இந்திரா யுவா TUTORIAL 14

You might also like

You are on page 1of 4

குழு உறுப்பினர்கள் இந்திராபானு & யுவராணி

தலைப்பு மூன்றாம் உலகப் போர் நாவலானது மனிதனுக்கும்


இயற்கைக்குமான போரை முதன்மைப்படுத்தியுள்ளது.
இக்கூற்றை நியாயப்படுத்துக.

மூன்றாம் உலகப்போர் என்ற இந்நாவல் வைரமுத்து அவர்களின் கைவண்ணத்தில்


உருவானது ஆகும். இந்நாவல் மனிதனுக்கு இயற்கைக்கும் இடையிலான போர் என்ற
கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பல சான்றுகளை
அடிப்படையாக கொண்டு இதனை நிரூபிக்க இயலும்.

அவ்வகையில், கடந்த 1991 ம் ஆண்டுக்கு பிறகு விவசாயம் நலிவடையத்


தொடங்கியது. வானம் பார்த்த பூமியாக உள்ள விளைநிலங்கள் தண்ணிரே இல்லாமல்
வறண்டிருக்கிறது. மனிதர்களின் பொறுப்பற்ற செயல்களே இவ்வாறாக தண்ணீர் வறட்சி ஏற்பட
முதன்மை காரணமாக அமைகிறது. எடுத்துக்காட்டாக, மனிதர்கள் சுயநலத்திற்காக செய்யும் சில
காரியங்கள் இன்று உலகில் நீர் பஞ்சம் ஏற்பட காரணமாக அமைகிறது. அதிக வெப்பத்தின்
காரணமாக குகிரூட்டி போன்றவற்றை பயன்படுத்துவது, மேலும் இப்புவியின் வெப்பத்தை
அதிகரிக்கின்றது.

அடுத்தப்படியாக, இவ்வுலகில் சீதோசன நிலை மாற்றம் கண்டு மழை குறையவும்


மனிதன் முக்கிய காரணமாக இருக்கின்றான். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும்
கழிவுகள், புகை ஆகியவை மேகத்தில் கலந்து மழையைக் குறைத்துவிட்டது. மனிதன்
உருவாக்கிய தொழில்நுட்பம் இன்று இயற்கையை மாசுபடித்தி பருவநிலையை மாற்றம் அடைய
செய்துள்ளது என்றே கூற வேண்டும். இம்மாதிரி பருவமழை குறைவது உலகத்தில் விவசாய
உற்பத்தியைக் குறைக்கின்றது. இதனால், மனிதன் உணவுக்கே கஷ்டப்படும் காலம் உருவாகி
வருகின்றது.

அதனைத் தொடர்ந்து, நிலங்களில் இரசாயணத்தைத் தெளிப்பதனாலும் பல விதமான


உரங்களைப் பயன்படுத்துவதாலும் நிலத்தின் தன்மை மாறுபடுகின்றது. இயற்கையாகவே
மண்ணிற்கு இருக்கும் தன்மை மாறுப்பட்டு விளைச்சல் இல்லாத நிலமாக மாறி வருகின்றது
நிலங்கள். விவசாய நிலங்கள் குறையும் பொழுது உலகின் விளைச்சலும் குறைகின்றது. மனிதன்
இயற்கை உரத்தைப் பயன்படுத்தாமல் அதிக உற்பத்திக்கு ஆசைப்பட்டு இரசாயணம் கலந்த
உரத்தைப் பயன்படுத்தும் பொழுது நாளடைவில் அது நிலங்களுக்குத் தீமையை
விளைவிக்கின்றது.
இறுதியாக, வேளாண்மை செய்வோரிடத்தில் வேளாண்மை பற்றிய விழிப்புணர்வு
குறைவாகவே காணப்படுகின்றது என்பதனையும் இந்நாவலிலிருந்து பெறப்பட்ட ஒரு
தகவலாகும். வேளாண்மையைப் பற்றிய முழுமையான பகுத்தறிவு இல்லாதவர்கள்
இத்துறையில் சிறந்த ஒரு இலாபத்தை ஈட்ட முடியாது. அதோடு, ஒவ்வொரு
வேளாண்மையிலும் இலாபம் ஈட்டிவிடுவோம் என்ற நம்பிக்கையில் மற்றவர்களிடம் கடன்
பட்டு, அதை மறுபடியும் ஈடுக்கட்ட இயலாத நிலையில் அவர்கள் தங்கள் நிலத்தை விற்கும்
சூழலும் ஏற்பட்டு விடுகின்றது.
குழு உறுப்பினர்கள்
தலைப்பு

You might also like