Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ariyatha Mugangal
Ariyatha Mugangal
Ariyatha Mugangal
Ebook82 pages32 minutes

Ariyatha Mugangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during the last four decades with her works that reflect an awareness on social issues, a special sensitivity to social problems, and a commitment to set people thinking.

She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.

As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.

'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580101804794
Ariyatha Mugangal

Read more from Sivasankari

Related to Ariyatha Mugangal

Related ebooks

Reviews for Ariyatha Mugangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ariyatha Mugangal - Sivasankari

    http://www.pustaka.co.in

    அறியாத முகங்கள்

    Ariyatha Mugangal

    Author:

    சிவசங்கரி

    Sivasankari

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    1

    ஜூலை மணி ஒன்பது. வழக்கமாய்த் தென்படும் ஜனக்கூட்டம் இன்றி வெறிச்சோடிக் கிடக்கும் வாசல், முன் அறைகள். காலி நாற்காலிகள். திரைச் சீலை ஒதுக்கி, மாடிப் படி ஏறினால் 12X12 அடியில் எளிமையான அலங்காரத்துடன் ஒரு அறை. சாதாரண சோபாக்கள். எந்தக் கூட்டத்திலோ, யாரோ பரிசளித்த நாலைந்து சின்னச் சின்ன அலங்காரப் பொருட்கள். சிறிய அளவில் காமராஜ், இந்திரா காந்தி புகைப்படங்கள். சுவரை அலங்கரிக்கும் வேங்கடாசலபதி. நட்பின் மேன்மையை எடுத்துரைக்கும் ஒரு வாழ்த்து அட்டை.

    உள் அறையிலிருந்து 'மால் கௌன்ஸ்' ராகம் பீம் சென் ஜோஷியின் குரலில் குற்றாலத்துச் சாரலாய் வீசுகிறது.

    மின்விசிறியைச் சுழலவிட்ட உதவியாளர் காபியைக் கொணர்ந்து வைக்கிறார்.

    ஐயா காலையிலிருந்து என்ன சாப்பிட்டார்?

    வழக்கம் போல இரண்டு தரம் கறுப்பு காபி.

    டிபன்?

    வெளியூர் போவதென்றால்தான் காலையில் டிபன் சாப்பிடுவார். இல்லையென்றால் கறுப்புக் காபியுடன் சரி...

    மேற்கொண்டு பேசுமுன் உள் அறைக் கதவு திறக்கும் ஓசையைத் தொடர்ந்து திரு. மூப்பனார் வெளிப்படுகிறார். பின்னோடு பிள்ளை ஜி.கே.வாசன்.

    கஞ்சியில் மொடமொடக்கும் வெள்ளை வேட்டி, காலரில்லாத சட்டை. அப்போது தான் சாமி கும்பிட்டதைத் தெரிவிக்கும் நெற்றி விபூதி, குங்குமப் பொட்டு.

    வணக்கம்மா... புறப்படலாமா? என்றவர், பிள்ளை பக்கம் திரும்பி, இவங்களுக்கு மதியம் நம் வீட்டில்தான் சாப்பாடு. சுத்த சைவம். நினைப்பு இருக்கட்டும் என்று கூறியவாறு ரப்பர் செருப்பை மாட்டிக் கொண்டு மாடிப்படிகளில் வேகமாய் இறங்குகிறார்.

    காரின் முன் சீட்டில் கராத்தே தியாகராஜனும், பின் இருக்கையில் மூப்பனாரும் நானும் ஏறிக் கொள்ள, டிரைவர் தாமு வண்டியைக் கிளப்புகிறார்.

    நேராகத் தியாக பிரும்ம சங்கீத சபாவின் நிர்வாகக் கூட்டத்திற்குப் போகிறோம் என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அதில் ஒரு சின்ன மாற்றம். முனவர்பாட்சா வீட்டில் ஒரு விசேஷம். முதலில் அங்கு இரண்டு நிமிஷங்கள் போய்விட்டு, அப்புறமாய் மற்ற நிகழ்ச்சிகளைத் தொடங்குவதில் உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே? வீட்டைக் காட்டுவதற்காகத்தான் தியாகு உடன் வருகிறார்.

    தமிழ் மாநில காங்கிரஸில் முக்கிய உறுப்பினராக இருக்கும் முனவர்பாட்சாவின் வீடு மயிலையில் இருக்கிறது. குறுகலான சந்தில் போக முடியாமல் வண்டி பிரதான சாலையிலேயே நின்று விட, மூப்பனார் இறங்கி நடக்கிறார். நாலடி அகலமிருந்த சந்தின் இரு புறமும் ஒன்றோடொன்று கைகோர்த்துக் கொண்டு இடைவெளியில்லாமல் வரிசையாய் எளிமையான வீடுகள். வளைந்து சென்ற சந்தில் கிட்டத்தட்ட 200 அடிகள், போல நடந்து செல்லும் போது எதிர்ப்படும் பெண்களும் ஆண்களும் 'அட, இவரா!' என்கிற எதிர்பாராத வியப்பில் கண்களைக் குடைகளாய் விரிக்கிறார்கள். மகிழ்ச்சியோடு வணக்கம் தெரிவிக்கிறார்கள். கொஞ்சம் துடிப்பானவர்கள் அருகில் வந்து கையைப் பற்றிக் குலுக்குகிறார்கள்.

    முனவர்பாட்சா வீட்டு தக்குனூண்டு அறையில் அமர்ந்து, குடும்பத்தாரின் நலனை விசாரிக்கிறார். வணங்கிய பெண்ணிடம் சட்டைப் பையிலிருந்து ஒரு கவரை எடுத்துப் பரிசளிக்கிறார். அவர்கள் தரும் தகவல் சுக்குக் காபியை ரசித்துக் குடிக்கிறார். 'குடிங்க' என்று என்னையும் உபசரிக்கிறார்.

    ஒரு அழைப்பை மதித்து எந்தப் பந்தாவுமின்றி இப்படி மூப்பனார் வருவதும், அங்குள்ளவர்களில் ஒருவராய் சகஜமாய்ப் பழகுவதும் எனக்குப் புதிய காட்சி இல்லை. நிறைய பார்த்திருக்கிறேன். கடைசியாய் கண்டு சந்தோஷித்தது ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தைச் சேர்ந்த சங்கர ராமனின் இல்லத்து கிரஹப் பிரவேச வைபவத்தில்.

    சக்கர நாற்காலிக்காரரான சங்கர ராமன் நேரில் வந்து அழைத்ததை ஏற்று, அந்தக் காலை நேரத்தில் அவரது புது வீட்டுக்கு மூப்பனார் வந்த போது துணை என்றுகூட யாரும் உடன் வரவில்லை. ஹோமப்புகை சூழ்ந்த கூடத்தில் வீட்டுச் சொந்தக் காரர்களுடன் அமர்ந்து, பாயஸம் குடித்து, புகைப்படம் எடுத்துக்கொண்டு, குழந்தைகளுடன் சிரித்துப் பேசி, சுமார் அரை மணிபோல செலவிட்ட பின்பு அவர் புறப்பட்டுப் போனதும் ஒரு மூதாட்டி 'இந்தக் காலத்துல இப்படியொரு மனுஷரா!' என்று

    Enjoying the preview?
    Page 1 of 1