You are on page 1of 16

கதை

பத்மபாதர் கதை

ஆதிசங்கரர் காசியில் கங்கையின் புனித நீர்கரையில் தங்கினார். ஆதிசங்கரரை அனைவரும்


விரும்பினர்.இவரிடம் வேதமும் உபநிஷத்துக்களையும் கற்க பல சீடர்கள் வந்தனர். அவர்களுள்
சனந்தனனும் ஒருவர்.அவர் ஆதிசங்கரரிடம் வேதபாடம் கற்று வந்தார். சனந்தனன் சிறந்த அறிவாளி.
ஒரு நாள் இவர் கங்கையின் எதிர்கரையில் இருந்தார்;வகுப்பு நேரம் நெருங்கிவிட்டது. அப்போது திடீர்
என கங்கையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.சனந்தனனுக்கு வகுப்பைத் தவற விட்டு விடுவோமோ?
என்ற பயம். அதற்குள்,ஆதிசங்கரர் கங்கையைத் தாண்டி வரும்படி சனந்தனனுக்குக் கண்களால்
சமிக்ஞைக் காட்டினார். சனந்தனனோ சற்றும் யோசிக்காது, குருவின் ஆணைப்படி கங்கையைக் கடக்க
ஆரம்பித்தார். அவரின் குருபக்தியைக் கண்டக் கங்காதேவியோ அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு
அடிக்கும், அவரைத் தாங்க அவர் காலடியில் ஒரு தாமரை மலரைத் தோற்றுவித்தாள்.அன்றிலிருந்து
சனந்தனன் பத்மபாதர் என அழைக்கப்பட்டார். பத்மம் என்றால் தாமரை, பாதம் என்றால் காலடி. ‘மாதா
பிதா குரு தெய்வம்’.

நம்பிக்கையை நெஞ்சில் வை

ஒருமுறை சிவனும், பார்வதியும் கங்கைக்கரைக்கு வந்தனர். ஏராளமான மக்கள் நீராடிக் கொண்டிருந்தனர்.


அப்போது பார்வதி சிவனிடம், ''ஐயனே! இங்கே இவ்வளவு மக்கள் குளிக்கிறார்கள். 
கங்கையில் குளித்தால் சொர்க்கம் என்கிறீர்கள். ஆனால் சொர்க்கம் நிரம்பவே இல்லையே! என்ன காரணம்?'' என்றாள்.
சிவன் உடனே முதியவராக மாறி, பார்வதியையும் முதியவள் ஆக்கினார். 
''பார்வதி! நான் கங்கையில் மூழ்குவது போல் நடிக்கிறேன். பாவம் செய்யாத யாராவது என் கணவரைக் காப்பாற்றுங்களேன்
என நீ சத்தம் போடு. நடப்பதை வேடிக்கை பார்,'' என்றார். சொன்னபடி கங்கையில் மூழ்குவது போல நடித்தார்.
கரையில் நின்றவர்கள் நீரில் பாய முயன்றதும், பார்வதி அவர்களிடம், ''உங்களில் பாவம் செய்யாதவர் மட்டுமே, என்
கணவரைக் காப்பாற்ற வேண்டும்,'' என்று நிபந்தனை விதித்தாள். எல்லாரும் பின் வாங்கிய நேரத்தில், ஒரு இளைஞன் மட்டும்
கங்கையில் குதித்து முதியவரான சிவனை தூக்கி வந்தான்.
''அப்பா! நீ பாவமே செய்யவில்லையா?'' என்று பார்வதி கேட்டாள்.
''பாட்டி! நான் பாவம் செய்தவன் தான். ஆனால் கங்கையில் என் உடல் பட்டவுடன் தான் பாவங்கள் பறந்திருக்குமே!
அதுதானே நம் காலம் காலமான நம்பிக்கை!''என்று சொல்லி விட்டு போய் விட்டான்.
''பார்த்தாயா பார்வதி! அந்த இளைஞன் கங்கையைப் பற்றி கொண்டிருந்த நம்பிக்கை மற்றவர்களுக்கு இல்லை. அவர்கள்
கடமைக்கு இதில் நீராடுகிறார்கள். நம்பிக்கை கொண்டவர்களே சொர்க்கம் வர முடியும்,'' என்றார்.
ஆன்மிகத்தில் மட்டுமல்ல... எதிலுமே நம்பிக்கை வையுங்கள். வெற்றிக்கனியைப் பறியுங்கள்.

தவறான ஆட்சியாளர்கள்- திருதராஷ்திரரும் கிருஷ்ணரும்


ஒரு நாட்டின் அரசன் மிகவும் நல்லவன், நீதிமான். சைவ உணவுகளையே உண்பான். அவனை எப்படியாவது
அசைவம் சாப்பிட வைக்க வேண்டுமென திட்டம் போட்டான் அரண்மனை சமையல்காரன். சமையலில்
மகாகெட்டிக்காரன்.
ஒரு பறவையை சமைத்து சைவ உணவுடன் லாவகமாகக் கலந்து அரசனுக்கு பரிமாறி விட்டான்.
அரசனும், சமையல்காரனை ஆகா ஓகோவென புகழ்ந்து தள்ளிக்கொண்டே சாப்பிட்டான். இதுபோன்ற
உணவு தினமும் வேண்டுமென்று உத்தரவும் போட்டு விட்டான். சமையல்காரனும் அதன்படியே செய்தான்.
இந்தக் கதையைச் சொன்னவர் கிருஷ்ணர். கேட்டவன் கவுரவர்களின் தந்தை திருதராஷ்டிரன். கதையை
முடித்த கிருஷ்ணன், ''திருதராஷ்டிரரே! இப்போது சொல்லும்! இங்கே சமையல்காரன் குற்றவாளியா? ராஜா
குற்றவாளியா?'' என்றான்.
திருதராஷ்டிரன் தெளிவாகச் சொன்னான்.
''ஒரு நாட்டின் தலைமைப்பொறுப்பில் இருப்பவன், அனைத்தையும் பகுத்தறிந்து கண்டுபிடிக்க
தெரிந்தவனாக இருக்க வேண்டும். சமையல்காரன் செய்தது சிறு குற்றம். ஒரு உணவில் கூட மாற்றம்
இருப்பதை அறியாத ராஜா, நாட்டை எப்படி ஆள முடியும்! அவனே குற்றவாளி,'' என்றான்.
உடனே கிருஷ்ணர் சொன்னார்.
''நீங்களும் இதே தவறைத்தான் செய்கிறீர்கள் திருதராஷ்டிரரே! உங்கள் பிள்ளைகள் தவறு செய்கிறார்கள்
என்று தெரிந்தும், அதை தடுத்து நிறுத்தாமல் அழிவுக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் சொல்வது
சரிதானே!'' என்று கேட்கவும், திருதராஷ்டிரனால் எந்தப்பதிலும் சொல்ல முடியவில்லை.

கர்ப்பரட்சாம்பிகை.
முல்லை வனமான கருகாத்த நாயகியின் தலத்தில் கவுதமர், கார்க்கேயர் என்ற இரண்டு முனிவர்கள் ஆசிரமம் அமைத்து தவம் செய்து
வந்தனர். நித்ருவ முனிவரும், அவரது மனைவி வேதிகையும் இங்கு தங்கி முனிவர்களுக்குப் பணிவிடை செய்து வந்தனர். தங்களுக்குக்
குழந்தை இல்லாத ஏக்கத்தால், ஒரு நாள் முனிவர்களிடம் கவலை தோய்ந்த குரலில் இவர்கள் சொன்னார்கள். அதற்கு, 'இங்கு எழுந்தருளி
உள்ள சிவனையும், அம்பாளையும் வணங்கினால் வேண்டியது கிடைக்கும்' என்று அருளினர் முனிவர்கள்.
அதன்படி முல்லைவனத்தில் எழுந்தருளியுள்ள அவர்களை வணங்கினர் தம்பதியர். தங்களுக்குக் குழந்தைப் பேறு வாய்க்க வேண்டும் என்று
உருக்கமாகப் பிரார்த்தித்துக் கொண்டனர். தெய்வங்களின் பரிபூரண ஆசி தம்பதியருக்குக் கிடைத்தது. அந்த ஆசியின்படி வேதிகை
கர்ப்பவதியானாள்.
அப்போது கடும் வெயில் காலம். வேதிகையின் கணவரான நித்ருவ முனிவர் க்ஷேத்ராடனம் போயிருந்தார். அன்றைய தினம் அவளுக்குப்
பேறு கால அவஸ்தை ஏற்பட்டது. அந்த நேரம் பார்த்து ஊர்த்துவர் என்ற முனிவர் பிட்சை கேட்டு வாசலில் நின்றார். முனிவரின் குரல்
கேட்டும், வேதிகையால் 
எழக்கூட முடியவில்லை. குரல் கொடுக்கவும் இயலாத அளவுக்கு வலி தாங்க முடியவில்லை.
வேதிகையின் அவஸ்தை பற்றி அறியாத ஊர்த்துவர், அவள் தன்னை அவமதிக்கிறாள் என்று நினைத்துக் கொண்டு அவளுக்கு, எந்த
நல்லதும் நடக்கக்கூடாது சாபம் கொடுத்து விட்டார். அவ்வளவுதான்... வேதிகையின் கரு அடுத்த கணமே கலைந்து போனது. அன்னை
கர்ப்பரட்சாம்பிகையால் கிடைத்த குழந்தை பாக்கியம், இப்படி ஆகி விட்டதே என அந்த அன்னையிடமே போய் நின்றாள் வேதிகை.
''அம்மா! இது எந்த வகையில் நியாயம்'' எனக் கேட்கவும், அம்பாள் அவள் முன் தோன்றினாள். கலைந்த கருவை ஒரு குடத்துக்குள்
ஆவாஹனம் செய்து, ''வேதிகை! கவலை வேண்டாம். கலைந்த உன் கரு இந்த குடத்தில் பத்திரமாக இருக்கிறது. உனக்கு இதிலிருந்தே
குழந்தை கிடைக்கும்,'' என்றாள். 
அதன்படி குடத்தை தன்வசமே வைத்திருந்து குழந்தை பிறக்கும் வரை காப்பாற்றிக் கொடுத்தாள். அந்தக் குழந்தை தான் நருவன். 
அம்பாளின் அருள் மகிமை, அனுபவத்தால் உணர்ந்த வேதிகை, ''அன்னையே! இனி இந்தத் தலத்தில், நீ 'கர்ப்பரட்சாம்பிகை' என்ற பெயரில்
எழுந்தருளி, 
கருத்தரித்தவர்களையும், அவர்களது கருவையும் என்றென்றும் உடன் இருந்து காப்பாற்ற வேண்டும். கர்ப்பவதிகள் சுகப் பிரசவம் காண
வேண்டும்,'' என்று 
பிரார்த்தித்தாள். அம்பாளும் அவ்வாறே அருள்பாலித்தாள். குழந்தை நருவனுக்குத் தாய்ப்பால் இல்லாததால், அம்பாளே காமதேனுவை
அனுப்பி பால் கொடுக்கச் செய்தாள். காமதேனு தன் கால் குளம்பினால் கீறவும், ஒரு பால் குளம் தோன்றியது. அது ஆலயத்துக்கு முன்புறம்
இன்றும் காணப்படுகிறது. இதை 'க்ஷீரகுண்டம்' என்பர். 'க்ஷீரம்' என்றால் பால்., கர்ப்பரட்சாம்பிகையை வழிபட்டு நலம்
பெறுகின்றனர். இங்குள்ள சிவனின் திருநாமம் முல்லைவன நாதர். மகப்பேறு அளிப்பதால் கர்ப்பபுரீஸ்வரர் என்றும் அழைப்பர். 

சுவாமி விவேகானந்தர்
கதைகள் – துணிவு கொண்ட
நெஞ்சினாய் வா, வா, வா!
காசி திருத்தலம் கங்கைக் கரையில் அமைந்திருக்கிறது. இங்கு காசி விசுவநாதரும்
விசாலாட்சியும் எழுந்தருளியிருக்கிறார்கள். ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர்,
காசியில் துர்க்கை கோயிலின் மதிற்சுவரையொட்டி நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவரை அங்கிருந்த ஒரு குரங்குக் கூட்டம் பார்த்தது. உடனே குரங்குக்
கூட்டம் கீ றிச்சிட்டு, பெரும் கூச்சலுடன் விவேகானந்தரைச் சூழ்ந்துகொண்டது. இந்த
நிலையில் அவர் முன்னேறுவதற்குத் தயங்கிப் பின்வாங்கினார். அதைப் பார்த்த சில
குரங்குகள் அவர் மீ து முரட்டுத்தனமாகப் பாய்ந்தன, சில குரங்குகள் அவரைப்
பிறாண்டின, சில குரங்குகள் அவரைக் கடித்தன, சில குரங்குகள் அவரது உடையைப்
பிடித்திழுத்தன! எனவே இந்த இக்கட்டான நிலையில் விவேகானந்தர்,
குரங்குகளிடமிருந்து தப்பிப்பதற்கு அங்கிருந்து ஓட ஆரம்பித்தார்! ஆனால் அவர்
ஓடினாலும், குரங்குகள் பின்தொடர்ந்து அவரை விடாமல் துரத்தின. இந்தக்
குரங்குகளிடமிருந்து தப்புவதற்கு வழியில்லை! என்று அவர் நினைத்தார்.
விவேகானந்தர் ஓடிக்கொண்டிருப்பதையும், ஒரு குரங்குக் கூட்டம் அவரைத்
துரத்துவதையும் சற்று தூரத்திலிருந்த சந்நியாசி ஒருவர் பார்த்தார்.

உடனே அவர் விவேகானந்தரைப் பார்த்து, நில்! குரங்குகளை எதிர்த்து நில்! என்று


உரத்த குரலில் கூவினார். அந்தச் சொற்கள் விவேகானந்தரின் காதுகளில் விழுந்தன.
அவர் புதிய ஓர் ஊக்கம் பெற்றார். உடனே ஓடுவதை நிறுத்தி, துணிவுடன்
குரங்குகளை நோக்கித் திரும்பினார். இப்போது அவர் குரங்குளை நோக்கி
முனைப்புடன் முன்னேறத் தொடங்கினார். அவர் உறுதியுடன் வறுடன்
ீ குரங்குகளை
எதிர்க்கும் நிலையில் இருந்தார். அவ்வளவுதான்! அவரது தோற்றத்தைப் பார்த்து
குரங்குக் கூட்டம் பயந்துவிட்டது! இப்போது அங்கு நிலைமை தலைகீ ழாக
மாறிவிட்டது! இவர் நம்மைத் தாக்குவார்! இவரிடமிருந்து இப்போது நாம் எப்படியும்
தப்பிக்க வேண்டும்! இவரிடமிருந்து நாம் தப்பித்தால் போதும்! என்று குரங்குகள்
நினைத்து, அங்கிருந்து பின்வாங்கி மிகவும் வேகமாக வந்த வழியில் திரும்பி ஓட
ஆரம்பித்தன! இந்த நிகழ்ச்சி விவேகானந்தரின் உள்ளத்தில் மிகவும் நன்றாகப்
பதிந்துவிட்டது.

இதை அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவில் நியூயார்க்கில் நிகழ்த்திய


ஒரு சொற்பொழிவில் கூறினார். அந்தச் சொற்பொழிவில் அவர், இந்த நிகழ்ச்சியின்
மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினையைப் பற்றியும் இவ்விதம் குறிப்பிட்டார்: இது
நம் வாழ்க்கை முழுவதற்கும் நல்ல ஒரு படிப்பினையாகும். பயங்கரத்தை எதிர்த்து
நில்! தைரியமாகப் பிரச்னைகளை எதிர்த்து நில்! ஒருபோதும் அவற்றுக்கு பயந்து
ஓடாதே! இவற்றுக்கு நாம் பயந்து ஓடாமல் இருந்தால், அந்தக் குரங்குக்கூட்டம்
போலவே துன்பங்களும் நம்மிடமிருந்து விலகி ஓடிவிடும். மனிதனைக் கீ ழ்நிலைக்கு
இழுத்துச் செல்லும் இயற்கையின் வேகங்களையும், பிரச்னைகளையும் நாம் எதிர்த்து
நிற்க வேண்டும். அவற்றிற்கு ஒருபோதும் பணிந்துவிடக் கூடாது. கோழைகள்
ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை. அச்சத்தை எதிர்த்து நில்லுங்கள்! துன்பங்களை
எதிர்த்து நில்லுங்கள்! அறியாமையை எதிர்த்து நில்லுங்கள்!

கர்வம்

மரணமில்லா மார்கண்டேயன்
https://www.youtube.com/watch?v=9n5AHbH94pY&t=208s

murugan uthiththa kathai

https://www.youtube.com/watch?v=JU1wYCd0AZc

காவேரி பிறந்தக் கதை

https://www.youtube.com/watch?v=0PGUVK62Gps

ஞானசம்பந்தர்

https://www.youtube.com/watch?v=xX4QaBBqQk4

ஞானசம்பந்தர் பொற்றாளம் பெற்றக் கதை

https://www.youtube.com/watch?v=TBKANbQgMnA

திருநீலகண்டர்

https://www.youtube.com/watch?v=mQnaGClKHyg

பக்த பிரகலாதன்

https://www.youtube.com/watch?v=xJKZqRMWMnw

அதிபத்த நாயனார்

https://www.youtube.com/watch?v=h9qT18qPG4M

அப்பூதியடிகள் நாயனார்

https://www.youtube.com/watch?v=u5nZwXFc5G8

கோபாலனும் கோவர்த்தன மலையும்

https://www.youtube.com/watch?v=A010rqCJTzs

கிருஷ்ணனும் பாம்பும்

https://www.youtube.com/watch?v=500D9e7Cd64&t=380s

https://www.youtube.com/watch?v=500D9e7Cd64

முருகன் பக்தருக்கு அருளிய காட்சி

https://www.youtube.com/watch?v=m4ydwU0NMpg
1.உபமந்யு கதை

2.பிரகலாதன் கதை

3.மார்கண்டேயன் கதை

4.துருவன் கதை

https://www.youtube.com/watch?v=LRRgZgcMaLQ

துருவன்

https://www.youtube.com/watch?v=GJmXfHDbUcY

அருணகிரிநாதரும் முருகரும்

https://www.youtube.com/watch?v=NGyg1PqhrMU

கிருஷ்ணனும் பூதனாவும் இராட்ச்சி

https://www.youtube.com/watch?v=78GL8DpHOeQ

(ஞானக்குழந்தை)

https://www.youtube.com/watch?v=tofX0hhLHIQ

https://www.youtube.com/watch?v=9GPWBfsio8o&t=650s

கணபதியும் மகாவிஷ்ணுவும்

கணபதியும் இராவணனும்

கணபதியும் வாகனமும்

கணபதியும் காவேரியும்

https://www.youtube.com/watch?v=FboXU_7X4Is

அனுமான்

https://www.youtube.com/watch?v=gntC5VcPmms
திருநாவுக்கரசர்

https://www.youtube.com/watch?v=YC0cg06rjxA

நரகாசுர வதம்

https://www.youtube.com/watch?v=kOogSaUQnu4

மகாபாரதம்

https://www.youtube.com/watch?v=gIxTugVn_7U

இராமயணம்

https://www.youtube.com/watch?v=YrQ8o1v0WUQ

அதிபத்த நாயனார்

https://www.youtube.com/watch?v=h9qT18qPG4M&t=178s

குங்கிலிய நாயனார்

https://www.youtube.com/watch?v=fJQwrcUthsM

அப்பூதி அடிகள் நாயனார்.

https://www.youtube.com/watch?v=9bf8Ib5wxYE

நம்பியாண்டார் நம்பி

பத்தாம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின் போது, சிதம்பரம் கோவிலில்


கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக மீ தம்
உள்ளவற்றை நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.

சுந்தரர்

சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார்


- இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினை
சேர்ந்தவர். [2] இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும்.[2]நம்பியாரூரன் என்பதை ஆரூரன்
என்று சுருக்கி அழைப்பர். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று
அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார். [1]

சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர்


நரசிங்கமுனையார் கண்டார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று
இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார். [1]
தடுத்தாட்கொள்ளல்[தொகு]
மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்கு புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின்
மகளை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில்
அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட
ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார்.
திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென
மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா
பிறை சூடி" என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பாடல்களின் மூலமாக
இறைவனை தன்னுடைய நண்பனாக்கிக் கொண்டார். சிவத் தலங்கள் தோறும்
சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த
பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத்
தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப்
பெற்றுக்கொண்டார். "நீள நினைந்தடியேன்" என்று தொடங்கும் அவர் பாடிய
தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க
இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.

திருமணங்கள்[தொகு]
திருவாரூரில் பரவையார் என்றொரு அழகிய பெண் இருந்தார். அவர் பதியிலார் குலத்தினைச்
சேர்ந்தவர். சுந்தரர் அப்பெண்ணைக் கண்டு காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார். சில
காலத்திற்குப் பின்பு திருவொற்றியூருக்கு வந்தவர், அங்கு சங்கிலியார் எனும் அழகியப்
பெண்ணைக் கண்டு காதல் கொண்டார். சுந்தரரின் நண்பனான சிவபெருமான் அவருக்காகத்
தூது சென்று, திருமணத்தினை நடத்திவைத்தார்.

சிவபெருமான் செயல்[தொகு]
அரசரான சேரமான் பெருமாள் இவருக்கு நண்பராயிருந்தார்.

இறைவனும் இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை.சேரமான் பெருமானை


இவர் சந்தித்து திரும்பும் போது, அம்மன்னர் பொன்,பொருள்,மணியிழைகள்,ஆடைகள் போன்ற
பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார். திருமுருகன்பூண்டியில், இறைவன்
அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக்
கொண்டார். சுந்தரர் ’கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்....’ எனத்துவங்கும் பதிகம் பாடி
இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.திருமுருகன்பூண்டி
சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான் சுந்தரரிடமிருந்து
கவர்ந்த பொருட்களை இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

முக்தி[தொகு]
சுந்தரர் தனது 18 ஆவது வயதில் சிவனடி சேர அடைந்திட பதிகம் பாடினார். சிவபெருமான்
வெள்ளை யானை சுந்தருக்கு அனுப்ப, அதில் ஏறி கைலாயம் சென்றார். அங்கிருந்த சிவனும்
பார்வதியும் வரவேற்று முக்தியளித்தனர்.
அற்புதங்கள்[தொகு]

1. செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது


2. சிவபெருமான் கொடுத்தருளிய பன்ன ீராயிரம் பொன்னை விருத்தாச்சலத்தில் உள்ள
ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது.
3. காவிரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது.
4. அவிநாசியில் முதலை விழுங்கிய பிராமணக் குழந்தையை அம்முதலையின்
வாயின்று மூன்றாண்டு வளர்ச்சியுடன் அழைத்துக் கொடுத்தது.[2]
5. வெள்ளை யானையில் ஏறி திருக்கைலாசத்திற்கு எழுந்தருளியது. [2]

குருபூஜை[தொகு]

பூம்பாவை
https://ta.wikipedia.org/s/mf
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூம்பாவை என்பவர் எழாம் நூற்றாண்டில் மயிலாப்பூரில் வாழ்ந்த பெண்ணாவார்.


இவர் பாம்பு தீண்டி இறந்து போக, இவரது சம்பலிருந்து திருஞானசம்பந்தர் பதிகம்
பாடி உயிர்ப்பித்தார். பூம்பாவை சந்நிதி மயிலாப்பூர் கபாலிசுவரர் சிவாலயத்தில்
அமைந்துள்ளது. இத்தலத்தில் பூம்பாவை உயிர்ப்பிக்கும் நிகழ்வு
பிரம்மேட்சவத்தின் பொழுது நடைபெறுகிறது.

பொருளடக்கம்

  [மறை] 

 1 இளமையும் வாழ்வும்
 2 பூம்பாவை உயிர் பெறுதல்
 3 பூம்பாவை சந்நிதி
 4 பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி
 5 ஆதார நூல்
 6 இவற்றையும் காண்க
 7 ஆதாரங்கள்
 8 வெளி இணைப்புகள்

இளமையும் வாழ்வும்[தொகு]
மயிலாப்பூரில் சிவநேசர் என்பவர் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தார். இவர்
சிவபக்கதாரக இருந்தார். இவருக்கு பூம்பாவை என்ற மகளொருத்தி இருந்தாள்.
சைவ சமயத் தொண்டினைச் செய்யும் திருஞானசம்பந்தருக்கு தன்னுடைய
மகளான பூம்பாவையை திருமணம் செய்து வைக்க சிவநேசர் எண்ணியிருந்தார்.

தன்னுடைய ஏழாம் வயதில் ஒரு நாள் பூம்பாவை தன்னுடைய தோழிகளுடன்


மலர் பறித்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது, பாம்பொன்று தீண்டு இறந்து
விட்டாள்.   திருஞான சம்பந்தருக்கு திருமணம் செய்து வைக்க
[1]

எண்ணியிருந்தமையால், தன்னுடைய மகளை எரித்த பின்னும் அவளுடைய


எலும்பு மற்றும் சாம்பலினை நீர் நிலைகளில் கரைக்காது பாதுகாத்து வந்தார்
சிவநேசர்.

பூம்பாவை உயிர் பெறுதல்[தொகு]


திருவொற்றியூருக்கு திருஞான சம்பந்தர் வருவதை அறிந்த சிவநேசர், திருஞான
சம்பந்தரை சந்தித்தார். சிவநேசர் தன்னுடைய மகள் பூம்பாவையை திருஞான
சம்பந்தருக்கு திருமணம் செய்து வைக்க எண்ணியதையும், ஆனால் அவள்
சிறுவயதில் பாம்பு தீண்டி இறந்து விட்டதையும், தற்போது அவளுடைய சாம்பல்
மற்றும் எலும்பினை பாதுகாத்து வைத்திருப்பதைப் பற்றிக் கூறினார்.

திருஞான சம்பந்தர் மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை எனும் பாடலைப்


பாடிட, பூம்பாவை சாம்பலிருந்து உயிர்ப்பெற்று வந்தார்.   ஏழு வயதில் இறந்த
[2]

பூம்பாவை, பன்னிரெண்டு வயதான பெண்ணாக உயிர் பெற்றார். இருப்பினும்


தானே உயிர் கொடுத்தமையால் பூம்பாவையை திருமணம் செய்து கொள்ள
இயலாது என திருஞான சம்பந்தர் மறுத்துவிட்டார்.

அதன் பின் பூம்பாவை இறைத் தொண்டையை செய்து வாழ்ந்து வந்தார்.

பூம்பாவை சந்நிதி[தொகு]
பூம்பாவைக்கு மயிலாப்பூர் கபாலிசுவரர் கோயிலில் சந்நிதி அமைந்துள்ளது.
மயிலாப்பூர் கபாலிசுவரர் கோயிலின் வெளிப்புற பிரகாரத்தில் பூம்பாவைக்கு
சந்நிதி அமைந்துள்ளது. இந்த சன்னிதியின் கோபுரத்தில் பூம்பாவை உயிர்ப்பெற்று
எழும் நிகழ்வு சுதை சிற்பமாக உள்ளது. இதில் திருஞான சம்பந்தர், உயிர்ப்பெற்று
எழும் பூம்பாவை, பூம்பாவின் பெற்றோர்கள் உள்ளார்கள்.

பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி[தொகு]


திருஞானசம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சியை மயிலாப்பூர்
தளத்தில் விழாவாக கொண்டாடுகிறார்கள்.  மயிலாப்பூர் கபாலிசுவரர் கோயிலில்
[3]

பங்குனி பிரம்மோற்சவத்தின் 8 ம் நாளின் காலையில் இந்நிகழ்ச்சி


நடைபெறுகிறது. இதற்காக சம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் உற்வச சிலைகளை
தீர்த்தல் குளிப்பாட்டிய பிறகு, குடத்தில் நாட்டுச்சர்க்கையை இட்டு பூம்பாவையின்
சம்பலாக கொண்டுவருகிறார்கள்.

அதன்பிறகு திருஞானசம்பந்தரின் பதிக்கம் ஓதப்படுகிறது. இதன் பிறகு பூம்பாவை


உயிருடன் எழுந்ததாக பாவனை செய்து நிகழ்வினை முடிக்கின்றார்கள்.
இந்நிகழ்வினை பார்த்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.  [4]

இவ்வாறு பூம்பாவையை தைப்பூசநாளில் திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்தாக


கூறப்படுகிறது. [5]

கூன் பாண்டியன் கதை

பாண்டி நாட்டில் சைவம்[தொகு]


பாண்டி நாட்டில் நெடுமாற பாண்டியன் சமண சமயம் சார்ந்து இருந்தமையை
மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் என்ற இருவர் வாயிலாகத் தெரிந்து மதுரைக்குப்
புறப்பட்டார். நாளும் கோளும் நலமில்லாதிருந்தும் உமையொருபாகன் உள்ளத்து விருப்பத்தால்
“அவை நல்ல நல்ல” என “கோளருபதிகம்” பாடி, ஏகினார். பாண்டியன் வெப்புநோயை “திருநீற்றுப்
பதிகம்” பாடி அகற்றினார். அனல் வாதத்தை பச்சை பதிகம் பாடியும், புனல் வாதத்தாலும்
சமணர்களை வென்றார்.

பாண்டிய மன்னனையும், பாண்டி நாட்டு மக்களையும் சைவம் தழுவச்செய்தார். பாண்டி நாட்டில்


உள்ள தலங்களைத் தரிசித்தார். சோழநாடு மீ ண்டார். பிறகு, பல தலங்களைத் தரிசித்து
திருப்பூந்துருத்தி அடைந்தார்.. அப்பர் சுவாமிகள் இவரது சிவிகையைத் தாங்கியமையறிந்து
உடனே கீ ழிறங்கி இருவரும் அளவளாவி இருந்தனர். திருஒத்தூரில் ஆண் பனைகளைப் பெண்
பனைகளாக்கிக் காய்க்கச் செய்தார்.

ஔவையார், சேரமான், சுந்தரர்

சேரமான்பெருமாணாயனாரும் சுந்தரமூர்த்திநாயனாரும்,
கைலாசம் அடைதல்

சேரமான்பெருமாணாயனாரும் சுந்தரமூர்த்திநாயனாரும், திருக்கைலாசத்தின் தெற்குவாயிலுக்கு முன்


போனவுடனே, குதிரையினின்றும் யானையினின்றும் இறங்கி, பலவாயில்களையும் கடந்து,
திருவணுக்கன்றிரு வாயிலை அடைந்தார்கள். அங்கே சேரமான்பெருமாணாயனார் தடைப்பட்டு நிற்க;
சுந்தரமூர்த்திநாயனார் உள்ளே போய்ச் சிவசந்நிதானத்திலே விழுந்துநமஸ்கரித்து எழுந்து,
ஸ்தோத்திரம்பண்ணி, "சுவாமீ ! தேவரீருடைய திருவடிகளை அடையும் பொருட்டுச் சேரமான்பெருமான்
திருவணுக்கன்றிருவாயிலின் புறத்திலே வந்து நிற்கின்றார்" என்று விண்ணப்பஞ்செய்தார். பரமசிவன்
சேரமான்பெருமாணாயனாரை உள்ளே அழைப்பிக்க; அவர் விரைந்து வந்து சந்நிதானத்திலே நமஸ்கரித்துத்
தோத்திரம்பண்ணினார். பரமசிவன் திருமுறுவல்செய்து, "இங்கே நாம் அழையாதிருக்க, நீ வந்ததென்னன"
என்று அருளி செய்ய, சேரமான்பெருமாணாயனார் அஞ்சலி செய்து நின்று, "சுவாமீ ! சுந்தரமூர்த்தி
நாயனாருடைய திருவடிகளைத் துதித்து அவர் ஏறிய வெள்ளையானைக்குமுன் அவரைச்
சேவித்துக்கொண்டு வந்தேன். தேவரீர் பொழிகின்ற பெருங்கருணைவெள்ளம் முன்கொண்டு புகுதலால்,
திருமுன்பு வரப்பெற்றேன். இனி ஒரு விண்ணப்பம் உண்டு, அரிபிரமேந்திராதிதேவர்களாலும்
முனிவர்களாலும் வேதங்களாலும் துதிக்கப்படுதற்கு அரிய பெருமையையுடைய தேவரீர்மேல்
அன்பினாலே தேவரீரது திருவருள்கொண்டு திருவுலாப்பாடினேன். அதனைத் தேவரீர் திருச்செவி
சாத்தல்வேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்தார். அப்பொழுது சிவபெருமான் "சேரனே! அவ்வுலாவைச்
சொல்லு" என்று திருவாய்மலர்ந்தருள; சேரமான்பெருமாணாயனாரும் அதனைக் கேட்பித்தார். சிவபெருமான்
அதற்கு அருள்செய்து, "நம்முடைய கணங்களுக்கு நாதனாய் இரு" என்று திருவாய்மலர்ந்தருளினார்.
சேரமான்பெருமாணாயனார் சிவகணநாதராகிச் சுவாமியைச் சேவிப்பாராயினார். அவர் அருளிச்செய்த
திருக்கைலாயஞானவுலாவைத் திருக்கைலாசகிரியிலே அன்று கேட்ட மாசாத்தரானவர் அதனைத்தரித்து,
தமிழ்நாட்டிலே உள்ள திருப்பிடவூரிலே, வெளிப்படச்சொல்லி, பூமியிலே விளங்கும் பொருட்டு
நாட்டியருளினார்.

சுந்தர்ர் –நெல்

http://thanjavur14.blogspot.my/2014/08/blog-post3sundarar.html

அட்சயப் பாத்திரம்.

நாட்டின் எல்லையைக் கடந்து கானகத்தை அடைந்த பாண்டவர்கள், முதன்முதலில் தங்கள்


வயிற்றுப்பசியை உணர்ந்த போது, சூரியபகவானை உபாசனை செய்து, தட்டாமல்
அமுதளிக்கும் அட்சயப் பாத்திரத்தை பெறும் ஓர் அரிய மந்திரத்தை திரௌபதிக்கும், 
பாண்டவர்களுக்கு உபதேசித்தார் ஸ்ரீகிருஷ்ணன்.

பாண்டவர்கள் தீவிரமான சூரிய உபாசனை செய்தார்கள். அதன் பலனாக சூரியதேவன் தோன்றி


அட்சயப் பாத்திரத்தை அளித்தான். அட்சயப் பாத்திரத்தை அன்னத்தாலோ, வேறு உணவு
பதார்த்தங்களாலோ நிரப்பினால், அள்ள அள்ளக் குறையாமல் அனைவருக்கும் அது அமுது
தரும். ஆனால், ஒருவேளை உணவருந்தியபின் எஞ்சியதை சூர்யார்ப்பணம் செய்து, அட்சயப்
பாத்திரத்தைக் கழுவிவைத்துவிட்டால், மறுநாள் சூரியோதயத்துக்கு பிறகுதான் அது மீ ண்டும்
அமுதம் தரும். இந்த நியதிகளை விளக்கிவிட்டு மறைந்தான் சூரிய பகவான்.

அட்சயப் பாத்திரம், பாண்டவர்களின் வனவாசத்தில் அவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.


இதனை அறியாத துரியோதனன், பாண்டவர்கள் வனத்தில் உணவின்றி உயிர்நீத்து விடுவார்கள்
என்று கனவு கண்டான்.

ஒருமுறை துர்வாச மகரிஷி துரியோதனன் அவைக்கு வந்தார். சந்தர்ப்பத்தை செம்மையாகப்


பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்ட துரியோதனன், 'தாங்கள் என் இல்லம் வந்து அதிதியாக
இருந்து ஆசீர்வதித்தைப் போல, காட்டிலுள்ள எனது சகோதரர்களான பாண்டவர்கள் குடிலுக்கும்
தங்கள் சீடர்களுடன் அதிதியாகச் சென்று ஆசீர்வதிக்க வேண்டும்'' என்று வரம் கேட்டான்.

வனத்தில் தங்கள் சாப்பாட்டுக்கே திண்டாடிக் கொண்டிருக்கும் பாண்டவர்கள் துர்வாசரை


திருப்திப்படுத்த முடியாமல், அவரது சாபத்துக்கு ஆளாகி அவதியுற நேரும் என்று நினைத்தான்.

துரியோதனனின் வரத்தை தொடர்ந்து, தன் மிகப் பெரிய சீடர்களின் பரிவாரத் துடன்


பாண்டவர்கள் இருக்கும் வனத்தை நோக்கிப் புறப்பட்டார் துர்வாசர்.
அவர்கள் அங்கே போய்ச் சேரும்போது உச்சிவேளை நெருங்கிவிட்டது. பாண்டவர்கள் பகல்
பொழுது உணவை முடித்து விட்டிருந்தனர். திரௌபதி அட்சயப் பாத்திரத்தைக் கழுவும் முன்பு
சூர்யார்ப்பண மந்திரம் சொன்னாள்.

அதே விநாடி பகவான் ஸ்ரீகிருஷ்ணன், அந்தப் பாத்திரத்தில் உள்ள அன்னத்தைக் காலி செய்ய
சூரியன் விரித்த கிரணக் கைகளைத் தடுத்தான். 'சூரியதேவா... இந்த அன்னப் பருக்கும், கீ ரை
இலையும் அட்சயப் பாத்திரத்தில் ஒட்டி இருக்கட்டும். இவை நான் உண்ண வேண்டியவை'
என்று கூறி சூரியனின் கைகளை தன் சாதுர்யத்தால் கட்டிப்போட்டான் ஸ்ரீகிருஷ்ணன்.

அதன்படி, அன்னப்பருக்கையும், கீ ரை இலையும் அட்சயப் பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டன.


திரௌபதி பாத்திரத்தைக் கழுவி பூஜையில் வைத்து வணங்கினாள். அதில், இன்னமும்
அன்னப்பருக்கையும் கீ ரை இலையும் ஒட்டிக் கொண்டிருப்பதை அவள் கவனிக்கவில்லை.

வனம் வந்த துர்வாசர், வழியில் தர்மனைச் சந்தித்துத் தானும், தன் சீடர்களும் மதிய
உணவுக்காக அவர்கள் குடிலுக்கு வருவதாகவும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படியும்
கூறினார். தர்மர் அதை பெரும் பாக்கியமாகக் கருதி, அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டார்.

துர்வாசரும், அவரின் சீடர்களும் நதியில் குளித்து, ஜபம் செய்துவிட்டு வருவதாகக் கூறி


நதிக்கரைக்குச் சென்றனர். அவர்களுக்குத் தேவையான உணவுக்கு ஏற்பாடு செய்ய தர்மர் தன்
குடிலுக்கு ஓடினார். விவரம் அறிந்த திரௌபதி அதிர்ச்சி அடைந்தாள். சற்றுநேரத்துக்கு
முன்புதான் அட்சயப் பாத்திரத்தைக் கழுவி வைத்ததாகச் சொன்னாள்.தர்மர் திகைத்தார்
தர்மருக்கு ஏற்பட்ட இச்சங்கடம்தானோ என்னவோ 'தர்ம சங்கடம்’ என்று நாம் கூறுவது?
உடனே, காட்டில் ஏதாவது கனிகள் கிடைக்கிறதா என்று பார்க்கச் சென்றார்.

அப்போது ஸ்ரீகிருஷ்ணன் ஆஸ்ரமத்துக்குள் நுழைந்து, 'திரௌபதி... எனக்கு மிகவும் பசிக்கிறது.


சாப்பிட ஏதாவது இருந்தால் கொஞ்சம் கொடு' என்று கேட்டான். திரௌபதி திடுக்கிட்டு கண்
கலங்கினாள். 'மதுசூதனா... இதென்ன சோதனை? துர்வாசர் போதாதென்று நீயுமா
சோதிக்கிறாய்? அட்சயப் பாத்திரத்தை இப்போதுதான் கழுவி வைத்தேன். 'வேறு உணவுக்கு
நான் எங்கே போவேன்? நீதான் இதற்கு நல்ல வழிகாட்ட வேண்டும்'' என்று வணங்கி நின்றாள்
திரௌபதி.

'அப்படியானால், கழுவி வைத்த அட்சயப் பாத்திரத்தையாவது எடுத்து வா. ஒரு பருக்கையாவது


இருக்கிறதா என்று பார்க்கிறேன்' என்று விடாமல் கேட்டான் அந்த ஆபத்பாந்தவன். ஒன்றும்
புரியாமல் அட்சயப் பாத்திரத்தை எடுக்கச் சென்றாள் அவள். அட்சயப் பாத்திரத்தைப் பார்த்த
அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அட்சயப் பாத்திரத்தில் ஓர் அன்னப்பருக்கையும், கீ ரை
இலையும் ஒட்டிக்கொண்டிருந்தது. அது, பரந்தாமன் தனக்காகவே சேர்த்து வைத்த அன்னம்
அல்லவா? கிருஷ்ணன் அந்த அன்னப் பருக்கையையும், கீ ரை இலையையும் நாக்கில் வைத்து
விழுங்கினான். 'திருப்தி’ என்றும் கூறினான்.

அதே விநாடி நதியில் நீராடிக் கொண்டிருந்த துர்வாசருக்கும், அவரின் சீடர்களுக்கும் பத்து நாள்
உணவை ஒரே நாளில் சாப்பிட்டது போல் வயிறு கனத்தது.பசி உணர்வு முழுமையாக நின்று
போனதால், துர்வாசருக்கும் ஒன்றும் ஓடவில்லை. 'நமக்காக உணவு சமைத்து வைத்திருக்கும்
தர்மருக்கு என்ன பதில் கூறுவது’ என்று பயந்தார். உடனே, வனத்தில் பழங்களைத் தேடித்
திரிந்து கொண்டிருந்த தர்மரிடம் ஓடி வந்தார்.

'யுதிஷ்டிரா... என்னை மன்னிக்க வேண்டும். நான் உன் குடிலில் இன்று விருந்து சாப்பிட
இயலாத நிலையில் இருக்கிறேன்' என்றார். அதைக் கேட்ட தர்மருக்கு ஆச்சரியம்
தாங்கமுடியவில்லை.
''மகனே... தினமும் நான் உணவருந்திவிட்டு 'கிருஷ்ணார்ப்பணம்’ என்று சொல்லி
நீரருந்திவிடுவேன். ஆனால், என்னைவிட மேலான எவனோ உணவு சாப்பிட்டுவிட்டு
'துர்வாசார்ப்பணம்’ என்று நீரருந்திவிட்டான் போலும்! அதனால், இப்போது என் வயிறு
கனக்கிறது. என் சீடர்களும் அப்படியே உணர்ந்து கூறினார்கள். எங்களை மன்னித்துவிடு.
உனக்கு சர்வ மங்கலமும் உண்டாகட்டும்'' என்று வாழ்த்தி, தமது சீடர்களுடன் கானகம் விட்டு
வெளியேறினார்.

கொங்கணர்

கொங்கணர் திருவள்ளுவரின் சீடர் என்றும் போகரின் சீடர் என்றும் கூறுகின்றனர். இவர்பெயரால்


வைத்திய, இரசவாத, யோக நூல்களும் பாடல்களும் இருக்கின்றன. இவர் கி.பி 7 ஆம் நூற்றாண்டில்
இருந்தவர். கொங்கு நாட்டைச் சேர்ந்தவர். ஆதலின் இப்பெயர் பெற்றார் என்பர்.

இவர் பெயரில் வழங்கப்படும் பாடல்களில் "வாலைக் கும்மி" என்பது ஒன்று. வாலை என்பது சக்தியின்
பெயர். கன்னி என்றும் பொருள். கன்னிப் பெண்ணை முன்நிறுத்தி கும்மி பாடியுள்ளதால் வாலைக்கும்மி
என வழங்குகிறது.

இது இவர் பெயரால் வழங்கினாலும் இவரால் பாடப்பட்டது அன்று. இவர் கருத்துக்களை அமைத்து
ஆசிரியர் வீரப் பெருமாளின் மாணாக்கர் ஒருவர் பாடியதாகவும், அவர் வலவேந்திரன் துரைவள்ளல்
என்ற சிற்றரசன் காலத்தவர் என்றும் அவன் அஞ்செழுத்துணர்ந்த சைவன் என்றும் வாலைக்கும்மி
பாடல் கூறுகின்றது.

கொங்கணர் பற்றிய கதை ஒன்று உண்டு. கொங்கணர் ஒரு மரத்தின் கீழ் யோகம் செய்து
கொண்டிருந்தார். அப்பொழுது மரத்தின் மேல் இருந்த கொக்கு அவர்மீது எச்சம் இட்டது. உடனே
கொங்கணர் கண்ணை விழித்து அக்கொக்கை பார்த்தார். அது எரிந்து சாம்பலாயிற்று. அதன் பிறகு
அவர் ஊருக்குள் வந்து திருவள்ளுவர் மனைவாயிலில் நின்று பிச்சை கேட்டார்.

வள்ளுவர் மனைவி வாசுகியார் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த நேரம். ஆதலால் அவர்
பிச்சை கொண்டுவர சிறிது நேரமாயிற்று. நேரங்கடந்து பிச்சை கொண்டுவந்த வாசுகியாரைக்
கொங்கணர் சினத்துடன் விழித்து பார்த்தார். உடனை, வாசுகியார் "கொக்கென்று நினைத்தாயோ
கொங்கணவா?" என்று கேட்டார். அஞ்சிய கொங்கணர் வாசுகியைப் பணிந்தார். பின்னர் திருவள்ளுவர்
சீடரானார்.
அருணகிரிநாதர்,
 காவிரிப்பூம்பட்டினம் என்று சிலரும் அருணகிரிநாதர் பிறந்த இடம் என்று சொல்கின்றனர்.
தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும்
சொல்கின்றனர். திருவண்ணாமலைக்கு எப்போது வந்தார் என்பது சரிவரத் தெரியவில்லை.
சிலர் இவருடைய தாயார் ஒரு பரத்தை என்றும் சொல்கின்றனர். இவருக்கு ஒரு மூத்த
சகோதரி இருந்தாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத்
தம்பிக்குச் சேவை செய்து வந்ததாய்ச் சொல்லுவதுண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார்
அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். இவர்
தீய செயல்களைச் செய்கின்றார், சிறு வயதில் இருந்தே பெண்ணாசை கொண்டவராய்
இருக்கிறார் என்பது தெரிந்தும் அந்த அம்மையார் நாளாவட்டத்தில் இவர் திருந்துவார் என
எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள
இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணமும் ஆகியது.
ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ, பெண்களின் தொடர்பு
அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும், வெளியில்
பரத்தையரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாய்ச்
சொத்தையும் இழந்து வந்தார். எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாய்
சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து சேர்ந்தது இவருக்கு.
என்றாலும் அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட, கட்டிய
மனைவியைக் கட்டி அணைக்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்க, இவர் சகோதரி
தன்னைப் பெண்டாளுமாறு கோபத்துடனும், வருத்தத்துடனும் இவரிடம் சொல்ல தன் தீய
செயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி இவர் வீட்டை
விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக்
கண்ணுற்றார். அவர் தான் அருணாசலேஸ்வரர் என்றும் சொல்லுகின்றனர். குமரக் கடவுள்
என்றும் சொல்லுவதுண்டு. எது எப்படி இருந்தாலும் அருணகிரிநாதருக்கு அருட்பேராற்றல்
சித்திக்கும் நேரம் நெருங்கி விட்டது. அந்தப் பெரியவர் அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக்
கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும்,
சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு
வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். என்றாலும் குழப்பத்தோடு இருந்த அருணகிரி
சரியாகச் செவி சாய்த்தாரில்லை. ஒருபக்கம் பெரியவரின் பேச்சு. மறுபக்கம் குழப்பமான
மனது. சற்றுத் தெளிவடைகிறது மனம் என நினைத்தால் மீண்டும், மீண்டும் குழப்பம்.
முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை.
என்ன செய்யலாம்? குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி
கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் தவம் இருந்த
அருணகிரியார் அந்தக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட
முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கின. அந்தக்
கரங்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை. குன்றுதோறாடும் குமரனே ஆகும். தன்
கைகளால் அவரைத் தாங்கி, “அருணகிரி !நில்!” என்றும் சொன்னார்.
திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யாரோ எனப் பார்க்க வடிவேலவன் தன்
திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில்வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி
வியப்பின் உச்சியிலிருந்து மீளாமல் தவிக்க, முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என
அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப்
பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக
அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது.

You might also like