Are you sure?
This action might not be possible to undo. Are you sure you want to continue?
Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
http://www.pustaka.co.in
http://www.pustaka.co.in/home/author/devibala-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
காலை நேர மீனம்பாக்கம் திரிசூலம் ஏர்போர்ட் சுறுசுறுப்பாக இருந்தது.
வரப்போகும் டெல்லி பிளைட்டுக்காக, அந்தக் கூட்டம் கண்களில் ஆர்வத்தைப் பூசிக் காத்திருந்தது.
லதா இளம் ஆரஞ்சு நிற ஷிபானில், அதே நிற ரவிக்கையோடு, ஷாம்பு தலை முதுகில் வழிய, காதோரம் ஒற்றை ரோஜா பதித்து, வினைல் நாற்காலியொன்றில் தன் உடம்பைப் பதித்திருந்தாள்.
கையில் ஸிட்னி ஷெல்டன்.
ஒலிப்பெருக்கி தொண்டையை செருமிக் கொண்டது.
'யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்!'
அத்தனை பேரும் சற்று நிமிர, புதுதில்லியிலிருந்து வரும் விமானம் பற்றிய அறிவிப்பை கரகரப்பாக ஆங்கிலத்தில் அந்தக் குரல் துப்ப,
லதா எழுந்தாள்.
செக்யூரிட்டி கேட் நோக்கி தன் கால்களைப் பதித்த சம்யம்,
சற்றுதள்ளி இரண்டு ஆண் குரல்கள் காதில் வந்து மோத, அதில் தெறித்த சில வார்த்தைகளில் சட்டென கூர்மையானாள்.
கிசுகிசுப்பான குரலில் அவர்கள் பேசியது லதாவின் காதில் விழுந்தது.
‘செக்யூரிட்டி கேட் வரும்போது, மயக்கமாயிருவா. உடனே ரீயாக்ட் பண்ணு!'
மெல்லத் திரும்பிப் பார்த்தாள்.
இருவருமே இளைஞர்கள். ஒருவன் மெல்லிய பிரெஞ்சுத் தாடி வைத்து, ஒல்லியாக, சற்று கோதுமை நிறத்துடன், குறைந்த உயரத்தில் காணப்பட்டான்.
மற்றவன் சினிமா பிரபு சைஸில் இருந்தான்.
விமானம் வருவதாக அறிவிப்பு வர,
லவுன்ஜில் பதட்டம் நிலவியது
உயரத்தில் அலுமினியப் பறவை பெரிதாகிக் கொண்டே வந்து ரன்வே தொட்டு சறுக்கிக் கொண்டே வந்து ஒய, பணியாளர்கள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கினார்கள்.
படிகளில், பயணிகளின் தலைகள் தெரிய,
லதா இவர்கனள தன் பார்வையில் நிறுத்தி வைத்துக் கொண்டு விமானத்தை கவனித்தாள்.
உச்சியில் பிரசன்னா தெரிந்தான்.
சின்ன பெட்டியோடு மெல்ல இறங்க,
பிரசன்னாவைப் பற்றிக் கவலைப்படாத லதா, இவர்களை கவனிக்கத் தொடங்கினாள்.
‘தோ வர்றா' என்றது ஒரு குரல்.
விமானத்தைப் பார்த்தாள் லதா. ரோஜா வண்ண சூரிதார் அணிந்து ஒரு பெண் இறங்கிக் கொண்டிருந்தாள்.
'இவளா?’
பிரசன்னா செக்யூரிட்டி கேட்டை நெருங்கிவிட,
லதா அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தாள்
அப்போதுதான் அது நடந்தது.
சொல்லி வைத்தாற்போல, தடக்கென விழுந்தாள் அந்தப் பெண். திடீரென அவள் காலும், கையும் வெட்டி வெட்டி இழுக்க, வாயிலிருந்து ரத்தமும், நுரையுமாக பெருகத் தொடங்க, கண்கள் செருகிக் கொண்டு மேலே போனது.
அத்தனை பேரும் பதட்டத்துடன் கவனிக்க,
ஏர்போர்ட் டாக்டர் சடுதியில் அழைக்கப்பட,
இவர்கள் இருவரும் பாய்ந்து உள்ளே போனார்கள், கூட்டத்தைப் பிளந்து கொண்டு.
'பப்பு... வாட் ஹேப்பன்ட்?' ஒருவன் சட்டென தன் கையிலிருந்து ஒரு சாவிக் கொத்தை எடுத்து அவளிடம் செருகிட,
ஏர்போர்ட் டாக்டர் வந்து விட்டார்.
தேங்க்யூ. நாங்க கூட்டிட்டுப் போய், நர்ஸிங் ஹோம்ல அட்மிட் பண்ணிக்கறோம்! பிடி இம்மானுவல்!
இரண்டு பேருமாக அவளைப் பிடித்து வெளியே கொண்டு வர, கூட்டம் கலைந்து தனித்தனியாக தன் வேலையைப் பார்த்துக் கொண்டு விலக,
ஏய்... எங்க பாக்கற?
பின்னால் வந்த பிரசன்னா, லதாவின் தோளைத் தொட்டான்.
அந்த இருவரும் வெளியே வந்து, ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த சாம்பல் நிற அம்பாஸிடரை அணுக,
வாங்க பாஸ்!
எங்கே லதா?
டாக்ஸில பதிலைச் சொல்றேன்!
லதா ஏறத்தாழ ஓடினாள். பிரசன்னா குழப்பத்துடன் அவளைப் பின் தொடர்ந்தான்.
லதா ஒரு டாக்ஸியை அழைக்கும் நேரத்தில், அம்பாஸிடரில் அவளைக்
This action might not be possible to undo. Are you sure you want to continue?