மதச்சார்பற்ற கட்சியா அ.தி.மு.க.?

தி ராவிடக் கட்சிகள் மதவாதக் கட்சிகள் அல்ல என்று இடதுசாரி அரங்கிலிருந்து ஒரு குரல் எழுந்ததாக
ஏடுகள் சுட்டிக் காட்டியிருக்கின்றன.

திராவிடர் கழகம்-நிச்சயமாக மதவாதக் கட்சி அல்ல.

தி.மு.கழகம்-உறுதியாக மதவாதக் கட்சி அல்ல.

அண்ணா தி.மு.கழகம்? ேகள்விக்குறி படெமடுத்து நிற்கிறது.
அமரர் எம்.ஜி.ஆர். இருந்தவைர அந்தக் கழகம் மதவாத சக்திகளுக்கு ேவலி ேபாட்டு நிறுத்தி இருந்தது.

மைறந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி உள்பட எத்தைனேயா பி.ேஜ.பி. தைலவர்கள் மரியாைத நிமித்தமாவது

அவைரச் சந்திக்க ஆைசப்பட்டனர். ஆனால், கைடசி வைர கதவுகள் திறக்கப் படவில்ைல.

ெசல்வி ெஜயலலிதா அ.தி.மு.க.வின் தைலைமப் ெபாறுப்ேபற்றார். தான் தைலைம ஏற்பது திராவிட இயக்க
வழி வந்த கழகம் என்பது அவருக்கு ெதரியாதா? ெதரியும். ஆனால், தான் ஒரு இந்துத்துவா என்பதைன

அவர் மைறத்ததில்ைல. அேயாத்தியில் பாபர் மசூதிைய இடித்து அதன்மீ து ராமருக்கு ஆலயம் அைமப்ேபாம்
என்று அத்வானி, பைடதிரட்டிச் ெசன்றார். விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்பட எல்லா இந்து
முன்னணி அைமப்புகளும் பங்குெகாண்டன. இந்தத் திருப்பணியில் அண்ணா தி.மு.கழகமும் சிம்பாலிக்காகக்
கலந்து ெகாண்டதற்காக விஸ்வ ஹிந்து பரிஷத் தைலவர் அேசாக் சிங்கால் பாராட்டுத் ெதரிவித்தார்.
அதைனத் ெதாடர்ந்து ெடல்லியில் ேதசிய ஒருைமப் பாட்டுக் குழுக் கூட்டம் நைடெபற்றது. ெசல்வி
ெஜயலலிதா கலந்து ெகாண்டார். பாபர் மசூதி இடிக்கப்பட்டைத நியாயப்படுத்தி அவர் ஆணித்தரமாக
வாதிட்டார். அந்தக் கூட்டத்தில் கலந்து ெகாண்ட அத்வானிேய அம்மாவின் வாதம் ேகட்டு அதிர்ச்சியில்
மூழ்கிவிட்டார்.

``இந்த அளவிற்கு எங்களால் கூட வாதாட முடியாது’’ என்றார்.
பாபர் மசூதிைய இடித்துத்தான் அங்ேக ராமருக்கு ஆலயம் எழுப்ப ேவண்டுமா என்று பின்னர் விவாதம்

எழுந்தது. அேயாத்தியில் அங்ேக ராமருக்கு ஆலயம் எழுப்பாமல் இத்தாலியிலா எழுப்ப முடியும்? என்று
எரிசரம் ெதாடுத்தார் ெஜயலலிதா.
இந்துக்களின் உணர்வுகளுக்கு வடிவம் ெகாடுக்க அவர் அச்சப்பட்டேதயில்ைல. அந்த வைகயில் பி.ேஜ.பி.ேய
அவரிடம் பாடம் கற்றுக் ெகாள்ள ேவண்டும்.

2001-ம் ஆண்டு சட்டமன்றத் ேதர்தலில் தி.மு.க.ைவத் தனிைமப்படுத்த அண்ணா தி.மு.க. ஓர் அணி
அைமத்தது. அந்த அணியில் இடதுசாரி கட்சிகள் அங்கம் ெபற்றன. இஸ்லாமிய, கிறிஸ்துவ அைமப்புகள்

ஆதரவுக் கரம் நீட்டின.

ெசன்ைன கடற்கைரயில் தமிழ்நாடு முஸ்லிம் முன்ேனற்றக் கழகம் ஒரு மாெபரும் ெபாதுக் கூட்டம்
நடத்தியது. அந்தக் கூட்டத்தில் ெஜயலலிதா பங்கு ெகாண்டு, பி.ேஜ.பி.ேயாடு உறவு ெகாண்டதற்காக

வருத்தம் ெதரிவித்தார். இனி எந்தக் காலத்திலும் அந்தத் தவைறச் ெசய்யமாட்ேடன் என்று உறுதிெமாழி
தந்தார். அன்ைறய நிைலயில் அவர் அப்படி வாக்குறுதி தந்தது காலத்தின் கட்டாயம். ஆனாலும் அவர்

இந்துத்துவ ஒளி விளக்குதான்.

ேதர்தலுக்குப் பின்னர் அவர் அரியைண ஏறினார். அவர் ெசய்த முதல் பணி என்ன? மயிலாப்பூர் கபாலீ சுவரர்
ேகாயிலில் அன்னதானம் என்று ஆரம்பித்தார். தி.மு.க. தயவில் சட்டமன்றத்ைத எட்டிப்பார்த்த பி.ேஜ.பி.
உறுப்பினர்கள் ஆரவாரம் ெசய்தனர்.

அடுத்து அவர் ெசலுத்திய ஏவுகைண ேதாழைமக் கட்சிகைளத் திைகக்க ைவத்தது. ஆனால் இந்துத்துவா

உலகம் ‘அன்ைனேய வாழ்க’ என எக்காளம் ஊதியது. ஆம். அவர் கட்டாய மதமாற்றத் தைடச் சட்டம்
ெகாண்டு வந்தார். ைமயத்தில் ஆளும் ேபாதும் மாநிலங்களில் ஆளும் ேபாதும் அப்படி ஒரு சட்டம்

ெகாண்டுவர பி.ேஜ.பி.க்கு துணிச்சல் பிறந்ததில்ைல. இந்தியாவிேலேய முதன்முதலாக இப்படிச் சட்டம்
ெகாண்டு வந்தவர் ெஜயலலிதாதான். அதைனப் பார்த்துதான் நேரந்திர ேமாடிேய அப்படி ஒரு சட்டம்

ெகாண்டு வந்தார்.

நள்ளிரவில் கைலஞர் ைகது ெசய்யப்பட்டார். இந்தியா முழுைமயும் எழுந்த எதிர்ப்ைபயும்

கண்டனங்கைளயும் கண்டு அன்ைறய பிரதமர் வாஜ்பாேய ஆடிப்ேபாய்விட்டார். அ.தி.மு.க. அரசு டிஸ்மிஸ்
ெசய்யப்படலாம் என்று ஆங்கில ஏடுகள் எழுதின.

ஆனால், ெசல்வி ெஜயலலிதாவிற்கு ஆதரவாக நாகபுரியிலிருந்து ஒரு குரல் எழும்பியது. அ.தி.மு.க. அரசு
மீ து ைக ைவக்காேத என்று பகிரங்கமாக வாஜ்பாய்க்ேக அந்தக் குரல் கட்டைளயிட்டது. அந்தக் குரல்
பி.ேஜ.பி.களின் குருபீடமான ஆர்.எஸ்.எஸ்.இயக்கத் தைலைமயின் ஆேவசக் குரல்.

எங்ேகா வனாந்தரத்தில் பிறந்த மூங்கில் இங்ேக புல்லாங்குழலாக கண்ணனின் கரங்களில் காட்சி

அளிக்கவில்ைலயா? அேத ேபால திராவிட இயக்க வழிவந்த அ.தி.மு.க. இன்ைறக்கு இந்துத்துவா
ேகாட்பாடுகளின் பூபாளம் என்று ஆர்.எஸ்.எஸ். அறிவுறுத்தியது.

‘படுெகாைலகளுக்கு 48 மணி ேநர சுதந்திரம் அளித்தவர்’, ‘ைசத்தான்களுக்கு சல்லடம் கட்டி விட்டவர்’

என்ெறல்லாம் நேரந்திர ேமாடிக்குப் பட்டங்கள் சூட்டினார்கள். ஆனால், அதற்கு அப்பால் அவர்

இந்துத்துவாவின் ேபார்ப் பைடத் தளபதி என்பதைன அவர்கள் மறந்துவிட்டனர். எனேவதான் ேமாடியின்
முடிசூட்டு விழாவில் ெசல்வி ெஜயலலிதா பங்கு ெகாண்டார், பரிசளித்தார்.
அந்த விழாவில் பி.ேஜ.பி. முதல்வர்கள் அல்லாமல் கலந்து ெகாண்ட ஒேர முதல்வர் ெஜயலலிதாதான்
என்று ெபருைம ெபற்றார்.

ேமாடியின் முடிசூட்டு விழாவில் கலந்து ெகாள்வதா என்று இடதுசாரி கட்சிகள் ேகாபக் குரல் எழுப்பின.
ஆனால் அதைனப் பற்றிெயல்லாம் அம்மா கவைல ெகாண்டதில்ைல. ெகாண்ட ெகாள்ைகயில், ஏற்றுக்
ெகாண்ட லட்சியத்தில் அவர் உறுதியாகப் பயணிப்பவர்.
ேசதுசமுத்திரத் திட்டம் தமிழகத்தின் ஒரு நூற்றாண்டுக்காலக் கனவுத் திட்டம். அந்தத் திட்டத்ைத
வலியுறுத்தாத தமிழகத் தைலவர்கேள இல்ைல. ஆனால் அந்தத் திட்டம் ெசயல்படுத்தப்பட்டால் லட்ேசாப
லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கடலுக்குள் ராமர் கட்டிய பாலத்திற்குச் ேசதாரம் ஏற்படும் என்று குரல்
ெகாடுத்து அந்தத் திட்டத்ைதேய தடுத்து நிறுத்தியிருப்பவர் ெஜயலலிதா.
ேசதுத் திட்டமா? ராமர் பாலமா? ராமர் பாலம் ேசதப்பட்டால் ேகாடானு ேகாடி இந்துக்களின் இதயம்
புண்பட்டு விடும் என்று வாதிட்டு வருபவர் ெசல்வி ெஜயலலிதா.

அவருைடய ெசயல்பாடுகெளல்லாம் எந்தத் தத்துவக் ேகாட்டிற்குள் அடங்கும் என்று ஆராய்வது ேவைல

ெவட்டி இல்லாதவர்கள், ெபாழுெதல்லாம் கட்டாந்தைரயில் புல் பறிப்பதற்குச் சமம். அவருைடய
அறிவிப்புக்கள் கணெரன்று

வரும். ெசயல்கள் மத்தாப்புச் சிரிப்ேபாடு அட்டகாசமாக வரும், மதச் சார்பற்ற
ேகாட்பாடுகெளல்லாம் அவைரப் ெபாறுத்தவைரயில் நமத்துப் ேபான ெவடிக்காத பட்டாசுகள்தான்.

‘நான் குறிப்பிட்ட இனத்ைதச் ேசர்ந்தவர்’ என்று சட்டமன்றத்தில் அவர் சங்கநாதம் ெசய்தார். எங்காவது
ேமைடயில் இப்படிப் பிரகடனம் ெசய்தால் காற்ேறாடு ேபாயிருக்கும். சரித்திரத்தில் பதிய ேவண்டும்
என்பதற்காக சட்டமன்றத்திேலேய பதிவு ெசய்து விட்டார்.
அண்ைமயில் குடியரசுத் தைலவர் ேதர்தல் நைடெபற்றது. அந்தத் ேதர்தலில் பி.ேஜ.பி. ேவட்பாளர்
ெஷகாவத்திற்குத் தான் அ.தி.மு.க. வாக்களித்தது.
இப்படி ஊசலாட்டமின்றி இந்துத்துவ அடிச்சுவட்டில் அ.தி.மு.க. ெதளிவாக நைடேபாட்டுச் ெசல்கிறது.
எனேவ, அந்தக் கழகம் மதச் சார்பற்ற கட்சியா, மதவாதக் கட்சியா என்று மூைளையக் குழப்பிக்

ெகாள்ளலாமா?

சீட்டுப் பங்கீ டு அடிப்பைடயில் உடன்பாடு காண விரும்புகிறவர்கள் அந்தக் கழகத்ைத அணுகலாம்.
கூட்டணியும் ேதர்தல் வைரதான். அதன் பின்னர் ஒவ்ெவாரு கட்சியும் தங்கள் வழியில் பயணம்

ெசய்யலாம்.

நாடாளுமன்றத் ேதர்தலுக்கு முன்னர் ஓர் அணி. தீர்ப்பிற்குப் பின்னர் ேவறு அணி என்ற நிைலைய

அ.தி.மு.க. எடுக்கும் என்பைத அடிக்கடி சிலர் சுட்டிக்காட்டுவைதயும் இங்ேக நிைனவில் ெகாள்ள ேவண்டும்.
- நன்றி : குமுதம் ரிப்ேபார்ட்டர், 24.8.2008 ( இந்த கட்டுைர முரெசாலி 21.08.08ல் வந்தது )

Sign up to vote on this title
UsefulNot useful