You are on page 1of 28

ஸ்ரரீ ாமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை

வரலாறு
-
பாகம்-15

கதாதரன் தன்னையொத்த சிறுவர்களின்


மீதிருந்த அன்பின் காரணமாகத்தான்
அன்றாடம் சிறிது நேரம் பள்ளிக்குச் சென்று
வந்தான் என்று முன்னரே
கூறியிருந்தோம்.வயது பதினான்கு ஆன போது
அவனது பகதியும் பரவசநிலைகளும்
அதிகரித்தன.
வயிற்றுப் பிழைப்பிற்கான கல்வியால் தனக்கு
எந்தவித பயனுமில்லை என்பது அவனது
உறுதியான முடிவாயிற்று.தன் வாழ்க்கை வேறு
ஏதோ ஓர் உயர்ந்த இலட்சியத்திற்காக
ஏற்பட்டிருக்கிறது என்பதையும் தன் ஆற்றல்
முழுவதையும் உண்மையை அடைவதற்காகச்
செலுத்த வேண்டும் என்பதையும் இந்த
வேளையில் கதாதரன் உணர்ந்தான்.
அந்த மகோன்னதமான லட்சியம் சில
வேளைகளில் அவன் மனக்கண்முன்
நிழற்சித்திரம் போலத்தோன்றும்
அவனது மனம் பூரணமாகத் தயாராகாததாலோ
என்னவோ , அதைப்புரிந்து கொள்ளவோ அது
விரிக்கின்ற பொருளை அறிந்து கொள்ளவோ
அவனால் இயலவில்லை. அதற்காக அவன்
அதை அப்படியே விட்டுவிடவும்
இல்லை.வருகின்ற வாழ்நாட்களை எவ்வாறு
அமைத்துக்கொள்ள வேண்டும். என்ற கேள்வி
மனத்தில் எழும்போதெல்லாம், பகவானிடம்
பரிபூரண சரணாகதியுடன் காவித்துணி
அணிந்து, வேள்வித் தீயின் அருகில் அமர்ந்து
சாதனைகள் செய்வதும் பிச்சை எடுப்பதன
மூலம் பெறப்பட்ட உணவை உட்கொள்வதுமாக
எல்லா பற்றுக்களிலிருந்தும் விடுபட்ட
பரிவிராஜக வாழ்க்கை ஒன்றை அவனது
விவேக புத்தி சுட்டிக்காட்டும்.
அந்த விவேக புத்தி காட்டும் சித்திரத்துடன்
போட்டிபோட்டுக்கொண்டு மற்றோர் ஓவியம்
அவன் மனத்தில் எழும். அது அவனது
அன்புள்ளம் தீட்டுகின்ற ஓவியம்.
அந்த ஓவியம் தாய், சகோதரர்கள் மற்றும்
குடும்பத்தைச் சார்ந்த பிறரின் நிலை
ஆகியவற்றை அவனுக்கு நினைவூட்டி நிற்கும்.
இப்படி விவேக புத்தியும் அன்புள்ளமும்
தீட்டிக்காட்டிய சித்திரங்களுள் எப்போதும்
அன்புள்ளத்தின் சித்திரமே வென்று அவனுள்
நின்றது.
அது கதாதரனிலிருந்த துறவு எண்ணத்தைக்
கைவிடச்செய்தது. அதற்குப் பதிலாக தன்
தந்தையைப்போல கடவுளையே நம்பி உலகியலில்
ஈடுபட்டு இயன்றவரை தாய்க்கும்
குடும்பத்தினருக்கும் உதவுமாறு அவனைத்
தூண்டியது. தனது அறிவம் உள்ளமும் இவ்வாறு
எதிர் திசைகளில் சென்று கொண்டிருந்ததால்
குழம்பிய அவன் முழுப்பொறுப்பையும்
ஸ்ரரீ குவீரரிடம் ஒப்படைத்து அவரது
அருளாணையை எதிர்நோக்கிக்
காத்திருந்தான். ஸ்ரரீ குவீரர் முற்றிலும்
தன்னுடையவர் என்று பரிபூரணமாகக் கருதி
அவரிடம் இதயம் நிறைந்த பக்தி
கொண்டிருந்தான் கதாதரன். உரிய காலத்தில்
தனது இந்தப்போராட்டத்திற்கு ஒரு நல்ல
முடிவை அவர் தருவார் என்ற
முழுநம்பிக்கையுடன் தன்னைத்தானே
சமாதானப்படுத்திக் கொள்வார். இவ்வாறு
அறிவிற்கும் உள்ளத்திற்கும் இடையில் போராட்டம்
நேரும் போதெல்லாம் உள்ளமே வெற்றி கொண்டது.
உள்ளத்தின் பாதையில் சென்றே அவன்
எல்லாவற்றையும் செய்தான்.
மற்றெல்லா பண்புகளையும் விட கருணை என்னும்
மகத்தான குணம் அவனது தூய உள்ளத்தை
நிறைந்திருந்தது. கிராம மக்களின்
சுகதுக்கங்களை அவன் தனதாகவே கருதினான்.
ஆகையால் உலகைத் துறக்க வேண்டும் என்ற
எண்ணம் மனத்தில் தோன்றிய போதெல்லாம்
எளிமையும் எல்லையற்ற அன்பும் கொண்ட அந்த
கிராமமக்களின் நினைவும் அவர்கள் தன் மீது
வைத்திருந்த நம்பிக்கையும் அவனைத் தடுத்தன.
தன் வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொண்டால்
அந்த எளிய கிராம மக்கள் தன்னை
முன்னோடியாகக் கொண்டு உயர்ந்த குறிக்கோளை
அடைவர்.என்பதும் தற்போது தன்னுடன்
வைத்திருந்த உறவை எவ்வாறு ஆன்மீகஉறவாக
அவர்கள் மாற்றிக்கொள்ள முடியும் என்பதும்
கதாதரனுக்குத் தெரிந்தே இருந்தது.
படிப்பைப் பொறுத்த வரையில் வெறும் ஏட்டுப் படிப்பு
தேவையில்லை என்றே கதாதரனின் அறிவும்
உள்ளமும் ஒருமித்துக்கூறின.இருந்தாலும் தன்னை
உயிருக்குயிராக நேசித்த கயா விஷ்ணு போன்ற
நண்பர்கள் தன் நட்பை இழந்துவிடுவார்கள்
என்பதற்காக அவன் பள்ளியை விட்டு
விலகவில்லை. ஆனால் பள்ளியிலிருந்து
விலகுவதற்கான வாய்ப்பு ஒன்று அவனைத்தேடி
வந்தது. கதாதரனின் நடிப்புத் திறமையை
அறிந்திருந்த நண்பர்கள் அவனிடம் நாடகக்குழு
ஒன்றை அமைத்து தங்களுக்குப் பயிற்சி தருமாறு
கேட்டுக்கொண்டனர். கதாதரனுக்கும் இது
பிடித்திருந்ததால் உடனே ஒப்புக்கொண்டான்.
படிக்காமல் நாடகக்குழு அது.இது என்றெல்லாம்
ஆரம்பித்தால் பெற்றோர்கள் அந்த முயற்சிக்கு
இடையூறு விளைவிக்கலாம் என்று கருதிய
சிறுவர்கள் பெற்றோர்களுக்குத் தெரியாமல் நாடகப்
பயிற்சிகள் செய்வதற்கு ஓர் இடம் தேடத்
தொடங்கினர்.
மாணிக்ராஜாவின் மாந்தோப்பைத்
தேர்ந்தெடுத்தான் புத்திசாலியான கதாதரன்.
பள்ளிக்குச் செல்லாமல் குறித்த நேரத்தில் தினமும்
அங்குக் கூட முடிவு செய்தனர். திட்டம் தீட்டிய
உடனேயே அதைச் செயல்படுத்தவும் ஆரம்பித்து
விட்டனர்.
ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோரின்
வாழ்க்கையைச் சித்தரிக்கும் நாடகங்கள் முதலில்
எடுத்துக்கொள்ளப்பட்டன. மனப்பாடம்
செய்வதற்குரிய பாடல்களையும் வசனங்களையும்
சொல்லிக் கொடுத்துப் பயிற்சி அளித்தான்
கதாதரன்.
முக்கியப் பாத்திரங்களில் நடிப்பதுடன் காட்சிகளின்
விவரங்களையும் அவனே சிந்தித்து முடிவு
செய்தான்.தடங்கல்கள் இன்றித்தங்கள் சிறிய
நாடகக்குழு வளர்வது கண்டு சிறுவர்கள்
மகிழ்ந்தனர்.மாந்தோப்பில் நடந்த இந்த
நாடகங்களின் போதும் கதாதரன் அவ்வப்போது
பாவ சமாதியில் ஆழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
நாடகத்தில் அதிக நேரத்தைச் செலவிட்டதால்
கதாதரனின் ஓவியத் திறமை மேலும் வளர
வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இருந்தாலும் அதை
அப்படியே விட்டுவிடவில்லை.ஒரு நாள் அவன்
கௌர்ஹாட்டியில் வசிக்கும் தங்கை
சர்வமங்களாவைின் வீட்டிற்குச்
சென்றிருந்தான்.அப்போது அவள் மலர்ந்த
முகத்துடன் தன் கணவருக்குச்சேவை செய்து
கொண்டிருந்தாள். அந்தக்காட்சியை அப்படியே
ஓவியமாகத்தீட்டினான். உயிரோவியமாகத் திகழ்ந்த
அந்தச் சித்திரத்தைக் கண்டு சர்வமங்களா
தம்பதியர் உட்பட அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கி
விட்டதாகக்கூறப்படுகிறது.
தெய்வ உருவங்களைச் செய்வதிலும் கதாதரன்
சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்தான். தெய்வீகத்தில்
தோய்ந்த அவனது மனநிலை இதற்கு மிகவும்
உதவியாக இருந்தது. கதாதரன் செய்த தெய்வ
உருவங்களுக்கு சாஸ்திர முறைப்படி அவனும்
அவனது நண்பர்களும் வழிபாடு நிகழ்த்துவதும்
உண்டு. பள்ளிப்படிப்பை விட்டபின் இத்தகைய
வேலைகளில் ஈடுபடுவதும் வீட்டு வேலைகளில்
தாய்க்கு உதவுவதுமாகத் தன் நாட்களைச்
செலவிட்டான்.
அண்ணன் ராம்குமாரின் தாயற்ற குழந்தையான
அட்சயனிடம் கதாதரன் மிகவும் அன்பு
கொண்டிருந்தான். வீட்டுவேலைகளைச் செய்யவே
சந்திராதேவிக்கு நேரம் சரியாக இருந்ததால்
அட்சயனைப்பெரும்பாலும் கதாதரனே
கவனித்துக்கொண்டான். குழந்தையை மடியில்
அமர்த்தி வேடிக்கை காட்டுவதும் விளையாடுவதும்
இப்போது அவனது அன்றாட வேலைகளில்
ஒன்றாயிற்று.
-
கதாதரன் சிறுவயதில் பரவசநிலையை அடைந்த
ஒரு நிகழ்சச
் ி
-
கிராமத்தில்( காமார்புகூரில்) குழந்தைகளுக்குச்
சிறு கூடைகளில் பொரி கொடுப்பது வழக்கம்.
கூடைகள் இல்லாத வீடுகளில், குழந்தைகள்
உடுத்தியிருக்கும் துணிகளிலேயே பொரியை
முடிந்து கொடுத்து விடுவார்கள். சிறுவர்கள்
பொரியைத் தின்றபடியே வயல்வெளிகளில் சுற்றித்
திரிவார்கள். எனக்கு ஆறு ஏழு வயதிருக்கும் .
ஒரு நாள் காலைப்பொழுதில் கூடை ஒன்றில்
பொரியை வைத்துத் தின்றவாறே வயல்வரப்பு
வழியாக நடந்து கொண்டிருந்தேன். அது வைகாசி
அல்லது ஆனி மாதமாக இருக்கலாம். வானத்தின்
ஒரு பகுதியிலிருந்து மழைமெகங்கள் திரளத்
தொடங்கின. நான் அந்தக் கருமையின்
அழகில்ஈடுபடலானேன். சிறிது நேரத்தில் வானம்
முழுவதும் கருமேகங்கள் சூழ்ந்துவிட்டன. அந்தக்
கருமைப் பின்னணியில் பால்போன்ற வெண்ணிற
நாரைகள் சில அமைதியாகப் பறந்து சென்றன.
என்ன அற்புதமான காட்சி அது! அதன் அழகில்
என்னையே நான் மறந்து விட்டேன். அப்படியே அதில்
லயித்து புறவுலகை நினைவை இழந்து கீழே
விழுந்தேன். கையிலிருந்த பொரி வயலில் விழுந்து
சிதறியது. எவ்வளவு நேரம் அங்கே கிடந்தேனோ
தெரியாது. நான் வீழ்ந்து கிடப்பதைக் கண்டவர்கள்
என்னை வீட்டிற்குத் தூக்கிச் சென்றார்கள். புறவுலக
நினைவை இழந்து நான் பரவச எய்தியது இது தான்
முதல் தடவை.

குருதேவரின் பிறந்த ஊரான காமார்புகூருக்கு


வடக்கே ஏறக்குறைய இரண்டு மைல் தொலைவில்
ஆனூர் என்ற சிற்றூர் இருக்கிறது.
அந்தச் சிற்றூரில் கோயில் கொண்டருளும்
விசாலாட்சி விழிப்புற்ற தெய்வம். அக்கம்பக்கத்து
கிராம மக்கள் தங்கள் வேண்டுதல்கள்
நிறைவேறுவதற்கு விசாலாட்சிக்கு வழிபாடும்
காணிக்கைகளும் செலுத்துவதாக
வேண்டிக்கொள்வார்கள். வேண்டுதல்
நிறைவேறியவுடன் கோயிலுக்கு வந்து நேர்த்திக்
கடன்களைச் செலுத்துவர். இந்தக்கோயிலுக்கு
ஆண்களை விடப் பெண்களே அதிகமாக வருவது
வழக்கம். பலர் நோய்கள் நீங்குவதற்காக
வருபவர்களே, தற்போதும் கூட கிராமத்தின் உயர்குடி
பெண்கள் கூட்டம் கூட்டமாகக் கோயிலுக்குச்
சென்று தேவி விசாலாட்சி முதன்முதலில் அங்கு
எழுந்தருளிய விதம் பற்றியும் அவளது அருள்
வெளிப்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றியும்
கதைப்பாடல்களைப் பாடுவதுண்டு. அன்னை அங்கு
குடி கொண்டுள்ளதால் அவ்வழியில் மக்கள்
அச்சமின்றிச் சென்றனர்.

வயல்களின் நடுவில் திறந்த வெளியில் தேவி


எழுந்தருளியிருக்கிறாள்.

கதாதரனுக்கு எட்டுவயதிருக்கும் போது நடந்த


நிகழ்சச
் ி இது
-
அப்போது ஒரு நாள் அவனது குடும்பத்தைச்சேர்ந்த
ஓரிரு பெண்களும் ஜமீன்தாரான தர்மதாஸ்
லாஹாவின் விதவைப்பெண் பிரசன்னாவும் மற்றும்
பல உயர்குடிப்பெண்களும் விசாலாட்சி
கோயிலுக்குச் சென்றனர். பிரசன்னா, தூய்மை,
அன்பு, எளிமை, தெய்வபக்தி ஆகிய பண்புகளைப்
பெற்று கதாதரனின் மதிப்பிற்குரிய ஒருத்தியாக
இருந்தாள்.

பல விஷயங்களிலும் பிரசன்னாவின்
அறிவுரையைக்கேட்டு நடக்கும் படி பிற்காலத்தில்
அன்னை சாரதாதேவிக்கு குருதேவர் கூறியது
உண்டு. பக்தைகளுக்கும் அடிக்கடி அவர்
பிரசன்னாவைப் பற்றி கூறுவதுண்டு.
பிரசன்னாவுக்கு கதாதரனிடம் உள்ளார்ந்த அன்பு
இருந்தது. அவள் அவனைக் கடவுளாகவே
கருதினாள்.
கள்ளங்கபடமற்ற உள்ளம் கொண்ட அவள்
அவனிடமிருந்து கதைகளையும்
பக்திப்பாடல்களையும் கேட்டுப் பரவசம்
அடைந்தாள்.
.விசாலாட்சி கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த
பெண்களிடம் கதாதரன் ” நானும் உங்களுடன்
வருகிறேன்” என்று சொன்னான். அவன்
வெகுதூரம் நடக்க வேண்டியிருக்குமே என்று
கவலையுற்ற அந்தப்பெண்கள்
அவனைத்தடுத்தனர். கதாதரன் அவர்களின்
சொல்லைக் கேளாமல் அவர்களுடன் நடக்கத்
தொடங்கினான். அந்தப் பெண்களும் மகிழ்ந்தனர்.
துருதுருவென்று எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்
குழந்தையை யார்தான் விரும்ப மாட்டார்கள். அவன்
பாடுவதைக் கேட்கவும் அவர்கள் விரும்பினர்.
அப்படியே அவனுக்கு பசியெடுத்து விட்டால் கூட,
கோயிலிலிருந்து திரும்பி வரும் போது பால் முதலிய
பிரசாதங்கள் இருக்கவே செய்யும்.ஆகவே
கதாதரன் தங்களுடன் வருவதை அவர்கள் ஏன்
மறுக்கவேண்டும்? ஏன் கோபப்பட வேண்டும்?
இதைப்பற்றியெல்லாம் சற்று யோசித்த பின்
அந்தப்பெண்கள் தயக்கமின்றி கதாதரனையும்
அழைத்துச் சென்றனர். கதாதரனும் அவர்கள்
எதிர்பார்த்தபடியே கதைகள் கூறுவதும்
பாடுவதுமாக உற்சாகத்துடன் சென்றான்.
விசாலாட்சியைப் பற்றிய கதாதரனின்
பாடல்களைக்கேட்டவாறே எல்லோரும்
வயல்வெளியைக் கடந்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத நிகழ்சச் ி ஒன்று நடந்தது.
கதாதரனின் பாடல் திடீரென்று நின்றது. அவன்
சிலை போல் நின்றுவிட்டான். அவனது உடல்
விறைத்து உணர்ச்சியற்று விட்டது.விழிகளிலிருந்து
கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அந்தப்
பெண்கள் அவனைப் பலமுறை
அழைத்துப்பார்த்தனர். அவனிடமிருந்து பதில் ஏதும்
வரவில்லை. அவனுக்கு என்ன நேர்ந்தது? ஏன்
நேர்ந்தது? எதுவும் அவர்களுக்குப் புரியவில்லை.
ஒரு வேளை நீண்ட தூரம் நடந்து பழக்கமில்லாத
பிஞ்சுப் பாலகன் வெயிலில் இவ்வளவு தூரம்
நடந்ததால் களைத்து மயக்கமடைந்து விட்டானோ
என்று அஞ்சிய அவர்கள், குளத்திலிருந்து
தண்ணீர் கொண்டு வந்து அவன் தலையிலும்
முகத்திலும் சிறிது தெளித்துப்பார்த்தனர்.
ஆனாலும் அவனுக்கு சுயநினைவு திரும்பவில்லை.
அந்தப்பெண்களின் கவலை அதிகமாயிற்று. இவன்
மூர்சசை
் தெளிவதற்கு என்னவழி? இவனது
நினைவு திரும்பாவிட்டால் கோவிலுக்கு சென்று
தேவிக்கான நேர்த்திக்கடனைச் செலுத்த
முடியாது. அந்தப் பெண்கள் குழம்பினர். இந்த
நிலையில் அவனை எவ்வாறு வீட்டுக்குக்கொண்டு
போவது? நேர்த்தி கடனையே மறந்து விட்டு எல்லாப்
பெண்களும் கதாதரனைச்சுற்றி அமர்ந்து
விசிறுவதும் தண்ணீர் தெளிப்பதும் மீண்டும்
மீண்டும் அவன் பெயரைச் சொல்லி அழைப்பதுமாக
இருந்தனர். இவ்வாறு சிறிது நேரம் சென்றது.

அப்போது பிரசன்னாவின் உள்ளத்தில்


கள்ளங்கபடமற்ற தூய உள்ளம் படைத்த ஆண்,
பெண் மற்றும் குழந்தைகளுக்கு தேவியின்
அருளால் பரவச நிலை ஏற்படும் என்று கேள்விப்
பட்டிருக்கிறேன். தூயவனான கதாதரனின்
நிலையும் ஏன் அத்தகைய பரவச நிலையாக
இருக்கக்கூடாது. என்ற எண்ணம் எழுந்தது. உடனே
தன் கருத்தை மற்றப்பெண்களுக்கும்
தெரிவித்தாள். பின்னர் எல்லோரிடமும், கதாதரனை
அழைப்பதை விட்டுவிட்டு மனஒருமைப்பாட்டுடன்
தேவி விசாலாட்சியின் திருநாமத்தை உச்சரிக்கும்
படிக் கூறினாள்.

தூய நற்பண்புகள் கொண்ட பிரசன்னாவை


அனைவரும் மதித்தனர். ஆகவே அவளது
சொற்களில் நம்பிக்கை வைத்து அந்தப்பெண்கள்
கதாதரனையே தேவியாக எண்ணி, தாயே!
விசாலாட்சி! கருணை காட்டி எங்களைக்
கைதூக்கிக் கரை சேர்ப்பாய்! என்று பிரார்த்திக்கத்
தொடங்கினர்.

விந்தையிலும் விந்தை! தேவியின் திருப்பெயரை


அவர்கள் சில முறை கூறியவுடனேயே கதாதரனின்
முகத்தில் புன்னகை அரும்பியது. புறவுலக நினைவு
திரும்பத் தொடங்கியது. தேவியின் மீது கொண்ட
பக்திப் பரவசத்தினால் தான் கதாதரன் இத்தகைய
நிலைக்கு உள்ளானான் என்பது அவர்களுக்கு
நிச்சயமாயிற்று.அவர்கள் அவனையே தேவியாக
பாவித்து பல முறை வணங்கிப் பிரார்த்தித்தனர்.
கதாதரன் சிறிதுநேரத்தில் இயல்பான நிலையை
அடைந்தான். அவனிடம் எந்தவித உடற்சோர்வோ
களைப்போ தென்படவில்லை.
பின்னர் அனைவரும் உற்சாகத்துடன் விசாலாட்சி
கோயிலை அடைந்தனர். பூஜையை
முடித்துக்கொண்டு வீடுதிரும்பிய பின்னர்
நடந்தவற்றை அந்தப்பெண்கள் சந்திராதேவியிடம்
கூறினர். செய்தியைக்கேட்ட அவள் மிகவும்
அச்சமடைந்தாள்.

இது கதாதரனுக்கு ஏற்பட்ட இன்னொரு பரவசநிலை


பற்றிய அனுபவம்
அவ்வப்போது கதாதரன் பரவச நிலை
அடைந்ததற்கு வேறொரு நிகழ்ச்சியையும் இங்கு
குறிப்பிடலாம்.
காமார்புகூருக்குச் சற்று
தென்மேற்கில்பொற்கொல்லர்கள் வசித்து வந்தனர்.
பைன்கள் எனப்பட்ட இவர்களின் குடும்பம் அந்தக்
காலத்தில் மிகவும் செல்வ வளம் கொண்டதாக
இருந்தது. செங்கற்களால் அழகுற அவர்கள்
கட்டியிருக்கின்ற சிவன் கோவிலே இதற்குச்
சான்று.
அந்தக்குடும்பத்தைச்சேர்ந்த ஒரிருவர் தற்போதும்
வாழ்ந்து வருகின்றனர். ஆனால் வீடுகள் இடிந்து
சிதிலமாகி விட்டன. அது பெரிய குடும்பம்.
அவர்கள் சிறந்த விவசாயிகளாகவும் விளங்கினர்.
ஏராளமான ஆடுமாடுகளும் பரந்த விவசாய
நிலமும், விவசாயக்கருவிகளும் அவர்களுக்குச்
சொந்தமாக இருந்தன.வியாபாரத்திலிருந்தும்
அவர்களுக்கு நல்ல வருவாய் கிடைத்தது.
ஆனாலும் கிராம ஜமீன்தார்களைப்போல பைன்கள்
அவ்வளவு செல்வந்தர்கள் அல்லர். அவர்கள்
நடுத்தரக்குடும்பங்களைச்சேர்ந்தவர்களே.
பைன் குடும்பத்தலைவர் மிகுந்த சமயப்பற்றும்
பக்தியும் கொண்டவர். நல்ல நிலையிலிருந்தும் கூட
அவர் செங்கல் வீடு கட்டிக்கொள்ள முயற்சி
செய்யவில்லை. மண்ணால் கட்டப்பட்ட
இரண்டடுக்கு வீட்டிலேயே அவர் வசித்து வந்தார்.
ஆனால் கோயிலைச் செங்கற்களால் அழகுறக்
கட்டியிருந்தார். சீதாநாத் பைன் என்பது அவரது
பெயர். அவருக்கு ஏழு பிள்ளைகளும் எட்டு
பெண்களும் இருந்தனர்.
திருமணம் நடைபெற்றிருந்தும் எல்லாப் பெண்களும்
தந்தையின் வீட்டிலேயே வாழ்ந்து வந்தனர்.
இதற்கான காரணம் தெரியவில்லை.
குருதேவருக்குப் பத்து அல்லது பதினொரு
வயதான போது சீதாநாத் பைனின் கடைசிப்புதல்வி
கன்னிப்பருவம் அடைந்திருந்தாள். புதல்விகள்
அனைவரும் அழகாக இருந்ததுடன் கடவுளிடமும்
பிராமணர்களிடமும் பக்தி கொண்டிருந்தனர்.
அனைவரும் கதாதரனை மிகவும் நேசித்தனர்.
பக்திமிக்க அந்தக் குடும்பத்துடன் கதாதரனும்
நீண்ட நேரம் கழித்தான்.
பைன் குடும்பத்துடன் கதாதரன் இருந்தபோது
பரவசநிலையில் அவன் புரிந்த தெய்வீகச்
செயல்களைப்பற்றி இன்றும் கிராம மக்கள்
சொல்கின்றனர். நாம் தற்போது விவரிக்க இருக்கும்
நிகழ்சச
் ியை குருதேவரே எங்களிடம் கூறினார்.
வைணவர்களும் சைவர்களும் தங்களுக்குள்
எந்தவிதமான மனவேறுபாடுமின்றிக் காமார்புகூரில்
ஒன்றாக வாழ்ந்து வந்தனர். தற்போதும்
ஆண்டுதோறும் எழுபத்திரண்டு மணிநேர விஷ்ணு
பஜனை வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.
காமார்புகூரில் விஷ்ணு கோயில்களை விட சிவன்
கோவில்கள் அதிகமாக உள்ளன. பெரும்பாலான
பைன்கள் தீவிர வைணவர்களாக இருந்தனர்.
உத்தாரண் தத்தருக்கு நித்யானந்தர்
மந்திரோபதேசம் செய்து அவரை உலகப்
பற்றுக்களிலிருந்து விடுவித்த நாளிலிருந்து
அவர்கள் வைணவர்களாக இருந்து வந்தனர்.
காமார்புகூரைச் சேர்ந்த பைன் குடும்பத்தினர்
அவ்வாறின்றி விஷ்ணுவையும் சிவனையும் ஒருங்கே
வழிபட்டு வந்தனர். பைன் குடும்பத்தின் மூத்த
தலைவர் நியதிப்படி தினசரி மூன்று முறை ஹரிநாம
ஜபம் செய்வார்.
சிவ பிரதிஷ்டை செய்து ஆண்டு தோறும்
சிவராத்திரி விரதமும் இருப்பார்.சிவராத்திரியன்று
கண்விழிப்போருக்காக அந்த சிவன் கோவிலில்
நாடகம் ஏற்பாடு செய்யப்படும்.
ஒரு முறை சிவராத்திரியின் போது இத்தகைய
நாடகம் ஒன்று நடைபெறுவதாக இருந்தது.
பக்கத்து கிராமத்தைச்சேர்ந்த யாத்ரா குழுவினர்
அதனை நடத்துவதாக இருந்தனர்.
சிவபெருமானின் திருவிளையாடல்களை
விவரிக்கின்ற அந்த நாடகம் அந்தி நேரத்திற்கு
அரைமணி நேரம் கழித்து ஆரம்பமாக இருந்தது.
அப்போது அந்த நாடகத்தில் சிவனாக நடிக்க
வேண்டிய சிறுவனுக்கு எதிர்பாராத விதமாக
கடுமையான நோய் ஏற்பட்டு நடிக்க முடியாத நிலை
ஏற்பட்டுவிட்டது. அந்தப் பாத்திரத்தை ஏற்று
நடிக்கத் தகுதியான யாரும் கிடைக்கவில்லை.
யாத்ரா குழுவின் உரிமையாளருக்கு நாடகத்தை
நடத்த முடியும் என்ற நம்பிக்கையே போய்விட்டது.
நாடகத்தை ஒத்திப்போடுவதைத் தவிர வேறு
வழியில்லை. என்று பணிவுடன் கூறினார் அவர்.
என்ன செய்வது, கண்விழிக்கும் பக்தர்கள் வேறு
எந்த வழியில்நேரத்தைச் செலவிடுவது?
அங்குக் கூடியிருந்த பெரியவர்கள் ஆலோசித்தனர்.
சிவவேடம் பூண்டு நடிக்கத் தகுந்த ஒருவர்
கிடைத்தால் நாடகத்தை நடத்த இயலுமா? என்று
அந்த நாடக குழுவின் உரிமையாளரை அவர்கள்
கேட்டபோது அவர் அதற்கு இசைந்தார்.
கிராமத்துப்பெரியவர்கள், சிவனாக யாரை நடிக்கச்
சொல்வது என்று மீண்டும் சிந்தித்தனர். தகுந்த
நபராக அவர்கள் எண்ணியது கதாதரனைத் தான்.
அவன் சிறுவனாக இருந்தாலும் சிவனைப் பற்றிய
பல பாடல்கள் அவனுக்குத் தெரியும்.
சிவவேடம் ஏற்பதற்குரிய தோற்றமும் அவனுக்கு
இருந்தது. ஆகவே கதாதரனைக்கேட்டுக்
கொள்வதென முடிவு செய்யப்பட்டது. அவன்பேச
வேண்டிய சில வசனங்களை எப்படியோ தான்
சமாளித்துக் கொள்வதாக நாடகக்குழுவின்
உரிமையாளர் சொன்னார்.
அனைவருடைய ஆர்வத்தையும் கண்ட கதாதரன்
சிவனாக நடிக்க ஒப்புக்கொண்டான். குறித்த
நேரத்தில் நாடகம் தொடங்கிற்று.
ஜமீன்தாரான தர்மதாஸ் லாஹாவின் மூத்த மகன்
கயாவிஷ்ணுவும் கதாதரனும் நெருங்கிய
நண்பர்களாக இருந்ததை முன்பே கண்டோம்.
கதாதரன் சிவனாக நடிக்க இருப்பதை அறிந்த
கயாவிஷ்ணுவும் நண்பர்களும் கதாதரனுக்கு
ஒப்பனை செய்யத் தொடங்கினர்.
சிவவேடம் தரித்த பின் கதாதரன் ஒப்பனை
அறையில் அமர்ந்து சிவபெருமானைச் சிந்தித்துக்
கொண்டிருந்தான். அவன் மேடையில் தோன்ற
வேண்டிய நேரம் வந்தது. அவனை மேடைக்கு
அழைத்துச் செல்ல நண்பன் ஒருவன் வந்தான்.
கதாதரன் சிவ நினைவுகளில் ஆழ்ந்து
மூழ்கியவனாய் வேறு எங்கும் பார்க்காது மெல்ல
நடந்து மேடைக்கு வந்தான். வந்தவன் அப்படியே
ஆடாமல் அசையாமல் நின்று விட்டான். சடை
முடியும், வெண்ணீறும், தெய்வீக ஒளிவீசும்
முகமும், அகமுகப்பட்ட பார்வையும், இதழ்களில்
முகிழ்ந்த புன்முறுவலும் கண்டால் சாட்சாத்
சிவபெருமானே அங்க வந்து நிற்பது போல
இருந்தது.
தங்களை மறந்த நிலையில் பக்தர்கள் ஹரிஹரி
என்று கூவினர். பெண்களுள் சிலர்
குரவையிட்டனர். சிலர் சங்குகளை முழங்கத்
தொடங்கினர். இவ்வாறு பார்வையாளர்களிடம்
பெரும் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் மீண்டும்
அமைதியை ஏற்படுத்த நாடகக்குழுவின்
உரிமையாளர், சிவபெருமான் மீது துதிகளைப் பாடத்
தொடங்கினர். கூட்டத்தில் பரபரப்பு
சற்றுக்குறைந்தது. இருப்பினும் கூட்டத்தினர்
ஒருவரை ஒருவர் பார்த்து,ஆகா! கதாதரன்
அவ்வளவு அழகாக இருக்கிறான்! சிவபெருமானின்
வேடம் இவனுக்கு இவ்வளவு சிறப்பாகப் பொருந்தும்
என்று நினைக்கவே இல்லை. எப்படியாவது இவனை
வைத்து நாம் யாத்ரா குழுவை ஏற்படுத்தியே தீர
வேண்டும் என்று பேசிக்கொண்டனர்.
இந்த அமர்க்களம் எதையும் கதாதரன்
அறியவில்லை. அவன் ஆடாமல் அசையாமல் நின்று
கொண்டிருந்தான். அவனது கண்களிலிருந்து
கண்ணீர் பெருகிக் கன்னங்களில் வழிந்து
கொண்டிருந்தது. மேலும் சிறிது நேரம் சென்றது.
கதாதரன் எதுவும் பேசவுமில்லை. அசையவும்
இல்லை. அதன் பின் நாடகக்குழுவின்
உரிமையாளரும் இன்னும் ஓரிரு பெரியவர்களும்
கதாதரனின் அருகில் சென்று பார்த்தனர். அவனது
கைகளும் கால்களும் விறைத்துக் கிடந்தன.
அவன் புறவுலகை நினைவையிழந்து
பரவசநிலையில் இருந்தான்.கூட்டத்தில் பரபரப்பும்
ஆரவாரமும் மிகுந்தன. தண்ணீர்” முகத்தில்
தண்ணீர் தெளியுங்கள். அவனுக்கு விசிறுங்கள்.
சிவபெருமான் அவன் மீது எழுந்தருளியிருக்கக்
கூடும், சிவநாமத்தை ச் சொல்லுங்கள் என்ற
கூக்குரல்களும் இந்தப்பையன் நாடகத்தையே
கெடுத்துவிட்டான், இனிமேல் எங்கே நாடகம்
நடக்கப்போகிறது? என்பது போன்று
முணுமுணுப்புகளும் எங்கும் எழுந்தன. என்ன
செய்தும் கதாதரன் சுயநினைவு பெறவில்லை.
கூட்டம் கலைந்தது.அவனைத்தோள் மீது
தூக்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றார்.பல்வேறு
முயற்சிகள் செய்தும் அன்று இரவு முழுவதும்
அவனுக்குச் சுயநினைவு திரும்பவில்லை. வீட்டில்
ஒரே குழப்பமும் துயரமும் நிலவியது. அடுத்த நாள்
சூரிய உதயத்திற்கு பின் தான் கதாதரனுக்குச் சுய
நினைவு திரும்பிற்று.

தொடரும்..
JOIN SRI RAMAKRISHNA WHATSAPP
GROUP

https://wa.me/919789374109?
text=Send_whatsapp_Group_Link

You might also like