You are on page 1of 1

நீங்கள் உருவாக்கிய புத்தாக்கத்தின் பலம், பலவீனம் ஆகியவற்றை மதிப்பிட்டு அதனை

மேம்படுத்தும் வழிமுறைகளை ஆய்ந்து விளக்கிடுக.

நான் உருவாக்கிய புத்தாக்கமானது பழமொழி களம் என்ற பயில்பொருள். இது இரண்டாம்


ஆண்டு மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இந்த புத்தாக்கம் பலம் பலவீனங்களைக்
கொண்டுள்ளது.

முதலாவதாக, இந்த பயில்பொருளின் பலம் என்னவென்றால் மாணவர்கள் எந்த


மடிக்கணினியிலும் இந்த பயில்பொருள் இருக்கும் குறுந்தட்டை செலுத்தி பயன்படுத்தலாம்.
மாணவர்கள் இணைய வசதியில்லாமலும் இதனை பயன்படுத்த இயலும். இதனால்,
தொழில்நுட்ப வசதிகள் குறைவாக இருக்கும் பள்ளிகளிலும் இவற்றைப் பயன்படுத்த இயலும்.

தொடர்ந்து, இந்த பயில்பொருளில் பல்வேறு வண்ண படங்கள், காணொளிகள்


இணைத்திருப்பதனால் மாணவர்கள் ஆர்வத்துடன் இதனை பயன்படுத்துவர். வகுப்பில்
ஆசிரியர் கூறுவதை மட்டும் கேட்டுக் கொண்டிருப்பதனால் மாணவர்கள் பல வேளைகளில்
சோர்வடைந்து விடுவர். அதனால், மாணவர்களின் சிந்தனையை தெளிவுப்படுத்தி
புத்துணர்ச்சியாகவும் இருக்க இப்பயில்பொருள் உதவும்.

இறுதியாக, இந்த பயில்பொருளில் சில பலவீனங்களும் கொண்டுள்ளது.


இப்பயில்பொருளில் சுலபமான கேள்விகள் வழங்கப்பட்டிருப்பதால், இவை மெதுபயில்
மாணவர்களுக்கு ஒரு சவாலாக அமையும். ஆனால், முதல்நிலை மாணவர்கள் சீக்கிரமாக
முடித்துவிடுவர். இதனால், அவர்களுக்கென்று ஆசிரியர் கூடுதல் பயிற்சி கொடுக்க வேண்டிய
நிலை ஏற்படும். எனவே, இந்த பயில்பொருளில் சுலபமான கேள்விகளில் இருந்து சற்று
கடினமான கேள்விகளுக்குச் செல்லும் வகையில் அமைந்தால், அனைத்து மாணவர்களாலும்
பயன்படுத்த இயலும்.

You might also like