத்து விழித்தாள். அவளே எப்பொழுது கல்யாண ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவோம் என தவித்துக் கொண்டிருக்க, இடையில் தடங்கல் வந்தால் அவள் எப்படி பொறுப்பாள்?

என்னடா இதெல்லாம்...? என்னை எதுக்கு கூப்பிட்ட. எனக்குதான் இதெல்லாம் பிடிக்காதுன்னு உனக்குத் தெரியுமே...?, தமிழில் அவனை கடித்து குதறினான்.

அட சும்மா வாடா. இன்னைக்கு பெரோஸ் ஏதோ வேலையா போய்ட்டான். இவ வேற இன்னைக்கே கல்யாணம் ஆகணும்னு ஒரே பிடிவாதம், அதான்..., வேற வழியில்லாமல் உன்னை கூப்பிட வேண்டியதா போச்சு. சரி ரொம்ப முறுக்கிக்காமல் வா..., எமியை ஒரு கையிலும், அவனை மறு கையிலும் பிடித்து இழுத்தான்.

"அடச்சீ..., என்னைத் தொடாதே. உனக்கு ஏண்டா இந்த வேண்டாத வேலை..? உன்கிட்டே இல்லாத பணமா...? பிறகு எதுக்குடா...? அப்படி ஒழுங்கா இருக்க முடியலன்னா..., அதான் இங்கே எவளோ ஒருத்தியை கூட்டி வச்சுகிட்டு லிவிங் டுகதர்ன்னு இருக்காங்களே..., அப்படியாவது இருந்து தொலையலாம் இல்ல?

இல்லையா ஒழுக்கமா கல்யாணம் பண்ணிக்கணும். இதில் எதுவுமே இல்லாமல், ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை கல்யாணம், விவாகரத்து, உறவு..., ச்சே..., அசிங்கமா இருக்குடா..., தன் அருவருப்பை முகத்தில் காட்டினான்.

"ஏண்டா..., விதம் விதமா சாப்பாடு சாப்பிட ஆசைப்படுறவன் ஹோட்டலுக்கு போகத்தான் செய்வான். அதுக்குப் பதிலா அந்த ஹோட்டலையே விலைக்கு வாங்குவது முட்டாள்தனம். நான் என்ன தேடியா போறேன். என்னைத் தேடி வருவதை யூஸ் பண்ணிக்கறேன். இதில் என்னடா இருக்கு...?

நீ ரொம்ப புலம்பாமல், கண்ணை மூடிட்டு ஒரு கையெழுத்து மட்டும் போட்டுட்டு போய்டு. இதற்கு மேலே உன்னை தொந்தரவே செய்ய மாட்டேன்..., அவனது மறுப்பையும் பொருட்படுத்தாமல், எமியோடு உள்ளே செல்ல முயன்றான்.

கார்த்திக் தன் தலையிலேயே அடித்துக் கொள்ள, அவ்வளவு நேரம் அவர்கள் பேசுவது புரியாமல் விழித்துக் கொண்டிருந்தவள், சஞ்சய் அவளை அழைத்துக் கொண்டு உள்ளே செல்லவே, கார்த்திக்கிடம் ஒரு நக்கல் பார்வையை செலுத்தியவள், இன்னும் அதிகமாக இழைந்தவாறு அவனோடு சென்றாள்.

அவள் பார்வையில் தேகம் முழுவதும் பற்றி எரிய, வெளியே செல்லத் துடித்த காலை அழுந்த பதித்து, அந்த பதிவுத் திருமண அறைக்குள் நுழைந்தான் கார்த்திக்.

சஞ்சயின் புன்னகையும், எமியின் ஆர்வமும், பென்னியின் ஆசை விழிகளும், அவனுக்குள் வெறுப்பையே விதைத்தது.

தேடல் - 2

காலையில் பதினோரு மணிக்குத் துவங்கிய நிவியின் ஊர் சுற்றல்..., மதியம் இரண்டு மணியையும் கடந்து நீள..., சங்கவிக்கு நேரம் ஆக ஆக, சோர்வும் அதிகரித்தது.

பசி என்று உரைக்க முடியாது, ஆனால் அதையும் மீறிய தடுமாற்றம்.., மகளுக்குக் காட்டாமல் அதை மறைக்கலாம் என முயன்றவருக்கு முடியாமல், கண்கள் இருட்டிக் கொண்டு வர, லிப்ட் பயணத்தில், மகள் மீதே சரிந்தார்.

என்னம்மா..., டயடா இருக்கா...? லஞ்ச் முடிச்சுட்டு வீட்டுக்கே போய்டலாமா...?, கேட்டுக் கொண்டிருந்தவளின் வார்த்தைகள் பாதியிலேயே தடைபட, தாயிடம் ஏற்பட்ட மாறுதலை அப்பொழுதுதான் உணர்ந்தாள்.

சங்கவி, கீழே விழுவது போல் சரிய.., அம்மா..., என்னம்மா ஆச்சு...? அம்மா..., கையில் இருந்த கவர் அனைத்தையும் உதறியவள், தாயை இறுக பற்றிக் கொண்டாள்.

அவள் தாய் தேகம் மெலிந்தவர்தான் என்றாலும், நிவேதாவின் பதட்டத்தால், அவளால் தாயை தாங்கிக் கொள்ள முடியவில்லை. தனிமை வேறு அவளை மேலும் பதற வைக்க, அடுத்த தளம் வருவதற்கு ஆன நொடிகளுக்குள் துடித்துப் போனாள்.

ப்ளீஸ் ஹெல்ப்..., அவள் கதறல் அந்த நான்கு சுவர்களுக்கு வெளியே செல்ல முடியாமல் அலைமோதி, இறுதியில் அடுத்த தளத்தில் அந்த தானியங்கிக் கதவு திறக்க, வெளியே நின்றவர்களுக்கு அவள் குரல் எட்ட, வேகமாக அவள் உதவிக்கு வந்தார்கள்.

நொடியில் அந்த இடத்தில் ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்ள, யாராவது ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணுங்கப்பா...?, தூக்குங்க...., கொஞ்சம் விலகும்மா..., அழாதம்மா..., அவங்களுக்கு சின்ன மயக்கம்தான்..., ரொம்ப அலைச்சலா இருக்கும் அதான்..., விதம் விதமான எந்த குரலும் அவளை தீண்டவே இல்லை.

நிவி..., இங்கே..? ஏன் அழற...?, தனக்கு பரிட்சயமான குரல் செவியை நிரப்ப, தண்ணீரில் தத்தளிப்பவளுக்கு, கையில் தட்டுப்பட்ட மரத்துண்டாக அவளை பற்றிக் கொண்டவள்,

தி..வ்..யா..., அம்...மா..., என..க்கு ரொம்ப பயம்மா இருக்குடி..., தோழியின் கரத்தை இறுக பற்றியவள், ஓ வென கதறினாள்.

என்னடி சொல்லுற...? அம்மா...? எங்கே...?, கூட்டத்தை தாண்டி அவளால் முன்னேற முடியவில்லை. இன்னும் மனிதநேயம் சாகவில்லை என்பதற்கு இலக்கணமாக, கல்லூரி மாணவர்களின் கும்பல் ஒன்று, இவர்களுக்கு உதவ துடித்துக் கொண்டிருந்தது.

ஆம்புலன்ஸ்..., திவ்யா முடிக்கும் முன்பே, ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணியாச்சு..., இட்ஸ் ஆன் தி வே..., ஒருவன் உரைக்க, மற்றவனோ, சிஸ்டர்..., இந்த திங்க்ஸ் எல்லாம் அவங்களோடதா பாருங்க...?, திவ்யாவின் கரத்தில் கொடுத்தான்.

அவங்க பர்ஸ்..., போன்..., ஒவ்வொன்றாக கொடுக்க, மிகப்பெரிய நன்றியோடு அதை பெற்றுக் கொண்டவளுக்கு, தோழியின் நிலைமை சரியாகப் புரிந்தது.

இந்த உலகத்தில், அவளுக்காக இருக்கும் ஒரே உறவு..., நிவி மனது வைத்தால், தானும் அவளுக்கு உறவுக்காரியாக மாற முடியும். 'என்ன மாதிரி நேரத்தில்..., இதென்ன நினைவு...', தன்னையே கடிந்தவளாக,

திவ்யா..., அம்மாவுக்கு..., எதுவும்..., கதறியவளாக, தாயின் அருகாமையில் செல்ல, "லூசு மாதிரி உளறாதே. அலைச்சலால் வந்த மயக்கமா இருக்கும். நீ தைரியமா இருந்தால் தானே அம்மாவை பார்த்துக்க முடியும்...

இப்போ நீயும் இப்படி அழுது மயக்கம் போட்டு விழப் போறியா...?, தோழியை ஆறுதல் படுத்துவதை விட, கடிந்து கொண்டாள்.

ப்ரதர்..., கொஞ்சம் அவங்க அம்மா கிட்டே போக வழி செய்யுங்களேன்..., அவள் தாயின் அருகாமை அவளை அமைதிப்படுத்தலாம் என்பது புரிய, திவ்யாவின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப் பட்டது.

அங்கே நிவேதாவின் தாய்க்கு இரு மாணவர்கள் தங்கள் கர்ச்சீப்பால் விசிற, மேலும் இருவரோ..., ஆம்புலன்ஸ் வருகையை ட்ராக் செய்து கொண்டிருந்தார்கள்.

சிஸ்டர்..., ஆம்புலன்ஸ் வந்துடுச்சு..., நான் அம்மாவை தூக்கிக்கறேன். லிப்ட்ல போய்டலாம்...,

அடுத்த நிமிடத்தின் இறுதியில், அவர்கள் அனைவரும் ஆம்புலன்சுக்குள் அமர்ந்திருந்தார்கள். ரொம்ப நன்றி..., உங்க உதவியை மறக்கவே மாட்டோம்..,

அட விடுங்க, இன்னும் என்ன உதவி வேண்டும் என்றாலும் எங்களுக்கு ஒரு போன் பண்ணுங்க..., இதுதான் என் நம்பர்..., ஒரு அட்டையை திவ்யாவின் கரத்தில் கொடுத்தான்.

ஆம்புலன்ஸ் வேகம் பிடிக்க, நினைவுக்கு வந்தவளாக டிரைவரிடம், அண்ணா..., ஆம்புலன்சை தேவாரம் ஹாஸ்பிடலுக்கு விடுங்க. அதுதான் இவங்க பேமிலி ஹாஸ்பிடல்..., திவ்யா உரைக்க, வண்டி போக்குவரத்தை கிழித்துக் கொண்டு முன்னேறியது.

நிவேதாவோ..., தாயின் கைகளை பற்றிக் கொண்டு அமர்ந்தவள், அழுது கொண்டு இருக்க, ஆம்புலன்சில் இருந்த மருத்துவரோ, இவங்களை கொஞ்சம் அமைதியா இருக்கச் சொல்லுங்க. பேஷண்டை  நான் செக் பண்ணவா வேண்டாமா...?, தன் வேலை தடைபடுவதில் அவர் கோபம் காட்ட,

சாரி டாக்டர், அவளுக்கு இருக்கும் ஒரே உறவு.., அதான் இப்படி. நீங்க பாருங்க. நிவி..., கொஞ்சம் அமைதியா இரு..., தோழியை அணைத்துக் கொண்டவள், நிவேதாவின் அலைபேசியில் இருந்து, டாக்டர் பொற்கொடிக்கு அழைப்பு விடுத்தாள்.

சொல்லும்மா நிவி..., அம்மாவுக்கு ஒண்ணும் இல்லையே...?, முதல் ரிங் முடியும் முன்பே, கொடியின் குரல் பதட்டமாக ஒலித்தது. தோழி வெளியே செல்லப் போகிறேன் என்று சொன்ன பொழுதே..., இப்படி ஏதாவது அசம்பாவிதம் நிகழும் என எதிர் பார்த்தவராயிற்றே.

ஆனால், அவர் பதட்டத்தை உணரும் நிலையில் திவ்யா இல்லை. ஆன்ட்டி நான் திவ்யா பேசுறேன். நாங்க ஆம்புலன்சில் வந்துட்டு இருக்கோம். அம்மா ஷாப்பிங் மாலில் மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க, படபடத்தாள்.

திவ்யா..., நீ எப்படி நிவேதா போனில்..., துவங்கியவர், அவள் கூற்றில் இருந்த விஷயம் தாக்க, 

OMG..., ஓகே.., நீ அங்கே இருக்கும் டாக்டர் கிட்டே போனைக் கொடு..., அடுத்த நிமிடம் போன் கை மாற, கொடியின் பேச்சைக் கேட்ட மருத்துவரின் முகம் யோசனையையும், புரிந்ததற்கு அடையாளமாக தெளிவையும் காட்டியவர், அலைபேசியை அணைத்து வைத்தார்.

பத்தே நிமிடங்களில் ஆம்புலன்ஸ் ஹாஸ்பிட்டலை அடைய, மருத்துவ டீம் ரெடியாக இருந்தது. அடுத்த நிமிடம் சங்கவி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட, ஆன்ட்டி..., அம்மா..., நானும் வரேன்..., உள் நுழைய விரும்பிய நிவியை தடுத்தவர்,

நீ உள்ளே வந்தால் என்னை வேலை செய்ய விட மாட்ட..., அவ உன் அம்மா மட்டும் இல்லை, என்னோட ப்ரண்ட் எனக்கும் அவ ரொம்ப முக்கியம், கவலைப்படாமல் இரு வந்துடுறேன்..., அவசரமாக மொழிந்தவர், உள்ளே நுழைந்தார்.

அவரை பரிசோதித்தது விட்டு, சற்று நேரத்தில் வெளியேற, அவர், முன்னால் கண்ணீர் விழிகளோடு ஓடிபோய் நின்றவள், தவிப்பாய் அவர் முகம் பார்த்தாள். "நிவி..., அம்மாவுக்கு ஒண்ணும் இல்லை, வயசாகுது இல்ல அதான்..., அதோட இன்னைக்கு கொஞ்சம் அலைச்சல் போல....,

"கொஞ்சம் ரத்த அழுத்தம் மட்டும் அதிகமா இருக்கு. ஒரு ரெண்டு நாள் இங்கே இருந்தால் எல்லாம் சரியா போய்டும். இப்போ அம்மா கண் முழிச்சுட்டா. ஆனா தொந்தரவு பண்ணாமல் போய் பார்த்துட்டு வா...

அவ முன்னாடி தைரியமா இரு. அழுது வைக்காதே..., என்ன புரியுதா...? பிபி ரெயிஸ் ஆனால் கஷ்டம்..., சோ பார்த்து நடந்துக்கோ, நிவி எதை கேட்க விரும்புவாளோ, அதை சொல்லி, எச்சரித்து அவளை உள்ளே அனுப்பினார்.

அவள் உள்ளே நுழையவே, ஆன்ட்டி..., நிஜமாவே அவங்களுக்கு ஒண்ணும் இல்லையே...?, கவலையாகக் கேட்டாள்.

என்ன திவ்யா இப்படி கேட்கற...? நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையா...?, தன்னை சமாளிக்க முயன்றார்.

உங்க வாய்தான் ஒண்ணும் இல்லன்னு சொல்லுது. ஆனா உங்க கண்ணு, முகம்..., நிவேதா பதட்டத்தில் இருக்கா அவளுக்குப் புரியாமல் போகலாம், ஆனால் நான் தெளிவாத்தான் இருக்கேன். எதுவும் பிரச்சனையா ஆன்ட்டி...?, திவ்யாவின் முகம் தெளியவே இல்லை.

சட்டென முகபாவத்தை மாற்றியவர், ஏய் பெரிய மனுஷி..., இங்கே நான் டாக்டரா இல்லை நீயா...? சரி, நீ எப்படி அவங்களைப் பார்த்தாய்...?, வேறு விஷயத்துக்குத் தாவினார். திவ்யாவிடம் பகிரும் விஷயம், நிவேதாவை அடைய ஒரு நிமிடம் கூட ஆகாது என்பது அவருக்குத் தெரியும்.

"அதுவா.., வீட்டில் ரொம்ப போர் அடிச்சது, நானும் பர்சேஸ் போகலாம்னு போனேன். எதுவும் பிடிக்கலை, சரி கிளம்பலாம்னு திரும்பி வந்தால்..., அப்படியே ப்ரீஸ் ஆகிப்போய் நின்று அழுதுட்டு இருக்கா.. அவ நின்ன நிலைமை இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கு.

ஆன்ட்டிக்கு ஏதாவது ஒண்ணுன்னா..., இவளை சமாளிக்கிறதுதான் பெரிய விஷயமா இருக்கும். எங்கே இருக்கோம்..., என்ன செய்யறோம்...? எதுவும் தெரியலை..., நல்ல வேளை, சில காலேஜ் பசங்க அவசரத்துக்கு உதவி செய்தார்கள். இல்லன்னா என்ன ஆகி இருக்கும்னே தெரியலை, தலையை உலுக்கியவாறு அவள் உரைக்க, சங்கவியின் உடல்நிலையைப் பற்றி நிவியிடம் பேசவேண்டும் என்ற தன் முடிவை மறு பரிசீலனை செய்யத் துவங்கினார் கொடி.

ஓ.., அப்படியா...?, புருவம் நெரித்தவர், கழுதை கெட்டால் குட்டிச்சுவர் மாதிரி..., இப்பல்லாம் போர் அடித்தால் ஷாப்பிங் போறீங்க இல்ல. நல்ல தலைமுறை, நல்ல முன்னேற்றம்..., சரி இப்போ வீட்டுக்கு கிளம்பறியா, இல்ல இங்கே இருக்கப் போறியா...?.

வீட்டுக்கு போன் பண்ணிட்டு, நிவிக்கு துணையா இங்கே தான் இருக்கப் போறேன்.

அது எப்படி முடியும்...? நீதான் கல்யாணப் பொண்ணாச்சே...?,

அதுக்கு இன்னும் நாலு மாசம் இருக்கு..., அவள் உரைக்க,

ரொம்ப சலிச்சுக்கற..., அவ்வளவு அவசரமோ..., கேலி இழையோடியது அவர் குரலில்.

ஆன்ட்டி..., நானே அவ்வளவு நாள்தான் சுதந்திரமா இருக்க முடியும்னு நினைத்தால்..., நீங்க கிண்டல் பண்ணுறீங்க.....

நம்பிட்டேன்..., நம்பிட்டேன்..., சரி சீக்கிரம் போய் நிவியை வெளியே அழைச்சுட்டு வந்துடு. இல்லன்னா அவங்க அம்மாகிட்டே எமோஷனல் ஆகியே ஒரு வழி பண்ணிடுவா..., திரும்பி நடந்தார். முகமோ இவ்வளவு நேரம் இருந்த இயல்பை தொலைத்து கவலை நிரம்பியது.

நிவியிடம் உண்மையை சொல்லவும் முடியாமல், தோழியின் உடல்நிலை நாளுக்கு நாள் சீர் கெடுவதை பார்த்துக் கொண்டு, எதுவும் செய்யாமல் கையை கட்டிக் கொண்டு இருப்பது மனதுக்கு சங்கடத்தையும், கவலையையும் ஒருங்கே அளித்தது.

இப்பொழுதும் கண் விழித்தவுடன், கொடி..., நீ நிவி கிட்டே எதுவும் சொல்லிடலை தானே..., மூச்சு திணறும் நிலையிலும் கவனம் காக்கும் தோழியை என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை.

அப்பொழுது தன் அமைதியும் அவரை வருத்தும் என்பதால்..., உன் அனுமதி இல்லாமல் நான் எதையும் செய்ய மாட்டேன் போதுமா...? இப்படி தேவையில்லாமல் கவலையை இழுத்து வச்சுக்காமல், மனசை ரிலாக்ஸ்டாக இருக்க விடு. உன் உடல்நிலைக்கு அதுதான் முக்கியம்...., கொஞ்சம் கோபமாகவே உரைத்தார்.

தோழியின் கோபத்தில் மனம் சுணங்கினாலும், மகளுக்கு இன்னும் எதுவும் தெரியாது என்பதே ஆசுவாசத்தை அளிக்க, நிவி..., கேள்வியாக இழுத்து நிறுத்த,

அவ வெளியேதான் இருக்கா. உடனே வரச் சொல்றேன். அதிகமா பேசாதே. இதை மட்டுமாவது கேள்..., அவர் ட்ரிப்சை அட்ஜஸ் செய்தார்.

இன்னும் எதையோ அவர் பேச முயல, பேச்சை குறைன்னு சொன்னது அவ கிட்ட மட்டும் இல்லை. எல்லாரிடமும் தான். நாம நிதானமா பேசிக்கலாம், அழுத்தமாக உரைத்தவர் அங்கிருந்து வெளியேறினார்.

அவசர சிகிச்சைப் பிரிவிலோ, நிவேதா தன் அழுகையை அடக்க முயன்ற மட்டும் போராடி, அது முடியாமல், விம்மியவாறு தாயின் கையில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

அம்மா..., ஏம்மா இப்படிப் பயமுறுத்திட்டீங்க? மறுபடியும் உங்களுக்கு உடம்பு முடியாமல் போய்டுச்சோன்னு ரொம்ப பயந்துட்டேன்...?, கேவலை அடக்கியவாறு திணறினாள்.

நிவிக்குட்டி..., அம்மாவுக்கு ஒண்ணும் இல்லடா. ரொம்ப நாள் கழிச்சு அலைந்ததில் கொஞ்சம் மயக்கம் வந்துடுச்சு அவ்வளவுதான்..., நீ அழாதே..., மகளை தேற்ற முயன்றார்.

ம்..., தன் கண்ணீரைத் துடைத்தவள், தாயின் அருகிலேயே அமர்ந்துகொண்டு, அவர் முகம் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.

கஷ்டமா இருக்குன்னா சொல்லி இருக்கலாமே அம்மா...? எனக்கு..., மீண்டும் அவள் கண்கள் கலங்கியது.

என் பொண்ணு கேட்டு..., அதை இல்லைன்னு நான் சொல்லுறதா...?, அவள் கன்னம் தடவினார்.

அதுக்கு..., இப்படித்தான் என்னை பயமுறுத்துவீங்களா? உங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா..., நானும் உங்களோடவே வந்துடுவேன் ஆமா..., அவள் கண்களில் இருந்த தீவிரம், தன் முடிவு சரிதான் என்பதை அவருக்கு உணர்த்தியது.

உன்னை இதற்காகத்தான் நான் படிக்க வைக்கிறேனா? படிப்பு வாழ்க்கைப் பாடத்தையும் சேர்த்து கற்றுக் கொடுக்கணும், அதை விட்டு, இதென்ன பேச்சு? அம்மாவுக்கு ஒரு சத்தியம் பண்ணிக் கொடு, இனிமேல் இப்படி உளற மாட்டேன், செய்ய மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணு..., தாயின் குரலில் இருந்த பாவம், அவளை எதுவும் மறுத்து பேச விடாமல், அவர் கையின்மேல் தன் கையை பதித்தாள்.

அவள் கையை அப்படியே இறுகப் பற்றியவர், அவளையே வெறித்தார். தன் மகளை இதேபோல் அருகில் இனிமேல் பார்க்க முடியாது என எண்ணினாரோ...? வாஞ்சையாக அவளைப் பார்த்தார்.

கொடி..., உன்னைத்தான், நான் கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறேன்..., கண்டுகொள்ளாமல் அப்படி என்ன யோசனை...? சங்கவியை அட்மிட் செய்திருப்பதா நர்ஸ் வந்து சொன்னா..., அதான் வந்தேன். என்ன விஷயம் சீரியஸா...?, அவர் தோளை உலுக்கினார் கணவன் பரசுராம்.

ஹங்..., ஓ நீங்களா...? என்ன கேட்டீங்க...?, யோசனை அறுந்துவிழ, இமைகொட்டி விழித்தார்.

சரியா போச்சு போ..., முதல்ல ரூமுக்கு வா..., அவரை அழைத்துக் கொண்டு அறைக்கு விரைந்தவர், மனைவியை இருக்கையில் அமர வைத்தார்.

தண்ணீரை அவர் கரங்களில் கொடுக்க, கொடிக்கு அப்பொழுது அது தேவையாய் இருக்க, ஒரே மூச்சில் குடித்து முடித்தார்.

இப்போ சொல்லு..., சங்கவிக்கு எதுவும்..., சீரியஸ் இஷ்யூ...?, அவர் தோள் தொட,

சீரியஸ் தாங்க..., ஆனா இப்போதைக்கு இல்லை. பிபிதான் இப்போ ரெயிஸ் ஆகி இருக்கு, அங்கே அழுத்தமான மௌனம் நிலவியது.

என்ன குழப்பற...?,

அவ ஹெல்த் ரொம்ப மோசமாயிட்டே வருது. டேப்லட் அதிகமா போட துவங்கிட்டா. இப்படியே போனால்...? எனக்கு பயமா இருக்குங்க..., கணவனின் கையை பற்றிக் கொண்டார்.

சங்கவி ஆபரேஷன் செய்யும் கட்டத்தை

You've reached the end of this preview. Sign up to read more!
Page 1 of 1

Reviews

What people think about En Thedal Nee...

5.0
1 ratings / 0 Reviews
What did you think?
Rating: 0 out of 5 stars

Reader reviews