Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indian Endru Sollada
Indian Endru Sollada
Indian Endru Sollada
Ebook150 pages43 minutes

Indian Endru Sollada

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Indian Endru Sollada

Read more from Rajeshkumar

Related to Indian Endru Sollada

Related ebooks

Related categories

Reviews for Indian Endru Sollada

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indian Endru Sollada - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    இந்திய ராணுவம் உலகத்தின் ஐந்தாவது பெரிய ராணுவம். முதல் நான்கு இடங்களை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் உரிமையோடு எடுத்துக்கொள்ள பாரத ராணுவத்துக்கு ஐந்தாவது இடம். முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க பாரதத்தால் இயலாது போனாலும் மூன்றாவது இடத்தையாவது பிடிக்க முயற்சி செய்கிறது பாரதம். இந்த முயற்சியில் ஈடுபடுவதால் வல்லரசு நாடுகளுக்கு முக்கியமாக அமெரிக்காவுக்கு கோபம். அந்த கோபத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு ஆயுத சப்ளை செய்து வருகிறது. பாரத ராணுவம் இதற்கெல்லாம் பயந்துவிடுமா என்ன...?

    அமிர்தசரஸ் அழகாய் அந்த ஆகஸ்ட் மாத ஞாயிற்றுக் கிழமையில் விடிந்து கொண்டிருந்தது.

    குருத்வாரா பகுதியை ஒட்டியிருந்த ராணுவக் கேந்திரத்தின் மையப் பகுதியில் சதுரம் சதுரமாய் மேரீட் க்வார்ட்டர்ஸ் சூரியக் குழந்தையின் ஆரஞ்சு நிற வெளிச்சத்தில் தோய்ந்து போயிருக்க பறவைகள் கூச்சல், சட்டசபையையும், பாராளுமன்றத்தையும் நினைவுக்கு கொண்டு வந்தது.

    எம்.க்யூ.178 க்வார்ட்டர்ஸ் வாசலில் ஒரு பெரிய பன்னீர் செம்பு கோலத்தை சிரத்தையாய் போட்டு முடித்த வீணா சற்றே நகர்ந்து நின்று அழகு பார்த்தாள்.

    ஒரு புள்ளி தவறியிருந்தது.

    குனிந்து அதை சரியாக்கிவிட்டு வீட்டுக்குள் நுழைந்த வீணாவுக்கு லேசாய் சிவப்பு மாய்த்த பொன்னிறம். சொந்த ஊர் காவிரி பாயும் திருப்பராய்த்துறை. போன ஆறு மாதத்துக்கு முன்பு வரை தமிழ்நாட்டு காற்றை சுவாசித்துக் கொண்டிருந்தவள் இப்போது அமிர்தசரஸின் குளிர் காற்றை சுவாசிப்பதற்கு காரணம் கழுத்தில் தொங்கும் அந்த தாலி. தாலிக்கு சொந்தக்காரன் பரிதி. இருபத்தேழு வயதில் ஃப்ளைட் லெப்டினென்ட். ஆகாயத்தில் நிறைய சாகசங்கள் புரிந்தவன். தரையில் இருந்த நாட்களைக் காட்டிலும் வானத்தில் இருந்த நாட்கள் அதிகம்.

    வீணா வீட்டுக்குள் நுழைந்து - கட்டிலில் கம்பளிப் போர்வைக்குள் இருந்த பரிதியின் தலைமாட்டில் நின்றாள்.

    என்னங்க...?

    ம்…

    முழிச்சுட்டுத்தான் இருக்கீங்களா?

    "ம்...

    மணி எவ்வளவு தெரியுமா?

    தெரியும்...

    எவ்வளவு...? கேட்டுக் கொண்டே உட்கார்ந்தாள்.

    இதை... நான் சொல்லணுமா என்ன...? நீ படுக்கையிருந்து எந்திரிச்சா... மணி அஞ்சு... குளிச்சுட்டு கோலம் போடப் போனா... அஞ்சரை. கோலம் போட உனக்கு பதினைஞ்சு நிமிஷமாவது வேணும். கோலம் போட்டுட்டு நீ உள்ளே வந்தா மணி அஞ்சே முக்கால். கடந்த ஆறு மாசமா இதைத்தானே பார்த்துட்டிருக்கேன்.

    பரவாயில்லையே... மனப்பாடம் பண்ணியிருக்கீங்க... சரி... எந்திரிங்க...

    இன்னிக்கு சண்டே. ஒரு அரை மணி நேரம் ஓவர் டைம் எடுத்துக்கிறேன் தூங்கறதுக்காக.

    நோ... நோ... லேசா தொப்பை போட்டுட்டீங்க. ஒரு ஃப்ளைட் லெப்டினென்ட்டுக்கு தொப்பை இருக்கக் கூடாது. எந்திரிச்சு ஜாக்கிங் போய்ட்டு வாங்க... குவார்ட்டர்ஸ்ல இருக்கிற உங்க மத்த கொலீக்ஸெல்லாம்... அஞ்சு மணிக்கே கான்வாஸ் ஷூவை போட்டுகிட்டு ஓட ஆரம்பிச்சுட்டாங்க...

    கம்பளிக்குள் சிரித்தான் பரிதி.

    அவனவன் பெண்டாட்டி தொந்தரவிலிருந்து தப்பிக்கிறதுக்காக விடிஞ்சும் விடியாத நேரத்துல எந்திரிச்சு ஓடுவான். என் பெண்டாட்டி அப்படியில்லையே...?

    காலங்கார்த்தாலே... ஐஸ்... எனக்கு ஒத்துக்காது. எந்திரிக்கிறீங்களா...?

    சரி... இப்போ கம்பளிப் போர்வையை எடுக்கப் போறேன். உன்னோட அழகான மஞ்சள் பூசி குளிச்ச முகம் எனக்கு நேரா இருக்கணும்...

    இப்ப... நேராத்தான் இருக்கு... போர்வையை எடுத்தான் பரிதி. மகிழ்ச்சி கண்களில் விரிந்தது.

    ஆஹா... சந்த்ரோதயம்...

    வீணா எழுந்து கொண்டாள்.

    இதோ... பாருங்க. நான் திவ்யமா குளிச்சிட்டு வந்திருக்கேன், தொட்டு இழுக்கிற வேலையெல்லாம் வேண்டாம்...

    திரண்ட தோள்களோடு ஆஜானுபாகுவாய் தோற்றம் காட்டிய பரிதி தன் கெட்டியான மீசைக்குக் கீழே சிரித்தான்.

    தொட்டா என்னவாம்...?

    இன்னொருவாட்டி நான் குளிக்க வேண்டியதாயிருக்கும்...

    பேஷாப் போச்சு... ரெண்டு பேரும் சேர்ந்தே குளிச்சுடலாம்...

    சொல்லிக் கொண்டே பரிதி வீணாவின் செழிப்பான தோள் பட்டையைப் பற்றிய விநாடி -

    வாசலில் அந்த சத்தம் கேட்டது.

    ஜீப் ஒன்று டயர்களைத் தேய்த்து நின்ற சத்தம்.

    வீணா... யார்ன்னு போய்ப் பார்... வீணா ஓடிப்போய் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள்.

    விமானப்படைத் துறைக்கான ஜீப் இள நீல நிறத்தில் நின்றிருந்தது...

    என்னங்க... உங்க டிபார்ட்மெண்ட் ஜீப். உங்களை யாரோ பார்க்க வந்துட்டிருக்காங்க... கையில ஏதோ கவர்.

    பரிதி அரக்க பரக்க எழுந்து கண்ணாடி பார்த்து முகம் துடைத்து பேண்ட் சர்ட்டுக்கு மாறினான். தலைக் கேசத்தை சீப்பால் ஒரு அவசர வாரலுக்கு உட்படுத்தி முடித்த போது -

    அந்த பைலட் ஆபீஸர் உள்ளே வந்தார். சல்யூட் வைத்து தளர்ந்தார்.

    பரிதி மிடுக்காய் நிமிர்ந்து எஸ் என்றான்.

    ஸார்... திஸ் ஈஸ் ஃபார். யூ... பைலட் ஆபீஸர் கையில் வைத்திருந்த அந்தக் கடிதக் கவரை நீட்ட பரிதி வாங்கிப் பார்த்தான்.

    விங் கமாண்டரிடமிருந்து அந்தக் கடிதம் வந்திருந்தது. சுருக்கமாய் ஆங்கிலத்தில் ஒரே ஒரு வரி.

    அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் என்னை வந்து சந்திக்கவும்.

    டபிள்யூ.சி. என்ற இரண்டு ஆங்கில எழுத்துக்களுக்கு கீழே விங் கமாண்டரின் கையெழுத்து கிறுக்கலாய் தெரிந்தது.

    பரிதி மனதுக்குள் குழம்பிக் கொண்டே கடிதத்தை மடிக்க பைலட் ஆபீஸர் கேட்டார்.

    நான் போகலாமா...?

    அவன் தலையாட்ட அவர் நகர்ந்தார். அடுத்த சில விநாடிகளில் ஜீப் புறப்பட்டுப் போகும் சத்தம் கேட்டது. வீணா பரிதிக்கு பக்கத்தில் வந்தாள்.

    என்ன லெட்டர்ங்க அது...?

    "அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளே விங் கமாண்டர் என்னை வரச் சொல்லியிருக்கார்...

    எதுக்கு...?

    தெரியலை...

    "இவ்வளவு

    Enjoying the preview?
    Page 1 of 1