Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pandigaikalum Palangalum
Pandigaikalum Palangalum
Pandigaikalum Palangalum
Ebook623 pages4 hours

Pandigaikalum Palangalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது காலத்துக்கும் ஏதுவான முதுமொழி. எங்கும், எப்போதும், எல்லாமுமாக விரவியிருக்கும் இறைவனை, மனத்துள் நிறுத்த உதவுவதே ஆலயம்.

அந்த இறைவனை வீடுகளிலும் தொழுது கொண்டாடுவதுதான் பண்டிகைகள். ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகைகளின் பின்னணி, அதைக் கொண்டாடிப் பயன்பெற்றவர்கள், அதனால் பெறப்படும் பயன்களை திருமதி லட்சுமி ராஜரத்னம் பல ஆண்டுகளாகச் சொற்பொழிவுகளின் மூலமும், எழுத்துக்களின் மூலமும் மக்களிடையே விளக்கியுள்ளார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115704168
Pandigaikalum Palangalum

Read more from Lakshmi Rajarathnam

Related to Pandigaikalum Palangalum

Related ebooks

Reviews for Pandigaikalum Palangalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pandigaikalum Palangalum - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    பண்டிகைகளும் பலன்களும்

    Pandigaikalum Palangalum

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam
    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    என்னுரை

    எத்துத் துறையில் முப்பத்தாறு ஆண்டுகள் பதித்துவிட்ட எழுத்துச் சுவடுகளைக் கையேந்தி கனிவுடன் கண்களால் அணைத்தாலும்... கைகளால் தொட்டுத் தொட்டுப் பார்த்தாலும்... போதை ஏறிய கிறக்கத்தைப் பெறலாம் என்றாலும் - புத்தம் புதிய புத்தகத்தைப் பார்க்கும்பொழுது மாணவி மனதாகத்தான் மனசு குதூகலிக்கிறது.

    இந்தப் புத்தகத்தில் எத்தனை எத்தனை விஷயங்களை எழுதி இருக்கிறேன் என்று பிரமித்தாலும் - என்னுடைய வித்தகத்தனத்திற்கு உயிரோட்டம் கொடுத்த ஒரு வித்தகர் திரு. இராமசந்திர ஆதித்தனார் - தேவி பெண்மணியின் ஆசிரியர்தான் என்று எழுதுவதில் பெருமைப்படுகிறேன். அவருக்கு என் நன்றி.

    எந்தத் தலைப்பில் எழுதவேண்டும் என்று கூறும் வல்லவ ஆசான் அவர் என்று கூறுவதில் மிகை ஏதும் துளிக்கூட இல்லை.

    புத்தகத் தொகுப்பைப் பார்க்கும்பொழுது இத்தனை எழுதும் திறன் எனக்கிருக்கிறதா? என்று பேசும் பொழுது ஏற்படாத ஆச்சரியம் இப்பொழுது தோன்றுகிறது. சொற்பொழிவு செய்யும்பொழுது சேமித்த விஷயங்களை சிந்தை சேனல் எழுத்து வடிவில் காட்டும் பொழுது - எடுத்த ஒரு ஜென்மம் போதாது. வரக்கூடிய பிறவிகளும் இதையொட்டியே வரவேண்டும் என்று வேண்டத் தோன்றுகிறது.

    இந்து சமயத்தில் நாம் தேட வேண்டியதும், ஆராய வேண்டியதும், சொல்ல வேண்டியதும், செயலாற்ற வேண்டிய விஷயங்களும் நிறையவே இருக்கின்றன.

    நிறைய எழுத வேண்டிய சமயங்களில் விஷய சேமிப்புக்களை எனக்கு எடுத்துத் தருபவர் என் கணவர்தான்.

    எழுத வேண்டிய விஷயங்களை - "இதை எழுதவில்லை. ‘அதனால் இதை எழுதலாமா!' என்று கேட்டு உதவுபவர்கள் பெண்மணியின் திரு. செல்வராஜ் அவர்களும், திரு. பாண்டியன் அவர்களும்தான். அவர்களுக்கு என் நன்றி.

    பூம்புகார் பண்டைய பெருமையை வாணிபத்தால் பெற்றிருந்தது போல பூம்புகார் பதிப்பகம் புத்தக வெளியீட்டில் தரமான நிறுவனமாக தலையெடுத்து நிற்கிறது. இந்த நிறுவனத்தில் எனது நூல்கள் வெளிவருவதில் பெருமைப்படுகிறேன். அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இப்புத்தகத்தை வாங்கிப் படிக்கும் வாசகர்களை நான் மறக்க முடியுமா! உங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன்,

    லட்சுமி ராஜரத்னம்

    பதிப்புரை

    ஆயம் தொழுவது சாலவும் நன்று என்பது காலத்துக்கும் ஏதுவான முதுமொழி. எங்கும், எப்போதும், எல்லாமுமாக விரவியிருக்கும் இறைவனை, மனத்துள் நிறுத்த உதவுவதே ஆலயம்.

    அந்த இறைவனை வீடுகளிலும் தொழுது கொண்டாடுவதுதான் பண்டிகைகள். ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகைகளின் பின்னணி, அதைக் கொண்டாடிப் பயன்பெற்றவர்கள், அதனால் பெறப்படும் பயன்களை திருமதி லட்சுமி ராஜரத்னம் பல ஆண்டுகளாகச் சொற்பொழிவுகளின் மூலமும், எழுத்துக்களின் மூலமும் மக்களிடையே விளக்கியுள்ளார்.

    பொருளடக்கம்

    1. வைசாக விசாகம் வசந்தமே வருக

    2. ஆடியும் வெள்ளியும்

    3. தேவலோகத்தில் இருந்து வந்த துளசி

    4. நவராத்திரி நாயகி

    5. திருநாளாம் திருநாளாம் தீபாவளித் திருநாளாம்

    6. பாவாய் எம்பாவாய்

    7. தைமகள் வந்தாள்

    8. திருவிளக்கு பூஜை

    9. மாசிப் பங்குனி

    10. ஆலயா மந்த்ராலயா

    11. ஞானப்பால் உண்ட ஞான பாலன்

    12. விரதங்கள்

    14. குழந்தை தெய்வம்

    15. முப்பெரும் தேவியர்

    16. நரகாசூரன் பெற்ற பெருவாழ்வு

    17. கார்த்திகை தீபம் ஏற்றும் திருவண்ணாமலை!

    18. மார்கழியும் தையும்

    19. சிவனுக்கு ஒரு ராத்திரி

    20. மாசிப் பெளர்ணமிகள்

    21. பங்குனி உத்திரம்

    22. மாவும் வேம்பும்

    23. ஆடித் தபசு

    24. கீதையின் நாயகனே

    25. மஹாளயம்

    26. தர்ம யுத்தம்

    27. ஆறுபடை வீட்டழகன்

    28. திருப்பாவையர்

    29. மாதங்களில் நான் மார்கழி

    30. (ராம) கானமும் (கும்ப) கோணமும்

    31. சிவனுக்கு ஒரு ராத்திரி

    32. அர்த்தமுள்ள அறுபது

    33. வளம் மிகும் வைகாசி

    34. கங்கா மாதா

    35. 'காவிரிப் பெண்ணே வாழ்க'

    36. திருவே போற்றி

    37. 'அழகா! முருகா!'

    38. அன்னபூரணி

    38. நாம சங்கீர்த்தனம்

    40. தைப்பூச நன்னாளில்

    41. (மகா)பாரத கீதை (1)

    42. (மகா)பாரத கீதை (2)

    43. சாயாவின் புதல்வன்

    44. ஸ்ரீ சக்கரராஜன்

    45. நாதாந்த நடனன்

    46. 'மா'தவ மனைவி

    47. ஜோதி கண்ட ஜோதி

    48. 'மாமலை வாசா மணிகண்டா'

    49. ஏழு கொண்டலவாடா கோவிந்தா

    50. காலடி தந்த ஆலடியான்

    51. நாடக மயில்

    52. சூரிய போற்றி

    53. வாயு குமாரன்

    54. திருக்குடந்தை மகாமகம்!

    55. சூர்ய புத்ரன்

    56. 'தணிகாசலன்'

    57. அரங்கத்தம்மா போற்றி பகுதி : 1

    58. அரங்கத்தம்மா போற்றி பகுதி : 2

    1. வைசாக விசாகம் வசந்தமே வருக

    கீயில் பகவான் கிருஷ்ணர் ருதுக்களுக்குள் புஷ்பங்கள் பூத்துக்குலுங்கும் வசந்தம் நான் என்கிறார். நட்சத்திரங்களுக்குள் சந்திரன், வசுக்களுக்குள் அக்கினி என்றும் கூறிக்கொள்கிறார். 'காலங்களில் அவள் வசந்தம்...' என்று நமது கவியரசர் கண்ணதாசனும் பாடி இருக்கிறார். காதலியின் உறவு வசந்தம் என்ற உயர்வைக் காண்கிறோம்.

    வசந்த காலம் என்பது இளவேனிற் காலம். சித்திரை, வைகாசி மாதங்களே இளவேனிற் காலமாகும். சித்திரையில் வெயில் அதிகமாக இருக்கும். ஹேமந்த ருதுவான பனி காலத்தில் மரங்களும், செடி கொடிகளும் பட்டுப் போய்விடும். வசந்த ருதுவில் பூத்துக் குலுங்க ஆரம்பித்து விடும். தளிர்களும், பூக்களும் பூத்துக் குலுங்கும் இயற்கை அழகினை வைகாசியில்தான் காண முடியும்.

    'அக்கினி நட்சத்திரம்' அல்லது 'கத்தரி வெயில்' என்கின்ற சுட்டெரிக்கும் காலம் சித்திரை மாதத்தின் கடைசி பின் ஏழு நாட்களிலும், வைகாசி முதல் ஏழு நாட்களிலும் அதிகமாக இருக்கும். ஆனால் வைகாசி பிறந்தால் வாய் மூடாத காற்று என்பார்கள். காரணம் தென்மேற்குப் பருவக் காற்று தொடங்குவதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்து விடும். எனவே வைகாசி மாதம் புஷ்பங்கள் பூத்துக் குலுங்கி, மேலைக் காற்றில் தன் நறுமணத்தைத் தவழ விடும்.

    ஊட்டியின் மலர்க்கண்காட்சி கூட வைகாசி மாதத்தின் வசந்தத்தின் எழிற் கோலத்திற்கு ஓர் எடுத்துக்காட்டல்லவா?

    இத்தகைய வைகாசி என்கின்ற வைசாக மாதத்தில்தான் கோவில்கள் அனைத்திலும் வசந்த உற்சவம் கொண்டாடுவார்கள். இறைவன், இறைவியை அலங்கரித்து வசந்த மண்டபத்தில் கொலுவீற்றிருக்கச் செய்து சந்தனம், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து ஊஞ்சல் உற்சவம் செய்து மகிழ்வார்கள். குளுமைக்காக வசந்த மண்டபம் தண்ணீரால் நிரப்பப்படும். காற்று இதமாகத் தழுவி வீசும்.

    சாதாரணக் கோயில்களிலேயே இப்படி என்றால் திருச்சீரலைவாய் எனப்படும் செந்திலில் கேட்கவா வேண்டும்? அதுவும் வைசாக விசாகத்தின் பொழுது அலைகளுக்கும், தலைகளுக்கும் வித்தியாசம் தெரியாது.

    முருகனுக்கு உரிய நட்சத்திரம் விசாகம். அதனால் அவனையே அஷ்டோத்திரத்தில் விசாகன் என்றுதான் அழைக்கப்படுகிறது. 'விசாக நம்பி' என்ற திருநாமமும் அவனுக்குண்டு. கார்த்திகைப் பெண்கள் அறுவர் ஆறு குழந்தைகளான கார்த்திகேயனுக்குப் பாலூட்டினார்கள். கார்த்திகைப் பெண்கள் என்றும் நிலைத்து நிற்கும்படி முருகனுக்கு விசேஷ தினமாக கார்த்திகை நட்சத்திர நாளை நாம் கருதுகிறோம். விரதம் இருக்கிறோம்.

    அவனுடைய நட்சத்திரமான விசாகம் மிகவும் விசேஷமானதல்லவா! நட்சத்திரங்களுள் விசாகம் மிகவும் ஒளி பொருந்தியது. அக்கினியில் பிறந்த முருகனும் அக்கினி சொரூபம். அதனால்தான் முருகனை ‘வீறு கொண்ட விசாகா' என்று பழநி திருப்புகழிலும், 'இன்சொல் விசாகா... கிருபாகரா' என்று செந்திலில் கோயில் கொண்ட திருச்செந்தூர் திருப்புகழிலும் பாடி இருக்கிறார்.

    சூரபதுமனைப் போரில் அடக்கி மயிலும், சேவலுமாக ஆட்கொண்டு அருளிய பின்னர் முருகப்பெருமான் படை வீடான திருச்செந்தூருக்கு வருகிறார். போரில் வெற்றி பெற்றதினால் தன் தந்தை சிவபெருமானுக்கு நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டு மலர்களால் அர்ச்சனை பண்ணுகிறார். எல்லா மலர்களும் அர்ச்சிக்கப்பட்டுவிட்ட பின்பு ஒரே ஒரு மலர் மட்டும் கையில் இருக்கிறது.

    அச்சமயம் தேவர்கள் முருகனைக் காண வருகிறார்கள். முருகா என்று அவர்கள் அழைக்கிறார்கள்.

    கையில் உள்ள ஒரே ஒரு பூவுடன் முருகன் தேவர்களை நோக்கி திரும்பும் அற்புதக் கோலத்துடனேயே திருச்செந்திலில் சுப்பிரமண்யன் காட்சி தருகிறார். தேவர்களின் வழிபாட்டையும் ஏற்றுக் கொள்கிறார்.

    தமிழ்நாட்டில் எல்லா ஆலயங்களிலும் வைசாக விசாகம் கொண்டாடப்படுகிறது. சென்னை கந்த தோட்டத்தில் வசந்த மண்டபத்தில் வசந்தோற்சவம் கொண்டாடப்படுகிறது. மயிலை கபாலீச்சுரத்தில் லட்சதீபம் ஏற்றி விசேஷமாகக் கொண்டாடப்படும்.

    இன்று நேற்றல்ல... ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட வைசாக விசாகம் சிறப்பாக நடைபெற்றதற்கான தகவல்கள் உள்ளன.

    'மழநாட்டுப் பாச்சில் அவனீஸ்வரத்திற்கு வைகாசி விசாகத் திருவிழா எழுந்தருளுந் திரு அவனி சுந்தரர்க்கு தெவியன் உத்தம் சோழர் நக்கனாரன வீர நாராயணத் தெவியன் எழுந்தருளிவித்த' என்ற கல்வெட்டுச் செய்தி திருச்சிராப்பள்ளி மாவட்டம் - மணச்சநல்லூர் அருகே உள்ள பாச்சில் அவனீஸ்வரம் என்ற கோயில் கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது.

    வைசாக மாதம் பவுர்ணமி திதியன்று உலகை உய்விக்க வந்த புத்தர் பெருமான் பிறந்தார். சித்தார்த்தர் என்ற அந்த இளவரசர் புத்தராக மாறியதும், அவதார புருஷர் என்ற அளவிற்கு பெளத்த மதத்தை தோற்றுவித்துப் பரிநிர்வாணமடைந்ததும், அதே புத்த பூர்ணிமா என்கின்ற வைசாக பவுர்ணமி அன்றுதான்.

    பூதப்பரம்பரை பொலிவுற ஞானசம்பந்தராக அவதரித்தவர் முருகப்பெருமான். அவர் மூன்று வயது குழந்தையாக சீர்காழிப்பதியில் இறைவனால் தரிசனம் தரப்பட்டு அன்னை தந்த ஞானப்பாலை உண்டு 'தோடுடைய செவியன்' என்ற தேவாரத்தைப் பாடி அற்புதம் நிகழ்த்தியதும் வைகாசி மாத மூல நட்சத்திரத்தன்றுதான். வைகாசி மாதத்தில்தான் சேக்கிழார் பெருமானின் திருநட்சத்திரமும் கொண்டாடப்படுகிறது.

    அதே போல் வேதம் தமிழ் செய்த நம்மாழ்வாரின் ஜன்ம நட்சத்திரமும் வைசாக விசாகம்தான். நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார் திருநகரியில் விசாக விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    இந்த வைசாக விசாக நாள் நரசிம்ம ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகிறது. ஆந்திராவில் உள்ள சிம்மாசலத்தில் இருக்கும் நரசிம்மமூர்த்தியை அன்றுதான் சிலா ரூபத்தில் தரிசிக்க முடியும். அன்றுதான் அவர் மேல் சாத்தியுள்ள சந்தன காப்பை அகற்றி விட்டு திருமஞ்சனம் செய்வார்கள். அலங்காரம் செய்யும் அந்தக்காட்சி அதியற்புதமாக இருக்கும். மறுநாள் முதல் சந்தனக் காப்பில்தான் நரசிம்ம மூர்த்தி காட்சி தருவார்.

    வசந்த மாதமான வைகாசி மாதம்தான் எத்தனை சிறப்புடையது?

    2. ஆடியும் வெள்ளியும்

    ஆமாதப் பிறப்பு. இதை தக்ஷிணாயனப் புண்ணிய காலம் என்றும், ஆடிப் பண்டிகை என்றும் தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதப் பிறப்பை 'வருஷப் பிறப்பு' என்றும், தை மாதப் பிறப்பை 'பொங்கல் பண்டிகை' என்றும் கொண்டாடப்படுகிறது.

    மனிதர்களின் ஓராண்டு என்பது தேவர்களின் ஒரு நாள். அதில் ஆடி மாதம் முதல் தேதி தொடங்கி, ஆறு மாதம் 'தக்ஷிணாயணம்' என்றும், தை மாத முதல் தேதி தொடங்கி ஆறு மாதம் 'உத்திராயணம்' என்றும் கூறப்படுகிறது. உத்திராயணத்தின் பொழுது வெய்யில் காலம். சூரியன் பூமத்திய ரேகையின் வடக்கு பக்கம் சஞ்சரிப்பதால், வெய்யில் அதிகமாகவும் கடுமையாகவும் இருக்கும்.

    தக்ஷிணாயணத்தின் பொழுது, சூரியன் பூமத்திய ரேகையின் தெற்கு பக்கம் சஞ்சரிக்கும் பொழுது வட பாகத்தில் வெய்யில் கடுமையாக இருக்காது. காற்று காலம், மழை காலம், பனிகாலம் என்று பரவலாக இருக்கும். அதனால்தான் ஆடி மாதப் பிறப்பை பண்டிகையாகக் கொண்டாடுகிறோம். அன்று மருமகன், மாமியார் வீட்டிற்கு விருந்திற்கு வருவது வழக்கம்.

    ஆடி மாதம் எப்பொழுதுமே அம்மனின் மாதமாக கருதப்படுகிறது. தக்ஷிணாயணம் என்பது தேவர்களுக்கு இராக்கலம் என்பதால், அதன் தொடக்கமாக ஆடி இரவின் தொடக்கமாகும். மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியல் காலமாகக் கருதப்படுகிறது. இதுதான் உஷத் காலம். ஆடி மாதம் இரவின் தொடக்கம். தை மாதம் விடியலின் தொடக்கம்.

    வைகறைப் பொழுதான மார்கழியைத்தான் கண்ணன் மாதங்களில் நான் மார்கழி என்கிறான்.

    இரவின் தொடக்கமும், விடியலின் தொடக்கமும் தீபம் ஏற்றும் நேரம் அல்லவா! தீபம் சக்தியின் வழிபாடு. அம்மன் தானே தீபமாக நிற்கிறாள்.

    ஆடி மாதம் அம்மனின் அருள் பூரணமாக வெளிப்படும் மாதம். அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, அம்மனுக்கு பொங்கல் இடுதல், அம்மனுக்கு கூழ் காய்ச்சி ஊற்றுதல் என்று அம்மனுக்கு நிவேதனமான உணவுப் பண்டங்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு வயிறாரப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

    இந்த ஆடித் திங்களில்தான் அரங்கனையே ஆளப் போகும் ஆண்டாள் திருவில்லிப்புத்தூரில் அவதாரம் செய்தாள். பெரியாழ்வார் என்கின்ற விஷ்ணு சித்தருக்கு துளசி பாத்திகளின் நடுவே கோதை கிடைத்த நாள். துளசி பாத்திகளின் நடுவே கிடைத்ததால் 'கோதை' என்று பெயரிட்டார் பெரியாழ்வார்.

    ஆடி மாதத்தில்தான் அன்னை பார்வதி - கோமதி - தவம் செய்து ஐயனை மீண்டும் அடைந்தாள். இதையே ஆடித் தபசு என்றும், ஆடிப் பூர உற்சவம் என்றும் கொண்டாடுகிறார்கள். எல்லா மாரியம்மன் கோவில்களிலும் ஆடி விழா விசேஷமாகக் கொண்டாடப்படும்.

    ஆடி மாதம்தான் தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளில் எல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். வைகாசி, ஆனி மாதங்களில் தென்மேற்குப் பருவ காற்றின் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பயங்கரமான மழை பெய்யும். அவ்வாறு குடகில் பாக மண்டலத்தில் சிறு ஆறாக - சிறு நதியாகப் பரவி வரும் காவிரி பொங்கி பெருக்கெடுத்து - பொன்னி நதியாக சோணாட்டை நோக்கிப் பாய்ந்து வருகிறாள்.

    நடந்தாய் வாழி காவேரி என்று இளங்கோவடிகளார் புகழ்ந்த காவேரி அன்னை எழிலோவியமாக திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் பெருக்கெடுத்து வருகிறாள். நன்றி மறவாத தமிழினம் அன்னை காவிரிக்குப் படையலிட்டு கவுரவிக்கும் தினம்தான் ஆடி பதினெட்டு. ஆடி நோன்பு என்றும் கூறுவார்கள். அன்னை காவிரிக்கு மசக்கை என்றும் கொண்டாடுவார்கள்.

    சித்ரான்னங்களை எடுத்துச் சென்று காவிரிக்கரையில் உறுவு முறைகள் கூட உண்ணும் கொண்டாட்டம் காணக் கிடைக்காத ஒன்று.

    தமிழ்நாட்டில் உள்ள காவிரி, பெண்ணை, பொருணை ஆகிய மூன்று நதிகளிலும், ஆடி பதினெட்டுப் பண்டிகையைக் கொண்டாடுவதைத்தான் 'மூவாறு பதினெட்டு' என்று சிலேடையாகச் சொல்லுவார்கள்.

    ஆடி மாதத்து அமாவாசையும், தை மாதத்து அமாவாசையும் கடலில் நீராட மிகவும் அருமையான நாட்கள். இதை தக்ஷிணாயண புண்ணிய காலம் என்றும், உத்திராயணப் புண்ணிய காலம் என்றும் சிறப்பாகச் சொல்லுவார்கள்.

    ஆடி மாதத்தில்தான் கயிலை நாதனாகிய எம்பெருமான் - தான் ஆட்கொண்ட தம்பிரான் தோழரான சுந்தரமூர்த்தி நாயனாரை மீண்டும் கயிலைக்கு அழைத்து வர வெள்ளை யானையை அனுப்பியதாக விழாக் கொண்டாடப்படுகிறது.

    தை மாத முதல் தேதியைப் பொங்கல் திருநாள் என்றும், அறுவடைத் திருநாள் என்றும் கொண்டாடுகிறோம். விதைத்தால் தானே அறுவடை செய்ய முடியும்! 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்று ஒரு பழமொழி இருக்கிறதே! ஆடியில் விதைத்தால்தான் தையில் அறுவடை செய்யலாம்.

    மேட்டூரில் ஜூன் 13-ந் தேதி தண்ணீர் திறந்து விடவில்லை என்றால், தஞ்சை விவசாயிகள் படும்பாட்டையும் - ஆகஸ்ட் 3-ந் தேதி ஆடிப் பெருக்கின் பொழுது தண்ணீருக்கு பதில் மணல் வெளியில் சோகமயமாக மக்கள் அமர்ந்திருப்பதை நேரில் பார்த்தவள் நான்.

    ஆடிச் செவ்வாய் தேடிக் குளி; அரைச்ச மஞ்சளைப் பூசிக்குளி என்பார்கள். அதே சமயம் ஆடி வெள்ளிக் கிழமையும் மிகவும் விசேஷமானது. வெள்ளிக்கிழமையே மங்களகரமான நாள். தை வெள்ளியைப் போலவே ஆடி வெள்ளியும் மங்களகரமான நாள்.

    வெள்ளிக் கிழமை நவக்கிரகங்களில் ஒன்றான சுக்ரனுடைய நாள். கீதையில் கண்ணபிரான் தன்னை கவிகளுக்குள் சுக்ரன் என்று சொல்லிக் கொள்கிறார்.

    இதற்கும் அம்பாளுக்கும் என்ன தொடர்பு?

    பார்கவர்! - இதுதான் சுக்ரனுடைய இயற்பெயர். அவர் அசுர குரு. பாற்கடலில் கிடைத்த அமுதத்தைப் பருகியதால் தேவர்களின் பலம் அதிகரித்தது. அசுரர்கள் சகலத்தையும் இழந்து நின்றார்கள். அப்பொழுது அசுரகுரு பார்கவர் ஒரு உபாயம் செய்தார். குபேரனின் மனத்திற்குள் புகுந்து அசுரர்களுக்கு சகல செல்வத்தையும் அள்ளி அள்ளித் தரச் சொல்லி உத்தரவிட்டார். குபேரன் அள்ளித்தர அசுரர்கள் எல்லா வளத்தையும் பெற்றார்கள்.

    யோக மாயை விலகிய பின்னர்தான் குபேரன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தான். தன் நண்பன் சிவனிடம் முறையிட்டான். சிவன் பார்கவரை அழைத்து யோக மாயையால் பெற்ற அத்தனை வளத்தையும், அசுரர்கள் பெற்ற செல்வங்களையும் திரும்ப குபேரனிடம் கொடுத்து விடும்படி கேட்டுக் கொண்டார். பார்கவர் மறுக்க சிவன் பார்கவரை விழுங்கி விட்டார். ஜோதி சொரூபிணியாக வயிற்றில் உள்ள அக்னியால் பார்கவர் துடித்துப் போனார்.

    பரமனோ அர்த்தநாரி. எனவே பரமனின் மறுபாதியான அம்பாளைக் குறித்து கவிமழை பொழிந்தார். அம்பாள் உருகி விட்டாள். பரமனின் பக்கத்தில் நாணத்தோடு அமர்ந்தாள். அனுராக நிலையில் சிவனின் சுக்கிலத்தின் வழியே பார்கவர் வெளியே வந்து விட்டார். பயங்கர வெண்மையுடன் சிவனின் அருளினால் வெளியே வந்தவனை 'சுக்கிரன்' என்று உலகம் அழைத்தது.

    பார்கவர் தேவேந்திரன் மகளையும் மணந்து கொண்டார். நவக்கிரகத்தில் ஒரு கிரகப் பதவியும் பெற்றார். இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தையும் கற்றார். அவருடைய வெள்ளிக்கிழமை அம்பாளுக்குரிய நாளாக மாறியது.

    வெள்ளிக்கிழமை விரத மகிமையால் சுக்ரனுக்குப் பிரீதி ஏற்படுகிறது. சுக்ரன் சுபிட்சத்தைத் தருவான். தொல்லைகள் நீங்கி நல்லவைகள் நடக்கும். வெள்ளிக்கிழமையன்று அவரவர் குல தெய்வத்தை வழிபடுவது நன்மையைத் தரும்.

    சுக்ரனுக்குரிய தேவதை - வள்ளி, தானியம் - வெள்ளை மொச்சை வஸ்திரம் - வெண்பட்டு, புஷ்பம் - வெண் தாமரை. உலோகம் - வெள்ளி, ரத்தினம், வைரம்.

    திருமகளுக்குரிய வரலட்சுமி விரதம் ஆவணி மாதம்தான் என்றாலும், பெரும்பாலான சமயங்களில் ஆடி மாத வெள்ளிக் கிழமைகளிலேயே வரும்.

    ஆடி வெள்ளிக் கிழமைகளில் மாரியம்மனுக்கு தேர், திருவிழா, தெப்பம், தீமிதி போன்றவைகள் எல்லாம் நடக்கும். அருள்மாரி அல்லவா கருமாரி. சின்னச் சின்ன மாரியம்மன் கோவில்களிலிருந்து பெரிய பெரிய மாரியம்மன் கோவில்கள் வரை இந்த ஆடி விழா நடைபெறும்.

    ஆடிச் செவ்வாயைப் போல ஆடிக் கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள்.

    ஊரும், உலகமும் ஆடியைக் கொண்டாடினாலும், ஒரு சிலர் ஆடி மாதத்தை வெறுப்பது உண்டு.

    யார்தெரியுமா? புதுமணத் தம்பதிகள்!

    ஆடி பிறந்ததுமே மருமகளைப் பிறந்த வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். ஆடி மாதம் சூலுற்றால் குழந்தை சித்திரை மாதம் பிறக்கும். ஒன்று வெயில் கடுமை. அடுத்து, சித்திரை மாதம் குழந்தை பிறந்தால் அப்பன் நடுத் தெருவில் என்பார்கள்.

    இது எவ்வளவு தூரம் சரிப்படும் என்று தெரியவில்லை. ஏனென்றால் பண்டிகையை முன்னிட்டு மாப்பிள்ளை மாமனார் வீடு வந்தால்...மணமக்கள் பாடு கொண்டாட்டம்தானே! இந்த சந்திப்பில் சித்திரையாவது இன்னொன்றாவது...

    எது எப்படியானாலும் ஆடி... ஆடிப்பெருக்கு!

    "அன்னையின் அருளே வா... வா...

    ஆடிப் பெருக்கே நீ வா... வா..."

    3. தேவலோகத்தில் இருந்து வந்த துளசி

    அயும் அரனும் ஒண்ணு, இதை அறியாதவன் வாயிலே மண்ணு என்று நடுநிலை தவறாத பக்தர்கள் நடுவே ஒரு முதுமொழி உண்டு. இதை நிரூபிக்கும் வகையில் அர்த்தநாரித் தத்துவத்தையும், சங்கரநாராயணன் வைபவத்தையும் இணைத்துச் சொல்லுவதுண்டு அருணகிரிநாதப் பெருமான் தன் திருப்புகழில் முருகனின் பிரபாவத்தை கூறும் பொழுதெல்லாம் மால் மருகனே, மாயோன் மருகனே என்றெல்லாம் உறவைக் கூறி 'அர அரனின்' ஒற்றுமையைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

    ஐயப்பனின் அவதாரமே இந்த சிவ விஷ்ணு சம்பந்தம் தானே? அதே போல் வில்வம், துளசி, சாளக்கிராமம், கங்கை எல்லாமே சிவ-விஷ்ணு இருவருடனேயே தொடர்பு உள்ளவை.

    வில்வம், லக்ஷ்மிக்குப் பிடித்தமானது என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். திருவஹீந்திரபுரத்தில் (ஹயக்ரீவர்தலம்) லஷ்மிக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்யப்படுகிறது. லக்ஷ்மி வில்வமரத்தில் வசிப்பதாக கானிகாபுராணம், சவுபாக்கிய சஞ்சீவினி மற்றும் வாமன புராணங்கள் தெரிவிக்கின்றன. வில்வம் இருக்கும் இடத்தில் ஸ்ரீலக்ஷ்மி இருப்பாள் என்று ஸ்ரீசுக்தம் கூறுகிறது.

    மலரை விட மென்மையான திருப்பதி பெருமானின் மார்பில் உறையும் லக்ஷ்மிக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வில்வார்ச்சனை செய்யப்படுகிறது. அதே போல் மகாதேவனையும் துளசியால் அர்ச்சனை செய்வதுண்டு. இந்த துளசியின் மகிமையே சிவ விஷ்ணு ஒற்றுமைக்கு அடையாளமாக அமைந்தது என்பதே சுவையான கதை.

    தேவி பாகவதத்தில் 'சங்க சூட உபாக்கியானம்' என்ற கதை தான் அது.

    கோலோகத்தில் கிருஷ்ணனும் ராதையும் ஏகாந்தமாக இருக்கும்பொழுது கிருஷ்ணனின் நண்பன் சுதர்மனும், ராதையின் தோழி ஒருத்தியும் தெரியாமல் நுழைந்து விட்டனர். கோபம் கொண்ட கிருஷ்ணர் சுதர்மனை அசுரனாகப் பிறந்து, பரமனுடன் போரிட்டு பிறகு தன்னை வந்து அடையுமாறு சபித்து விட்டார்.

    ராதையும் தன் தோழியை அசுரனாகப் பிறக்கும் சுதர்மனை பூலோகத்தில் சென்று மணந்து மகிழ்ந்து சந்தோஷமாக வாழ்ந்து தன்னை வந்தடையுமாறு சபித்தாள்.

    மண்ணுலகில் பிறக்கும்படி சபிக்கப் பெற்ற அவர்கள் பிழை பொறுக்கும்படி வேண்டிக் கொண்டனர். மனமிரங்கிய முராரி தேவகாரியத்தின் பொருட்டே அவர்கள் பூலோகம் செல்லும்படி நேரிடுகிறது என்றும், இன்பமுடன் அவர்கள் வாழும் வாழ்க்கையில் அழியாப் புகழ் பெற வாய்ப்பு உண்டு என்றும் தெரிவிக்கிறார்.

    சுதர்மன் சங்கசூடன் என்ற பெயரில் பிறந்து வளர்ந்து வருகிறான். தவவலிமையால் பல அரிய வரங்களைப் பெறுகிறான். என்றாலும், அசுரவம்சத்தில் பிறந்ததினால் அசுரத்தனமே மேலோங்கி நிற்கிறது.

    தர்மதுவசன் என்ற அரசனுக்கும், அவன் மனைவி மாதவிக்கும் தவத்தின் பயனாக தன்னிகரில்லாத அழகுடன் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவள்தான் ராதையின் தோழி துளசி.

    துளசி என்றால் தன்னிகரில்லாதவள் என்று பொருள். அக்குழந்தைக்கு துளசி என்று பெயரிட்டார்கள். துளசி தன்னி கரில்லாத அழகுடன் விளங்கினாள். தனக்குரிய கணவனை அளிக்குமாறு தேவியை நோக்கிக் கடுந்தவம் செய்தாள். ஒரு நாள் துளசி தவம் செய்து கொண்டிருந்த வனத்திற்கு சங்கசூடன் வந்தான். அச்சமயம் பிரம்மா தோன்றி இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.

    துளசியின் பதிவிரதா மேன்மையாலும், முந்தைய பிறவியின் தொடர்பால் கிருஷ்ணன் மேல் கொண்டிருந்த பக்தியின் வலிமையாலும், தேவியின் கருணையாலும் சங்கசூடன் அசுர பலத்துடன் இந்திராதி தேவர்களை எல்லாம் வென்றான். தேவர்கள் தங்கள் துயர் தீர பரமசிவனிடம் சரண் புகுந்தார்கள். பரமசிவன் என்ன போரிட்டும் சங்கசூடனை வெல்ல முடிய வில்லை. துளசியின் கற்பும், கண்ணனின் கவசமும் அவனைக் காத்தன.

    சங்கசூடனின் பராக்கிரமம் பரமனால் கூட வெல்ல முடியாத அளவுக்குப் பெருகிப் போயிருந்தது.

    தேவர்கள் கண்ணனிடம் முறையிட்டனர். மகாபாரத யுத்தத்தில் கர்ணனை வெல்ல கண்ணன் தந்திரமாக கர்ணனிடம் அவன் செய்த தர்மத்தை யாசகமாகப் பெற்றான் அல்லவா? அதே போல் கிருஷ்ணன் கவசத்தை தானமாகப் பெற்றான். பின்பு சங்கசூடனின் உருவத்திலேயே துளசியிடம் சென்றான். தன் கணவன்தான் என்று ஏமாந்த துளசி கண்ணனிடம் கற்பை இழந்தாள். அந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட பரமன் சங்கசூடனிடம் போர் தொடுக்க, சங்கசூடன் போரில் கொல்லப்பட்டான்.

    தன் கணவன் கொல்லப்பட்டதையும், தன் கற்பு பறி போனதையும் அறிந்த துளசி, தன் கணவன் உடலோடு தானும் தீயில் விழுந்து இறந்தாள். தன் கற்பைச் சூறையாடியவன் கல்லாகிப் போக வேண்டும் என்று சாபமிட்டாள்.

    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே அல்லவா!

    கண்ணன் சாபத்தை விவரித்தார்.

    நதியாகவும், செடியாகவும் துளசி பிறவி எடுப்பாள் என்றும், துளசி கண்டகி நதியாகப் பிரவாகம் எடுக்கும் பொழுதுதான் - தான் சாளக்கிராமம் என்ற கல்லாக மாறப் போவதாகவும், துளசி விருட்சமாகப் படரும் பொழுது எல்லோராலும் போற்றப் படுவாள் என்றும், துளசி என்ற புனிதத்துடன் என்னுடன் இணைக்கப்படுவாள் என்றும் கண்ணன் கூறினார்.

    இன்னொன்றையும் கூறினார்.

    சங்கசூடனின் எலும்புகள் சங்காக மாறி பவித்ரமடையும் என்றார்.

    பரமனும் தனக்கு துளசி அர்ச்சனை ஏற்புடையதே என்றார். துளசி அடர்ந்த தோட்டத்திற்கே 'பிருந்தாவனம்' என்ற பெயர் உண்டு.

    ஒரு சமயம் மகாவிஷ்ணுவே துளசியை சந்தோஷப்படுத்த பூஜை செய்ததாக ஹரி வம்சம் கூறுகிறது.

    இதோ இன்னொரு கதை துளசியைப் பற்றி உண்டு.

    ஜலந்திரன் என்ற அசுரன் மும்மூர்த்திகளையே எதிர்க்கும் ஆற்றல் பெற்றிருந்தான். அதற்குக் காரணம், அவனுடைய மனைவியின் கற்பு கொடுங்கோலனாகிய அவனை அவனுடைய மனைவியின் கற்பே காக்கிறது என்பதால் கிருஷ்ணன் ஜலந்தரனின் உருவில் வந்து துளசியின் கற்பை பறித்து விடுகிறார். உலக நன்மைக்காக அவள் செய்த தியாகத்திற்காக மோட்ச மளித்ததோடு தன் பூஜைக்குரிய மலராக திருமால் துளசியை ஏற்றுக்கொள்கிறார்.

    கங்கைக்குரிய புனிதம் துளசிக்கு உண்டு.

    துளசி மாலைக்கு திருத்துழாய், வன்துழாய் என்ற பெயர்கள் உண்டு.

    துளசிக்கு வீட்டில் தனி மாடம் வைத்து விளக்கு ஏற்றி நீர் வார்த்துக் கோலம் போட்டு பூஜை செய்து வந்தால் அதற்கு பலன் நிரம்பவே உண்டு. எல்லா வளமும் உண்டு.

    துளசியை கடையில் வாங்குவது இரண்டாம் பட்சம்.

    துளசியைக் குறிப்பிட்ட காலத்தில் நகம் படாமல் பறித்து சுத்தமாக்க வேண்டும். அதற்குரிய மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.

    ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, துவாதசி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, வருஷப்பிறப்பு, சிரார்த்த தினங்களில் துளசியைப் பறிக்கலாகாது. பகல் பன்னிரெண்டு மணிக்கு மேல் துளசியைப் பறித்தால் பகவானின் தலையைக் கொய்த தோஷம் ஏற்படும். இரவிலும், பிற்பகலிலும், சாப்பிட்ட பிறகும் துளசியைப் பறிக்கலாகாது. பெண்கள் துள்சியைப் பறிக்கக் கூடாது

    சென்னை நீதி மன்றத்தில் முன்னாளில் துளசி தீர்த்தத்தைக் கையில் வாங்கிக் கொண்டு சத்தியப் பிராமணம் செய்வதை ஏற்றுக் கொள்ளப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

    கருப்பு துளசி - கிருஷ்ண துளசி பெருமாளுக்கு மிகவும் உகந்தது. மூன்று தளங்கள் உள்ள துளசியை நகத்தால் வெட்டாமல், உருவி எடுக்காமல் லாவகமாகக் கட்டை விரலையும், பவித்ரவிரலையும் உபயோகித்து எடுக்க வேண்டும். அப்படியே அர்ச்சித்தால் மகாவிஷ்ணு சந்தோஷப்படுவார்.

    ஒரு சமயம் கிருஷ்ணரை அடகுப் பொருளாக நாரதர் எடுத்துச் செல்ல முயன்றாராம். சத்யபாமா தடுத்தபொழுது எடைக்கு எடை பொன் கொடுத்தால் கண்ணனை விடுவிப்பதாக ஒப்புக்கொண்டாராம் நாரதர். சத்யபாமா தன் நகைகளைப் போடுகிறாள். சரியாகவில்லை. அரண்மனையில் உள்ள தங்கப் பாத்திரங்கள் என்று அனைத்தும் போட்டும் கண்ணனுக்குச் சரியாக வரவில்லை.

    சத்யபாமா தவித்தபொழுது ருக்மணி ஒரே ஒரு துளசி தளத்தைக் கொண்டுவந்து துலாத்தட்டில் போட்ட பொழுது, கிருஷ்ணனின் எடைக்கு மேலேயே இருந்தது அது. கண்ணனை விட துளசி கனமும் அதிகம், மணமும் அதிகம் என்பர்.

    ஆண்டாள் பெரியாழ்வார்க்கு துளசிப் பாத்திகளுக்கு இடையில்தான் கிடைத்தாள். அதனால்தான் அவளுக்கு கோதா என்று பெயரிட்டார். கோதா என்றால் துளசி என்று பெயர்.

    துளசியின் விஞ்ஞானப் பெயர் ஆசிமம் சாங்க்ட்டம். திருநீற்றுப் பச்சிலை, நாய் துளசி என்கிற கஞ்சாங்கோனி, சிவதுளசி, விசுவ துளசி என்று பல வகை துளசிகள் உண்டு.

    துளசியை பூஜிப்பவர்களுக்கு சுமங்கலித் தோற்றத்தையும், மங்களம், மோட்சம் என்று எல்லாம் கிட்டும். எளிதில் பிரசவமாகும்.

    துளசி வாடிவிட்ட போதிலும் கூட மணம் மாறுவதில்லை. குணம் குறைவதில்லை. புனிதம் கெடுவதில்லை.

    ஸ்ரீ மத் துளசியம்மா, திருவே கல்யாணியம்மா, வெள்ளிக்கிழமை விளங்குகின்ற மாதாவே என்று துளசிக்கு ஸ்தோத்திரங்கள் இருக்கின்றன.

    4. நவராத்திரி நாயகி

    ராபிரான் வெளியே பெய்யும் மழையையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த மோன நிலையைக் கலைக்க விரும்பாமல் லட்சுமணன் ஸ்ரீராமரையே பார்த்துக் கொண்டிருந்தான். நெஞ்சைப் பிளந்து கொண்டு வந்த பெருமூச்சை இழுத்து விட்ட பின்பு மெல்லத் திரும்பிய ராமன் தம்பியைப் பார்த்துப் புன்னகை பூத்தார். சோகையான புன்னகை, ஜீவனில்லை... லட்சுமணன் மனசுக்குள் துன்பப்பட்டான். அண்ணன் ராமன் சீதையை மறக்க இயலாமல் இப்படி அவஸ்தைப்படுகிறாரோ என்ற வேதனை.

    மழை பெய்வதால் சீதையைத் தேடக் கூட போக முடியாத தடங்கல். பட்டாபிஷேகம் செய்து கொண்ட சுக்ரீவன் கார்காலத்தை அந்தப்புரத்தில் அருமை மனைவிகளுடன் கழித்துக் கொண்டிருக்கிறான் மகிழ்ச்சியுடன். அண்ணன் ஸ்ரீராமனின் வேதனை தீருமா?

    நாராயணா. மஹதி என்னும் தம்பூரின் ஒலியுடன் ஒத்த குரலும் கேட்கிறதே. ராமர் உற்றுக் கேட்டு தம்பியை விளித்தார்.

    லட்சுமணா, நாரதரின் குரலும் மஹதியின் மீட்டலும் கேட்கிறதே.

    ஆம் அண்ணா, நாரதர் வருகிறார்.

    வாருங்கள் நாரதரே. மனைவியைப் பறிகொடுத்து விட்டு எங்கே இருக்கிறாள் என்று தெரியாமல் சோகச் சிலையாக அமர்ந்திருக்கும் இந்த தசரத புத்திரனின் சோகம் தீர வழியே இல்லையா!

    சதா நாராயணா என்று ஸ்மரிக்கும் ஸ்ரீமந்நாராயணனே இப்படி சோகத்தில் தவிப்பதைக் கண்டு நாரதர் உருகிப் போனார். அவதாரத்தின் ரகசியம் அல்லவா?

    ராமா, நான் ஒரு வழி சொல்லுகிறேன். தேவியின் நவராத்திரியை கொண்டாடு. உன் சீதை நிச்சயம் கிடைப்பாள்.

    இந்த மலையில் நான் எப்படி நவராத்திரியைக் கொண்டாட முடியும் நாரதரே?

    நான் ஏற்பாடு செய்கிறேன் ராமா. வன்ய நவராத்திரி என்று ஒன்று உண்டு. அது கந்த மூலிகைகளைக் கொண்டு செய்வது. அதனால் பிதுர்களும், முனிவர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர் என்ற நாரதர், சொன்னதுடன் நில்லாமல் அதை நடத்தியும் வைத்தார்.

    சீதையைத் தேட அனுமன் சென்றதும், சீதையைக் கண்டு கணையாழி கொடுத்ததும், ராமர் - ராவணயுத்தம் நடந்து, சீதை மீண்டு வந்த கதையும் நடந்தது.

    இது ஸ்ரீராமர் செய்த வன்ய நவராத்திரி.

    வருஷத்தில் நான்கு நவராத்திரிகள் உண்டு. ஆனிமாத அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களை ஆஷாட நவராத்திரி என்பார்கள்.

    புரட்டாசி மாத அமாவாசைக்கு பின்வரும் ஒன்பது நாட்களை சாரதா நவராத்திரி அல்லது மகா நவராத்திரி என்பார்கள்.

    தை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்கள் வழிபாட்டை மகா நவராத்திரி என்பார்கள்.

    பங்குனி மாதத்து அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களை வஸந்த நவராத்திரி என்பார்கள்.

    நாம் சாதாரணமாக வழக்கத்தில் அனுஷ்டிப்பது சாரதா நவராத்திரியைத்தான்.

    வஸந்த நவராத்திரியை 'வஸந்த உற்சவம்' என்று கோவில்களில் கொண்டாடுகிறார்கள்.

    இந்த நான்கு நவராத்திரிகளையும் வீட்டில் அனுஷ்டிக்க முடியாதவர்கள். சாரதா நவராத்திரி ஒன்றையேனும் சிரத்தையுடன் அனுஷ்டிக்க வேண்டும்.

    புரட்டாசியும், பங்குனியும் யமதர்ம ராஜனுடைய கோரைப் பற்கள் - இவற்றில் இருந்து தப்ப வேண்டுமானால் நவராத்திரி விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அக்னி புராணம் கூறுகிறது.

    சாரதா நவராத்திரியை நாம் வீடுகளில் கொலு வைத்து அதில் அம்பாளை ஆவாஹனம் செய்து பூஜைகள் செய்கிறோம். தினமும் காலையில் லலிதா சகஸ்ரநாமம், லஷ்மி சகஸ்ரநாமம், தேவி பாகவதம் என்று பூஜை செய்யலாம்.

    ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான அன்னம், ஒன்பது வகையான புஷ்பம், ஒன்பது வகையான அலங்காரம் என்று செய்யலாம்.

    அம்பாள் பாலை வடிவானவள். அதனால் சின்னக் குழந்தைகளை நவராத்திரி தினங்களில் வரச் சொல்லி சாப்பாடு போட்டு பாவாடை சட்டை வைத்துக் கொடுக்கலாம்.

    இதில் ஒரு முறையுண்டு.

    முதல் நாள் ஒரு குழந்தை, இரண்டாவது நாள் இரண்டு குழந்தைகள் என்று வரச் சொல்லி சாப்பாடு போட்டு ஒன்பதாவது நாள் இந்த ஒன்பது குழந்தைகளையும் ஒன்றாகச் சேர்த்து எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, சாப்பிடச் சொல்லி எல்லாருக்கும் பாவாடை சட்டை தைத்துக் கொடுக்கலாம்.

    வசதி இல்லாத குழந்தைகளுக்கு வஸ்திரம் கொடுத்தால் அது இன்னும் புண்ணியமாகும்.

    இதே போல் சுமங்கலிக்கு வெற்றிலை பாக்கு ரவிக்கைத் துணி வைத்துக் கொடுப்பதும் விசேஷமாகும். முடிந்தவர்கள் ஒன்றிரண்டு பேர்களுக்கு புடவை வாங்கி வைத்துத் தரலாம்.

    இப்படிச் செய்யும் நவராத்திரி பூஜை பலனை ஆதிசேஷனாலும் அளவிட்டுக் கூற முடியாது என்று நம் புராணங்கள் கூறுகின்றன.

    வீட்டுக்கு வரும் பெண்களை அம்பாளாகவே கருத வேண்டும்.

    மாலை நேரங்களில் தேவியைத் துதிக்கும் பாடல்களாகப் பாடவேண்டும். கோயில்களில் சொற்பொழிவுகள் வைப்பார்கள்.

    தோடி, கல்யாணி, காம்போதி, பைரவி, பந்துவராளி, நீலாம்பரி, பிலஹரி, புன்னாகவராளி, வஸந்தா போன்ற ராகங்கள் தேவிக்குப் பிடித்தமான ராகங்கள்.

    மல்லிகை, முல்லை, சம்பங்கி, ஜாதி, பாரிஜாதம், செம்பருத்தி, தாழம்பூ, ரோஜா, தாமரை பூக்களால் அர்ச்சிக்கலாம்.

    இவற்றுடன் வில்வம், துளசி, மரு, கதிர்பச்சை, விபூதி பச்சை, சந்தன இலை, தும்பை இலை, பன்னீர் இலை, மருக்கொழுந்துகளால் பூஜை செய்யலாம்.

    நவராத்திரியில் பாடுவதற்காகவே முத்துஸ்வாமி தீட்சிதர் நவாவரண கீர்த்தனை என்னும் பாடல்களை இயற்றி இருக்கிறார்.

    வீணா வேணு மிருதங்க வாத்ய ரஸிகாம் என்று ஆதிசங்கரர் அம்பாளைப் பற்றிக் கூறி இருக்கிறார்.

    நவராத்திரியின் சிறப்பைப் பற்றி கதைகளை நாம் இங்கு படிக்கலாம்.

    கண்ணபிரான் துவாரகையில் மகிழ்ச்சியோடு இருந்து வருகிறார். அந்தச் சமயம் சத்ராஜித் எனும் அரசன் சூரியனை உபாசனை செய்து ஒரு அரிய மணியைப் பெறுகிறான். அதற்கு சியமந்தகமணி என்று பெயர். ஒவ்வொரு நாளும் நடுப்பகலில் தவறாது பொன் கொடுக்கும் சக்தியை உடையதாக இருந்தது. அதனால் சத்ராஜித் மன்னன் தனம் நிரம்பப் பெற்றவனாக இருந்தான். அதனால் அவனது புகழ் நாடு பூராவும் பரவி இருந்தது.

    இதை அறிந்த கண்ணபிரான் சாதாரண அரசனிடம் இப்பெரும் தனம் இருக்கக் கூடாது என்று கருதினார். கண்ணபிரான் தான் மூவுலகங்களுக்கும் சக்ரவர்த்தி, அதனால் அந்த மணியைக் கேட்டு அனுப்பினார்.

    கேட்பது யாரென்பதை உணர சத்ராஜித்தின் அறிவு மயங்கி விட்டது. அதனால் தரமறுத்து விட்டான்.

    ஒரு நாள் சத்ராஜித்தின் மைத்துனன் பிரஸேனஜித் அந்த மணியை அணிந்து கொண்டு வேட்டைக்குச் சென்றான். அவனை ஒரு சிங்கம் கொன்று அந்த மணியைக் கௌவியது. ஒரு கரடி அச்சிங்கத்தைக் கொன்று அத் தெய்வீக மணியைக் கைப்பற்றி தன் குகையை அடைந்து விட்டது.

    சத்ராஜித் மன்னன் கண்ணபிரான் மீது பழியைச் சுமத்தினான். கண்ணன்தான் மைத்துனனைக் கொன்று மணியைக் கவர்ந்து போனான் என்று தூற்றினான். இந்தப் பழியைக் கண்ணனால் பொறுத்துக் கொள்ள இயலாமல் யாரிடமும் சொல்லாமல் மணியைத் தேடிக் காட்டுக்குள் சென்றுவிட்டார்.

    கண்ணனைக் காணாமல் தந்தை வசுதேவர் தவித்துக் கொண்டிருந்தார். 'இளமையில் தான் என் கண்ணனைப் பிரிந்திருந்தேன். இப்பொழுதும் பிரிந்திருக்க வேண்டுமா! என் கண்ணனுக்கு என்ன ஆச்சோ!’ என்று கலங்கினார்.

    அச்சமயம் நாரத மாமுனி அங்கு வந்தார்.

    நாரதரே, என் குமாரன் என்னைப் பிரிந்து சென்று நான்கு தினங்கள் ஆகி விட்டனவே. இத்தனை காலம் பிரிந்திருந்தது போதாதா? அவன் திரும்பி வருவானா? என் கண்ணனைக் காண்பேனா? அதற்கு வழி ஏதேனும் இருந்தால் சொல்லுங்களேன் என்று கண்ணீர் மல்கினார்.

    நாரதர் கூறினார்: இழந்த பொருளை மீண்டும் பெற வேண்டுமானாலும், பிரிந்து சென்ற புதல்வனை அடைய வேண்டுமானாலும், வீண் பழியினின்று குடும்பம் மீள வேண்டுமானாலும் அதற்கு தக்க வழி ஒன்றுண்டு. பராசக்திக்கு விருப்பமான நவராத்திரி பண்டிகையைக் கொண்டாடுவதேயாகும் என்று வழி சொன்னார்.

    உடனே வசுதேவர் ஸ்ரீதேவி உபாசகர்களை வரவழைத்தார். முறைப்படி ஒன்பது நிவேதனம், ஒன்பது வகை பழங்கள், ஒன்பது பட்சணங்கள், ஒன்பது தீர்த்தங்கள், ஒன்பது அலங்காரங்கள், ஒன்பது கோலங்கள், ஒன்பது அர்ச்சனைகள் என்று செய்தும் தேவி பாராயணம் செய்வித்தும் மகிழ்ந்தார்.

    நவராத்திரியின் எட்டு தினங்கள் முடிந்தன.

    காட்டிற்குச் சென்ற கண்ணன் நடந்ததை அறிந்து கொண்டார். கரடியின் காலடிச் சுவட்டைப் பின்பற்றிக் கரடிக் குகையை அடைந்தார்.

    கண்ணனின் வரவைக் கண்டு சினந்து சீறியது கரடி.

    அது சாதாரணக் கரடியல்ல. ஸ்ரீராமனின் அடிமையான ஜாம்பவானே அக்கரடி. சினத்துடன் போரிடத் தொடங்கிய கரடி ஸ்ரீராமன்தான் கண்ணன் என்பதைப் புரிந்து கொண்டது. கண்ணனின் காலடி பற்றி மன்னிப்புக் கேட்டது. தமது மகளான ஜாம்பவதியை மணம் புரிந்து கொடுத்தது மட்டுமின்றி தான் கவர்ந்து வந்த சியமந்தக மணியையும் கொடுத்தனுப்பியது.

    இதை அறிந்த சத்ராஜித் கண்ணனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். தன் மகள் சத்தியபாமாவைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தான். சியமந்தக மணியையும் சீதனப் பொருளாக கொடுத்தான். கண்ணன் திருப்பிக் கொடுத்த மணியைத்தான் மகளுடன் கொடுத்துவிட்டான்.

    வசுதேவரின் நவராத்திரி பூஜையும், தேவி பாகவத பாராயணமும் முடிக்கவும், கண்ணன் வரவும் சரியாக இருந்தது.

    இதிலிருந்து நவராத்திரியின் மகிமை தெரிகிறது அல்லவா!

    நவராத்திரியில் அம்பாள் கொலுவிருக்கிறாள். நாம் கொலு வைக்கிறோம். முதல் மூன்று தினங்கள் துர்காவாகவும், அடுத்த மூன்று தினங்கள் லட்சுமியாகவும், கடைசி மூன்று

    Enjoying the preview?
    Page 1 of 1