You are on page 1of 21

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு

-
பாகம்-17
-
தட்சிணேசுவரக் காளிகோயில்
................ஃ..................ஃ.......
ராணி ராசமணி
கல்கத்தாவின் தென்பகுதியில் ஜான்பஜார் என்ற
இடத்தில் ராணிராசமணி என்ற புகழ்பெற்ற பெண்மணி
ஒருவர் வாழ்ந்து வந்தார். நாற்பத்து நான்காம் வயதில்
விதவையாகிவிட்ட அவருக்கு நான்கு புதல்வியர்
இருந்தனர். கணவரான ராஜசந்திர தாஸன் மிகப்பெரிய
சொத்துக்கு வாரிசாகியிருந்தார் அவர். அந்தச்
சொத்தைச் சிறப்பாக நிர்வகித்து, கறுகிய காலத்தில்
அதனை மேலும் பெருகச்செய்தார். இதனால்
கல்கத்தாவாசிகள் அவரைப் பற்றி நன்கு
அறிந்திருந்தனர். புகழுடன் அனைவரின் நன்மதிப்பையும்
பெற்றிருந்தார் ராணி. செல்வச்செழிப்பு வாய்ந்தவராக
இருந்தார் என்பதனால் மட்டுமின்றி, அவரிடம் விளங்கிய
கடவுள் நம்பிக்கை, வீரம், ஏழைகளிடம் எல்லையற்ற
கருணை, வரையறையன்றி தானம் அளித்தல் போன்ற
நற்குணங்களுக்காகவும் அவரை அனைவரும்
கொண்டாடினர்.
மீனவக் குடும்பத்தில் பிறந்திருந்த அவர்
உயர்பண்புகளாலும் அறச் செயல்களாலும் ராணி என்ற
அடைமொழிக்குத் தகுதி வாய்ந்தவராக விளங்கினார்.
ஜாதிவேறுபாடு இன்றி அனைத்து மக்களின் ஒருமித்த
உள்ளன்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். நாம்
குறிப்பிடும் இந்தத் தருணத்தில் ராணியின் நான்கு
புதலிவிகளுக்கும் திருமணமாகி குழந்தைகளும்
இருந்தன. ராணியின் மூன்றாவது மகள்
தலைப்பிரசவத்தின் போது ஆண்குழந்தையைப்
பெற்றுவிட்டுக் காலமாகி விட்டாள். இதனால் மூன்றாவது
மருமகனான மதுரநாதர் குடும்பத்தைவிட்டு விலகிச்
செல்லக்கூடும் என்று அஞ்சிய ராணி தன் நான்காவது
மகளான ஜகதம்பாவை அவருக்குத் திருமணம் செய்து
வைத்து தம்முடனேயே இருக்குமாறு செய்திருந்தார்.
ராணியின் நான்கு புதல்விகளின் வாரிசுகள் இன்றும்
வாழ்ந்து வருகின்றனர்.
ராணியின் காளி பக்தி

பல நற்பண்புகளின் உறைவிடமாக இருந்த ராணிராசமணி


அன்னை காளியிடம் அளவற்ற பக்தி கொண்டிருந்தார்.
”அன்னை காளியின் இணையடிகளுக்காக ஏங்கி
நிற்கும் ராசமணி ”என்ற சொற்கள் அவரது அலுவலக
முத்திரைகளில் பொறிக்கப் பட்டிருந்தன. காளியிடம்
கொண்டிருந்த பக்தி அவரது சொல்லிலும் செயலிலும்
வெளிப்பட்டதைப் பற்றி குருதேவர் எங்களுக்குக்
கூறியிருக்கிறார்.
ராணி காசிக்குச்செல்ல ஆயத்தம் செய்து
கொண்டிருந்த வேளையில் தெய்வத் திருக்கட்டளை
பெறுதல்-

காசிக்குச்சென்று விசுவநாதரையும்
அன்னபூரணியையும் தரிசித்து சிறப்பு வழிபாடுகள்
செய்ய வேண்டும் என்ற பேராவல் ராணியின் மனத்தில்
நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அதற்காகப் பணமும்
சேர்த்து வைத்திருந்தார். திடீரென்று கணவர்
காலமானதால் நிர்வாகப்பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள
வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்காக் காசி
யாத்திரையைத் தள்ளிப்போட நேர்ந்தது. அந்த
அக்கட்டான வேளையில் அவரது மருமகனான
மதுராநாதர் அவருக்குப் பல வகைகளிலும் உதவியாக
இருந்தார். இப்போது அவர் உதவ முன் வந்ததன்
காரணமாக, ராணி காசிக்குச் செல்ல மீண்டும் 1847-
ஆம் ஆண்டில் ஆயத்தமானார். பயண ஏற்பாடுகள்
செய்யப்பட்டன. ஆனால் புறப்படுவதற்கு முந்திய நாள்
இரவில் காளி ராணியின் கனவில் தோன்றி, நீ
காசிக்குச்செல்ல வேண்டியதில்லை.
கங்கைக்கரையில்அழகியதோர் இடத்தில் என் உருவைப்
பிரதிஷ்டை செய்து நாள்தோறும் எனக்கு நைவேத்திய
வழிபாட்டிற்கு ஏற்பாடு செய். நான் அங்கு எழுந்தருளி
உன் பூஜையை ஏற்றுக்கொள்வேன் என்று
பணித்தருளினாள். பக்தியே உருவான ராணியும் இந்தக்
கட்டளையால் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்.
காசிக்குச்செல்லும் திட்டத்தைக்கைவிட்டு, தாம் சேர்த்து
வைத்த பணம் முழுவதையும் இந்தப் புனிதப் பணியில்
செலவழிக்க உறுதி பூண்டார்.

ராணி கோயில் கட்டுதல்-

இத்தனை காலமாக ராணியின் மனத்தில்


நிறைந்திருந்த பக்தி ஓர் அழகிய கோயிலாக, ஓர்
அற்புதமான திருவுருவமாக உருப்பெற்றது. கங்கை
நதிக்கரையில் ஒரு விசாலமான இடத்தை ராணி
வாங்கினார்.ஏராளமான பணம் செலவு செய்து அங்கு
ஒன்பது கோபுரங்கள் கொண்ட கம்பீரமான கோயில்
ஒன்றும் வேறு சிறிய கோயில்களும்
கட்டத்தொடங்கினார். அருகில் ஓர் அழகிய
பூங்காவையும் அமைக்க ஏற்பாடு செய்தார். 1855, மே
31- ஆம் நாள் (புரி ஜகன்னாதருக்கு உகந்த ஸ்நான
யாத்திரை நன்னாள்) அன்னை காளியின்
திருவுருவைப் பிரதிஷ்டை செய்தார்.
இதற்கு முன் நடைபெற்ற சில முக்கிய
நிகழ்சச
் ிகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.
-
அன்ன நைவேத்தியம் செய்ய ராணியின் விருப்பம்-
...........ஃ................................ஃ

சிறப்பானவை என்று தாங்கள் கருதும் பொருட்களைச்


சமர்பித்து இஷ்டதெய்வத்தை வழிபடுவது
பக்தர்களின் இயல்பு! அன்னை காளியிடமிருந்து
பெற்ற கட்டளையின் காரணமாகவோ, ஆழ்ந்த
பக்தியின் விளைவாகவோ ராணியின் உள்ளத்திலும்
அன்னைக்கு அன்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்
என்ற பேராவல் எழுந்தது. கோயில்களும் பிறவும் என்
விருப்பத்திற்கு ஏற்ப அமைந்து விட்டன. தொடர்ந்து
சேவைகள் நடைபெறுவதற்குப் போதுமான
செல்வத்தையும் ஒதுக்கப்போகிறேன். ஆயினும்
தினமும் அன்ன நைவேத்தியம் செய்யவில்லை எனில்
அனைத்தும் வீணே.
பண்டிதர்களின் கருத்துக்களை ராணி கேட்டறிதல்-

தாழ்ந்த குலத்தில் பிறந்த தான் அன்னைக்கு அன்ன


நைவேத்தியம் செய்வதைச் சமுதாயம்
ஏற்றுக்கொள்ளாது. ஆனால் தான் இதயபூர்வமாக
அதனை அன்னை கட்டாயம் ஏற்றுக் கொள்வாள்
என்பதில் ராணிக்கு ச் சிறிதும் ஐயமில்லை. இந்த
எண்ணம் ராணியின் மனத்தைப் பெருமகிழ்ச்சியால்
நிறைத்தது! ஆனால் இந்த ஆனந்தத்திற்குக் குறுக்கே
ஏன் இந்தத் தடைகள்? இப்படிப்பட்ட விதிகளை
இயற்றியவர் யார்? அவர்களுக்கு இதயமே
இல்லையா? அல்லது சுயநலமிகுதியால் உயர்ந்தோர்,
தாழ்ந்தோர் என்ற பேதத்தை அகிலாண்ட நாயகியின்
சேவையிலும் புகுத்த முற்பட்டனரா? அவற்றைப்
பின்பற்றுவதை விட, தன் உள்ளம் கூறுவதையே ஏற்றுக்
கொண்டு விடலாம்.ஆனால் அவ்வாறு இதயத்தின்
குரலுக்குச் செவிசாய்த்து, சமுதாயப் பழக்க
வழக்கங்களை எதிர்த்துச் சென்றால் பிராமண
பக்தர்கள்கோயிலுக்கு வந்து பிரசாதம் பெற
மாட்டார்கள். இதற்குத்தீர்வு தான் என்ன?
இவ்வாறெல்லாம் குழம்பிய ராணி இந்த விஷயத்தில்
பண்டிதர்களின் கருத்தை அறிய முற்பட்டார். இதற்காக
ப் பல்வேறு பகுதிகளிலுள்ள பண்டிதர்களுக்கு
விவரங்களை எழுதி ஆலோசனை கேட்டார். யாரும்
ராணியின் கருத்தை அமோதிப்பதாகத்தெரியவில்லை.
ராம்குமாரின் கருத்து-
கோயில் திருப்பணியும் திருவுருவப் பணியும் முற்றுப்
பெற்றிருந்தது. ஆயினும் ராணியின் விருப்பம்
நிறைவேறுவதற்கான அறிகுறிகள் எதுவும்
தென்படவில்லை. ராணியின் நம்பிக்கைகள் யாவும்
சிதறுண்டு போகும் நிலை ஏற்பட்ட போது, ஒரு நாள்
ஜமாபுகூரில் உள்ள ஒரு வேத பாடசாலையிலிருந்து ஒரு
கடிதம் வந்தது. அதில் பிரதிடைக்கு முன்பு ராணி
அந்தச் சொத்தினை ஒரு பிராமணருக்கு தானமாகக்
கொடுத்து, அந்த பிராமணர் தேவியைப் பிரதிஷ்டை
செய்து, அன்ன நைவேத்தியத்திற்கான
ஏற்பாடுகளைச் செய்வாரானால் அது சாஸ்திர
சம்மதமே. அதன் பின் பிராமணர்களும் மற்ற உயர்
குலத்தோரும் கோயில் பிரசாதத்தை உட்கொண்டால்
அவர்கள் குற்றத்திற்கு ஆளாக மாட்டார்கள், என்று
எழுதப்பட்டிருந்தது.
கும்பாபிஷேகம் செய்ய ராணி முடிவு-
இந்த யோசனையைக்கேட்ட பின் ராணியின் மனத்தில்
நம்பிக்கை துளிர்த்தது. தன் குருவின் பெயரில்
கோவில் கும்பாபிஷேகம் செய்து அவரது அனுமதியுடன்
கோயில் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடிவு
செய்தார்.ஜமாபுகூரிலிருந்து கருத்து தெரிவித்த
ராம்குமாரின் யோசனையைத் தாம் ஏற்று
நடத்தப்போவதாகப் பிற பண்டிதர்களுக்கும்
உறுதியாகத் தெரிவித்தார். பல பண்டிதர்களுக்கும்
இதில் உடன்பாடு இல்லை. இது நடைமுறையிலிருக்கும்
சமுதாயப் பழக்கத்திற்கு முரணானது. இந்த
ஏற்பாட்டிற்குப் பின்னர் கூட பிராமணர்களும் பிற
உயர்குலத்தினரும் பிரசாதத்தை ஏற்றுக் கொள்வது
சந்தேகம் தான். இது சாஸ்திர விரோதமானது என்று
அவர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர்.
ஆனால் வெளிப்படையாக ராணியிடம் சொல்ல
அஞ்சினர்.
ராம்குமாரின் பரந்த உள்ளம்-

இந்த நிகழ்ச்சிக்குப் பின் ராணியின் கவனம்


ராம்குமாரின் பால் சென்றது என்பதை நாம்
அனுமானிக்கலாம். ஜாதிக் கட்டுப்பாடுகள் நிறைந்த
அந்தக் காலத்தில் இத்தகைய ஒரு கருத்தைக்
கூறியது ராம்குமாரின் பரந்த மனப்பான்மையை
வெளிப்படுத்துகிறது. சமுதாயத்தில்
பெரியவர்களாகக் கருதப்பட்ட பிராமண
பண்டிதர்களின் உள்ளங்கள் குறுகிய
எல்லைக்குள்ளேயே இருந்தன. அவர்களுள் ஒரு சிலர்
மட்டுமே அந்தக் குறுகிய எல்லையிலிருந்து
வெளிவந்து சாஸ்திர விதிகளுக்குப் பரந்த பொருள்
கூறி, சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் சொந்தக்
கருத்துக்களைக் கூறினர். அதனால் மக்களும்
கண்களை மூடிக்கொண்டு சாஸ்திர விளக்கங்களை
அப்படியே பின்பற்றுகின்ற நிலையிலிருந்து விடு பட
முடிந்தது.
தகுந்த அர்ச்சகரை ராணி தேடுதல்-

ராணிராசமணிக்கும் ராம்குமாருக்கும் இடையில்


ஏற்பட்ட தொடர்பு இத்துடன் முடியவில்லை. தமது
குலகுருவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய
மதிப்பும் மரியாதையும் காண்பித்து வந்த போதிலும்,
சாஸ்திரங்களில் அவர்களுக்கிருந்த அறியாமையையும்
சாஸ்திர விதிப்படி பூஜை செய்வதற்குரிய தகுதி
அவர்களிடம் இல்லாதது பற்றியும் நுண்ணறிவு படைத்த
ராணி நன்கு உணர்ந்திருந்தார். அதனால் புதிய
கோயிலின் பூஜைப் பணிகளை, நற்பண்பு கொண்ட,
சாஸ்திர விதிகளை நன்கு கற்றுணர்ந்த
பிராமணர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.
குருவின் குடும்பத்தினருக்குச்சேர வேண்டிய
வெகுமதிப் பொருட்களை அளிப்பதில் எவ்வித
பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதிலும் கவனமாக
இருந்தார். தன் முயற்சிக்குத் தடங்கலாக நின்ற சில
சமுதாயப் பழக்க வழக்கங்களையும் ராணி எதிர்
கொள்ள வேண்டியிருந்தது. அந்த நாட்களில் உயர்
குடும்பத்தில் பிறந்தவர்களும் ஆசார சீலர்களுமான
அந்தணர்கள் கீழ் குலத்தோரால் நிறுவப்பட்ட தெய்வ
விக்கிரகங்களைப் பூஜிக்க மாட்டார்கள், ஏன்,
கையெடுத்தும் கும்பிட மாட்டார்கள். கீழ்
குலத்தாருக்கு குருவாகின்ற பிராமணர்களைக் கூட,
அவர்கள் கீழ்குலத்தாராகவே கருதினர். எனவே ராணி
ராசமணி கட்டிய கோயில் பணிகளை ஏற்றுக் கொள்ள
ஆசாரம் நிறைந்த எந்த பிராமணரும் முன்வரவில்லை.
இதனால் எல்லாம் ராணி மனம் தளரவில்லை.
பூஜாரியின் ஊதியத்தொகையை உயர்த்தி
அறிவித்தது மட்டுமின்றி, தகுந்த ஒருவரைப் பல
இடங்களிலும் தொடர்ந்து தேடி வந்தார்.
கோயிலுக்கு அர்ச்சகரைத்தேடும் பொறுப்பை
ராணியின் அலுவலரும் சிகோர்
கிராமத்தைச்சேர்ந்தவருமானமகேஷ் சந்திரர் ஏற்றல்-

குருதேவரின் ஒன்றுவிட்ட சகோதரி ஹேமாங்கினி


தேவியின் வீடு காமார்புகூருக்கு அருகில் சிகோர்
என்னும் கிராமத்தில் இருந்தது. அந்த
கிராமத்தைச்சேர்ந்த மகேஷ் சந்திர சட்டோபாத்யாயர்,
ராணியின் சொத்துக்களைப் பராமரிக்கும்
அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். அவர் தமது
வருவாயை அதிகப்படுத்திக்கொள்வதற்காக கோயில்
அர்ச்சகராகவும் சமையற்காரராகவும் பணியாற்றச்
சம்மதிக்கின்ற பிராமணர்களைத்தேடும் முயற்சியில்
ஈடுபட்டார். தன் மூத்த சகோதரரான ஷேத்திர நாதரை
ராதாகோவிந்தர் ஆலயத்தின் அர்ச்சகராகத்
தேர்ந்தெடுத்தார். அவர் இவ்வாறு செய்ததன்
நோக்கம் , ராணியின் ஆலயத்தில் பணி செய்வது
தவறல்ல என்பதை அந்த கிராமத்தின் ஏழை
பிராமணர்கள் மனமுவந்து ஏற்கச் செய்வதற்காக
இருக்கலாம். அல்லது தம் குடும்ப வருவாயை
உயர்த்திக் கொள்வதற்காக இருக்கலாம். அல்லது
இந்த இரு நோக்கங்களுக்காகவும் இருக்கலாம். தன்
குடும்பத்திலிருந்தே ஒருவரை ராணியின் ஆலயப்
பணியில் அமர்த்தி விட்டதனால், வேறு
பிராமணர்களை வரவழைப்பது அவருக்கு எளிதாக
இருந்தது. இருப்பினும் காளிகோயில் அர்ச்சகர்
பணிக்கு மட்டும் பொருத்தமான ஒருவரைக் கண்டு
பிடிக்க முடியவில்லை.
அர்ச்சகர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு ராம்
குமாரை ராணி கேட்டுக் கொள்ளல்.
மகேஷுக்கு நீண்ட நாட்களாக ராம்குமாரைத்தெரியும்.
கிராமத்திலேயே நண்பர்களான அவர்கள் இங்கும்
தொடர்பு வைத்திருந்தனர். ராம்குமார் ஒரு தீவிர
சாதகர் என்பதும், நீண்ட நாட்களுக்கு முன்னரே சக்தி
மந்திரத்தில் தீட்சை பெற்றவர் என்பதும் மகேஷுக்கு
நன்றாகத்தெரியும். ராம்குமாரின் ஏழ்மை பற்றியும்
அவருக்கு ஒருவாறு தெரிந்திருந்தது.
காளிகோயிலுக்கான
அர்ச்சகரைத்தேடிக்கொண்டிருந்த மகேஷின் கவனம்
ராம்குமாரின் பால் சென்றது அதே சமயம் அவர் ஆசார
சீலம் மிக்க பிராமணர் என்பதும் மகேஷின்
நினைவுக்கு வந்தது. கல்கத்தாவில் திகம்பர மித்ரர்
போன்றவர்களின் வீடுகளில் அவ்வப்போது பூஜைகள்
செய்து வந்தாலும் கீழக் ்குலத்தில் பிறந்த ராணியின்
கோயிலில் பணி புரிய ராம்குமார் ஒத்துக்கொள்வாரா?
இது மிகவும் ஐயத்திற்கு உரியதே. பிரதிஷ்டை நாள்
நெருங்கிக் கொண்டிருந்தது. இது வரை காளி கோயில்
பூஜைக்கான அர்ச்சகர் கிடைக்கவில்லை. இத்தகைய
குழப்பமான மனநிலையில் இந்த முயற்சியையும்
செய்து பார்த்துவிடுவோம், என்று தீர்மானித்தார்
மகேஷ்.ஆனால் அதைத்தாமே செய்ய முற்படவில்லை.
முதலில் ராணியிடம் விவரங்கள் அனைத்தையும் கூறி
பிரதிஷ்டை நாளன்று மட்டுமாவது அர்ச்சகர்
பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு ராம்குமாரிடம்
வேண்டும் படி ராணியைக்கேட்டுக்கொண்டார்.
ஜமாபுகூரிவிருந்து ராம்குமார் எழுதியிருந்த
கடிதத்தைப் படித்ததிலிருந்தே அவர் மீது
நல்லெண்ணம் வைத்திருந்தார் ராணி. ஆகவே
ராம்குமாரை அர்ச்சகராக நியமிப்பதில் ராணிக்கு
அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. தாமதமின்றி
ராம்குமாருக்கு பணிவான வேண்டுகோள் ஒன்றை
அனுப்பினார். அதில்,” தாங்கள் கூறிய முறைப்படி ,
அன்னைக் காளியின் திருவுருவத்தைப் பிரதிஷ்டை
செய்ய நான் தயாராக உள்ளேன். வருகின்ற ஸ்தான
யாத்திரை தின சுபவேளையில் இந்தப் புனித விழாவை
நடத்த எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன்.
ராதாகோவிந்தர் கோயிலுக்கு ஓர் அர்ச்சகர்
நியமிக்கப்பட்டு விட்டார். ஆனால் அன்னை காளிக்குப்
பூஜை செய்யும் பணியை ஏற்கத்தான்
பொருத்தமானவர் யாரும் இதுவரை முன்வரவில்லை.
நீங்கள் நன்கு கற்றறிந்த அறிஞர். சிறந்த சாஸ்திர
ஞானம் உடையவர். ஒன்றும் தெரியாத ஒருவரை இந்தப்
புனிதப் பணிக்கு நியமிப்பது உசிதமானதல்ல என்பதை
நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. நீங்கள்
இந்தத் திருப்பணியை ஏற்றுக்கொண்டு என்னை இந்த
இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுவிக்குமாறு
வேண்டுகிறேன்” என்று பணிவுடன் எழுதியனுப்பினார்.
இந்தக் கடிதத்தை மகேஷ், தாமே ராம்குமாரிடம்
எடுத்துச் சென்று, நிலைமையை விளக்கிக் கூறி,
தகுதியான வேறு ஒருவர் கிடைக்கும் வரையிலுமாவது
காளிகோயில் பூஜைப்பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு
கேட்டுக்கொண்டார். தூயவரான ராம்குமாரும்
அன்னை காளியின் திருவுருவப் பிரதிஷ்டை தடைபட்டு
விடக் கூடாது என்பதற்காக தட்சிணேசுவரத்திற்கு வர
இசைந்தார். குறித்த நாளில் வந்தும் சேர்ந்தார்?
பின்னர் ராணி மதுர்பாபு, ஆகியோரின் பணிவான
வேண்டுகோளுக்கு ஏற்ப அவர் தம் வாழ்நாளில்
எஞ்சிய பகுதியை அங்கேயே கழித்தார். இதற்குக்
காரணம் பொருத்தமான வேறோர் அர்ச்சகர்
கிடைக்காதது தான். பெரியது, சிறியது என்றில்லாமல்
அனைத்துச் செயல்களும் அன்னையின்
திருவுளப்படியே நிகழ்கின்றன. அவளது பக்தரான
ராம்குமாரும் அன்னையின் விருப்பத்தை அறிந்து தான்
அர்ச்சகராகப் பணியாற்ற இசைந்தாரோ? யார்
அறிவார்?

காளிகோயில் கும்பாபிஷேகம்-

இவ்வாறு எதிர்பாராத விதமாக ராணி ராசமணி


கட்டிய கோயிலில் ராம்குமார் அர்ச்சகராக
ப்பொறுப்பேற்றார். கி்பி் 1855, மே 31-ஆம் நாள்
வியாழக் கிழமை ஸ்நான யாத்திரை புண்ணிய
தினத்தன்று அன்னையின் திருவுருவ பிரதிஷ்டை
மிகவும் சிறப்பாக நடந்தேறியது. ராணியின் ஆசையும்
மகோன்னதமாக நிறைவேறியது. அன்றிலிருந்து
நாள்தோறும் இரவும் பகலும் கோயில் வளாகம்
விழாக்களும் விருந்துகளுமாக கோலாகலமாக
இருந்தது. ராணியும் தாராளமாகப் பணத்தைச்செலவு
செய்து தான் பெற்ற இன்பம் வந்தவர்கள் அனைவரும்
பெறுமாறு செய்தார். தொலைதூரப் பகுதிகளிலிருந்து
சாஸ்திர வல்லுனர்களும், பண்டிதர்களும்
பெருமளவில் திரண்டு வந்திருந்தனர். அவர்கள்
ஒவ்வொருவருக்கும் பட்டாடையும் அங்க வஸ்திரமும்
பொற்காசும் அளித்து மரியாதை செய்தார்
ராணி.கோயில் திருப்பணிக்கும்
கும்பாபிஷேகத்திற்குமாக மொத்தம் ஒன்பது லட்சம்
ரூபாய் செலவழித்தார் என்று கூறப்படுகிறது.மேலும்
தினஜ்பூர் மாவட்டத்தில் தாகூர்கோவான்
துணைக்கோட்டத்தில் சல்பாரி பர்கானா என்ற
பகுதியை திரைலோக்யநாத் தாகூர் என்பவரிடமிருந்து
இரண்டு லட்சத்து இருபத்தாறாயிரம் ரூபாய்க்கு
வாங்கி, அந்தச் சொத்தினையும் கோயில் வழிபாட்டுச்
செலவிற்காக எழுதிவைத்தார்.

கதாதரரைப்பொறுத்தவரை, அவர் இந்த விழாவில்


மகிழ்ச்சியுடன் பங்கு பெற்றாராயினும் உணவு
விஷயத்தில் கட்டுப்பாடாகவே நடந்து கொண்டார்.
கோயில் பிரசாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மாலை
வேளையில் கடையிலிருந்து சிறிது பொரியை மட்டும்
வாங்கி உண்டு விட்டு இரவை வழக்கம்போல்
ஜாமாபுகூர் பள்ளியிலேயே கழித்தார்.

ராணியின் வற்புறுத்தலால் அன்னை காளிக்கு பூஜை


செய்யும் பணியை ராம்குமார் நிரந்தரமாக ஏற்றுக்
கொள்ள இசைந்து விட்டார்
இதனை கதாதரரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவர் மனத்தில் என்னென்னவோ எண்ணங்கள்
தோன்றி மறைந்தன. எல்லா உணர்ச்சிகளையும்
அடக்கிக்கொண்டு நேராக சகோதரரிடம் சென்றார்.
ராம்குமாரின் முடிவு தவறானது என்று கூறி
தந்தையின் வாழ்க்கையை அவருக்கு
நினைவுபடுத்தினார். ஷதிராம் ஒருபோதும்
கீழ்குலத்தார் செய்யும் சமயச் சடங்குகளை
நடத்தியதோ எல்லோரிடமிருந்தும் வெகுமதிகள்
பெற்றுக்கொண்டதோ இல்லை என்பதைச்
சுட்டிக்காட்டி, முடிவை மாற்றிக் கொள்ளும்படி அவரை
வற்புறுத்தினார். ராம்குமாரோ, தாம் எடுத்த முடிவு
சரியானதே என்று சாஸ்திர மேற்கோள்களைக்
காட்டியும், இன்னும் வேறு பல வழிகளிலும் நிரூபிக்க
முயன்றார்.ஆனால் எதுவும் கதாதரர் மனத்திற்குத்
திருப்தி அளிக்கவில்லை.ஆகவே ராம்குமார், எளிய
முறையான திருவுளச் சீட்டு முறையை நாடினார்.
திருவுளச் சீட்டில் பூஜைப் பணியை ஏற்றுக்
கொண்டதில் ராம்குமாருக்கு எவ்வித இழுக்கும்
வராது. இது எல்லோருக்கும் நன்மையையே பயக்கும்”
என்று காணப்பட்டது.

உணவு விஷயத்தில் கதாதரரின் உறுதி-


இதன் பின்னர் கதாதரருக்கு த் தம் சகோதரரின்
செயலைப் பற்றிய கவலை தீர்ந்தது. அதே வேளையில்
தமது எதிர்காலத்தைப் பற்றிய எண்ணம் அவரைப்
பற்றிக்கொண்டது.வேத பாடசாலை மூடப்பட்ட பின் தாம்
என்ன செய்வது என்ற சிந்தனையில் ஆழ்ந்தார் அவர்.
இந்த எண்ணத்தில் மூழ்கியிருந்த அவர் ஒரு நாள்
முழுவதும் ஜாமாபுகூருக்குத் திரும்பவில்லை.
ராம்குமார் எவ்வளவோ அன்புடன்
வற்புறுத்திக்கேட்டுக்கொண்ட போதிலும் கோயில்
பிரசாதத்தை ஏற்க மறுத்துவிட்டார். இது கோயில்
பிரசாதம் . கங்கை நீரில் சமைக்கப்பட்டது,
அனைத்திற்கும்மேலாக அன்னை காளிக்கு நிவேதனம்
செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொள்வது
எல்லாவகையிலும் தவறாகாது” என்றெல்லாம்
எடுத்துக்கூறிப் பார்த்தார் ராம்குமார். அவை
எவற்றையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை
கதாதரர். மேலும் அவரை வற்புறுத்த விரும்பாத
ராம்குமார், அப்படியானால் கோயில்
பண்டகநாலையிலிருந்து உனக்கு வேண்டிய உணவுப்
பொருட்களைப்பெற்று, கங்கைக் கரையில்
பஞ்சவடியில் உன் கையாலேயே சமைத்துச் சாப்பிடு.
கங்கை எல்லாவற்றையும் புனிதமாக்க வல்லது.
என்பதையாவது நீ ஏற்றுக் கொள்வாய் என்று
நம்புகிறேன்“ என்று சொன்னார்.கதாதரர் உணவு
விஷயத்தில் கொண்டிருந்த உறுதி கங்கையின்
மீதுள்ள பக்தியால் சிறிது தளர்ந்தது. சாஸ்திரங்களில்
சிறந்த அறிவு பெற்றிருந்த ராம்குமாரால்
தர்க்கரீதியான வாதத்தால் சாதிக்க முடியாததை
நம்பிக்கையும் பக்தியும் நிறைவேற்றி விட்டன.
இவ்வாறாக தட்சிணேசுல தொடர்ந்து தங்கவும் தம்
உணவைத் தாமே சமைத்து உண்ணவும் இசைந்தார்
கதாதரர்.

குருதேவரின் கங்காபக்தி-

வாழ்நாள் முழுவதும் புனித கங்கையின் மீது


எத்தனை பக்தி கொண்டிருந்தார். குருதேவர்.
கங்கையை அவர், ”பிரம்ம வாரி” என்று அழைப்பார்.
நீர்வடிவ பிரம்மம்” என்பது இதன் பொருள். கங்கைக்
கரையில் வசிப்பவர்களின் உள்ளம்
தேவதைகளைப்போல் பரிசுத்தமாகி விடுகிறது.
நற்பண்புகள் அவர்களிடம் தாமதகவே
வெளிப்படுகின்றன. கங்கையின் புனித நீரில் தோய்ந்து
வீசுகின்ற காற்று தான் செல்லுமிடத்தை எல்லாம்
புனிதப் படுத்துகின்றது. கங்கைக் கரையில் வசிக்கும்
மக்களுக்கு அவள் அருளால் நற்பண்பு, பக்தி,
மனவுறுதி, கொடைத்தன்மை, ஆன்மபலம் ஆகியவை
ஏற்படுகின்றன என்று கங்கையின் பெருமை பற்றிக்
கூறுவார். யாராவது உலகியல் விஷயங்களைப் பற்றி
நீண்ட நேரம் பேசினாலோ, உலகப் பற்றுக் கொண்ட
மக்களுடன் கலந்து பழகிவிட்டு வந்தாலோ, அவரைச்
சிறிது கங்கை நீரைப் பருகுமாறு குருதேவர்
சொல்வதுண்டு. அன்னையின் ஆலயத்தில் யாராவது
அமர்ந்து உலகியல் விஷயங்களை நினைப்பதன் மூலம்
அந்த இடத்தை அசுத்தப் படுத்தினால் அங்கே கங்கை
நீரைத்தெளிப்பார். யாராவது மலஜலம் கழித்த பிறகு
கங்கை நீரில் தம்மைச் சுத்தம் செய்துக்கொள்வதைக்
கண்டால் மிகவும் வேதனைப் படுவார்.

தாமே உணவு சமைத்து உண்டு கதாதரர்


தட்சிணேசுவரத்தில் வாழ்ந்தது.-.

கங்கைக் கரை, பறவைக் கூட்டத்தின் இன்னிசையால்


நிறைந்து இனிமைப் பரப்பிய பஞ்சவடி, விசாலமான
கோயில், அங்கே பக்தி மிக்க சாதகரான தமையனின்
பூஜை, பெற்ற தந்தை போல் பேணிப் பரிவு காட்டும்
அவரிடம் அன்பு, இறைவனிடமும் சான்றோரிடமும்
பக்தி பூண்டிருந்த ராணி மற்றும் அவரது மருமகன்
மதுர்பாபுவின் நம்பிக்கையும் அன்பும்-
இவையனைத்தும் வெகுவிரைவில் கதாதரருக்கு
தட்சிணேசுவர ஆலயத்தின் மீதுஈடுபாட்டை
ஏற்படுத்தத் தொடங்கியது. காமார் புகூர்
வீட்டைப்போலவே தட்சிணேசுவரக்காளி கோயிலும்
அவரது மனத்திற்கு உகந்த இடமாயிற்று. சில காலம்
தம் கையாலேயே சமைத்து உண்டாலும் அவர் தமது
எதிர்காலம் பற்றிய கவலைகளை விட்டு விட்டு மிகுந்த
உற்சாகத்துடன் அங்கே வாழ்ந்தார்.

JOIN SRI RAMAKRISHNA WHATSAPP GROUP

https://wa.me/919789374109?
text=Send_whatsapp_Group_Link

You might also like