Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Poi Pothum
Oru Poi Pothum
Oru Poi Pothum
Ebook211 pages1 hour

Oru Poi Pothum

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

அன்புள்ள உங்களுக்கு
வணக்கம்,
ராணி - வார இதழில் தொடராக வந்த கதை இது. நிறைய சம்பவங்களும், நிறைய திருப்பங்களும் வைத்து எழுதப் பெற்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையைச் சார்ந்தது. பொதுவாக எனக்கு ‘ஓப்பன் சஸ்பென்ஸ்’ வைத்து கதை எழுதவே பிடிக்கும். அதாவது ஹிட்ச்காக் டைப்! இன்னார்தான் குற்றவாளி, இதுதான் நடக்கப் போகிற குற்றம் என்பதையெல்லாம் தெளிவாகச் சொல்லிவிட்டு பரபரப்பான சம்பவங்களை அமைத்து எழுதும் வகை. ‘குற்றவாளி யார்?’ என்று கடைசி வரை சஸ்பென்சில் வைக்கிற கதைகளை நான் குறைவாகவே எழுதியுள்ளேன். அவற்றில் இதுவும் ஒன்று. கதையைப் படித்துக் கொண்டே வரும்போது... இசையமைப்பாளரை கொலை செய்தது யார் என்று நீங்கள் நடுவிலேயே யூகித்துவிட்டால் கீழ்க்கண்ட வார்த்தையை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்.
இமயத்திற்கு நன்றியுடன், பிரியங்களுடன்,
பட்டுக்கோட்டைய பிரபாகர்
Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580100905308
Oru Poi Pothum

Read more from Pattukottai Prabakar

Related to Oru Poi Pothum

Related ebooks

Related categories

Reviews for Oru Poi Pothum

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Poi Pothum - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    ஒரு பொய் போதும்

    Oru Poi Pothum

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    முன்னுரை

    அன்புள்ள உங்களுக்கு

    வணக்கம்,

    ராணி - வார இதழில் தொடராக வந்த கதை இது. நிறைய சம்பவங்களும், நிறைய திருப்பங்களும் வைத்து எழுதப் பெற்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையைச் சார்ந்தது. பொதுவாக எனக்கு 'ஓப்பன் சஸ்பென்ஸ்' வைத்து கதை எழுதவே பிடிக்கும். அதாவது ஹிட்ச்காக் டைப்! இன்னார்தான் குற்றவாளி, இதுதான் நடக்கப் போகிற குற்றம் என்பதையெல்லாம் தெளிவாகச் சொல்லிவிட்டு பரபரப்பான சம்பவங்களை அமைத்து எழுதும் வகை. 'குற்றவாளி யார்?' என்று கடைசி வரை சஸ்பென்சில் வைக்கிற கதைகளை நான் குறைவாகவே எழுதியுள்ளேன். அவற்றில் இதுவும் ஒன்று. கதையைப் படித்துக் கொண்டே வரும்போது... இசையமைப்பாளரை கொலை செய்தது யார் என்று நீங்கள் நடுவிலேயே யூகித்துவிட்டால் கீழ்க்கண்ட வார்த்தையை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்.

    இமயத்திற்கு நன்றியுடன், பிரியங்களுடன்,

    பட்டுக்கோட்டைய பிரபாகர்

    சரியாய் யூகித்தவர்களுக்கு மட்டும் பாராட்டுக்கள்.

    1

    தமிழகத்தின் தலை நகரம்.

    மெரீனா அலைகள் தாலாட்டிக் கொண்டிருக்கும் பெசண்ட் நகருக்கு, ஈரமான காற்று மென்மையாக சாமரம் வீசிக் கொண்டிருந்தது. இன்னும் சில மணி நேரம் கழித்து மக்களின் உடைகளை வியர்வையில் துவைக்கப் போகிற சூரியன் தற்சமயம் சாதுவாய் தலை தூக்கிப் பார்த்துக் கொண்டிருக்க....

    அந்த பங்களாவின் வாசலில் கார்கள் காத்திருந்தன. வரவேற்பறையில் மனிதர்கள் காத்திருந்தார்கள்.

    வரவேற்பறையில் ஒரு சுவர் முழுக்க கண்ணாடி போட்ட அலமாரிகள் அமைத்து, உள்ளே வரிசையாய் கேடயங்கள், கோப்பைகள், நினைவுப் பரிசுகள் அடுக்கப்பட்டிருந்தன.

    சோபாக்களில் அமர்ந்திருந்தவர்களில் ஒரே ஒரு ஆசாமியைத் தவிர யாரையும் ஏழை பட்டியலில் சேர்க்க முடியாது. அந்த ஆசாமி கையில் டைரியும், பாக்கெட்டில் பேனாவும், கண்ணுக்குக் கண்ணாடியும், மூக்குக்குப் பொடியும், கொஞ்சம் மடிப்பு கலைந்த உடையுமாக செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார்.

    வரவேற்பறையின் வாசலில் திரை விலகி, டை கட்டின மனிதர் வர....

    இந்த ஆசாமி எழுந்து போய், வணக்கம் பிரதர். நினைவிருக்கா? என்றார்.

    அவர் உற்றுப் பார்த்து, நினைவுகளைக் கசக்கிப் பார்த்து, தெரியலையே... யாரு? என்றார்.

    போனவாரம் பிரசாத் பதிவுக் கூடத்தில் அண்ணன்கிட்டே பேட்டிக்கு நேரம் கேட்டேனே... இன்றைக்குக் காலையிலே வரச்சொன்னாரே.... நீங்களும் பக்கத்திலே இருந்திங்க. உங்களைக்கூடக் குறிச்சிக்கச் சொன்னாரே... மறந்துட்டிங்களா?

    திரைக்கண்ணாடி பத்திரிகை நிருபரா?

    ஆமாம் சார்.

    "இன்னைக்கு வசதிப்படாதே. அண்ணன் நேத்து கோவையில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்திட்டு ராத்திரி ரெண்டு மணிக்குதான் வந்தாரு. இப்பதான் எந்திரிச்சிக் குளிக்கப் போனாரு. குளிச்சிட்டு பூஜையிலே உட்காந்தார்ன்னா, எந்திரிக்கிறதுக்கு முக்கால் மணி நேரமாகும். பாருங்க, எத்தனை தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் காத்துக்கிட்டிருக்காங்க!

    இவ்வளவு பேரையும் பதினோரு மணிக்குள்ளே சந்திச்சிப் பேசிட்டுப் பாடல் பதிவுக்குப் புறப்படணும். அதனால நேரமிருக்காது. நீங்க ரெண்டு நாள் கழிச்சி என்னைப் பாருங்க."

    இல்லை சார். வர்ற இதழுக்கு இசை இளவல் மணிமாறனின் சிறப்புப் பேட்டின்னு எங்க பத்திரிகை ஆசிரியருக்கு நான் உறுதியாகச் சொல்லியிருக்கேன். நீங்க அண்ணன் கிட்டேச் சொல்லுங்க. ஒரு பத்து நிமிடம் ஒதுக்கித் தந்தால் போதும்.

    சொல்றேன். சம்மதிச்சா அனுமதிக்கிறேன். காத்திருங்க என்று செயலாளர் அங்கே அமர்ந்திருந்த மற்றொரு நபரை அணுகி, ஒரு நிமிடம் என்று தனியாக அழைத்துச் சென்றார்.

    உங்க முதலாளி கிட்டேச் சொல்லிடுங்க. அந்த விவகாரத்திலே அண்ணன் இன்னும் கோபமாத்தான் இருக்கார். அவரே வந்து பார்த்து மன்னிப்பு கேட்டால் ஒரு வேளை மனசு மாறலாம். நீங்க பேசி எதுவும் ஆகாது. ரெண்டாவது, இன்னிக்கு அண்ணன் நல்ல மனநிலையிலே இல்லை. புரியுதா?

    புரியுது. அப்ப சரி. நான் போய் முதலாளியையே வரச்சொல்றேன் என்று அந்த நபர் புறப்பட்டுப் போனான்.

    இதைப் போல நான்கைந்து பேரைக் கழித்து அனுப்பி விட்டு உள்ளே பங்களாவின் ஹாலுக்கு வந்தான், செயலாளர்.

    அருகே இரண்டு கதவுகளிலும் ஏராளமான மணிகள் தொங்க விடப்பட்டிருந்த பூஜை அறையில் மணிமாறன் தீபாராதனை காட்டி விட்டு, தொட்டு வணங்கி விட்டு வெளியே வந்தார்.

    மணிமாறன் ஆறடி உயரத்தில் இருந்தார். பட்டு வேட்டியும், பட்டு ஜிப்பாவும் அணிந்திருந்தார். கழுத்தில் மொத்தியான தங்கச் சங்கிலி. அதன் டாலரில் வீணையுடன் அமர்ந்திருக்கும் சரசுவதி. முறுக்கி விடப்பட்ட மீசையில் லேசாக நரை கலந்திருந்தது. தலையில் ஏராள முடி அவர் வயதைக் குறைத்து மதிப்பிட வைத்தது. நெற்றியில் விபூதியும், அதன் கீழே குங்குமமும் வைத்திருந்தார்.

    மூர்த்தி என்றார்.

    "சார்' என்று அருகில் வந்தான் காரியதரிசி.

    நிறையபேர் காத்திருக்காங்களா?

    பாதிபேரை அனுப்பி விட்டேன் ஆறு பேர் காத்திருக்காங்க. திரைக் கண்ணாடி நிருபர் காத்திருக்கார். இன்றைக்கு முடியாதுன்னு சொல்லிப் பார்த்துட்டேன். பத்து நிமிடம் போதும்னு உக்காந்திருக்கார்.

    அவர் மூணு தடவை என்னைச் சந்திச்சுட்டார். இருக்கச் சொல்லு. கடைசியா அவரைப் பார்க்கறேன். இன்றைக்கு பாடல் பதிவு எங்கே?

    ஏவி. எம். பதிவுக் கூடத்தில.

    நான் டிபன் சாப்பிட்டுட்டு வந்துடறேன்.

    மணிமாறன் நடந்து சமையலறையை ஒட்டி இருந்த ஏழு பேர் சாப்பிடக் கூடிய மேசையில ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்ததும், சமையல்காரன். வேகமாக வந்து தட்டு வைத்து சூடாக இட்லிகளை எடுத்துவைத்தான்.

    அய்யா, மத்தியானம் சாப்பாடு அனுப்பி வச்சிடவா இல்லை வர்றிங்களா?

    வர முடியாது தேவா. அனுப்பி வச்சிடு.

    அம்மாவும், பிள்ளைங்களும் அமெரிக்காலேர்ந்து எப்ப வருவாங்கய்யா!

    ஏம்ப்பா மகள் வீட்ல நிம்மதியா தங்கி ஊர் சுத்திப் பார்த்துக்கிட்டிருக்கிறது உனக்குப் பிடிக்கலையா? போய் பத்து நாள் தானே ஆச்சி? இன்னும் இரண்டு வாரம் ஆகும்.

    வீடே வெறிச்சுன்னு இருக்குதுய்யா. அதனால கேட்டேன்.

    மணிமாறன் அமைதியாகச் சாப்பிட... மூர்த்தி வயர் இல்லாத நவீன தொலைபேசியை எடுத்துக் கொண்டு வந்து, சார், டைரக்டர் சந்திர ராஜா பேசறார் என்று நீட்டினான்.

    மணிமாறன் வாங்கிக் கொண்டு, அலோ, சந்தர், எப்டியா இருக்கே? நான் நல்லா இருக்கேன். ஆமாம், கோவை போயிட்டு வந்தேன். இசை நிகழ்ச்சிகள் போறதே இல்லை. பொதுச் சேவை அமைப்புன்னதாலப் போனேன். அதுவும் ஆறு மாசம் முன்னாடி தேதி கொடுத்துட்டேன். அதனாலத் தவிர்க்க முடியலை. அப்புறம்? சொல்லு. எட்டு மாசத்துக்கு தேதியே இல்லைப்பா. அதுக்கப்புறம்னா. சொல்லு. உன் படத்துக்கு இசை அமைக்கிறேன். கிருஷ்ணன் வந்தான்னா! ஓ.... தாராளமா வாய்ப்பு கொடு. என் குழுல உதவியாளனா இருக்கிறவன் முன்னுக்கு வந்தால் எனக்குப் பெருமை தான். சேச்சே...எனக்கு எந்த வருத்தமும் கிடையாதுப்பா. வேற ஒண்ணும் இல்லையே. சரி என்று தொடர்பை நிறுத்தி யோசனையில் ஆழ்ந்தார்.

    கிருஷ்ணன் போய் வாய்ப்பு கேட்டானாமா சார்? என்றான் மூர்த்தி.

    ஆமாம். போன வாரம் அவனை எப்படி எல்லாம் திட்டினேன். நீயும் தானே பக்கத்தில இருந்தே நான் எங்கேயும் போய் தனியா இசை அமைக்கிறேன், வாய்ப்பு கொடுங்கன்னு கேட்கலைன்னு சொன்னான் இல்லையா? இதோ சந்திர ராஜா சொல்றான் பாரு. கிருஷ்ணன் போய் இவன் கிட்டே வாய்ப்பு கேட்டிருக்கான். இது நல்லா இருக்கா மூர்த்தி?

    முளைச்சி மூணு இலை விடலை சார். உங்க கிட்டே சேர்ந்து மூணு வருடம் கூட ஆகலை. என்னமோ எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு பெரிய மேதை ஆயிட்டதா நினைப்பு கிருஷ்ணனுக்கு

    மூர்த்தி! அவன் என்னைச் சரியாய் புரிஞ்சுக்கலை புரியவச்சிட வேண்டியதுதான்" என்று மணிமாறன் எழுந்து கை கழுவித் துடைத்துக்கொண்டு ஹாலை ஒட்டிய தனியறையில் அமர்ந்து வந்திருக்கும் பிரமுகர்களை ஒவ்வொருவராகச் சந்திக்க ஆரம்பித்தார்.

    மன்னிக்கணும். நான் பாடல் பதிவு தவிர பொது நிகழ்ச்சிகளில் இசைக் கச்சேரி செய்றதை நிறுத்திட்டேன், வேற யாரையாவது ஏற்பாடு செய்துக்கங்க.

    அடுத்த மாசம் முடியாது. எட்டு மாசம் கழிச்சுதான் உங்க படத்துக்கு இசை அமைக்க முடியும். யோசனை பண்ணிக்கிட்டு வந்து சொல்லுங்க.

    ஏற்கெனவே ஒரு கம்பெனிக்காரங்க என்னோட தனி இசையை எல்லாம் கேசட் வடிவத்திலே வெளியிட்டுக்கிட்டு இருக்கிறாங்க திடீர்னு ஆளை மாத்தி அந்த வாய்ப்பை உங்களுக்குத் தர்றது முடியாத காரியம்.

    உங்க படம் என்னோட பின்னணி இசைச் சேர்ப்பு வேலை காரணமா முடிவடையாமல் இருக்கிறதுக்கு வருத்தப்படறேன். வர்ற வெள்ளிக்குள்ளே என் வேலைகளை முடிச்சித் தந்துடறேன். அதுக்குமேல தாமதமாகாது. நீங்க நம்பி வெளியீட்டு தேதி விளம்பரப்படுத்திடலாம்.

    இப்படி வந்தவர்களிடம் பேசி அனுப்பிவிட்டு இறுதியாக திரைக் கண்ணாடி நிருபரை வரச் சொன்னார் மணிமாறன்.

    'வணக்கம்" என்று பெரிதாகக் கும்பிட்டுவிட்டு அமர்ந்தார் நிருபர்.

    'வணக்கம். உங்களை வரச்சொல்லிட்டக் காரணத்தாலதான் பேசறேன். உண்மையிலே நேரமில்லை. தயவு செஞ்சி சுருக்கமா முடிச்சுக்கங்க."

    மணிமாறன் சிகரெட் புகைக்க... நிருபர் டைரியைத் திறந்து வைத்துக் கொண்டு, பேனாவைத் திறந்து வைத்துக் கொண்டு, உங்களுக்கும் பாடகர் ரவிக்குமாருக்கும் மனவருத்தம்னு செய்தி வந்திச்சே. அது உண்மையா?

    பாதி உண்மை. பாதி பொய். பொதுவாவே நான் கொஞ்சம் கோபக்காரன். தொழிலுக்கு மரியாதை தர்றவன். அன்றைக்கு பாடல் பதிவுக்காக பம்பாய்லேர்ந்து இணைந்து பாடற பெண் பாடகி வந்திருந்தாங்க. எங்க குழுவும், அவங்களும் ரவிக்குமாருக்காகக் காத்திருந்தோம் மூணு மணி நேரம் தாமதமாக வந்தார். எனக்குக் கோபம் வந்து, அவர் பாடவேண்டிய பாட்டுக்கு நானே பாடி பதிவை முடிச்சிட்டு தாமதமா வந்ததுக்காக சத்தம் போட்டேன் ரவிக்குமார் தன் தவறை உணர்ந்து அப்பவே மன்னிப்பு கேட்டார் விவகாரம் அத்தோட முடிஞ்சது. இன்னிக்குக்கூட என் இசையிலே ரவிக்குமார் பாடப் போறார்.

    அப்புறம்.... ஒரு மூன்றாம் தரப் பத்திரிகையிலே மணிமாறனின் இரவு லீலைகள்னு மோசமா ஒரு தொடர் கட்டுரை வருதே... அதைப்பத்தி...

    நீங்களே சொல்லிட்டிங்க, மூன்றாம் தரப் பத்திரிகைன்னு. அவங்களுக்கு புகழா இருக்கிறவங்க பத்தி அவதூறா எதாச்சும் எழுதி காசு பண்றதுதான் வேலை. ஒரு சதவீதம்கூட உண்மை இல்லை.

    உங்ககிட்டே உதவியாளரா இருக்கிற கிருஷ்ணன் தனியா இசை அமைக்கப் போறதா கேள்விப்பட்டேன். உண்மையா?

    கிருஷ்ணனைக் கேட்க வேண்டிய கேள்வி இது. இந்த நிமிடம் வரைக்கும் கிருஷ்ணன் என்கிட்டேதான் உதவியாளரா இருக்கார். நேத்துகூட கோவையிலே நாங்க நடத்தின இசை நிகழ்ச்சியில் கலந்துகிட்டார்.

    மணிமாறன் கைக்கெடிகாரத்தைப் பார்த்து எழுந்து கொண்டு, போதும்னு நினைக்கிறேன் என்றதும், நிருபர் வணக்கம் வைத்து விட்டுப் புறப்பட்டுப் போனார்.

    மூர்த்தி, கார் ரெடியா இருக்கா? போகலாமா? என்று இசைக்குறிப்புகள் எழுதி வைத்திருக்கும் நோட்டுப் புத்தகத்துடன் புறப்பட்டார் மணிமாறன்.

    ஒளிப்பதிவுக் கூடம் நோக்கி கார் விரைய.... மணிமாறன் கண்மூடி யோசனையில் இருந்தார்.

    கிருஷ்ணன் இளைஞன். திறமையானவன். பல சந்தர்ப்பங்களில் எனக்கே யோசனைகள் சொல்பவன். மகா புத்திசாலி. சொல்லப்போனால் - என்னை விட இசை

    Enjoying the preview?
    Page 1 of 1