நர்மதா

நர்மதா
‘அன்புள்ள தியாகு, உடேன என்ைன வந்து சந்திக்கவும். வரும்ேபாது ஒரு தாலி
ொகாண்டு வரவும். அல்லது ேமாதிரம் - அவசரம் - நர்மதா.”
நர்மதாைவப் பார்க்கத்தான் ேபாய்க்ொகாண்டிருக்கிேறன். கடிதத்ைத பஸ்ஸில்
முப்பது முைறயாவது படித்திருப்ேபன். நர்மதாவின் ொபாடி எழுத்துக்கள் எனக்குப்
பரிச்சயமானைவ. எறும்பு ஊர்வதுேபால, உலகத்துடன் ரகசியம் ேபசுவதுேபால,
தன்ைனச் சுருக்கிக் குறுக்கிக்ொகாண்டு ஒளித்துைவத்து, ேதைவயான அளவுக்கு
மட்டும் காட்டும் தயக்க எழுத்துக்கள்.
நாற்பது வார்த்ைத ேபசினால் நாலு வார்த்ைத பதில். அைவகளில் மூூன்று ‘அப்டியா’
‘ ஆமாவா ’ ேபான்ற விரய வார்த்ைதகள் .
இந்த ‘ஆமாவா’ அவளுைடய ஸ்ொபஷாலிட்டி. தமிழ் தாய்ொமாழி என்றாலும் கர்நாடக
மாநில விளிம்பில் சின்னவயசில் இருந்தேபாது ஏற்பட்ட ொகாச்ைசகளில் ஒன்று இந்த
‘ஆமாவா ?’ தமிழின் எளிய இலக்கணத்தில் கவிைத தடவித் தடுமாறுவாள். (என்
உள்ளுக்கு வரயா?) அவர்கள் பூூர்வீக வீடு லஸ் சர்ச் ேராடில் ஒரு சந்தில்
இருக்கிறது. வாசலில் ேபார்ட்டிேகாவில் ஸ்டாண்டர்டு ொடன் கார் நிற்கும். மாடி
பால்கனி வைளவு. உயரமான விட்டங்கள் ொகாண்ட அந்த வீட்டிற்கு எத்தைன முைற
தினம் விசுவாசமாக ஆஜராகியிருக்கிேறன்! (“வா தியாகு, காப்பி ொபாடி ொகைடச்சுதா?
ொநய்க்கு ொசான்ேனேன?”) அவர்கள் பாமிேரனியன் ராஜா ஒரு முைற பாதிக்கண்ைணத்
திறந்து
பார்த்து
சாஸ்திரத்துக்கு
உறுமிவிட்டு
கனவுகைளத்
ொதாடரும்.
புறக்கணிக்கப்பட்ட நாற்காலி. மூூன்று சக்கர ைசக்கிளில் அக்கா ைபயைன ஒரு
தடைவ தள்ளி விட்டிருக்கிேறன்.
ொகாடியில் ஊசி மல்லியின் வாசைன. அதில் ஒரு முைற பச்ைசப்பாம்ைபப் பார்த்தேபாது
என்மீது நர்மதா சாய்ந்திருக்கிறாள். கூூந்தலில் துளசி வாசைன. நர்மதா
சின்னவளாக, கச்சிதமாக இருப்பாள். உயரக் குைறவுப் பற்றித் தாழ்வுணர்ச்சி இன்றி
பதிொனட்டு
வயசிலும்
சின்னப்ொபண்
ேபால
பாவாைடயும்
தாவணியில்லாத
ேமற்சட்ைடயும் அவளுக்கு அவசியமற்ற கவர்ச்சிையத் தராமல் இயல்பாக
இருக்கும். சின்ன மார்பு. பட்டுப் பாவாைடையத் தைரயில் விரித்து, தைலமயிைர
நுனியில் மட்டும் சின்னதாக முடிச்சுப் ேபாட்டு ைகநிைறய மகிழம்பூூைவப்
பறித்துச் ேசர்த்து ைவத்து யாருக்ேகா ொதாடுப்பாள். மாய்ந்து மாய்ந்து ஸ்வஸ்திக்
ேகாலம் ேபாடுவாள். பாடுவாள். பாதி பாரதி வார்த்ைதகளும் பாதி ‘லல்லலா’வுமாக.
நர்மதா புளியங்ொகாட்ைடயும் பூூவிதழ்களும் மாக்கல்லும் மயிலிறகும் மரப்பாச்சி
ொபாம்ைமகளும் அதற்கு ேராஸ் நிற வாயிலில் ொவட்டிய புடைவயும் அதன் ேமல்
ஒட்டப்பட்ட சரிைகயும் ேசர்த்து, விேனாலியா ைவட் ேராஸ் ொபட்டிக்குள் ேசர்த்து
ைவத்திருப்பாள்.
“ஒரு தாலி அல்லது ேமாதிரம்.”
நர்மதாைவ நான் காதலித்ததாகச் ொசான்னால் உண்ைமைய வைளத்ததாகும்.
அவளுக்கும் எனக்கும் உறவு என்னால் தீர்மானிக்க முடியாத வார்த்ைதயற்ற
பாசம். ஏேதா ஒரு காரணத்ைதக் கண்டுபிடித்து அந்த வீட்டுக்குப்ேபாய்
அவளுடன் அல்லது யாருடனாவது ேபசிவிட்டு வருவதில் மட்டும் இன்பம் காணும்
உறவு.
1

நர்மதா

என்ன ேபச்சு?
இந்த சினிமா பார்த்தாயா? அந்த பாட்டு ேகட்டாயா? பள்ளியில் நடந்தொதன்ன?
பம்பாயிலிருந்து வரப்ேபாகும் பல்ேவறு கஸின்கள் -இப்படித்தான். உபத்திரவமில்லாத
அன்றாட உைரயாடல்கள். இதனூூேட ஒரு காதல் மனசு இருந்திருக்கிறைத உணராத
மைடயன் நான்.
“உடேன சந்திக்கவும்.”
ஒரு முைறயாவது ‘நர்மதா! நான் உன்ைனக் காதலிக்கிேறன்’ என்று ொசால்லத்
தவறிவிட்ேடேன! அவளும் அந்த ொதானியில் ஏதும் ேபசவில்ைலேய! ஒருமுைறதான் மிக
அரிதாக “உனக்கு எப்பவுேம இந்த மாதிரி புருவம் ொரண்டும் ேசர்ந்து இருக்குமா?”
என்று ேகட்டிருக்கிறாள்.
“ஏன் நல்லா இல்ைலயா?”
“நன்னா இருக்கு. அதனாலதான் ேகக்கேறன்.”
“கலாட்டா பண்றீங்க.”
“ேச ... இல்ைல. இந்த ‘ங்க’ எல்லாம் ேவண்டாம். நா உன்ைன விட சின்னவ.”
நர்மதாைவக் கல்யாணம் ொசய்து ொகாடுக்க அவர்கள் ஏற்பாடு ொசய்வதும் காதில்
விழும். ஒருமுைற புரசவாக்கம் ேபாய் மாப்பிள்ைள வீட்டாைர அைழத்துவர என்ைன
நர்மதாவின் தாய் அனுப்பியிருக்கிறாள். அப்ேபாது அவள் முைறத்து என்ைனப்
பார்த்தைத அர்த்தம் பண்ணிக்ொகாண்டிருக்க ேவண்டும்; தவறி விட்ேடன்.
நர்மதாவுக்குக் கல்யாணத்தில் இஷ்டமா இல்ைலயா? சரியாகத் ொதரியவில்ைல.
எப்ேபாதுேம மனசில் உள்ளதில் அஞ்சு சதவீதம்தான் ொவளிேய ொதரியும்.
“இதுவைர எத்தைன ேபர் உங்கைளப் ொபண் பார்க்க வந்துட்டாங்க நர்மதா!”
“கணக்குத் ொதரியைல. உனக்குத் ொதரிந்திருக்குேம!”
“ஒன்பது” என்ேறன்.
“ொநைனச்ேசன்” என்று கன்னம் குழி விழ சிரித்தாள்.
“என்ன?”
“நீ கணக்கு ொவச்சிண்டிருப்ேபன்னு.”
“அதுகூூடப் புரியவில்ைலயா மைடயா?”
ஏன் இப்படிப் பாமரனாக இருந்திருக்கிேறன்?
“உனக்கு நான் கல்யாணம் பண்ணிக்கிறதில் இஷ்டமில்ைலதாேன?”
ொமௌனமாக இருக்க –
2

நர்மதா

“பட்டுனு ொசால்லிடு, உண்ைமையச் ொசால்லிடு.”
“இஷ்டமில்ைலதான்!”
“என்ைனக் கல்யாணம் பண்ணிக்க ஆைசப்படற இல்ைல” என்றாள். ஆம ாம் என்று
ொசால்வதற்குப் பதில் “அதுக்குத் தகுதி இல்ைல நர்மதா.”
“என்ன தகுதி ேவணும்?”
“நல்லேவைல, நல்ல சம்பளம் இருக்கணும். நல்ல ேபமிலி, ஒேர ஜாதி இொதல்லாம் ...”
“இொதல்லாம் அப்பாவுக்கும்
இல்ைல!”
“உனக்கு என்ன முக்கியம்?”

அம்மாவுக்கும்

முக்கியம்.

எனக்கு

முக்கியேம

“அப்றம் ொசால்ேறன். நான் உன்ேனாட இந்த மாதிரிொயல்லாம் ேபசினைத யார்கிட்டயும்
ொசால்லக்கூூடாது. சத்தியம் பண்ணிக்ொகாடு!” என்று ைகைய நீட்டினாள்.
அவைளத் ொதாட்டேபாது இப்படிொயல்லாம் ொமன்ைமயான ைககள் இருக்குமா என்று
ஏற்பட்ட ஆச்சரியம் நிைனவிருக்கிறது. உள்ளங்ைகயில கிள்ளச் ொசான்னாள்.
“மாட்ேடன். வலிக்கும்” என்ேறன்.
“வலிக்கட்டும். ஏன் இப்படிக் ேகாைழயா இருக்ேக?” என்று என்ைன ஒரு மாதிரி
பார்ைவ பார்த்தாள்.
“என்ைனக் காப்பாத்துேவ இல்ைல?”
“புரியைல.”
“புரியைல?”
மடத்தனமாக ொமௌனம் சாதித்ேதன்.
“நான் சில காரியங்கள்
வருேவல்ைல?”

ொசய்யப்

ேபாேறன்.

உன்

உதவி

ேதைவயா

இருந்தா

“வருேவன் நர்மதா!”
“நம்பிக்ைகயா, அழுத்தந்திருத்தமா ொசால்ேலன். ேநராேவ பார்க்க மாட்டியா?”
அடுத்த முைற அவள் அப்பா ஹாலில் உட்கார்ந்துொகாண்டு சவுக்கத்ைதத் ேதாளில்
உதறிப்ேபாட்டுக் ொகாண்டு, “உன் ொபாண்ைணப் படிக்க ொவச்சது ொபரிய
தைலேவதைனயாய்டுத்து. இப்படி எல்லாத்துக்கும் மாட்ேடன் ொசான்னா எப்படி?
ைபயன்
ொகாஞ்சம்
தாேன
தல
வழுக்ைக.
இங்லண்ட்டில
இருக்கான்.
ஏகாந்தரத்துக்கு சம்பாதிக்கிறான். எப்படியாவது அவட்ட ேபசி சம்மதிக்க ொவக்க
ேவண்டியது உன் ொபாறுப்பு. எட்டு வயசு என்ன வயசு வித்தியாசமா? உனக்கும்
எனக்கும் எத்தைன வயசு வித்தியாசம்?”
“நான் ொசால்லி அவைள சம்மதிக்க ொவக்கேறன்” என்றாள் அம்மா தீர்மானத்துடன்.
பஸ்ஸில் ொசல்லும்ேபாது
படித்ேதன்.

அந்தக்

கடிதத்ைத
3

முப்பேதாராவது

தடைவயாகப்

நர்மதா

“அன்புள்ள தியாகு, உடேன என்ைன வந்து சந்திக்கவும். வரும்ேபாது ஒரு தாலி
ொகாண்டு வரவும். அல்லது ேமாதிரம் - அவசரம். நர்மதா.”
அவசரம் கடிதத்தில் ொதளிவாகத் ொதரிந்தது. உடேன கிைடத்த கிேரயான் ொபன்சிலில்
எழுதியது. தைலப்புள்ளிகள் சில இல்ைல. அழுத்தம் குைறவான சில இடங்களில்
கஷ்டப்பட்டுப் படிக்க ேவண்டியிருந்தது. நாலாக மடித்து புத்தகத்தில் ைவத்துக்
ொகாடுத்தனுப்பிய கடிதம். மடித்த இடத்தில் எதிர் திைசகளில் எழுத்துக்கள்
பதிந்திருந்தன. அைதப் பத்திரமாகப் ைபயில் ைவத்துக்ொகாண்டு லஸ் முைனயில்
திேயட்டர் அருகில் இறங்கி நடந்ேதன். ொமல்ல அவள் வீட்ைட அணுகிேனன். என்ன
ொசால்லப் ேபாகிேறன்? என்ன ேகட்கப் ேபாகிறாள்?
அந்த சந்ைத மட்டும் விட்டுவிட்டு இருமருங்கிலும் ப்ளாட் கட்டடங்கள்
முைளத்து அைவகளின் மண்ைட முழுவதும் ொடலிவிஷன் அண்ொடன்னாக்கள்
தாறுமாறாகப் பரவி, குறுக்கும் ொநடுக்குமா ேகபிள் டி. வி. சன்னல்களில் புகுந்து
புகுந்து, ஒேர சினிமா நூூறு அைறகளில் அலறிக்ொகாண்டிருந்தது. இஸ்திரி வண்டி,
கறிகாய் வண்டி, மறுவாழ்வுக்காக ஏற்பட்ட ொசருப்புக் கைட, பைழய ஃபர்னிச்சர்
கைட, மினரல் வாட்டர், மலர்க் ொகாத்து விற்கும் கைட, ைகேயந்தி பவன் சாம்பார்
வாசைன ேபான்றவற்ைறக் கடந்து அவள் வீடு மட்டும் பிடிவாதமாக இன்னும்
விற்கப்படாமல் அழுக்கு மஞ்சளில் அம்பதுகளின் கட்டட அைமப்பில் நின்றது.
வாசல் ேபார்ட்டிேகாவில் ஸ்டாண்டர்டு கார் தைரதட்டியிருந்தது. மூூன்று சக்கர
ைசக்கிள் வண்டி குழந்ைதக்காகக் காத்திருந்தது. அைழப்பு மணிைய அழுத்திேனன்.
உள்ேளயிருந்து ஒரு ேவைலக்காரப் ொபண் வந்து “யார் ேவணும்?” என்று ேகட்டாள்.
“நர்மதா அவங்கைளப் பார்க்கணும்.”
“லணடனலரநத வநதிரககாஙகேள அவஙகைளயா?”
லணடனா?
“நீங்க யாரு?”
“தியாகுன்னு ொசால்லுங்க.”
இவள் உள்ேள ொசல்ல சற்று ேநரம் காத்திருந்ேதன். நாற்காலி ஓரத்தில் தைலமாட்டில்
எண்ொணய்ப்பைசயுடன் இருந்தது. ஊஞ்சல், ொபரிய ேபாட்ேடாக்கள் எல்லாம்
அப்படிேய இருந்தன. ொவல்கம் ேஹாம் என்று அட்ைடயில் எழுதி அலமாரியில்
ைவத்திருந்தது. டவர் ஆப் லண்டன், பிக் ொபன் ேபான்ற இடங்கள் ேபாட்ேடாவிலும்
பீங்கானிலும் வண்ண அட்ைடயிலும் விளங்க, “வாங்க தியாகு! எப்ப வந்தீங்க?”
என்றாள் நர்மதா. “இப்பதான் வேரன்.” அவள் ைகையத் துைடத்துொகாண்டு “ொவரி
ைநஸ்! இத்தைன நாளா எங்க இருந்திங்க?”
“ொபரும்பாலும் ொமட்ராஸ்தான் நர்மதா. அப்றம் பங்களூூர், பேராடா. நீங்க?”
“நான் லண்டலருந்து ேபானவாரம்தான் வேரன்.”
“எவ்வளவு நாள் இருப்பீங்க?”
“திரும்பப் ேபாகப்ேபாறதில்ைல, இங்கதான் இனிேம வாசம்.” சற்று ேநரம் இருவரும்
ொசால்வதறியாமல் திைகக்க –
4

நர்மதா

“என்ன திடீர்னு?” என்றாள்.
“உங்க ொலட்டர் கிைடச்சது நர்மதா!”
“என்ன ொலட்டர்?”
ைபயிலிருந்து எடுத்துக் ொகாடுத்ேதன். “ஒரு புத்தகத்துக்குள்ள ொவச்சு
அனுப்பினது. அம்மா என்ன பண்ணாங்க, அலமாரில ேமல்தட்டில ொவச்சு ... நான்
பாக்கேவ இல்ைல. வீடு காலி பண்றப்ப கள்ளிப் ொபட்டிக்குள்ள ேபாய் ... நான்
இத்தைன நாளா இைதப் பார்க்கேவ இல்ைல நர்மதா.”
“சரிதான்!”
“இப்பதான் பைழய புத்தகங்கைளொயல்லாம் எடுத்துப் பார்த்தேபாது ொகைடச்சது.
உடேன வந்துட்ேடன்!”
நர்மதா ொவள்ொளழுத்துக் கண்ணாடிைய மாட்டிக்ொகாண்டு அந்தக் கடிதத்ைதப்
படித்தாள்.
தைல நைரத்து கண்களுக்குக் கீழ் கறுப்பு. தாைடயில் தைசொதாங்கினாலும்
கன்னம் குழி விழும் சிரிப்பு அப்படிேய இருந்தது. நான் ஹாலில் மாைல ேபாட்டிருந்த
ொபரிய படத்ைதப் பார்த்ேதன்.
“ைம ஹஸ்பண்ட்” என்று என்ைனத் ேதாேளாடு அைணத்து உள்ேள அைழத்துச்
ொசன்றாள்.
“நீங்க எப்பவுேம ேலட் தியாகு. ெலடடர அனபபிசச இரபததஞச வரஷம கழிசச
வந்திருக்கிங்க!”
1998

5