You are on page 1of 2

சீனாவுக்கு மட்டுமே ட்ரம்ப் தடை விதித்தார்,

ஆனால்...?’ - நியூயார்க் கொரோனா


ஹாட்ஸ்பாட் ஆன பின்னணி
சத்யா கோபாலன்

நியூயார்க் ( AP )

கொரோனாவால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் நகரத்துக்கு ஐரோப்பாவிலிருந்துதான் வைரஸ்


பரவியதாகத் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸால் மொத்த உலகமும் வீட்டுச் சிறையில் அடைபட்டுச் செய்வதறியாது


திணறிவருகிறது. இது ஒருபக்கம் என்றால் வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால்
அதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றன.
இருப்பினும், கொரோனா தொற்றின் எண்ணிக்கை ஏறுமுகத்திலேயே உள்ளது. இதுவரை
உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சமாகவும்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 96,000 - ஆகவும் உள்ளது.
நியூயார்க்AP

உலகிலேயே மிக அதிகமாக வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைக்கொண்ட நாடாக அமெரிக்கா


உள்ளது. அதிலும் குறிப்பாக நியூயார்க் நகரில் மட்டும் சுமார் 1,50,000 பேர் கொரோனா
வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற நாடுகளின்
முக்கிய நகரங்களில் இல்லாத அளவு நியூயார்க்கில் மூன்று மடங்கு அதிக பாதிப்பு மற்றும்
உயிரிழப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read

`நவீனகால கடற்கொள்ளையர்கள்..!' - ஐரோப்பிய பொருள்களைத் தட்டிப் பறித்ததா


அமெரிக்கா?!

இந்நிலையில் நியூயார்க் எப்படி கொரோனா வைரஸின் ஹாட்ஸ்பாட்டாக மாறியது என


எகிப்தின் சினாய் மவுண்டில் உள்ள இகான் ஸ்கூல் ஆஃப் மெடிசினின் மரபியலாளர் ஹார்ம்
வான் பேகல் விளக்கியுள்ளார். “அமெரிக்காவில் பரவியுள்ள பெரும்பாலான வைரஸ் தொற்று
ஐரோப்பாவிலிருந்து இறக்குமதியானதே தவிர ஆசியாவிலிருந்து இல்லை. முதல் கொரோனா
வைரஸ் தொற்று நோயாளி நியூயார்க்கில் கண்டுபிடிப்பதற்குச் சில வாரங்கள் முன்னதாகவே
அதாவது பிப்ரவரி மாதம் தொடக்கத்திலே அங்கு வைரஸ் சுழற்சி இருந்துள்ளது.

You might also like