You are on page 1of 1

TUTORIAL 12 24/3/2020

கற்புலன் குறைந்த மாணவர்களின் கற்பித்தல் முறை

கற்புலன் குறைந்த மாணவர்கள் என்றால் பார்வை இல்லாத மாணவர்கள் என்று


பொருள்படும். பார்வை இல்லாதா மாணவர்களுக்கு கண் தவிற மற்ற புலன்களின் மூலன்
உணர்வுகளை உணர முடியும். அதனை மையமாகக் கொண்டு ஆசிரியர்கள் கற்றல்
கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அவற்றின் முதல் முறையாக பள்ளிகளில்
‘பிரேய்ல்’ (Braille) எழுத்து வடிவங்களின் மூலம் கற்றுக் கொடுக்கலாம். ஆசிரியர்
மாணவர்களின் பாட குறிப்புகளை ‘பிரேய்ல்’ வடிவத்தில் தயார்செய்து மாணவர்களிடம்
கொடுத்து படிக்கச் செய்து அதன் பிறகு ஆசிரிய அப்பாடத்தினை மேலும் விரிவாகக்
கற்றுக் கொடுக்கலாம். உலகத்தில் பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் எழுத்து ‘பிரேய்ல்’
வடிவமே ஆகும்.

அதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்களின் செவிவழி கேட்டறிதல்


முறையைப் பயன்படுத்தலாம். அதாவது ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அன்றைய பாடம்
சார்ந்த காணொளிகள், நகைச்சுவை துனுக்குகள், திரையிசைப்பாடல்களின்
மெட்டுக்களுக்கேற்ப பாட குறிப்புகளை மாற்றியமைத்து ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கலாம்.
இம்முறையில் மாணவர்கள் ஆர்வமுடனும் ஈடுபாட்டுடனும் கற்றல் கரித்தலில்
ஈடுபடுவார்கள். செவிவாயிலாக கேட்டறியும் மாணவர்கள் பாடம் தொடர்பான
புரிந்துணர்தல் மேம்படுவதோடு பாடம் தொடர்பான வேறு காட்டுகளையும் மாணவர்கள்
கண்டறியமுடியும்.

தொடர்ந்து, ஆசிரியர்கள் மாணவர்களின் கைகளில் எழுதி அதனைக் கண்டறியும்


முறையைப் பயன்படுத்தலாம். பார்வையற்ற மாணவர்களின் தொடுதல் புலன் மிகவும்
சிறப்பாக இயங்கும். ஆதலால் ஆசிரியர்கள் மாணவர்களின் கைகளில் சொற்கள்,
வாக்கியம் அல்லது கேள்விகளை எழுதி அதற்கான விடைகளை மாணவர்களைக் கூறச்
செய்யலாம். இதன் வாயிலாக மாணவர்களி சிந்தனைத் திறன் விரிவடைவதோடு பல
கோணங்களில் கேள்விக்காண விடைகளை மாணவர்கள் சிந்திப்பார்கள்.

You might also like