You are on page 1of 2

அன்புள்ள என் தமிழக மக்களுக்கு,

தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கோடான கோடி ரசிகர்களில் ஒருவனான, ஒரு சாதாரண
ரசிகனின் எண்ண ஓட்டங்கள்

தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 12 3 2020 ஆம் ஆண்டு பத்திரிகையாளர்கள்
சந்திப்பின் போது அளித்த பேட்டியிலிருந்து தமிழக மக்களுக்கும், அவரையே தெய்வமாக கொண்டு பின்
தொடரும் ரசிகர்களுக்கும் அவரது அரசியல் பயணத்தை பற்றியும் அவரது கட்சியின் கொள்கைகளான
திட்டங்களைப் பற்றியும், ஒரு அரைமணிநேரம் அந்த காணொளியில் கூறியிருந்தார்.

நம் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 31 12 2017 ஆம் ஆண்டு நான் அரசியலுக்கு வருவது
உறுதி என்று கூறியிருந்தார்.

அவர் அரசியலுக்கு வருவதற்கான காரணம் என்ன?


ஆளுமைமிக்க திராவிடக் கட்சிகளான திமுக அதிமுக கட்சிகளின் பெரும் தலைவர்கள் மரணத்தை ஒட்டி
தமிழகத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய அந்த ஆளுமை மிக்க தலைவர்களின் வெற்றிடத்தை நிரப்புவதற்காக,
மக்கள் நலனில் அக்கறை கொண்ட சிறந்த அரசியல்வாதிகள் இல்லாத ஒரு காரணத்தால் நமது தமிழக
மக்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்கள்,ஏற்படக்கூடிய பின்விளைவுகள் இவற்றை கருதியே நான் அரசியலுக்கு
வருவதாக அவர் கூறினார்.

திராவிட கட்சிகளின் ஊழல் ஆட்சி முறைகளையும், வாரிசு அரசியலையும் ,அதிகார துஷ்பிரயோகங்களும்,


கட்டப்பஞ்சாயத்துகளையும் நாம் நன்கு அறிவோம்.
மீண்டும் இந்த திராவிட கட்சிகளிடம் ஆட்சி சென்றால் பொது மக்களாகிய நமக்கு ஏற்படும் பாதிப்புகள்
அதிகமாக இருக்கும் என்பதை அவர் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்.

எனவே நமது தலைவர் அரசியலில் மாற்றமும் ஆட்சி மாற்றமும் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறார்.
அரசியலில் ஒரு தனிமனிதன் வந்து மட்டுமே இந்த அரசியல் மாற்றம் மற்றும் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த
முடியாது என்பதனை தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார்.
ஒரு தனி மனிதன் மட்டுமே நின்று முன்னெடுத்துச் செல்லக் கூடியதாக இந்த ஆட்சி மாற்றமும் அரசியல்
மாற்றமும் இருக்கக் கூடாது என்பதற்காகவே மக்களுக்கு இதைப்பற்றி ஒரு புரிதலும் தெளிவும் ஏற்பட
வேண்டும் என்றும் மக்களும் இந்த மாற்றங்களில் பங்கு பெறவேண்டும் என்றும் அவர் நினைக்கின்றார்.

அதற்காகவே தமிழக மக்களுக்கு எடுத்துச் சொல்லக் கூடிய வகையில் அவர் அறிவித்த 3 திட்டங்களையும்
ரசிகர்கள் மூலமாக, பத்திரிகையாளர்கள் மூலமாக, மீடியாக்கள் மூலமாக தெரியப்படுத்தவே அந்தப்
பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

நம் தலைவர் அறிவித்த அந்த 3 திட்டங்கள்

1.அதிகமான பதவிகள் கட்சிக்குள் இருக்கக்கூடாது.


தேர்தல் சமயத்தில் மட்டுமே அந்த பதவிகளை வைத்துக்கொண்டு பின் தேர்தல் முடிந்தவுடன் பதவிகளை
திரும்பப்பெற வேண்டும் என்பதாகும்.
2. தனது கட்சியில் 60 முதல் 65 சதவீதம் வரை 50 வயதுக்குட்பட்ட படித்த, தான் தொழில்புரியும் துறையில்
சிறந்து விளங்கக்கூடிய தான் வசிக்கும் பகுதியில் அப்பகுதி மக்களிடம் கண்ணியமாகவும் நற்பெயரும்
எடுத்த இளைஞர்களுக்கு பதவியையும் பொறுப்பையும் கொடுத்து அவர்களை வழி நடத்துவது.

3. கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை


எனது கட்சி ஆட்சிக்கு வந்தால் முதல்வர் வேட்பாளராக நான் இல்லாமல் கட்சியின் தலைமைப் பொறுப்பை
நான் நிர்வகித்து, படித்த, தொலைநோக்குப் பார்வை கொண்ட இச்சமுதாய மக்களுக்கு சேவை
செய்யவேண்டும் என்று எந்நேரமும் சிந்தித்துக் கொண்டு இருக்கக்கூடிய ஒரு இளைஞனுக்கு அது
ஆணாகவோ பெண்ணாகவவோ இருப்பார்கள் என்று கூறினார்.

இந்த திட்டங்களையே தனது கட்சி கொள்கையாகவும் இருக்கும் என்று அவர் கூற வருகிறார்.
அந்த திட்டங்களால் ஒரு அரசியல் மாற்றமும் ஆட்சி மாற்றமும் ஏற்பட வேண்டும் என்று அவர் கருதுகிறார்

இந்த அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம், அவரது திட்டங்கள் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய
கடமையை நமக்கு அளித்து அதன் மூலமாக ஒரு எழுச்சி,புரட்சி ஏற்பட்டு மக்களிடையே ஒரு மாற்றம்
வேண்டும் என்று விரும்பினால் மட்டுமே நான் கட்சி அல்லது ஆட்சிக்கு வருவேன் என்று கூறுகின்றார்.

நம் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வரமாட்டாரா? கட்சி தொடங்க மாட்டாரா?
முதல்வராகி கோட்டைக்கு செல்ல மாட்டாரா? என்று பல வருடங்களாக நாம் ஏங்கி காத்துக்கொண்டு
இருந்தது உண்மைதான்.
ஆனால் தலைவர் தனது சுயநலத்திற்காகவோ தனது குடும்ப நன்மைக்காகவோ அல்லாமல்
பபொதுமக்களுக்காக,பொதுமக்களின் நன்மைக்காக மட்டுமே அரசியலுக்கு வருகின்றார்,கட்சியை
தொடங்க உள்ளார்,முதல்வர் வேட்பாளராக ஒருவரை முன்னிறுத்தி அவர் மூலமாக நல்லாட்சியை வழங்க
வேண்டும் என்று நினைக்கின்றார்.
அவர் முதல்வர் வேட்பாளர் இல்லை என்பது ரசிகர்களாகிய நமக்கு பெரும் கவலையையும் துன்பத்தையும்
தந்தாலும் கூட அவரது வயதின் காரணமாக, அவர் உடல் நலத்தின் ககாரணமாக,அவர் இன்னும் அதிகமான
ஆண்டுகள் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக நாம் நம்மை சமாதானப்படுத்திக் கொண்டு தலைவர்
காட்டும் வழியையும் தலைவர் சொல்லக்கூடிய விஷயங்களையும் பின்தொடர்ந்து இறுதிவரை அவரது
வெற்றிக்காக,தமிழக மக்களின் நன்மைக்காகப் பாடுபட வேண்டும் என்பதே நம் கடமையாகும்.
அரசியலில் மாற்றம் ஆட்சி மாற்றம் இப்போ இல்லன்னா எப்போதும் இல்லை
அதை தாரக மந்திரமாகக் கொண்டு தலைவரின் திட்டங்களையும் அவரது எண்ணங்களையும் மூலை
முடுக்கெங்கும் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு சென்று சேரக்கூடிய வகையில்
ரசிகர்களாகிய நாம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வீழட்டும் திராவிட அரசியல்
எழட்டும் ஆன்மீக அரசியல்
ஜெய்ஹிந்த்

You might also like