You are on page 1of 24

அறிவியல் மற்றும்

த�ொழில்நுட்ப மின்னிதழ்

ஜுன் 2018

#MobileBuyingGuide
எந்த பட்ஜெட்டில்,
எந்த ம�ொபைல் பெஸ்ட்?
#BuyingGuide
ச.அ.ராஜ்குமார்

பட்ஜெட் ₹ 10,000
ரெட்மி ந�ோட் 5 இன்ஃபினிக்ஸ் ஹாட் S3 லென�ோவா K8 ப்ளஸ்

5.99 இன்ச் டிஸ்ப்ளே 5.65 இன்ச் 18:9 டிஸ்ப்ளே 5.20 இன்ச் டிஸ்ப்ளே
2GHz ஆக்டாக�ோர் Qualcomm 1.4GHz Qualcomm 2.5GHz ஆக்டா-க�ோர்
Snapdragon 625 பிராஸசர் Snapdragon 430 MediaTek MTK Helio P25
3 GB ரேம் மற்றும் ஆக்டா-க�ோர் பிராஸசர் பிராஸசர்
32 GB இன்டர்னல் மெமரி 3 GB ரேம் மற்றும் 32 GB 3 GB ரேம் மற்றும் 32 GB
12MP பின்புற கேமரா மற்றும் இன்டர்னல் மெமரி இன்டர்னல் மெமரி
5MP முன்புற கேமரா 13 MP பின்புற கேமரா மற்றும் 12MP பின்புற கேமரா மற்றும்
4000 mAh பேட்டரி 20 MP முன்புற கேமரா 5MP முன்புற கேமரா
with Flash 4000 mAh பேட்டரி
ஆண்ட்ராய்டு ந�ௌகட் OS.
4000 mAh பேட்டரி ஆண்ட்ராய்டு ந�ௌகட் OS.
ப்ளஸ்:
ஆண்ட்ராய்டு ஓரிய�ோ OS.
பேட்டரி திறன், ப்ளஸ்:
தரமான கேமரா ப்ளஸ்: நல்ல பேட்டரி திறன்
18:9 டிஸ்ப்ளே ம�ொபைல் பெர்ஃபார்மன்ஸ்
மைனஸ்:
20 MP திறன்கொண்ட முன் ஸ்டாக் ஆண்ட்ராய்டு
எளிதில் கிடைப்பதில்லை
கேமரா. பேட்டரிதிறன்
ஹைபிரிட் சிம் ஸ்லாட். மைனஸ்:
மைனஸ்: டிஸ்ப்ளே
விலை: ₹ 9,999 சர்வீஸ் சென்டர்கள் குறைவு சுமாரான கேமரா
விலை: ₹ 8,999 விலை: ₹ 9,999

002 / டெக் தமிழா / ஜூன் 2018 www.vikatan.com


எந்த பட்ஜெட்டில்,
எந்த ம�ொபைல் பெஸ்ட்?
#BuyingGuide

பட்ஜெட் ₹ 20,000
ரெட்மி ந�ோட் 5 ப்ரோ Huawvei P20 lite சாம்சங் கேலக்ஸி J6

5.99 இன்ச் டிஸ்ப்ளே 5.84 இன்ச் டிஸ்ப்ளே 5.6 இன்ச் டிஸ்ப்ளே


1.8GHz ஆக்டாக�ோர் பிராஸசர் HiSilicon Kirin 659 1.6GHz ஆக்டா-க�ோர் பிராஸசர்
4/6 GB ரேம் மற்றும் 64 GB ஆக்டாக�ோர் பிராஸசர் 2 GB ரேம் மற்றும் 32 GB
இன்டர்னல் மெமரி 4 GB ரேம் மற்றும் 64 GB இன்டர்னல் மெமரி
12+5 MP பின்புற டூயல் இன்டர்னல் மெமரி 13MP பின்புற கேமரா மற்றும்
கேமரா மற்றும் 20MP முன்புற 16+2 MP பின்புற கேமரா 8MP முன்புற கேமரா
கேமரா, 4000 mAh பேட்டரி மற்றும் 24 MP முன்புற கேமரா 3000 mAh பேட்டரி
ஆண்ட்ராய்டு ந�ௌகட் OS. 3000 mAh பேட்டரி ஆண்ட்ராய்டு ஓரிய�ோ OS.
ப்ளஸ்: சரியான விலை 18:9 ஆண்ட்ராய்டு ஓரிய�ோ OS. ப்ளஸ்:
டிஸ்ப்ளே டூயல் கேமரா ப்ளஸ்: சிறந்த டிஸ்ப்ளே
மைனஸ்: சிறந்த கேமரா நேர்த்தியான டிசைன்
எளிதில் கிடைப்பதில்லை. 19:9 Full View Display
மைனஸ்:
ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இல்லை பில்ட் குவாலிட்டி
Type-C வசதி இல்லாதது.
USB டைப் C ப�ோர்ட் இல்லை.
மைனஸ்: சுமாரான கேமராக்கள்
ம�ொக்கையான ஃபேஸ் அன்லாக்
பேட்டரி திறன்
விலை: ம�ொபைல் பெர்ஃபாமன்ஸ் விலை: ₹13,990
4 GB / 32 GB மாடல்: ₹ 14,999
6 GB / 64 GB மாடல்: ₹ 16,999 விலை: ₹19,999

www.vikatan.com ஜூன் 2018 / டெக் தமிழா / 003


எந்த பட்ஜெட்டில்,
எந்த ம�ொபைல் பெஸ்ட்?
#BuyingGuide

பட்ஜெட் ₹ 20,000+

OnePlus 6
6.28 இன்ச் டிஸ்ப்ளே
2.8GHz ஆக்டாக�ோர் பிராஸசர்
8 GB ரேம் மற்றும்
128 GB இன்டர்னல் மெமரி
16MP பின்புற கேமரா மற்றும்
16MP முன்புற கேமரா
3300 mAh பேட்டரி திறன்
ஆண்ட்ராய்டு ஓரிய�ோ OS.

ப்ளஸ்:
அசத்தலான பெர்பார்ஃமன்ஸ்
ப்ரீமியம் ம�ொபைலுக்கான டிசைன்
டேஷ் சார்ஜிங்

மைனஸ்:
வயர்லஸ் சார்ஜிங் இல்லை
கேமராக்கள் இன்னும்
சிறப்பாக இருந்திருக்க வேண்டும்.

விலை:
6 GB ரேம் / 64 GB ரேம்: ₹ 34,999
8 GB ரேம் / 128 GB ரேம்: ₹ 39,999

004 / டெக் தமிழா / ஜூன் 2018 www.vikatan.com


எந்த பட்ஜெட்டில்,
எந்த ம�ொபைல் பெஸ்ட்?
#BuyingGuide

Huawvei P20 Pro


பட்ஜெட் ₹ 20,000+
6.1 இன்ச் டிஸ்ப்ளே
2.4GHz Hisilicon Kirin 970ஆக்டோக�ோர் பிராஸசர்
6 GB ரேம் மற்றும் 128 GB இன்டர்னல் மெமரி
40+20+8 MP திறன்கொண்ட மூன்று ரியர் கேமராக்கள்
24 MP முன்புற கேமரா, 4000 mAh பேட்டரி
ஆண்ட்ராய்டு 8.1 OS
ப்ளஸ்: ஸ்டைலிஷ்ஷான டிசைன் / சிறந்த கேமரா செட்டப்
சிறந்த பேட்டரி
மைனஸ்: விலை க�ொஞ்சம் அதிகம்
வயர்லஸ் சார்ஜிங் வசதியில்லை

விலை:₹ 64,999

சாம்சங் கேலக்ஸி S9
5.80 இன்ச் டிஸ்ப்ளே
1.7GHz ஆக்டாக�ோர் பிராஸசர்
4 GB ரேம் மற்றும் 64 GB இன்டர்னல் மெமரி
12 MP பின்புற கேமரா மற்றும்
8 MP முன்புற கேமரா, 3000 mAh பேட்டரி
ஆண்ட்ராய்டு 8.0
ப்ளஸ்:
சிறந்த டிசைன் / துல்லியமான கேமராக்கள்
ம�ொபைல் பெர்பார்ஃமன்ஸ் / சிறந்த பேட்டரி திறன்
மைனஸ்: ஆவரேஜான பேட்டரி பெர்பார்ஃமன்ஸ்
விலை:
64 GB மெமரி மாடல்: ₹57,900
128 GB மெமரி மாடல்: ₹61,900
256 GB மெமரி மாடல்: ₹65,900
www.vikatan.com ஜூன் 2018 / டெக் தமிழா / 005
மு.ராஜேஷ்

`இன்ஃபினிட்டி' வாரில் ஜெயிக்குமா


ஆண்ட்ராய்டின் ஆதிக்கம்
த�ொடங்கியதிலிருந்தே ம�ொபைல்
சாம்சங்?
சந்தை சாம்சங்கின் கையில்தான்.
இந்தியா மட்டுமின்றி உலகம்
கேலக்ஸி J சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்
முழுவதுமே இது ப�ொருந்தும். மிட்ரேஞ்ஜ் செக்மென்டில் சாம்சங்கின் பெயரைக் காப்பாற்றுவது
ஆனால், சமீபகாலமாக சாம்சங்கிற்கு கேலக்ஸி J சீரிஸ்தான். ஹைஎண்ட் ஸ்மார்ட்போன்களில்
கடும் ப�ோட்டியாளராக இ ரு க் கு ம் வ ச தி யை ம ற்ற செ க ்மெ ன் டி ல் இ ரு க் கு ம்
உருவெடுத்திருக்கிறது ஷிய�ோமி. ம�ொபைல்களுக்கும் க�ொண்டுவர நினைத்த சாம்சங் முதலில்
தற்போதைய நிலவரத்தின்படி டிஸ்ப்ளேவில்தான் மாற்றத்தைக் க�ொண்டு வந்தது. சமீபத்தில்
இந்தியாவில் விற்பனையில் முதலிடம் வெளியான கேலக்ஸி J சீரிஸ் மற்றும் A சீரிஸ் ஸ்மார்
பிடித்திருப்பது ஷிய�ோமிதான். நீண்ட ட்போன்களில் sAMOLED (super amoled) டிஸ்ப்ளேவைப்
காலமாக கைப்பற்றி வைத்திருந்த பயன்படுத்தியது. அவற்றில் இருந்த இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேவை
முதலிடத்தைக் கடந்த வருடம் முதல் தற்பொழுது அறிமுகப்படுத்தியிருக்கும் 4 ஸ்மார்ட்போன்களிலும்
க�ொடுத்திருக்கிறது சாம்சங்.
ஷிய�ோமி கைப்பற்றியி ருக்கிறது.
ஹைஎண்ட் ஸ்மார்ட்போன்களில் Galaxy J6
வசதிகளை உடனுக்குடன் அப்டேட்
5.6 இன்ச் sAMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேவைக்
செய்யும் சாம்சங், மிட்ரேஞ்ஜ் மற்றும்
க � ொண் டி ரு க் கு ம் இ ந ்த ஸ ்மார்ட்போ னி ல் பி ன் பு ற ம ாக
பட்ஜெட் ம�ொபைல்களை ஃபிங்கர்பிரின்ட் சென்சார் க�ொடுக்கப்பட்டுள்ளது. 13 MP பின்புற
கவனிக்காமல் விட்டு விடும். அந்த கேமராவும் 8 MP முன்புற கேமராவும் உண்டு. ஒளி குறைவான
இடத்தைதான் மற்ற சீன இடங்களில் செல்ஃபி எடுக்க உதவும் வகையில் முன்புறத்திலும்
நிறுவனங்கள் ஃபிளாஷ் உண்டு. ஃபேஸ் அன்லாக் வசதியும் இருக்கிறது.
ஆக்கிரமித்திருக்கின்றன. அதைச் Exynos7 சீரிஸ் பிராஸசர் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சற்று தாமதமாகவே புரிந்துக�ொண்ட 3000 mAhபேட்டரியைக் க�ொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில்
சாம்சங் தற்சமயம் அதில் கூடுதல் ஆண்ட்ராய்டு ஓரிய�ோ பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 3/32 GB
கவனம் செலுத்துகிறது. இதற்காக மற்றும் 4/64 GB என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும்
இதன் விலை,முறையே 13,990 மற்றும் 16,490 ரூபாய்.
ஹைஎண்ட் ஸ்மார்ட்போன்களில்
இருக்கக்கூடிய வசதிகளை பட்ஜெட்
ம�ொபைல்களிலும் தருவதற்கு முயற்சி
Galaxy J8
செய்கிறது. இந்நிலையில், ஒரே டூ ய ல் கே ம ர ா வு ம் , இ ன் ஃ பி னி ட் டி டி ஸ ்ப்ளே வு ம் இ த ன்
நேரத்தில் இன்ஃபினிட்டி சிறப்பம்சங்கள். 6 இன்ச் டிஸ்ப்ளேவைக் க�ொண்டிருக்கிறது இந்த
டிஸ்ப்ளேவுடன் கூட நான்கு புதிய ஸ்மார்ட்போன். 16 MP+5MP டூயல் பின்புற கேமராவும் 16 MP
முன்புற கேமராவும் இருக்கிறது. Snapdragon 450 பிராஸசர்
ஸ்மார்ட்போன்களை சமீபத்தில்
இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 4 GB ரேம் மற்றும் 64
அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங். இன்டர்னல் மெமரியைக் க�ொண்ட இதன் விலை 18,990 ரூபாய்.

006 / டெக் தமிழா / ஜூன் 2018 www.vikatan.com


Galaxy J6
`இன்ஃபினிட்டி' வாரில் ஜெயிக்குமா
சாம்சங்?

Galaxy J8
கேலக்ஸி
A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்
A சீ ரி ஸ் ம �ொபைல்க ள் கேலக் ஸி J 6 , J 8
ஸ்மார்ட்போன்களைப் ப�ோன்றே வசதிகளைக்
க�ொண்டிருந்தாலும், இவற்றிலிருக்கும் இருக்கும்
முக்கியமான வித்தியாசம், வடிவமைப்பு. முந்தைய
ஸ்மார்ட்போன்கள் இரண்டுமே பாலிகார்பனேட்டை
பயன்படுத்திக் கட்டமைக்கப்பட்டவை. ஆனால், இந்த
கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மெட்டலால்
கட்டமைக்கப்பட்டவை. எனவே, இதன் விலை சற்று
அதிகம். அதேப�ோல பார்ப்பதற்கு அழகாகவும்
த�ோற்றமளிக்கும்.
Galaxy A6
Galaxy A6
5.6 இன்ச் sAMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேவும்
16 MP பின்புற கேமராவும் 16 MP முன்புற கேமராவும்
இதில் இருக்கிறது. Exynos 7 சீரிஸ் பிராஸசர் மற்றும்
3000 mAhபேட்டரி இதில் இருக்கிறது. ஆண்ட்ராய்டு
ஓரிய�ோதான் OS. 3/32 GB மற்றும் 4/64 GB என
இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும் இதன் விலை
முறையே 21,990 மற்றும் 22,990 ரூபாய்.

Galaxy A6 +
Galaxy A6+
6 இ ன் ச் இ ன் ஃ பி னி ட் டி டி ஸ ்ப்ளே வைக்
க�ொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன். 16 MP+5MP
டூயல் பின்புற கேமராவும் 24 MP முன்புற கேமராவும்
இருக்கிறது. Snapdragon 450 பிராஸசர் இதில்
பயன்படுத்தப்பட்டிருக்கிறது 3500 mAh பேட்டரி
இருக்கிறது. இதன் விலை 25,990 ரூபாய். மிட்ரேஞ்ஜ்
ச ந ்தையைக் கு றி வை த் து ச ாம்ச ங்
அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த ஸ்மார்ட்போன்கள்
அது இழந்த இடத்தை மீண்டும் அடைய உதவுமா
என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.

www.vikatan.com ஜூன் 2018 / டெக் தமிழா / 007


மு.ராஜேஷ்

மாறுவேஷத்தில் களமிறங்கும்

ஓப்போ ...
கைக�ொடுக்குமா
ரியல்மீ?
இ ந் தி ய ம � ொ ப ை ல் ச ந்தை யி ன்
ஜெயிக்குமா Realme 1?
தற்போதைய ராஜா ஷிய�ோமிதான். கார�ோ,
பைக்கோ, ம�ொபைல�ோ எதுவாக இருந்தாலும்
ஷிய�ோமியின் பட்ஜெட் சீரிஸ் மாடல் பெயரான
இந்தியர்கள் பட்ஜெட் விலை ப�ொருள்களின்
ரெட்மியைப் ப�ோலவே உச்சரிப்பிலும் த�ோற்றத்திலும்
மீது ஒரு கண் வைத்திருப்பார்கள். அதைப்
இருக்க வேண்டும் என்பதற்காகவே Realme என்ற
புரிந்துக�ொண்ட ஷிய�ோமி தற்போது இந்திய
பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது ஓப்போ. ரியல்மீ
சந்தையில் சாம்சங்கையே அசைத்துப்
1 என்று பெயரிடப்பட்டுள்ள இதன் வெளியீட்டிற்கான
பார்க்கிறது. சாம்சங் பரவாயில்லை சமாளித்து
டீசரை அவ்வப்போது வெளியிட்டு வந்ததால் இந்த
விடும்; அப்படியென்றால் தாங்கள் என்ன
ம�ொபைலுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
செய்வது என ய�ோசித்த மற்ற ம�ொபைல்
அனைவரும் எதிர்பார்த்ததுப�ோலவே இந்த ம�ொபைல்
நிறுவனங்கள் பலத்தை அதிகரிக்க புதிய
வடிவமைக்கப்பட்டிருக்கிறதா ?
வழிகளைக் கண்டுபிடித்திருக்கின்றன.
அதில் ஒன்றுதான் ஆன்லைன் வர்த்தக 6.0 இன்ச் 18:9 ratio டிஸ்ப்ளே இதில் இருக்கிறது.
நிறுவனங்கள�ோடு கைக�ோப்பது. கடந்த பட்ஜெட் ம�ொபைல்கள் என்றால் அதில் டிசைனையும்,
ம ா த ம்தா ன் அ ஸ ு ஸ் நி று வ ன ம் த�ோற்றத்தையும் பெரிய அளவில் எதிர்பார்க்க
ஃபிளிப்கார்ட்டுடன் இணைந்து பு தி ய முடியாது. ஆனால், இந்த ஸ்மார்ட்போன் பார்ப்பதற்கு
ம � ொ ப ை லை அ றி மு க ப ்ப டு த் தி ய து . அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறம் glossy
அ த ற ்க டு த் து இ ந்த வ ரி சை யி ல் diamond cutting reflection effect
இணைந்திருப்பது ஓப்போ. ரியல்மீ என்ற க�ொடுக்கப்பட்டுள்ளதால் த�ோற்றம் சிறப்பாக
பெயரில் மரு வைத்து மாறுவேஷத்தில் இருக்கிறது. ஹைபிரிட் சிம் ஸ்லாட் இதில் கிடையாது.
ம � ொ ப ை ல்கள ை த ய ா ரி க்க ஒரே நேரத்தில் இரண்டு சிம் மற்றும் மெமரி கார்டை
மு டி வெ டு த் தி ரு க் கி ற து அ ந் நி று வ ன ம் . ப ய ன்ப டு த் தி க் க�ொள்ளல ா ம் . இ ப ்பொ ழு து
இதற்காக அமேசானுடன் கைக�ோத்துள்ளது. பெரும்பாலான ம�ொபைல்கள் டூயல் கேமராவ�ோடு

008 / டெக் தமிழா / ஜூன் 2018 www.vikatan.com


வெளியாகிக்கொண்டிருக்க இதில் 13 MP குறைகள் என்னவென்று பார்த்தால், இதில்
பின்புற கேமராவும், 8 MP முன்புற கேமராவும்தான் ஃ பி ங ்கர் பி ரி ன் ட் ஸ ்கேனர் கி டை ய ா து ;
க�ொடுக்கப்பட்டிருக்கிறது. ம�ொபைலை பேட்டர்ன் இல்லாமல் அன்லாக்
ஓப்போ கேமராவுக்கு பேர் ப�ோனது என்பதால் செய்வதற்கான ஒரே வழி ஃபேஸ் அன்லாக்
கேமராவில் பெரிய அளவில் குறைகளைக் மட்டும்தான். வெளிச்சம் இருக்கும் இடங்களில்
காணமுடியாது. 3410 mAh பேட்டரி இதில் இது சிறப்பாகவே செயல்படும். ஆனால், ஒளி
இருக்கிறது. இந்த ம�ொபைலில் முக்கியமாகக் குறைவான இடங்களில் பயன்படுத்துவதற்கு
குறிப்பிட வேண்டிய அம்சம் இதன் பிராஸசரும் சற்று சிரமமாக இருக்கும். USB Type-C
அத�ோடு இணைந்து செயல்படும் AI-யும்தான். ப�ோர்ட்டும் இதில் இல்லை. ஃபிங்கர்பிரின்ட்
இந்த ம�ொபைலில் இருப்பது மீடியாடெக்கின் ஸ்கேனர் இல்லையென்றால் கூட பரவாயில்லை
Helio P60 ப்ராஸசர். இது மிகவும் சக்திவாய்ந்த என்பவர்கள் இதை வாங்கலாம். இதன�ோடு
ஒ ன் று எ ன்ப த ா ல் , இ த ன் மூ லம ா க ஒப்பிட்டுப் பார்த்தால் ரெட்மி ந�ோட் 5-இல்
மல்டிடாஸ்க்குகளை சிரமமின்றி மேற்கொள்ளலாம். அதிக வசதிகள் இருக்கின்றன. அதன�ோடு
கேமரா, ஃபேஸ் அன்லாக், பேட்டரி என ப�ோட்டி ப�ோடும் வகையில் இந்த ம�ொபைல்
ம�ொபைலில் பெரும்பாலான வேலைகளுக்கு இல்லை.
இதில் AI- பயன்படுகிறது. AI- மூலமாக விலை:
பேட்டரியின் செயல்திறனை அதிகரிக்க முடியும்
3 GB RAM / 32 GB மாடல்: ₹ 8,990
என்றும், ப�ோட்டோக்களை துல்லியமாக எடுக்க
முடியும் என்றும் ஓப்போ தெரிவித்திருக்கிறது. 4 GB RAM / 64 GB மாடல்: ₹ 10,990
ஓப்போவின் கஸ்டமைஸ்டு இயங்குதளமான
6 GB RAM / 128 GB மாடல்: ₹ 13,990
ColorOS இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
Android 8.1 இயங்குதளத்தில் இந்த ம�ொபைல்
இயங்குகிறது.

www.vikatan.com ஜூன் 2018 / டெக் தமிழா / 009


கார்க்கிபவா

வசதிகள்:
5.99 இன்ச் 18:9
2160 × 1080 டிஸ்ப்ளே

12 MP+5 MP டூயல்
பின்புற கேமரா மற்றும்
20 MP முன்புற கேமரா

1.8 GHz ஆக்டாக�ோர்


ஸ்னாப்டிராகன்
636 பிராஸசர்

4/6 GB ரேம்

4000 mAh பேட்டரி

ரெட்மி ந�ோட் 5 Pro...


வெயிட் பண்ணி வாங்குமளவுக்கு
வ�ொர்த்தா?
கா லா படத்துக்கு முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் கூட நிறைய பேருக்கு கிடைத்துவிடும்.
ஆனால், ஃப்ளிப்கார்ட்டில் ரெட்மி ந�ோட் 5 ப்ரோ அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. வாங்க ஆள்
இருந்தும் அந்த ம�ொபைல் கிடைக்காமல் ப�ோவதால் அவர்களுக்கு என்ன லாபம்? ஏன் இந்த
டிமாண்ட் என்பதற்கு ரெட்மியும் த�ொடர்ந்து பதில் ச�ொல்லிக்கொண்டே இருக்கிறது. நாமும்
ஃப்ளிப்கார்ட்டிலும் ரெட்மி தளத்திலும் முயற்சி செய்துவிட்டு கடைசியாக சென்னை, எக்ஸ்பிரஸ்
அவென்யுவில் இருக்கும் ஷிய�ோமி ஆஃப்லைன் ஸ்டோருக்கு சென்றோம். “6 GB வேரியன்ட்
மட்டும் இருக்கு. அதுவும் 2 பீஸ்தான்.” எனச் சுடச்சுட விற்றுக்கொண்டிருந்தார்கள். ` 16,999 தந்து
ஒன்று வாங்கிக்கொண்டோம். நிஜமாகவே இப்படி காத்திருந்து வாங்குமளவுக்கு வ�ொர்த்தா ம�ொபைல்?

010 / டெக் தமிழா / ஜூன் 2018 www.vikatan.com


டிஸ்ப்ளே:
இந்த ம�ொபைலின் முக்கியமான அம்சங்களில் ஒன்று இந்த மற்ற வசதிகள்:
டிஸ்ப்ளே. 18:9 வீடிய�ோ சாதாரண வீடீய�ோக்களைவிட
அட்டகாசமான அனுபவத்தைத் தருகிறது. ம�ொபைல்
ஃபேஸ் அன்லாக்
நீளமாக இருந்தாலும் கைக்கு அடக்கமான அகலத்தில் இருக்கிறது. ஆனால்,
இருப்பதற்கு இந்த டிஸ்ப்ளேவும் ஒரு காரணம். வடிவேலு கணக்காக
“முறைடா...நல்லா
கேமரா: முறை” எனப் ப�ோராட
டூயல் கேமரா, இந்த விலையில் என்பது நிச்சயம் வேண்டியிருக்கிறது.
ஆச்சர்யமான விஷயம்தான். Depth effect முன் மற்றும் அப்போதும் அன்லாக்
பின்புற கேமரா இரண்டிலுமே இருப்பது நல்ல விஷயம். ஆகாமல் ஏமாற்றுகிறது.
அதன் தரமும் நன்றாகவே இருக்கிறது. ஆனால், ப�ொதுவாக இப்படிய�ொரு வசதி
கேமரா குவாலிட்டி சுமார்தான். இருக்கும் நிறத்தை
இருக்கிறது என்பதை
அப்படியே காட்டவில்லை. அழகாகக் காட்ட வேண்டுமென
மறந்துவிடுவது ந�ோட்
புகைப்படங்களில் ஒரு செயற்கைத்தன்மை ஒட்டிக்கொள்வது
5 ப்ரோ யூஸரின்
நன்றாக தெரிகிறது.
கிட்னிக்கு நல்லது.
பிராஸசர்:
ரெட்மி ம�ொபைல்களில் முதல் முறையாக இந்த பிராஸசர்
பயன்படுத்தப்படுகிறது. ம�ொபைலின் வேகத்தில் எந்தக்
குறையுமில்லை. ப�ோலவே, சூடாகிறது எனக் காலம்
ப்ளஸ்:
காலமாக ச�ொல்லப்படும் ரெட்மியின் ஜெனிட்டிக் பிரச்னையும்
இந்த மாடலில் இல்லை.  18:9 டிஸ்ப்ளே
 டூயல் கேமரா
ரேம்:  விலை
6 GB ரேம் என்பதால் க�ொஞ்சம்கூட ஹேங் ஆகாமல்
இருக்குமென எதிர்பார்த்தோம். ஆனால், “ஹேங் ஆவது
ஆண்ட்ராய்டின் பிறப்புரிமை” ப�ோல. எப்போதாவது ஹேங் `ஓகே’ தான்:
ஆகிறது. ஒரு வருடம் ப�ோனால் அந்த எண்ணிக்கை
அதிகரிக்கலாம் என இப்போதே தெரிகிறது. எனவே 4 GB
 ரேம்
ரேம் ம�ொபைலே வாங்கலாம். 6 GB-க்கும் இதற்கும்  பேட்டரி
வேகத்தில் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.  டிசைன்

4000 mAh பேட்டரி:


ரெட்மிக்கு பேட்டரி சச்சின் ப�ோல. ஆனால், இந்த மாடலில்
மைனஸ்:
மட்டும் அது சற்றே சறுக்கியிருக்கிறது. வைஃபை, ப்ளூடூத்,
என எதை ஆன் செய்தாலும் ரெட்மி ம�ொபைலில் 24 மணி  Type C ப�ோர்ட்
நேரம் சார்ஜ் நிற்கும். ஆனால், இதில் அது நடக்கவில்லை. இல்லாதது
Face unlock ப�ோன்ற வசதிகள் இருப்பதால�ோ என்னவ�ோ,  ம�ொக்கையான
15 - 18 மணி நேரத்தில் சார்ஜரைத் தேடுகிறது ந�ோட் 5 ஃபேஸ் அன்லாக்
ப்ரோ. குயிக் சார்ஜும் இல்லையென்பதால், 1 மணி
 ப�ோன்
நேரமாவது சார்ஜ் ப�ோட வேண்டும். அதுவும் ரெட்மி தந்த
கிடைப்பதில்
சார்ஜ் கேபிள் கிடைக்காமல் வேறு சார்ஜர் என்றால் 4 மணி
இருக்கும் சிரமம்
நேரம் கூட சார்ஜ் ஆகிறது.

www.vikatan.com ஜூன் 2018 / டெக் தமிழா / 011


மு.ராஜேஷ்

வருகிறது "இ

AI
னிமேல் AI-தான் எல்லாமே" எனக்
கடந்த ஆண்டே அழுத்தம் திருத்தமாக ச�ொன்ன
கூகுள், இந்த ஆண்டு அதன் அடுத்த கட்டத்தை
ந�ோக்கி நகர்ந்திருக்கிறது. சமீபத்தில் நடந்துமுடிந்த
கூகுள் I/O டெவலப்பர் மாநாட்டில் வெளிவந்த
அறிவிப்புகள் அனைத்திற்கும் அச்சாரமாக
இருந்தது AI-தான். இந்த ஆண்டு I/O-வில்
நடந்தவை என்ன? ஒரு ரவுண்டப்.

கூகுள் அசிஸ்டன்ட்
இ ந்த ம ா ந ா ட் டி ன் ஹீ ர�ோவே கூ கு ள்
அசிஸ்டன்ட்தான். சுந்தர்பிச்சை இதுகுறித்து

ஏகாதிபத்தியம்!
பேசத்தொடங்கும்போது, "இதுதான் ஏற்கெனவே
இருக்குல்ல?" என்றுதான் பலரும் நினைத்தனர்.
இறுதியில் அந்த எண்ணத்தை அப்படியே
மாற்றிவிட்டது கூகுள் அசிஸ்டன்ட். தற்பொழுது
இருக்கும் மற்ற வாய்ஸ் அசிஸ்டன்ட்களை
#GoogleIO2018 வி ட வு ம் , பல மடங் கு இ த னை
மேம்படுத்தியிருக்கிறது கூகுள். சக மனிதரைப்
ப�ோலவே உரையாடும் திறன் க�ொண்டது இது. தற்பொழுது
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இருக்கும் கூகுள் அசிஸ்டன்டை
பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு முறையும் "ஓகே கூகுள் " என்று
ச�ொல்ல வேண்டியிருக்கும். ஆனால், இனி அதற்கு அவசியமிருக்காது
ஒரு முறை அழைத்தாலே நம்முடன் உரையாடலைத் த�ொடங்கிவிடும்.
கூடவே, மனிதர்கள் பேசிக்கொள்ளும்போது பயன்படுத்தும்
நுணுக்கங்களையும் இது பயன்படுத்துகிறது.
இது எந்தளவுக்கு முன்னேறியிருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக
டெம�ோவும் காட்டினார் சுந்தர்பிச்சை. முடி வெட்டுவதற்காக சலூனில்
அப்பாயின்மென்ட் வாங்கவேண்டும் என சுந்தர் இதற்கு அசைன்மென்ட்
க�ொடுக்கவே, உடனே சலூனுக்கு கால் செய்தது அசிஸ்டன்ட்.
அப்படியே நிஜ மனிதரைப் ப�ோல உரையாடவும் செய்தது. வெறும்
எந்திரத்தனமான உரையாடலாக மட்டுமில்லாமல், மனிதர்களின்
சின்ன சின்ன நுணுக்கங்களையும் தன் பேச்சில் காட்டியது.
உரையாடலின் இடையே 'ஹ்ம்ம்' ப�ோடுவது, ஹியூமராக பேசுவது
என சின்ன சின்ன விஷயங்களிலும் ஸ்கோர் செய்தது கூகுள்
அசிஸ்டன்ட். கூகுள் ட்யூப்ளெக்ஸ் எனப்படும் இந்தத் த�ொழில்நுட்பம்
AI-ய�ோடு இணைந்து செயல்படும். இதற்காக Deep learning, Natu-
r al l an g u ag e p r o c essing மற்றும் text-to-speech ஆகி ய
த�ொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்திருக்கிறது கூகுள்.

012 / டெக் தமிழா / ஜூன் 2018 www.vikatan.com


கூகுள் ப�ோட்டோஸ்
ஸ்மார்ட்போன்களில் எடுக்கும் ப�ோட்டோக்களை AI-மூலமாக மேம்படுத்தும்
வசதியை ஏற்கெனவே கூகுள் க�ொடுத்திருந்தது. அதை இன்னும் சற்று
மேம்படுத்தியிருக்கிறது. இதன் மூலமாக ஒரு ப�ோட்டோவை AI ஆராய்ந்து
பார்க்கும்; பின்னர் அதில் இருக்கும் குறைகளைக் கண்டுபிடித்து அதை
எப்படி மேம்படுத்தலாம் என்பதைக் தெரிவிக்கும். இதன் மூலமாக ஒரே
கிளிக்கில் ஒரு புகைப்படம் எடிட் செய்யப்பட்டுவிடும். அது எப்படிச்
செயல்படுகிறது என்பதைக் காண்பிக்க சுந்தர்பிச்சை காட்டியது ஒரு கறுப்பு
வெள்ளை ப�ோட்டோ. அதை ம�ொபைல் கேமராவில் எடுத்து கலராக மாற்ற
வேண்டும் என்றால் அது கடினமான காரியம். ஆனால் AI-க்கு மிகவும் அது
எளிதான விஷயம். ப�ோட்டோவை ஒரே ந�ொடியில் கலராக மாற்றிக்
காண்பிக்கிறது. இதில் இருக்கும் AI, ப�ோட்டோவில் இருப்பவர்களை
அடையாளம் கண்டுக�ொண்டு அவர்களுக்கு இந்த ப�ோட்டோவை ஷேர்
செய்யலாம் என்று பரிந்துரையும் செய்யும்; விரும்பினால் ஒரே கிளிக்கில்
ஷேர் செய்யலாம்.

www.vikatan.com ஜூன் 2018 / டெக் தமிழா / 013


Healthcare
மருத்துவத் துறையில் AI மிகப்பெரிய மாற்றத்தைக் க�ொண்டுவரும் என
நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் சுந்தர் பிச்சை . இதுத�ொடர்பாக இந்தியாவில்
இரண்டு தனியார் கண் மருத்துவமனைகளுடன் இணைந்திருக்கிறது கூகுள்.
ரெட்டினாவை AI ஆராய்வதன் மூலமாக எதிர்காலத்தில் வரக்கூடிய
குறைபாடுகளை அது கணித்துவிடும் என்கிறார். இந்த ரெட்டினாவை
ஆராய்வதன் மூலமாக எதிர்காலத்தில் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளையும்
கணித்துவிட முடியுமாம். ஒருவரின் உடலில் இருந்து பெறப்படும் டேட்டாவை
வைத்து மருத்துவர்கள் ஆராயும் வேகத்தை விடவும் பலமடங்கு வேகத்தில்
அவற்றை ஆராய முடிவதால் AI-யால் சிறப்பாக செயல்பட முடிகிறது.

ஜிமெயில்
கடந்த சில நாள்களுக்கு முன்னர்தான் ஜிமெயிலுக்குப் புதிய த�ோற்றத்தையும்,புதிய
வசதிகளையும் க�ொண்டு வந்திருந்து கூகுள். விரைவில் இன்னும் சில வசதிகள்
அத்துடன் இணையவிருக்கின்றன. ஒருவர் மெயில் கம்போஸ் செய்யும்போது,
வார்த்தைகளைப் பரிந்துரைப்பதற்காக Smart Compose என்ற வசதியை
அறிவித்திருக்கிறது கூகுள். இதுவும் AI ஜாலம்தான்.

கூகுள் மேப்ஸ்
கூகுள் மேப்பை பயன்படுத்தும் சிலருக்கு அது வழிகாட்டும் திசையைப்
புரிந்துக�ொள்வதற்குச் சிரமமாக இருக்கும். ஓர் இடத்துக்கு மேப் காட்டும்
வழியில் செல்லும்போது எந்தப் பக்கமாக திரும்ப வேண்டும் என்று தெரியாமல்
குழம்பி நிற்பார்கள். ஆனால், இனி அதற்கு அவசியம் இருக்காது. கேமராவை
தெருவுக்கு நேராகக் காட்டினால் ப�ோதும் ஆக்மென்டட் ரியாலிட்டி முறையில்
வழிகளைக் காட்டும். இது தவிர 'For You' என்ற வசதி மூலமாக, அந்த
இடத்திற்கு அருகே இருக்கும் சிறந்த உணவகங்களையும் மேப் காட்டும்.

தானியங்கி கார்
கூ கு ளி ன் த ா னி ய ங் கி க ா ர் பி ரி வு த ா ன் W a y m o . இ து ஏ ற ்கெனவே
அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றுதான். ஆனால், தற்பொழுது இதைப் பற்றி கூகுள்
பேச காரணம் இருக்கிறது. 2030-ம் ஆண்டில் உலகில் இருக்கக்கூடிய
தானியங்கி கார்களில் Waymo-வின் பங்கு 60 சதவிகிதமாக இருக்கும் என்று
கணித்திருக்கிறார்கள். சமீபகாலமாக தானியங்கி கார்கள் ஏற்படுத்திய
விபத்துகளால் அதன் பாதுகாப்பு பற்றிய விவாதங்கள் எழுந்த வண்ணம்
இருந்தன. இந்நிலையில் தான் AI-யின் சிறப்புகள் பற்றியும் அது எப்படிச்
செயல்படுகிறது என்பதைப் பற்றியும் மாநாட்டில் ளிவாக விளக்கியது கூகுள்.

ஆண்ட்ராய்டு P
ஆண்ட்ராய்டு P-யின் பீட்டா வெர்ஷன் வந்துவிட்டது.கடந்த பத்து
வருடங்களில், மக்களின் கவனத்தை கணினியில் இருந்து ம�ொபைலுக்கு
திருப்பியதில் ஆண்ட்ராய்டுக்கு முக்கியப்பங்கு இருப்பதாக தெரிவித்தது கூகுள்.
புதிய ஆண்ட்ராய்டு P ஆனது, AI-ய�ோடு இணைந்து செயல்படும் வகையில்
வடிவமைக்கப்பட்டிக்கிறது. ஆண்ட்ராய்டு P-யில் முன் எப்பொழுதையும்விட
UI-ல் பல்வேறு மாற்றங்கள் க�ொண்டுவரப்பட்டுள்ளன. முக்கியமாக ஹ�ோம்
பட்டன் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

014 / டெக் தமிழா / ஜூன் 2018 www.vikatan.com


மு.ராஜேஷ்

மின்னல் ஒ ரு ம�ொபைல் வாங்க விரும்பினால் அதற்கு எவ்வளவு


நேரம் ஆகும்? நேரில் ப�ோய் வாங்கினால் சில மணி நேரம்;

வேகத்தில் ஆன்லைனில் என்றால் சில நாள்கள். ஆனால், ரெட்மிக்கு

ரெட்மி
இதெல்லாம் ப�ொருந்தாது. ”அட ஆப்பிள் கூட இவ்வளவு
அலப்பறை பண்றதில்ல பாஸ்” என்று அலுத்துக்கொள்கிறார்கள்
ரெட்மி ப�ோனை வாங்க முடியாதவர்கள். இதற்கு ஒரு முடிவு
கட்டுவதற்காக கடந்த வருடத்தில் ஆஃப்லைன் ஸ்டோர்களை
திறந்தது ஷிய�ோமி. ஆனால், அப்போதும் பிரச்னை

ம�ொபைல் தீரவில்லை.
அடுத்ததாக ப்ரீஆர்டர் என்ற ஆப்ஷன். முதலிலேயே

காலியாகக் ம�ொபைலுக்கான பணத்தைக் செலுத்திவிட்டால் இரண்டு


மூன்று வாரத்தில் ம�ொபைலை டெலிவரி செய்துவிடுவ�ோம்

காரணம்
என்பார்கள். அப்படியாவது புக் செய்யலாம் என்று பார்த்தால்
12.01-க்கே அவுட் ஆப் ஸ்டாக் ஆகிவிடும். இவ்வளவு
விற்பனையாகும் ம�ொபைல்களை ஷிய�ோமி க�ொஞ்சம்

என்ன? கூடுதலாகத் தயாரித்தால்தான் என்னவாம்?


இந்தக் கேள்வியை ஷிய�ோமி நிறுவனத்தின் இந்தியத்
தலைவரான மனுகுமார் ஜெயினிடமே கேட்டோம். அதற்கு
அவர் ச�ொன்ன பதில், "ஷிய�ோமியின் பிசினஸ் மாடலே
அதுதான்". ஆம், இதுதான் காரணம். தயாரிக்கும்
ஸ்மா ர ்ட்போன்கள ை ஷி ய�ோ மி எ ப ்போ து ம் ஸ்டா க்
வைப்பதில்லை. ஒவ்வொரு வாரமும் தயாரிக்கப்படும்
ப�ோன்கள் அடுத்த வாரமே விற்பனை செய்யப்பட்டு
விடுகின்றன. விற்பனையில் டிஸ்ட்ரிப்யூட்டர்கள் கிடையாது
என்பதால் ம�ொபைலின் விலையையும் குறைக்க முடிகிறது.
”இந்தியாவில் மட்டுமல்ல மற்ற இடங்களிலும் இதைத்தான்
கடைப்பிடிக்கிற�ோம்” என்கிறார் ஷிய�ோமியின் நிறுவனர் லீ
ஜூன் (Lei Jun).
" அ தி க ப ்ப டி ய ா ன தேவை இ ரு க் கு மென்றா ல்
அதைச்சமாளிக்க முன்கூட்டியே அதிக அளவில் ப�ோன்களை
தயாரித்து வைக்கலாமே என்று பலர் எங்களிடம் கேட்கிறார்கள்.
சரிதான். ஆனால், அவை விற்காமல் ப�ோனால் அந்த
நஷ்டத்தை யார் ஏற்றுக்கொள்வார்கள்" என்கிறார் லீ. கடந்த
வருடம் வரை இந்தியாவில் இரண்டு ம�ொபைல் தயாரிப்பு
த�ொழிற்சாலைகள் ஷிய�ோமியின் கைவசம் இருந்த
நிலையில், கடந்த மாதம் அதை ஐந்தாக அதிகரித்திருக்கிறது.
எனவே, எதிர்காலத்தில் வேண்டுமானால் இந்தச் சிக்கல்கள்
சரியாகலாம்; இப்போதைக்கு வெயிட்டிங்தான் ஒரே வழி!

www.vikatan.com ஜூன் 2018 / டெக் தமிழா / 015


 ஞா.சுதாகர்

`உன் டேட்டா... உன் உரிமை'...


டெக் நிறுவனங்களுக்கு
ஐர�ோப்பிய யூனியன் வைத்த செக்!

016 / டெக் தமிழா / ஜூன் 2018 www.vikatan.com


ஃ பேஸ்புக், கூகுள், ட்விட்டர், வாட்ஸ்அப் 2 0 1 6 - ம் ஆ ண ்டே G D P R வி தி க ள ை
என இலவச சேவைகளாக மட்டுமே நாம் வெளியிட்டுவிட்டது ஐர�ோப்பிய ஒன்றியம்.
நினைத்துப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இ தை மு ழு வ து ம ா க அ மல்ப டு த்த
எல்லாவற்றிற்குமே, மறைமுகமாக ஒரு விலை நி று வ ன ங ்க ளு க் கு இ ர ண் டு ஆ ண் டு க ள்
உ ண் டு . அ து , ந ம் மு டை ய டே ட ்டா . அவகாசம் அளித்தது. அதன்படி, கடந்த மே 25
இ ந் நி று வ ன ங ்க ளி ன் இ ய க்க த் து க் கு ந ம் முதல் முழுவதுமாக அமலுக்கு வந்துள்ளது.
டேட்டாதான் எரிப�ொருள்; இந்நிறுவனங்களின் ஐர�ோப்பிய யூனியனில் வசிக்கும் சுமார் 510
வணிகத்துக்கு நம் டேட்டாதான் மூலப்பொருள். மி ல் லி ய ன் மக்க ளு க் கு ம் , அ வ ர ்க ளி ன்
கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா பிரச்னையில் இருந்து டேட்டாவைக் கையாளும் உலகின் அனைத்து
பேடிஎம் பிரச்னை வரைக்கும் இந்த டேட்டாதான் நிறுவனங்களுக்கும் இந்த விதிகள் ப�ொருந்தும்.
பஞ்சாயத்து. கூகுள், ஃபேஸ்புக் ப�ோன்ற பெருநிறுவனங்கள்
முதல் சின்னச் சின்ன ஸ்டார்ட்அப்கள் வரை
ஆ ன ா ல் , ந ம் மி ல் எ த்தனை பேர் ந ம்
எல்லா நிறுவனங்களுக்கும் இது ப�ொருந்தும்.
டேட்டாவைப் பற்றிக் கவலைப்படுகிற�ோம்?
அவற்றை எந்தெந்த நிறுவனங்கள், எப்படி  இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?
ப ய ன்ப டு த் து கி ன்றன எ ன்ப து கு றி த் து
தெரிந்துக�ொள்கிற�ோம்? இந்த அலட்சியமும், நிறுவனங்களின் பார்வையில் இல்லாமல்,
அ றி ய ா மை யு ம்தா ன் ட ெ க்னால ஜி முழுக்க முழுக்க மக்களின் பார்வையில் இருந்தே
நி று வ ன ங ்க ளு க் கு மி க ப ்பெ ரி ய பலம ா க வடிவமைக்கப்பட்டிருப்பதுதான் இந்த சட்டத்தின்
இருந்தன; மக்களின் டேட்டாவைத் தங்கள் சிறப்பு. இதன்மூலம், டெக்னாலஜி நிறுவனங்கள்
இஷ்டத்துக்கு யாருக்கு வேண்டுமானாலும் சேகரிக்கும் டேட்டா பற்றிய முழு விவரங்களையும்
விற்கலாம் என்ற சுதந்திரத்தைக் க�ொடுத்தன. ஒரு சாமானியன் எளிதாக அறிந்துக�ொள்ள
தற்போது இந்த சுதந்திரத்துக்கு GDPR விதிகள் முடியும்.
மூலம் சங்கிலியிட்டிருக்கிறது ஐர�ோப்பிய பெயர், முகவரி, வயது, ம�ொபைல் எண்
யூனியன். ஐர�ோப்பிய யூனியனில் அமலுக்கு உள்ளிட்ட அடிப்படை விவரங்கள், நம் பிரவுசிங்
வந்திருக்கும் General Data Protection Regula- குக்கீஸ் மற்றும் இணையதள விவரங்கள்,
tion (GDPR) விதிகள், தனிநபர்களின் டேட்டா கைரேகை, கருவிழி ப�ோன்ற பய�ோமெட்ரிக்
குறித்த மிக முக்கியமான முன்னெடுப்பு. இந்த
விஷயத்தில் அரசாங்கங்கள் எப்படி நடந்துக�ொள்ள
வேண்டும் என்பதற்கு மிகச்சரியான வழிகாட்டி.

 அது என்ன GDPR விதிகள்?


த க வ ல் த�ொ ழி ல் நு ட ்ப ம் த�ொட ர ்பான
குற்றங்கள் எதுவும் நடைபெற்றால் அதற்கான
தண்டனைகள் வழங்குவதற்கு நம் நாட்டில்
தகவல்தொழில்நுட்பச் சட்டம் - 2000 என
ஒ ன் று உ ண் டு . இ தேப�ோல , ஐ ர�ோப் பி ய
யூனியனில் அங்கம் வகிக்கும் 28 நாடுகளுக்கும்,
தனிநபர்களின் டேட்டாவைக் கையாள்வதற்கான
விதிமுறைகள் உண்டு. தற்போது அந்தப் பழைய
சட்டங்களுக்கு மாற்றாக, புதிதாக அமலுக்கு
வந்திருக்கும் சட்டம்தான் இந்த GDPR.

www.vikatan.com ஜூன் 2018 / டெக் தமிழா / 017


தகவல்கள், நம் ம�ொழி, இனம், மதம்  பயனாளருக்கு என்னென்ன நன்மைகள்?
ப�ோன்ற தனிப்பட்ட தகவல்கள், நம்
உடலின் ஆர�ோக்கியம் மற்றும் அந்தரங்க இந்த விதிமுறையில் அதிகாரம் அனைத்துமே
தகவல்கள், ப�ொருளாதாரத் தகவல்கள் பயனாளருக்குத்தான். நம்முடைய டேட்டாவை ஒரு
என எல்லா தகவல்களுமே இந்த GDPR நிறுவனம் சேகரிக்கிறது என்றால், அந்த டேட்டாவை
மூலம் பாதுகாக்கப்படும். ஒரு ம�ொபைல் அந்நிறுவனம் எதற்கெல்லாம் பயன்படுத்துகிறது,
எண்ணைக் கூட ஒரு நிறுவனம், உங்கள் ய ா ரு ட ன் எ ல்லா ம் ப கி ர் ந் து க�ொ ள் கி ற து எ ன்ற
அனுமதியின்றி வைத்திருக்கக்கூடாது. விவரங்களையெல்லாம் வெளிப்படையாக அறிவிக்க
வைத்திருந்தால் அது குற்றம். வேண்டும். உங்களின் ஒவ்வொரு டேட்டாவையும்
இந்த விதிமுறைகளின் இன்னொரு பயன்படுத்த அந்நிறுவனம் முறையான ஒப்புதல்
சிறப்பம்சம், கடுமையான தண்டனை பெறவேண்டும். அது உங்களின் பெயராக இருந்தாலும்
விவரங்கள். ஒரு நிறுவனம் ப�ொதுமக்களின் சரி; மின்னஞ்சல் முகவரியாக இருந்தாலும் சரி.
டே ட ்டாவை த் த வ ற ா ன அதேப�ோல ஒரு நிறுவனத்திடம் இருக்கும் உங்கள்
வி ஷ ய ங ்க ளு க்கா க ப் ப ய ன்ப டு த் தி டேட்டாவை, நீங்கள் முறைப்படி கேட்டால் அந்நிறுவனம்
னால�ோ, பயனாளர் கேட்ட விவரங்களைத் 3 0 நாள்களு க்கு ள் அனுப்பிவைக்க வே ண்டும் .
த ர ம று த்தால � ோ , ப ய ன ா ள ர ்க ளி ன் உதாரணமாக கூகுளிடம் இருக்கும் உங்கள் டேட்டா
விவரங்களைப் ப�ோதுமான பாதுகாப்பின்றி அனைத்தையும் தரும்படி கேட்டால் அந்நிறுவனம்
வைத்திருந்து அது லீக் ஆனால�ோ, க�ொடுக்க வேண்டும்.
அந்நிறுவனத்துக்கு, அதன் உலகின் ஒரு நிறுவனத்தில் இருக்கும் உங்கள் டேட்டாவை,
ம�ொத்த வருமானத்தில் 4 சதவிகிதம் வேற�ொரு நிறுவனத்துடன் பகிர்ந்துக�ொள்ள நீங்கள்
அ ல்ல து 2 0 மி ல் லி ய ன் யூ ர�ோ ஸ் விரும்பினால் (Data Portability) அதற்கு அந்நிறுவனம்
(இரண்டில் எது அதிகம�ோ) அபராதமாக உங்களுக்கு உதவ வேண்டும். உதாரணமாக நீங்கள்
விதிக்கப்படும். வழக்கமாக சிகிச்சைபெறும் மருத்துவமனையில்

018 / டெக் தமிழா / ஜூன் 2018 www.vikatan.com


இருக்கும் உங்கள் தரவுகள் அனைத்தையும் வேற�ொரு மருத்துவமனைக்கு
மாற்ற வேண்டும் என நீங்கள் கேட்டால், அந்த மருத்துவமனை
தகவல்களைத் தர மறுக்கக்கூடாது.
ஒருவேளை உங்களுடைய தகவல்கள் எதுவும் கூகுளில் வருவது

ஒஉங்களுடைய
ருவேளை
உ ங ்க ளு க் கு பி டி க்க வி ல்லை எ ன்றா ல் கூ ட , அ தை க் கூ கு ளி ட ம்
விண்ணப்பித்து நீக்கச் ச�ொல்லலாம். உங்கள் சிறுவயது புகைப்படம் ஒன்று
கூகுளில் இன்னும் சுற்றிக்கொண்டிருக்கிறது எனில், அதைக் கூகுளில்
காட்டவேண்டாம் எனச் ச�ொன்னால் கூகுள் காட்டாது. அதாவது கூகுளின்
தகவல்கள் வெப் கிராலர்கள் அந்தப் புகைப்படத்தை இன்டெக்ஸ் செய்யாது. இந்த
உரிமைக்கு 'Right to be forgotten' என்று பெயர்.
எதுவும் கூகுளில் கூகுள், வாட்ஸ்அப், அமேசான் ப�ோன்ற நிறுவனங்கள் நம் விவரங்களை
வருவது வைத்திருப்பதை நாம் விரும்பவில்லை எனில், அந்த விவரங்களை
ம�ொத்தமாக அழிக்கச்சொல்லவும் நமக்கு உரிமையுண்டு. இப்படி
உங்களுக்கு மக்களுக்கு பல்வேறு உரிமைகளை வழங்கியிருக்கிறது GDPR.
பிடிக்கவில்லை  GDPR-ஆல் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
என்றால்கூட, கடந்த சில நாள்களாகவே எல்லோரின் இன்பாக்ஸிலும், பல்வேறு
அதைக் நிறுவனங்களிடம் இருந்து GDPR த�ொடர்பான மின்னஞ்சல்கள்
குவிந்திருக்கும். அதில் சில மின்னஞ்சல்கள் 'எங்கள் நிறுவனம் GDPR
கூகுளிடம் விதிகளுக்குத் தயாராகிவிட்டது." என்ற வகை. "Click here to stay in
விண்ணப்பித்து touch!" என்றவை இன்னொருவகை. புதிய GDPR விதிகளின்படி
ப ய ன ா ள ரி ன் அ னு ம தி யி ன் றி அ வ ரி ன் மி ன ்ன ஞ ்ச ல் மு க வ ரி
நீக்கச் வைத்திருந்தால்கூட குற்றமே! எனவே இனிமேல் மின்னஞ்சல் மூலம்
ச�ொல்லலாம். விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் எதுவுமே இனிமேல் நமக்கு
நியூஸ்லெட்டர்கூட அனுப்பமுடியாது. எனவேதான், GDPR அமலுக்கு
வருவதற்கு முன்னரே உங்களின் அனுமதி கேட்டு மின்னஞ்சல் அனுப்பின.
ஆனால், இதற்கு பெரிய வரவேற்பு இல்லாத காரணத்தால் பெரும்பாலான
நிறுவனங்கள் இந்த நியூஸ்லெட்டர் மார்க்கெட்டை ஐர�ோப்பாவில் கைவிட
மு டி வு செய் து வி ட ்டன . இ ந்த
ட ்ரெ ண் ட் வி ரை வி ல்
பி ற ந ா டு க ளு க் கு ம் ப ர வ ல ா ம்
என்பதால், இந்த மின்னஞ்சல்
ம ா ர ்க்கெட் டி ங் கி ற் கு 2 0 1 8
ப�ோ த ா த க ா ல ம் எ ன் கி ன்றன
விளம்பர நிறுவனங்கள். இது
வெ று ம் உ த ா ர ணம்தா ன் .
இ தேப�ோல டே ட ்டாவை க்
கை ய ா ளு ம் எ ல்லா
நி று வ ன ங ்க ளு க் கு மே இ த ன்
மூலம் சிக்கல்தான். இன்று உலகில்
டேட்டாவை சேகரிப்பதற்காக
என்றே பெயரில்லாமல் மறைவாக
பின்னணியில் இயங்கும் பல
நி று வ ன ங ்க ள் இ ரு க் கி ன்றன .
அ வ ற் று க்கெல்லா ம் G D P R
முற்றுப்புள்ளி வைக்கலாம்.

www.vikatan.com ஜூன் 2018 / டெக் தமிழா / 019


டெக்னாலஜி விஷயங்களை காலத்துக்கேற்ப
பு ரி ந் து க�ொள்வ தி ல் ஐ ர�ோப் பி ய ர ்க ள்
பழைமைவாதிகள். அதனால்தான் இப்படிப்பட்ட
விதிகள். - இப்படியெல்லாம் ஐர�ோப்பாவைக்
க ரி த் து க்க ொட் டு கி ன்றன அ மெ ரி க்க
நிறுவனங்கள். ஆனால், மக்களின் பாதுகாப்புக்கு
முன்னுரிமை அளிக்கும் இந்த விதிகள், உலகின்
எல்லா நாடுகளுக்குமே முன்னோடி எனப்
பாராட்டுகின்றனர் தகவல் த�ொழில்நுட்ப
ஆர்வலர்கள். இந்த இரண்டு முரண்பாடுகளுமே
உண்மைதான். ஆனால், இரண்டாவதுதான்
அறம்.
ஒரு சாமானியனின் டேட்டாவை, அவனுக்கே
தெரியாமல் எனச் ச�ொல்லி திருடிவிட்டு,
அ தைவை த் து அ வ னு க ்கே தீ ங் கு செ ய ்ய
 நிறுவனங்கள் தயாரா? முடியுமென்றால், அவன் நாட்டின் ஜனநாயகத்தை
இந்த விதிமுறைகள் அனைத்துக்கும் தகவல் சீர்குலைக்க முடியுமென்றால், அவனுடைய
த�ொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் நாட்டுக்கே தீங்கு செய்யமுடியுமென்றால்,
த ய ா ர ா கி வி ட ்ட த ா எ ன்றா ல் , இ ல்லை . வணிகம் எனச்சொல்லி எல்லா எல்லையையும்
இதுவரைக்கும் மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக், தாண்ட முடியுமென்றால்... பிறகு அங்கே
கூகுள் ப�ோன்ற பெருநிறுவனங்கள் மட்டும்தான் அறத்துக்கு வேறென்ன வேலை இருக்கிறது?
GDPR விதிமுறைகளுக்கான நடவடிக்கைகளை அ ந்த டே ட ்டா மீ த ா ன அ தி க ா ர த்தை
பெ ரு மள வி ல் எ டு த் து ள்ளன . ஐ ர�ோப் பி ய குடிமகனிடமே க�ொடுப்பதுதானே அறம்.
யூனியனில் இருக்கும் பல நிறுவனங்கள் அதைத்தான் செய்திருக்கிறது GDPR.
இ ன் னு ம் மு ழு மை ய ா க G D P R - க் கு த் இந்தியா என்ன செய்யவிருக்கிறது?

த ய ா ர ா க வி ல்லை . இ ந் தி ய ா வி ல் G S T
அமலானப�ோது வணிகர்கள் மத்தியில் எப்படி உலகில் அதிகமக்கள் த�ொகையைக் க�ொண்ட
குழப்பங்கள் உருவானத�ோ, அதேப�ோல்தான் நாடுகளில் இரண்டாவது நாடு இந்தியா.
ஐர�ோப்பாவில் GDPR-ஐ டீல் செய்கின்றன வணிகர்களின் பாஷையில் ச�ொன்னால் உலகின்
சி று நி று வ ன ங ்க ள் . மே லு ம் , ஐ ர�ோப் பி ய மிகப்பெரிய சந்தை. இவ்வளவு பெரிய நாட்டின்
நிறுவனங்களுக்குச் சேவைகளை வழங்கும் மக்களின் டேட்டாவிற்கு பாதுகாப்பு அளிப்பது
பி ற ந ா ட் டு நி று வ ன ங ்க ளு ம் இ ன் னு ம் யார்? பல வருடங்களுக்கு முன்னர் இயற்றப்பட்ட
முழுமையாகத் தயாராகவில்லை. இதில் இந்திய அதே பழைய சட்டங்கள்தான். Data Protection-
நிறுவனங்களும் அடக்கம். இன்னும் இதற்குத் கான வலுவான சட்டங்கள் எதுவும் இங்கே
தயாராகாத சில நிறுவனங்கள் தற்காலிகமாக இ ல்லை . பு தி ய வி தி மு றை க ள ை
தங்கள் இணைய சேவையை நிறுத்திவைத் உருவாக்குவதற்காக அவ்வப்போது எடுக்கப்பட்ட
திருக்கின்றன. நட வ டி க்கை க ளு ம் ந ம் பி க்கை ய ளி க் கு ம்
வகையில் இல்லை. அப்படியெனில் இந்தியாவில்
 GDPR உலகளவில் இ ரு க் கு ம் 1 2 0 க�ோ டி க் கு ம் மே ற ்ப ட ்ட
எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்தியர்களின் டேட்டா? அவற்றின் பாதுகாப்பு?
``ஐர�ோப்பாவில் எந்தவ�ொரு டெக்னாலஜி அவற்றிற்கான விதிமுறைகள்? இப்படி இன்னும்
நிறுவனமும் பெரியளவில் வளரவில்லை. நிறைய கேள்விக்குறிகள் மிச்சமிருக்கின்றன.
ஆ ன ா ல் , அ மெ ரி க்கா வி ல் ட ெ க்னால ஜி த ற ்போ து ஐ ர�ோ ப ்பா ஒ ரு வ ழி யை க்
நி று வ ன ங ்க ள் மி க அ தி க ம் . இ ந்தப் காட்டியிருக்கிறது. நமக்கான வழியை நாமும்
ப�ொறாமையால்தான் ஐர�ோப்பிய ஒன்றியம், கண்டுக�ொண்டால்தான் டிஜிட்டல் இந்தியா
அமெரிக்க நிறுவனங்களைத் தண்டிக்கிறது. குறித்தெல்லாம் கனவு காணமுடியும்.

020 / டெக் தமிழா / ஜூன் 2018 www.vikatan.com


மு.ராஜேஷ்

ம�ொ பைல் டிஸ்ப்ளேக்களின் புதிய ட்ரெண்ட்டாக


மாறியிருக்கின்றன பெஸல்லெஸ் டிஸ்ப்ளேக்கள். TFT, LED என
ம�ொபைல் டிஸ்ப்ளேக்களின் த�ொழில்நுட்பங்கள் மாறினாலும்,
அதன் வடிவம் மட்டும் மாற்றமடையவேயில்லை. ஒரு
ம�ொபைலில் மேற்புறம், ஸ்பீக்கர், சென்சார், கேமரா ஆகியவையும்,
கீழ்ப்பகுதியில் நேவிகேஷன் பட்டன்களும் இருக்கும். இதுதவிர
டிஸ்ப்ளேவின் பக்கவாட்டு ஓரங்களில் சிறிய இடைவெளி
இருப்பதைப் பார்க்க முடியும். அதை பெஸல்ஸ் என்று
அழைக்கிறார்கள். இவற்றைத் தவிர்த்துவிட்டு டிஸ்ப்ளேவை
வடிவமைக்க முடிவதில்லை. ஆகவேதான் நம்மால் முழு
டிஸ்ப்ளேவையும் பயன்படுத்த முடிவதில்லை. ஆனால், சமீப
காலமாக அதில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
#BezelLessDisplay அந்தக் குறையைத் தீர்ப்பதற்காக வந்திருப்பதுதான் பெஸல்லெஸ்
டிஸ்ப்ளேக்கள். இவற்றை உருவாக்கும் முயற்சியில் ஆப்பிள்,
சாம்சங் ப�ோன்ற மார்க்கெட் லீடர்களே திணறிக்கொண்டிருக்கும்
விஷயத்தில் புதுப்புது ஐடியாக்களால் அசத்திக் க�ொண்டிருக்கின்றன
சில சீன நிறுவனங்கள்.

மாத்திய�ோசி
முன்புறம் இருக்கும் பெஸல்களை நீக்கிவிடலாம். சென்சார்,
ஸ்பீக்கர் மற்றும் கேமராவை என்ன செய்வது? ய�ோசித்தார்கள்;
சென்சார் மற்றும் ஸ்பீக்கரை டிஸ்ப்ளேவுக்கு அடியில் க�ொண்டு
வைத்தார்கள். இன்னும் மிச்சம் இருப்பது கேமரா மட்டும்தான்.
அதைக் க�ொண்டுப�ோய் டிஸ்ப்ளேவிற்கு அடியில் வைக்க
முடியாதே? ய�ோசித்தவர்கள் அதற்கும் ஒரு வழியைக்
கண்டுபிடித்தார்கள். விவ�ோ நிறுவனம் APEX என்ற ம�ொபைலின்
மாதிரி வடிவமைப்பை வெளியிட்டிருந்தது. அதில் முன்புற
கேமரா ம�ொபைலின் உள்ளே மறைந்து வைக்கப்பட்டிருந்தது.
ப�ோட்டோ எடுக்க வேண்டும் என்றால் கேமரா வெளியில் வரும்.
வேலை முடிந்ததும் உள்ளே சென்று மறைந்துவிடும்.
Doogee என்ற சீன நிறுவனம�ோ இதை இன்னும் சிம்பிளாக
முடித்துவிட்டது. இந்த நிறுவனம் வடிவமைத்திருக்கும்
ம�ொபைலில், கேமரா வேண்டுமென்றால் ஸ்லைடு செய்தாலே
ப�ோதும். இவையெல்லாம் பிரபலமாகாத நிறுவனங்கள் என்பதால்
இந்த ம�ொபைல்கள் உலகளவில் கவனம் ஈர்க்கவில்லை.
சமீபகாலமாக, பிரபல நிறுவனங்களும் க�ோதாவில் குதித்துள்ளன.
தற்போது சந்தையில் வந்துகுவியும் 'Notch' ம�ொபைல்களின்
சீசன் முடிந்ததும், இந்த பெஸல்லெஸ் டிஸ்ப்ளேக்களின்
இன்னிங்க்ஸ் த�ொடங்கும்!

www.vikatan.com ஜூன் 2018 / டெக் தமிழா / 021


மு.ராஜேஷ்

OKவா ஐ ப�ோனா வருது? ஒன்ப்ளஸ்தான பாஸ்


எ ன்றெல்லா ம் வி டு வ தி ல்லை கே ட ்ஜெட்

ஒன்ப்ளஸ் 6 ?
லவ்வர்ஸ். ஒரு லட்ச ரூபாய்க்கு ஐப�ோன்
என்னவெல்லாம் தரும�ோ அதையெல்லாம்
அதன் பாதி விலைக்கும் குறைவாகத் தருகிறது
ஒன்ப்ளஸ். அப்புறம் அதற்கு எதிர்பார்ப்புகள்
இருக்கத்தானே செய்யும்? அதைப்போலவே
#OnePlus6 பலத்த எ தி ர ்பார்ப் பு க ளு க் கு ம த் தி யி ல்
வந்திறங்கியிருக்கிறது ஒன்ப்ளஸ் 6. ஏற்கெனவே
இதன் வடிவமைப்பு முதல் பிராஸசர் வரை
பெரும்பாலான தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதில் ஒன்று கூட மிஸ் ஆகாமல் அப்படியே
இதிலிருக்கிறது.
இந்த ஆண்டு ஒன்ப்ளஸ் 6 உடன் சேர்த்து,
பு ல்லட் ஸ் வ ய ர ்ல ஸ் எ ன் னு ம் ப் ளூ டூ த்
இயர்போனையும் அறிமுகம் செய்திருக்கிறது
அந்நிறுவனம். ஒன்ப்ளஸ் நிறுவனம் வெளியிடும்
முதல் ப்ளூடூத் இயர்போன் இது. Bluetooth
v4.1-ல் செயல்படும் இதன் மூலமாக தரமான
இ சையை க் கே ட ்க மு டி யு ம் . ஒ ரு மு றை
முழுவதுமாக சார்ஜ் செய்தால் 8 மணி நேரம்
பயன்படுத்தலாம். ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும்
இதில் இருக்கிறது. இதை வெறும் பத்து
நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ப�ோதும் ஐந்து மணி
நேரத்திற்கான ப்ளேபேக் டைம் பெற முடியும்.
U S B - C கே பி ள் மூ லம ா க இ தை ச ா ர் ஜ்
செய்துக�ொள்ளலாம். மற்ற நிறுவனங்களிலும்
இதைப் ப�ோல இயர்போன்கள் இருந்தாலும்
இ தி ல் மேக்னெ ட ்டை வை த் து மே ஜி க்
காட்டுகிறது ஒன்ப்ளஸ்.
இயர்போனின் இடது, வலது என இரண்டு
பகுதிகளுமே மேக்னெட்டால் செய்யப்பட்டவை.
காந்தம் என்பதால் இதைச் சேர்த்து வைத்தால்
ஒட்டிக்கொள்வத�ோடு மட்டுமன்றி, ஆஃப்
ம � ோ டு க் கு ம் செ ன் று வி டு ம் . ஆ ன் செ ய ்ய
வேண்டுமென்றால் ஒட்டியிருப்பதைப் பிரித்தால்
ப�ோதுமானது. கூகுள் அசிஸ்டன்ட் வசதியும்
இதில் இருக்கிறது. வாட்டர், மற்றும் வெதர்
ரெ சி ஸ்டன்ட்டா க வு ம் இ தை ஒ ன்ப்ள ஸ்
வடிவமைத்திருக்கிறது.

022 / டெக் தமிழா / ஜூன் 2018 www.vikatan.com


ம�ொபைல் எப்படி?
நாட்ச் வடிவமைப்பில் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தும்
முதல் ஸ்மார்ட்போன் இது. அப்படியென்றால் இதுவும்
ஐப�ோன் காப்பிதானா என்பவர்கள் கவனத்துக்கு...
ஆப்பிளுக்கு முன்னரே நாட்ச் என்ற விஷயத்தைக்
க�ொண்டு வந்தது Essential ஸ்மார்ட்போன்தான். அது
வெளியாகி பல மாதங்கள் கழித்துதான் ஐப�ோன் X
வெளியானது. இதற்கு முன்பு நாட்ச் வசதி க�ொண்ட
ஆண்ட்ராய்டு ம�ொபைல்களில் மென்பொருள் சிக்கல்
இருந்து வந்தது. ஆனால், இதில் கூடிய விரைவில்
ஆண்ட்ராய்டு P இயங்குதளம் (தற்பொழுது ஓரிய�ோதான்
இருக்கிறது) வரவிருப்பதால் அந்தச் சிக்கல்கள் குறைவாகவே
இருக்கும். 6.3 இன்ச் 19:9 OLED டிஸ்ப்ளேவுடன் பின்புறம்
கிளாஸைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பல
வருடமாகப் பயன்படுத்தி வந்த மெட்டல் வடிவமைப்பை
இதன் மூலமாக அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது
ஒன்ப்ளஸ். கேமராவில் ஒன்ப்ளஸ் எப்பொழுதுமே ச�ொல்லி
அடிக்கும் கில்லி. இந்தமுறையும் அப்படியே!
1 6 M P + 2 0 M P கேம ர ா எ டு த்த ச ா ம் பி ள்
புகைப்படங்களைப் பார்த்தால் DSLR த�ோற்றுவிடும்
அளவுக்குத் தெள்ளத்தெளிவாக இருக்கிறது. இந்த இரண்டு
கேமராக்களில் 16 M P கேமராவில் OIS, EIS வசதி
இருக்கிறது. 16 MP முன்புற கேமராவும் சிறப்பாக
இருக்கிறது. ஆனால், சாம்சங் ப்ரீமியம் ம�ொபைல்கள்,
ஐப�ோன் கேமராக்கள் அளவுக்கு இல்லை. வேகம்தான்
இதில் முக்கியமாக இருக்கப்போவதாக விளம்பரப்படுத்தி
யிருந்தது ஒன்ப்ளஸ். அதனால் எதிர்பார்த்ததைப் ப�ோலவே
Snapdragon 845 பிராசஸரும் கூடவே கிராபிக்ஸ்
பெர்ஃபாமன்ஸை அதிகரிப்பதற்காக Adreno 630-வும்
க�ொடுக்கப்பட்டிருக்கிறது. ஒன்ப்ளஸின் கஸ்டமைஸ்டு
இயங்குதளமான OxygenOS (ஆண்ட்ராய்டு P) வேகமான
செயல்திறனுக்கு உதவியாக இருக்கும்.
6 GB+64 GB, 8 GB RAM + 128 GB மற்றும் 8 GB RAM
+ 256 GB என மூன்று வேரியன்ட்களிலும் Mirror Black,
Midnight Black, மற்றும் Silk White என மூன்று நிறங்களிலும்
ஒன்ப்ளஸ் 6 கிடைக்கும்.

விலை:
6 GB ரேம் / 64 GB ரேம்: ₹ 34,999
8 GB ரேம் / 128 GB ரேம்: ₹ 39,999
www.vikatan.com ஜூன் 2018 / டெக் தமிழா / 023
அ வ ்வ ப ்போ து த ன் அ ர சி ய ல்
க ரு த் து க ள ா ல் லைம்லைட் டு க் கு
வந்துசெல்பவர் ய�ோகா குரு பாபா ராம்தேவ்.
ஆ ன ா ல் , க டந்த வ ா ர ம் மு ழு க்க
ட்ரெண்ட்டானதுக்கு அது காரணமல்ல; சுதேசி
ப�ொருள்களை வாங்க ஊக்குவிக்கும் விதமாக
பதஞ்சலி என்ற நிறுவனத்தை நடத்திவரும்
பாபா ராம்தேவ், திடீரென சிம் கார்டு ஒன்றை
வெளியிட்டு அனைவரையும் அசரடித்தார்.
'சுதேசி சம்ரிதி' எனப் பெயரிடப்பட்டிருக்கும்
இந்த சிம் கார்டு சேவைக்காக பி.எஸ்.என்.எல்
நிறுவனத்தோடு கைக�ோத்திருப்பதாகவும்
அறிவித்தார். என்னடா இது டெலிகாம்
கம்பெனிகளுக்கு வந்த ச�ோதனை... எனப்
ப�ொங்கி முடிப்பதற்குள், இரண்டே நாள்களில்
அடுத்த சிக்ஸரையும் பறக்கவிட்டார் ராம்தேவ்.
வ ா ட் ஸ் அ ப் , மெ ச ஞ ்சர் ப�ோன்ற
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்றாக ஒரு
இந்திய மெசேஜிங் ஆப் எனச்சொல்லி,
'கிம்போ' என்ற ஆப்பை வெளியிட்டார்.
வெளியான சில மணிநேரத்திலேயே ஆப்
வைரலானாலும், விமர்சனம் என்ற பெயரில்
அதனை சல்லி சல்லியாக உடைத்துப்போட்டனர்
நெட்டிசன்ஸ். காரணம், ஆப் முழுக்கவே
பாதுகாப்புக் குறைபாடுகள்; இதுகுறித்து
த�ொடர்ச்சியாக ட்ரோல்களும், மீம்களும்
ச�ோ ஷி ய ல் மீ டி ய ா க்க ளி ல் கு வி ந் து
க�ொண்டிருக்க, திடீரென ப்ளே ஸ்டோரில்
இருந்து அம்போவெனக் காணாமல் ப�ோனது
கிம்போ. என்ன காரணம் எனத் தெரியாமல்
அ னை வ ரு ம் வி ழி த் து க்க ொ ண் டி ரு க்க ,
பதஞ்சலிய�ோ "ஆப்பை நாங்கள் இன்னும்
முழுமையாக வெளியிடவில்லை. ட்ரெயல்
வெர்ஷனாகத்தான் ஒரு நாள் வெளியிட்டோம்.
அதனால்தான் பாதுகாப்புக்குறைபாடுகள்
எல்லாம். அனைத்தும் சரியான பின்பு கிம்போ
மீண்டும் வரும்" என்றது கூலாக.
இரண்டு செய்திகளையும், "யாரு சாமி
நீங்க?" என்ற ரேஞ்சில் பார்த்துக்கொண்டிருக்
கிறது டெக் உலகம்.

ஆசிரியர் குழு: கார்க்கிபவா, ஞா.சுதாகர், மு.ராஜேஷ், ர.சீனிவாசன், துரை.நாகராஜன், இரா.கலைச்செல்வன், ஜார்ஜ் அந்தோணி,
க.சுபகுணம், சா.ஜெ.முகில் தங்கம்.. வடிவமைப்பு: கே.செந்தில்குமார், த�ொடர்புக்கு: estvikatan@gmail.com

024 / டெக் தமிழா / ஜூன் 2018 www.vikatan.com

You might also like