You are on page 1of 1

1. கற்றல் களஞ்சியங்கள் என்பதற்கான வரையறை என்ன ?

கற்றல் கற்பித்தல் முழுமையாக நடைபெற உதவும் ஒரு கருவியே கற்றல் களஞ்சியங்கள் ஆகும்.

2. கற்றல் களஞ்சியங்களின் வகை தொகைகளைக் குறிப்பிடுக. (அச்சு வடிவம்; மின்னியல்


வடிவம்)

கற்றல் களஞ்சியங்களை இரு வகையாக பிரிக்கலாம். முதலாவதாக, அச்சு வடிவம்.


உதாரணத்திற்கு, புத்தகங்கள், நாளிதழ், சஞ்சிகை, படங்கள் போன்றவையாகும். அடுத்தாக,
மின்னியல் வடிவமாகும். உதாரணத்திற்கு, காணோலி, கணினி விளையாட்டு, நழுவம்
போன்றவையாகும்.

3. கற்றல் களஞ்சியங்களின் அவசியம் யாது ?

கற்றல் களஞ்சியங்களினால் மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தலில் மாணவர்களுக்கு ஆர்வம்


ஏற்படும். இதனால், மாணவர்கள் பாடத்தில் தங்களின் முழு கவனத்தையும் செலுத்துவார்கள்.
இம்மாதிரியான சூழல் உருவாகினால், கற்றல் கற்பித்தலும் எந்த ஒரு தங்கு தடையுமின்றி
நடைபெறும். இறுதியில், ஆசிரியரால் அவர் திட்டமிட்ட பாட நோக்கத்தை அடையும் ஓர்
களமாக அமையும்.

4. கற்றல் களஞ்சியங்களின் தன்மைகளும் பயன்படுத்தும் விதத்தைப் பற்றியும் விளக்குக.

தன்மைகள் :
- எல்லா வகையான மாணவர்களும் பயன்படுத்தும் வண்ணம் அமைய வேண்டும்
- எளிமையாக இருத்தல் வேண்டும்

பயன்படுத்தும் விதம் :
- ஆசிரியர் வழிகாட்டலுக்கு ஏற்பவே பயன்படுத்துவர்.

You might also like