Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Alaikal Ointhuvidum!
Alaikal Ointhuvidum!
Alaikal Ointhuvidum!
Ebook140 pages47 minutes

Alaikal Ointhuvidum!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465438
Alaikal Ointhuvidum!

Read more from Devibala

Related to Alaikal Ointhuvidum!

Related ebooks

Reviews for Alaikal Ointhuvidum!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Alaikal Ointhuvidum! - Devibala

    12

    1

    அது பவுர்ணமி நாள் என்பதால் அலைகளின் வேகம் கூடவே இருந்தது - மாலை நேரத்தில்! கோடைகாலம் என்பதால் கடற்கரையில் கூட்டமும் கூடுதலாகவே இருந்தது!

    பீட்டர் கடலை வேடிக்கை பார்த்தபடி ஐந்தரை மணி முதலே உட்கார்ந்து கொண்டிருந்தான்! நடமாட்டம் கணிசமாக இருந்தது!

    ஆறேகாலுக்கு மூச்சிறைக்க வந்து நின்றாள் ஜோதி!

    ஸாரி பீட்டர்! வந்து ரொம்ப நேரமாச்சா?

    நிமிர்ந்து பார்த்தான்!

    கிட்டத்தட்ட முக்கால் மணி நேரமாச்சு ஜோ!

    ஜோதினு முழுசா கூப்பிடமாட்டியா பீட்டர்?

    இல்லை ஜோ! இப்பிடி கூப்பிட எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு! அதுதான் நெருக்கமா இருக்கு!

    கையை பிடித்து பீட்டர் மெள்ள இழுக்க, ஜோ அழகாக துவண்டு அவனருகில் மணலில் விழுந்தாள்!

    கார்மெண்ட்ல கடைசி நேரத்துல சூபர்வைஸர் போகவிடலை! தப்பிச்சு வர்றதுக்குள்ள ஒரு வழி ஆயிடுச்சு!

    சுண்டல் பையன் நெருங்க,

    பீட்டர் ரெண்டு சுண்டல் வாங்கினான்!

    இந்தா புடி!

    காலை முதலே நான் சாப்பிடலை. பசிக்குது! இது போதாது பீட்டர்!

    அவசரப் பசிக்கு சாப்பிடு! போற வழில ஓட்டல்ல சாப்பிட்டுக்கலாம்! வீட்ல ஏன் சாப்பிடலை?

    வழக்கம்போல அண்ணி ராட்சஸி மாதிரி கூச்சல். அண்ணன்தான் பேசமாட்டாரே! அம்மா மனசு பொறுக்கலை! ஏதோ கேக்கப் போக பிரச்னை பெரிசாயிடுச்சு பீட்டர்! எப்பவும் வீட்ல பிரச்சனைதான்! அண்ணியோட அராஜகம் தாங்கலை! சம்பாதிக்காம வீட்ல ஒக்காந்து இந்த ஆட்டம்! அண்ணன் குடுக்கற எடம்! நாங்க யாரும் பேச முடியலை. வரவர வீட்டுக்குப் போகவே புடிக்கலை பீட்டர்!

    பீட்டர் மௌனமாக இருந்தான்!

    ஒருவேளை சாப்பிடலைனாக்கூட தேவலை! சண்டை சச்சரவு இல்லாம நிம்மதியா இருக்கணும் பீட்டர்!

    குடும்பம்னா எல்லாம்தான் இருக்கும் ஜோ!

    இல்லை பீட்டர்! எங்க வீடு குடும்பம் இல்லை. மீன் மார்க்கெட்! எல்லாத்துக்கும் காரணம் பணப் பற்றாக் குறைதான்!

    என்ன சொல்ற?

    பணப் புழக்கம் தாராளமா இருந்தா, சண்டை வராது பீட்டர்!

    இல்லை ஜோ! மனசு விசாலமா இருந்து, ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் குடுத்தாலும் சண்டை வராது!

    நான் ஒப்புக்கலை! பணம் தான் முக்கியம்! எங்கண்ணன் வாங்கற சம்பளம் குடும்பம் நடத்தப் போதலை. நான் கார்மெண்ட்ல பீஸ் ரேட்ல தச்சு சம்பாதிக்கிறேன்! வாங்கற சம்பளத்துல தொண்ணூறு சதவீதம் நானும் வீட்ல குடுத்துர்றேன்! எல்லா வேலைகளையும் அம்மாதன் செய்யறாங்க! அப்படியும் அண்ணியோட ஆட்டம் தாங்கலை!

    சரி விடு!

    நான் பி.காம். படிச்சிருக்கேன்! கம்ப்யூட்டர் நல்லா தெரியும்! அப்படியும் ஒரு நல்ல வேலை கிடைக்கலியே! நாலாயிரம் ரூபாய் வருமானத்துல இந்த கார்மெண்ட்ல சாகறேன்!

    நீ டெய்லர்னா, நான் என்ன? எலக்ட்ரீஷியன், ப்ளம்பர்! நான் மட்டும் பெரிய உத்யோகமா?

    பீட்டர்! நீ பெரிய பில்டிங் கான்ட்ராக்டர்கள் கூட தொடர்பு வச்சிருக்கே! மாசம் பத்தாயிரத்துக்குமேல் சம்பாதிக்கற! சில சமயம் ஒரே ஆர்டரை எடுத்து செஞ்சா, முப்பதாயிரம் கூட வரும்! எனக்கு அப்படியா?

    நீயும் நானும் கல்யாணம் செஞ்சுகிட்டா ரெண்டு பேர் வருமானமும் வருமில்லையா?

    ஜோதி பேசவில்லை!

    சொல்லு! எப்பக் கல்யாணம் செஞ்சுகலாம்?

    நீ சுலபமா கேட்டுட்டே! அதுல எத்தனை சிக்கல் இருக்குனு உனக்குத் தெரியாதா?

    என்ன சிக்கல்?

    மதம் வேற!

    நான் உன்னை ‘ஜோ’னு கூப்பிடும்போது நீ எங்க ஆள்னு தோணுது எனக்கு! மதம் மாறிடு! நான் எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிக்கிறேன்! எங்கப்பா, அம்மாவுக்கு நான் ஒரே மகன்! நான் உன்னைக் காதலிக்கறது எங்க வீட்டுக்குத் தெரியும்! எதையும் பெத்தவங்ககிட்ட நான் மறைக்க மாட்டேன்! வர்ற சன்டே வீட்டுக்கு வர்றியா? அவங்களுக்கு உன்னை அறிமுகப்படுத்தறேன்!

    பயம்மா இருக்கு பீட்டர்!

    உன்னை யாரும் கடிச்சு முழுங்கிட மாட்டாங்க! அன்பான வரவேற்புக்கு நான் உத்தரவாதம் தர்றேன்!

    அதில்லை பீட்டர்!

    இதப்பாரு ஜோ! நீ துணிஞ்சு முடிவெடுத்தா, நானும் என் குடும்பமும் உன்னை முழு மனசோட ஏத்துக்கத் தயாரா இருக்கோம். நீ மேஜர்! உன்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது! காதலுக்கு ஜாதியும், மதமும் இல்லைனு கண்ணதாசன் பாடியிருக்கார்! எங்கம்மாவும் உங்க மதம்தான்! அப்பாவுக்காக எங்க மதத்துக்கு மாறலையா? அப்பவே காதல் ஜெயிச்சிருக்கு ஜோ! தைரியம் இல்லாதவங்க காதலிக்கக் கூடாது ஜோ!

    அவள் பேசவில்லை!

    இதப்பாரு..! கிட்டத்தட்ட ரெண்டு வருஷங்களா காதலிக்கறோம்! இனியும் இப்பிடியே பீச், ஓட்டல்னு காலத்தை ஓட்டினா, ரெண்டு பேருக்குமே சலிப்பு தட்டும்! உனக்கு இருபத்தி அஞ்சு! எனக்கு இருபத்தி எட்டு! வயசும் கூடுது! சரியில்லை!

    ஜோதி பேசவில்லை!

    இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வேலை இருக்குனு சொல்லிட்டு வா! எங்க வீட்ல ஒரு நாள் முழுக்க இரு! அப்புறமா உங்கிட்ட பெரிசா ஒரு மனமாற்றம் உண்டாகும் பாரேன்!

    நிமிர்ந்து பார்த்தாள்!

    பீட்டர் அழகான பெரிய கண்களை அகல விரித்து மெள்ளச் சிரிக்க, புஷ்டியான அவனது கன்னங்களில் மெல்லிய குழி விழுந்தது!

    முத்துப் போன்ற பற்கள்! நிறைய தலை முடி!

    நிறம் மட்டும் கொஞ்சம் கறுப்பு! அதுவும் வசீகரம்தான்!

    தளதளப்பான உடம்பு! பீட்டரைப் பார்த்தால் எந்த ஒரு பெண்ணுக்கும் சுலபமாக பிடித்து விடும்!

    எப்போதும் சிரித்த முகம்!

    ஜோ! நீ என்னைக் கல்யாணம் செஞ்சுகற காரணமா, உங்க வீட்ல யார் வாழ்க்கையும் கெடப் போறதில்லை!

    "அது சரி!

    Enjoying the preview?
    Page 1 of 1