Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Mel Aanai
Kaadhal Mel Aanai
Kaadhal Mel Aanai
Ebook461 pages2 hours

Kaadhal Mel Aanai

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

ஆங்கிலத்திலிருந்து நான் மொழிபெயர்த்த நாவல் இவை. 'காதல் மேல் ஆணை'க்கு முன்பும், அதற்குப் பின்பும் சில நாவல்களை நான் மொழி பெயர்த்திருக்கிறேன். இருந்தும் முதல் புத்தகமாக இதை வெளியிடுவதற்குக் காரணம் எடிட்டர் எஸ்.ஏ.பி க்கு இது மிகவும் பிடித்த கதை என்பது தான். அவர் அமரராகும் வரையில் நான் மொழி பெயர்த்த நாவல்கள் எல்லாமே அவர் தேர்ந்தெடுத்து, என்னிடம் தந்து மொழி பெயர்க்கும்படி சொன்னவைதாம் என்றாலும், இந்த நாவலுக்குத் தனிச் சிறப்பு உண்டு. புத்தகக் கடைக்குப் போனால் ஆயிரக்கணக்கான புத்தகங்களிலிருந்து குறிப்பாக ஒரு பத்துப் பதினைந்து புத்தகங்களை வாங்கி வருவார் எடிட்டர். அந்தப் பத்தும் முத்தாக இருக்கும். அப்படித்தான் ஒரு நாள் டேனியல் ஸ்டீல் எழுதிய 'The Promise' என்ற புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். சிறிய நாவல். படித்துப் பார்த்தேன். ஒரு பணக்காரப் பையன், அவனுடைய திமிர் பிடித்த அம்மா, ஏழைக் காதலி - இவர்களைச் சுற்றிச் சுழலும் காதல் கதை.

"அப்படியொன்றும் விறுவிறுப்பாகத் தெரியவில்லையே? கதை நடு நடுவே தொய்கிறதே" என்று தயக்கத்துடன் கூறினேன்.

எடிட்டர் “ஒன்றும் தொய்யாது. தைரியமாகச் செய்யுங்கள்" என்று உறுதியாகச் சொன்னார். அவருடைய நம்பிக்கை வெற்றி பெற்றது. தொடர் கதையாக வெளி வருவதால் ஏதோ வாசகர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அலட்சியமாக நினைத்திருந்து எனக்கு, கதை நிறைவு பெற்றபோது இனிய அதிர்ச்சி! ஏராளமான வாசகர்கள் மிகவும் பாராட்டிக் கடிதம் எழுதியிருந்தார்கள். ‘காதல் மேல் ஆணை’ அவர்களை எவ்வளவு தூரம் கவர்ந்திருக்கிறது என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டுப் போனேன்.

All the world Cover to Cover என்று சொல்வார்கள். உண்மையான காதல் என்றால் அது வெற்றி பெறுவதையே உலகம் விரும்பும். பணக்கார அம்மா, என்ன தான் பேரங்கள் பேசி, தந்திரங்கள் செய்து மகனையும் அவனுடைய காதலியையும் பிரிக்க முயன்றாலும் இறுதியில் அவர்கள் இணைகிறார்கள் என்பதால் இக்கதை வாசகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது.

இன்னொரு விஷயமும் இங்கே சொல்ல வேண்டும். டேனியல் ஸ்டீல் எழுதிய முதல் நாவல் இது. இதை வைத்தே, சிலர் பிற்காலத்தில் பெயர் பெற்ற நாவலாசிரியராக வருவார் என்று எடிட்டர் கண்டு பிடித்து விட்டார். அவருடைய யூகம் தப்பவில்லை. இன்றும் டேனியல் ஸ்டீலின் நாவல்கள் அடுத்தடுத்து வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. சமீபத்தில் நான் அமெரிக்கா சென்றிருந்த போது Wings என்ற அவரது லேட்டஸ்ட் நாவல் கடைகளில் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்ததைக் கண்டேன். அமோகமாக விற்பனையாகும் முதல் பத்து நாவல்களின் பட்டியலில் அதுவும் ஒன்று என்று பல வாரங்களுக்குப் பத்திரிகைகள் குறிப்பிட்டுக் கொண்டிருந்தன.

எடிட்டர் எஸ்.ஏ.பி. அவர்களின் நுண்ணறிவையும் தீர்க்கதரிசனத்தையும் எண்ணி வியந்து, இப்புத்தகத்தை அவருடைய நினைவுக்குக் காணிக்கையாக்குகிறேன்.

- ரா. கி. ரங்கராஜன்

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580126704631
Kaadhal Mel Aanai

Read more from Ra. Ki. Rangarajan

Related to Kaadhal Mel Aanai

Related ebooks

Reviews for Kaadhal Mel Aanai

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Mel Aanai - Ra. Ki. Rangarajan

    http://www.pustaka.co.in

    காதல் மேல் ஆணை

    Kaadhal Mel Aanai

    Author:

    ரா. கி. ரங்கராஜன்

    Ra. Ki. Rangarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ra-ki-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 52

    அத்தியாயம் 53

    அத்தியாயம் 54

    முன்னுரை

    தமிழில்: ரா.கி.ரங்கராஜன்

    மூலம்: டேனியல் ஸ்டீல்

    ஆங்கிலத்திலிருந்து நான் மொழிபெயர்த்த நாவல் இவை. 'காதல் மேல் ஆணை'க்கு முன்பும், அதற்குப் பின்பும் சில நாவல்களை நான் மொழி பெயர்த்திருக்கிறேன். இருந்தும் முதல் புத்தகமாக இதை வெளியிடுவதற்குக் காரணம் எடிட்டர் எஸ்.ஏ.பி க்கு இது மிகவும் பிடித்த கதை என்பது தான். அவர் அமரராகும் வரையில் நான் மொழி பெயர்த்த நாவல்கள் எல்லாமே அவர் தேர்ந்தெடுத்து, என்னிடம் தந்து மொழி பெயர்க்கும்படி சொன்னவைதாம் என்றாலும், இந்த நாவலுக்குத் தனிச் சிறப்பு உண்டு. புத்தகக் கடைக்குப் போனால் ஆயிரக்கணக்கான புத்தகங்களிலிருந்து குறிப்பாக ஒரு பத்துப் பதினைந்து புத்தகங்களை வாங்கி வருவார் எடிட்டர். அந்தப் பத்தும் முத்தாக இருக்கும்.

    அப்படித்தான் ஒரு நாள் டேனியல் ஸ்டீல் எழுதிய 'The Promise' என்ற புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். சிறிய நாவல். படித்துப் பார்த்தேன். ஒரு பணக்காரப் பையன், அவனுடைய திமிர் பிடித்த அம்மா, ஏழைக் காதலி - இவர்களைச் சுற்றிச் சுழலும் காதல் கதை.

    அப்படியொன்றும் விறுவிறுப்பாகத் தெரியவில்லையே? கதை நடு நடுவே தொய்கிறதே என்று தயக்கத்துடன் கூறினேன்.

    எடிட்டர் ஒன்றும் தொய்யாது. தைரியமாகச் செய்யுங்கள் என்று உறுதியாகச் சொன்னார். அவருடைய நம்பிக்கை வெற்றி பெற்றது. தொடர் கதையாக வெளி வருவதால் ஏதோ வாசகர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அலட்சியமாக நினைத்திருந்து எனக்கு, கதை நிறைவு பெற்றபோது இனிய அதிர்ச்சி! ஏராளமான வாசகர்கள் மிகவும் பாராட்டிக் கடிதம் எழுதியிருந்தார்கள். ‘காதல் மேல் ஆணை’ அவர்களை எவ்வளவு தூரம் கவர்ந்திருக்கிறது என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டுப் போனேன்.

    All the world Cover to Cover என்று சொல்வார்கள். உண்மையான காதல் என்றால் அது வெற்றி பெறுவதையே உலகம் விரும்பும். பணக்கார அம்மா, என்ன தான் பேரங்கள் பேசி, தந்திரங்கள் செய்து மகனையும் அவனுடைய காதலியையும் பிரிக்க முயன்றாலும் இறுதியில் அவர்கள் இணைகிறார்கள் என்பதால் இக்கதை வாசகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது.

    இன்னொரு விஷயமும் இங்கே சொல்ல வேண்டும். டேனியல் ஸ்டீல் எழுதிய முதல் நாவல் இது. இதை வைத்தே, சிலர் பிற்காலத்தில் பெயர் பெற்ற நாவலாசிரியராக வருவார் என்று எடிட்டர் கண்டு பிடித்து விட்டார். அவருடைய யூகம் தப்பவில்லை. இன்றும் டேனியல் ஸ்டீலின் நாவல்கள் அடுத்தடுத்து வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. சமீபத்தில் நான் அமெரிக்கா சென்றிருந்த போது Wings என்ற அவரது லேட்டஸ்ட் நாவல் கடைகளில் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்ததைக் கண்டேன். அமோகமாக விற்பனையாகும் முதல் பத்து நாவல்களின் பட்டியலில் அதுவும் ஒன்று என்று பல வாரங்களுக்குப் பத்திரிகைகள் குறிப்பிட்டுக் கொண்டிருந்தன.

    எடிட்டர் எஸ்.ஏ.பி. அவர்களின் நுண்ணறிவையும் தீர்க்கதரிசனத்தையும் எண்ணி வியந்து, இப்புத்தகத்தை அவருடைய நினைவுக்குக் காணிக்கையாக்குகிறேன்.

    ரா. கி. ரங்கராஜன்

    சென்னை 23

    *****

    1

    அவர்கள் இரண்டு பேரும் இளம் காதலர்கள்.

    வாலிபத்தின் வாயிலில் நிற்கும் சின்ன வயதுக் காரர்கள்.

    அவன் பெயர் மைக்கேல், அவள் பெயர் நான்ஸி.

    கல்லூரி வளாகத்துக்கு வெளியே இருவரும் சைக்கிள்களில் புறப்படத் தயாராக இருந்தார்கள்.

    பெடலில் ஒரு காலும், தரையில் ஒரு காலுமாக அவர்கள் நின்றிருந்தார்கள். வசந்த காலத்து விடியற்காலை நேரம். இளம் வெயில் அவர்கள் முதுகை வருடிக் கொண்டிருந்தது.

    ஒரு நிமிடம் அவர்களின் கண்கள் ஒன்றையொன்று சந்தித்துக் கொண்டன. அவர்கள் உதடுகளில் புன்னகை பிறந்தது. காலைச் சூரியனின் கிரணங்கள் பட்டு அவளுடைய குட்டைக் கூந்தல் ஜொலித்து மினுமினுத்தது.

    அவன் கண்களை நோக்கியதும் அவள் சிரிக்கத் தொடங்கினாள்.

    என்ன டாக்டர், எப்படி இருக்கிறது? என்றான் அவன்.

    அவன் படிப்பு முடித்து, கட்டிடக் கலையில் டாக்டர் பட்டம் பெறவிருந்தான்.

    இன்னும் இரண்டு வாரம் இருக்கிறது நான் இஞ்சினீயர் ஆவதற்கு. அதற்கப்புறம் கேள். எப்படியிருக்கிறது என்று சொல்கிறேன். என்றான் அவன்.

    நீயும் உன் பட்டமும்! அதையா நான் கேட்டேன்? நேற்றிரவைச் சொன்னேன் அவள் கண்ணைச் சிமிட்டி விட்டுச் சிரித்தாள் மறுபடியும். இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்டேன்.

    ச்சீ! வெட்கங்கெட்ட கழுதை! மைக்கேல் அவள் இடுப்பில் செல்லமாய் ஒரு தட்டுத் தட்டினான். அவ்விடத்திலே எப்படி இருக்கிறதுங்க? அதைச் சொல்லுங்க மிஸ்! நடக்க முடிகிறதுங்களா இப்போது?

    அவனைக் கேலியாகப் பார்த்தாள் நான்ஸி. ஏன், உன்னால் மட்டும் நடக்க முடிகிறதா?

    சொல்லிவிட்டு, சைக்கிளில் அவனைத் தாண்டிக் கொண்டு பறந்தாள் அவள்.

    அழகான சிறிய சைக்கிள், சில மாதங்களுக்கு முன் அவளுடைய பிறந்த நாளுக்காக அவன் வாங்கிக் கொடுத்தது.

    ஏய்! இரு, இரு! அவனும் தன் சைக்கிளில் தாவி வேகமாப் பின் தொடர்ந்தான்.

    ‘நான்ஸி! நான்ஸி! நான்ஸி!' அவன் உதடுகள் திரும்பத் திரும்பத் திரும்பத் தித்திப்புடன் சொல்லிக் கொண்டன.

    அவனுக்கு அவளிடம் காதல். கட்டுக்கடங்காத காதல். இரண்டு வருஷமாகிறது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு. இப்படியொரு பெண்ணின் காதலைப் பெற வேண்டுமென்றே ஆயுள் பூரா கனவு கண்டு வந்தவன் அவன்.

    கல்லூரி வாழ்க்கை அவனுக்கு போரடித்திருந்த சமயம் அது.

    எப்படியோ முதலாண்டைத் தாண்டி இரண்டாம் ஆண்டுக்கு வந்திருந்த சமயம்.

    வாழ்க்கை இன்னும் பெரிய போராக இருக்கப் போகிறது என்று பெருமூச்சுடன் நாட்களைத் தள்ளிக் கொண்டிருந்த சமயம்.

    மற்ற மாணவர்களைப் போலக் கல்லூரியில் படிக்கும் எந்தப் பெண்ணிடமும் அவன் மனம் செல்லாதிருந்து சமயம்.

    பல பெண்களை மைக்கேலுக்குத் தெரியும். அவர்களிடமெல்லாம் ஏதோ ஒன்று இல்லை என்று தோன்றியது. பெண்ணென்றால் மென்மை இருக்க வேண்டும். ஆன்மா இருக்க வேண்டும் என்று எதிர் பார்த்தான்.

    அவைகளை எந்தப் பெண்ணிடமும் அவன் காணவில்லை.

    நான்ஸி - இவள் ஸ்பெஷல்.

    என்றைக்கு அவளுடைய ஓவியக் கண்காட்சியில் முதன் முதலாக அவளைப் பார்த்தானோ, அந்த நிமிடமே அவனுக்குத் தோன்றிவிட்டது-இவள் ஸ்பெஷல். இவள் ஸ்பெஷல் இவள் ஸ்பெஷல்.

    எதிர்பார்த்தது அத்தனையும் இவளிடம் இருக்கிறதென்று அந்த முதல் சந்திப்பன்றே தெரிந்து விட்டது.

    அவள் தீட்டியிருந்த இயற்கைக் காட்சிகளில் சோகம் பிரிந்த தனிமையொன்று புலப்பட்டது. அவள் வரைந்திருந்த மனித உருவங்களில் தனித்தன்மை இருந்தது.

    அந்த ஓவியங்களைக் கண்ட அந்த நிமிடத்திலேயே அவன் உள்ளத்தில் ஒரு பரிவு சுரந்தது. அவற்றைத் தீட்டிய கலைஞனை ஓடிப் போய்க் கட்டிக் கொள்ள வேண்டும் போல் அவன் உள்ளம் தவித்தது.

    அன்று அவள் ஒரு சாதாரண சிவப்பு உடை அணிந்து, கலைக் கூடத்தின் ஓர் ஓரமாக உட்கார்ந்திருந்தாள்.

    ஜாகையிலிருந்து கலைக் கூடம் வரையில் நடந்தே வந்திருந்ததால் அவள் பட்டுப் போன்ற சருமம் பளபளவென்று இருந்தது.

    அவள் கண்களில் ஒரு பிரகாசம். பார்ப்பதில் ஒரு ஜீவன்.

    பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து விட்டது அவனுக்கு. எனக்காகப் பிறந்தவள், இவள் தான். இவள் தான், இவளைப் போன்ற ஒருத்தியை நான் என் வாழ்நாளிலேயே பார்த்தது கிடையாது.

    அன்று அவன் அவளுடைய இரண்டு ஓவியங்களை விலை கொடுத்து வாங்கிக் கொண்டான். அவளை ஓட்டலுக்கு அழைத்துச் சென்றான். அவளுடன் சாப்பிட்டான்.

    ஆனால் அன்றைக்கு அத்தோடு சரி. அதற்கு போல் நெருங்க நான்ஸி இடம் கொடுக்கவில்லை. தன் உடம்பையோ இருதயத்தையே கொடுக்க அவளுக்கு வெகு நாட்களாயிற்று.

    பல வருடங்களாகத் தனிமைக்கும் வேதனைக்குப் பழக்கப்பட்டவள் அவள். பத்தொன்பது வயதாகிறது. அறிவுள்ள பெண், வாழ்க்கையின் வலிகளை அறிந்தவள்.

    ஒரு குழந்தை அனாதையாக இருக்கும் போது எப்படி வலிக்கும் என்று அவளுக்குத் தெரியும். இன்று நேற்றல்ல, சின்ன வயதிலிருந்தே, என்றைக்கு அவள் அம்மா அனாதை விடுதியில் அவளைக் கொண்டு போய்ச் சோர்த்தாளே! அன்று முதலே அவளுக்குத் தனிமையின் வலி தெரியும்.

    அனாதை விடுதிக்கு வந்த கொஞ்ச நாளைக்கெல்லாம் இறந்து போனாள். அம்மா இறந்தது எந்தத் தினத்தில் என்பது அவளுக்கு மறந்து விட்டது. ஆனால் விடுதியின் கூடங்களில் நிறைந்திருந்த சில்லென்ற குளிரை அவளால் மறக்க முடியவில்லை. பழக்கமில்லாத ஜனங்கள்--அவர்களிடமிருந்து வந்த வினோதமான மணங்கள் அவைகளை அவளால் மறக்க முடியவில்லை.

    பொங்கி வரும் கண்ணீரை அடக்கிக் கொண்டு காலை வேளையின் ஓசைகளைச் செவி மடுத்தபடி எவ்வளவு நாள் படுக்கையிலேயே அவள் கிடந்திருக்கிறாள்!

    ஆயுளுக்கும் மறக்க முடியாது அதையெல்லாம். தன் இதயத்துக்குள் இருக்கும் சூனியத்தை எதுவுமே நிரப்பப் போவதில்லை என்று அவள் நினைத்திருந்தாள்.

    மைக்கேலைச் சந்திக்கும் வரை.

    அவர்கள் காதல் வலுவானது. அன்பென்னும் சாந்து பூசி, பரஸ்பர மதிப்பினால் கோட்டை கட்டி, அவனுடைய உலகத்தையும் அவளுடைய உலகத்தையும் இணைத்து இரும்பு வேலி போட்டுக் கொண்டார்கள். அவர்கள் உலகம் அற்புதமானதாக, அபூர்வமானதாக இருந்தது.

    மைக்கேல் தனது நிலையையும் அவள் நிலையையும் உணர்ந்திருந்தான். அந்தஸ்து, அந்தஸ்து என அவன் அம்மா அடிக்கடி சொல்வாளே, அது நான்ஸிக்குக் கிடையாது என்பதை உணர்ந்திருந்தான். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவன் அம்மா அந்தஸ்தைப் பற்றிச் சொல்வாள். அந்தஸ்து இல்லாத பெண்களிடம் காதல் கொள்வதில் பல அபாயங்கள் உண்டு என்பது அவனுக்குத் தெரிந்தது தான்.

    ஆனால் நான்ஸியிடம் எந்த வித்தியாசமும் அவனுக்குத் தோன்றவில்லை. ஒரே ஒரு வித்தியாசம் தெரித்தது. அவள் ஓவியம் தீட்டுகிறவள். வெறும் மாணவி அல்ல. வாழ்க்கையை இப்படி அமைத்துக் கொள்வதா அப்படி அமைத்துக் கொள்வதா என்று தடுமாறிக் கொண்டிருக்காமல், எப்படிப்பட்ட வாழ்க்கை வேண்டும் என்பதைத் தீர்மானித்து அந்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டு விட்டவள்.

    அவன் பல பெண்களைப் பார்த்திருக்கிறான் எல்லாப் பெண்களும் தாங்கள் பழகுகிற ஒவ்வொரு ஆணையும் இவன் நமக்கு ஏற்றவனா என்று பரிசோதனை பண்ணிக் கொண்டிருப்பார்கள். நான்ஸி அப்படிச் செய்யவில்லை.

    மைக்கேல் தான் தன் காதலன் என்று தேர்ந்தெடுத்து விட்டாள். அவனும் இந்த இரண்டு வருட காலத்தில் அந்த நம்பிக்கைக்கு மோசம் பண்ணவில்லை. இனிமேலும் பண்ண மாட்டான் என்று அவளுக்குத் தெரியும்.

    அவனை உள்ளும் புறமுமாய் அவள் அறிந்துகொண்டு விட்டாள். இதற்கு மேலும் தெரிந்து கொள்ள என்ன பாக்கி இருக்கிறது? அவனுடைய குறும்புகள், கிறுக்குத் தனமான ரகசியங்கள், குழந்தைப் பிராயத்துக் கனவுகள், பயங்கரமான அச்சங்கள் - எல்லாவற்றையும் பற்றி அவளுக்குத் தெரியும். எனவே அவனுடைய குடும்பத்தை அவள் மதித்தாள். அவன் அம்மாவிடம் கூட அவளுக்கு மதிப்பு ஏற்பட்டிருந்தது.

    மைக்கேல் பெரிய பணக்காரப் பரம்பரையில் வந்தவன் பிறந்தது முதலே அவனுக்காக ஒரு சிம்மாசனம் காத்திருந்தது.

    அதில் அமருவதற்குத் தகுதியுள்ளவனாக அவனைத் தயார் செய்து வந்தார்கள். அவனும் அதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. அதைப் பற்றி சீரியஸாக எண்ணினானே தவிர, தமாஷ் பண்ணியதில்லை. சில சமயம் அவனுக்குப் பயம்கூட ஏற்படுவதுண்டு குடும்பப் பெருமையை நம்மால் காப்பாற்ற முடியுமா என்று.

    முடியும் என்று நான்ஸிக்குத் தெரியும்.

    மைக்கேலின் பாட்டனார் ஹிலியார்டு கட்டிடக் கலை விற்பன்னராக இருந்தவர். மைக்கேலின் அப்பாவும் அப்படியே. பாட்டனார்தான் கட்டிடக் காண்டிராக்ட் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தவர்.

    மைக்கேலின் அம்மாவும் ஒரு காண்டிராக்டர் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவர்கள் ஸ்தாபனத்துக்குக் காட்டர் என்று பெயர். மைக்கேலின் அம்மாவும் அப்பாவும் கல்யாணம் செய்து கொண்டதும் இரண்டு நிறுவனமும் இணைந்து காட்டர் - ஹிலியார்டு என்ற பெரிய சாம்ராஜ்யம் உருவாகி விட்டது.

    காட்டர் குடும்பத்துக்குப் பணப் பெருமை உண்டு. இப்போது இரண்டும் சேர்ந்து கொண்டன. மைக்கேலின் அப்பா இறந்த பிறகு அம்மா மரியம் தான் அந்தத் தொழில் சாம்ராஜ்யத்தை நிர்வகித்து வருகிறாள்.

    அந்த மகுடத்தைத்தான், மைக்கேல் அணியவிருந்தான். மகுடம் மிகச் சுமையுள்ளது. ஆனால், அதை அவன் வெறுக்கவில்லை.

    நான்ஸி அவனுடைய குடும்ப அந்தஸ்துக்கு மதிப்புக் கொடுத்தாள். பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் தலைவனாக ஒரு நாள் வரப் போகிறவன் அவன் என்பதை அவள் அறிந்தேயிருந்தாள்.

    காதல் ஆரம்பித்த புதிதில் இதைப் பற்றியே அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். காதல் வளர்ந்த பிறகும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

    மைக்கேலுக்கு அவள் மீது அசாத்திய நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. குடும்பப் பொறுப்பு, பிஸினஸ் பொறுப்பு இரண்டையும் தாங்கக்கூடிய பெண்ணைத் தான் நாம் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று உறுதியாக எண்ணினான்.

    இதோ தனக்கு முன்னே சைக்கிளில் பறந்து கொண்டிருக்கும் நான்ஸியைப் பார்த்தான் மைக்கேல்.

    எவ்வளவு தன்னம்பிக்கை இவளுக்கு! என்ன ஒரு வலு! பெடலைச் சுறுசுறுப்பாக மிதிக்கும் அந்தச் சின்னப் பாதங்கள் - தோளுக்கு மேலாக நிமிர்ந்து நிற்கும் அந்த மோவாய் - நடு நடுவே அவனைத் திரும்பிப் பார்த்துச் பார்த்துச் சிரிக்கும் விஷமத்தனம் - அவனுக்குப் பெருமையாயிருந்தது. இப்படிப்பட்ட அழகியைக் காதலியாக அடைந்ததில்.

    ஒரே எட்டில் அவளைப் பிடித்து... சைக்கிளிலிருந்து வாரியெடுத்து... அதோ அந்தப் புல்வெளியில் படுக்க வைத்து... நேற்றிரவைப்போல்... நேற்றிரவைப் போல்...

    எண்ணங்களை ஒதுக்கித் தள்ளி விட்டு, பெடலை வேகமாய் மிதித்தான்.

    ஏய்! ஏய்! இரு, நானும் வருகிறேன்!

    சில நிமிடங்கள் தான். அவளுக்குத் துணையாக அவனும் வந்துவிட்டான்.

    இருவரும் பக்கம் பக்கமாகச் சைக்கிளில் சென்றார்கள். இருவருக்குமிடையே மிகக் கொஞ்சம் தான் இடைவெளி இருந்தது. ஒரு கையை நீட்டி அவள் இடையை அணைத்தான் மைக்கேல்.

    நான்ஸி! இன்றைக்கு நீ ரொம்ப அழகாயிருக்கிறாய் நான்ஸி!

    வசந்தத்தால் வருடிக் கொடுப்பது போலிருந்தது அவன் குரல். சுற்றிலுமுள்ள உலகம் புத்தம் புதிதாய்ப் பச்சைப் பசேலென்று ஜொலித்தது.

    நான்ஸி! நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் தெரியுமா? என்றான் மறுபடி.

    தெரியுமே, மிஸ்டர் ஹிலியார்டு! நான் உங்களை எவ்வளவு காதலிக்கிறேனோ அதிலே பாதி! என்றாள் அவள் கிண்டலாக.

    அட, கரெக்டாய்ச் சொல்லி விட்டாயே!

    அவளுக்குச் சந்தோஷமாக இருந்தது. இப்போது மட்டுமில்லை. எப்போதும் அவளைச் சந்தோஷப்படுத்துகிறவன் அவன். எப்போதும் அவன் ஓர் அற்புதம்.

    முதன் முதல் ஓவியக் கண்காட்சியில் அவர்கள் சந்தித்துக் கொண்ட போதும் அப்படித்தான்.

    கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அவளுடைய அத்தனை ஓவியங்களையும் அவள் தனக்குத்தான் விற்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான். விற்க மறுத்தால் தன் டிரெஸ்ஸையெல்லாம் அவிழ்த்துப் போட்டு நிர்வாண நடனம் ஆடுவதாகப் பயமுறுத்தினான்!

    சைக்கிளில் இணைந்து வந்த மைக்கேல், ‘ஏய், இதோ பார், நீ என்னை எவ்வளவு காதலிக்கிறாயோ அதைப்போல ஏழு மடங்கு நான் உன்னைக் காதலிக்கிறேனாக்கும்!' என்றான்.

    கிடையாது! கிடையாது! அவள் ஆகாயத்தை நோக்கி மூக்கை நீட்டிக்கொண்டு, பெடலை அழுத்தி, சைக்கிளில் பறந்தாள்.

    அவன் அவளைத் துரத்தினான். ஏய்! நில்! என் காதல் உன் காதலைப் போல் ஏழு மடங்கு இல்லை என்று எதை வைத்துச் சொல்கிறாய்?

    ஒரு குட்டித் தேவதை என்னிடம் வந்து என் காதல் எவ்வளவு அதிகம், உன் காதல் எவ்வளவு குறைவு என்று சொல்லி விட்டுப் போயிற்று! மறுபடியும் சைக்கிளில் பறந்தாள் நான்ஸி.

    பாதை குறுகலாக இருந்தது. வேண்டுமென்றே அவளை முன்னே சொல்ல விட்டான் மைக்கேல். இருவர் மனத்திலும் ஆனந்தம் சிறகடித்துப் பறந்தது.

    பின்னாலிருந்து அவளைப் பார்ப்பது அவனுக்குப் பிடித்திருந்தது.

    ஜீன்ஸ் அணிந்து இறுக்கமாக இருந்த அந்தக் குறுகிய இடை, கச்சிதமான தோள்கள், அந்தத் தோள்களைத் தளர்வாக மூடிக் கொண்டிருக்கும் சிவப்பு ஸ்வெட்டர்.

    எல்லாவற்றுக்கும் மேலாக அந்த அற்புதமான கருங் கூந்தல்.

    இந்த அழகு மாளிகையை ஆயுளுக்கும் பார்த்துக் கொண்டிருக்கலாமே!

    பார்த்துக் கொண்டுதான் இருக்கப் போகிறான். அதற்கு அவன் மனத்தில் திட்டம் உருவாகியிருந்தது.

    வேகமாய்ச் சென்று அவளுடன் சேர்ந்து கொண்டான். அவள் தோளை மெல்லத் தட்டினான்.

    *****

    2

    மிஸஸ் மைக்கேல். ஒரு நிமிஷம், என்றான் அவன்.

    சட்டென்று ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது அவளுக்கு - மிஸஸ் மைக்கேல்!

    மிஸஸ் மைக்கேல்!

    மறு நிமிடம் நான்ஸி நாணப் புன்னகை செய்தாள். இளம் சூரியன் அவள் முகத்தில் ஜொலித்தான்.

    அந்த வெளிச்சத்தில், அவள் முகத்திலிருந்த சின்னச் சின்னப் பருக்களை அவன் கண்டான். அவளுடைய மேனிக்குள்ளிருந்து பொங்கி வந்து பொடித்த தங்கத் தூள்களா அவை?

    காதில் விழவில்லை? மிஸஸ் மைக்கேல் என்று கூப்பிட்டேனாக்கும்! சொல்லும் போதே அவனுக்கு நாக்கு இனித்தது.

    வந்து... மைக்... நீ கொஞ்சம் அவசரப்படுகிறாயோ என்று எனக்குச் சில சமயம் தோன்றுகிறது... அவள் குரலில் தயக்கம் தெரிந்தது. பயம் என்று கூடச் சொல்லலால். மிஸஸ் மைக்கேலாக ஆவது அவ்வளவு சுலபமா என்ன? அவனும் நான்ஸியும் தீர்மானித்து விட்டார்கள். உண்மை. ஆனால் அது போதுமா? இன்னும் அவன் தன் அம்மா மரியமிடம் இதைப் பற்றிப் பேசவில்லையே?

    அவசரப்படுகிறேன் என்றா சொன்னாய்? அதெல்லாமில்லை. இன்னும் இரண்டே வாரம் தான். காலேஜில் பட்டம் வாங்கியவுடனே காரியத்தை முடித்துவிடப் போகிறேன், என்றான் அவன்.

    தங்கள் திருமணத்தை அந்தரங்கமாக, எளிமையாக, நடத்த வேண்டும் என்று ரொம்ப நாள் முன்பே அவர்கள் தீர்மானித்து விட்டார்கள்.

    குடும்பத்தினர் என்று சொல்லிக் கொள்ள நான்ஸிக்கு எவருமே இல்லை. மைக்கேலுக்குக் குடும்பம் இருந்தது. ஆனால் பட்டாளம் பட்டாளமாய்ப் பெரிய மனிதர்களும் புகைப்படக்காரர்களும் தங்கள் கல்யாணத்துக்கு வருவது அவனுக்குப் பிடிக்கவில்லை. தன் திருமணத்தை நான்ஸியும் தானும் மட்டுமே அந்தரங்கமாக அனுபவிக்க வேண்டுமென்று விரும்பினான்.

    நான்ஸி, இன்று இரவு நான் நியூயார்க்கிற்குப் போகப் போகிறேன். நம் கல்யாணத்தைப் பற்றி அம்மாவிடம் பேசப்போகிறேன்.

    இன்று ராத்திரியேவா? அவள் கேள்வியில் அச்சம் எதிரொலித்தது சைக்கிளை மெல்ல நிறுத்தினான்.

    'ஆமாம்' என்று அவன் தலையை அசைத்தான்.

    அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சுற்றிலுமிருந்த குன்றுகளையும் அவற்றின் பசுமையையும் ஏறிட்டு நோக்கிய வண்ணம் மெளனமாக இருந்தாள். மைக்... உன் அம்மா என்ன சொல்வாள் என்று நினைக்கிறாய்? என்றாள் மெல்ல. அவனை ஏறிட்டு நோக்கவே பயமாக இருந்தது. அவனுடைய பதிலைக் கேட்கவே பயமாயிருந்தது.

    ஏன்? அம்மா என்ன சொல்லி விடுவாள்? எதற்காகக் கவலைப்படுகிறாய்? என்றான் அவன்.

    என்ன முட்டாள் தனமான கேள்வி! இருவருக்குமே அது தெரிந்திருந்தது.

    கவலைப்பட வேண்டாமாவது மிகவும் கவலைப்பட வேண்டிய விஷயம்!

    மைக்கேலின் அம்மா மரியம் சாதாரணப் பெண்மணி அல்ல. போர்க் கப்பல் மாதிரி பயங்கரமான சக்தி படைத்தவள். அது பதவியின் சக்தி. கான்கிரீட்டையும் உருக்கையும் கலந்து செய்த சக்தி.

    அவளுடைய தந்தை இறந்த சமயத்தில் நிறுவனத்துக்குப் பொறுப்பேற்றவள். கணவனும் இறந்த பிறகு இரட்டிப்பு உறுதியுடன் நிர்வாகங்களை மேற்கொண்டவள்.

    அவளைத் தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி எதுவுமில்லை எதுவுமே இல்லை. எடுப்பார் கைப்பிள்ளை அல்ல அவள். மகன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிவிட மாட்டாள். தன் மகன் நான்ஸியை மணப்பது அவளுக்குப் பிடிக்கவில்லையென்றால் பிடிக்கவில்லை தான். ஒப்புக் கொள்வாள் என்று மைக்கேல் சொல்கிறானே தவிர, அவனுக்கே அதில் சந்தேகம் தான்.

    அவளைப் பற்றி மரியம் என்ன நினைக்கிறாள் என்று நான்ஸிக்கு நன்றாகவே தெரியும்.

    மரியம் தன் எண்ணங்களை ஒரு போதும் மறைத்ததில்லை.

    யாரோ படம் போடுகிற பெண்ணாம்! அவள் பின்னால் பிள்ளை சுற்றுகிறானாம்! முன்பே மரியமுக்கு அது தெரியும். நிஜமாகவே மைக்கேல் அவளைக் காதலித்கிறான் என்று தெரிந்த பின்னர் அவள் ஜரூரானாள்.

    மைக்கேலை ஊருக்கு வரவழைத்தாள். முதலில் பிரியமாகச் சொல்லிப் பார்த்தாள். செல்லமாய்ச் சொல்லிப் பார்த்தாள். வசியப்படுத்திப் பார்த்தாள்.

    அதெல்லாம் பலிக்கவில்லை என்றானதும்

    புயலென வெடித்தாள் சீறினாள். பயமுறுத்தினாள். அவனை இழுக்கப் பல வகையான தூண்டில்கள் போட்டாள். பிறகு விட்டாள். அதாவது, விட்டு விட்ட மாதிரி தோன்றுகிறது.

    அம்மா மெளனமாக இருப்பதை அவளுடைய சம்மதத்துக்கு அறிகுறி என்று மைக்கேல் நினைக்கிறான். நான் அப்படி நினைக்கவில்லை.

    ‘மனத்துக்குள் மரியம்' என்ன எண்ணியிருக்கிறாள் என்று அவளால் ஊகிக்க முடிந்தது. கொஞ்சம் விட்டுப் பிடிப்போம் என்று ஒரு திட்டத்தோடு தான் மரியம் காத்திருக்கிறாள் என்று நான்ஸிக்குத் தெரிந்தது.

    கல்லூரியில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கும் பிள்ளையை இப்போதெல்லாம் மரியம் அடிக்கடி கூப்பிட்டு அனுப்புவதில்லை. குற்றம் சாட்டுவதில்லை.

    நான்ஸி என்று ஒரு பெண் இருப்பதையே அவள் பொருட்படுத்தாத மாதிரி இருந்தது.

    அந்த உதாசீனம் நான்ஸியின் மனத்தைப் புண்படுத்தியது.

    அவளுக்கென்று அம்மாவோ அப்பாவோ உடன் பிறந்தவர்களோ யாரும் கிடையாது மரியமாவது தன்னை உறவாக ஏற்றுக் கொள்ள மாட்டாளா என்று ஏங்கினாள். அதைப் பற்றி எத்தனை கனவுகள்! மரியமும் அவளும் சினேகிதிகளாக இருக்கப் போகிறார்கள். இருவரும் சேர்ந்து கடை கண்ணிக்குப் போகப் போகிறார்கள்... விருந்து விசேடங்களுக்குப் போகப் போகிறார்கள். அம்மா என்று எவளையும் இதுவரை நான்ஸி அன்பு காட்டியதில்லை மரியம் அவளுக்குத் தாயாக இருக்கப் போகிறாள்... இப்படிப் பல கனவுகள் ஏக்கங்கள்.

    ஊகூம். அப்படியெல்லாம் உறவு கொண்டாடும் எண்ணம் மரியமுக்குக் கடுகத்தனையும் இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த இரண்டு வருடங்களில் நான்ஸி அதைப் புரிந்து கொண்டிருந்தாள்.

    மைக்கேல்தான் பிடிவாதமாக நம்பினான். அம்மா மனம் மாறுவாள் என்று தீவிரமாக எதிர்பார்த்தான். வேறு வழியில்லாமல் இந்தத் திருமணத்துக்கு அம்மா ஒப்புக் கொண்டு விட்டால், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நான்ஸியுடன் சினேகமாகி விடுவாள் இருவரும் பிரமாதமான சினேகிதிகளாக ஆகிவிடுவார்கள். இது மைக்கேலின் நம்பிக்கை. அந்த அளவு நம்பிக்கை நான்ஸிக்கு இருக்கவில்லை.

    மைக், இந்தக் கல்யாணம் ஒரு போதும் நடக்காது, நடக்கக் கூடாது என்று உன் அம்மா சொல்லி விட்டால்? அதற்கப்புறம் என்ன செய்வாய்? என்று நான்ஸி அவனை அடிக்கடிக் கேட்பது வழக்கம்.

    அவள் மட்டும் சொல்லட்டும், அடுத்த நிமிடமே நாம் காரில் ஏறிக் கொள்ள வேண்டியது தான். எந்த ரெஜிஸ்திரார் ஆபீஸ் பக்கத்தில் இருக்கிறதோ அங்கே போக வேண்டியது தான். கல்யாணத்தை முடித்துக் கொள்ள வேண்டியது தான். நான்ஸி நாம் இருவருமே வயது வந்தவர்களாக்கும் மறந்து விட்டாயா? என்று அவன் பதில் சொல்வான்.

    சொல்கிறானே தவிர இதெல்லாம் அவ்வளவு சுலபமில்லை என்று நான்ஸிக்குத் தெரிந்திருந்தது. ரெஜிஸ்திரார் ஆபீசில் கல்யாணம் செய்து கொள்வது ஒரு பிரமாதமில்லை. இப்போதே அவர்கள் கணவன் மனைவி மாதிரிதானே இருந்து வருகிறார்கள்? ஆனால் அதற்கப்புறம்?

    சைக்கிளைத் தள்ளியபடி அவர்கள் மெளனமாக நடந்தார்கள் சூழ்ந்திருந்த இயற்கைக் காட்சிகளைப் பார்த்தவாறு,

    நீண்ட மெளனத்துக்குப் பின் அவன் அவள் கையைப் பற்றினான். நான்ஸி, ஐ லவ் யூ கண்ணே என்றான்.

    நானும் தான். என்றாள் அவள்.

    கவலை படிந்திருந்த அவள் விழிகளை ஒரு முத்தத்தால் மூடினான் அவன்.

    ஆனால் மனத்தில் அலைக்கழிக்கும் கேள்விகளை எதைக் கொண்டு மூட முடியும்? இருவருக்கும் அது புரியவில்லை.

    இன்றிரவு!

    இன்றிரவு அவன் தன் அம்மாவைப் பார்ப்பதில் தான் எல்லாம் இருக்கிறது.

    சைக்கிளை மெல்லக் கீழே கிடத்தினான் நான்ஸி. அவன் கைகளுக்குள் தஞ்சம் புகுந்து கொண்டாள்.

    மைக், எல்லாம் நல்லபடி முடியணுமே என்று கவலையாயிருக்கிறது.

    நிச்சயமாய் நல்லபடி தான் முடியப் போகிறது. அவள் கூந்தலை வருடி விட்டான் அவன். இதோ பார், இரண்டு பேரும் இப்படியே இங்கேயே நாள் பூரா நின்று கொண்டிருக்க வேண்டுமா வா.

    சைக்கிளை நிமிர்த்தி அவள் கையில் கொடுத்தான்.

    அடுத்த நிமிடம் அவர்கள் மறுபடி சைக்கிளில் பறந்தார்கள். சிரிப்பு! பாட்டு! விளையாட்டு! மைக்கேலுக்கு அம்மா ஒருத்தி இல்லவே இல்லை போல அவர்கள் பாசாங்கு செய்து கொண்டார்கள்.

    ஆனால் இருக்கிறாளே! மரியம் இருக்கிறாளே!

    மரியம் வெறும் பெண் மட்டுமல்ல. அவள் ஒரு ஸ்தாபனம். மைக்கேலின் வாழ்க்கையில் எப்போதும் குறுக்கிட்டுக் கொண்டேயிருக்கும் ஸ்தாபனம். இப்போது நான்ஸியின் வாழ்க்கையிலும் குறுக்கிடப் போகிறாள்.

    வானத்தில் வெயில் மெல்ல மெல்ல ஏறிக் கொண்டிருந்தது!

    கிராமப் புறங்களின் வழியே அவர்கள் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. ஒரு நிமிடம் அவள் அவனை முந்திக் கொண்டு செல்வாள். மறு நிமிடம் அவன் அவளுக்கு இணையாகச் சேர்ந்து கொள்வான். ஒரு சமயம் அவன் அவளைக் கேலி செய்வான். இருவரும் விழுந்து விழுந்த சிரிப்பார்கள். மறு சமயம் இருவரும் திடீரென்று சிந்தனை வயப்பட்டு மெளனமாகி விடுவார்கள்.

    எதிரே கடற்கரை தெரிந்தது, கூடவே அவர்களுக்குப் பழக்கமான முகமொன்றும் தெரிந்தது. பென்-அவர்களுடைய தோழன், சைக்கிளில் வந்து கொண்டிருந்தான் ஒரு பெண்ணுடன்.

    ஒவ்வொரு தடவையும் ஒரு புது அழகியை அவன் சினேகம் பிடிப்பான். இந்தத் தடவை ஒரு நீலக் கூந்தல் அழகி.

    எங்கே கிளம்பி விட்டீர்கள் இரண்டு பேரும்! சந்தை நடைபெறுகிறதே அங்கேயா? என்று சிரித்தான் பென். பிறகு தன்னுடனிருந்த பெண்ணை அறிமுகம் செய்து வைத்தான். அவள்

    Enjoying the preview?
    Page 1 of 1