Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kiran, Rao, Alex
Kiran, Rao, Alex
Kiran, Rao, Alex
Ebook86 pages47 minutes

Kiran, Rao, Alex

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903938
Kiran, Rao, Alex

Read more from Pattukottai Prabakar

Related authors

Related to Kiran, Rao, Alex

Related ebooks

Related categories

Reviews for Kiran, Rao, Alex

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kiran, Rao, Alex - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    கிரண், ராவ், அலெக்ஸ்

    Kiran, Rao, Alex

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    நிஷா அகர்வால் இப்போதெல்லாம் ரொம்பக் கோபமாக இருக்கிறாள். குடலில் அமில உற்பத்தி அதிகமாக இருக்கிறது. பென்சில் உருண்டு விழுந்து முனை முறிந்தால் கோபம் வருகிறது. பாத்ரூமில் சோப்பு வழுக்கினால் கோபம் வருகிறது. கரண்ட் கட் ஆனால் கோபம் வருகிறது. கொக்கி மாட்டாத ஜன்னல் கதவுசத்தம் செய்தால் கோபம் வருகிறது. டாமி வாலசைத்தபடி மடியில் பாய்ந்தால் கோபம் வருகிறது. டிரைவரிடமிருந்து சிகரெட் வாடை வந்தால் கோபம் வருகிறது. வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கும் மாமா கொஞ்ச நஞ்ச முடிக்கு டை அடித்துக் கொண்டு தங்கப்பல் தெரிய சிரித்தால் கோபம் வருகிறது. மாடிப்படியின் கார்ப்பெட்டில் ஒரு நூல் பிசிறியிருந்தால் கோபம் வருகிறது. கோபம் ஏன்? முதலில் நிஷா!

    நிஷா அவர்வாலை உங்களுக்குத் தெரியும்.

    போன வாரம்கூட சூப்பர்ஹிட் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தவள். இந்தித் திரைப்பட உலகின் நம்பர் ஒன் நட்சத்திரம் சென்ற வருடம் வரை.

    76 படங்கள் பான்கேக் போட்டுப் போட்டு முகத்திற்கு மட்டும் உடம்பை விட்டு ஒரு புதுநிறம் நிரந்தரமாகத் தங்கிப்போன நிஷா அகர்வாலுக்கு முப்பத்தி நான்கு வயது என்பது அவளது இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்டுக்கு மட்டும் தான் தெரியும்.

    பம்பாயில் காலரை மீறிய பிடரி மயிரும், பாடப் புத்தகத்துக்குள் நிஷா அகர்வாலின் படமுமாக அலைகிற கல்லூரி மாணவர்களிடம் போய்ச் சொன்னால், செருப்படி விழும்.

    நிஷாவுக்கா? இன்றைக்கெல்லாம் இருந்தால் இருபது இல்லை இருபதரை இருக்கலாம். ரொம்ப அதிகமாகச் சொல்வதானால் இருப்பதே முக்காலிருக்கலாம்… என்பதுதான் அவளைக் கனவில் காணுவதற்காகவே உறங்குகிற லட்சோப லட்ச ரசிகர்களின் பதிலாக இருக்கும்.

    நிஷா அகர்வால் உடம்பை அப்படி வைத்திருக்கிறாள். யோகா செய்கிறாள். வாக் போகிறாள். எக்ஸர்சைஸ் செய்கிறாள். ஸ்விம் செய்கிறாள். டயட் மீஷியனின் ஆலோசனைப்படி சாப்பிடுகிறாள். பியூட்டீஷியனின் ஆலேசனைப்படி ஒவ்வொரு அங்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து பராமரிக்கிறாள். சிறப்பு மஸாஜ்கள். உடம்பில் தேவையற்ற நீரை ஸ்டீம் பாத் செய்து வெளியேற்றுகிறாள். வீட்டிலேயே உடற்பயிற்சிக்கென்று தனியறை ஒதுக்கி சகல உபரணங்களும் வாங்கிப் போட்டு....

    அதனால்தான் அவள் உடம்பும் முகமும் இருபது வயதைக் கடந்து வரச் சிணுங்குகிறது.

    பதினாறு வயதில் சினிமா உலகில் நுழைந்து.... நம்பர் ஒன் அந்தஸ்தைப் பிடிக்க பத்து வருடங்களாயிற்று. எத்தனை உழைப்பு! எத்தனை நடிப்பு! திரைக்கு முன்னாலும் - திரைக்குப் பின்னாலும்.

    விஷ்வஜித் அவளைத் துணிச்சலாக முதல் படத்திலேயே கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். அப்போது படு ஒல்லியாக இருந்தாள். இளமை ஒன்றைத் தவிர அப்போது ப்ளஸ் பாயிண்ட் என்று சொல்லிக்கொள்ள வேறெதுவும் இல்லை. நிறம்கூட மாநிறம்தான்.

    ஆனால் அந்த முதல் படம் அடித்த பம்பர் வெற்றி அவளை அழகான வளாக்கிவிட்டது. மேக்கப் என்னும் அபாரக் கலையை எப்படி பயன்படுத்துவது என்கிற வித்தை அவளுக்குப் புரிந்து போனது. கண்ணாடியில் பார்க்க அவளுக்கு அவளே அழகாகத் தெரிந்தாள்.

    முதல் ஐந்து வருடங்களுக்கு கேரக்டர் ரோல்கள் மட்டும். எத்தனை அவார்டுகள்! ஷீல்டுகள்! பத்திரிகை பேட்டிகள். வரிசையாய் மூன்று படங்கள் கவிழ்ந்ததும்.... உடைகள் அவிழத்துவங்கின.

    ‘நிஷாவால் இப்படிக் கவர்ச்சி காட்டி நடிக்க முடியுமா? இளைஞர்களின் தூக்கம் கெடப் போவது நிச்சயம்’ என்று முதல் விமர்சனம் வந்தது பத்திரிகையில்.

    விமர்சனம் உண்மையானது. நிஷா அகர்வால்மேல் இளைஞர்கள் பைத்தியம் பிடித்து அலைந்தார்கள்.

    ஒரு பம்பாய் சினிமா பத்திரிகை ஒரு கேள்வி கேட்டிருந்தது. இளைஞர்களே இறைவன் உங்கள் முன்னால் தோன்றி நீங்கள் விரும்பும் பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிகிற வரம் தருவதாக இருந்தால் உங்கள் மனைவியாக யார் வர வேண்டும்?

    ஒரு லட்சத்து நாற்பத்தி இரண்டாயிரத்து முண்ணூற்றி ஐம்பத்தாறு பேர் கார்டுகளில் ‘நிஷா அகர்வால்’ என்று எழுதி அனுப்பியிருந்தார்கள்.

    இதில் என்ன ஆச்சரியம் என்றால்

    Enjoying the preview?
    Page 1 of 1