You are on page 1of 2

Delta Automation contest 2019

சீனாவின் பன்னாட்டு நிறுவனமான டெல்டா எலெக்ட்ரானிக்ஸ் "6 வது டெல்டா

மேம்பட்ட ஆட்டோமேஷன் போட்டி" என்ற தலைப்பில் ஒரு சர்வதேச நிகழ்வை

ஏற்பாடு செய்தது. 2019 ஆம் ஆண்டு ஜூலை 23 முதல் 26 ஆம் தேதி வரை சீனாவில்

நடைபெறும் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் மூன்று அணிகளில் முதல் இடமாக

பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் T. தருண்செல்வன், K. C.

சுபாஷ், E. சஞ்சய் கிருஷ்ணன் ஆகிய மாணவர்களின் திட்டமான "இயந்திர கற்றல்

அணுகுமுறையைப் பயன்படுத்தி காட்சி ஆய்வுடன் IoT அடிப்படையிலான

சேர்க்கை உற்பத்தி முறைக்கான ஸ்மார்ட் தொழிற்சாலை" தேர்வு

செய்யப்பட்டுள்ளது. மருத்துவ பாகங்கள் மற்றும் செயற்கை மனித பாகங்கள்

தயாரிக்க நாம் சேர்க்கை உற்பத்தியைப் பயன்படுத்தலாம். இதன் மூலம்

பொருள் விரயம், மாசு மற்றும் பசுமை உற்பத்தி ஆகியவற்றைக் குறைக்க

முடியும்

நிர்வாகி மற்றும் வாடிக்கையாளர் இருவருக்கும் தனிப்பட்ட உரிமையுடன்


வலைப்பக்கத்தை உருவாக்கி உள்ளோம். நிர்வாகி ஸ்மார்ட்
தொழிற்சாலையை, நிர்வாக டாஷ்போர்டு மூலம் எங்கிருந்தும் இயக்க
தன்னாட்சி சக்தியை வழங்குகிறது. வாடிக்கையாளர் டாஷ்போர்டில் பொருட்களை
வாங்க உறுதிசெய்யவும் மற்றும் கண்காணிப்பதற்காண ஏற்பாடுகள் உள்ளது.
கிளையன்ட் டாஷ்போர்டில் இருந்து தகவலை பெற்றபின், எங்கள்
ஸ்மார்ட்உற்பத்தி முறை பொருட்களின் 3 டி பகுதியை அச்சிடத் தொடங்குகிறது.
அடுத்த நிலையில், ஒரு நான்கு அச்சு ஸ்காரா ரோபோ அச்சிடப்பட்ட
பொருட்களை நியூமேடிக் கிரிப்பர் மூலம் ஒன்றிணைக்கும். பொருட்களின்
சரியான அளவையும், தன்மையையும், தரத்தையும் உறுதிப்படுத்த காட்சி ஆய்வு
செய்யும் பார்வை முறையைப் பயன்படுத்தியுள்ளது. தயாரிப்பில் குறைபாடற்ற
பொருட்களை கண்வேயோர் மூலம் தானாகவே பொதி செயலாக்கத்திற்கு
செலுத்தும். நிர்வாக டாஷ்போர்டு மூலம் தொழிற்சாலையின் அணைத்து
செயல்களையும் கண்காணிக்கவும், வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்பு
நிலையையும், தன்மையையும் உறுதிபடுத்தும் ஏற்பாடுகள் இத்திட்டத்தின் தனித்துவமாக உள்ளது.

You might also like