You are on page 1of 3

49 ஓ' பிரிவுக்கு மிகப் பெரிய வரவேற்பு: தமிழகம் முழுவதும் 24,591 பேர் பதிவு

First Published : 16 Apr 2011 02AM

சென்னை, ஏப். 15: "யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை' என்கிற பிரிவு தமிழ


கம் முழுவதும் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் பிரிவின் கீ ழ், 24 ஆயிரத்து 591 பேர் வாக்களித்துள்ளனர்.

2006-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் "49 ஓ' பிரிவின் கீ ழ்


வாக்களித்தவர்கள் மிகக் குறைவாகும்.
நூற்றுக்கும் குறைவானவர்களே தங்களது வாக்குகளை அந்தப் பிரிவின் கீ ழ்
பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க


விரும்பவில்லை என்றால், "49 ஓ' பிரிவைப் பயன்படுத்தலாம் என தேர்தல்
ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான சிறப்பு வசதி மின்னணு
இயந்திரத்தில் இல்லையென்றாலும் அதுகுறித்த விழிப்புணர்வை
ஆணையம் அதிகளவில் ஏற்படுத்தியது.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் "49 ஓ' பிரிவு குறித்த துண்டு
பிரசுரங்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

வாக்குப் பதிவு செய்ததற்கான பதிவேட்டில், கையெழுத்திட்டு அதில் யாருக்கும்


"வாக்களிக்க விரும்பவில்லை' என்பதே "49 ஓ' பிரிவாகும்.
நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அந்தப் பிரிவுக்கு மிகப் பெரிய
வரவேற்பு கிடைத்தது.

24 ஆயிரம் பேர்: தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 591 பேர் "49 ஓ' பிரிவின் கீ ழ்
தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். சென்னை, கோவை ஆகிய
இரண்டு பெரு நகரங்களிலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் "49 ஓ' பிரிவின்
கீ ழ் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். அதுவே, அதிகமாகும்.

இதன் மூலம், நகரப் பகுதிகளில் படித்தவர்கள் மத்தியில் அந்தப் ப


வரவேற்பு இருப்பது தெரிய வருவதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள்
தெரிவிக்கின்றனர்.
இதேபோன்று, அரியலூர் மாவட்டத்தில் 106 பேரும், கன்னியாகுமரி
மாவட்டத்தில் 170 பேரும் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை
எனக் கூறிய தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பதிவானவை

திருவள்ளூர் 1347

சென்னை 3407

காஞ்சிபுரம் 1391

வேலூர் 464

கிருஷ்ணகிரி 381

தருமபுரி 252

திருவண்ணாமலை 209

விழுப்புரம் 280

சேலம் 940

நாமக்கல் 530

ஈரோடு 1133

திருப்பூர் 1796

நீலகிரி 1306

கோவை 3061

திண்டுக்கல் 554

கரூர் 335
திருச்சி 1046

பெரம்பலூர் 203

அரியலூர் 106

கடலூர் 430

நாகப்பட்டினம் 377

திருவாரூர் 181

தஞ்சை 543

புதுக்கோட்டை 331

சிவகங்கை 233

மதுரை 783

தேனி 336

விருதுநகர் 269

ராமநாதபுரம் 209

தூத்துக்குடி 879

திருநெல்வேலி 1109

கன்னியாகுமரி 170

மொத்தம் 24,591

You might also like