You are on page 1of 4

விஜயதசமியைக் கல்வித்திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.

பலகுழந்தைகளுக்கு படிப்பு நன்றாக


இருக்கவும், கையெழுத்து திருந்தவும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள இன்னம்பூர்
எழுத்தறிநாதர் கோயிலுக்கு அழைத்துச் செல்லலாம். இப்பகுதியை ஆட்சி செய்த ஒரு அரசர் தனது
கணக்குப்பிள்ளையை கோயில் கணக்குகளை எடுத்துவருமாறு பணித்தார். அந்நேரத்தில் அவர்
கணக்கை சரிவர முடிக்கவில்லை. எப்படி கணக்கை முடித்துக் கொடுப்பது என்று தெரியாமல்
விழித்தபடியே, சன்னதியில் இருக்கும் சிவபெருமானை வழிபட்டு விட்டு வட்டுக்குக்
ீ கிளம்பிச்
சென்றார். ஆனால், மறுநாள் காலையில் அரசர் கணக்குப்பிள்ளையை அரண்மனைக்கு அழைத்துப்
பாராட்டினார். கணக்குப்பிள்ளைக்கோ எதுவும் புரியவில்லை.
 ""இதுவரை பார்த்த கோயில் கணக்குகளிலேயே நீங்கள் சமர்ப்பித்த கணக்குதான் மிகச் சரியாக
இருந்தது'' என்று சொன்னார் அரசர். கணக்குப்பிள்ளை கணக்குப் பேரேட்டை வாங்கிப் பார்த்தார்.
பேரேட்டில் எழுதி இருந்த எழுத்துக்கள் யாவும் முத்து முத்தாக இருந்தன. சிவபெருமானே தன்னைப்
போல அரசரிடம் வந்து கணக்கை காட்டிய உண்மையை உணர்ந்தார் கணக்கர். இந்த உண்மையை
அரசரிடம் தெரிவித்ததோடு கோயிலுக்குச் சென்று சிவனை வணங்கி நின்றார். அன்று முதல்,
கணக்கை எழுதிய சிவன் "எழுத்தறிநாதர்' என்ற திருநாமம் பெற்றார். ஆரம்ப பள்ளிகளுக்கு செல்ல
இருக்கும் மாணவர்களுக்கு நாக்கில் நெல்லாலும், படிக்கிற குழந்தைகளுக்கு பூவாலும் நாக்கில்
எழுதுகிறார்கள். தினமும் இந்த வழிபாடு இக்கோயிலில் நடக்கிறது. பேச்சு சரியாக வராத
குழந்தைகளுக்கும், பேசத் தயங்கும் குழந்தைகளுக்கும் அர்ச்சனை செய்தால் நன்கு பேசும் திறன்
உண்டாகும். இங்கே அம்பாள் தினமும் கல்யாண கோலத்தில் காட்சி தருகிறாள். திருமணமாகாத
பெண்கள் இந்த அம்பிகையை வழிபட்டு நல்ல கணவனை அடைகின்றனர். இவளை
"நித்தியகல்யாணி' என அழைக்கின்றனர். மற்றொரு அம்பாளான "சுகந்த குந்தல அம்பாள்'
தவக்கோலத்தில் காட்சி தருகிறாள். திருமணம் செய்துகொள்ள விரும்பாமல் தனித்து வாழ்க்கை
நடத்த விரும்பும் பெண்கள் இவளை வழிபடலாம். காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4
மணி முதல் 8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை
செல்லும் ரோட்டிலுள்ள புளியஞ்சேரிக்கு வடக்கே 2 கி.மீ . தூரத்தில் இக்கோயில் உள்ளது.
கும்பகோணத்திலிருந்து டவுன் பஸ்கள் உள்ளன.

படிப்பை சிறப்பாக்கும்  "குதிரைச்சாமி' : ""பரி' என்றால் "குதிரை' . குதிரை வடிவில் உள்ள லட்சுமி
ஹயக்ரீவரை வழிபட்டால் ஞானம், தனம், தான்யம், தொழில் விருத்தி, நோயின்மை, நீண்ட ஆயுள்
உண்டாகும். இவரை உபாசனை செய்து ஞானம்அடைந்தவர் வைணவ ஆச்சார்யர்களுள்
தலைசிறந்தவரான நிகமாந்த மஹா தேசிகர். கடலூர் அருகிலுள்ள திருவஹீந்திரபுரம்
என்னுமிடத்தில் ஹயக்ரீவமூர்த்தி நேரில் தோன்றி நிகமாந்த தேசிகருக்கு அருள்
செய்தார்.வாக்குவன்மைக்கு அதிபதியான தட்சிணாமூர்த்தியும், வித்தைக்கு அதிபதியான
சரஸ்வதியும் ஹயக்ரீவ மூர்த்தியின் அருள் பெற்றவர்கள். ஹயக்ரீவருக்கு தமிழகத்தில் பல
இடங்களில் கோயில்கள் இருந்தாலும், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி தேசிகன்
சன்னதியிலுள்ள லட்சுமி ஹயக்கிரீவர் விசேஷமானவர். ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ ரங்க
ராமானுஜ மஹா தேசிக சுவாமிகள் பிரதிஷ்டை செய்துள்ளார். படிக்கும் குழந்தைகளும்,
குழந்தைகளுக்காக பெற்றோரும் "ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்திரம்' என்ற நூலில் உள்ள 32
ஸ்லோகங்களை பாராயணம் செய்யலாம். இயலாதவர்கள் "ஞானானந்த மயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக் கிருதிம்ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மகே' என்ற ஸ்லோகத்தை தினசரி
பாராயணம் செய்து கல்வியில் வளம் பெறலாம்.

ராமரின் வழிபாடு : நவராத்திரி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுவதற்கான காரணத்தை


புராணங்கள் சொல்கின்றன. மது,கைடபர், சண்டன், முண்டன் மற்றும் மகிஷாசுரன் போன்ற
அரக்கர்களை அழிப்பதற்காக ஒன்பது நாட்கள் விரதமிருந்து அன்னை பராசக்தியை லலிதா
சகஸ்ரநாமம் போன்ற ஸ்தோத்திரங்களால் தேவர்கள் துதித்தனர். ராவணனை வதம் செய்யக்
கிளம்பிய ராமர் வெற்றிக்காக தேவியை வழிபாடு செய்தார். இதனால், நவராத்திரியின் ஒன்பது
நாட்களிலும் தேவியின் ஒன்பது வடிவங்களில் மக்கள் வணங்குகின்றனர்.

விஜயதசமியன்று அழும் பக்தர்கள் : நாடெங்கும் விஜயதசமி மிக மகிழ்ச்சியாக


கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரனை அம்பிகை வெற்றிகொண்ட நாள் அது. ஆனால், மேற்கு
வங்காள மாநிலத்தில் நவராத்திரி காலங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட துர்க்கை, காளி
விக்ரகங்களை வைத்து வழிபடுவர். விஜயதசமி அன்று மண்ணால் செய்யப்பட்ட காளியின்
சிலைகளைக் கடலில் கரைத்து விடுவர். மீ ண்டும் தேவி அடுத்த ஆண்டு நவராத்திரிக்கே தங்கள்
வட்டுக்கு
ீ மீ ண்டும் பூஜைக்கு வருவாள் என்பது ஐதீகம். தங்களை விட்டுக் கிளம்பும் காளியின்
பிரிவைத் தாங்கமுடியாத பக்தர்கள் கண்ண ீர்விட்டு அழுவதுண்டு.

குதிரையில் சுவாமி உலா வருவது ஏன்? ஒருமுறை உலகம் அழிந்தபோது, மகாவிஷ்ணு எல்லா
உலகங்களையும், உயிர்களையும் தன்னுள் தாங்கி ஆலிலைமேல் பாலகன் வடிவில்
சயனித்திருந்தார். பிறகு உலகைப்படைக்க எண்ணி, தன் நாபிக் கமலத்திலிருந்து பிரம்மாவைப்
படைத்தார். அவரிடம் வேதங்களை ஒப்படைத்தார். பிரம்மனும் படைப்புத் தொழிலை தொடங்கினார்.
அப்போது, பெருமாளின் நாபிக்கமலத்தில் உள்ள ஓர் இதழில் இரு தண்ண ீர்த் திவலைகள் தோன்றி
மது, கைடபன் என்னும் அசுரர்களாய் மாறினர். இவ்விருவரும் பிரம்மனிடம் இருந்த வேதங்களைக்
கவர்ந்து சென்றனர். அசுர மாயையினால் அவற்றை குதிரை வடிவமாக மாற்றி பாதாள உலகத்தில்
ஒளித்து வைத்தனர். வேதங்களை இழந்த பிரம்மன் படைப்புத் தொழிலை செய்ய இயலாமல்
மகாவிஷ்ணுவைச் சரணடைந்தார். விஷ்ணுவும் ஒளித்து வைக்கப்பட்ட வேதங்களை மீ ட்க பாதாள
லோகத்துக்குக் கிளம்பினார். அங்கே வேதங்கள் குதிரை வடிவில் இருப்பதைக் கண்டார். தானும்
குதிரைவடிவம் கொண்ட ஹயக்ரீவராக மாறி, வேதங்களை மீ ட்டு வந்தார்.மதுகைடபர்கள் இருவரும்
ஹயக்ரீவருடன் யுத்தம் செய்தனர். ஹயக்ரீவர் அவர்களைக் கொன்றார். அசுரர்களின் கைபட்டதால்
வேதங்கள் புனிதத்தன்மை இழந்தன. பாற்கடல் வாசனான ஹயக்ரீவரை வேண்டி நின்றன. குதிரை
முகத்துடன் இருந்த பகவான் வேதங்களை உச்சிமுகர வெளிப்பட்ட மூச்சுக் காற்றினால் வேதங்கள்
மீ ண்டும் புனிதத்தன்மை அடைந்தன. திருமகளும் ஹயக்ரீவருடன் அணைத்த கோலத்தில் காட்சி தர,
வேதங்கள் நான்கும் வணங்கி நின்றன. ஞானம் தரும் வேதங்களை மீ ட்டதோடு, புனிதப்படுத்தியதால்,
லட்சுமி ஹயக்ரீவரை வழிபட்டவர்கள் கல்வி, ஞானம், தத்துவம் போன்ற துறைகளில் சிறந்து
விளங்குவர். விழாக்காலங்களில், சுவாமி உலாவின் போது, குதிரை வாகனத்தில் சுவாமி பவனி
வருவதும், குதிரைகளை ஊர்வலத்தில் அழைத்து வருவதும் இதனால் தான்.

வெளிமாநிலங்களில்  நவராத்திரி: மேற்கு வங்காளம் : பார்வதிதேவி சிவலோகத்தில் இருந்து தன்


பிறந்தவட்டிற்கு
ீ செல்லும் நிகழ்ச்சியாக காளிபூஜை கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில் மேற்கு
வங்காள பெண்கள் எத்தனை வயது உடையவராக இருந்தாலும் அவரவர் பிறந்த வட்டிற்குச்
ீ செல்வது
வழக்கம். அவர்களை பெற்றோர் வரவேற்று புத்தாடை முதலானவை எடுத்து கொடுத்து உபசரிப்பர்.
தன் வட்டில்
ீ இருக்கும் ஆபரணங்களையும், இனிப்புப் பதார்த்தங்களையும் மகள் மீ து அள்ளி எறிந்து
மகிழ்கின்றனர். தவிர்க்க முடியாத காரணத்தால் பிறந்த வட்டிற்கு
ீ வர முடியாமல் போனால்,
பெற்றோரே நேரடியாக மகள் வட்டிற்கு
ீ சென்று பரிசு பொருட்களை வழங்குவர். இதனால், பிறந்த
வட்டுக்கும்
ீ புகுந்த வட்டிற்கும்
ீ நல்லுறவை உண்டாக்கும் பாலமாக இந்த விழா திகழ்கிறது.
கர்நாடகா : மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் தசரா விழா மிகச்சிறப்பாக
கொண்டாடப்படுகிறது. அரசு சார்பில் இங்கு மிகப் பிரம்மாண்டமான ஊர்வலம் நடத்தப்படும். ஒரு
காலத்தில் மன்னர்கள் போருக்கு செல்வதற்கு முன், மைசூரு சாமுண்டீஸ்வரியை ஒன்பது நாட்கள்
இரவு நேரத்தில் சென்று வணங்குவது வழக்கம். பத்தாவது நாளான விஜயதசமி நாளில் போருக்கு
புறப்பட்டுச் செல்வர். இதன்மூலம் தேவியருளால் வெற்றி வாகை சூடி மகிழ்வர். இன்றும்
மைசூருவில் தசரா உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. "தஸ் ராத்' என்றால் பத்து இரவுகள்
என்று பொருள். இச்சொல்லே திரிந்து "தசரா' என்று வழங்கப்படுகிறது. இன்று முதல் ஒன்பதுநாளும்
நவராத்திரியாகவும், பத்தாம் நாள் விஜயதசமியாகவும் கொண்டாடுகிறார்கள். நவராத்திரியின்போது
புத்தாடை உடுத்தி மகிழ்கின்றனர்.

மகாராஷ்டிரா : மகாராஷ்டிராவில் வன்னிமரத்தை விஜயதசமியன்று வழிபடுவதோடு, அதன்


இலைகளையும் பறிப்பர். வன்னிமரத்தை செல்வம் தரும் மரமாக கருதுகின்றனர். இளைஞர்கள்
இந்நாளில் வன்னியிலைகளைப் பெரியவர்களின் காலடியில் வைத்து ஆசியைப் பெறுகின்றனர்.
பெரியவர்களும் ஆண்டு முழுவதும் செல்வ வளம் பெறவேண்டும் என்ற அடிப்படையில் அந்த
இலைகளைக் கொடுத்து "இதை தங்கமாக நினைத்து பெற்றுக்கொள்ளுங்கள்' என சொல்லி
ஆசீர்வதிப்பர். மகாராஷ்டிரா மாநிலக் கோயில்களில் வன்னிமரத்தடியில் அம்பிகையை வைத்து
நவராத்திரி பூஜை நடத்துவது வழக்கம்.

உத்தரப்பிரதேசம் : உத்தரப்பிரதேசம், உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்களில் ராமாயண அடிப்படையில்


தசரா விழா கொண்டாடப்படுகிறது. ராமபிரான் இலங்கைக்கு போருக்கு சென்றபோது பேராற்றலும்,
பலமும் வேண்டி அம்பிகையை பூஜித்தார். இதை நினைவுகூறும் விதத்தில் "ராமலீலா' என்ற பெயரில்
இவ் விழா கொண்டாடப்படுகிறது. விஜயதசமி அன்று ராவணனின் உருவத்தை பத்து தலைகளுடன்
செய்து அதை நெருப்பிட்டு எரிக்கிறார்கள். அந்த பொம்மைக்குள் பட்டாசு, மத்தாப்பு, ராக்கெட்
ஆகியவற்றை நிரப்பி மைதானங்களில் வைத்து கொளுத்திவிடுவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு "ராவண
தகனம்' என்று பெயர். மனதில் உள்ள தீய எண்ணங்களை நீங்கி நல்லருள் பெற வேண்டும் என்பது
இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

மங்கள  சண்டிகை துதி : லோகமாதாவான அம்பிகைக்குரிய


பாராயணம் துதிகளில் மங்கள
சண்டிகை மகிமை வாய்ந்தது. இதனை
நவராத்திரியின் நிறைவு நாளான
விஜயதசமிநாளில் படிப்பது
மிகவும் சிறப்பு. செவ்வாய்,
வெள்ளிக்கிழமைகளிலும்,
பவுர்ணமி நாளிலும் கூட இதைப்
பாராயணம் செய்வதால் நன்மை
உண்டாகும். அம்பிகையிடம் ஏதாவது
கோரிக்கை வைத்து, அது நிறைவேற
தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமை
படிப்பதும் வழக்கம்.
ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா
சர்வ சக்தி ஜெய துர்கா
ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா
சர்வ சக்தி ஜெய துர்கா
மங்கள வாரம் சொல்லிட வேண்டும்
மங்கள கன்னிகை ஸ்லோகம் இதை
ஒன்பது வாரம் சொல்லுவதாலே
உமையவள் திருவருள் சேரும்
படைப்பவள் அவளே
காப்பவள் அவளே
அழிப்பவள் அவளே சக்தி - அபயம்
என்று அவளை சரண் புகுந்தாலே
அடைக்கலம் அவளே சக்தி -
ஜயஜயசங்கரி கவுரி மனோகரி
அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி
சிவ சிவ சங்கரி சக்தி மகேஸ்வரி
திருவருள் தருவாள் தேவி
கருணையில் கங்கை
கண்ணனின் தங்கை
கடைக்கண் திறந்தால் போதும்
வருவினை தீரும், பழவினை ஓடும்
அருள் மழை பொழிபவள் - நாளும்
நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள்
காளி எனத் திரிசூலம் எடுத்தவள்
பக்தருக்கெல்லாம் பாதை கொடுத்தவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்

 அபிராமி அந்தாதி : தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா


மனம்தரும்; தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

You might also like