Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neethane En Vasantham...!
Neethane En Vasantham...!
Neethane En Vasantham...!
Ebook193 pages1 hour

Neethane En Vasantham...!

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

அன்பான வாசகர்களுக்கு... வணக்கங்கள்!

“நீதானே என் வசந்தம்!” எந்த விருட்சம் தழைக்கவும், ஒரு சிறிய விதைதான் ஆணிவேராய்!

அதுபோல் ஒவ்வொரு திருமணத்திற்கும் ஆதாரமான விதையாக இருப்பது, நேசமும், நம்பிக்கையும்தான்! அது வீரியமாக இல்லையென்றால், வாழ்க்கையே வாடிப் போகின்றது.

ஒரு பெண் மலர. அவள் கணவனின் அன்பும், புரிந்து கொள்ளலுமே, உயிர்ப்பை தருகின்ற சூரியக் கதிர்களாய்...! ஆனால் அந்தக் கதிர்களே, அந்த மலரை வார்த்தைகளால் சுட்டெரித்து விட்டால்..!

பலருடைய வாழ்க்கையில், சில தவறான கணிப்புகள் அவர்களுடைய வாழ்க்கைப் பாதையையே மாற்றி விடும் வல்லமை படைத்தவையாக அமைந்து விடுகின்றன.

இந்தக் கதையின் நாயகனும் அப்படித்தான்!

தான் செய்யாத தவறுக்காக பாதிக்கப்பட்டு, விடை தெரியா எதிர்காலம் கண்முன் நிற்க உடைந்து போனாலும், பிறகு தன் பிரச்சனைகளைத் துணிவுடன் எதிர்நோக்கி, வாழ்க்கைப் பாதையை செப்பனிட்டு, சீராக்கிக் கொண்ட நாயகியின் வாழ்விலும் வசந்தம் வந்ததா என்பதை, இந்த நாவலில் உங்களின் பார்வைக்கு அளித்திருக்கிறேன்.

மகரந்தங்களைத் தன் மடியில் நறுமணத்துடன் சுமக்கின்ற மலர்களைப் போல், வாசகர்களாகிய உங்களின் அன்பையும், ஆதரவையும், விமர்சனங்களையும் நட்புடன் சுமக்கிறது என் மனது!

சிநேக வணக்கங்களுடன்,

உமா பாலகுமார்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580118504348
Neethane En Vasantham...!

Read more from Uma Balakumar

Related to Neethane En Vasantham...!

Related ebooks

Reviews for Neethane En Vasantham...!

Rating: 4 out of 5 stars
4/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neethane En Vasantham...! - Uma Balakumar

    http://www.pustaka.co.in

    நீதானே என் வசந்தம்...!

    Neethane En Vasantham...!

    Author:

    உமா பாலகுமார்

    Uma Balakumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/uma-balakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    முன்னுரை

    அன்பான வாசகர்களுக்கு... வணக்கங்கள்!

    நீதானே என் வசந்தம்! எந்த விருட்சம் தழைக்கவும், ஒரு சிறிய விதைதான் ஆணிவேராய்!

    அதுபோல் ஒவ்வொரு திருமணத்திற்கும் ஆதாரமான விதையாக இருப்பது, நேசமும், நம்பிக்கையும்தான்! அது வீரியமாக இல்லையென்றால், வாழ்க்கையே வாடிப் போகின்றது.

    ஒரு பெண் மலர. அவள் கணவனின் அன்பும், புரிந்து கொள்ளலுமே, உயிர்ப்பை தருகின்ற சூரியக் கதிர்களாய்...! ஆனால் அந்தக் கதிர்களே, அந்த மலரை வார்த்தைகளால் சுட்டெரித்து விட்டால்..!

    பலருடைய வாழ்க்கையில், சில தவறான கணிப்புகள் அவர்களுடைய வாழ்க்கைப் பாதையையே மாற்றி விடும் வல்லமை படைத்தவையாக அமைந்து விடுகின்றன.

    இந்தக் கதையின் நாயகனும் அப்படித்தான்!

    தான் செய்யாத தவறுக்காக பாதிக்கப்பட்டு, விடை தெரியா எதிர்காலம் கண்முன் நிற்க உடைந்து போனாலும், பிறகு தன் பிரச்சனைகளைத் துணிவுடன் எதிர்நோக்கி, வாழ்க்கைப் பாதையை செப்பனிட்டு, சீராக்கிக் கொண்ட நாயகியின் வாழ்விலும் வசந்தம் வந்ததா என்பதை, இந்த நாவலில் உங்களின் பார்வைக்கு அளித்திருக்கிறேன்.

    மகரந்தங்களைத் தன் மடியில் நறுமணத்துடன் சுமக்கின்ற மலர்களைப் போல், வாசகர்களாகிய உங்களின் அன்பையும், ஆதரவையும், விமர்சனங்களையும் நட்புடன் சுமக்கிறது என் மனது!

    சிநேக வணக்கங்களுடன்,

    உமா பாலகுமார்

    1

    அந்தி மாலைப் பொழுது தன் முகம் மறைத்த முகில்களை விலக்கி, சோம்பலாக வெளிவந்து கொண்டிருந்த சூரியன், இரவுப் பெண்ணின் வருகையை எண்ணி, சிவக்க ஆரம்பித்திருந்தான்.

    தன் கிளைகளிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்த மலர்களை அனுப்பி, பூமியின் நலம் விசாரித்துக் கொண்டிருந்தன மரங்கள்!

    கம்பீரமாகத் தெரிந்த அந்தப் பள்ளியின், ஒன்பதாவது வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தாள் சபர்மதி!

    இதழ்களில் ஜனித்திருக்கும் நிரந்தரப் புன்னகையுடன், கனிவுடன் மாணவர்களை வழி நடத்துபவளை, நட்புடன் பழகுபவளை, அந்தப் பள்ளியில் அனைவருக்குமே மிகவும் பிடிக்கும்.

    கொடியிடையைத் தீண்டும் கூந்தலும், தங்க நிறமும், எடுப்பான நாசியும், தன் அழகைப் பற்றி சிறிதும் கர்வமில்லாத எளிமையும், ஒரு வித நிமிர்வும், உடன் வேலை செய்பவர்களுக்கே, அவளிடம் அதிகமான ஈர்ப்பையும், நட்புணர்வையும் ஏற்படுத்தியிருந்தன.

    வகுப்பை முடிக்கப் போகும் நேரத்தில், எப்போதும் போல ஒரு திருக்குறளைக் கூறி, அதற்கான பொருளை அவள் விளக்கி முடிக்கின்ற நேரத்தில், மணி ஒலிக்க ஆரம்பித்தது.

    சிறு புன்னகையுடன் மாணவர்களிடம் அவள் விடைபெற்ற போதுதான். அவளுடைய தோழியும், சக ஆசிரியையுமான பிருந்தா. வகுப்பறையின் வாசலில் நின்றிருப்பதை அவள் உணர்ந்தாள்.

    வெளியே வந்தபோது சமதி! நம்ம ஸ்கூல் மேனேஜ்மெண்ட் மாறி இருக்கில்ல.. இன்னிக்கு புது கரஸ்பாண்டன்ட் வந்திருக்கிறாராம்... நம்மையெல்லாம் அவருக்கு அறிமுகப்படுத்தறதுக்காக ப்ரின்சிபால் வரச் சொன்னாங்க! என்றாள் பிருந்தா.

    ஓ.. ரொம்ப லேட்டாகுமா? சிநேகாவை டாக்டர்கிட்டே அழைச்சிட்டுப் போகணும் யோசனையுடன் கூறினாள் சபர்மதி.

    ஏன்.. என்னாச்சு சமதி?

    காலைலே லேசா ஃபீவர் இருந்தது. அம்மா, அப்பாவால் அவளைக் கண்ட்ரோல் பண்ண முடியாது! டாக்டர்கிட்டே மட்டும் நான்தான் அழைச்சிட்டுப் போவேன்.

    சரி! நீ அப்பக் கிளம்பு! நான் ப்ரின்சி கிட்ட ஏதாவது காரணம் சொல்லி சமாளிச்சுக்கறேன் ஆதரவாகக் கூறினாள் பிருந்தா.

    இல்லை! நான் மட்டும் இல்லைன்னா, அவங்களுக்கு கோபம் வந்திடப் போகுது.. இரு.. நானும் வரேன்!

    இருவரும் பேசியபடி நடந்தபோது மண் தரையில் சரக்கொன்றை மலர்கள் மஞ்சள் பாய் விரித்திருந்தன.

    அதை ரசித்தபடி ப்ரின்சிபாலின் அறையை அடைந்த போது, அங்கு அனைவரும் வந்துவிட்டிருந்தனர்.

    சிநேகாவைப் பற்றி யோசித்தபடியே நின்றிருந்தாள். அறையில் நடுநாயகமாக நின்றிருந்த அந்த உயரமான மனிதனைக் கவனிக்கவில்லை.

    ஆனால், அந்த அறைக்குள் சபர்மதி நுழைந்த மறுநொடியே அவள் மீது படிந்த அவனுடைய விழிகளில் கடினத்தன்மையும், சிலீரென்று ஒருவித சிகப்பும் பரவின.

    முகமும் உடலும் நாணேற்றிய வில்லாய் இறுகிவிட அவளையே ஊடுருவியவனை, ப்ரின்சிபால் விஜயா அழைத்தார்.

    மிஸ்டர் உதய்சரண்! இவங்க எல்லாரும் நம்ம ஸ்டாஃப். ஒவ்வொருத்தரா உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம்னுதான் அவங்களை இங்கே வரச்சொன்னேன் என்றபடி, வரிசையாக அறிமுகப்படுத்த ஆரம்பித்தார்.

    உதய்சரண் என்ற பெயரைக் கேட்டதும் நாடி நரம்பெங்கும் பயத்தாளமிட நிமிர்ந்த சபர்மதியின் விழிகள், அவனுடைய முகத்தை ஸ்பரிசித்தபடியே உறைந்து போயின.

    எவனைச் சந்திக்கக் கூடாதென்று வைராக்யத்துடன் முடிவெடுத்து வளர்ந்த ஊரை விட்டே இடம் பெயர்ந்தாளோ, இன்று அவனையே நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் நேரிட, அந்த நிமிடம் காலடியின் கீழ் பூமி இரண்டாகப் பிளப்பது போல் ஒரு உணர்வு!

    அவனுடைய அழுத்தமான காலடியோசை அருகே நெருங்க நெருங்க... மனதிற்குள் கோபக் குமிழ்கள் உற்பத்தியாக ஆரம்பித்தன.

    இவங்கதான் மிஸஸ் சபர்மதி! நம்ம ஸ்கூல்லே வெரி பாபுலர் லேடி! மாணவர்களுக்கும், சக ஆசிரியர்களுக்கும்... ஏன் நிர்வாகத்துக்குமே ரொம்பப் பிடிச்ச ஒரு ஆசிரியை..!

    ப்ரின்சிபால் பெருமையுடன் அறிமுகப்படுத்தினார்.

    அவள் பார்வை மெதுவாக உயர, எதிரில் நின்றிருந்தவனுடைய முகம் கருங்கல்லின் கடினத் தன்மையுடன் இறுகித் தெரிந்தது.

    ஏளனத்துடன் லேசாகச் சுழித்த உதடுகளும், மேலெழும்பிய ஒற்றைப் புருவமும் வேறு ஞாபகத்தை ஏற்படுத்த. மனதெங்கும் பதட்டம் விரவிப் பரவி விட சட்டென்று தொய்ந்து போய் கண்கள் இருட்டி சரிய ஆரம்பித்தாள் அவள்.

    உடனே அவளைத் தாங்கிப் பிடித்தவன். யாராவது உடனே தண்ணீர் எடுத்துட்டு வாங்க அழுத்தமான குரலில் ஏவினான்.

    அடுத்த நிமிடமே, பிருந்தா தண்ணீருடன் வர, அவளைத் தரையிலேயே படுக்க வைத்து, முகத்தில் சிறிது நீரைத் தெளித்தான் உதய்சரண்.

    பிறகு ப்ரின்சிபாலிடம் திரும்பியவன், இவங்களுக்கு இப்படித்தான் அடிக்கடி மயக்கம் வருமா? யோசனையுடன் வினவினான்.

    உடனே, இல்லை சார்... இது தான் முதல் தடவை... கவலையுடன் கூறினாள் பிருந்தா. அதுதான் சாக்கென்று அவள் கையைப் பிடித்து எழுப்ப ஆரம்பித்தான். உடன் வேலை செய்கின்ற சக ஆசிரியர், ப்ரகாஷ்.

    அந்த நிமிடம் பதைபதைப்புடனும் தர்ம சங்கடத்துடனும் எழுந்து அமர்ந்த சமதி. சாரி மேடம்.. தலைகுனிந்தபடி கூறினாள்.

    பரவாயில்லை சபர்மதி! ஏன்.. உனக்கு உடம்பு ஏதும் சரியில்லையா? பேசாம ‘சிக்லீவ்’ போட்டுட்டு மத்தியானம் வீட்டுக்குப் போயிருக்கலாமே..?

    வாஞ்சையுடன் வினவியவரிடம், அதெல்லாம் இல்லை மேடம்! திடீர்னு கண்ணை இருட்டிட்டு வந்திடுச்சு... சாரி! எழுந்தவள். குற்ற உணர்வுடன் உதய் சரணிடம் திரும்பினாள்.

    இரு கைகளையும் தாமரை மொட்டாய் குவித்து வணக்கம் கூறிவிட்டு, என்னால் ஏற்பட்ட அசௌகரியத்துக்காக என்னை மன்னிச்சிடுங்க சார் என்றபோது, அவள் குரல் வெகுவாகக் கம்மியிருந்தது.

    இட்ஸ் ஓகே! அசுவாரசியமாகக் கூறிவிட்டு அடுத்த ஆசிரியரிடம் சென்றவனின் மனதிற்குள், எரிதழலாய் பழைய ஞாபகங்கள்!

    ஆனாலும், தன்னுடைய குழந்தையை அவள் என்ன செய்திருப்பாள் என்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும் எழ, உடனே சில நினைவுகள் அவனை ஒரு முடிவிற்கு வரச் செய்தன.

    நிச்சயமாக அந்த சிசுவை வயிற்றிலிருக்கும்போதே அவள் அழித்திருப்பாளென்பதை, அவர்கள் பிரிந்த அன்று அவள் கூறிய வார்த்தைகளும், கட்டுக்குலையாத அவளின் தேகமும் பறைசாற்றின.

    சட்டென்று மனதில் ஒரு வலி எழ, ப்ரின்சிபாலைத் தொடர்ந்து அவர் அறிமுகப்படுத்தியவர்களை கவனிக்க ஆரம்பித்தான் சரண்.

    நெருஞ்சி முள்ளாய் அவனுடைய நினைவுகள் மனதைக் கீறி இதயப் பரப்பை வேதனையால் நனைக்க தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள சமதியும் வெகுவாய் சிரமப்பட்டாள்.

    பிறகு, ஒரு வழியாக அறிமுகம் முடிந்து அனைவரும் கிளம்பியபோது, ஒரு நிமிஷம் மிஸஸ் சபர்மதி... மிஸஸ் தானே...? குத்தலாகக் கேட்டான் அவன்.

    வேதனையுடன் அவள் பின்தங்கியபோது, வேகமாக அருகில் வந்தவன். "ரொம்ப நல்லா ட்ராமா போடறே! மயக்கம் வந்து விழற மாதிரி நடிச்சா, நான் உன்னைத் தாங்கிப் பிடிப்பேன்... உன் மேல் பரிதாபப்படுவேன்... உன் அருகாமையிலே என்னை இழுத்துடுவேன்னு எதிர்பார்த்தா, நீதான் பாவம்...

    "இப்பதான் உன் மேல எனக்கிருந்த வெறுப்பு இன்னும் அதிகமாகுது... தெரிஞ்சிக்க! ம்.. எப்பவுமே நீ ஒண்ணு நினைச்சா.. வேற மாதிரி நடக்குது இல்லை..

    மூணு வருஷம் ஆச்சா! ஆனா, மனுஷனை விஷம் மாதிரி ஆட்படுத்தற அந்த அழகும், கவர்ச்சியும் கொஞ்சம் கூடக் குறையலை... பாக்கப் போனா இன்னும் அதிகமாயிருக்குன்னுதான் சொல்லணும்... சே.. என்றபடி விலகிச் சென்றான்.

    என் மீது இப்படி வெறுப்புச் சேற்றை வாரி இறைத்து கோப வர்ணம் தீட்ட, நான் என்ன தவறு செய்தேன் என்று அவனிடம் கேட்க வேண்டும் போல்...!

    மனமும், உடலும் பலவீனமாகி விட, மெதுவாக நடந்து வெளியே வந்தபோது, பிருந்தா அவளுக்காகக் காத்திருந்தாள்.

    திடீர்னு என்னாச்சு சமதி? நான் ரொம்ப பயந்துட்டேன்.. வா.. உடனே வீட்டில் கொண்டு போய் விட்டுட்டுத் தான் நான் எங்க வீட்டுக்கு போகப் போறேன். உரிமையுடன் அவருடன் வந்தாள் அவள்.

    ஆட்டோவில் கிளம்பி வீட்டிற்குச் சென்று சமதியை அவள் தாய் மங்களத்திடம் ஒப்படைத்தாள். அவரிடம் பேசினாள்.

    அம்மா! இன்னிக்கு இவ சரியா சாப்பிடலையா என்னன்னு தெரியலை.. ஸ்கூல்லே மயக்கம் போட்டு விழுந்துட்டா! சிநேகாவை டாக்டர்கிட்டே அழைச்சிட்டுப் போகும்போது, இவளையும் கூட்டிக்கிட்டுப் போய் செக்கப் பண்ணுங்க..

    அவள் கூறியதைக் கேட்டதும், பதறிப் போன மங்களம் ஏம்மா என்னாச்சு? உடம்பு சரியில்லையா? காலையில் நல்லாத்தானே இருந்தே? மகளைப் பாசத்துடன் அணைத்த படிக் கேட்டாள்.

    அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா.. ஸ்நேகா குட்டி எங்கே?

    உள்ளே தூங்கிட்டிருக்காடா..! எப்பவுமே, நீ அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடுவியா? உனக்காகக் காத்துட்டிருந்தா! நீ வர லேட்டானதும் பாலைக் குடிச்சிட்டு அப்படியே தூங்கிட்டா என்றார் அவர்.

    உருவத்தில் அப்படியே தந்தையை உரித்து வைத்திருந்தாலும், குணத்தில் சபர்மதியைப் போல் மிகவும் மென்மையானவள் அவள்!

    சபர்மதியின் மனம் பலவித யோசனைகளால், பெரும் சஞ்சலமானது. எதையுமே சுலபத்தில் மறக்க மறுத்து சத்தியாக்கிரகம் செய்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1