Are you sure?
This action might not be possible to undo. Are you sure you want to continue?
Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
வியக்க வைத்த விஞ்ஞானம்:
50 ஆண்டுகளுக்கு முன்பு வரை கார் என்பது ஒரு பெரிய பணக்காரரின் அடையாளம். ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. நடுத்தர குடும்பங்கள் கூட ஒரு காரை வாங்கி உபயோகப்படுத்துகிற காலகட்டம் இது. காரை எடுத்துக் கொண்டு ஷாப்பிங் செய்யச் சென்றால் பார்க்கிங் செய்ய இயலாத நிலைமை. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்குக் காரணம் கார்கள்தான் என்பதை உணர்ந்து கொண்ட டெல்லி அரசு ஒற்றைப்படை எண்ணுள்ள கார்களை ஒரு நாளிலும், இரட்டைப்படை எண்ணுள்ள கார்களை அடுத்த நாளிலும் பயன்படுத்த வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் நாளடைவில் இதுவும் பயன்தரப் போவது இல்லை. இதை முன்கூட்டியே உணர்ந்து கொண்ட சீனாவும் ஜப்பானும் இப்போதே குட்டி விமானங்களைப்போல் பறக்கும் கார்களைத் தயாரிக்க ஆரம்பித்து விட்டன. 50 ஆண்டுகள் கழித்து வானத்தை ஒருவர் அண்ணாந்து பார்க்கும் போது நூற்றுக்கணக்கான கார்கள் விண்வெளியில் பறந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடியும்.
விவேக்கும் விஷ்ணுவும் அந்த வியாழக்கிழமையின் விடியற்காலை வேளையில் பீச் ரோட்டில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள்.
சென்னையின் கிழக்குத் திசை தக்காளி நிறத்தில் தெரிய, சூர்யப் பிரசவம் எந்த விநாடியும் நிகழக் கூடிய சாத்தியத்தில் வானம் இருந்தது. கோடிக்கணக்கான பணத்தில் ‘டர்ன் ஓவர்’ செய்யும் ஐ.டி.கம்பெனிகளின் எம்.டி.க்கள் ஜாக்கிங் சூட்டில் வழுக்கைத் தலைகளை ஆட்டியபடி பிசினஸ் பேசிக் கொண்டே நடந்தார்கள். பீட்சா, பர்கர் சாப்பிட்டு தேவையில்லாத இடங்களில் சதையை வளர்த்து வைத்து இருந்த இளம் பெண்கள் மூச்சிரைக்க எதிர்பட்டு கடந்து நடந்து போனார்கள்.
விவேக் விஷ்ணுவை வியப்பாய்ப் பார்த்தான்.
விஷ்ணு!
பாஸ்.
உனக்கு என்னடா ஆச்சு?
ஏன்...?
எதிர்ல உனக்கு வேண்டப்பட்டவங்களெல்லாம் போய்ட்டு இருக்காங்க. நீ பாட்டுக்கு கண்டுக்காமே வர்றே...?
அடப் போங்க பாஸ்.. எல்லாமே மாயா.. மாயா.. சாயா.. சாயா...
அட.. இந்த ஞானம் எப்பயிருந்து?
விஷ்ணு பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு சொன்னான். "பாஸ்! நேத்து ராத்திரி கூகுளில் போய் ஒரு விஷயத்தைத் தேடிகிட்டு இருக்கும்போது அன் எண்ட் டு திஸ் எர்த் (’AN END TO THIS EARTH’) என்கிற ஒரு ஆர்ட்டிக்களை படிச்சேன்."
நீ அது மாதிரியான ‘சைட்’ பக்கமெல்லாம் போக மாட்டியே...?
இதான் பாஸ் உங்ககிட்டே எனக்குப் பிடிக்காத ஒண்ணு. கடந்த ஒரு மாச காலமாய் நான் உங்க லெவலுக்கு வர்றதுக்காக ஐம்புலன்களையும் அடக்கிட்டு கூகுள்ல போய் ரொம்ப நேரம் குளிச்சு அறிவு பூர்வமான விஷயங்களைத் தேடித் தேடி...!
சரி.. சரி.. நீ படிச்ச ஆர்ட்டிக்களோட டைட்டில் என்ன?
‘அன் எண்ட் டு திஸ் எர்த்’ (’ AN END TO THIS EARTH.’)
அந்த ஆர்ட்டிக்கிள் என்ன சொல்லுது?
நாம வாழற பூமி இதுவரைக்கும் அஞ்சு தடவை அழிஞ்சிருக்காம். இப்போ ஆறாவது தடவையாய் அழிவை நோக்கிப் போய்கிட்டு இருக்காம்.
அந்த ஆர்ட்டிக்கிளை எழுதினது யாரு?
அமெரிக்காவின் ஸ்டான் போர்டு யூனிவர்ஸிடியின் உயிரியல் ஆராய்ச்சியாளர் பால் எர்லிச்.
அவர் என்ன சொல்றார்?
நாம இப்போ வாழ்ந்துட்டிருக்கிற பூமி இதுவரைக்கும் அஞ்சு தடவை செத்து செத்து உயிர் பிழைச்சிருக்காம். ஒவ்வொரு தடவை அழிவு ஏற்படும் போதும் எறும்பிலிருந்து யானை வரைக்கும், மக்காச் சோளத்திலிருந்து மனுஷன் வரைக்கும் எல்லா உயிர்களும் அடியோடு காணாமே போயிடுமாம். அதுக்கப்புறம் பூமி சில நூறு வருஷங்கள் சின்னதாய் ரெஸ்ட் எடுத்துகிட்டு மறுபடியும் தன்னைப் புதுப்பிச்சுகிட்டு உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை எல்.கே.ஜி.யிலிருந்து ஆரம்பிக்குமாம். இதெல்லாம் நம்ப முடியுதா பாஸ்.. என்னமா கதை விடறானுங்க!
"அது கதை இல்லடா.. நிஜம்...! நம்ம பூமி ஒவ்வொரு ஐயாயிரம் வருஷங்களுக்கும் ஒருதடவை தன்னை புதுப்பிச்சுகிட்டு ஒரு புத்துணர்வோடு செயல்பட ஆரம்பிக்குமாம். இதை புவியியல் ஆராய்ச்சி நிபுணர்கள் ஆதாரங்களோடு நிரூபிச்சு காட்டியிருக்காங்க. முதல்தடவை நடந்த பேரழிவுக்கு சிலூரியன், இரண்டாவது தடவை நடந்த பேரழிவுக்கு டெவோனியன், மூன்றாவது தடவை வந்த பேரழிவுக்கு பெர்மியன், நாலாவது தடவை நடந்த பேரழிவுக்கு ஜுராசிக், ஐந்தாவது தடவை நடந்த பேரழிவுக்கு கிரேடியஸ்ன்னு பேரு. டைனோசர் இனம் முற்றிலும் அழிந்து போன யுகம்தான் ஜுராசிக். அதை அடிப்படையாய் வெச்சுத்தான் ஜுராசிக் பார்க் சினிமா படம் எடுத்தாங்க. டைனோசர் இனம் அழிந்த வேகத்தைப் போல பல நூறு மடங்கு வேகத்தோடு இன்னிக்கும் பூமியில் பல சின்னஞ்சிறு உயிரினங்கள் அழிஞ்சுட்டு வர்றதாக உயிரியல் ஆய்வாளர் பால் எர்லிச் அபாய அறிவிப்பு கொடுத்து இருக்கார்." பேசிக்கொண்டே போன விவேக் விஷ்ணுவிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வராமல் போகவே விஷ்ணுவின் தோளைத் தட்டிக் கேட்டான்.
என்னடா.. பேச்சைக் காணோம்?
அட.. போங்க பாஸ்...! எதையாவது புதுசா சொல்லி உங்களை அசர வைக்கலாம்ன்னு பார்த்தா நான் ‘அ’ன்னு ஆரம்பிக்கிறதுக்குள்ளே தமிழ்ல இருக்கிற 247 எழுத்துக்களையும் சொல்லி முடிச்சுடறீங்க. எப்படி பாஸ் உங்களால இப்படியொரு நடமாடும் என்சைக்ளோபீடியாவாய் இருக்க முடியுது!
விஷ்ணு விழிகளை விரித்து ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கும் போதே அவர்களுக்கு வெகு அருகாமையில் கார் ஒன்று வந்து சத்தமில்லாமல் நின்றது. ‘எஸ்கோடா’ வகையைச் சேர்ந்த அந்த வெளிர் பச்சை நிற காரின் கதவைத் திறந்து கொண்டு டிரைவிங் இருக்கையினின்றும் வெளிப்பட்டாள் அந்தப் பெண். மஞ்சள் நிற சேலை. அதே வண்ண ஜாக்கெட்.
வயது முப்பதிலிருந்து முப்பத்தைந்துக்குள் இருக்கலாம். அழகாக இருந்தாள். கல்லூரி நாட்களில் இன்னமும் அழகாய் இருந்திருப்பாள் போன்று விஷ்ணுவின் மனசுக்குள் ஓடியது.
அவள் விவேக்கைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தாள்.
குட் மார்னிங் மிஸ்டர் விவேக்!
குட் மார்னிங்!
ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ். உங்களோட அழகான காலை நேர வாக்கிங்கை ஸ்பாய்ல் பண்ண வேண்டியதாயிடுச்சு!
விவேக் தன் புருவங்களை மேலேற்றினான்.
நீங்க..?
அயாம் தேன்மொழி. சீஃப் ஜஸ்டிஸ் சந்திர பிரபாகிட்டே பர்சனல் அஸிஸ்டண்ட்டாய் இருக்கேன். திஸ் ஈஸ்.. மை ஐ.டி.கார்ட்...!
அந்தத் தேன்மொழி தன் கைப்பையைத் திறந்து லேமினேஷன் செய்யப்பட்ட தன்னுடைய ஐ.டி.கார்டைக் காட்டினாள்.
விவேக் அதை வாங்கிப் பார்த்துவிட்டு இட்ஸ் ஒகே! என்னோட காலைநேர வாக்கிங்கிற்கு இப்படியொரு ஸ்பீட் பிரேக்கராய் வந்ததுக்கு என்ன காரணம்?
மேடம் உங்களைப் பார்க்கணும்ன்னு சொன்னாங்க.
யூ.. மீன்.. சீஃப் ஜஸ்டீஸ் சந்திர பிரபா?
எஸ்...
என்ன விஷயமாய்...?
அதை அவங்கதான் சொல்லுவாங்க!
எப்ப வரணும்?
இப்பவே!
நாங்க ரெண்டுபேரும் இப்ப ஜாக்கிங் சூட்ல இருக்கோமே!
நோ.. ப்ராப்ளம்... இந்த எர்லி மார்னிங்லதான் உங்களை மீட் பண்ண மேடம் விரும்பறாங்க...!
விவேக் விஷ்ணுவைப் பார்க்க - அவன் தேன்மொழியை ஏறிட்டான்.
நாங்க காரை கண்ணகி சிலைக்குப் பக்கத்துல பார்க் பண்ணியிருக்கோம்!
"கார் அங்கேயே இருக்கட்டும்... என்னோட கார்ல போகலாம். ஒரு மணி நேரத்துக்குள்ளே நீங்க மேடத்துகிட்டே பேச்சை முடிச்சுகிட்டு வந்துடலாம். ப்ளீஸ் கெட்
This action might not be possible to undo. Are you sure you want to continue?