Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Valarpirai Kanavugal
Valarpirai Kanavugal
Valarpirai Kanavugal
Ebook288 pages2 hours

Valarpirai Kanavugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Kanchana Jeyathilagar is the author of nearly 60 novels and over 1000 short stories. She and her husband love travelling and with her writing takes her readers to those places too! Kanchana has won various awards for short stories and is one of the leading tamil authors. She lives in Kodaikanal with her family.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580109902842
Valarpirai Kanavugal

Read more from Kanchana Jeyathilagar

Related to Valarpirai Kanavugal

Related ebooks

Reviews for Valarpirai Kanavugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Valarpirai Kanavugal - Kanchana Jeyathilagar

    http://www.pustaka.co.in

    வளர்பிறை கனவுகள்

    Valarpirai Kanavugal

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jeyathilagar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    1

    மேடையின் விளக்குகள் விழி திறந்தன. பரவிய ஒளியின் பாய்ச்சலில் மருண்ட இருள் மாயமானது.

    பகல் போன்ற வெளிச்சம்.

    வியர்வை ஊறச்செய்யும் உக்கிரம் மிக மெல்ல டிரம்களின் அதிர்வு ஆரம்பானது. மின் கிடாரின் நரம்புகள் வருடப்பட, சிலிப்பான இசை மிதந்தது.

    இசைக்கேற்ப அடங்கிப் பொங்கியது வெளிச்சம்.

    ஒலி மிருதுவாக, ஒளியும் மங்கலானது.

    வண்ண விளக்குகள் சுழன்றன.

    ஒலி அதிகமாக விளக்கின் விழிகள் விம்மின. இசை இதயம் வரை சென்றது.

    ஒளி வட்டம் மேடையை தேடலுடன் சுற்ற. அதனுள் சிக்கினாள் பாவை.

    மேடையில் பார்த்து பாராட்டப்பட வேண்டிய தோற்றம் தான்.

    ஒயிலாக முன்னேறினாள். முன்னும் பின்னுமாய் அசைந்து உடையழகைக் காட்டினாள்.

    உடலும் சளைத்ததாயில்லை.

    சில நிமிடங்களில் வண்ணத்துப்பூச்சிகளின் படையெடுப்பு போல மேடை நிறைந்தது. மோகன சிரிப்புகளும், மெல்லிய உடல் அசைவுகளும், நடையின் நாகரீகக் குலுக்கலுமாய் ஒரு மாயா லோகம் அங்கு உருவாகியது.

    ஆனால் மாயா சுழண்டு வந்து நடுவில் நின்ற நேரம் அரங்கு சற்று ஸ்தம்பித்து பின் ஆரவாரித்தது.

    பெங்களுர் கலையரங்கத்தில் நடைபெற்ற உடை அலங்கார அணிவகுப்பு அது. அனைவராலும் மாயாவின் அழகு வித்தியாசமானது.

    போலித்தனமற்ற பொலிவு.

    வனதேவதையின் வனப்பு.

    கையில்லாத சிவப்பு கவுனில் அவள் ஒரு சிறுமியின் குதூகலத்துடன் மேடையைச் சுற்றி வந்தாள்.

    கவர்ச்சியை விட உல்லாசமான துள்ளல்.

    முகமெங்கும் ஜொலிப்பான மோகன முறுவல்.

    முதல் சுற்று முடிந்தது.

    ஆனால் ரசிகர்கள் மீண்டும் இவளையே எதிர்பார்த்தனர். வலப்புற ஓரமாய் அமர்ந்திருந்த பத்திரிகையாளர்களிடம் கேள்விகள் கிளம்பின

    யாரது?

    யாரைச் சொல்றீங்க என்று மறுகேள்வி எழவில்லை!

    அது மாயா

    தொழில் முறை மாடலா? மும்பையா?

    இல்லை. அமெச்சூர்தான். கல்லூரியில் படிக்கிற தமிழ்ப் பெண். இத்தனை அழகை வைச்சிகிட்டு, பெங்களுர்ல வெறுமனே படிச்சிட முடியுமா? மேடை ஏறிடுச்சு.

    மாறுபட்ட அழகு

    "அதுதான் இத்தனை வரவேற்பு’

    நினைச்சேன் - தமிழ் பொண்ணுன்னு

    "அந்த கண்ணு சொல்லுதே'

    மற்றதுங்க பஞ்சத்தில அடிபட்டாற் போல வெளிறி கிடக்குதுங்க

    இது ஊட்டி ரோஜா

    அடுத்த வார அட்டை படத்துக்கு கேட்கணும்.

    நானுந்தான் - எடிட்டர் சந்தோஷப்படுவாரு

    தலைமுடி என்ன கருப்பு. அடர்த்தி?

    மற்றதுங்களுக்கு செம்பட்டையாச் சிலுப்பி விட்ட எலிவால்

    பரிமாறப்பட்ட உருளை வறுவலை மென்று 'கோக் உறிஞ்சியபடி பேசி சிரித்தனர்.

    எந்த கல்லூரி?

    அங்க போய் எப்படி இவளைத் தேடுவே?

    இலைகளுக்கு நடுவே ரோஜா தெரியாது?

    ரோஜா வீடு விக்டோரியா சாலையிலே இருக்குது

    ஓ. பணக்கார குடும்பமா?

    குடும்பத்தைப் பத்தி ஏதும் தெரியலை - இது ஒண்டியா மெஹரோட இருக்குது

    அனு மெஹர்? மாடலிங்கிலே பெங்களூர் குட்டையெல்லாம் கலக்கிட்டு மும்பாய் வரை பறக்கிற பெண்ணாச்சே?

    ம்ம். ரெண்டு பேரும் ஒரே ஃபிளாட்டைத் தான் வாடகைக்கு எடுத்திருக்காங்க - விலாசம்.

    தெரியும் - பாத்துக்கறேன்.

    இடைவேளை நேரத்திலும் கூட சளைக்காமல், கொறிக்காமல் ஏதோ வேலையாய் குனிந்திருந்த அரவிந்தனை, பலர் கண்டு கொள்ளாமல் நகர, வெகு கண்ணியமாய் தெரிந்த சிலர் அவனருகே நின்று விசாரித்தனர்.

    அரவிந்தன் இளம் ஓவியன்.

    அவனது ஓவிய கண்காட்சிகள் நகரில் அவ்வப்போது நடக்கும் - மக்கள் அலையென திரண்டு வர மாட்டார்கள்!

    கலையின் நுணுக்கள் புரிந்த சிலர்தான் வருவார்கள் –

    ஆனால் பல ஓவியங்கள் விற்றுப் போகும் - பல ஆயிரங்களுக்கு

    பெரும் வர்த்தக அலுவலகங்கள், மேம்பட்ட உணவகங்கள், உயர்ரசனை இல்லங்களில் அவன் படைப்புகளுக்கு இடமுண்டு. பல வெளிநாடுகளுக்கும் பறந்து போயிருக்கின்றன.

    அவன் தூரிகை உள்ளதை உள்ளபடி காட்டுவதில்லை.

    அதே சமயம் பிக்காஸோவின் புதிர்பாணியும் கிடையாது - இரண்டுக்கும் நடுவான புதுப்பாணி. கண்களை ஈர்க்கும், கருத்திற்கும் புரியும்

    நகரின் புது ‘பொட்டீக்’ ஒன்றிற்கு நாகரீகப் பெண்களின் ஓவியங்கள் சில தேவைப்பட்டது. அந்த வேலையில் மும்முரமாயிருந்தான்.

    அரவிந்தன் முப்பதைத் தாண்டியும் பிரம்மச்சாரிதான் - இல்லற நாட்டமில்லை - சமீபமாய் அனுவைச் சந்திக்கும் வரை. மாலை மாற்றின பிறகு தேனிலவை அனுபவிக்க அவகாசம் வேண்டாமா? அதற்கென்றே திருமணத்தை இருவரும் தள்ளிப் போட்டனர். அனு முதல் தர மாடல்.

    அவளையே புதுக்கோணங்களில் புகைப்படம் எடுத்து ஓவியங்களை தயாரித்து விடலாம். ஆனால் அனு சிக்கவில்லை.

    "பொட்டீக்’ திறப்பு விழாவிற்கு இன்னும் ஒரு சில வாரங்களே - அதனால் வேறு வழியின்றி இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தான்.

    வந்தது வீணில்லை.

    இந்த மாயாவின் அழகு வெகு நூதனம். தூரிகையில் அக்கவர்ச்சியை சிறை பிடிக்கக் கூடுமா? சந்தேகம் தான். ஆனால் அந்த சவால் அவனுக்குப் பிடித்திருந்தது.

    ஆக இவள்தானா மாயா? அனு அடிக்கடி பேசும் அவளது அறைத்தோழி?

    அறிமுகம் எளிது.

    ஒருக்களித்து திறந்திருந்தது ஒப்பனை அறையின் கதவு - ஆனாலும் நாகரீகம் கருதி தட்டினான்.

    வரலாம்.

    தயக்கமாய் நுழைந்தான். அரவிந்தன். உள்ளே அனைவரும் பெண்கள். பகட்டான ஆடையிலிருந்து ஜீன்ஸ், டி-ஷர்ட்டிற்கு மாறியிருந்தார்கள். கூந்தலை அள்ளி அகல ‘பேன்ட்’களில் இறுக்கிவிட்டு, ‘ஸியூ’, ‘பையை’ என்ற நுனி விரல் அசைவுகளுடன் அசைந்து கிளம்பினார்கள்.

    யாரும் அவனைப் பொருட்படுத்தவில்லை. கூச்சத்துடன் வெளியேறி விடலாம் என்றவன் திரும்பிய போதுதான் அவள் "பளிச் சென பார்வையில் சிக்கினாள். இளம் சுருள் கேசம் முதுகு பூராவும் விரிந்து கிடக்க, மெல்லிய வெள்ளை சேலையில் கலைமகள் போல -

    சேலையில் சிறு ரோஜா மொட்டுக்கள் நெய்யப்பட்டிருந்தன. பொருத்தமாய் ரோஜா நிறப் பட்டில் குட்டைக் கை சோளி. உள்ளங்கழுத்திலே பொடி முத்துச் சூடி - உதட்டில் ரோஜா நிறம்.

    அலங்கார மேசையிலிருந்த அகலப் பல் சீப்பை எடுத்து ‘வரட்வரட்’ என சீவி பின்னலிட்டுக் கொண்டிருந்தாள் மாயா.

    சில நொடிகளில் முகத் தோற்றம் குடும்பப் பாங்கிற்காய் மாறிவிட்டது. கைப்பையை எடுத்துக் கொண்டு கையாட்டியபடி கிளம்பியவளின் முன்பு போய் நின்றான்.

    நான். நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்

    என்ன. சொல்லுங்க?

    சிறு புன்னகையுடன் தலையசைத்தாள்.

    ‘மாயா. உங்க நிகழ்ச்சி ரொம்ப பிரமாதம்."

    நன்றி - இந்தப் பாராட்டு எல்லாருக்குந்தானே?

    ஆமா. இல்லை..

    அவன் தடுமாற்றத்தை நமட்டு புன்னகையுடன் ரசித்தாள்.

    நன்றி. எனக்கு நேரமாச்சு!

    விக்டோரியா சாலைதானே? நான் கூட்டிட்டு போறேன்.

    அவள் முகம் மாறியது.

    "தேவையில்லை' - சிடுசிடுத்தாள்.

    தப்பா நினைக்காதீங்க-நான் அனுவோடநண்பன் அரவிந்த்

    மறுகணம் அவள் முகம் தளர்ந்தது. ஓவியர் அரவிந்தா?

    ம்ம்.

    இன்னும் முழுக்க நம்பாதது போல அவனை தலைசாய்த்து ஆராய்ந்தாள்.

    தன் தோல் பையை திறந்து தான் வரைந்தவற்றை எடுத்து. அவளிடம் நீட்டினான்.

    ஹா அற்புதம் - இது நானா? வியந்து விரிந்தன அவள் விழிகள்.

    மாயா!

    நீங்கள் வரையும் கோடுகள் நளினமாய் இருக்கும் என்றாள் அனு. அனு நிஜம்தான்

    "பார்ப்பதைத்தான் என் பென்சில் கோடாய் இழுக்கிறது’

    நன்றி.

    சிரிக்கையில் அவள் விழிகளும் கறுப்பு வைரங்களாய் மின்னின. தான் பொட்டீக்’ ஒன்றுக்காய் வரைந்து தர வேண்டிய ஓவியங்களுக்காய் இவ்வரை படங்களை பயன்படுத்திக் கொள்ளலாமா என்று அனுமதி கேட்டவன், அனு மும்பையிலிருந்து வர ஒரு வார மாதம். அதுதான்" என்று இழுத்தான்.

    உங்களுக்கு இவை போதும்னு தோணினால் சரி

    சிறப்பாய் வரும்ங்கிற நம்பிக்கையிலேதான் இந்த ஓவியங்களை வரைஞ்சேன். சில புகைப்படங்களும் எடுத்திருக்கேன். உங்க அனுமதிதான்.

    சம்மதம் - ஒரு நிபந்தனை

    சொல்லுங்க

    அவனுக்கு வரும் வரும்படியில் கால்பங்காவது கேட்பாள் என்று நினைத்திருந்தவனுக்கு அவளது பதில் ஆச்சரியந்தான்.

    இந்த ஸ்கெட்ச்சஸ் ஓவியம் வரைஞ்ச பிறகு உங்களுக்குத் தேவைப்படாதே?

    இல்லை...

    சில கோடுகளிலேயே என் சாயலை அற்புதமாய் கொண்டு வந்திருக்கீங்க - இந்த ஓவியங்கள் தான் என் சன்மானம்!

    சந்தோஷமாய் தர்ரேன். கோடுகள்ல உங்க அழகைக் கொண்டு வர முடியுமான்னு சந்தேகமாய் வரைஞ்சேன் - உங்க அழகு அற்புதம்

    ரவிக்கையின் ரோஜா நிறத்திற்குப் போயின அவள் கன்னங்கள்.

    இந்நகரில் வெட்கப்படும் அழகிகளே கிடையாது - போகலாமா?

    அவன் ஆச்சரியத்தை ரசித்தபடி அவனைத் தொடர்ந்தாள்.

    மாருதியில் தன்னருகே இருந்த அவளை மேலும் உன்னிப்பாய் பார்த்தான் அந்த ஓவியன்.

    பொலிவான சருமம் - மென்மையான அடர்த்தியில் புருவங்கள், உறுதியான தாடை, அதை மென்மைப்படுத்தும் கொழுவிய கன்னக் கதுப்புகள். சின்ன கூர் நாசி - மிருதுவான சிவந் உதடுகள் - அத்தனைக்கும் சிகரமாய் கோடி கருப்பு மின்னல்களாய் விழிகள்

    இயற்கையான அழகே இப்போது காண முடியறதில்லை.

    புரியலியே?

    ம்ம். ஆரோக்கியமாய் தெரியறீங்க - வளைச்சா ஒடிஞ்சுடற கம்பு போல இல்லாம...

    "தப்பு - அது கம்பு இல்லை. கொடி நான் கொடியில்லை. கொஞ்சம் தடி' - கண்சிமிட்டினாள்.

    வாய்விட்டு சிரித்தான்.

    நான் நகரத்திலே வளர்ந்த பெண்ணில்லை. இங்கே விவரம் தெரிஞ்ச நாளிலேருந்து டயட்தானே? நான் பிறந்து வளர்ந்தது எஸ்டேட்டிலே - திண்டுக்கல் பக்கம். நிறைய பால், தயிர், பழம்னு வளர்ந்தேன். சதா மரம் ஏறி, மூச்சிறைக்க ஓடி ஆடிய உடம்பு

    அதான் உங்க அழகின் ரகசியமா?

    சுத்தமான காற்று, கண்ணை நிறைக்கும் பசுமை - வேண்டிய தனிமை - இதை எல்லாமும் சேர்த்துக்கோங்க...

    எனக்குப் பொறாமையா இருக்குதே. இது மாதிரி இடந்தான் தேடிட்டு இருக்கேன்…

    எதுக்கு?

    நிம்மதியாய் வரைய மாயா... நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா அடுத்த முறை நீங்க உங்க எஸ்டேட்டுக்குப் போகும் போது நானும் வரலாமா? உங்களைத் தொந்தரவே செய்ய மாட்டேன் - ஒரு ஓரமாய் கிடந்து வண்ணங்களைக் குழப்பி பூசிட்டிருப்பேன் - காரோட்டியபடி இடது கையால் அபிநயித்தான்.

    வரலாமே... புன்னகைத்தாள்.

    நன்றி. எப்போ போவீங்க?

    அ. வந்து. – தடுமாறினாள்-

    தெரியலை. போகும் போது சொல்றேன்.

    அதற்குப் பிறகு அரவிந்தன் பேசியதெல்லாம் அவளுக்குக் கேட்கவேயில்லை. மூன்று ஆண்டுகளாய் போகாத தன் ஊருக்கு, வீட்டிற்கு இனி எப்போது போகப் போகிறாள்?

    போனாலும். போய் அவனை நேரேநின்று பார்க்கும் நெஞ்சுரம் தனக்கு உண்டா?

    கிளறப்பட்ட நினைவுகள் அன்றிரவு அவளை உறங்க விடவில்லை. ‘ரஞ்சனியகம்’ கனவில் வந்தது.

    அதுதான் அவள் பிறந்து வளர்ந்த வீடு - கூடவே மணிமாறனும் தோன்றி அவளை அலைக்கழித்தான்!

    ***

    2

    பெங்களூரின் எம். ஜி. சாலையில் நடப்பது மாயாவிற்கு எப்போதுமே பிடிக்கும். கலவையான கலாசாரங்களை அங்கு பார்க்கலாம் - ரகம் ரகமான மனிதர்கள்.

    மாலை நேரம் மைசூர் கைவினைப் பொருள் அங்காடியான 'காவேரியினுள் நுழைந்து விட்டால் போதும். தேக்கும் தந்தமும் கலந்து உருவான பிரம்மாண்ட யானை சிற்பத்திலிருந்து, மூக்கின் வெள்ளி நத்து வரை ரசனையும் நேர்த்தியான பொருட்களைப் பார்க்கலாம்.

    ரோட்டோரம் விற்பனையாகும் மசாலா தடவிய அன்னாசி பழத்துண்டங்களை சுவைத்தபடி தெருவோர புத்தகக் கடையில் தமிழ் பத்திரிகைகளை அள்ளிக் கொள்வாள். அது போக தரையில் பரப்பியிருக்கும் ஆங்கில இதழ்களையும் நோட்டமிடுவாள். அவை - பெரும்பாலும் ‘டெபோனெர்' போன்ற கவர்ச்சி இதழ்கள் - விழி பிதுங்க ஆண்கள் நோட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள், குனிந்து!

    காய்ந்த மலர் கொத்துக்களுக்கு வெள்ளி, தங்க முலாம் பூசப்பட்டு விற்பனைக்கு பரத்தியிருப்பார்கள் - அது போக எக்கச்சக்க துணிக் கடைகள் - விலையும் எக்கச்சக்கம்தான்.

    மாயாவிற்கு ஊரிலிருந்து கணிசமான தொகை மாதாமாதம் வந்து விடும். இப்போது மாடல் ஆக புகழ் பெற்றபிறகு நேர்த்தியான ஒரு சிறு வீட்டினை அனுவோடு பங்கு போட முடிந்திருக்கிறது.

    உணவில் அவள் எப்போதுமே எளிமைதான்.

    உடைகளை கூட சென்னை, மதுரை போக நேரும் போது வாங்கி விடுவாள். ஆக வீட்டு வாடகைதான் பிரதான செலவு.

    கல்லூரிப் பரீட்சைகள் முடிந்து விட்டன -இனி முழுதாய் மூன்று மாதங்கள் விடுமுறை. கிடைக்கும் அத்தனை அலங்கார அணிவகுப்பு வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் - ஆனால் அது உசிதமில்லை. தோழி அணு ஊரில் இல்லாத நாட்களில் அதி வீடு வெறுமையாய் தோன்றுகிறது. இனி படிப்பு இல்லை -ஆக மேடைக்கான ஒத்திகை நேரங்கள் போக இப்படி காலார நடந்து விட்டு வீடு திரும்புவாள்.

    ஆண் நண்பர்கள், புத்தம்புது ‘பியர்' பரிமாறும் ‘பப் பழக்கங்கள் எல்லாம் தன்னை அண்டவிட்டதில்லை அவள்.

    எந்த ஊர் பொண்ணு, மாயா?

    மதுரை பக்கமாம்.

    மதுரை?

    கண்ணகி கதை தெரியுமில்ல - அவள் எரிச்ச ஊருப்பா… ஓஹோ மதுரை மாயாவும் நெருங்க விடாத பத்தினிப் பொண்ணு தான் போல. தோள் உயர்த்தி கை விரிப்பார்கள்.

    மாயா எதையும் கண்டு கொள்வதில்லை. அலட்டாமல் அவள் போக்கில் போவாள்.

    நாளை அனு ஊர் திரும்பி விடுவாள் - நல்ல சிநேகிதி.

    சமீப பழக்கமென்றாலும் இயல்பாக நெருங்கிக் கொண்டார்கள். ‘பிஷப் காட்டன்’ பள்ளியில் படித்த அனு, தன் பெற்றோர் வடக்கே போன பிறகும் கூட பெங்களூரை விட மனமில்லாது இங்கேயே தங்கி விட்டாள். உயர்மட்ட கல்வி, பணம் அபார அழகு எல்லாம் இருந்தும் பெருமை கிடையாது. - அபூர்வமல்லவா அது?

    வியந்த மாயா நட்பு கொண்டாள். இவள் அனுவிற்காக காத்திருந்தது போலவே தான் அரவிந்தனும் - பழகிய இச்சில நாட்களிலேயே புரிந்து போனது - அவன் அனுவிற்கு ஏற்ற துணை என்பது.

    ஆனால் 'நீ எப்போது ஊருக்குப் போவாய் மாயா? என்னையும் கூட்டிச் செல்’ என்று அவன் நிலையாய் நிற்பதுதான் ரசிக்கவில்லை.

    நாளை ‘ரங்க மந்திரா’வில் அவனது ஓவியக் கண்காட்சி. அதிகாலை விமானநிலையம் போய் அனுவை அழைத்து வரலாம் - பின் இருவருமாய் சேர்ந்து கண்காட்சிக்குப் போகலாம்.

    வாங்கி வந்த பத்திரிகைகளைப் புரட்டி விட்டு, தயிர்சாதத்தில் நிறைய வெள்ளரி துண்டுகளைத் தூவி சாப்பிட்டாள். எஞ்சிய வெள்ளரியை சாறாக்கி முகத்திலும் கழுத்திலுமாய் ஊறவிட்டாள்.

    ‘குளுகுளு’வென்றிருந்தது.

    கூடவே செண்பகா அத்தையின் நினைவு வந்தது. அத்தையின் கைவிரல்களில் இதே குளுமை இருக்கும். வெயிலில் ஆடி விட்டு வீட்டிற்கு வந்து அத்தையின் கைகளை எடுத்து கன்னம், நெற்றி எனப் பதித்துக் கொண்டால் சுகமான ஜிலுஜிலுப்பு

    இப்போது அத்தை இல்லை. சிறுவயதிலேயே தாயை இழந்த மாயாவிற்கு தாய்மையின் நிழல் தந்து வளர்த்து விட்டவள் செண்பகா அத்தைதான். அவளும் இறந்த பிறகு இந்த நேசக் குளுமையைத் தருவாரில்லை.

    அம்மா இறந்தபோது மாயாவிற்கு 10 வயதுக்குள்தான். அம்மாவின் முகம் கூட வெகு கூர்மையாய் நினைவில் இல்லை. ஆனால் அன்னையும் தந்தையும் இன்பமாய் நடத்திய இல்லறம் நினைவிலிருந்தது.

    அவர்களுடையது காதல் கல்யாணம்.

    அப்பா தன் அண்ணன் மகளைப் பள்ளிக்கு தினம் கொண்டு விடப் போக நேர்ந்த அறிமுகம் - அதுவும் விநோதமான முறையில்

    அப்பாவின் காதல் பேச்சு இன்னும் காதில் கேட்கிறது. அன்னைக்கு நான் 'பளிர்’ நீலத்தில் சட்டை போட்டிருந்தேன் - அதை அரச நீலம்பாங்க. அஞ்சு குட்டியை வகுப்பிலே விட்டுட்டு திரும்பினா அதே நீலத்தில் ஒரு சேலை என் கண்ணிலே பட்டது. யாருடா இதுன்னு முகத்தைப் பார்த்தேன் - குழந்தைத்தனமான அந்த அழகு முகம் எம்மனதிலே பதிஞ்சிருச்சு!

    அதுதான் அம்மாவாப்பா?

    "கேளு - அந்த பிஞ்சு முகத்தை பெரிய மனுஷியாக் காட்ட நீண்ட சடையை பிச்சோடாவாய் இறுக முடிந்திருப்பா - ஆனால் பிரமாதமாய்

    Enjoying the preview?
    Page 1 of 1