Are you sure?
This action might not be possible to undo. Are you sure you want to continue?
Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
12
இந்தக் கதையின் நாயகன் சாரதி என்ற பார்த்தசாரதி!
இவன் குணாதிசயத்தைப் புரிந்து கொண்டு விட்டால் - அதுதான் இந்தக் கதை.
இப்போது சாரதிக்கு இருபத்திஏழு வயது! சுயநலத்தின் உச்சகட்டம் யாரென்றால் அது இந்த சாரதிதான்!
சாரதியின் அப்பா அதற்குமேல! அவர் தன்னைப் பற்றி மட்டுமே யோசிக்கும் மனிதர்!
விற்பனை பிரதிநிதி உத்யோகம்!
ஒரு சுமாரான தனியார் நிறுவனத்தில் உத்யோகம். ரொம்பவும் சுமாரான சம்பளம்! சாரதி மூத்த பையன்! அவனைவிட மூன்று வயது குறைந்த தங்கை அஞ்சலி!
சாரதியின் அம்மா குடும்பத் தலைவி!
அப்பா மாதத்தில் இருபது நாட்களும் டூரில் இருப்பார். சம்பளத்தை மட்டும் மனைவி மல்லிகாவிடம் தந்து விடுவார்!
அவருக்கு வரும் பேட்டா, இன்சென்டிவ் இந்த மாதிரி பணத்தை அவர் தன் செலவுக்கு வைத்துக் கொள்வார்.
மது, மாது என அவர் சக்திக்கு தக்கபடி எல்லா பழக்கங்களும் உண்டு!
சம்பளப் பணத்தை வைத்து குடும்பத்தை நடத்த வேண்டிய கட்டாயம் மல்லிகாவுக்கு! பெரும்பகுதி பிறந்த வீட்டு ஆதரவுதான். அப்பா, தம்பிகள் என அதிகமாக அவளைத் தாங்கிப் பிடித்ததால் குடும்பம் ஓடியது!
மகா சிக்கனம். அப்படி நடந்தால்தான் குடும்பம் ஓடும்!
காலை ஒரு சோற்றைப் பொங்கி, ஒரு குழம்பும் வைத்தால் இரவு வரை அது ஓடும்!
காய்கறிகள், பால் எல்லாம் ரொம்பவே குறைச்சல்!
வாடகை வீடு!
அதிகம் துணிமணிகள் வாங்க மாட்டாள்.
வருடத்துக்கு ஒரு முறை குழந்தைகளுக்குப் பிறந்த வீட்டிலிருந்து பண்டிகை நாட்களுக்கு துணிமணிகள் வரும்!
எல்லாக் குழந்தைகளையும் போல எல்லா வசதிகளும் சாரதிக்கும் அஞ்சலிக்கும் கிடைக்கவில்லை!
அதனால் ஏக்கப் பெருமூச்சு அதிகம்!
ஓட்டல் சாப்பாடு - பலகாரங்கள் - விதம்விதமான உடைகளை மற்ற பிள்ளைகள் போடும் போது பெருமூச்சு விட்டுத்தான் பழக்கம். எதுவும் கிடைக்காது!
இதனால் உண்டான ஆதங்கத்தில் அஞ்சலி கோபக்காரியாக மாறிவிட்டாள்!
மற்றவர்களைப் பார்த்து பொறாமை பிடுங்கித்தின்னும்!
அது ஆத்திரமாக வெடிக்கும். வீட்டில் எந்த நேரமும் ஏக்கப் பெருமூச்சும் அழுகையும் தான்!
என்னை ஏண்டீ படுத்தற? உங்கப்பனுக்கு பொறுப்பு இல்லை! முன்னேறி மேலே வரணும் - பொண்டாட்டி, புள்ளைகளை நல்லா வாழ வைக்கணும்னு அக்கறை இல்லை! கொண்டு வந்து தர்றதை வச்சுத்தானே நான் குடித்தனம் நடத்த முடியும்? எனக்கு மட்டும் சொந்த வீடு, நகைகள், சேலைனு வாங்கிக்க ஆசையில்லையா? எதுக்கும் நான் குடுத்து வைக்கலை! பிறந்த வீட்ல ஏதாவது குடுத்தா உண்டு! இதுக்கு மேல என்னைப் போட்டுப் படுத்தினா நான் ஓடிப்போயிடுவேன்!
பக்கத்து வீட்டு ஆன்ட்டி பேங்க்ல உத்யோகம். அங்கிள் ரயில்வேல வேலை! நீயும் நிறையப் படிச்சிருந்தா, இப்ப வேலைக்குப் போகலாமில்லையா?
என்னை யாரு படிக்க வச்சது? எஸ்.எல்.சி தாண்டினதே பெரிசு!
உனக்கு மூளையில்லை!
இருக்கறது போதும்டி! அவரவருக்குனு ஒரு வாழ்க்கை இருக்கும்! அதைத் தாண்டி குதிக்கணும்னா நடக்காது!
குழந்தைகளின் புலம்பல் மொத்தமும் அம்மாவிடம்தான்.
அப்பாவிடம் எதுவும் எடுபடாது! அவருக்கு பற்றுதலும் அறவே இல்லை! டூர் இல்லாத நாட்களில் பிள்ளைகளுடன், மனைவியுடன் சந்தோஷமாகக் கழிப்போம் என்றிருக்க மாட்டார்!
அந்த நாட்களும் ஊர் சுற்றுவது... சரக்கடிப்பது என்று தன் சுகம் மட்டுமே!
மல்லிகாவுக்கு அலுத்துப் போய் விட்டது!
சதாசிவத்தின் தம்பி நன்றாகப் படித்து அடிக்கடி வெளிநாடு போய் சம்பாதித்து வரும் மனிதன்!
அண்ணன் குடும்பத்தின் மேல் பற்று கொண்டவர்.
நிறைய செய்வார்.
சித்தப்பா என்றால் சாரதி, அஞ்சலி இருவருக்கும் பயம், பக்தி, நிறைய எதிர்பார்ப்பு எல்லாம் உண்டு!
சித்தியால் எந்தத் தடையும் இல்லை!
ஒரே ஒரு பெண் மட்டும் - சுஜாதா!
சாரதி, அஞ்சலி இருவரையும் நல்ல பள்ளிக் கூடத்தில் சேர்த்து படிப்பு செலவுகளை முழுமையாக ஏற்றுக் கொண்டவர் சித்தப்பா வெங்கட்தான்!
வருடத்துக்கு இரு முறை துணிமணிகள், தீபாவளி நேரத்தில் பட்டாசு, பலகாரங்கள் என அண்ணன் குடும்பத்துக்கு தன்னால் முடிந்ததைச் செய்யும் வெங்கட்!
சாரதி +2 முடித்ததும் இன்ஜினியரிங் படிப்பில் சேர்த்து விட்டதும் வெங்கட்தான்!
சாரதிக்கு படிப்பில் ஆர்வம் இருந்ததால் பள்ளிக்கூடத்தில் நன்றாகப் படித்து எண்பது சதவீதம் கடந்து விட்டதால், பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது!
வெங்கட்தான் பணம் கட்டினார்!
சதாசிவம் அதற்கொரு நன்றிகூடச் சொல்லவில்லை! மல்லிகா அதற்குமேல்! வெங்கட் இவர்களுக்கு செய்யக் கடன்பட்டவர் என்பது போல இருந்து விட்டார்கள்!
சித்தி சாரதாவுக்கு இதுதான் எரிச்சல்!
முடியாமல் தான் கொட்டி விட்டாள்!
என்னங்க! உங்க அண்ணன் குடும்பத்துக்கு நீங்க செய்யறதை நான் எப்பவுமே தடுத்ததில்லை! அதை ஏத்துக்கிட்டு சந்தோஷமா ஒரு வார்த்தை கூட வராதா? நீங்க செய்யக் கடமைப்பட்டவர்ங்கற மாதிரி ஒரு மெதப்பு! நல்லாருக்குதா?
விடு சாரதா! சதாசிவம் எப்பவுமே அப்படித்தான்! தானும் செய்யமாட்டான். மத்தவங்க செஞ்சா நன்றி சொல்லவும் மாட்டான். இந்த அளவுக்கு ஒரு குடும்பத்துக்கு சோறு போடறதே உசத்தி!
என்ன பேசறீங்க! அவர் பொண்டாட்டி, புள்ளைங்களுக்கு அவர் செய்யறது தியாகமா?
அப்படி அவன் சொல்லலை! அது அவன் காரெக்டர்!
சரி! உங்க அண்ணி மல்லிகா அதுக்கு மேல இருக்காங்க! வீட்டுக்குப் போனா, காபி குடிக்கறியானு கேக்க மாட்டாங்க! நம்ம வீட்டுக்கு வந்தா, நாலு வாழைப்பழம் கூட வாங்கிட்டு வரமாட்டாங்க! என்னங்க பண்பாடு இதெல்லாம்!
விடு! அவங்களுக்கும் ஆசைப்பட்ட எதுவும் கிடைக்கலை! நிறைய மனக்குறை இருக்கு! இவன் சரியில்லை! அதை ஈடுகட்டத்தான் நான் செய்யறேன்!
நமக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு!
நான் கைநிறைய சம்பாதிக்கறேன். நம்ம குழந்தைக்கு ஒரு குறையும் வராது! சரியா?
இதுதான் நிலை!
சாரதி மூன்றாவது
This action might not be possible to undo. Are you sure you want to continue?