You are on page 1of 3

தமிழில் சொற்களையும் சொற்றொடர்களையும்

எழுதும் பொழுது கருத்திற் கொள்ள வேண்டுவன


பற்றிச் சிறிது காண்போம்.எழுதும் பொழுது, சில
இடங்களில் வல்லெழுத்துகள் (க், ச், த், ப்) மிக்கு
வரும் ; சில இடங்களில் மிகாமல் வரும். மிக்கு வர
வேண்டிய இடங்களில் அவற்றை
எழுதாமலும், மிகாஇடங்களில் அவற்றை எழுதியும்
விடுவதால் பிழை தோன்றும் ; மொழி மரபும்
சிதையும்.
எடுத்துக்காட்டாக, யானைத் தந்தத்தால் செய்த
பொம்மையைக் குறிப்பிடும் பொழுது தந்தப்பொம்மை
என்று வல்லினம் மிக்கு எழுத வேண்டும். அவ்வாறு
எழுதாமல் தந்தபொம்மை (வல்லினம் மிகாமல்)
என்று எழுதினால், ‘யாரோ ஒருவர் தந்த
பொம்மை’ என்று பொருள் மாற்றம் ஏற்பட்டு விடும்.
இது போன்ற பிழை ஏற்படாமல் எழுதிட, வல்லினம்
மிகும் இடங்கள், வல்லினம் மிகா இடங்கள் பற்றிய
இலக்கண மரபு மாணாக்கருக்குத் தெரிந்திருந்தல்
வேண்டும்.
அவை பற்றி, பின்வருமுறையில் சில
எடுத்துக்காட்டுகளுடன் அறிந்து கொள்க.

வல்லின எழுத்துகள் மிகும் இடங்கள்


1. அந்த, இந்த - முதலான சுட்டுத் திரிபுகளுக்குப் பின்
வரும் வல்லினம் மிகும்.
அந்த + பையன் = அந்தப்பையன்
இந்த + பெட்டி = இந்தப்பெட்டி

2. அத்துணை, இத்துணை, எத்துணை என்னுஞ்
சொற்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்.
அத்துணை + புகழ் = அத்துணைப் புகழ்
இத்துணை + செழுமை = இத்துணைச் செழுமை
எத்துணை + கொடுமை = எத்துணைக்கொடுமை

3. அவ்வகை, இவ்வகை, எவ்வகை என்னும்
சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்.
அவ்வகை + காடு     = அவ்வகைக்காடு
இவ்வகை + தோப்பு = இவ்வகைத்தோப்பு
எவ்வகை + பெயர் = எவ்வகைப்பெயர்

4. மற்ற, மற்று, மற்றை - என்னும் சொற்களின்


பின்வரும் வல்லினம் மிகும்.
மற்ற + கலைகள்     = மற்றக்கலைகள்
மற்று + சிலை     = மற்றுச்சிலை
மற்றை + பயன்     = மற்றைப்பயன்

5. “இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும்


உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.
மோர் + குடம்     = மோர்க்குடம்
மலர் + கூந்தல்     = மலர்க்கூந்தல்
தயிர் + பானை     = தயிர்ப்பானை
தண்ண ீர் + தொட்டி = தண்ண ீர்த்தொட்டி

6. “மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும்


உடன்தொக்க தொகையில்” வரும் வல்லினம் மிகும்.
மரம் + பெட்டி     = மரப்பெட்டி
இரும்பு + தூண்     = இரும்புத் தூண்
தங்கம் + தாலி     = தங்கத்தாலி

You might also like