Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neengale Vetrikku Pakkabalam
Neengale Vetrikku Pakkabalam
Neengale Vetrikku Pakkabalam
Ebook176 pages45 minutes

Neengale Vetrikku Pakkabalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மு.ப.நடராசன் சிறு வயதிலிருந்து தமிழ் மீது பற்று கொண்டு கவிதை, கட்டுரை, சிறுகதை மற்றும் திரைப்பட பாடல்கள் எழுதுவதில் ஆர்வம் காட்டியுள்ளார். இவர் கல்லூரி படிக்கும் காலங்களில், "வானம் வெகு தூரமில்லை" என்ற தன்னம்பிக்கை தரும் புத்தகம் வெளியிட்டு கல்லூரி மாணவர்களிடையே உத்வேகம் பெறவும், கல்வியின் அவசியத்தை உணரும் வகையிலும் சமூக ஏற்றதாழ்வுகளை பிரதிபலிக்கும் விதமாகவும் எழுதியுள்ளார். ஒவ்வொரு தனி நபரிடமும் உள்ளார்ந்த திறமையுள்ளது, அதனை வெளிக்கொணர்ந்து தனக்கென முத்திரைப் பதித்து வெற்றி வாகை சூடிட வேண்டும் என்ற எண்ணத்தில் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124704298
Neengale Vetrikku Pakkabalam

Read more from M.P.Natarajan

Related to Neengale Vetrikku Pakkabalam

Related ebooks

Reviews for Neengale Vetrikku Pakkabalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neengale Vetrikku Pakkabalam - M.P.Natarajan

    http://www.pustaka.co.in

    நீங்களே வெற்றிக்கும் பக்கபலம்

    Neengale Vetrikku Pakkabalam

    Author:

    மு.ப. நடராஜன்

    M.P. Natarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mp-natarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    மேன்மை காணுங்கள்

    கலை உணர்வு

    திடமான எண்ணங்கள்

    ஆளுமைத்தன்மை

    பணம்

    இலக்குகளை எதிர்கொள்ளுங்கள்

    இறைவன் பிரார்த்தனை

    உன்னால் முடியும்

    ஆலோசனை

    பாராட்டு

    தனிமனித குறிக்கோள்

    நினைக்க வேண்டும்

    திட நம்பிக்கை

    மன ஊக்கம்

    தன்னம்பிக்கை

    நேர்மை

    முடிவெடுத்தல்

    நம்பகத்தன்மை

    புதுப்புது சிந்தனைகள்

    சுயகட்டுப்பாடு

    முதிர்வுத்தன்மை

    வலிமையான எண்ணம்

    நேரம்

    நினைவாற்றல்

    நல்ல நண்பன்

    தகவல் தொடர்பு

    வெற்றி படிக்கற்கள்

    வெற்றிக்கான வழிகள்

    சாதிப்பதற்கான வலிமை

    இசை

    உழைப்பு

    அணுகுமுறையில் மென்மை பெற...

    மன உளைச்சல் குறைக்க...

    நமக்குள் விசித்திரம்

    உழைப்பால் உயர்வு

    உனக்குள் தனித்தன்மை

    உனக்குள் தகுதி

    சமாளித்து விடு

    குறிக்கோளை அடைந்திடு

    ஒவ்வொரு நாளும்

    பண்பியல்புகள்

    குடும்ப வரவு - செலவு

    நல்ல செயல்களே நல்விதைகள்

    முன்னேற்ற பாதை

    தாழ்வு மனப்பான்மை

    நீங்கள் எத்தகையவர்

    தொலைநோக்கு சிந்தனை

    நம்பிக்கை

    துணிச்சல்

    சுயசிந்தனை

    சாதியுங்கள்

    அறிவு திறமை

    முடியும் என்ற உணர்வு

    தெய்வ பலம்

    எண்ணத்தின் வல்லமை

    அற்புதமான எண்ணங்கள்

    என்றும் கனத்த நினைவுகளுடன்...

    எனக்குள் எண்ணக் குவியல்களை

    உத்வேகமாய் விளைய வைத்த

    அன்பு ஆசான் உம்மை

    வணங்கிட யுகங்கள் போதாது...!

    கிராமத்தில் இருந்தாலும், நகரத்தில் இருந்தாலும் படித்த குடும்பத்தில் இருந்து வந்தாலும், படிக்காத குடும்பத்திலிருந்து வந்தாலும் உங்களால் வெற்றியடைய முடியும். நீ யாராக இருந்தாலும் உழைப்பால், அறிவால் வெற்றியடைவாய்.

    - டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்

    வாழ்த்துரை

    மானுட சமுதாயம் முன்னேறிட பல அணுகுமுறைகளை எடுத்துக் கூறி வெளிவரும் எண்ணற்ற நூல்களில் மு.ப.நடராசன் அவர்களின் நீங்களே வெற்றிக்குப் பக்கபலம் ஓர் மாறுபட்ட புதிய படைப்பு.

    வேதியியல் அறிஞர் ஒரு பொருளின் பல்வேறு மூலக் கூறுகளில் ஒன்றை மட்டும் எடுத்து நுட்பமாக ஆய்வு செய்கின்றார்கள். அதேபோல் இந்நூல் ஆசிரியரும் சமுதாய மானுடர்களின் பல்வேறு பண்புகளில் வெற்றி என்பதனை ஆதாரமாகக் கொண்டு எழுத்துக்களால் சிற்பம் வரைந்துள்ளார்.

    இது அவரது அனுபவ உணர்வின் வெளிப்பாடு சமுதாயத்தின் புது விடியலின் நிகழ்வு வாழ்க! வளர்க தொடரட்டும் அவரின் படைப்புப் பணி.

    - முனைவர் எம், எலியாஸ் சேச

    மனிதவள மேலாண்மைத் துறை

    தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி

    திருச்சிராப்பள்ளி

    பதிப்புரை

    ஒவ்வொரு தனி மனிதனிடத்திலும் சமூகத்தின் மீது அக்கறையும் பொறுப்பும் இருந்தால்தான் சமூக வளர்ச்சி வீதம் வெகு விரைவான முன்னேற்றம் காணும், ஆகவே, தனி நபரின் கடமைகளும், பழக்க வழக்கங்களும் சீரிய நோக்கத்தோடு பயணிக்கும்போது மட்டுமே நாம் நல்ல படிப்பினை பெற முடியும்.

    இதனை குறிக்கோளாகக் கொண்டு தனியொருவர் வெற்றி பெற்றால்தான் சமூக வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். அதற்காக கடின உழைப்பு உழைத்தே ஆகவேண்டும். தனக்கென கனவினை உருவாக்கிக் கொள்ள வேண்டும். காலத்தின் கட்டாயங்களையும் சூழ்நிலைகளையும் கடந்து அதற்கேற்ப தன்னை மாற்றி தோல்வி காணும் பொழுதெல்லாம் துவண்டு போகாமல் வெற்றியை நோக்கியே பயணம் செல்வது தலையாய கடமையென கருதி. நமக்குள் புதைந்து கிடக்கும் எண்ணங்களை கருத்துக்களாகவும் தகவல்களாகவும் பகிர்ந்துகொள்ள இன்றைய இளைஞர்களுக்கு அவசியமிருக்கிறது என்பதனை அறியவே இந்நூல் வெளியிடப்படுகிறது.

    அனைவரும் படித்துணர்ந்து பயன் பெறுக.

    என்னுரை

    மனிதன் நேசிக்க தொடங்கியது முதல் அன்பையும் பாசத்தையும் மறந்து வாழ்கின்ற சூழ்நிலையிலும் தன்னை எவ்வித தடைகளும் பிரச்சனைகளும் ஏமாற்றங்களும் வந்தாலும் தன்னை தரம் தாழ்த்திக் கொள்ளாமல் தன்னம்பிக்கையோடு வெற்றி வாகை சூடுகிற மனப்பான்மை பெற்று திகழ்கின்றபோதுதான் மனித மாண்புகள் என்னவென்று புரிய வருகிறது.

    அதுவரை போராட்டமான சூழ்நிலை அமைந்து விடுகிறது என்பதைக் காண முடியும்.

    மனித வாழ்க்கைத்துவம் ஒரு அவசியமான செயல் நோக்கு திட்டத்தை எதிர்பார்த்து சமாளிக்கிற விதமும் சமார்த்தியமாய் அணுக வேண்டிய காலகட்டத்தையும் கடந்து நோக்கத்தை நிறைவேற்றுகின்ற போது தான் எதிர்காலம் விடியலை நோக்கி செல்கிற நிகழ்வுகளை மனதளவில் எதைக் காண முடியும்.

    அதுவரை நல்ல மனிதனாக வாழ்வதற்கான முலக் காரணங்களை அறிந்து மிக தெளிவான மனநிலையோடு வாழ்கிற மனப்பக்குவங்களை பெற வேண்டும் என்ற இலட்சிய பரிவர்த்தனையோடு பரிமாறுகிற உணர்வுதான் இந்நூலின் சிறப்பாகும்.

    இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய முனைவர் எம்.எலியாஸ் சேச அவர்களுக்கும், இந்நூலுக்கு ஊக்கம் தந்த அண்ணன் திரு தமிழ்செல்வன் அவர்களுக்கும், உற்சாகம் தந்த தங்கை திருமதி. பால்மணி அவர்களுக்கும், எழுத்துப் பணியில் உத்வேகம் கொடுத்த என்னுடைய மனைவி திருமதி. சாந்தி அவர்களுக்கும், இந்நூலை மிகச் சிறந்த முறையில் கணிப்பொறி செய்து வழங்கிய திரு. செல்வின் ராஜா அவர்களுக்கும், மிகச் சிறப்பாக அச்சிட்டு தந்த மீனாட்சி டிசைனர்ஸ் உரிமையாளர் திரு. கபாலகுருசாமி அவர்களுக்கும் மற்றும் அவ்வப்போது பாராட்டி பெருமை சேர்த்த என் பெற்றோர்கள், உற்றார் - உறவினர்கள், சுற்றத்தார்கள், மற்றும் நண்பர்கள் ஆகிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.

    அன்புடன்.

    மு.ப.நடராசன், M.A. (SD), M.B.A, MHRM

    நீங்களே வெற்றிக்குப் பக்கபலம்

    (இது ஒரு தன்னம்பிக்கை தரும் தலைமைத்துவ திறனாய்வு பதிப்பு நூல்)

    மேன்மை காணுங்கள்

    பொறுமை, உழைப்பு, ஆரோக்கியம் சோர்வின்றி செயல்பட உதவும்.

    நிம்மதியாய் வாழ ஆசையை துறவறம் கொள்ளுங்கள்.

    நட்பு அகிலத்தை ஆள வைக்கும் சக்தி கொண்டது.

    பிறருக்கு ஆதரவாய் இருங்கள். பிறரிடம் அரவணைப்பை காட்டுங்கள்.

    கோபத்தை குறைத்து கொள்ளுங்கள். உடல் நலம் காணலாம்.

    ஆசையை மிதமாய் வைத்துக் கொள்ளுங்கள்.

    வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்துங்கள்.

    சிக்கனமாய் செலவு செய்யுங்கள்.

    புகழ் என்பது கடின உழைப்பு தரும் உயர் பரிசு.

    ஆர்வமாய் செயல்படுவதன் மூலம் அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்திட முடியும்.

    காலத்தை கவனத்துடன் செயல்படுத்திட வேண்டும்.

    வாழ்வு வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    நம் அறிவின் மகிமை உணர்ந்து அதற்கேற்ப உணர்ந்து செயல்பட வேண்டும்.

    எல்லோர்க்கும் சிறிதளவு உதவிகள் செய்யுங்கள்.

    பொறுமையாய் எந்த செயலையும் கையாளுங்கள்.

    நல்ல செயலை

    Enjoying the preview?
    Page 1 of 1