You are on page 1of 5

கொடுக்கப்பட்ட அறிவிப்பைத் துணைக் கொண்டு வினாக்களுக்கு விடை காண்க.

1. போட்டி என்று நடைப்பெறவுள்ளது?

A. 1 மார்ச் 2014

B. 2 மார்ச் 2014

C. 1 மார்ச் 2015

2. இப்பள்ளியில் என்ன விழா கொண்டாடப்படவிருக்கின்றது?

A. சிற்றுண்டி தினம்

B. பொங்கல் விழா

C. வளர்தமிழ் விழா
3. போட்டி எத்தனை மணி நேரம் நடைப்பெறவுள்ளது?

A. 6 1/2 மணிநேரம்

B. 7 மணிநேரம்

C. 6 மணிநேரம்

4. எத்தனை வகையான போட்டிகள் நடைப்பெறவுள்ளன?

A. 5

B. 7

C. 6

5. போட்டியில் கலந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?

A. தலைமையாசிரியரிம் தங்கள் பெயரைப் பதிந்து கொள்ள வேண்டும்.

B. தத்தம் வகுப்பாசிரியர்களிடம் தங்கள் பெயரைப் பதிந்து கொள்ள வேண்டும்.

C. போட்டிகள் நடைப்பெறும் தினத்தன்று கலந்து கொள்ள வேண்டும்.

உலகநீதிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.


6. "மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது" என்ற பொருளுக்கு சரியான உலகநீதி யாது?

A. போகாத விடந்தனிலே போக வேண்டாம்..

B. நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.

C. நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்.

7. "நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்" என்ற உலகநீதியின் பொருள் என்ன?

A. நிலையற்ற காரியங்களை நிலைநிறுத்த அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும்.

B. நிலையற்ற காரியங்களை நிலைநிறுத்திக் காட்ட வேண்டும்.

C. நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த முயலக்கூடாது.


பின்வரும் சொற்களில் உள்ள வேற்றுமை உருபுகளின் வகையைக் கண்டறிக.
8. காவியா

A. முதலாம் வேற்றுமை

B. ஆறாம் வேற்றுமை

C. விளி/எட்டாம் வேற்றுமை

9. செயலை

A. நான்காம் வேற்றுமை

B. ஐந்தாம் வேற்றுமை

C. இரண்டாம் வேற்றுமை

10. தச்சன்

A. முதலாம் வேற்றுமை

B. ஆறாம் வேற்றுமை

C. இரண்டாம் வேற்றுமை

11. பள்ளியை

A. இரண்டாம் வேற்றுமை

B. மூன்றாம் வேற்றுமை

C. முதலாம் வேற்றுமை

12. அமுதன்

A. விளி/எட்டாம் வேற்றுமை

B. நான்காம் வேற்றுமை

C. முதலாம் வேற்றுமை

13. பாடத்தை

A. இரண்டாம் வேற்றுமை

B. நான்காம் வேற்றுமை

C. முதலாம் வேற்றுமை
சொற்களைப் பிரித்து எழுதுக.
14.பேரனை

A. பேரன்+ஐ

B. பேர்+ஐ

C. பேர+னை

15. குடையை

A. குடை+யை

B. குடை+ஐ

C. கு+டைஐ

16. இளமையை

A. இளமை+ஐ

B. இள+மைஐ

C. இளம்+ஐ

17. சொற்களை

A. சொற்கள்+ஐ

B. சொல்+ஐ

C. சொற்கள்+ளை

18. செயலை

A. செயல+ஐ

B. செய்+ஐ

C. செயல்+ஐ

19. காலத்தை

A. கால+ஐ

B. கால் + ஐ

C. காலம் +ஐ

20. கட்டுரையை

A. கட்டுரை+ ஐ
B. கட்டுரை+யை

C. கட்டு+ஐ

You might also like