You are on page 1of 17

வியாழக்கிழமை

பதஞ்சலி முனிவரின் தியானச் செய்யுள்

ஆயசித்தி அனைத்தும் பெற்ற சத்திய சித்தரே


சப்தரிஷி மண்டலத்தில் பிரகாசிப்பவரே
பக்தியுடன் வணங்கும் எமக்கு
நல்லாசி தர வேண்டும் பதஞ்சலியாரே!

ஸ்ரீ பதஞ்சலி சித்தரின் பூசை முறைகள்

தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு,


அம்மஞ்சள் பலகையின்மேல் பதஞ்சலி சித்தரின் படத்தினை வைத்து மஞ்சள் குங்குமமிட்டு,
அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கினை நல்லெண்ணை ஊற்றி பஞ்சு திரி இட்டு இரண்டுமுக
தீபமெற்றி வைக்க வேண்டும். முதலில் இந்த சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி
மனமுருக கூறி பின்வரும் 16 போற்றிகளை கூறி பொன்னிற வஸ்திரம் அணிவித்து பொன்னிற
மலர்களையும், பிச்சிப்பூ, முல்லைப்பூ போன்ற பூக்களைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்
1. ஒரு நிலைப்பட்ட மனதை உடையவரே போற்றி!
2. ஆதிசேஷனின் அவதாரமே போற்றி!
3. ஒளிமயமானவரே போற்றி!
4. மந்திரத்தின் உருவமானவரே போற்றி!
5. கருணாமூர்த்தியே போற்றி!
6. கடும் விசக்காற்று மூச்சுடையவரே போற்றி!
7. பூலோகச் சூரியனே போற்றி!
8. ஞான வழிகாட்டுபவரே போற்றி!
9. பேரும் புகழும் உடையவரே போற்றி!
10. இன்மொழி பேசுபவரே போற்றி!
11. இகபர சுகம் தருபவரே போற்றி!
12. மகாவிஷ்ணு பிரியரே போற்றி!
13. அஷ்டமா சித்திகளையுடையவரே போற்றி!
14. அங்ஞானம் அகற்றுபவரே போற்றி!
15. யோக சூத்திரம் அருளிய யோகியே போற்றி!
16. யோகங்கள் அனைத்தையும் அளிக்கும் பதஞ்சலி சித்த சுவாமியே போற்றி! போற்றி!

இவ்வாறு 16 போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான “ஓம் க்லம் பதஞ்சலி


சித்தரே போற்றி!” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும்
காகபுசுண்ட முனி தியானச் செய்யுள்

காலச்சக்கரம் மேல் ஞானச்சக்கரம் ஏந்திய


மகா ஞானியே!
யுகங்களைக் கணங்களாக்கி கவனித்திடும்
காக்கை ஸ்வாமியே!
மும்மூர்த்திகள் போற்றும் புஜண்டரே உமது
கால் பற்றிய எம்மைக் காப்பாய்
காக புஜண்ட சுவாமியே!
பதினாறு போற்றிகள்

1. மகா ருத்ரரே போற்றி!


2. சன ீஸ்வர பகவானின் நண்பரே போற்றி!
3. ஸ்ரீம், ஹ்ரீம், லம், நமஹ, ஸ்வம், பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி!
4. அசுரர்களை அழிப்பவரே போற்றி!
5. தேவர்களைக் காப்பவரே போற்றி!
6. ஸ்ரீ ராமரை பூசிப்பவரே போற்றி!
7. அன்னப்பிரியரே போற்றி!
8. மானஸா தேவியை வணங்குபவரே போற்றி!
9. சிவசக்தி ஐக்கியத்தைத் தரிசிப்பவரே போற்றி!
10. மகானுகளுக்கெல்லாம் மகானே போற்றி!
11. மனிதர்களை வணங்கும் தெய்வமே போற்றி!
12. நோய்களுக்கு மருந்தே போற்றி!
13. கோடி லிங்கங்களை பூஜிப்பவரே போற்றி!
14. பாவத்தைப் போக்குபவரே போற்றி!
15. நாரதகானப் பிரியரே போற்றி!
16. ஸ்ரீ ராமர் பாதத்தை தரிசனம் செய்த ஸ்ரீ காக புஜண்ட சித்தர் ஸ்வாமியே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்,
லம் நமஹ, ஸ்வம் ஸ்ரீ காக புஜண்ட சித்தர் ஸ்வாமியே போற்றி!” என்று 108 முறை ஜெபிக்க
வேண்டும்.
வெள்ளிக்கிழமை
தியானச் செய்யுள்
சூலம் ஏந்திய சுந்தர மூர்த்தியே
அத்திமரம் அமர்ந்து
ஆயசித்தி அனைத்தும் பெற்ற சத்திய சித்தரே
கும்பிட்ட எமக்கு நம்பிக்கையுடன்
நல்லாசி தருவாய் குதம்பை சித்த பெருமானே!
பதினாறு போற்றிகள்
1. சிவனை பூசிப்பவரே போற்றி!
2. ஹடயோகப் பிரியரே போற்றி!
3. சூலாயுதம் உடையவரே போற்றி!
4. மோட்ச ஞானம் அளிப்பவரே போற்றி!
5. ஞானவரம் கொடுப்பவரே போற்றி!
6. ஜோதி சொரூபரே போற்றி!
7. சிவ ஒளியாய் திகழ்பவரே போற்றி!
8. விபூதி அலங்காரப்பிரியரே போற்றி!
9. நாட்டியப்பிரியரே போற்றி!
10. இதய சுத்தம் உள்ளவரே போற்றி!
11. வாக் பந்தனம் செய்பவரே போற்றி!
12. அபயம் அளிக்கும் தேவரே போற்றி!
13. இந்திரன் முதலான தேவர்களை பூசிப்பவரே போற்றி!
14. ஊனமுற்றவரைக் காப்பாற்றுபவரே போற்றி!
15. ஓம் என்ற பீஜாட்சரமாய் வாழ்பவரே போற்றி!
16. எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் குதம்பை சித்த சுவாமியே போற்றி! போற்றி!

இவ்வாறு 16 போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான “ஓம் குதம்பைச் சித்தரே


போற்றி!” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும்
புதன்கிழமை
தியானச் செய்யுள்

ஆயனராய் அவதரித்து
ஆண்டியாய் உருத்தரித்து
அபலைகளுக்கருளிய கோணார் பெருமானே!
ஓடுகின்ற நவக்கிரகங்களை
கோடு போட்டு படுக்கவைத்த
பரந்தாமனின் அவதாரமே!
மண் சிறக்க விண்சிறக்க
கடைக்கண் திறந்து காப்பீர்
இடைக்காடர் ஸ்வாமியே!
பதினாறு போற்றிகள்
1. கிருஷ்ணனை தரிசிப்பவரே போற்றி!
2. கருணாமூர்த்தியே போற்றி!
3. பஞ்சத்தைப் போக்குபவரே போற்றி!
4. இளநீர் பிரியரே போற்றி!
5. உலகரட்சகரே போற்றி!
6. அபயவரதம் உடையவரே போற்றி!
7. மருந்தின் உருவமானவரே போற்றி!
8. பூலோகச் சூரியனே போற்றி!
9. ஒளிமயமானவரே போற்றி!
10. கருவை காப்பவரே போற்றி!
11. “ஸ்ரீம்” பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி!
12. கால்நடைகளைக் காப்பவரே போற்றி!
13. ஸ்ரீ லட்சுமியின் கருணையை அளிப்பவரே போற்றி!
14. அங்குசத்தை உடையவரே போற்றி!
15. தேவலீலை பிரியரே போற்றி!
16. எல்லாம் வல்ல வனத்தில் வசிக்கும் ஸ்ரீ இடைக்காட்டு சித்தர் சுவாமியே போற்றி! போற்றி!
இவ்வாறு அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான “ஓம் ஸ்ரீம் இடைக்காடர் சித்தர் சுவாமியே
போற்றி!” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும்
திங்கள் கிழமை
உரோமமுனி தியான செய்யுள்
கனிந்த இதயம், மெலிந்த உருவம்,
சொரிந்த கருணை, சொல்லில் அடங்குமோ?
அலையும் மனதை அடக்கி
அருள் அள்ளியே தருவாய்
தாடியில் தங்கம் தந்த தெய்வமே
தங்கள் திருவடி சரணம்.
பதினாறு போற்றிகள்

1. கயிலாயத்தில் வசிப்பவரே போற்றி!


2. ஜடாமுடிப் பிரியரே போற்றி!
3. சந்திரனை தரிசிப்பவரே போற்றி!
4. சிவசக்தியாகத் தோன்றுபவரே போற்றி!
5. நந்தி தேவரால் காப்பற்றப்படுபவரே போற்றி!
6. சிவதாண்டவத்தை தரிசிப்பவரே போற்றி!
7. சங்கீ தப் பிரியரே போற்றி!
8. தடைகளை நீக்குபவரே போற்றி!
9. காகபுஜண்டரால் பூஜிக்கப்படுபவரே போற்றி!
10. மகாலக்ஷ்மியின் அருள் பெற்றவரே போற்றி!
11. முருகப் பெருமானை வணங்குபவரே போற்றி!
12. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி!
13. சூரியன் போன்று காட்சி அளிப்பவரே போற்றி!
14. காலத்தைக் கடந்தவரே போற்றி!
15. தெய்வகச்
ீ சித்தரே போற்றி!
16. கைலாயத்தில் வாசம் செய்யும் ஸ்ரீ உரோமரிஷி முனியே போற்றி! போற்றி!
இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்தபிறகு மூல மந்திரமான “ஓம்
ஸ்ரீஉரோமரிஷி முனி சித்தர் சுவாமியே போற்றி” என்று 108 முறை ஜபிக்க வேண்டும்.
தியானச் செய்யுள்

சிவனில் சிந்தை வைத்து


ஜீவனில் சித்து வைத்து
அவனியைக் காக்க வந்தா அழகர் பெருமானே…
அபாயம் நீக்கி சிவாயம் காட்டும்
தங்கள் தங்கத் தாமரைத் திருவடிகள் காப்பு.
பதினாறு போற்றிகள்

1. பாவங்களைப் போக்குபவரே போற்றி!


2. எங்கும் வியாபித்திருப்பவரே போற்றி!
3. சிவ பெருமானின் அவதாரமே போற்றி!
4. ஜீவராசிகளை காப்பவரே போற்றி!
5. ருத்ரனின் அவதாரமே போற்றி!
6. தீமைகளை அழிப்பவரே போற்றி!
7. சர்வ வல்லமை படைத்தவரே போற்றி!
8. ஐஸ்வர்யங்களை அளிப்பவரே போற்றி!
9. தேவர்களுக்கெல்லாம் தேவரே போற்றி!
10. சிவனின் அருள் பெற்றவரே போற்றி!
11. சிவசக்தி உருவமாகத் தோன்றுபவரே போற்றி!
12. கலைகளுக்கு அதிபதியே போற்றி!
13. காருண்ய மூர்த்தியே போற்றி!
14. மன நிம்மதி அளிப்பவரே போற்றி!
15. மங்களங்கள் தருபவரே போற்றி!
16. மகிமைகள் உடைய சிவவாக்கிய சித்தர் பெருமானே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பின் மூலமந்திரமான “ ஓம் ஸ்ரீ


சிவவாக்கிய சித்தர் பெருமானே போற்றி! “ என்று 108 முறை ஜபிக்கவேண்டும்
சனிக்கிழமை.
மருதமலை சித்தர் தியானச் செய்யுள்
அடவி வாழ் பாம்புகளை ஆட்டுவித்து ! பின்
உடலில் வாழ் பாம்புதனை எழுப்புவித்து
கூடுவிட்டு கூடுபாய்ந்து ஞானமுத்து
கொடுத்தவரே! குவலயத்தின் காவலரே!
ஆதிசேசனின் அருள் கண்டு
ஆதிசிவன் மகன் வரம் கொண்டு
சாதி மத பேதம் இன்றி
காக்கும் சித்தரே காக்க! காக்க!
பதினாறு போற்றிகள்
1. ஸ்ரீ நாகாபரணம் உடைய சிவனை வணங்குபவரே போற்றி!
2. ஆலகால விஷத்திலிருந்து காப்பவரே போற்றி!
3. சர்ப்பரட்சகரே போற்றி!
4. முருகனின் பிரியரே போற்றி!
5. பசும்பாலில் பிரியம் உள்ளவரே போற்றி!
6. மூன்று வர்ணங்கள் கொண்டவரே போற்றி!
7. வாக்கில் சுத்தம் உடையவரே போற்றி!
8. ஸ்ரீ ஆதிசேசனை வணங்குபவரே போற்றி!
9. விஷத்தினை முறிப்பவரே போற்றி!
10. நடுநிசியில் சஞ்சரிப்பவரே போற்றி!
11. ஜந்துக்களின் உருவம் உடையவரே போற்றி!
12. சன ீஸ்வர பகவானின் நண்பரே போற்றி!
13. ஓம் வசி பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி!
14. சிவனுக்கு ஆபரணமாஅக இருப்பவரே போற்றி!
15. நந்திதேவரின் நண்பரே போற்றி!
16. ஸ்ரீ பாற்கடலில் வாசம் செய்யும் பூஜ்ய சித்தர் பாம்பாட்டி சித்தர் சுவாமியே போற்றி!
போற்றி!

இவ்வாறு கூறி அர்ச்சித்தபின் மூலமந்திரமான “ஓம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் சுவாமியே
போற்றி!” என்று 108 முறை கூறி, ஜெபிக்க வேண்டும்
சனி தோஷங்கள் - கார்த்திகை நட்சத்திர நாள்
கோரக்கர் சித்தர் தியானச் செய்யுள்
சந்திர விழியும் மந்திர மொழியும்
கொண்ட சிவபக்தரே
சாம்பலில் தோன்றிய தவமணியே
விடை தெரியா பாதையில்
வறாப்பாய்
ீ நடைபோடும் எம்மை
கைப்பிடித்து கரை சேர்ப்பாய்
கோரக்க சித்த பெருமானே.
பதினாறு போற்றிகள்
1. முருகக் கடவுளின் பிரியரே போற்றி!
2. வாக்கில் சுத்தமுடையவரே போற்றி!
3. சன ீஸ்வர பகவானின் நண்பரே போற்றி!
4. கஷ்டங்களை போக்குபவரே போற்றி!
5. அடுப்புச் சாம்பலில் தோன்றியவரே போற்றி!
6. ஆசைகளற்ற அருளே போற்றி!
7. மாயைகளை களைபவரே போற்றி!
8. பூலோகச் சூரியனே போற்றி!
9. மாசற்ற மனமே போற்றி!
10. புகழும், அருளும் நிறைந்தவரே போற்றி!
11. ஞான வழி காட்டுபவரே போற்றி!
12. ஞானஸ்கந்தரே போற்றி!
13. ஜீவ ஜந்துக்களை காப்பவரே போற்றி!
14. காவி வஸ்திரம் தரிப்பவரே போற்றி!
15. உலக மக்களில் நண்பரே போற்றி!
16. உறுதியான மனதிடம் உள்ள கோரக்க சித்தரே போற்றி! போற்றி!
என கூறி வணங்க வேண்டும்.

     பிறகு மூலமந்திராமான “ஓம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த ஸ்வாமியே போற்றி!” என்று 108
முறை சொல்லி வழிபடவேண்டும்.
ஞாயிற்றுக் கிழமை

ஸ்ரீ தேரையர் தியான செய்யுள்

மாய மயக்கம் நீக்கி


காய கல்பம் தேடி
மூலிகை கொணர்ந்து
முதுகுகூன் நிமிர்த்திய
அகத்தியர் சீடரே உன் பாதம் சரணம்.
பதினாறு போற்றிகள்

1. குரு மெச்சிய சீடரே போற்றி!


2. தேரையை அகற்றிய தேரையரே போற்றி!
3. சிவனை பூசிப்பவரே போற்றி!
4. சங்கடங்களை போக்குபவரே போற்றி!
5. சஞ்சலங்களை தீர்ப்பவரே போற்றி!
6. சாந்த சொரூபரே போற்றி!
7. நோய்தீர்க்கும் மருந்தே போற்றி!
8. ஞானம் அளிக்கும் ஞானியே போற்றி!
9. சித்த சுத்தியுடையவரே போற்றி!
10. சகல பாபங்களையும் போக்குபவரே போற்றி!
11. குறிப்பறிந்து செய்யும் குணசீலரே போற்றி!
12. வெள்ளை வஸ்திரம் தரிப்பவரே போற்றி!
13. துக்கத்தைப் போக்குபவரே போற்றி!
14. கண் ஒளி தந்த கருணையே போற்றி!
15. குறை தீர்க்கும் நிறையே போற்றி!
16. பாண்டியன் கூன் நிமிர்த்திய தேரையரே போற்றி! போற்றி!

     அர்ச்சனை செய்தபின் மூலமந்திரமாக “ஓம் லபம் ருணம் நஸீம் ஸ்ரீ தேரைய சித்தரே
போற்றி! போற்றி!” என்று 108 முறை கூறி வழிபட வேண்டும்
பதினாறு போற்றிகள்:

1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!


2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
8. இசைஞான ஜோதியே போற்றி!
9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
10. காவேரி தந்த கருணையே போற்றி!
11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
12. இராமபிரானுக்கு சிவ கீ தையருளியவரே போற்றி!
13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
16. இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!
பஞ்சாமிர்தம், பழங்கள், சக்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் இளம் பச்சை நிற
வஸ்திரம் அணிவித்து புதன்கிழமை பூசை செய்யவும். நிறைவாக “ஓம் ஸ்ரீம் அகத்திய
முனிவரே போற்றி!” என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.
தியானச்செய்யுள்
சித்து விளையாட்டில் சிறந்தவரே
சிவனுடன் கலந்தவரே
ஆயசித்தி அனைத்தும் அறிந்தவரே
அபயம் அளிக்கும் அருளாளரே
மதுரையம்பதி வாழ் மகத்துவமே
உன் பாதம் சரணம்.
பதினாறு போற்றிகள்
1. ஒளி பொருந்தியவரே போற்றி!
2. ஓம் கம் நம் பீஜாட்சரத்தை உடையவரே போற்றி!
3. லோக ஷேம சித்தரே போற்றி!
4. யோக மூர்த்தியே போற்றி!
5. அவதார புருஷரே போற்றி!
6. அபயமளிப்பவரே போற்றி!
7. சிவ யோகியே போற்றி!
8. இந்திரனுக்கு அருளியவரே போற்றி!
9. ஜடாமுடிப் பிரியரே போற்றி!
10. சகல சித்திகளையும் உடையவரே போற்றி!
11. சூட்சுமமாக சஞ்சரிப்பவரே போற்றி!
12. சுகங்களைத் தருபவரே போற்றி!
13. தாய் போல் காப்பவரே போற்றி!
14. தண்டனைகளை நீக்குபவரே போற்றி!
15. தைரியத்தை கொடுப்பவரே போற்றி!
16. சித்த மருத்துவத் தெய்வமே ஸ்ரீ சுந்தரானந்த சித்தரே போற்றி! போற்றி!
எனக் கூறி நிவேதனமாகக் கடலை, வெண்பொங்கல் படைத்து இவற்றுடம் மஞ்சள் வஸ்திரம்
அல்லது காவி வஸ்திரம் படைத்து வியாழன் அன்று வழிபட வேண்டும். நிறைவாக “ஓம் ஆம்
ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சுவாமியே போற்றி! போற்றி!” என 108 முறை கூறி வழிபட வேண்டும்
வெள்ளிக்கிழமை
தியானச் செய்யுள்
சித்த வேட்கை கொண்டு
சிறந்து விளங்கிய சீலரே
அரங்கனிடத்தில் அணிகலன்கள் பெற்ற
அற்புத மூர்த்தியே
எம் அறியாமை நீக்கி ஞானவரம் அருள்வாய்
ஸ்ரீ சட்டைமுனி சுவாமியே!

பதினாறு போற்றிகள்:

1. திருவரங்கனின் அருள்பெற்றவரே போற்றி!


2. ஸ்ரீ சக்கரத்தை தரிசனம் செய்தவரே போற்றி!
3. தேகத்தினைக் காப்பாற்றுவாய் போற்றி!
4. ஜலத்தில் வாசம் செய்பவரே போற்றி!
5. அக்னி பகவானை பூசிப்பவரே போற்றி!
6. வருண பகவானை வணங்குபவரே போற்றி!
7. நவக்கிரகங்களின் ஆசிகளை அளிப்பவரே போற்றி!
8. ஸ்ரீ ஸ்கந்தனை வணங்குபவரே போற்றி!
9. கவலைகளை அகற்றுபவரே போற்றி!
10. நோய்களை அழிப்பவரே போற்றி!
11. வில்வ அர்ச்சனை பிரியரே போற்றி!
12. காம குரோதத்தை அழிப்பவரே போற்றி!
13. சமுத்திரத்தை பூசிப்பவரே போற்றி!
14. ஸ்ரீம் பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி!
15. ராமநாமப் பிரியரே போற்றி!
16. எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சட்டைமுனி சித்தர் சுவாமியே போற்றி! போற்றி!
இவ்வாறு 16 போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான “ஓம் ஸ்ரீம் சட்டைமுனி
ஸ்வாமியே போற்றி!” என்று 108 முறை ஜபிக்க வேண்டும்.
வியாழக்கிழமை
தியானச்செய்யுள்

இலை உடையுடன் கலை உருவாய்


காட்சி தரும் காரியசித்தி சுவாமியே
மாறாத சித்தியை மரப்பொந்தினில்
பெற்ற மங்காச் செல்வரே
அசைகின்ற புத்தியை
இசைக்கின்ற சித்தியால்
இனிது காப்பாய் அகப்பேய் சித்தரே
பதினாறு போற்றிகள்
1. வனத்தில் சஞ்சாரம் செய்பவரே போற்றி!
2. பேய் பிசாசுகளை விரட்டுபவரே போற்றி!
3. பித்ருப்ரியரே போற்றி!
4. உயிர்களைக் காப்பாற்றுபவரே போற்றி!
5. சாந்தமாக இருப்பவரே போற்றி!
6. சந்தான தோஷத்தைப் போக்குபவரே போற்றி!
7. சங்கீ தப்பிரியரே போற்றி!
8. சூரியன் சந்திரன் போன்று பிரகாசம் உடையவரே போற்றி!
9. ரத்தினங்களை அணிபவரே போற்றி!
10. ஹஸ்த தரிசனம் செய்பவரே போற்றி!
11. கஜபூசை செய்பவரே போற்றி!
12. முனிவர்களுக்கு காட்சியளிப்பவரே போற்றி!
13. உலகரட்சகரே போற்றி!
14. சிறுவர்களால் வணங்கப்படுபவரே போற்றி!
15. முக்தி அளிப்பவரே போற்றி!
16. ஸ்ரீ சக்ர ஸ்வாமியாகிய அகப்பேய் சித்தர் சுவாமியே போற்றி!
இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான “ஓம் அகப்பேய்
சித்தரே போற்றி” என்று 108 முறை ஜபிக்க வேண்டும்.
கொங்கணவர் சித்தர் தியானச் செய்யுள்(வெள்ளிக்கிழமை)
கொக்கை எரித்த கொங்கணரே
அம்பிகை உபாசகரே
கௌதமரின் தரிசனம் கண்டவரே
இரசவாதமறிந்த திவ்யரே
உங்கள் திருப்பாதம் சரணம்.
பதினாறு போற்றிகள்:
1. கம்பீரமான தோற்றம் உள்ளவரே போற்றி!
2. அம்பிகைப் பிரியரே போற்றி!
3. இரசவாத சித்தரே போற்றி!
4. அர்ச்சனையில் மகிழ்பவரே போற்றி!
5. சிறந்த தவசக்தி பெற்றவரே போற்றி!
6. செல்வங்களைத் தருபவரே போற்றி!
7. வில்வ அர்ச்சனைப் பிரியரே போற்றி!
8. நோய்களை அழிப்பவரே போற்றி!
9. வறுமையை போக்குபவரே போற்றி!
10. ஞானம் அளிப்பவரே போற்றி!
11. தீய கனவுகளில் இருந்து காப்பவரே போற்றி!
12. மாயையை அகற்றுபவரே போற்றி!
13. கருணாமூர்த்தியே போற்றி!
14. காவி வஸ்திரம் தரித்தவரே போற்றி!
15. கொங்கு தேசத்தவரே போற்றி!
16. குலம் விளங்கச் செய்பவரே போற்றி!
இவ்வாறு அர்ச்சித்தபிறகு “ஓம் ஸ்ரீம் கொங்கணமுனி சித்தர் பெருமானே போற்றி!” என்று 108
முறை ஜெபித்து பிரார்த்தனையை கூற வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.
தியானச் செய்யுள்: (செவ்வாய்க் கிழமையில்)
மகா சித்தருக்கே மருத்துவம் சொன்ன மரவுரிச் சித்தரே
புலிவாகனம் கொண்ட மந்திர சித்தரே
மயில் வாகனனை வணங்கியவரே
எம் கலிப்பாவம் தீர்க்க
உங்கள் புலிப்பாதம் பற்றினோம்.
பதினாறு போற்றிகள்:
1. கம்பீரமான தோற்றம் கொண்டவரே போற்றி!
2. தண்டபாணிப் பிரியரே போற்றி!
3. ஞானவரம் கொடுப்பவரே போற்றி!
4. வில்வ அர்ச்சனைப் பிரியரே போற்றி!
5. சித்த மருத்துவத்தின் தலைவரே போற்றி!
6. ராகு கிரகத்தை பூசிப்பவரே போற்றி!
7. யந்திரங்களை பிரதிஷ்டை செய்பவரே போற்றி!
8. உலகம் முழுவதும் வாசம் செய்பவரே போற்றி!
9. வனத்தில் வாசம் செய்பவரே போற்றி!
10. தெய்வயானையின் புதல்வரே போற்றி!
11. சூலாயுதம் உடையவரே போற்றி!
13. மிருகங்களால் பூஜிக்கப்படுபவரே போற்றி!
14. ஐஸ்வர்யங்களை அளிப்பவரே போற்றி!
15. எளிதில் மகிழ்ச்சி அடைபவரே போற்றி!
16. முருகப் பெருமானை வழிபட்ட புலிப்பாணி சித்தர் சுவாமியே போற்றி! போற்றி!
இவ்வாறு 16 போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு, மூல மந்திரமான, “ ஓம் ஸ்ரீ புலிப்பாணி
சித்தரே போற்றி” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும்.
பின்பு நிவேதனமாக, கமலா ஆரஞ்சைக் கொட்டைகள் நீக்கி உரித்து சுளையாய் வைக்க
வேண்டும். அல்லது தக்காளியை விதைகள் எடுத்து விட்டு உப்பு தூவி வைக்க வேண்டும், தயிர்
சாதத்தை உப்பில்லாமல் தாளிக்காமல் வைத்து படைக்க வேண்டும்.
பின் உங்கள் பிரார்த்தனைகளை மனமுருகக் கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை
செய்யவும்.
தியானச் செய்யுள்: (சனிக்கிழமை.)
கருவூரில் அவதரித்த மஹாஸ்தபஸ்யே !
திருக்கலைத் தேரில் முடிதரித்த நவநிதியே!
வாரி வழங்கி அருள் கொடுத்தாய்!
மாறாத சித்துடையாய்!
கல் உள்ளளவும் மண் உள்ளளவும் – உன்
கருணைக் கரங்களே காப்பு!
பதினாறு போற்றிகள்:
1. சிவனே போற்றி!
2. சிவனைப் பூசிப்பவரே போற்றி!
3. நாடி யோகியே போற்றி!
4. ஒளி பொருந்தியவரே போற்றி!
5. அவதார புருசரே போற்றி!
6. இந்திராதி தேவர்களுக்கு பிரியரே போற்றி!
7. லோக சேம சித்தரே போற்றி!
8. நடராசரைப் பிரதிட்டை செய்தவரே போற்றி!
9. யோக மூர்த்தியே போற்றி!
10. ஓம் கம் நம் பீஜாட்சரத்தை உடையவரே போற்றி!
11. கற்பூரப் பிரியரே போற்றி!
12. வேண்டிய வரம் அளிப்பவரே போற்றி!
13. வெட்டை வெளியில் வசிப்பவரே போற்றி!
14. பூவுலகில் சஞ்சரிப்பவரே போற்றி!
15. கருவைக் காப்பவரே போற்றி!
16. ஞானத்தை அளிக்கும் கருவூர் சித்தர் சுவாமியே போற்றி! போற்றி!
இவ்வாறு நிவேதனமாக பச்சைக் கற்பூரம் போட்ட சர்க்கரைப் பொங்கலை வைக்க வேண்டும்
தியானச்செய்யுள்

சிவிகை ஏந்தி, சிரம் தாழ்த்தும் சித்தர் பெருமக்களுக்கு;


மூலிகை மேனியாய் பேரருள் புரியும் போகர் பெருமானே;
சிவபாலனுக்கு சீவன் தந்த சித்த ஒளியே;
நவபாசாணத்து நாயகனே உங்கள் அருள் காக்க காக்க…
பதினாறு போற்றிகள்

1. முருகனைக் குருவாகக் கொண்டவரே போற்றி!


2. சித்த வைத்தியத்தின் மூலவரே போற்றி!
3. மகா முனிவர்களால் பூஜிக்கப்படுவரே போற்றி!
4. ப்ரணவ ள்வரூபமாக இருப்பவரே போற்றி!
5. மயில் வாகனனை தரிசனம் செய்தவரே போற்றி!
6. மலைகளில் சஞ்சரிப்பவரே போற்றி!
7. மூலிகை, புஷ்பங்களால் அர்ச்சிக்கப்படுபவரே போற்றி!
8. ஆம், ஊம் என்ற பீஜக்ஷரங்களில் வசிப்பவரே போற்றி!
9. பசும்பால் பிரியரே போற்றி!
10. நவபாஷாணம் அறிந்தவரே போற்றி!
11. ப்ரணவத்தில் பிரியமுள்ளவரே போற்றி!
12. நாக தேவதைகளால் பூஜிக்கப்படுபவரே போற்றி!
13. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி!
14. கிரிவலத்தில் பிரியமுள்ளவரே போற்றி!
15. சூட்சுமமாக சஞ்சரிப்பவரே போற்றி!
16. முருகனை தரிசனம் செய்த ஸ்ரீ மகாபோகர் சித்தர் சுவாமிகளே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளிஅயும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான “ஓம் ஆம் ஊம்
ஸ்ரீ மகா போகர் சித்தர் சுவாமியே போற்றி!” என்று 108 முறை செபிக்க வேண்டும்.

You might also like