You are on page 1of 2

வாசிப்பு

ஆண்டு 3.
ஈயம்

டத்தோ லோங் ஜாபார் என்பவர் மலேசிய வரலாற்றில்


முக்கிய இடம் வகிப்பவ்ர். 1848 ஆம் ஆண்டு லாருட்டில்
ஈயம் கண்டுபிடிக்கப் பட்டது. ஈயம்
கண்டுபிடிக்கப்படுவதில் டத்தோ லோங் ஜாபார் மிக
முக்கிய பங்காற்றினார்.
லாருட்டில் ஈயம் கண்டுபிடிக்கப் பட்டதைப் பற்றி ஒரு
வரலாற்றுக் கதையும் உண்டு. ’லாருட்’ எனும் பெயரில்
டத்தோ லோங் ஜாபாரிடம் ஒரு யானை இருந்தது. அவர்
வெளியே பயணம் செய்யும் போது அந்த யானையையும்
தன் பரிவாரங்களுடன் உடன் அழைத்துச் செல்வது
வழக்கம். திடீரென்று, ஒரு நாள் லாருட் யானை காணாமல்
போய்விட்டது. பல இடங்களில் தேடிப் பார்த்தார்கள்.
யானை கிடைக்கவில்லை. பின்னர் மூன்று நாட்கள் கழித்து
அந்த யானை அவரைத் தேடி வந்தது. அதன் உடல்
முழுமையும் வெண்ணிறச் சேறும் சகதியுமாக இருந்தது.
யானையின் கால்களில் ஈயச் சுவடுகளும் தென்பட்டன.
ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதும் டத்தோ
லோங் ஜாபார் அந்த இடத்தைத் தேடிச் சென்றார். ஈயம்
இருப்பது உண்மையென அறியப்பட்டது. அதன் பின்னர்
அந்த இடத்திற்கு யானையின் பெயரான லாருட் எனும்
பெயரே வைக்கப்
பட்டது.

வினாக்களுக்கு
விடையளிக்கவும்.
1. ஈயம் எங்கு
கண்டுப்பிடிக்கப்பட்டது ?
2. ஈயம் யாரால் கண்டுப்பிடிக்கப்பட்டது ?

திருமதி ரேணுகா சிவராமன்


ஜெண்டராட்டத் தோட்டப் பள்ளி 3.
வாசிப்பு
ஆண்டு 3.

3. லத்தோ லோங் ஜாபார் வளர்த்த யானையின் பெயர்


என்ன?
4. யானையின் உடலில் என்ன இருந்தது ?

5. ஈயத்தால் உருவாக்கப்பட்ட 2 பொருள்களைப்


பட்டியலிடுக.

பொருள் எழுதுக.
I. யானை
II. ஈயம்
III. சுவடு

திருமதி ரேணுகா சிவராமன்


ஜெண்டராட்டத் தோட்டப் பள்ளி 3.

You might also like