Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sikaram Silandhikkum Ettum
Sikaram Silandhikkum Ettum
Sikaram Silandhikkum Ettum
Ebook221 pages1 hour

Sikaram Silandhikkum Ettum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இவர் - தாமிரபரணி தந்த இலக்கிய விளைச்சல். கவிதைப் பெண் என்பது இவரது முகம். நெல்லை மண் எல்லை கடந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என நேசிப்பவர். பெண்ணியவாதி நிலை கடந்து மனித நேயவாதி(Not feminist but humanist) என்னும் தளம் புகுந்து யோசிப்பவர்.
திரு மு.க.ஸ்டாலின், பத்மஸ்ரீ கமல் ஹாசன் மற்றும் பலர் வெளியிட்ட தொகுப்புகளோடு, கவிதை சிறுகதை புதினம், கட்டுரை, திரைப்பாடல்கள் என சிறகு விரிக்கும் பன்முகப் படைப்பாளி.
அவனின் திருமதி, தீ, தோஷம், பூஜை, கழிவு - முத்திரைச் சிறுகதைகளாக ஆனந்த விகடன் வைர விழாவில் பரிசு பெற்றவை.
உயரிய இலக்கிய விருதுகள் பெற்ற இவரின் படைப்புகள் கல்லூரிப் பாடமாகவும், ஆராய்ச்சி மாணவர்களின் முனைவர் பட்டப் பாதையாகவும் சிறக்கின்றன.
பல சாதனைகளுக்குப் பிறகும், தன் அடுத்தக் கட்டத்தை நோக்கிப் பயணம் செய்கிறார். திரைப்படப் பாடல்களும், கதை வசனமும் எழுதிவருகிறார்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352852499
Sikaram Silandhikkum Ettum

Read more from Andal Priyadarshini

Related to Sikaram Silandhikkum Ettum

Related ebooks

Reviews for Sikaram Silandhikkum Ettum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sikaram Silandhikkum Ettum - Andal Priyadarshini

    http://www.pustaka.co.in

    சிகரம் சிலந்திக்கும் எட்டும்

    Sikaram Silandhikkum Ettum

    Author :

    ஆண்டாள் பிரியதர்ஷினி

    Andal Priyadarshini

    For other books

    http://www.pustaka.co.in/home/author/andal-priyadarshini

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    விடியும் நேரம்.

    சூரசம்ஹாரம்

    சிகரம் சிலந்திக்கும் எட்டும்

    விடியும் நேரம்.

    1

    வெள்ளை வேண்டாம். கறுப்பும் வேண்டாம். ஸ்கின் கலர்ல குடுங்க… உங்க நிறத்துல. பொன் நிறமா...

    கவுண்ட்டர் எதிரிலிருந்தவன் அணுஅணுவாய் இவளை உற்றுப் பார்த்துச் சொன்னான். அரை மணி நேரமாய்ப் படுத்துகிறான்.

    உள்ளுக்குள் தகிப்பும், தடுமாற்றமும் இருந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல்- விஜயா- உள்ளாடைப் பெட்டிகளை உருவினாள். வெள்ளை, கறுப்பை ஒரமாய் வைத்துவிட்டு, சந்தன நிற உள்ளாடைகளை எடுத்தாள்.

    பண்டிகை நேரம். கடையில் கூட்டம் அலைமோதியது. காலையிலிருந்து, ராத்திரி வரை நின்று நின்று, கூட்டத்தோடு பேசிப் பேசி அவர்களுக்குத் தேவையான பொருள்களை எடுத்துக் கொடுத்து, முகம் சுளிக்காமல் பேசி, சின்னப் புன்னகையோடு அவர்களின் சில்மிஷங்களைச் சமாளித்து, பில் போட்டு அனுப்புவதற்குள், முதுகுத்தண்டு விட்டுப் போய்விடும். எலும்பு எலும்பாய்க் கழன்று போய் விடும். முழங்கால் ரெண்டும் கெஞ்சும். ‘ரெண்டு நிமிஷம் உட்காரேன். ஆசுவாசப்படுத்திக்கறேன்’ என்று மெளன மாய்க் கேட்கும். ம்ஹூம். உட்கார முடியாது. உட்காரக் கூடாது. சூபர்வைசர் ராணி பார்த்துவிட்டால், கன்னா பின்னாவென்று புகார் எழுதி முதலாளியம்மாவிடம் கொடுத்துவிடும். வாங்குபவர்கள் யாருமில்லாத நேரத்தில் ரெண்டு நிமிஷம் உட்கார்ந்தாள் என்பதால்தான்- போன மாசம் ஒரு பெண்ணிற்குக் கல்தா கொடுத்தார்கள். ஏன் வீண் வம்பு? கால் மரத்துப் போனாலும் சரி, வீங்கிப் போனாலும் சரி, விற்பனைப் பெண்கள் எல்லோருமே நின்று கொண்டேயிருப்பார்கள்.

    ‘வேலை வேணுங்கறச்சே மட்டும்- பல் இளிச்சிட்டு வர்றிங்க. கைல கால்ல விழுந்து, கண்ணீர் விட்டு சேர்ந்துக் கறீங்க... அப்புறம்- நிக்க முடியல்ல. நடக்க முடியல்லேன்னா எப்படி? தெரிஞ்சுதானே வந்தீங்க? நிக்கணும் தான். நின்னுதான் விற்பனை பண்ணனும். சுளையாச் சம்பளம் வாங்கறீங்க. நிக்க மட்டும் கசக்குதா..?

    வாடிக்கையாளர்கள் இருக்கிறார்களா? இல்லையா? வேடிக்கை பார்க்கிறார்களா? என்கிற கவலையேயில்லாமல் ராணி- போன மாசம் கத்தியது- இதோ இந்த நிமிஷம் கூடக் காதில் கேட்டது விஜயாவுக்கு.

    பத்து டப்பாவை மேலே பரத்தியவள்- நிமிர்ந்து பார்க்காமலே சொன்னாள்.

    சைஸ் என்ன சொல்லுங்க ஸார்?

    …….

    ஸார்- அளவு கேட்டேன்.

    கொஞ்சம் வேகமாய் நிமிர்ந்தாள்.

    ம்… அப்படிக் கேளுங்க. முகத்தைப் பார்த்துக் கேளுங்க... என்ன வெட்கம்..?

    கரப்பான் பூச்சியாய் அவனின் பார்வை மேலே ஊர்ந்தது… குமட்டியது விஜயாவுக்கு.

    வெளி இடம் என்றால் காலில் கிடப்பதைக் கழட்டிக் கண்மண் தெரியாமல் போடுபோடென்று போட்டிருப்பாள்.

    கடைக்குள்- அங்கங்கே- ரிமோட் கண்ட்ரோல் கேமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பதில், கொஞ்சம் முகம் சுளித்தாலோ, எரிச்சலாய்ப் பேசினாலோ, பல்லைக் கடித்தாலோகூடப் போதும். பதிவாகிவிடும்… கிடைக்கும் ஆயிரத்து ஐநூறுக்கும் வேட்டு. அதனாலேயே இவனை மாதிரி நாய்களைச் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இவர்களின் தர்மசங்கடமும்- இக்கட்டும் புரிந்ததனால்இந்த மாதிரி தடியன்கள் நிறைய தரம்- விஜயா மாதிரி விற்பனைப் பெண்களைச் சீண்டிப் பார்க்கிறார்கள். சில்மிஷம் செய்கிறார்கள். குமட்டும் கேள்விகளைக் கேட்கிறார்கள். எச்சிலை விழுங்கினாள் விஜயா.

    அவன் முகத்தில் காறித் துப்ப மனசு பரபரத்தது. பளாரென்று அறைந்து பல்லை உடைக்கக் கை துறுதுறுத் தது. ம்ஹூம். ஒன்றும் பண்ண முடியாது. எவ்வளவு சீக்கிரம் இவனை அனுப்புகிறேனோ அத்தனை நல்லது. சட்டெனத் தன்னைச் சுதாரித்துக் கொண்டாள். அவனை நேருக்கு நேராகப் பார்த்தாள். குரலை அழுத்தமாக்கிக் கொண்டாள்.

    உங்க ஒய்ஃபோட அளவு சொல்லுங்க ஸார்.

    "அளவு என்னன்னு தெரியல்லியே… சுமாரா -உங்களோடது மாதிரிதான். உங்க அளவு என்ன மேடம்.? -ஒன்றும் தெரியாத அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக் கேட்டான். உடம்பெல்லாம் பற்றி எரிந்தது விஜயாவுக்கு.

    உங்க மனைவியோட அளவு தெரியல்லேன்னா- உங்க அக்கம் பக்கத்து வீட்டு ஆம்பளைங்ககிட்டக் கேட்டுட்டு வாங்க ஸார்… நீங்க மத்த பெண்களை மேயற மாதிரி- அவங்க- உங்க மனைவியை ரசிச்சிருப்பாங்க...

    கத்தி. கூர்மையான கத்தி. உயிரையே அறுக்கும் கத்தியைச் சிரித்துக் கொண்டே சொருகினாள் விஜயா.

    கேட்டு வர்றீங்களா ஸார்… இல்லேன்னா தோராயமா சொல்றீங்களா… நேரமாகுது பாருங்க. மத்த கஸ்டமர்ஸையும் கவனிக்கணுமே…

    வெளிறிப் போனான் அவன். கண்கள் ஜிவ்வெனச் சிவந்தது தெரிந்தது. குளிர்ப் பதனத்தையும் மீறிச் சட்டென வியர்த்தது.

    குட்டக் குட்ட- ஒரளவுக்குத்தான் குனிய முடியும் ஸார்… வயித்துப் பொழைப்புக்காக வேலைக்கு வர்ற பொண்ணுங்களையெல்லாம் சொடக்குப் போட்டுக் கூப்பிடலாம்னு நெனைக்காதீங்க... இந்தாங்க பில். கவுண்டர்ல பணம் குடுத்திடுங்க... மெட்டீரியல் அங்க போயிடும்.

    முகமெல்லாம் வெளிறிப்போய், கைகால் வெலவெலத் துப் போய்- பில்லோடு வெளியேறினான்.

    யப்பா… நகர்ந்தானே எருமை மாடு… நானும் பார்க்கறேன். புடிச்சு வச்ச புள்ளையார் மாதிரி இங்கேயே நின்னு அழிச்சாட்டியம் பண்ணிட்டிருந்தான்… பக்கத்தில நிக்கற பொம்பளை மேலெல்லாம் இடிச்சுக்கிட்டு. தெருநாய்…

    -நகர்ந்து வந்த பெண்மணி, உரத்துப் புலம்பினாள்.

    நல்லாச் சொன்னே விஜி… சாகறவரைக்கும் மறக்காது அவனுக்கு…

    -வாய் அசையாமல் பேசிப் பாராட்டினாள் கீதா. கைபாட்டுக்கு உள்ளாடைகளை எடுத்துப் போட்டு விற்பனை செய்தபடி இருக்க- விஜயா எச்சரிக்கை செய்தாள்.

    ஜாக்கிரதை கீதா. சோடாபுட்டி சூபர்வைசரு அங்கேருந்து நம்மளையே பார்க்குது. அனாவசியமா வம்புல மாட்டிக்காத அப்புறமாப் பேசிக்கலாம்…

    அப்புறம்- மளமளவென்று விற்பனையில் மூழ்கிப் போனார்கள்.

    பதினோரு மணிக்கு தேநீர் வந்தது.

    ஒரு அஞ்சு நிமிஷம் விடுதலை.

    பாத்ரூம் போய்விட்டு வந்து டீ குடிப்பதற்குள் அஞ்சு நிமிஷம் பறந்தே போயிருக்கும். அன்றைக்கும் அப்படித் தான்.

    என்ன விஜி? டீ குடிக்க இம்புட்டு நேரமா? பாத்ரூம்ல போயி குடியிருக்கியா என்ன? போனமா வந்தமான்னு இல்லாம, பாத்ருமுள்ள போயி ஒளிஞ்சிக்கிட்டா, கதவைத் தட்ட மாட்டேன்னு நினைப்பா? தொந்தரவு தர மாட்டேன்னு நினைப்பா? ம்? கதவை உடைச்சுட்டு, நீ இருக்கற நிலையிலயே தரதரன்னு வெளிய இழுத்துப் போடுவன்… மனசில வச்சுக்க.. ம்.. ம்.. மசமசன்னு நிக்காத… வேலை யாவட்டும். உன்னோட கவுண்டர்லேருந்து நிறைய பில்லு வரமாட்டேங்குதுன்னு புகார்… இப்ப பார்க்கறேன்.. இன்னிக்கு எத்தனை ஐட்டம் விக்கறேன்னு பார்க்கறேன்…

    கையில் கோலெடுத்து மிரட்டாத குறையாகச் சிடுசிடுத் தாள் மேற்பார்வையாளர் ராணி.

    விஜயா- இந்த ஆயத்த ஆடைக் கடையில் விற்பனை யாளராகச் சேர்ந்து நாலு மாசம்தான் ஆகியிருந்தது.

    குழந்தைகள் ஆடை, பெண்கள் ஆடைகள் பிரிவிலெல்லாம் இந்த அளவுக்குப் பிரச்னை இருக்காது. இது- பெண்களின் உள்ளாடைப் பிரிவு. கணவன் மனைவியாய் ஜோடியாய் வருபவர்களால் பிரச்னை இருக்காது. தனியாக வரும் ஆண்களால்தான் எல்லாக் கஷ்டமும் ‘அளவு தெரியாது’ என்பார்கள். வேண்டுமென்றே ‘உங்களோடது மாதிரிதான். குடுங்க’ என்பார்கள். இதுவாவது பரவாயில்லை. ஆண்கள் உள்ளாடை உலகம்தான் கொடுமையானது. யார் கவுண்டரில் விற்பனை சரியில்லையோ- அந்தப் பெண்களை ஆண்கள் உள்ளாடைக்கு அனுப்பிவிடுவார்கள், தண்டனையாக, வயிறு என்று ஒன்று இருக்கிறதே. வேலையை விட்டு விடாமல், அழுதுகொண்டே அங்கே போகும் பெண்கள் இருக்கிறார்கள். ‘உன் வேலையும் வேணாம், ஒண்னும் வேணாம். என்று உதறி விட்டுப் போக முடியுமா? ஒருத்தி வெளியே போனால்- அந்த வேலையில் ஒட்டிக்கொள்ள வெளியே நூற்றுக்கணக்கில் பெண்கள் காத்திருக்கிறார்களே.

    அதிகம் படிக்காத கும்பல். பத்தாவது, பன்னிரண் டாவது தோல்வியடைந்த பெண்கள், கல்யாண வாழ்க்கை சரியாக அமையாதவர்கள், கணவன் சரியில்லாதவர்கள்.;.. இப்படிப் பெண்கள்தான் எல்லாருமே. வாழ்க்கையில் என்னதான் பிரச்னை என்றாலும், மூணு வேளை வயிற்றுப் பசி மட்டும் தவறாமல் வந்துவிடுகிறதே... சோகமும், கண்ணிரும், வருத்தமும், வேதனையும்- பசிக்கு முன்னால் மண்டியிடுகிறதே… இவர்கள் தருகின்ற ஆயிரம், ஆயிரத்தைநூறு, ரெண்டாயிரம் சம்பளம் சாதாரணமா என்ன? இதுவும் இல்லாமல், திண்டாடித் தெருவில் நிற்க முடியுமா?

    அதனால்தான் என்ன பிரச்னை என்றாலும் சிரிப்பைத் தொலைக்கக் கூடாது என்று தெரிந்து கொண்டாள் விஜயா. என்ன அவமானம் என்றாலும் வாயைத் திறக்கக்கூடாது என்று தெரிந்து கொண்டாள் விஜயா. கிண்டல், கேலி எத்தனை வந்தாலும் முகம் சுளிக்கக்கூடாது என்று தெரிந்து கொண்டாள் விஜயா.

    இதோ- இப்போதும் அப்படித்தான்.

    கடையில்- பிதுங்கி வழிந்த பண்டிகைக் கும்பலை வைத்துக்கொண்டு, விடுவிடுவென்று ‘டோஸ்’விட்ட ராணியிடம்- வெறுமனே ஸாரி மேடம்… சொல்லி முடித்துக் கொண்டாள்.

    சொல்லுங்க மேடம்… என்ன சைஸ் உங்களுக்கு? அடுத்த வாடிக்கையாளரிடம் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டாள்.

    மனசுக்குள் அடித்த புயல்- முகத்தில் தெரிந்துவிடாத படிக்குச் சிரிப்பும் வார்த்தைகளுமாய்ப் போட்டு அமுக்கி விட்டாள். பார்த்துக் கொண்டிருந்த மற்ற விற்பனைப் பெண்களுக்கும் உதறல்தான். ‘இன்றைக்கு விஜயா... நாளைக்கு நானாகவும் இருக்கலாம்…’ என்கிற நடுக்கம். எல்லோருமாய் வேறு ஒரு வார்த்தைகூடப் பேசாமல் விற்பனையைக் கவனித்ததில் பிரச்னை ஒன்றுமில்லாமல் நேரம் நகர்ந்தது.

    மதியச் சாப்பாட்டு நேரம்.

    சரியாக இருபதாவது நிமிடம் கையைக் கழுவிக் கொண்டு, விற்பனையைக் கவனிக்கவில்லையென்றால், அதற்கும் ராணியிடம் பாட்டுக் கேட்க வேண்டியிருக்கும்.

    கடையின் உள்புறமாய் ஒரே ஒரு ஆள் மட்டும் நுழையும் படியிருந்த சந்து வழியாகப் பின்பக்கம் போனால்- கழிவுத் துணிகள், மூட்டைகள், நூல்கண்டுகள் என்று அடைசலாயிருக்கும் ஒர் அறை. சன்னல் ஏதுமில்லாமல் புழுங்கியடிக்கும். சாப்பிட அங்கேதான் நாலு பெஞ்ச்சுகள் போட் டிருக்கும். ஒரு டிரம்மில் தண்ணீர். ‘மடக் மடக்கென்று ரெண்டுவாய் அள்ளிப் போட இதைவிட வசதி கேக்குதா? விஸ்தாரமா உக்காந்து சாப்பிடணும்னா நீ முதலாளியம்மா வாகனும்… இல்ல- ஆபீஸரா வேலைக்குப் போ...’- இது தான் நிர்வாகத்தின் பதில். யாருமே வாய்திறக்காமல் தின்று முடித்து, பதினெட்டாவது நிமிஷத்திலேயே கவுண்டருக்கு ஒடி விடுவார்கள். இதோ- இப்போதும் அப்படித்தான்.

    எல்லோரும் போய்விட்டார்கள்.

    விஜி… அப்படியே வச்சிருக்க? உள்ள ஒண்ணும் எறங்கல்லியே? நேரமாச்சு...

    ம்… ம்… இதோ...

    -சாப்பிடாமல் அப்படியே மூடிவைத்தாள்.

    என்னாச்சு விஜி?

    ப்ச்… வரவர மனசு சண்டித்தனம் பண்ணுது கலா… ஒரு வாய்ச் சோத்துக்காக என்னெல்லாம் பேச்சு கேக்க வேண்டியிருக்கு… கண்ட கண்ட நாயெல்லாம் நம்மளை மேயுது… சகிச்சுக்க வேண்டியிருக்கு… சாதாரண மான அவமானம்கூட இருக்கக்கூடாதா? எருமை ஜென்மங்களா நாம...?

    ம். அப்படித்தான். ஏழைங்களுக்கு ஏன் விஜி மானம்? அவமானம்? துட்டு தர்ற எடம் சொர்க்கம்... வேலை தர்றவங்க தெய்வம். இவங்களை முறைச்சிக்கிட்டா நஷ்டம் நமக்குத்தான். நம்மளை விரட்டிட்டு இன்னொரு நாய வேலைக்கு வச்சிப்பாங்க...

    கை கழுவினாள் கலா.

    இன்னிக்கு நீ திரும்பவும் டோஸ் வாங்கப் போற கோலிபுட்டிகிட்ட… வா… டயமாகுது…

    ‘‘சாயங்காலம் நாலு மணிக்குக் கிளம்பணும் கலா. பெர்மிஷன் கேக்கணும். அதுக்கு வேற அது புடுங்கி யெடுக்குமே."

    என்னத்துக்கு?

    வேற என்ன? வழக்கம்போலத்தான். ஜெயாவைப் பொண்ணு பார்க்க வர்றாங்க...

    கேட்டுப் பாரு… ஒத்துப்பாங்களான்னு தெரியல்லியே…

    ம்ஹூம்… முதலில் ஒத்துக்கொள்ளவில்லைதான்.

    உன் தங்கச்சிக்குத்தானே டெஸ்ட்டு? நீ ஏன் கூட? தோழியா நிக்கணுமா?

    ஏண்டி கல்யாணம் கல்யாணம்னு அலையறீங்க? தனியாத்தான் இருந்து பாருங்களேன்... உடம்பு கேக்காதோ...?

    இத்தோட- வேலைக்குச் சேர்ந்து நாலே மாசத்துல ரெண்டாவது பர்மிஷன் உனக்கு… இன்னொரு தடவை கேட்டா- நீ வேலைய விட்டு நிக்கத்தான் பர்மிஷன் தருவேன். அப்புறம் கண்ணைக் கசக்காத.

    கவுண்ட்டரை விட்டுட்டுப் போனா கஸ்டமர்ஸுக்கு யாரு பதில் சொல்ல? கூட்டம் அலை மோதுது… நீ பாட்டுக்குப் போறியே… உன் சம்பளத்தில நூறு ரூபாய் புடிச்சிப்பேன். அப்பத்தான் வேலையோட அருமை தெரியும்…

    "ஆமா... மூத்தவ நீ இருக்க, உன் தங்கச்சிக்குப் பொண்ணு பார்க்கற படலமா? ஏன்? கல்யாணம் வேணாம் னுட்டுத் தியாகம் பண்ணிட்டியா?

    இவதான் தாலி அறுத்தவளாச்சே… கல்யாணமாகி ஒரே வருஷத்துல புருஷனை முழுங்கிட்டா…

    ஒ… ஒ… அப்ப சரி… உன்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்கன்னு பர்மிஷன் கேட்டு வந்து நிக்க மாட்டே. எல்லாம் முடிஞ்ச கட்டைதானே? சரி போ… ஒழி..

    ஹாங்.. ஒரு விஷயம் ஞாபகம் வச்சுக்கோ. உன்னோட கவலை, சோகம், வருத்தம் எதுவுமே வேலைல தெரியக் கூடாது. யூனிபார்ம் புடவைய பளிச்சின்னு கட்டிட்டு வரணும். பவுடர், பொட்டுன்னு குறையில்லாம வரணும். வெத்து நெத்தி, எண்ணெய் வழியற மூஞ்சின்னு அழுது வழியக்கூடாது… புரியுதா…

    பேச்சு…

    Enjoying the preview?
    Page 1 of 1