You are on page 1of 2

கணனியின் தற்காலிக சேமிப்பகம் (RAM)

இதை எழுதியவர்: Rathees   


    இவ்வாறான தற்காலிக சேமிப்பகங்கள்(RAM -Random Access Memory) ஓர் கணனியில் அதன் நிரந்தர
சேமிப்பகங்களை(Hard disk) காட்டிலும் 1000 மடங்கு வேகத்தில் செயற்படக்கூடியன. கணனித் திரையில்
தொழிற்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து வேலைகளும் இச் சேமிப்பகத்தில் தற்காலிகமாக
சேமிக்கப்பட்டே கணனியில் வேலைகள் நடைபெறுவதற்கான அறுவுறுத்தல்கள் மத்திய
செயற்பாட்டுப்பகுதிக்கு (CPU) அனுப்பப்படுகின்றன. பொதுவாக இத்தற்காலிக சேமிப்பகம் ( RAM) தற்போது
கணனியில்... நடைபெறுகின்ற அனைத்து வேலைகளையும் தற்காலிகமாக தன்னகத்தே சேமித்து
வைத்திருக்கும். கணனியின் தற்காலிக சேமிப்பகம் (Random Access Memory - RAM) ஓர்
கணனியின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் அளவிற்கு முக்கியம் வாய்ந்ததாகும். இது இரண்டு
முறைகளில் முக்கியம் பெறுகின்றது.

ஓர் கணனியின் தற்காலிக சேமிப்பகம் எவ்வளவு கொள்ளவினை கொண்டிருக்கின்றது? என்பது ஒன்று


மற்றையது அது எவ்வளவு வேகத்தில் தொழிற்படுகின்றது என்பதாகும். இவ்விரண்டும் ஓர் கணனியில்
உள்ள தற்காலிக சேமிப்பகத்தில் திருப்திகரமாக இருத்தல் ஓர் கணனியின் வேகத்தினை அதிகரிப்பதற்கான
காரணங்களில் முக்கியமான ஒன்றினை அக்கணனி பெற்றுள்ளது என கொள்ளலாம். ஒர் கணனியின்
தற்காலிக சேமிப்பகத்தின் வேகம் அதன் கொள்ளவின் முக்கியத்தும் போன்று
அவ்வளவிற்குஅவசியமானதாக

பார்க்கப்படுவதில்லை.

    கணனிக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் யாவும் நேரடியாக கணனியின்


மத்திய செயற்பாட்டுப்பகுதிக்கு அனுப்பப்படுவத
ில்லை. அவை முதலில் தற்காலிக
செமிப்பகத்திற்கே எடுத்துச்
செல்லப்படுகின்றன. அங்கிருந்தே பின்னர்
ஏனைய இடங்களுக்கு அனுப்பும்
செயல்முறைகள் நடைபெறுகின்றன.
தற்காலிக சேமிப்பகம் மற்றும் இரண்டாம்
நிலை 

அல்லது நிரந்தர சேமிப்பகம் என கணனியில்


இரண்டு வைகையான சேமிப்பகங்கள்
காணப்படும். ஓர் கணனியின் நிரந்தர
சேமிப்பகத்தில்
உள்ளவிடையங்களைஅக்கணனியின் மத்திய
செயற்பாட்டுப்பகுதி புரிந்து கொள்வதில்லை.
அதனால் அவை தற்காலிக சேமிப்பகத்திற்கு
கொண்டுவரப்பட்டுபின்னரேயே மத்திய
செயற்பாட்டுப்பகுதிக்கு அனுப்பப்படுகின்றது.
    ஒர் கணனியில் குறைந்தளவான தற்காலிக சேமிப்பகம் காணப்படுமானால் அங்கே பல
வேலைகளுக்கான மென்பொருள்கள் ஒரே நேரத்தில் இயங்குவதற்கான இடம் பற்றாக்குறை ஏற்படக்கூடும்.
அந்தவேளையில் "p யப i பெ" ழச "ளறயிpin" போன்ற செய்திகளை கணனி திரையில் பிரதிபலிக்கும். ஒர்
கணனியின் தற்காலிக சேமிப்பகம் அதிகளவான

கொள்ளவினை கொண்டிருப்பது சிறந்தது.

    அத்துடன் அது கணனியின் ஏனைய பாகங்களுடன் இசைவானதாகவும் இருப்பது இன்றியமையாதது


ஆகும். உதாரணமாக celeron, p1, p2, p3,p4, a.m.d மத்திய செயற்பாட்டு மையங்களை உடைய கணனிகளில்
RAM 512 MB உடன்நன்றாக இயங்கக்கூடியவை. இந்த இடத்தில் கணனி விளையாட்டுக்களை நிறுவியுள்ள
ஓர் கணனி எனில் அது இந்த அளவினை காட்டிலும் சற்று அதிகமான தற்காலிக செமிப்பகங்களை
கொண்டிருப்பதும் விரும்பத்தக்கது. அடிப்படையில் ஓர் கணனியின் தற்காலிக சேமிப்பகங்களை
ஒவ்வோர்இயங்குதளங்களுக்கும் ஏற்றவகையில் நிறுவிக்கொள்ளலாம்.

You might also like