You are on page 1of 5

இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் வழிமுறை - (Daw'ah)

இஸ்லாமிய அழைப்புப்பணி பற்றி சிந்திக்கும்போது சில முக்கிய விடயங்களை தெளிவாக முஸ்லிம்கள் புரிந்து

கொள்ளவேண்டும். அவற்றில் முக்கியமானதொரு விடயம்தான் இஸ்லாத்தை பின்பற்றுவதால் முஸ்லிம்கள் உலகில்

பின்னடைவு எய்திடவில்லை. மாறாக, இஸ்லாத்தை பின்பற்றுவதை கைவிட்ட நாளிலிருந்துதான் அவர்களின் பிற்போக்கு

நிலை துவங்கியது என்பதுபற்றிய விடயமாகும். அந்நியக் கலாச்சாரம் தங்கள் மண்ணில் நுழைவதற்கும், மேற்கத்திய

சிந்தனை தங்கள் நெஞ்சங்களை ஆட்கொள்வதற்கும் முஸ்லிம்கள் அனுமதித்தார்கள். இஸ்லாத்தின் அறிவார்ந்த

தலைமையை கைவிட்டதாலும், அதனுடைய அழைப்புப் பணியை (Daw'ah) புறக்கணித்ததாலும், அதன் சட்டங்களை தவறாக

செயல்படுத்தியதாலும் அவர்கள் வழ்ச்சியுற்றார்கள்.


ீ ஆகவே, இன்று முஸ்லிம்கள் வந்து அடைந்திருக்கும்

அதளபாதாளத்திலிருந்து அவர்கள் மறுமலர்ச்சி அடைய வேண்டும் வேண்டுமெனில் முஸ்லிம்கள் முற்று முழுதாக

இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு கட்டாயம் திரும்பிட வேண்டும். எனினும் இஸ்லாமிய அழைப்புப் பணியை

மேற்கொள்வதன் மூலமும், இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையை உலகெங்கிலும் எடுத்துச் செல்வதன் மூலமும், ஒரு

இஸ்லாமிய அரசை நிறுவினாலன்றி முழுமையான இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு முஸ்லிம்களால் திரும்பிவிட

இயலாது. பின்னர் அந்த அரசு இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையை அழைப்புப்பணி மூலம் உலகெங்கிலும் எடுத்துச்

செல்லும்.ஏனெனில், இஸ்லாம் மட்டுமே உலகை சீர்திருத்தும் ஆற்றல் பெற்றது. மேலும் இஸ்லாத்தின் மூலமாக

அல்லாமல் உண்மையான மறுமலர்ச்சியை கொண்டு வர இயலாது. அது முஸ்லிம்களுக்கு என்றாலும் அல்லது

மற்றவர்களுக்கு என்றாலும் சரியே.

அறிவார்ந்த தலைமையாக உலகெங்கும் அழைப்புப்பணி எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதிலிருந்து செயலாக்க அமைப்பு

(முறைமை) (System - நிதாம்) பிறக்கிறது. மேலும் அனைத்து சிந்தனைகளும் இந்த அறிவார்ந்த தலைமை மீ துதான்

கட்டமைக்கப்படுகின்றன. மேலும் இத்தகைய சிந்தனையிலிருந்துதான் விதிவிலக்கு ஏதுமின்றி ஒருவரை ஆதிக்கம்

செலுத்தும் வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டத்தின் அனைத்துக் கருத்துக்களும்(Concepts) பிறக்கின்றன.

கடந்த காலங்களில் அழைப்புப்பணி மேற்கொள்ளப்பட்ட அதே முறையில், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்

உதாரணத்தோடு அவர்களின்(ஸல்) வழிமுறையிலிருந்து சற்றும் விலகிச் செல்லாமல் இன்றைய நாட்களிலும்

அழைப்புப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும். கால மாற்றத்தின் வேறுபாட்டிற்கு எந்தவிதமான முக்கியத்துவமும்

கொடுக்கக்கூடாது. ஏனெனில் இவை சாதனங்களிலும், தோற்றங்களிலும் ஏற்பட்ட மாற்றங்களே ஒழிய அடிப்படையில்

எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை. யுகங்கள் மாறிய போதிலும், மக்களும் இடங்களும் மாறியப் போதிலும்

வாழ்க்கையின் சாரமும் (Essence of life) உண்மை நிலையும் மாறிவிடவில்லை. அவை மாறவும் இயலாது.

ஆகவே அழைப்புப்பணி மேற்கொள்வதற்கு வெளிப்படையான அணுகுமுறையும், மன உறுதியும் ஆற்றலும் சிந்தனையும்

தேவைப்படுகின்றன. மேலும், இஸ்லாத்தின் சிந்தனைக்கும் அதன் வழிமுறைக்கும் (Fikrah & Tareeqah - Thought and Method) 

முரண்பாடாக உள்ள அனைத்தையும் தீவிரமாக எதிர்க்கக்கூடிய மனோதிடமும் வேட்கையும் அழைப்பின்போது

தேவைப்படுகின்றன. அழைப்புப்பணியைச்சூழவுள்ள சூழலும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளும் அழைப்பாளர்களுக்கு

பாதகமாகவோ, அல்லது சாதகமாகவோ இருந்த போதிலும் சமூகத்தில் ஊடுருவியிருக்கின்ற தவறான அடிப்படைகளை

வெட்ட வெளிச்சமாக்குவதும் அவற்றை எதிர்ப்பதும் அழைப்பாளர்களுக்கும் அதன் இயக்கத்திற்கும் மிக முக்கிய

கடமையாகிறது.

இங்கே மக்களோடு ஒத்துப் போவதாக இருந்தாலும், அல்லது ஒத்துப்போகவில்லையென்றாலும், அவர்கள் ஏற்றுக்

கொண்டாலும் அல்லது ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்தாலும் மக்களின் மரபுகளுக்கு இணக்கமாக இருந்தாலும்,


இல்லாவிட்டாலும் இறுதியான இறையாண்மை (Sovereignty - Siyadah) இஸ்லாமிய சித்தாந்தத்திற்கே மட்டுமே உரியது

என்பதை நிலைநாட்டும் விதமாக அழைப்புப்பணி மேற்கொள்வது அவசியமாகிறது.

அழைப்புப்பணி செய்பவர்கள் மக்களுக்கு முகஸ்துதி செய்ய மாட்டார்கள். அதிகாரமுடையவர்களுக்கு அடிபணிய

மாட்டார்கள். மக்களின் மரபுகளையும், பாரம்பரியத்தையும் லட்சியம் செய்ய மாட்டார்கள். மக்கள் தங்களை ஏற்றுக்

கொள்கிறார்களா அல்லது ஏற்றுக்கொள்ளவில்லையா என்பதில் கவனம் செலுத்த மாட்டார்கள். மாறாக, அவர்கள்

சித்தாந்தத்தை மட்டும் பின்பற்றுகிறவர்களாகவும், அதைத் தவிர வேறு ஒன்றையும் பொருட்டாக எண்ணாதவர்களாகவும்,

அதனை மட்டுமே முழுமையாக எடுத்துரைப்பவர்களாகவும் இருப்பார்கள். மேலும் ஏனைய சித்தாந்தங்களை

பின்பற்றுகிறவர்களிடம் அதனை அவர்கள் பின்பற்றிவருமாறு கூறுவதற்கு எங்கும் அனுமதியில்லை. இதற்கு மாறாக,

நிர்பந்தம் ஏதுமில்லாமல் இந்த சித்தாந்தத்தை (இஸ்லாம்) தழுவுவதற்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.

ஏனெனில் அழைப்புப் பணிக்கு தேவைப்படுவது என்னவென்றால், இஸ்லாத்திற்கு இணையாக எந்த சித்தாந்தமும் இருக்க

முடியாது என்றும், இஸ்லாத்திற்கு மட்டும்தான் இறையாண்மை (Sovereignty - Siyadah)  உரியது என்றும் உறுதியான

நிலைப்பாட்டில் இருப்பதும் அதனை எடுத்தியம்புவதும்தான்.

அவன்தான் தனது தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் ஏனைய தீன்களை(வாழ்வொழுங்குகளை)

மிகைக்கும் பொருட்டு அனுப்பி வைத்தான். இதனை இணை வைப்பவர்கள் வெறுத்த போதிலும் சரியே. (அத்தவ்பா : 33)

இறைதூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மகத்தான செய்தியுடன் இந்த உலகத்திற்கு வந்தார்கள். முழு உலகத்திற்கும்

வெளிப்படையாக அறைகூவல் விடுத்தார்கள். அவர்கள்(ஸல்) தனது சத்தியத்தை உறுதியுடன் விசுவாசித்தார்கள். மக்களை

சத்தியத்தின் பால் அழைத்தார்கள். மேலும், கருப்பர்களையும், வெள்ளையர்களையும், ஆட்சியாளர்களையும்,

சாமானியர்களையும் அவர்களின் பாரம்பரியம், மரபு, மதம், கோட்பாடு ஆகியவற்றின் வேறுபாடு எதையும் பாராமல்

அனைவரையும் இஸ்லாத்தின் பால் அழைத்தார்கள். இஸ்லாத்தின் மகத்தான செய்தியை விடுத்து வேறு எது

ஒன்றின்பாலும் அவர்கள் (ஸல்) கவனம் செலுத்தவில்லை. குறைஷியர்களின் பொய்யான தெய்வங்களை கடுமையாக

சாடுவதின் மூலம் தங்கள் அழைப்புப்பணியை ஆரம்பித்தார்கள். அவர்கள்(ஸல்) தனிமைப்படுத்தப்பட்ட நிலையில்

தன்னந்தனியாக நின்ற போதிலும் குறைஷியர்களின் அடிப்படை கோட்பாட்டினை கடுமையாக எதிர்த்து அதை சாடினார்கள்.

அவர்களுக்கு (ஸல்) உதவி செய்பவர்கள் யாரும் இல்லை. அவர்கள்(ஸல்) அழைப்பு விடுக்கும் இஸ்லாத்தின் மீ து

கொண்டிருந்த அசைக்க முடியாத தீவிரமான நம்பிக்கை ஒன்றைத் தவிர எந்தவிதமான ஆயுதமோ உதவியோ

அவர்களிடத்தில்(ஸல்) இல்லை. அரபு மக்களின் பாரம்பரியம், மரபு, மதம் கோட்பாடு ஆகியவற்றை அவர்கள்(ஸல்)

துளியளவு கூட லட்சியம் செய்யவில்லை. இந்த வகையில் அவர்கள்(ஸல்) எந்த விதமான மரியாதையையோ அல்லது

பணிவையோ அவர்களிடம் காண்பிக்கவில்லை.

இதுபோலவே, அழைப்புப்பணி செய்பவர்கள் அனைத்தையும் எதிர்த்து ஆக வேண்டும். அவர்கள் எதிர்ப்பவற்றில் மக்களின்

பாரம்பரியம், மரபு, தவறான சிந்தனை மற்றும் தவறான கருத்துக்கள் ஆகியவைகள் அடங்கும். வெகுஜனக் கருத்து (Public

Opinion)  தவறாக இருக்கும்பட்சத்தில் அதற்கு எதிராக கடும் போராட்டம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதை

செய்ய வேண்டும். அவற்றை பின்பற்றுகிறவர்களுடைய வெறித்தனங்களுக்கு ஆளாக நேரிடினும், உருக்குலைந்த

கொள்கைகளில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களின் கடும் பகையை எதிர்கொள்ள நேரிடினும், அவர்களின் மதத்தையும்,

அடிப்படை கோட்பாட்டினையும் எதிர்த்தெ ஆக வேண்டும்.

இலேசான சலுகை கூட காட்டாமல், இஸ்லாமிய நெறிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற

கரிசனம் அழைப்புப்பணி மேற்கொள்கிறவர்களுக்கு அவசியமாக இருக்க வேண்டும். எந்தவிதமான சமரசத்தையோ,


சலுகையையோ ஏற்றுக் கொள்ளக்கூடாது. கவனக்குறைவையும், காரியங்களை ஒத்திப்போடும் பழக்கத்தையும் அறவே

விட்டொழிக்க வேண்டும். இதற்கு மாறாக பிரச்சினைகளை, முழுமையாக நிர்வாகம் செய்து, உறுதியான முறையில்

அவறிற்கான உடனடித் தீர்வு காண வேண்டும். சத்தியத்திற்கு இடையூறான எந்த பரிந்துரையையும் ஏற்றுக்

கொள்ளக்கூடாது. தாக்கீ ஃப் கோந்திரத்தார், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு நிபந்தனையாக, தமது வழிபபாட்டுச்சிலையான

அல் லாத்தை (Al laat)  உடைத்தெறியாது, மூன்று வருடங்கள் தம்முடன் வைத்துக் கொள்வதற்கும், தொழுகையிலிருந்து

விலகி இருப்பதற்கும் அனுமதிகோரி அனுப்பி வைத்த தூதுக்குழுவினரின் வேண்டுகோளை இறைத்தூதர்(ஸல்) அவர்கள்

ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டு வருடங்களுக்கு அல்லாத்தை விட்டு வைக்க வேண்டும். அல்லது ஒரு மாதத்திற்கேனும்

அதை விட்டு வைக்க வேண்டும் என அவர்கள் கேட்டதைக்கூட இறைதூதர்(ஸல்) மறுத்துவிட்டார்கள். இந்த

வேண்டுகோளை அவர்கள் உறுதியாகவும், இறுதியாகவும் எந்தவித தயக்கமோ அல்லது இரக்கமோ காட்டாமல் மறுத்து

விட்டார்கள். இது ஏனெனில் ஒன்று மனிதன் விசுவாசம் கொள்ள வேண்டும் அல்லது நிராகரித்து விட வேண்டும். அதன்

விளைவாக ஒன்று சுவனம் செல்ல வேண்டும் அல்லது நரகம் செல்ல வேண்டும் என்பதுதான். எனினும் தங்கள் கைகளால்

அந்த உருவச்சிலை உடைபட வேண்டாம் என்ற அவர்களின் கோரிக்கையை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏற்றுக்

கொண்டார்கள். இதன்படி அபூ சுஃப்யானையும், அல்மூஹீரா இப்னு ஷீஆபாவையும் அதனை உடைக்குமாறு கேட்டுக்

கொண்டார்கள். முழு அகீ தாவிற்கும், அதனை நடைமுறைப்படுத்த தேவையானவற்றிற்கும் குறுக்கே நிற்கும் எந்த

ஒன்றையும் நிச்சயமாக அவர்கள்(ஸல்) ஏற்றுக் கொள்ளவில்லை. நடைமுறைப்படுத்துவதில் இடம்பெறும் சாதனத்தையும்

(Means)  தோற்றத்தையும், அமைப்புகளையும் (Forms)  பொறுத்தவரை அவைகளுக்கு இஸ்லாமிய அகீ தாவோடு எந்தவித

தொடர்பும் இல்லை என்ற காரணத்தினால் அவற்றை அவர்கள் (ஸல்) ஏற்றுக் கொண்டார்கள். ஆகவே இஸ்லாமிய

அழைப்புப் பணியை மேற்கொள்ளும் தருணத்தில் இஸ்லாமிய சிந்தனையிலும் அதன் வழிமுறையிலும் (குமைசயா ரூ

வுயசநநஙயா) எந்தவிதமான சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் சிந்தனை மற்றும் அதன் செயலாக்க அமைப்பு (Fikrah &

Tareeqah)  ஆகியவற்றை முழுமையாக பாதுகாக்கும் விதத்தில் செயல்பட வேண்டும். அதற்கு தேவைப்படும் எந்த

சாதனத்தையும் (Means) பயன்படுத்துவதில் கேடு ஒன்றும் கிடையாது.

இஸ்லாமிய அழைப்புப்பணி மேற்கொள்ளப்படும்போது, ஒரு குறிப்பிட்ட இலக்கோடு ஒவ்வொரு செயலும் மேற்கொள்ளப்பட

வேண்டும். பணியாளர்கள் எப்பொழுதும் இந்த நோக்கத்தைக் குறித்து விழிப்புணர்வோடு இருந்து அதை நிறைவேற்ற

வேண்டும். இதில் அவர் தன்னைத்தானே ஈடுபடுத்திக் கொண்டு, அதை நிறைவேற்றுவதற்கு அயராது பாடுபட வேண்டும்.

ஆகவே, பணியாளர் செயலாக்கம் இல்லாத சிந்தனையில் நிறைவு கொள்ள மாட்டார். அவ்வாறெனில் அதை உறக்க நிலை

தத்துவம் (Hyprotic Philosophy)  என்றோ அல்லது அலங்கார தத்துவம் (Fanciful Philosophy)  என்றோதான் கருதுவார். அதுபோலவே

குறிக்கோள் இல்லாத சிந்தனையிலும் செயலிலும் அவர் நிறைவு அடைய மாட்டார். இறுதியில் அக்கறை இன்மையிலும்,

அவநம்பிக்கையிலும் முடிவுறும் சுழற்சி இயக்கமாகவே (Spiral Motion)  அதை கருதுவார். இதற்கு மாறாக, அழைப்புப்

பணியாளர் சிந்தனையுடன் செயலை இணைப்பதை வலியுறுத்த வேண்டும். இவ்விரண்டையும் ஒரு குறிப்பிட்ட

லட்சியத்திற்காக இணைத்து செயல்படுத்த வேண்டும். அது நடைமுறைக்கு ஏற்றாற்போலவும் குறிக்கோளை நிறைவேற்றக்

கூடியதாகவும் இருக்க வேண்டும்.

மக்கமா நகரத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமையை மக்களிடம் எடுத்துச் சென்றார்கள்.

அங்குள்ள சமூகம் இஸ்லாத்தை செயலாக்க அமைப்பாக (System) ஏற்றுக் கொள்ளாது என்பதை உணர்ந்தபொழுது

மதினாவின் சமூகத்தை தயார்படுத்தினார்கள். மதினாவில் அவர்கள்(ஸல்) இஸ்லாமிய அரசை நிறுவினார்கள். அதன் மூலம்

இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தினார்கள். இஸ்லாத்தின் செய்தியை மக்களிடம் எடுத்துச் சென்றார்கள். அவர்களுக்கு

பின்னர் அதை எடுத்துச் செல்லும் விதமாக இஸ்லாமிய உம்மாவை தயார்படுத்தினார்கள். இறைத்தூதர்(ஸல்) காட்டித்தந்த

அதே வழியில் இந்த பணியினை முஸ்லிம்கள் தொடர்ந்தார்கள். ஆகவே கிலாஃபா அரசு இல்லாத இந்த சூழலில்,

இஸ்லாமிய அழைப்புப் பணியினை மேற்கொள்ளும்போது இஸ்லாத்தை நோக்கி மக்களை அழைப்பது, இஸ்லாத்தை


நடைமுறைப்படுத்தி, அதன் செய்தியை உலகெங்கிலும் எடுத்துச் செல்லும் இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கு

செயலாற்றுவதன் மூலம் மக்களை இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்பச் செய்வது ஆகிய பணிகள் அதில்

அடங்கியிருக்க வேண்டும். இதன்மூலம், இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்காக உம்மாவில் மேற்கொள்ளப்படும்

அழைப்புப்பணி உலகம் முழுவதையும் இஸ்லாத்தின்பால் அழைக்கும் இஸ்லாமிய அரசின் அழைப்புப்பணியாக மாற்றம்

பெறும். மேலும் இஸ்லாமிய உலகில் மட்டும் மேற்கொள்ளப்படும் அழைப்புப்பணி (Local Da’wah)  அகிலம் அனைத்திற்கும்

உரிய பொதுவான அழைப்புப்பணியாக மாற்றம் பெறும்.

தற்சமயம் நிலைபெற்றுள்ள அடிப்படை கோட்பாடுகளை (Doctrines- Aqeedah)  சரிபடுத்துவது, அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள

தொடர்பை பலப்படுத்துவது ஆகியவற்றை தெளிவாக உள்ளடக்கியதாக இஸ்லாமிய அழைப்புப்பணி இருக்க வேண்டும்.

மேலும் எல்லா துறைகளிலும் அழைப்புப்பணி பிரகாசமாக மேற்கொள்ளப்பட்டு மக்களின் அனைத்து விவகாரங்களுக்கும்

தீர்வுகள் வழங்கப்படும் விதமாக இருக்க வேண்டும். எனவேதான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மக்கள்

எதிர்நோக்கிய அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும், அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கின்ற ஒவ்வொரு வினாவுக்கும்

முழுமையாக விடையளிக்கும்படியாக திருமறை வசனங்களை இறக்கிக்கொண்டேயிருந்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள்

கீ ழ்கண்ட இறைவசனங்களை மக்காவில் ஓதுபவர்களாக இருந்தார்கள்.

அபூலஹபின் இருகரங்களும் நாசமடைவதாக. (அல் மஸ்த்:1)

நிச்சயமாக இது கண்ணியமிக்க ஒரு தூதரின் வார்த்தையாகும். இது கவிஞனின் வார்த்தையல்ல. நீ ங்கள்

சொற்பமாகவே விசுவாசம் கொள்கிறீர்கள். (அல் ஹாக்க:40,41)

(அளவிலும், நிறுவையிலும்) மோசடி செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து வாங்கும் போது

முழு அளவை வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் மனிதர்களுக்கு கொடுக்கும் போது அளவையிலும், நிறுவையிலும்

(குறைபதன்மூலம்) நஷ்டம் ஏற்படுத்துகிறார்கள். (அல் முதாஃப்பிஃபின்:1,3)

விசுவாசம் கொண்டு நற்கருமம் செய்பவர்களுக்கும் சுவனம் உண்டு. அவற்றின் கீ ழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்.

அதுதான் மகத்தான் வெற்றியாகும். (அல் புருஜ்:11)

மேலும் மதினாவில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வரும் வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.

தொழுகையை நிலை நிறுத்துங்கள். ஸகாத்தை கொடுத்து வாருங்கள். (அல்பகரா:43)

கனத்தவர்களாகவோ, இலேசானவர்களாகவோ புறப்படுங்கள். உங்கள் செல்வங்களைக் கொண்டும் உயிர்களைக்

கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் போராடுங்கள். (அத்தவ்பா:41)

மேலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வரும் வசனங்களை ஓதினார்கள்.

விசுவாசம் கொண்டவர்களே! உங்களுக்கிடையில் குறிப்பிட்ட தவணைக்கு கடன் கொடுக்கும் சமயத்தில் அதை

எழுத்து மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள். (அல் பகரா:282)


உங்கள் மத்தியிலுள்ள செல்வந்தர்களுக்கு இடையில் மட்டும் செல்வம் சுற்றிக் கொண்டிருக்காதிருக்கும் பொருட்டு...

(அல்ஹஷர்:7)

நரகத்தின் தோழமையைக் கொண்டவர்களும் சுவனத்தின் தோழமையை கொண்டவர்களும் சமமானவர்கள் அல்ல.

சுவனத்தின் தோழமையை பெற்றுக் கொண்டவர்களெ வெற்றியாளர்கள். (அல் ஹஷ்ர்:20)

இவ்வாறு மனிதனை மனிதன் என்ற அந்தஸ்த்தில் வைத்து, அவனைப் பற்றி முழுமையாக இஸ்லாம் உரையாடுகிறது.

அதன் மூலம் அவனிடம் முழுமையான மற்றும் தீவிரமான மாற்றத்தை அது கொண்டு வருகிறது. இதனடிப்படையில்

இஸ்லாமிய அழைப்புப்பணியின் வெற்றி என்பது, மக்கள் தங்கள் அன்றாட வாழ்வியல் விவகாரங்களை தீர்த்துக் கொள்ளும்

பொருட்டு இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பை (System of Islam - Nidam al Islam)  அவர்களிடம் எடுத்துச் செல்வதிலேயே

தங்கியிருக்கிறது. எனவே இந்த அழைப்புப்பணியை வாழ்வின் இலக்காகக்கொண்டு அழைப்புப்பணியாளர்கள் தமது

பயணத்தை மிக மிக முனைப்புடன் தொடரவேண்டும்.

குறையற்ற வகையிலும், நிறைவாகவும், முழுமையாகவும் பணியாற்ற வேண்டும் என்ற உந்துதலை தங்களிடத்தில்

ஏற்படுத்திக் கொள்ளாத வரையில் அழைப்புப் பணியாளர்கள் தீவிரமான முறையில் பணியாற்றி தங்கள் பொறுப்புகளை

நிறைவேற்றுவது என்பது சாத்தியம் இல்லாத விஷயமாகும். நிரந்தரமாக சத்தியத்தை தேடுபவர்களாக அவர்கள் இருக்க

வேண்டும். எந்த அந்நிய சிந்தனையிலிருந்தும் தங்களை பரிசுத்தப்படுத்திக் கொள்ளும் விதமாக தொடர்ந்து சத்தியத்தை

தேடுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். அவர்களிடத்தில் தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ள அந்நிய

சிந்தனைகளிலிருந்தும் அவற்றிற்கு நெருக்கமாக உள்ள சிந்தனைகளிலிருந்தும் அவர்கள் தங்களை தூரமாக்கிக் கொள்ள

வேண்டும். இத்தகைய நடவடிக்கை தாங்கள் சுமந்து செல்லும் சிந்தனையை பரிசுத்தமாகவும் தெளிவாகவும் வைத்துக்

கொள்ள உதவிடும். சிந்தனையில் பரிசுத்தம் (Purity in Thought),  அதில் தெளிவு (Clarity in Thought)  ஆகிய இரண்டு மட்டும்தான்

இஸ்லாத்தின் வெற்றிக்கும், தொடர்ந்து அந்த வெற்றியை நிலைபடுத்துவதற்கும் உத்திரவாதம் அளிக்கக்கூடியதாகும்.

அல்லாஹ்(சுபு)விடமிருந்து வந்த கட்டளையாக எண்ணி இந்த கடமையை அழைப்புப் பணியாளர்கள் நிறைவேற்ற

வேண்டும். அல்லாஹ்(சுபு)வின் உவப்பை மாத்திரம் எதிர்பார்த்தவர்களாக ஆனந்தத்துடனும், மிகுந்த உற்சாகத்துடனும் இந்த

பணியினை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். மக்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டையோ அல்லது வேறு எந்த உலக

இலாபங்களையோ நிச்சயமாக அவர்கள் தேடக்கூடாது. அல்லாஹ்(சுபு)வின் உவப்பை பெறுவதற்கு முயற்சிப்பதைத் தவிர

வேறு எதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது.

You might also like