You are on page 1of 4

Blogger Backup - இலவச கருவி

ஒரு பதிவராக நமது பிளாக்கை பத்திரமாக வைத்துக் கொள்வது சில


சமயங்களில் சற்று சிரமமான காரியம்தான். நமது ஒவ்வொரு
இடுகைகளும் நமது எண்ணங்களின், சிந்தனைகளின், ஆராய்ச்சிகளின்
வெளிப்பாடாக உள்ளது என்பதும், இவையனைத்தும் நமது அந்தரங்க
டைரியை விட மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம்
என்பதனையும் எவராலும் மறுக்க முடியாது. 

உங்கள் பிளாக்கில் நூற்றுக் கணக்கில் இடுகைகளை


வைத்திருப்பீர்கள், திடீரென ஒரு நாளில் இவையனைத்தும்
தொலைத்து விட்டு அடடா என் பிளாக்கை காணோமே..
இடுகைஎல்லாம் போச்சே என்று புலம்பி கொண்டிருப்பது சிலருக்கு
நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

இதற்கு ஒரு நல்ல தீர்வாக Blogger Backup எனும் சுதந்திர இலவச


மென்பொருள் அமைந்துள்ளது ஒரு வரப்பிராசாதம் தான். (தரவிறக்கச்
சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.)

இந்த சிறிய மென்பொருள் கருவியை தரவிறக்கி பதிந்து கொண்ட


பிறகு இதனை திறந்து, 

 
Available Blogs என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில்
Add/Update/Remove blog என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். 
இனி Log into Blogger to get and add your blogs டேபில் உங்கள் பிளாக்கர்
கணக்கின் பயனர் பெயர் மற்றும் கடவு சொல்லை கொடுத்து கீ ழே
உள்ள பட்டனை க்ளிக் செய்யுங்கள். அல்லது OR Manually add or edit a
Blogger blog டேபை க்ளிக் செய்யுங்கள். (நான் கீ ழே உள்ள விளக்கப்
படங்களில் இரண்டாவது முறையை கொடுத்துள்ளேன்.) 

இரண்டாவது வழியில்Blog Title/Name, Blogger Blog URL ஆகியவற்றை


கொடுங்கள், Blogger Feed URL தெரிந்தால் கொடுங்கள், இல்லையெனில்
Get Feed URL பட்டனை அழுத்தி பெற்றுக்கொண்டு, Add/Update Blog
பொத்தானை க்ளிக் செய்யுங்கள். 
இனி அடுத்த திரை உங்கள் ப்ளாக் விவரங்களை காட்டும், இதில்,
உங்கள் வன்தட்டில் எந்த ட்ரைவில் உள்ள ஃபோல்டரில்  சேமிக்க
வேண்டும் என்பதை கொடுங்கள். மேலும் பின்னூட்டங்களை சேமிக்க
வேண்டுமெனில், Save Comments check box ஐ டிக் செய்யுங்கள். இப்படி
சேமிக்கும் இடுகைகளை ஒரே கோப்பில் சேமிக்க வேண்டுமா
அல்லது ஒவ்வொரு இடுகைக்கும் ஒவ்வொரு கோப்பை உருவாக்க
வேண்டுமா என்பதை Save posts as format என்பதற்கு நேராக உள்ள
லிஸ்ட் பாக்ஸில் தேர்வு செய்து கொள்ளுங்கள். மேலதிக
விவரங்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி மாறிக் கொண்டு
Backup posts என்ற பொத்தானை க்ளிக் செய்யுங்கள். 

இப்பொழுது உங்கள் பிளாக்கில் உள்ள ஒவ்வொரு இடுகைகளும்,


பின்னூட்டங்களும் Backup ஆக துவங்கும். இது அதிக நேரம் எடுத்துக்
கொள்வதில்லை, எனது பிளாக்கில் 240 க்கு மேற்பட்ட இடுகைகளை
Backup எடுக்க ஐந்து நிமிடங்கள் கூட எடுத்துக் கொள்ளவில்லை. 
 
இப்படி பேக்கப் எடுக்கும் பொழுது உங்கள் ஒவ்வொரு இடுகைகளும்
ஒவ்வொரு XML கோப்புகளாக உங்கள் கணினியில் சேமிக்கப்
படுகிறது. 

அவ்வளவுதான்! இனி எப்பொழுதாவது உங்கள் இடுகைகளை


தொலைத்து விட்டு 'அடடா வடை போச்சே!.. என்று தலையில் கை
வைப்பதை விட்டுவிட்டு மௌஸில் கை வைத்து, இதே
மென்பொருள் கருவியை பயன் படுத்தி உங்கள் இடுகைகளை Restore
செய்து கொள்ளுங்கள்.   

Blogger Backup தரவிறக்க 

You might also like