You are on page 1of 1

சிம்மம்: சாதகமான வடுகளில்

ீ செல்வதால் புத்திசாலித்தனம், வாக்குசாதுர்யம் கூடும். வி.ஐ.பிகள் நட்பால் புதிய


திருப்பங்கள் ஏற்படும். வாழ்க்கையில் திடீர் நல்ல திருப்பங்கள் வந்து திகைக்கச் செய்யும். கணவன்-
மனைவிக்குள் சிக்கலெல்லாம் நீங்கி மனம்விட்டுப் பேசுவர்கள்.
ீ உங்களிடம் பணம் வாங்கியவர்கள்,
வட்டியையும் அசலையும் சேர்த்துத் தருவார்கள். பாதச்சனி தொடர்வதால் கண் எரிச்சல், உடல் உஷ்ணம்
வரக்கூடும். சுக்கிரன் சாதகமான வடுகளில்
ீ செல்வதால் கல்யாணம், கிரகப் பிரவேசம், சீமந்தம் என வடு

களைகட்டும். பழைய டிவி, மிக்ஸியை மாற்றுவர்கள்.
ீ 5 ல் ராகு நிற்பதால் பிடிவாதமாக நடந்து கொள்ளும்
பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். மகனின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்வர்கள்.

வெளிவட்டாரத்தில் கௌரவப் பதவி கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு கல்யாணப் பேச்சுவார்த்தைகள்
முன்னேற்றம் தரும். தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். கசந்த காதல் இனிக்கும். குலதெய்வக்
கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வாருங்கள். ராசிக்கு 8 ல் குரு நிற்பதால் வருங்காலத்தைப் பற்றிய பயம்
அதிகரிக்கும். யாரையும் குறை சொல்லாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது.
உங்கள் ராசிநாதன் 11 ல் வலுவாக இருப்பதால் திடீர் பணவரவு உண்டாகும். அரசால் நன்மை பிறக்கும். ஆனால்
கேதுவுடன் சேர்ந்திருப்பதால் வேலைச்சுமை, முன்கோபம் அதிகரிக்கும். 11 ல் நிற்கும் கேதுவால்
ஆன்மிகவாதிகளின் ஆசியைப் பெறுவர்கள்.
ீ அரசியல்வாதிகள் சிந்தித்து செயல்படுவார்கள். மாணவர்களுக்கு
நல்ல கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும்.  வியாபாரத்தில் கடையை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள
இடத்திற்கு மாற்றுவர்கள்.
ீ கெமிக்கல், மருந்து சம்பந்தமான தொழிலில் நல்ல லாபம் உண்டு. உத்யோகத்தில்
கடினமான பணிகளை செய்து முடித்து மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவர்கள்.
ீ கலைத்துறையினருக்கு நல்ல
சம்பளத்தில் வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயிகளுக்கு நல்ல மகசூல் உண்டு. வங்கிக் கடனை பைசல்
செய்வர்கள்.
ீ அனுபவ அறிவால் தடைகளை உடைத்தெறியும் மாதமிது..

ராசியான எண்கள்:

ஜூன் 20, 21, 22, 28, 29, 30, ஜூலை 9, 10, 11, 12.
சந்திராஷ்டம தினங்கள்:

ஜூலை 3, 4, 5 ந் தேதி மாலை 4.30 மணி வரை அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்.
பரிகாரம்:

மதுரைக்கு அருகிலுள்ள திருமோகூர் சக்கரத்தாழ்வாரை தரிசியுங்கள். அன்ன தானம் செய்யுங்கள்.

You might also like