Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ariviyal Sirukathaikal - Part 2
Ariviyal Sirukathaikal - Part 2
Ariviyal Sirukathaikal - Part 2
Ebook172 pages1 hour

Ariviyal Sirukathaikal - Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580111001857
Ariviyal Sirukathaikal - Part 2

Read more from Arnika Nasser

Related to Ariviyal Sirukathaikal - Part 2

Related ebooks

Reviews for Ariviyal Sirukathaikal - Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ariviyal Sirukathaikal - Part 2 - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    அறிவியல் கதைகள் - பாகம் 2

    Ariviyal Sirukathaikal - Part 2

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books       

    http://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.      

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சிறுவன்

    மோத்தி

    இரட்டையர் புதிர்

    சிம்ரன் அற்புதம்

    நகராதே

    கொக்கரக்கோ…!

    மோனாலிசா கடிகாரம்

    முற்பிறவி…

    கேன்ட்டிட் கேமிரா

    மாயக்கண்ணாடி

    யவனச் சந்தர்

    மாமிசம்

    விக்கி

    சூர்யநிலா

    வரம்

    சாத்தான்

    கடைசி மனிதன்

    அறிவியல் கதைகள் - பாகம் 2

    ஆர்னிகா நாசர்

    சிறுவன்

    ஹாய் வாசக்ஸ்! பெளதிகத்தில் ‘குவாண்டம் மெக்கானிக்ஸ்’ படித்திருக்கிறீர்களா? ‘ஸ்க்ரோடிங்கர்ஸின் பூனைகள்’ தியரி பற்றித் தெரியுமா உங்களுக்கு? நான் உங்களுடன் பேசிக்கொண்டிருப்பதற்கு இந்த தியரிதான் உதவியது. புரியவில்லை அல்லவா உங்களுக்கு? நோ ப்ராப்ளம்!

    என் பெயர் ‘ஷிமியோன்!’ ‘சலேபா’ நட்சத்திரத்தைச் சேர்ந்தவன் நான். எங்கள் நட்சத்திரம் உங்கள் பூமியிலிருந்து 1400 ஒளி வருடங்கள் தூரத்தில் உள்ளது.

    எங்களின் ஆயுள் உங்களின் ஆயுளைவிட 100 மடங்கு அதிகம். நீங்கள் அதிக பட்சம் 100 வருடம் உயிர் வாழ்வீர்கள் என்றால் நாங்கள் பத்தாயிரம் வருடம் உயிர் வாழ்வோம். உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் எனக்கு வயது 600 உங்கள் கணக்கு நான் ஆறு வயது சிறுவன்.

    எங்களுக்கு இரு இதயங்கள் உண்டு. ஒன்று இயங்க மறந்தாலும் இன்னொன்று தொடர்ந்து இயங்கும்.

    உங்களைவிட மிதமான வேகத்தில் சுவாசிப்போம். ஆக்ஸிஜனை மிகக் குறைவாக உட்கொள்வோம். ஆகவே எங்களது இரத்த ஓட்டத்தில் கூடுதல் ஆக்ஸிஜன் ஏற்படுத்தும் விஷத்தன்மை அறவே காணப்படாது. எங்களுடைய தூக்கத்துக்கும் உங்களுடைய தூக்கத்துக்கும் அடிப்படை வித்தியாசம் உண்டு. எங்களது தூக்கம் குளிர் நிலை தூக்கம். சமயங்களில் தொடர்ந்து 800 மணிநேரம் தூங்குவோம்.

    எங்களது மூளையின் செல்கள் மீண்டும் மீண்டும் வளரக்கூடியவை. பாதியை வெட்டி எடுத்தாலும் பல்லி வால் போல் திரும்ப வளர்ந்து கொள்ளும் தன்மை படைத்தவை. எங்களது இனப்பெருக்கம் வித்தியாச மானது. ஜோடி சேர்ந்தும் குட்டி போடுவோம். ஜோடி இல்லாமலும் முட்டையிட்டு குஞ்சு பொரிப்போம். மனதின் கட்டளைக்கேற்ப ஆணிலிருந்து பெண்ணாகவும் பெண்ணிலிருந்து ஆணாகவும் மாறும் வல்லமை கொண்டவர்கள் நாங்கள்.

    வாழ்நாளில் எங்களுக்கு பத்துமுகங்கள் உண்டு. ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை முகத்தின் தோல் உரிந்து புதிய முகம் பூக்கும். இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் எங்களுக்கு ஆயுள் முழுக்க முதுமை முகம் வராது.

    ஒரே நேரத்தில் நாங்கள் இரு வெவ்வேறு இடங்களில் வாழும் சக்தி பெற்றவர்கள். கடந்த பத்தாயிரம் வருடங்களில் பல ஆயிரம் தடவை பூமிக்கு சுற்றுலாப் பயணியாய் வந்து போயிருக்கிறார்கள் எங்கள் கிரகத்தவர்கள். இந்தத் தடவை பள்ளி விடுமுறை விட்டதும் பூமிக்கு மூன்று நாள் (உங்கள் கணக்குக்கு பத்து மாதம்) சுற்றுலா போய்வருவேன் என பெற்றோரிடம் அடம் பிடித்தேன். பெற்றோர் சம்மதித்தனர். எங்கள் அரசாங்கம் எனது பெற்றோருக்கு ஒருமாய ‘ஷிமியோனை’ப் பரிசளித்து விட்டு ‘என்னை’ டாக்கியான் அணுகலத்தில் பூமிக்கு அனுப்பியது. கிரகத்திலிருக்கும் எனது பெற்றோருக்கு பூமியில் இருக்கும் நான் பொய். பூமியிலிருக்கும் உங்களுக்கு ‘சலேபா கிரகத்து நான்’ பொய்.

    டாக்கியான் அணுகலத்தில் எனக்குத் துணையாக மூத்த விஞ்ஞானிகள் வந்தனர். உங்களது பூமியை எங்களதுகலம் உங்களுடைய கணக்கில் பத்துமாதங்களாகச் சுற்றி வருகிறது. எங்களது விருப்பம் இல்லாமல் எங்கள் கலத்தை உங்களின் எந்தக்கருவியும் மோப்பம் பிடித்துவிட முடியாது.

    பூமி காலண்டர்படி 14.4.98 அன்று நான் எனது கலத்திலிருந்துபூமிக்கு டெலிபோர்ட்டிங் செய்யப்பட்டேன். ‘ஜிவ்வுக்!’

    கோடி கோடி அணுக்களாய்ப் பிரிந்த நான் கே.கே.நகரின் ஜீவானந்தம் தெருவிலிருக்கும் ஒரு பங்களவின் முன்போய் கோர்த்து நின்றேன்.

    இரும்புக்கேட்டைத் திறந்து கொண்டு உள்வாசலுக்குப் போய் அழைப்புமணியை அமுக்கினேன்.

    நைட்டி உடுத்திய கண்ணாடிப் பெண் வெளிப்பட்டாள். என்னை ஏற இறங்கப் பார்த்தாள். யாருப்பா நீ? கனிவாய் வினவினாள்.

    பேசத் தெரியாதவன் போல நடித்தேன். ‘பசிக்கிறது’ என பாவனை காட்டினேன்.

    என்னை இரக்கமாய்ப் பார்த்தாள். உள்ளே அழைத்துச் சென்று சாப்பாடு போட்டாள்.

    என்ன மோசமான உணவு இது? பூமி மக்களின் தாவர, மாமிச வகை உணவு வகைகளும் சமையலும் இவ்வளவு கேவலமாக உள்ளதே? எங்கள் கிரகத்து உணவுவகைகளில் புரதம் அபரிமிதம்.

    இருந்தாலும் சாப்பிட்டேன்.

    அதற்குள் அவளது கணவனும் மகன் மகளும் காரில் வந்து இறங்கினர்.

    கணவன் என்னை நெருங்கி வந்து பார்த்தாள்.

    கணவன் என்னை ஏதேதோ விசாரித்து திருப்தியானான்.

    பாவம்! மன வளர்ச்சி குன்றிய பெற்றோர் கைவிட்ட சிறுவன்! என்றாள்.

    சிரித்தேன் மனதுக்குள்.

    அந்த பத்து நிமிடங்களில் நான் உங்களின் தமிழ் மொழியை மின்னல் பயிற்சியாய்க் கற்றுக் கொண்டேன். தவிர அவர்களின் நினைவுத் திரள்களை எனது கண்களாலேயே ஸ்கேன் செய்து அவர்களின் பயோடேட்டாக்களும் தெரிந்து கொண்டேன்.

    கணவன் அவினாஷ். வயது 35 உயரம் 5-6 பிரபல விஞ்ஞான எழுத்தாளன். நடு வகிடு கேசம். பவர் கிளாஸ். பிரஞ்ச்குறுந்தாடி பியர்தொப்பை,

    மனைவி யாழினி ஒரு கார்டுனிஸ்ட் வயது 30. உயரம் 5-5" பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் அனிமேட்டராக பணிபுரிகிறாள்.

    ஒன்பது வயது மகன் தாணு.

    ஆறு வயது மகள் அஞ்சு.

    ஒரு பார்ட் டைம் வேலைக்காரி.

    அன்றிலிருந்து என்னையும் ஒரு வேலைக்காரனாகச் சேர்த்துக் கொண்டார்கள். சாப்பாடு மட்டும்தான். சம்பளமில்லாத வேலைக்காரன். எனக்குப் பெயர்கூட ‘நந்து’ எனச் சூட்டினர்.

    ஆனால் செல்லமாக அசடு! ஊமைப்பய்யா! புதிர் மூஞ்சா! என்று விளிப்பார்கள்.

    சிரித்துக் கொள்வேன். அட அறியாமை மனிதர்களே!

    புதிதாய்ப் பேசுவது போல அவ்வப்போது அரைகுறையாய் வார்த்தைகளை உச்சரிப்பேன்.

    ஷப்பாடூ! - வணக்காம்! – அம்மாய்! – அப்பர்! – டெலிவிஸன்! - பூனேய்! – மாடு! – பந்தாச்சு! - தம்பீநொல்ல பய்யன்! - பொக்காரு பெந்திரி!

    அந்த விஞ்ஞான எழுத்தாளன் நெற்றியில் தட்டிக் கொண்டு விழுந்து விழுந்து சிரிப்பான். பாரு யாழினி, இவன் தமிழை. இந்த அசடு தட்டுத் தடுமாறி நாலு தமிழ் வார்த்தை பேச எத்தனைநாளாயிருக்கு பாரு!

    நான் மனதுக்குள் கெக்கலித்தேன். கதை எழுதும் அசடே! இப்போது எனக்கு தமிழில் மூன்று லட்சம் வார்த்தைகள் தெரியும். நானா அசடு! நீ அசடு. உன் மனைவி அசடு. ஒட்டு மொத்த உன் பூமி மக்கள் அசடு!"

    அந்தரங்க கணிணியில் கதை டைப்புவான் எழுத்தாளன். முடித்தவுடன் பெரிய சாதனையாய் அதனை மனைவி குழந்தைகளிடம் வாசித்துக் காட்டுவான்.

    அவனின் எல்லா கதைகளிலும் –

    வெளி கிரகத்து மக்கள் அசிங்கமான கொடுரமான பாதி மிருகம் பாதி மனித வடிவில் இருப்பர். வாயிலிருந்து பிசின்போல் ஏதோவழியும். பூமியை ஆக்கிரமிக்க சதி செய்வார்கள். பூமியிலிருக்கும் ஒரு ஹீரோ அந்த சதியை முறியடிப்பான். கதை, கடைசியில் மக்கள் - பூமி தப்பித்தது என்று பெருமூச்சு விடுவார்கள்.

    உங்களின் பூமியை எங்களுக்கு நீங்கள் இலவசமாய்க் கொடுத்தாலும் வேண்டாம். பல்வேறு மாசு படிந்த பூமி உங்கள் பூமி.

    வாயைத்திறந்து கதை கேட்கும் என்னிடம் வினவுவான் எழுத்தாளன். நந்து என் கதை எப்டிடா இருந்திச்சு?

    உண்மையைச் சொன்னால் நொந்து போய் விடுவான்.

    எனக்கு புரியவில்லை சார்!

    உன்னைப் போய் கேட்டேன் பாரு!

    நீங்கள் வெளிகிரகத்து மனிதர்களைப் பார்த்திருக்கிறீர்களா சார்?

    ஹ. நக்கலா? நேரா பாத்தாத்தானா? துல்லியமா யூகிச்சு வச்சிருக்கேனே. போதாது? என்யூகங்கள வெளிகிரகத்துக்காரன் பாத்தா படிச்சாஅசந்து போயிடுவான்!

    ஆமாமாம்!

    வெளிகிரகத்து மனிதர் உருவங்களைத் தப்பும் தவறுமாய் அனிமேஷனில் வரைந்து கொண்டிருப்பாள் யாழினி.

    ஆனால் எல்லோரும் அவளின் ஒவியங்களை ஆஹா! ஒஹோ என்று புகழ்வார்கள்.

    இவர்கள்தான் முட்டாள்களாக இருக்கின்றார்கள் என்றால் இவர்களின் சக மனிதர்கள் அடி முட்டாள்களாக இருந்தார்கள்.

    ஒரு நாள் ஏதோ நினைத்துக் கொண்டவனாய் எழுத்தாளனைக் கேட்டேன்.

    ஏன் சார்! நான் அழகா, அழகு இல்லையா?

    உன்னித்தான். சினிமா கினிமாலயா நடிக்கப் போறே? இம்… உன் மூஞ்சி மாதிரி ஒரு மூஞ்சிய நா பார்த்ததே இல்லடா! உன்ன அழகுன்னோ அசிங்கம்னோ ஒத்தை வார்த்தைல வர்ணிக்க முடியாது. வினோத மூஞ்சிக்காரன் நீ. ஏதோ கலப்புடா நீ இந்தியனுக்கும் ஸ்வீடன் காரிக்கும் பிறந்த ஆண் - ஆப்பிரிக்கனுக்கும் ஆஸ்திரிரேலியாக்காரிக்கும் பிறந்த பெண்ணைப்புணர்ந்து உன்னை பெத்திருக்கணும்.

    அசடு போல் சிரித்து வைத்தேன்.

    எட்டு மாதங்களில் இவர்கள் வெளி கிரகத்து மனிதர்களைப் பற்றி ஆயிரம் முறை கதைத்திருப்பார்கள்; யூகமாய் ஒவியங்கள் வரைந்து தள்ளியிருப்பார்கள். தப்புத் தப்பாய் இவர்கள்தவிர வெளிகிரகத்து மனிதர்களைப்பற்றி மற்றவர்கள் எழுதிய கதைகளை வாசித்தேன்;

    Enjoying the preview?
    Page 1 of 1