Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ellame Nee Sonnathu...
Ellame Nee Sonnathu...
Ellame Nee Sonnathu...
Ebook116 pages46 minutes

Ellame Nee Sonnathu...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கௌரி என்ற பக்தைக்கும் அவள் வணங்கும் தெய்வமான அம்பாளுக்கும் இடையில் எழும் போராட்டம்.தெய்வ நம்பிக்கை இல்லாத தன் கணவன் விஸ்வத்துடன் அவள் மல்லாடுகிற சோதனை.இவள் பக்தி விஸ்வத்தை மாற்றியதா ? மயிற் கூச்செறியும் சம்பவங்களுடன் நாவல் தொடருகிறது. படியுங்கள் படித்தால் பரவசமாகும்.
Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580100805661
Ellame Nee Sonnathu...

Read more from Vimala Ramani

Related to Ellame Nee Sonnathu...

Related ebooks

Reviews for Ellame Nee Sonnathu...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ellame Nee Sonnathu... - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    எல்லாமே நீ சொன்னது...

    Ellame Nee Sonnathu…

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஆராதனை

    2. ரத்ன சிம்மாசனம்

    3. இருதய கங்கை

    4. திவ்ய பரிமளங்கள்

    5. புஷ்ப மாலைகள்

    6. ஆபரணங்கள்

    7. பாதாதி கேச வருணனை

    8. அர்ச்சனை

    9. தூபம்

    10. ஜோதி

    11. தீபாராதனை

    12. புஷ்பாஞ்சலி

    13. ஷோடசோபசாரங்கள்

    14. நமஸ்காரம்

    1. ஆராதனை

    இன்று துர்க்கா அஷ்டமி நாள். கௌரி பக்தியில் லயித்தபடி தன்னை மறந்து பூஜை பண்ணிக் கொண்டிருந்தாள். அவள் துர்க்கா ஆபத்துத்துர்க்காஷ்டகத்தை ராகத்தோடு பாடிக் கொண்டிருந்தாள். இன்று துர்க்காஷ்டமி நாள். அம்பாள் கொலு வீற்றிருக்கிற நாள். மஹிஷாசுரனை வதம் பண்ணுவதற்காக விசேஷ தபஸ் இருக்கிற நாள். அம்பாள் துர்க்கையாக மாறி சகல சக்திகளையும் பெற்று தேஜஸுடன் இருக்கும் நாள். இந்த நாளில் கௌரி சாப்பிடமாட்டாள். நிர் ஜலம்! தண்ணீர் கூடக் குடிக்க மாட்டாள். இந்த நாளில் அப்படி என்ன ஒரு திடமும், மன உரமும் அவளுக்கு வருமோ, அவளுக்கே தெரியாது! தினமும் அநேகமாகப் பட்டினி தான்! ஆனால் வயிற்றுக் கில்லாமல் காய்ந்து கிடக்கிற பட்டினி நாளில் பசி என்னமாகக் குடலைக் கவ்வுகிறது? ஆனால் இந்த துர்க்காஷ்டமி நாளில் கௌரிக்கு பசி நினைப்பே இல்லை. பட்டினி சோர்வே இல்லை! அது எப்படி? கௌரியின் கணவன் விஸ்வம் தான் கத்துவான்.

    ஆ! பெரிய பக்தி! வேலைக்கு அலையாக அலைகிறேன்... வேலை கிடைக்க மாட்டேன் என்கிறது. நீயும் தான் இந்த சாமியைக் கட்டிக்கொண்டு எத்தனை வருஷமாக அலைகிறாய்? எனக்கு ஒரு வேலை வாங்கித்தர உன் சாமிக்கு சக்தி இல்லையே! கௌரி பேசமாட்டாள். கௌரியின் மனக்கண்ணில் பழையவைகள் நினைவுக்கு வரும். விஸ்வம் ஏதோ, வேலைக்குப் போய் நானூறோ ஐந்நூறோ சம்பாதித்துக் கொண்டு வந்து கொண்டிருந்த போது ஓரளவு குடும்பம் செழிப்பாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. கௌரிக்கு என்றுமே பக்தி அதிகம் நவராத்திரி பூஜை சதுர்த்தி பூஜை, சங்கடஹ சதுர்த்தி, துலா மாசப் பூஜை என்று வருஷத்தின் எல்லா நாட்களிலும் தன்னை மறந்து பூஜை அறையில் முடங்கிக் கிடப்பாள். மீராவுக்கு கண்ணன் விக்ரஹம் கிடைத்த மாதிரி கௌரிக்கும் அம்பாள் பூஜை தற்செயலாகக் கிடைத்தது. யாரோ ஒரு பெரியவர் திடுதிடுவென்று அவள் வீட்டில் நுழைந்தார். பசிக்கிறது சாதம் போடு என்றார். கௌரி திணறிப் போய்விட்டாள். அப்போது விஸ்வம் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தான். பிற்பகல் சாப்பாடு அனுப்ப வேண்டும். அவனுக்குச் சாப்பாடு அனுப்பியபின் தான் சாப்பிடுவாள். விஸ்வம் மகா கோபக்காரன், கணவனுக்குச் சாப்பாடு கட்டிக் கொண்டிருந்த கௌரி பசிக்கிறது, சாதம் போடு - என்கிற அதிகாரபூர்வமான, உரிமையுள்ள உத்திரவைக் கேட்டு அரண்டு போனாள். அந்தப் பெரியவரை உள்ளே அழைத்தாள். கணவனுக்கு வைத்திருந்த சாப்பாட்டைப் போட்டு விட்டாள்! விஸ்வம் சாப்பாட்டையும், கௌரி சாப்பாட்டையும் சேர்த்து அந்தப் பெரியவர் வயிறார உண்டார். வாயார வாழ்த்தினார். கூடிய சீக்கிரமே அம்பாள் உன்னைத் தேடி வருவாள். தேவி உபாசனை செய்து கொண்டிரு - என்று சொன்னவர் பாலா மந்திர பீஜாக்ஷரங்களை உபதேசித்துவிட்டுப் போய்விட்டார். கனவு மாதிரி இருந்தது கௌரிக்கு. எங்கிருந்தோ ஒருவர் வந்தார். சாப்பிட்டார். குருவாகி உபதேசித்தார். யார் அவர்? மெய் சிலிர்த்தது. ஆனால்... இப்படி நினைக்கும் போதே உடல் நடுங்கியது. சாப்பாடு அனுப்பாததற்காக விஸ்வம் கூப்பாடு போடுவானே? அவள் பசியையும் மீறி இந்தப் பயம் குடலைக் கவ்வியது. மாலை விஸ்வம் வந்து கூப்பாடு தான் போட்டான். ஆமாம்... வேலை 'பிரமோஷன்' ஆனதாக மகிழ்ச்சிக் கூப்பாடு போட்டுக் கொண்டு வந்தான். உத்தியோக உயர்வு ஆன மகிழ்வில் பிற்பகல் சாப்பாடு வராதது பெரிதாகத் தோன்றவில்லை! கௌரி மகிழ்ந்து போனாள். ஆராதனை தொடர்ந்து நடந்தது. ஆகமமாக பூஜை செய்யக் கற்றுக் கொண்டாள். பல நவராத்திரிகள்... பல துர்க்காஷ்டமிகள்... பல உற்சவங்கள்... பல ஆராதனைகள்... அன்று, அந்தப் பெரியவர் – ‘அம்பாள் உன்னைத் தேடி வருவாள்' என்றாரே! எப்படி வருவாள்? திவ்ய தரிசனத்தைக் காண முடியுமா? அந்தப் பெரியவர் சொன்னது உண்மையா? இப்படிப் பல குழப்பங்கள். அன்று

    என் அம்பாள்தான் உங்களுக்கு வேலை பிரமோஷனாக அருள் புரிந்தாள் தெரியுமா? - என்றாள் கௌரி சாதாரணமாக.

    விஸ்வம் சிரித்தான்.

    உன் அம்பாள் என்ன தரகு உத்தியோகமா பார்க்கிறாள்? இல்லை. அவள் எனக்கு 'பாஸா?' நான் உழைத்தேன். உயர்ந்தேன். என் மேனேஜரைக் காக்கா பிடித்தேன். அவனுக்குத் தேவையானவை 'சப்ளை' செய்தேன். பிரமோஷன் தானாக வந்தது.

    உத்தியோகம் உயர்ந்து விஸ்வம் நிறையச் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு அவன் மாறிவிட்டான்! கொஞ்சம் கொஞ்சமாக மாறி விட்டான்!

    அப்படிச் சொல்லாதீர்கள்... நீங்கள் என்ன தான் திறமைசாலியாக இருந்தாலும் தெய்வானுகூலம் இல்லை என்றால் உங்களால் நிச்சயம் முன்னுக்கு வர முடியாது.

    சேலன்ஜ் பண்ணுவோமா?

    என்னிடம் சேலன்ஜ் பண்ணுங்கள். ஸ்வாமியிடம் வேண்டாம்.

    உனக்குப் பொழுது போகாததற்கு ஏதாவது 'ஹாபி'யாக பூஜை வைத்துக் கோள். என்னை இதில் சம்பந்தப்படுத்தாதே! பூஜை செய்தாலும் செய்யாவிட்டாலும் என்னுடைய திறமையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உன் தயவும்... நீ எனக்காக அம்பாளிடம் விண்ணப்பித்து வாங்கித் தருகிற பிச்சைகளும் எனக்குத் தேவையில்லை! எனக்காக நீ உன் அம்பாளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டாம்!

    நிர்தாக்ஷண்யமாகச் சொல்லிவிட்டான் விஸ்வம். அவன் பேசப் பேச ஐயோ இது தப்பு... இப்படிப் பேசுவது தப்பாயிற்றே என்று உள்ளம் நொந்தாலும் கௌரியால் எதிர்த்துப் பேச முடியவில்லை! அவள் ‘ஹாபி'யாகவா பூஜையை வைத்துக் கொண்டிருக்கிறாள்? வாழ்வின் அஸ்திவாரமாகவல்லவா இதனை வைத்துக் கொண்டிருக்கிறாள்? அவள் அம்பாளிடம் விண்ணப்பித்து வாங்கித் தருகிற பிச்சை வேண்டாமாமே! சத்தியவானுக்கு உயிர்ப் பிச்சை யார் வாங்கித் தந்தது? சாவித்திரி தானே! மனைவி தானே! எனக்காக நீ பிரார்த்தனை செய்ய வேண்டாம் - என்று கொஞ்சம் கூட பக்தி சிரத்தையின்றிச் சொல்லிவிட்டானே விஸ்வம்! ஒரு மனைவியின் கடமை என்ன? அவள் தனக்காக மட்டும் வாழவில்லையே! தன் கணவனுக்காக, தன் குடும்பத்திற்காக

    Enjoying the preview?
    Page 1 of 1