Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Navagrahangal
Navagrahangal
Navagrahangal
Ebook89 pages2 hours

Navagrahangal

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

பிறந்த குழந்தைக்கு ஜாதகம் குறிக்கும் பொழுதிலிருந்து நவகிரக்கத்தின் தொடர்பு உண்டாகி வருகிறது. கோவில்களில் நவகிரங்கங்களின் சன்னிதி இருக்கிறது. மூன்று சுற்றிலிருந்து பன்னிரண்டு சுற்றுகள் வரை சுற்றுகிறோம் பயபக்க்தியுடன்.

நம் ஜாதகங்களில் எங்கெங்கு இருக்கிறார்கள் என்று ஜாதகக் குறிப்புகள் காட்டுகின்றன. கிரகக் கோளறு ஏற்பட்டு விடுமோ என்று பயப்படுகிறோம். பயமே வேண்டாம். நம் வீட்டிற்கு வருபவரை கண்டு கொள்ளாமல் இருந்தால் அவருக்கு கோபம் வராதா? அதே போல் தான் நவகிரகங்களும் நம் வீட்டிற்கு வரும் விருந்தாளிகள்.

“வாருங்கள்” என்று அழைத்து அவரை உபசரித்தால் ஏன் படுத்தப் போகிறார்? அர்ச்சனை, நைவேத்யம், பாடல்கள் மூலம் மனம் குளிர வைக்கலாம். நவகிரகங்கள் புத்தகத்தில் ஒன்பது நவகிரகங்களின் வரலாறும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சிவனடியார்களின் நண்பர்கள் தான் நவகிரகங்கள்.

அன்புடன் , லட்சுமி ராஜரத்னம்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115704246
Navagrahangal

Read more from Lakshmi Rajarathnam

Related to Navagrahangal

Related ebooks

Reviews for Navagrahangal

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Navagrahangal - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    நவக்கிரகங்கள்

    Navagrahangal

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    சூரியன்

    சந்திரன்

    அங்காரகன் (செவ்வாய்)

    புத தேவன்

    குரு பகவான்

    சுக்கிரன்

    சனீஸ்வரன்

    ராகு பகவான்

    கேது

    என்னுரை

    பிறந்த குழந்தைக்கு ஜாதகம் குறிக்கும் பொழுதிலிருந்து நவகிரக்கத்தின் தொடர்பு உண்டாகி வருகிறது. கோவில்களில் நவகிரங்கங்களின் சன்னிதி இருக்கிறது. மூன்று சுற்றிலிருந்து பன்னிரண்டு சுற்றுகள் வரை சுற்றுகிறோம் பயபக்க்தியுடன்.

    நம் ஜாதகங்களில் எங்கெங்கு இருக்கிறார்கள் என்று ஜாதகக் குறிப்புகள் காட்டுகின்றன. கிரகக் கோளறு ஏற்பட்டு விடுமோ என்று பயப்படுகிறோம். பயமே வேண்டாம். நம் வீட்டிற்கு வருபவரை கண்டு கொள்ளாமல் இருந்தால் அவருக்கு கோபம் வராதா? அதே போல் தான் நவகிரகங்களும் நம் வீட்டிற்கு வரும் விருந்தாளிகள்.

    வாருங்கள் என்று அழைத்து அவரை உபசரித்தால் ஏன் படுத்தப் போகிறார்? அர்ச்சனை, நைவேத்யம், பாடல்கள் மூலம் மனம் குளிர வைக்கலாம். நவகிரகங்கள் புத்தகத்தில் ஒன்பது நவகிரகங்களின் வரலாறும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சிவனடியார்களின் நண்பர்கள் தான் நவகிரகங்கள்.

    அன்புடன்

    லட்சுமி ராஜரத்னம்

    சூரியன்

    கடவுள் இருக்கிறாரா?

    இருந்தால் காட்டு பார்க்கலாம்? என்று கேட்டாலோ, எதற்காவது சாட்சி சொல்ல வேண்டும் என்றாலோ சூரிய சந்திரன் சாட்சியாக என்று சூரியனையும், சந்திரனையும் காட்டுகிறோம். நித்தியமான இவர்கள் கண் கண்ட தெய்வம்.

    அதிலும் சூரியன் முதன்மையானவர்.

    ஆதி மனிதன் இயற்கையை வழிபட்ட பொழுது, சூரியனையும் வழிபட்டு வந்திருக்கிறான்: பாறைகளில் அவர்கள் வடித்த சூரியச் சக்கரக் கீறல்கள் இன்னும் இருக்கின்றன. இன்னும் சூரியனை அடையாளம் காட்டுவது சக்கரம்தான். பகலில் சூரியன்; இரவில் சந்திரன்; அடுத்தது அக்னி. இதுவே முத்தீ வழிபாடு.

    சூரியன் என்றால் இயக்குபவன் என்று பொருள் படும். காலம் தான் கடவுள். அந்தக் காலத்தின் கண்ணாடி அவன். அவன் உதித்தால் ஒளி தோன்றுகிறது. வெப்பம் உண்டாகிறது. உயிரினங்கள் இயங்கத் துவங்குகின்றது.

    அவன் அஸ்தமித்தால் இருள் சூழ்கிறது. இயக்கம் ஒடுங்கி உயிரினம் துயிலில் ஆழ்கிறது. அதனால்தான் அவனுடைய நேர்முக தரிசன வழிபாடும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    உதிக்கின்ற சூரியனைக் கொண்டே நாள் கணக்கிடப்படுகிறது.

    அபிராமி பட்டர் அபிராமியைச் சொல்லும் பொழுது கூட 'உதிக்கின்ற செங்கதிர்' என்று சொல்கிறார்.

    ரிக் வேதத்தில் சூரியனை அதிதி காஸ்யபரின் புதல்வனாகக் குறிக்கிறார்கள். இவர் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் என்று தங்கி இருக்கிறார். அதாவது மேஷம் (சித்திரை) தொடங்கி மீனம் (பங்குனி) வரை பன்னிரெண்டு ராசிகளில் த்வாதச ஆதித்யர்களாக வழிபடப்படுகிறார்.

    தை மாதம் முதல் ஆனி முடிய உத்தராயணம் என்று கூறப்படுகிறது. இது தேவர்களுக்கு பகல் நேரம். ஆடி முதல் மார்கழி முடிய தட்சணாயணம் என்று கூறப்படுகிறது. இது தேவர்களுக்கு இரவு நேரம்.

    மனிதர்களுக்கு ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அதாவது சூரியன் உதிக்கின்ற நேரத்திலிருந்து மறுநாள் அவன் உதிக்கும் நேரம் வரை மனிதர்களுக்கு ஒரு நாள்.

    தேவர்களுக்கு தட்சணாயணம், உத்திராயணம் என்ற இரண்டும் சேர்ந்து ஒரு நாள். இதிலிருந்து சூரியனின் இயக்கத்தைக் கொண்டேதான் மனிதர்களின் காலம் மட்டும் அல்ல. தேவர்களின் காலமும், கிரகங்களின் சஞ்சாரமும் கணிக்கப்படுகிறது.

    அதனால்தான் சூரியனே காலதேவன்! முழு முதற் கடவுள். காலன் என்று சாதாரணமாக மக்களால் அழைக்கப்படும் எமன் கூட சூரியனின் பிள்ளைதான்.

    சூரியனுக்கு ஞாயிறு என்று ஒரு பெயர் உண்டு. ஞா- நடுவில் தொங்கிக் கொண்டு, இறுமற்ற அனைத்து கிரகங்களையும் இறுக்கப் பற்றிக் கொண்டு இருப்பது ஞாயிறு.

    தமிழகத்தில் ஞாயிறு வழிபாடு என்பது மிகத் தொன்மையானது என்பதைப் பற்றி இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன.

    சிலப்பதிகாரத்தில் சூரியனின் கோயிலை உச்சிக்கிழான் கோட்டம் என்று வெகு அருமையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்திலேயே ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும் என்று சூரிய வணக்கம் செய்து விடுகிறார். அதோடு மட்டுமல்ல கோவலன் கொல்லப்பட்ட செய்தி கேட்டு வெகுண்ட கண்ணகி சூரியனையே சாட்சிக்கு அழைக்கிறாள்.

    காய் கதிர்ச் செல்வனே! கள்வனோ என் கணவன் என்று குமுறுகிறாள்.

    பட்டினப்பாலையும் சூரிய வழிபாட்டை பெருமைப்படுத்துகிறது.

    முனிவரின் சாபத்திலிருந்து கணவனைக் காப்பாற்ற சூரியனை உதிக்க விடாமல் தடுத்த நளாயினியின் கதையும் புராணத்தில் உண்டு.

    ராமாயணத்தில் ராமனின் உடன் பிறவாச் சகோதரன் சுக்ரீவன் சூரிய குமாரன்.

    அதே போல் மகாபாரதத்தில் கர்ணன் சூரியனின் குமாரன்தான்.

    யாருமே நெருங்க முடியாத சூரியனிடம் கை கட்டி, வாய் பொத்தி அடக்கமே உருவாகக்கல்வி

    Enjoying the preview?
    Page 1 of 1