Kolai Vallal
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsPanchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsIrandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kolai Vallal
Related ebooks
Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsRatthathil Oru Kelvikuri! Rating: 4 out of 5 stars4/5Monday Murder Day Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Kanavugal Rating: 5 out of 5 stars5/5Vivek Jakkirathai Rating: 5 out of 5 stars5/5Nillamal Odi vaa… Rating: 3 out of 5 stars3/5Thik Thik Divya Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsThappithe Aaga Vendum Rating: 5 out of 5 stars5/5Thooratthu Ponman Rating: 0 out of 5 stars0 ratings2000 Sathura Adi Sorkkam Rating: 0 out of 5 stars0 ratingsAabathukku Oru Azhaipithazh Rating: 1 out of 5 stars1/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsGood Night Krotham! Rating: 5 out of 5 stars5/5Aayul Aare Naal Rating: 5 out of 5 stars5/5Thigil Kaalam Rating: 5 out of 5 stars5/5Kaanamal Pona Mugam Rating: 5 out of 5 stars5/5Pagal Nera Alligal Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Puthiya Paadal Paadu Rating: 5 out of 5 stars5/5Vivek VS Vivek Rating: 5 out of 5 stars5/5Inbavin Irandavathu Nizhal Rating: 5 out of 5 stars5/5Uchi Nila! Rating: 0 out of 5 stars0 ratingsUllaththaik Killaathey! Rating: 0 out of 5 stars0 ratingsVengai Veliye Varuthu Rating: 0 out of 5 stars0 ratingsOru Ponmaanai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsShimla Ramya Rating: 5 out of 5 stars5/5Thirakkaatha Kathavugal! Rating: 5 out of 5 stars5/51. 1. 2000 Mudhal Nimisham... Rating: 0 out of 5 stars0 ratingsKangalil Eththanai Kallamadi Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Kolai Vallal
0 ratings0 reviews
Book preview
Kolai Vallal - Rajeshkumar
20
1
நிலைக்கண்ணாடி முன் நின்று நெற்றியின் மையத்திலிருந்த ஸ்டிக்கர் பொட்டை சரி செய்து கொண்டிருந்த தர்மாவை, சுவரோர டீபாயின் மேல் உட்கார்ந்திருந்த டெலிபோன், சிணுங்கலாய்க் கூப்பிட்டது. கண்ணாடியினின்றும் தன் முகத்தைப் பெயர்த்துக் கொண்டு - டெலிபோனை நோக்கிப் போய் ரிஸீவரை எடுத்து - பொன் வளையங்கள் பளீரிடும் காதுக்குக் கொடுத்தாள்.
ஹலோ...!
பேசறது யார், தர்மாவா?
- மறுமுனையில் ‘தீப்பந்தம்’ பத்திரிகை ஆசிரியர் பார்த்திபன் தன் வெண்கலக் குரலில் கேட்டார்.
ஆமா... ஸார்... குட்மார்னிங்...!
குட்மார்னிங்... மந்திரியோட பங்ஷனுக்கு சீக்கிரம் புறப்படம்மா... முன் வரிசையில நீ இடம் பிடிச்சாத்தான்... பல சூடான ந்யூஸ் கிடைக்கும்... மந்திரி நரஹரி வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்ததில் கட்சிக்குள்ளே ஏகப்பட்ட புகைச்சல். ஒவ்வொருத்தரும் மூஞ்சியை இழுத்துக்கிட்டு உட்கார்ந்திருப்பாங்க... ‘கிசுகிசு’ நிறைய கிடைக்கும். பாராட்டு விழா எங்கே நடக்குதுன்னு தெரியுமா?
தெரியும் ஸார்... ‘ராஜா மஹால்’ல...
பஸ்ஸை தேடிட்டிருக்காதே... டாக்ஸி பிடிச்சுப் போயிடு...
சரி ஸார்...
விஷயங்களை அள்ளிக்கிட்டு எத்தனை மணிக்கு வருவே..?
மத்தியானம் ஒரு மணிக்குள்ளே வந்துடுவேன் ஸார்...
கண்டிப்பா வந்துடு... நீ வந்தா தான் முதல் எட்டுப் பக்கமும் ரொம்பும்... ரிஸீவரை வெச்சுடட்டுமா..?
அவர் மறுமுனையில் ரிஸீவரைச் சாத்த, தர்மாவும் சாத்திவிட்டு - தன் சந்தன மணிக்கட்டைப் பார்த்தாள். சதுர எச்.எம்.டி. 9.45 என்றது.
‘மதுக்குமாரை எங்கே காணோம்?’ - மனசு கேட்க - மூளை சொன்னது: ‘இதோ பார் தர்மா... உலகத்தில யாரை வேண்டுமானாலும் நம்பு... ஆனால், உன்னோட காதலன் மதுக்குமாரை மட்டும் நம்பாதே..! அவன் சொன்ன நேரத்திற்கு எப்போ வந்திருக்கான்..?’
வாசலை நோக்கிப் போனவளை -
மறுபடியும் கூப்பிட்டது, டெலிபோன்.
தர்மா மறுபடியும் ரிஸீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தாள். ஹலோ..!
என் அன்பான காதலியே..! நான் மதுக்குமார்...
தர்மா கோபமாய் ரிஸீவரில் வெடித்தாள்: அய்யா... எங்கிருந்து பேசறார்..?
அமிஞ்சிக்கரைக்குப் பக்கத்திலே... ஒரு பாடாவதி டெலிபோன் பூத்திலிருந்து பேசிட்டிருக்கேன் தர்மா...
ஒன்பதரைமணிக்கு ‘டாண்’ணு என்னோட வீட்டுக்கு வந்து என்னை ‘பிக்அப்’ பண்ணிட்டுப் போற லட்சணம் இதுதானா..? மணி இப்போ எவ்வளவு தெரியுமா..?
சொல்லு... சோதனையா என்னோட வாட்ச்சும் இன்னிக்கு ரிப்பேர்...
மணி ஒன்பது அம்பது...
கவலைப்படாதே தர்மா... இன்னும் ஒரு நிமிஷத்துல உன்னோட வீட்டு வாசல்ல நிற்பேன்..!
எப்படி நிப்பீங்க..? அமிஞ்சிக்கரை என்னோட வீட்டுக்குப் பக்கத்துக் காம்பௌண்டிலா இருக்கு..?
இன்னும் ஒரு நிமிஷத்துல நான் வந்துட்டா... நீ எனக்கு என்ன தர்றே..?
நீங்க எதைக் கேட்டாலும்...
நிஜமா..?
நிச்சயமா...
உன்னோட இடுப்புச் சதையைப் பத்து தரம் கிள்ளுவேன்...
தாராளமா கிள்ளிக்கலாம்...
சரி... தர்மா... இப்போ உன்னோட தலையைக் கொஞ்சம் உயர்த்தி உனக்கு வலது பக்கமா இருக்கிற ஜன்னல் வழியா ரோட்டைப் பாரு...
அவன் சொன்னபடியே பார்த்தாள்.
ரிஸீவரில் குரல் தொடர்ந்தது. ரோடு தெரியுதா?
ம்... தெரியுது.
அமுதசுரபி ஹோட்டல் தெரியுதா?
தெரியுது...
ஹோட்டலையொட்டினபடி ஒரு டெலிபோன் பூத் இருக்கே தெரியுதா?
ம்... தெரியுது...
அந்த டெலிபோன் பூத்தை நல்லா உற்றுப் பாரு... கண்ணாடி தடுப்புக்குள்ளே நான் பேசிக்கிட்டிருக்கேன்... தெரியுதா..?
தர்மா பார்த்தாள்.
பூத்தின் கதவைத் திறந்து கையாட்டினான் மதுக்குமார்.
தர்மா ஒரு சந்தோஷ திகைப்போடு மதுக்குமாரைப் பார்க்க - அவன் ரிஸீவரில் சொன்னான்: இடுப்புச் சதையைப் பத்து தரம் கிள்ள வர்றேன்...
மதுக்குமார் ரிஸீவரை வைத்துவிட்டு ரோட்டைக் கிராஸ் செய்து அரை நிமிஷ அவகாசத்திற்குள் - தர்மாவின் வீட்டு வாசலில் நின்றான்.
இடுப்பில் கைகளைப் பதித்துக் கொண்டு அழகாய்ப் புன்னகைக்கும் மதுக்குமாருக்கு தங்கத்தை உரசின மாதிரி நிறம். இருபத்தைந்து பிறந்த தினங்களைப் பார்த்திருந்தான். ஒரு புதுமுக நடிகனைப் போன்று முகவெட்டு. எப்படி சீவினாலும் பிடிவாதமாய் வந்து ஒரு மோதிரமாய் நெற்றியில் சுருள்கிற கிராப். சிகரெட் புகை படியாத உதடுகளுக்கு மேலே - ஆட்காட்டி பருமனில் கருகரு மீசை. பாசி நிற சபாரியில் அறுபது கிலோ உடம்பு.
அவனைச் சிரிப்பு பொங்க பார்த்த தர்மாவுக்கு இருபத்தியொரு வயது. மதுக்குமாரின் நிறத்துக்கு ஒத்து வந்தாள். ‘விஜி’த்தனமான உருண்டை முகத்தில் கண்கள் முதல் பரிசு வாங்கியிருந்தன. தலையில் அழுந்தப் படியாமல் சிலும்பியிருந்த கேசம் இரண்டாவது பரிசை வாங்கியிருந்தது. ஜர்னலிஸம் படித்த தர்மாவுக்கு அம்மாவும் அப்பாவும் பம்பாயில். அவள் சென்னையில் தனியாய் - ‘தீப்பந்தம்’ பத்திரிகை ஏற்பாடு செய்து தந்திருக்கும் வீட்டில் தங்கி அந்த பத்திரிகைக்கு உண்மையாக உழைப்பவள். கடந்த ஒரு வருஷ காலமாய் வீடியோ காமிராமேன் மதுக்குமாரைக் காதலித்துக் கொண்டிருப்பவள். ஏ.வி.எம்.மின் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் ஒரு சினிமா நடிகையின் ‘இரண்டாவது கல்யாண’ ரிசப்ஷனுக்குப் போயிருந்தபோது - வீடியோ காமிராவை இயக்கிக் கொண்டிருந்த மதுக்குமாரின் சுறுசுறுப்பாலும் பேச்சாலும் ஈர்க்கப்பட்டவள்.
பொய்... பொய்... என்னை எமாத்திட்டீங்க...
ஏன்றாள் தர்மா.
நோ... நோ... இடுப்பைக் காட்டு... நான் கிள்ளணும்...
- மதுக்குமார், சேலைக் கட்டு நெகிழ்ந்து போய் - வெண்ணெய்க் கட்டியாய்த் தெரிந்த அவளுடைய இடுப்பை நோக்கிக் கை நீட்டினான்.
ப்ளீஸ்... வேண்டாம் மது...
நோ... பந்தயம்னா பந்தயம்தான்... காட்டு... காட்டு! இடுப்பைக் காட்டு... என் கைவிரல்கள் பத்தும் பரபரக்கிறது...
சரி... ஒரேயொரு கிள்ளு...
என்னோட கணக்குக்கு பத்துக் கிள்ளு...
"உம் சீக்கிரமா