You are on page 1of 9

* நதியானது கடலில் சங்கமமாவது போல் என் மனம் இறைவனாகிய

உன்னிடம் சங்கமமாகிறது.

* ஞானத்தின் யானை மேல் ஏறித் தியானம் என்ற ஆசனம் போட்டு


அமர்ந்துகொள். நாய் போன்றது உலகம். நன்றாகக் குரைக்கட்டும். வேறு
ஒன்றும் செய்ய முடியாது.

* இறைவா! உன்னிடம் நான் போகம், முக்தி ஒன்றையும் கேட்கமாட்டேன்.


எனக்கு பக்தியை தானமாக அருள்வாயாக. வேறு ஒருவரிடமும் இரத்தல்
செய்ய மாட்டேன். உன்னைத்தான் இரப்பேன்.

* நீ ஜபமாலை உருட்டலாம், நெற்றியில் திருநீறு பூசலாம், நீண்ட ஜடை


தரிக்கலாம். ஆனால், உள்ளத்தில் கொடிய விஷமிருந்தால் எப்படி
கடவுளைக் காண முடியும்?

* பூஜை, சேவை, நியமம், விரதம் எல்லாம் வெறும் விளையாட்டுக்களே.


ஆண்டவனை உள்ளத்தால் தொட வேண்டும். கடவுள் திருநாமத்தை
நெஞ்சில் ஒரு வினாடி மனம் கசிந்து நினைத்தாலும் போதும்.

* மீ னுக்கு நீரிலும், உலோபிக்குக் காசிலும், தாய்க்கு மகளிடமும்,


பக்தனுக்கு ஆண்டவனிடமும் பற்று அதிகம்.

* உடலளவில் தங்களை யோகியாக எல்லோரும் செய்து கொள்வார்கள்.


ஒருவரும் மனதை அவ்விதம் செய்து கொள்வதில்லை.

* கடவுள் ஒருவரே; எல்லா ஜீவராசிகளும் அவருடைய சொரூபமே.


எங்கும் அவர் நிறைந்திருக்கிறார். அப்படி இருக்கும்போது ''அவர் என்
கடவுள், இவர் அவன் கடவுள், உன் கடவுள் வேறு,'' என்ற பிரிவினை
எல்லாம் ஏன்?

* காலம் தவறாது நீராடுவதும், காய்கறி வகைகளை உண்பதுமே


முக்தியளிக்கும் என்று நினைத்தால் மீ ன்களுக்கும், விவசாயக்
கருவிகளுக்குமே முதலில் முக்தி கிடைக்கும்.

லக்ஷ்மி வராஹர் - காயத்ரி மந்திரங்கள்


(எதிரிகளை வெல்ல)

ஓம்தத்புருஷாயவித்மஹே
ஸந்தாநபுத்ராயதீமஹி
தன்னோவிஷ்ணுஹ்ப்ரசோதயாத்

சக்கரத்தாழ்வார் - காயத்ரி மந்திரங்கள்

(எதிரிகளைவெல்ல)

ஓம்சுதர்ஸனாயவித்மஹே
ஜ்வாலாசகராயதீமஹி
தன்னோசக்ரஹ்ப்ரசோதயாத்

ஓம்சுதர்சனாயவித்மஹே
மஹாஜ்வாலாயதீமஹி
தன்னோசக்ரஹ்ப்ரசோதயாத்

ஓம்சுதர்சனாயவித்மஹே
ஹேதிராஜாயதீமஹி
தன்னோசக்ரஹ்ப்ரசோதயாத்

ஓம்சுதர்சனாயவித்மஹே
மஹாமந்த்ராயதீமஹி
தன்னோசக்ரஹ்ப்ரசோதயாத்

ஓம்சுதர்சனாயவித்மஹே
சக்ரராஜாயதீமஹி
தன்னோசக்ரஹ்ப்ரசோதயாத்
ஹயக்ரீவர்- காயத்ரி மந்திரங்கள்

(படிப்பும்,ஞானமும்பெற)

ஓம்வாகீ ஸ்வராயவித்மஹே
ஹயக்ரீவாயதீமஹி
தன்னோஹம்ஸஹ்ப்ரசோதயாத்

வேங்கடேஸ்வரர் - காயத்ரி மந்திரங்கள்

(குபேரசம்பத்துகிடைக்க)

ஓம்நிரஞ்சனாயவித்மஹே
நிராபாஸாயதீமஹி
தன்னோவேங்கடேசஹ்ப்ரசோதயாத்

ஓம்ஸ்ரீநிலயாயவித்மஹே
வேங்கடேசாயதீமஹி
தன்னோஹரிஹ்ப்ரசோதயாத்

ஓம்நிரஞ்சனாயவித்மஹே
நிராபாசாயதீமஹி
தன்னோஸ்ரீநிவாசஹ்ப்ரசோதயாத்

ஆஞ்சநேயர் கவசம்
பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரங்கள்

கிழக்கு முகம்-ஹனுமார்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா.

தெற்கு முகம்-நரஸிம்மர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை
தோஷங்கள் ஆகியவை நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷிண முகே கரால வதனாய நிருஸிம்ஹாய ஸகல பூத ப்ரேத
ப்ரமதனாய ஸ்வாஹா.

மேற்கு முகம்-கருடர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள்


ஆகியவை நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா.

வடக்கு முகம்- வராஹர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்)

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே ஆதிவராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா.

மேல்முகம்-ஹயக்ரீவர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம்


ஏற்படும்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா.

நினைத்த காரியம் இனிதே நிறைவேற

ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் கிம் தவ ப்ரபோ ராமதூத மஹா ப்ராக்ஞ்ய மம கார்யம்
ஸாதயா.

இதை பூஜையில் 108 முறை கூறவும்.

சகல கலைகளில் தேர்ச்சி, நினைவாற்றலுக்கு

ஓம் புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம் வாக்படுத்வம்ச ஹனுமத்
ஸ்மரனாத் பவேத் இதை தினமும் 11 முறை கூறவும்.

நவக்கிரகங்களின் தோஷம் நீ ங்க

ஓம் வருணோ வாயுகதிமான்வாயு கௌபேர ஈஸ்வர ரவிச்சந்திர குஜஸ் ஸெளம்யோ குருக் காவ்யோ
சனைச்வர: ராகு கேதுர், மருத்தோதா தாதா ஹர்தா ஸமீ ரஜா:

இதை தினமும் காலையில் 11 முறை கூறவும்.

எதிரிகளால் ஏற்படும் துன்பம் நீ ங்க

ஓம் ஜகத்ராதோ ஜகந்நாதோ ஜகதீசோ ஜனேஸ்வர ஜகத்பிதா ஹரிச்ரீசோ, கருடஸ்மய பஞ்ஜன:

இதை தினமும் 21 முறை கூறவும்.

கடன் தொல்லையிலிருந்து விடுபட

ஓம் ருணதர்ய ஹரஸ் ஸூக்ஷ்ம ஸ்தூல ஸ்ர்வ கதப்பு மாந் அபஸ்மார ஹரஸ்மர்த்தர் ச்ருதிர் காதா
ஸ்ம்ருதிர் மனு:

இதை காலை, மாலை 51 முறை கூறவும்.

தாமதமாகும் திருமணம் விரைவில் நடைபெற

ஓம் காத்யாயனி மஹாமாயே மஹா யோஹீன் யதீச்வரி நந்தகோப ஸுதம் தேவி பதிம் மே குரு தே
நம:

இதை காலை 12 முறை கூறவும்.

வட்டை
ீ விட்டு வெளியில் புறப்படும் போது (இதை பாராயணம் செய்தால் நினைத்த
காரியம் வெற்றியடையும்)

ஓம் அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராம பூஜித பிரஸ்தானஞ்ச கரிஷ்யாமி ஸித்திர்பவது மேஸதா.

இதை வெளியில் புறப்படும் போது 3 முறை கூறவும்.

எல்லா விஷங்களும் நீ ங்க

ஓம் ஹ்ரீம் பச்சிம முகே வரீ கருடாய பஞ்சமுகி வரீ ஹனுமதே மம் மம் மம் மம் மம் ஸகல விஷ
ஹரணாய ஸ்வாஹா.

சகல செல்வங்களும் பெற

ஓம் ஹ்ரீம் உத்தர முகே ஆதிவராஹாய பஞ்சமுகீ ஹனுமதே லம் லம் லம் லம் லம் ஸகல
சம்பத்கராய ஸ்வாஹா.

பகைவர்களின் பயம் நீ ங்க

க்ருஷ்ண வர்ணி ப்ருஹத்ரூபி பிருஹத்கண்டி மஹத்மயி தேவி தேவி மஹாதேவி மம சத்ரூன்


வினாசய

நரசிம்ஹர் - காயத்ரி மந்திரங்கள்

(பகைவரைவெல்ல)

ஓம்வஜ்ரநகாயவித்மஹே
தீக்ஷ்ணதன்ஷ்ட்ராயதீமஹி
தன்னோநாரசிம்ஹாயப்ரசோதயாத்

ஓம்உக்ரந்ருசிம்ஹாயவித்மஹே
வஜ்ரநகாயதீமஹி
தன்னோந்ருசிம்ஹப்ரசோதயாத்

ஓம்வஜ்ரநகாயவித்மஹே
தீக்ஷ்ணதன்ஷ்ட்ராயதீமஹி
தன்னோந்ருசிம்ஹப்ரசோதயாத்

ஓம்நாரசிம்ஹாயவித்மஹே
வஜ்ரநகாயதீமஹி
தன்னோவிஷ்ணுஹ்ப்ரசோதயாத்

ஓம்கராளிணிசவித்மஹே
நாரசிம்ஹ்யைசதீமஹி
தன்னோசிம்ஹேப்ரசோதயாத்

காயத்ரி மந்திரங்கள்

காயத்ரி மந்திரம்

காயத்ரி மந்திரம் என்பது சூரிய வழிபாட்டைத்தான் குறிக்கும்.

ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்

அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நாம் தியானிக்கிறோம். பூ உலகம், மத்திய


உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தி அது. அந்தப் பரம சக்தி நமது புத்தியை
வெளிச்சப்படுத்தட்டும் என்பது இதன் பொருள்.

24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ


ஜென்ம பாவங்கள் அகலும்.  சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி
என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர
எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள்
காயத்ரி. காயத்ரி சந்தசமம் மாத  எனப்படும்.

இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அதற்காக வேண்டும்


என்றே தெரிந்தே பாவங்களைச் செய்து விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன்
கிடைக்காது.

காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த
மந்திரம் காலையில்  காயத்ரி க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி க்காகவும், மாலை சந்தியா
வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.

காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர


வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும்,
ஆராதனையும் பயனற்றது.

இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும், பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று
பாதங்களுள்ள காயத்ரி மந்திரமும் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற
பிரணவத்திலும், இரண்டாவது வியாஹ்ருதிகளிலும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம்
என்ற முதல் பாதத்திலும், நான்காவது பர்க்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது
பாதத்திலும், ஐந்தாவது தியோ யோ ந; ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி
சொல்ல வேண்டும்.

மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008
அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன் கிடையாது. முறையாக 27 தடவை முழு மன
ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே பலன் கிடைக்கும்.

காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும்


முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும், மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு
கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும், மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து
கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும்.

தினமும் குறைந்தது 108 முறை ஜபிக்கவும். ஆபத்துக் காலத்தில் 28 அல்லது 10 தடவை


ஜபிக்கவும். உடலும், உள்ளமும் தூய்மையான குழந்தைகளும், வயதான பெண்களும்
காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.

காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு:

யோ                     -எவர்
ந                           -நம்முடைய
தியோ                 -புத்தியை
தத்                        -அப்படிப்பட்ட
ப்ரசோதயாத்    -தூண்டுகிறாரோ
தேவஸ்ய          -ஒளிமிக்கவராக
ஸவிது               -உலகைப் படைத்த
வரேண்யம்        -மிகவும் உயர்ந்ததான
பர்கோ                  -சக்தியை
தீமஹி                -தியானிக்கிறோம்

நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான


பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி
விஸ்வாமித்திரர்.

You might also like